Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகரம் கவியாகி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் போன்ற கவி வடிப்பவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். :)

கண்ணையே மூடிக்கொண்டிருக்கிறார் எங்க கவி வடிக்கிற? :lol::D

  • Replies 87
  • Views 12.4k
  • Created
  • Last Reply

ஒத்துக்கொள்ளடி பெண்ணே,

ஒரு மூலையில், உன் இதயத்தில் நான் என்று,

ஒளி வீசும் வெண்ணிலவே,

ஒவ்வாமையொ நான் உனக்கு ?

ஒட்டிக்கொள்கிரேனடி கண்ணே,

ஒய்யாரமாய் உன் இடையில்,

ஒட்டியானம் அது போன்றே.

ஒடிந்து போவேனடி தேனே, "இல்லை" என்று நீ சொல்லும்,

ஒரு வார்தை கேட்டு.

நெடுக்கர், "ஒ" missing அதான்..... :)

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துக்கொள்ளடி பெண்ணே,

ஒரு மூலையில், உன் இதயத்தில் நான் என்று,

ஒளி வீசும் வெண்ணிலவே,

ஒவ்வாமையொ நான் உனக்கு ?

ஒட்டிக்கொள்கிரேனடி கண்ணே,

ஒய்யாரமாய் உன் இடையில்,

ஒட்டியானம் அது போன்றே.

ஒடிந்து போவேனடி தேனே, "இல்லை" என்று நீ சொல்லும்,

ஒரு வார்தை கேட்டு.

நெடுக்கர், "ஒ" missing அதான்..... :)

மேலே நான் தந்தது ஒ.. ஓ கலந்து எழுதப்பட்டிருப்பதால்.. அதை இரண்டுக்கும் என்று எடுத்துக் கொண்டேன். இருப்பினும் அங்கு ஓ தான் அதிகம் என்பதால் உங்களின் இந்தப் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது..! தொடருங்கள்.. :lol:

கண்மணி......

கவிதைகள் நூறாயிரம்,

கடலலை போல்,

கரைமோத வைப்பேனெடி....

கண் விழி ஓரத்தில்,

கனிவைத்தான் கொஞ்சம் நீ,

கள்ளூர காட்டடீ.

கல்லினை,

கசியவைக்கும்,

கலையில் நான்,

கனவானடி.

கயல் விழியே,

கடவுளில் நீ சரி பாதியே,

கனகச்சிதமாய் சரி மீதியை,

கட்டிக்கொள்ளடி தேன் முல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தான் என்ன கண்ணீருக்கு..??!

காக்கை ஒன்று குயிலிடம்

கா கா என்றது

காரணம் புரியாமல்

கானக் குயிலும் பதிலுக்கு

கானமிசைக்குது

காரணமறியா காக்கையும் முழிக்க

கானக் குயிலோ தொடருது கீதம்

கானகத்து வசந்தம்

காரணமாக்கும் என்று

காத்திருந்த குருவி

காடேகித் தேடுது உறவுகளை

காக்கையும் குயிலும் கிளைதனில்

காலத்தால் பகை மறந்து

கான சபை நடத்தும்

காட்சியது கண்கொள்ளா இன்பமாக

காலத்தால் ஏங்கிய கனவு

காட்சியாய் நனவாய்

காவியமாகும் என்று குருவி எண்ண

காலம் கணத்திலொரு கதை மாற்றுது

காத்திருந்து கறுவிய காகம்

கால் கிளப்பிப் பறக்குது

கானக் குயில் தானும்

கால் பதறிப் பறக்குது

கானகம் எங்கும்

காற்றில் ஒரு யுத்தம்

கா காவும் கூ கூவும்

காயங்கள் பட மாறுது சுருதி

கானகம் எங்கும் சிந்துது குருதி

காரணம் கேட்டால்

காக்கையின் கூட்டுக்குள்

கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி

காக்கையும் அறியாமல்

காரணம் முடித்தது தப்பாம்

கானகத்து வழக்கோடு

காலாறக் கொஞ்சம் வரப்பேக

காதில் விழுகுது சேதி

காக்கையோ குயிலோ

காரியமில்ல

கானகமேகா மனிதனும்

காரணமின்றிச் சிந்துறான் குருதி

காணி நிலத்துக்கு தானே சொந்தம் என்று

கார்காலம் காணுது கண்கள் - அங்கு

காரணம் புரியாமலே..!!!!!

கவி வரிகள்: குருவிகள்.

http://www.yarl.com/forum/index.php?showtopic=5386

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவியின் நிழலில் குளிர்காயும் நெடுக்குசாமிக்கு என் வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவியின் நிழலில் குளிர்காயும் நெடுக்குசாமிக்கு என் வாழ்த்துக்கள் :)

ஏதோ குருவியிட்ட களவெடுத்து குளிர்காயிறப்போல கதைக்கிறீங்க. குருவியின் நிழலில் தானே காயுறன். அதால குருவிக்கு என்ன பாதிப்பு..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிள்ளை மொழி பேசி

கிளிபோல் வந்தவளே..

கிறங்கடித்தே என்னை

கிள்ளினையே பார்வையால்.!

கிளாலிச் சமர்களம் போல்

கிடுங்குப்பிடியதில்

கிரமம் கூட சிரமமானதே..!

கிளை இரு குருவிக்கும் இணையிருக்கு

கிராமத்தவன் இவனுக்கோ..??!

கிள்ளையே

கிள்ளிப் போடு ஒரு வாழ்க்கை

கில்லாடி நானும்

கிழவனாகி வீழும் முன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிள்ளை மொழி பேசி

கிளிபோல் வந்தவளே..

கிறங்கடித்தே என்னை

கிள்ளினையே பார்வையால்

நான் எழுத நினைத்த கரு(வரிகள் இல்லை)நீங்கள் முந்தீட்டிங்கள் :rolleyes: அருமயான வரிகள் நெடுக்ஸ். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் போன்ற கவி வடிப்பவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். :rolleyes:

நன்றி நெடுக்ஸ் நேரமின்மையால் தான் கவிதை எழுத முடிவதில்லை :lol: . நீங்கள் கேட்டவுடன் எப்படியோ எழுதவேண்டும் போல் இருந்தது ஆகவே இந்த கவிதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் :unsure: .

கண்ணையே மூடிக்கொண்டிருக்கிறார் எங்க கவி வடிக்கிற? :lol::)

கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் கண்ணை மூடினாலும் மனதில் ஒன்று மட்டும் எப்பொழுதுமே இருக்கும் :lol:

தமிழீழ தாய்மண்ணே

பாவம் யார் செய்தார் உம் இனத்திற்கு

பரிதவிக்க விடுகின்றீரோ எம் மக்களை

படிக்கப்போகின்றீர்

படித்தறியா பாடமொன்றை

படை இங்கு முழங்குகிறது

பகைவர் உம்மை அழித்திட

படைத்தலைவன் யார் என்றால் -எம்

பச்சிளம் பாலகனும் சொல்லிடுவான் "பிரபாகரன்"

படைத்தார் விடுதலைப்புலி வீரமான தமிழ் புலி

பலமான படை இது

பாவம் பார்ப்பதில்லை

பகைவர் உம்மை கொல்ல

பசில் நீ மனிதனோ ?

படைக்கின்ற பொய்யில் உண்மையுண்டோ? -நீ

பண்பாளனா சொல் நீ பண்பாளனா?

பலவீனம் எமக்கில்லை அதை நீ

பலகாலம் உணர்ந்திருக்கிறாய் சொல்?

படம் காட்டி நீர் சொல்லும்

பலதையும் நம்பிடார் உலக மக்கள்

பக்கம் பக்கமாக எழுதிடும் அறிக்கையை

பரிகாசிக்கின்றனர் நாலும் தெரிந்தோர்

படைக்கப்போகின்றோம் தமிழீழத்தை

பலியிடப்போகின்றோம் உங்களை எம் மண்ணில்

பல்குழல் பீரங்கிகள் உம் படையின் பலமதுவோ? - எம்

படையில் புலி வீரனுக்கு நிகர் அதுவோ?

பழங்குடி எம் குடி அறியாதது நீ ஏனோ? அதன்படி பார்த்தல்

பத்துக்கிராமம் உனக்கு

பரிதாபத்தில் தருகின்றோம் -மீதி

பலதும் எமக்கு ஏற்றுக்கொள்

பரிதவிக்கும் மக்களுக்கு நீ மழை போல் குண்டு போட்டாலும்

பச்சை மண்ணை விட்டு விலகிடார் -உன்

பழைய கணக்குகள் தீர்க்கும் வரை ஓய்ந்திடார்

பகலிரவு பாராமல் உழைத்திடுவார்

பயிற்சிகள் பலதும் எடுத்திடுவார்

பகைவா உன்னை கொன்றொழிக்க

பனி இங்கு பூண்டிடுவர்

பனைமரம் எமக்குண்டு எம் நாட்டில்

பயன்தரு விளைநிலம் உண்டு

பண்பாட்டு மனிதர் பல லட்சம் இங்குண்டு

படையது எமக்குண்டு எம் நாட்டினை காத்திட

பலதும் இருக்கும் நாட்டில் எமக்கு என்ன குறையையா ?

பல காலம் வாழியவே தமிழீழம் வாழியவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை.. பக்குவமா பலதும் உரைத்து படைத்த தமிழீழக் கவி அருமை..! :rolleyes:

கீறல் விழுந்த கண்ணாடி ஆகி, பலர்

கீழ்பேச்சால் கிளிந்து போன கடிதமுமாகி,

கீரி குதரிய பாம்புமாகி,

கீழே நடை பிணமாய் வீழ்ந்த வேளை,

கீதை தோற்கும் வார்தைகளாளே,

கீழ் மகன் எனக்கு,

கீர்த்திகள் தந்தாயே. தென்னங்

கீற்றிடையாளே, உனக்கு

கீர்த்தனைகள்ஆயிரம் தினமும்

கீதங்களாக பாடித் திரிந்து மடிவேனடி.

Edited by esan

  • 3 weeks later...

குற்றம் என்ன கண்டாய்,

குறைவற்ற வெண்ணிலவே..

குன்று தோறும்,

குடி கொள்ளும்,

குமரன் போல் இருபுறமும்,

குமரிகளை,

குசலமாய் கொண்டவனோ நான் ? சொல் !

குத்துவிளக்கே,

குரலில் -

குயிலே,

குங்குமத்தின் வதிவிடமே,

குழந்தை மொழியாளே,

குமுதமே, கேள் !

குளிர் வீசும் உன் விழிகள், சற்றேனும் -

குளமானால்...

குருதியில் -

குளித்து,

குணங் -

குறியின்றி,

குற்றுயிராய் நான் கிடப்பினும்,

குதித்தோடிவந்து, உன் -

குனித்த புருவத்தில் என் ஆவி -

குவித்து,

குமுறும் என் உள்ளத்தை ஆற்றுவேனடி...

கும்பிடும் ஈசன் மேல் ஆணை.

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான கு கவிதை..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூந்தலுக்குள்

கூடு கட்டி

கூடிக் களித்திட

கூவி அழைத்தேன்..

கூண்டுக் கிளியே

கூவும் இந்தக் குயிலின் குரல்

கூக்குரலாகியும்

கூசாமல்

கூண்டுக்குள் பதுங்குவதேனோ..??!

கூனியாகி

கூட்டுகள் வந்தனவோ

கூறிய கூற்றுக்கள்

கூவமாய் பிறந்தனவோ..??!

கூட்டில் நீயும்

கூவாமல் நானும்..

கூடுதல் முடியுமோ

கூடிக் களித்திடத்தான் ஆகுமோ..??!

கூந்தலுக்குள் சிக்கிய மனசு

கூறாமல் கலங்குதடி..

கூனாமல் குறுகாமல்

கூட்டாளி உன்னோடு

கூவிய குரலும்

கூவ மறுக்குதடி

கூண்டுக்கிளியே உனை

கூடாத வேளைகள்

கூடி விட்டதால்

கூடுதடி நோயும்..!

கூடும் என் நோய் தீர்க்க

கூட்டை விட்டுவா..

கூடி நாம் களிப்போம்

கூடாத வேளைகள் இல்லையென்றாக

கூடாதவை தவிர்த்துமே..! :lol:

(யாவும் கற்பனை)

Edited by nedukkalapoovan

நெடுக்கர்,

கூ கூ என்று தொடங்கினால், பின் ஒரே குவா, குவா சத்தம் தான். :wub:

Edited by esan

கெண்டை மீனைத்தேடி,

கெளிற்று மீன்,

கெந்திக்

கெந்தி தரைக்கு வந்தது.

கெட்ட கேட்டிற்கு,

கெதியாகவே வலையிலும் அகப்பட்டது.

கெட்டித்தனமாகவே மனிதனை

கெஞ்சியும் பார்த்தது.

கெண்டை அண்ணா போலவே நானும்,

கெட்ட விஷத்தை உண்டுவிட்டேன்,

கெதியாகவே நீரில் போடும் என்றது.

கெட்டியாகப் பையைப் பிடித்தவனோ,

கெளிற்றாரே, கேட்டது நடக்கும்,

கெதியாகவே, என்ன.... நீர் கொதிக்கும் என்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஒன்று.. கெ யில்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகர வரிசையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்..

ம கொண்டு வரும்.. மதி தெளிய வைக்கக் கூடிய வரிகளை இணைக்கிறேன்..

மறம் விளைந்த மண்ணில்..!

மண்தோண்டி மருதம் வளர்த்து

மடி நிரப்பி மகிழ்ந்த மண்ணில்

மண்டை ஓட்டுக் குழிகள்..!

"மகிந்த" வழி வந்த மங்கிகள்

மலிந்த விலையில் ஆயுதம் வாங்கி

மறத்தமிழன் மண் கைப்பற்றி

மானத்தமிழன் மண்டை கொய்யுதுகள்

மானம் கெட்ட தமிழனோ

மடி நிரப்ப

மண்ணின் மகிமை மறந்து

மறம் தொலைத்து

மானம் ஏலம் விட்டு

மறைந்திருந்து காட்டிக் கொடுத்து

மந்திகளுடன் மாக்களாய்..!

மறம் விளைந்த மண்ணில்

மணிக்குமணி அநியாயங்கள் பெருகுது

மாநிலம் போற்றிய மண்

மகிமை மங்கி கொலைக்களமாய்..!

மண்ணின் மைந்தரோ

மலிவான வேலை தேடி மேற்குலகில்

மலிவான பிரஜைகளாய்..!

மறக்காமல் "நான் தமிழன்" பொங்கு தமிழில்

மார் தட்டலுக்கு குறைவில்லை

மண்டை கழன்றதுகளுக்கு தான்

மண்ணில்லா அநாதை என்பது

மனதில் இல்லவே இல்லை...!

மானம் தொலைத்தோரே

மண்றாடிக் கேட்கிறேன் நில்லும் ஒரு கணம்

மாதா உம்மை உருவாக்கிய

மண்ணின் நிலை எண்ணும்

விடுமுறைக்குச் செல்ல விடுதிக்காகவல்ல

வீரமண் விடுதலை பெற்று வாழ்ந்திட

வினைத்திறனாய் ஏதாச்சும் செய்திடும்..!

http://kuruvikal.wordpress.com/2008/06/21/...a4%e0%af%88-45/

  • 2 weeks later...

கேடுகொண்டார் மனம்,

கேட்காப் பொருளே,

கேளார் மனம்,

கேட்கும் பொருளே,

கேள்விகளின் மெய்ப்பொருளே,

கேணி கொண்ட கோயிலான்,

கேசம் இடை தழுவும்,

கேதார நாதனின் தாள் நினைப்பில்,

கேவலம் என் மேனி கோவலமே பிறப்பென்று,

கேத்திரமாய் உனை வலம்வரவே, சிறு பூண்டும்,

கேலி செய்யா பிறப்பைத்தா பரம்பொருளே.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கிறது நெடுக்ஸ்!!! தொடரட்டும் வாழ்த்துக்கள்!!!

ஒளடதமான நெல்லிக் கனியும்

ஒளவையின் கையில் அரிதாய்க் கிடைக்க

ஒளடதமாய்ப் போற்றி அப் பொருளை

ஒளவையும் தந்தனளே அதியமானிடம்!!!

ஃகு போன்ற இதயம் கொண்டோரை (எ)

ஃது இல்லா அரக்கர் கூட்டம் (அ)

ஃகு வைக் கொண்டு வீழ்த்திட நினைத்தால்

ஃது வுமிங்கு தகுமாமோ!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைவளையல் ஆட்டியழைத்தாய்

கைதியானேன் உன் கண்ணடியில்..!

கைங்கரியம் பல செய்தாய்

கைமாறு என்று

கை பிடித்தேன் மணவறையில்..!

கைகேயி நீயோ

கைகழுவ எண்ணி..

கையோடு கருமாரி செய்துமென்னைக்

கைலைக்கே அனுப்பி வைத்தாய்..!

கையறு நிலையானது என் வாழ்வே..!

************

கொலைக்களமேகிய

கொலை வாள் வீழும்..

கொலை வெறியாடும்

கொலைஞர் தம் கூட்டம் அழியும்..

கொட்டமடிக்கும்

கொடிய சிங்களம் மடியும்..

கொதிக்கும் எரிமலையாய்

கொள்கையோடு தலைவன்

கொழுத்துவான் அடிமைச் சிறைகள் அனைத்தும்..!

கொள்கையோடு எழுதுவா தமிழா..

கொல்லையிலும்

கொடி ஏற்றி

கொண்டாடுவோம் தமிழீழச் சுதந்திர நாள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோதையே...

கோடு போட்டாய்

கோல மயில் உனக்காய்

கோலம் மாற்றினேன்.

கோடுகள் வரைந்து இருவரும் புள்ளிகளாகி..

கோலமாயும் மாறினோம்..!

கோபம் ஒரு நாள்

"கோட்" இழுத்தது

கோடுகள் முறிவதாய் பிரிந்தோம்..

கோலமாய் இருந்த வாழ்வும் கலைந்ததே..!

கோனாகினும் - நான்

கோடிஸ்வரனாகினும்

கோவைக்கே நீ அரசியாகினும்

கோபம் விலக்கின்..

கோலமாய் வாழ்வும் நிலைக்குமே

கோலம் அலங்கோலமாகாமலே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

சலனமற்றது என் மனமானால்,

சந்தங்களின் வருகை நீ அல்லவா,

சகதிச் சேறு நானானால் அதில்,

சமைந்த செந்தாமரை நீ அல்லவா.

சப்பற்ற கவிதை நானானால்,

சரணங்களாகிச் சுவை சேர்ப்பவள் நீ அல்லவா,

சருகான வாழ்க்கை எனதானால்,

சரிபாதியாகி புத்துயிர் அளிப்பவள் நீ அல்லவா.

சலிப்பும் சங்கடமுமே என் பொழுதானால்,

சந்திர வதனத்தால் புலர்விப்பவள் நீ அல்லவா,

சமயோசிதம் அற்றவன் நானானால்,

சற்குருவாகி தெளிவிப்பவள் நீ அல்லவா.

சபையோர் மதிக்கா பிறவி நானானால்,

சந்தனச் சிலையாக பெருமை சேர்ப்பவள் நீ அல்லவா,

சகலமும் தோற்று நான் சடமானால்,

சந்ததி காப்பவள் நீ அல்லவா.

Edited by esan

சவுக்கு மரங்களை தழுவியே,

சமுத்திர காற்று ஊர் நுழையும்..

சந்தடியற்ற இரவு.

சலவை நிலா பளபளக்கும்..

சகவாசம் அற்ற தனிமை,

சகம் தூங்கும் வேளையிலும்,

சபிக்கப்பட்டவன் போல் விழித்திருக்கும்,

சன்னி பிடித்தாற் போல் நொந்திருக்கும்.

சரம் சரமாய் பூத்திருக்கும் மல்லிகை,

சவம் போல் கிடக்கும் மனதில்,

சபலம் கிளப்பும்...

சந்தர்ப்பம் நாடியே கொல்லும்.

சலசலப்பது உன்,

சலங்கையா ? அருகே வந்து,

சரீரத்தை ஸ்பரிசித்தது,

சந்தன மயில் நீதானா?

சந்தேக மேலீட்டால்,

சற்றே நுள்ளிப்பார்த்தேன்.

சத்தியமாய் இது நிஜம் தான். ஆனாலும்,

சரி அல்ல உன் செயல், சொல்லியும் விட்டேன்.

சதிகாரா என்றே,

சட்டென்று அகன்றாள்,

சத்தமின்றியே தொடர்ந்தது இரவு.

சங்கடத்தில் தவித்தது மனது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.