Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்

Featured Replies

குறிப்பிட்ட படம் சொல்ல வேண்டிய செய்தியை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

தேங்காய் உடைப்பதற்கு எதிரான விளம்பரமாக இதை விளங்கிக் கொள்ளுதல் தவறு. ஆனால் சிலர் தேங்காய் உடைப்பதனோடு இதை மட்டுப்படுத்த முனைகிறார்கள். மற்றவர்களையும் அப்படி புரிந்து கொள்ளத் தூண்டுகிறார்கள். இவர்களை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மதம் சார்ந்த மூடத்தனங்கள் உச்சக் கட்டத்தில் இருப்பதையும், அதற்கு எதிரான பரப்புரைகள் அவசியம் என்பதையும் நாம் அடிக்கடி சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம்.

இந்த முட்டாள்தனத்தை எதிரி பயன்படுத்த முனைகின்ற போதுதான் சிலருக்கு உறைக்கின்றது. இப்பொழுதாவது அவர்கள் விளங்கிக் கொண்டார்களே என்று மகிழ்ச்சி அடைகின்றோம்.

எங்களுடைய பரப்புரைகளை மேலும் வீச்சோடு செய்ய வேண்டி அவசியத் தேவை இருப்பதை உணர்கின்றோம். இதற்கு எவ்வளவு நேரத்தை நாம் செலவிட்டாலும், அது எமது தாய் நாட்டிற்கு செய்யும் சேவையே என்பதையும் நாம் இங்கு சொல்லி வைக்கின்றோம்.

  • Replies 125
  • Views 11.9k
  • Created
  • Last Reply

தமிழர்களை கூறுபோடும் எந்த செயற்பாடும் தாயகப்பணி ஆக முடியாது. மாறாக இந்த அதிமேதாவிகள் தமிழர்களை பிரித்தாளும் எதிரியின் சதித்திட்டத்திற்கே துணை போகிறார்கள்!!!

மதத்தை வைத்து மக்களை கூறும் போடும் வேலையை எதிரிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். "முதலில் தமிழனாக இரு" என்ற பரப்புரையை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது பரப்புரை சிலரின் பிழைப்புக்கு இடைஞ்சலாக இருப்பது உண்மை. அவர்கள் எம்மை நோக்கி அபாண்டமாக ஏதாவது சொல்வார்கள். அது பற்றி எமக்கு கவலை இல்லை.

ஒரு மத நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிந்தும் தமிழினத்தின் மீது கொண்ட பற்றினால்தான் சிலர் இந்தச் சுவரொட்டியை பாரீஸ் முழுவது ஒட்டினார்கள். அவர்கள் யாரையும் கூறு போட முனையவில்லை. ஆனால் மதிகெட்ட மதவாதிகள் இவர்கள் மீதும் அப்படியான குற்றச்சாட்டை சுமத்துவார்கள்.

ஆனால் இவைகளுக்கு கலங்காது தாயகத்திற்கு உழைக்கும் பக்குவம் எமக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதாபிமானம் பேசப்படும் இடம். இங்கு மதம் மூடத்தனத்தை விதைக்கிறது அல்லது மதத்தை எதிர்ப்பவர்கள் மனிதர்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதற்குரிய இடமல்ல.

மக்கள் ஒன்றுபட்டு.. நிற்க வேண்டிய வேளை இது. அதற்கான பணிதான் இங்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியது.

மதத்தின் பெயரால் ஒருவன் மூடனாக.. இன்னொருவர் மதத்தை எதிர்த்து தன்னை புத்திசாலியாக சுயபிரகடனம் செய்ய அமைக்கப்பட்ட களமல்ல இது. அதற்குத்தானே அவரவர் காசு கட்டி தனி இணையத்தளங்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் காசை தாயக உறவுகளுக்கு அனுப்பி உதவலாமே..!

தேங்காய் உடைக்க வேண்டாம் என்று சொல்லி அடித்த போஸ்ரர் காசு காணும்.. நாலு பிள்ளைகளுக்கு சோறு போட.

சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளிடம் நேரடியாக நிலைமையை விளக்கினால்.. அவர்களாகவே இவற்றைத் தவிர்க்கச் செய்து.. தேங்காய் வாங்கிற பணத்தையும் தேங்காயையும் மீளத் தருவார்கள்.

போஸ்ரர் காசும்.. தேங்காய் விற்பனையால் வந்த காசும்.. தேங்காயும் கிடைக்கும்.. மக்களுக்கு..! எது நன்மை..!

போஸ்ரர் அடிச்சு கத்திறதும்.. மத விரோத பிரச்சாரம் செய்வதும்.. அதற்கு பணத்தை நேரத்தை வீணடிப்பதுமா..??! மனிதாபிமானம்..! :D

Edited by nedukkalapoovan

ஒரு மத நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிந்தும் தமிழினத்தின் மீது கொண்ட பற்றினால்தான் சிலர் இந்தச் சுவரொட்டியை பாரீஸ் முழுவது ஒட்டினார்கள். அவர்கள் யாரையும் கூறு போட முனையவில்லை. ஆனால் மதிகெட்ட மதவாதிகள் இவர்கள் மீதும் அப்படியான குற்றச்சாட்டை சுமத்துவார்கள்.

ஆனால் இவைகளுக்கு கலங்காது தாயகத்திற்கு உழைக்கும் பக்குவம் எமக்கு உண்டு.

இந்த சுவரொட்டி எந்த மதநம்பிக்கைக்கும் எதிரானதோ மதநிந்தனை செய்வதோ அல்ல!

வழமை போலவே உங்கள் புரிந்துணர்வு புல்லரிக்க வைக்கிறது!

சிலவேளைகளில் துரோகியை விட முட்டாள் ஆபத்தானவன் என்பார்கள்!

இது உங்களை குறித்து சொன்னதல்ல என்றே நினைக்கிறேன்!!

Edited by vettri-vel

அதை விட தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாக வேசம் போட்டுக் கொண்டு மகிந்த சிந்தனையை வாழைப்பழத்;தில் ஊசி ஏற்றவத போல் எற்றுபவர்கள இன்னும் ஆபத்தானவர்கள்

அதை விட தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாக வேசம் போட்டுக் கொண்டு மகிந்த சிந்தனையை வாழைப்பழத்;தில் ஊசி ஏற்றவத போல் எற்றுபவர்கள இன்னும் ஆபத்தானவர்கள்

யார் அவர்கள் என்று விளக்கமாக சொன்னீர்கள் என்றால் என் போன்ற பாமரர்களும் அரசியல் அறிவிலிகளும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

இன்னும் ஒன்று! என் போன்ற பாமரர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் வந்து எழுதும் மோடி மஸ்தான் வித்தையில் எல்லாம் நம்பிக்கை இல்லை!!!

Edited by vettri-vel

தேங்காய் உடைப்பது ஒரு மத நம்பிக்கை. இதற்கு வேறு வியாக்கியானம் இல்லை.

இது போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் செய்யும் வீண்விரயங்களை நிறுத்துங்கள் என்று அந்தச் சுவரொட்டி சொல்கிறது.

சரி! நாம் வேறு விதமாக இதைப் பார்ப்போம்

எனக்கு பாரிஸ் பிள்ளையார் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என்னுடைய இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் தேங்காய் உடைத்து செய்கின்ற வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்பொழுது என்னுடைய பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் நூறு தேங்காய் உடைக்கின்றேன். இந்த நேரத்தில் வன்னியில் உள்ள பிள்ளையை காட்டி என்னை தேங்காய் உடைக்க வேண்டாம் என்றால் என்ன அர்த்தம?

இங்கே கை வைக்கப்படுவது தேங்காயில் அன்று! என்னுடைய மத நம்பிக்கையில்!

தேங்காய் உடைப்பது இந்து மத நம்பிக்கையா அல்லது ஒரு சமுதாயம் சார்ந்த நம்பிக்கையா என விவாதம் செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு திரி ஆரம்பியுங்கள், அங்கு தாராளமாக விவாதிக்கலாம்!

இந்த தலைப்பின் நோக்கம் தாயகத்தில் இன்று இருக்கும் யுத்த சூழலை கருத்தில் கொண்டு நமது மக்கள் தவிர்க்க கூடிய அல்லது தேவையற்ற செலவுகளை தவிர்த்து, அந்த பணத்தை தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு அனுப்ப ஊக்குவிப்பதாகும்.

ஆனால் நீங்களோ இதிலும் வழமை போலவே உங்கள் மதத்துவேசத்தை கக்கி இந்த தலைப்பின் நோக்கத்தை திசை திருப்ப முயல்கிறீர்கள்.

தேங்காய் உடைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் திருவிழாக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள், அந்த பணத்தை தாயகத்திற்கு உதவுங்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க எம்மக்கள் பலர் தயாராகவே இருப்பர்.

அதை விட்டு விட்டு, இது தான் சமயம் என்று பார்த்து கோவிலுக்கு போகிறவன் எல்லாம் கொலைகாரன், கொள்ளைக்காரன் என்ற ரீதியில் கருத்துக்களை வைப்பது மக்களை மாற்ற உதவப்போவதில்லை.

வேண்டுமென்றால் இப்படியான கருத்துக்கள் சில மதத்துவேசிகளின் வாயில் போட்டு மெல்ல அவலாக பயன்படலாம் அவ்வளவுதான்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய் மனதைத்தொடுகிறது

தேங்காய் உடைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் திருவிழாக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள், அந்த பணத்தை தாயகத்திற்கு உதவுங்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க எம்மக்கள் தயாராகவே இருப்பர்.[

உங்களுக்கு எங்கள் மக்கள் மீது நிறையவே நம்பிக்கை! ஆனால் உங்கள் நம்பிக்கை யதார்த்தத்திற்கு புறம்பான ஒரு அழகான கனவு என்பதுதான் இதில் கசப்பான உண்மை. மதம் ஒரு மாயை என்ற தெளிவு உண்டாகும் வரை மக்கள் எதற்கும் ஒத்துழைக்கப் போவதில்லை. நாட்டுக்கு கிள்ளிக் கொடுக்கவும் தயங்குபவர்கள் கோயிலுக்கு அள்ளிக் கொடுப்பதை எத்தனை தடவை நான் பார்த்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

தாயகத்தில் எமது மக்கள் படும் அவலம் பற்றித் தெரியாமால் யாரும் இங்கே இல்லை. தெரிந்துதான் இத்தனையும் செய்கின்றார்கள். ஒரே காரணம் மதம் என்கின்ற மாயை. அந்த மாயை உடையும் வரைக்கும் இவர்கள் திருந்தப் போவது இல்லை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் உடைப்பது ஒரு மத நம்பிக்கை. இதற்கு வேறு வியாக்கியானம் இல்லை.

இது போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் செய்யும் வீண்விரயங்களை நிறுத்துங்கள் என்று அந்தச் சுவரொட்டி சொல்கிறது.

இதுக்கு உங்கட பாணியிலேயே பதில் சொன்னால்:

மற்றவன் தன்னுடைய பணத்தில்தான் தேங்காய் உடைக்கிறான். ஊரா வீட்டு பணத்தில் இல்லை. அதை நிறுத்து சொல்ல உங்களுக்கு எந்த வித அருகதையும் இல்லை.

உங்களுக்கு புரியுதோ இல்;லையோ.... இந்த அணுகு முறையால் எந்த வித மாற்றத்தையும் காண மாட்டீர்கள் என்பது நியம்.

மதம் ஒரு மாயை என்ற தெளிவு உண்டாகும் வரை

கீழ்தரமான விமர்சனங்களை வைத்து எந்தகாலத்திலும் அந்த தெளிவை கொண்டுவர மாட்டீர்கள். எப்ப உங்களால மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடிகிறதோ, அன்றுவரை இது வெறும் வெட்டி பேச்சாகவே இருக்கும்.

உங்களுக்கு எங்கள் மக்கள் மீது நிறையவே நம்பிக்கை! ஆனால் உங்கள் நம்பிக்கை யதார்த்தத்திற்கு புறம்பான ஒரு அழகான கனவு என்பதுதான் இதில் கசப்பான உண்மை. மதம் ஒரு மாயை என்ற தெளிவு உண்டாகும் வரை மக்கள் எதற்கும் ஒத்துழைக்கப் போவதில்லை.

தாயகத்தில் எமது மக்கள் படும் அவலம் பற்றித் தெரியாமால் யாரும் இங்கே இல்லை. தெரிந்துதான் இத்தனையும் செய்கின்றார்கள். ஒரே காரணம்

இதுவரை போராட்டத்திற்கு பங்களித்தவர்கள் ஏதோ ஒரு மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் என்பதை தமிழர் தலைமை எந்த சந்தர்ப்பத்திலும் மறுத்ததில்லை. அவர்களுடன் ஒப்பிட்டால் உங்களை போன்ற மதநம்பிக்கை அற்றவர்களின் பங்களிப்பு சிறியதே ஆகும்!

மதம் என்கின்ற மாயை. அந்த மாயை உடையும் வரைக்கும் இவர்கள் திருந்தப் போவது இல்லை.

ம்! அலைகள் ஓய்ந்ததும் தான் நீராடுவேன் என்பது ஆகக் கூடிய காரியமா?!!! :D

Edited by vettri-vel

காலாம் காலமாக தமிழர்களை அடக்கி ஆண்டவர்கள் மக்களின் மத நம்பிகையைத் தான் தமக்குச் சாதமாகப் பயன் படுத்தினார்கள்.தமது இன்னல்களைக் கழைய கடவுளைக் கும்பிட்டால் அவர் தமக்கு வழி காட்டுவார் என்று நம்ப வைத்தார்கள்.அதன் மூலம் அவர்கள் தாங்களாகவே தங்களில் நம்பிக்கை வைத்து எதிரிகளுடன் போராட முடியாத வகையில் அவர்களின் நம்பிகைகளை வளர்த்தார்கள்.

அதனால் தான் டக்கிளஸ் முதல் இரானுவத் தளபதி வரை கோவில்களை கட்டுகிறார்கள் திருவிழா எடுக்கிறார்கள்.இதனை உணர்ந்து விழிப்பாக ஏன் மக்கள் செயற்படுகிறார்கள் இல்லை என்பவர்கள் , மக்களின் நம்பிக்கை தான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றூக் கொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கையானது.

கதோலிக்கப் பாதிரியார்களால் அகதிகளுக்கு தமது திருச்சபையில் யாழ்ப்பாணத்தில் நிதி திரட்ட முடிகிறது.மடு மாதா உற்சவத்தை நடத்தாமல் இருக்க முடிகிறது.ஆனால் இது வரை எந்தக் கோவில் தனது நிதியில் இருந்து பணம் அனுப்பி இருக்கிறது? தெரிந்தவர்கள் விபரம் தாருங்கள்.எனக்குத் தெரிந்து புலத்தில் உள்ள கோவில்கள் சுற்று இருக்கும் வீடுகளை வாங்கிப் போட்டுள்ளன, சில கோவில்கள் தனியாரால் நடாத்தப்படு லாபம் கோவில் முதலாளிகளுக்குச் செல்கிறது.சிவயோகம் நடாத்தும் கோவில்கலில் இருந்து மட்டுமே நிதி மக்கலுக்குச் செல்கிறது.மிகுதி கோவில்களில் எல்லாமுமே திருவிழாவும் தேரும் வீடும் காணியும் தான்.ஈல்கிங் கனக துர்க்கை அம்மனுக்கு சுற்றி இருக்கும் பதின் மூன்று வீடுகல் சொந்தம்.அண்ணளவாக ஒரு வீட்டுக்கு மூன் நூற்றி அய்பது ஆயிரம் பவுண்ஸ் என்று பார்த்தால்,மில்லியன் கணக்கில் வரும்.ஆனால் பெயருக்கு நாட்டுக்கு அனுப்பும் தொகையோ சில ஆயிரம் பவுன்சூக்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா டக்கிளசு மாமா? இங்க வந்து பிரான்சில் புலிகளின்ரை அதரவு தளத்தை சிதைக்கிறதுக்க என்ன செய்யலாம் என்று கெட்ட போது இந்த தெர் திருவிhழவை பயன்படுத்த வேநண்டும் என்று ஆர் அர் ஆலோசனை சொன்னவை எண்டது எங்களுக்குத் தெரியும்.டக்கிளஸ் அதுக்கு பொறப்புக் கொடுத்த குகன் மாமா இப்ப உள்ளை இருக்கிறாராம்?

உங்களின் அந்த வீக்னஸ் தெரிந்து தான் அவர்கள் அப்படி செய்கின்றனர். திருவிழாவை டக்ளஸ் இல்லை, ஆர் நடத்தினாலும் சனம் போகும். அப்பிடி போற சனத்தை நீங்கள் முட்டாள் என்றால் சனம் உங்களைத்தான் முட்டாள் ஆக்குமே தவிர டக்கிளஸை அல்ல. சனத்தையும் சமையத்தையும் நோகிறதை விட அவர்களின் மனநிலைக்கு ஏற்ற மாதிரி உங்கள் பிரச்சாரத்தை செய்யுங்கள்.

மத நம்பிக்கை உள்ளவர்களே புலத்தில் அதிகம். அவர்கள் ஒரு யூரோ கொடுத்தாலும் அவர்களுடைய கணக்குத்தான் அதிகமாக இருக்கும்.

இந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் தெளிவு பெற்று கடவுளுக்கு விரையம் செய்யும்மிதுதி 99 யூரோக்களையும் நாட்டுக்கு கொடுத்து, பங்களிப்பில் தற்பொழுது உள்ளதை விட மேலும் முன்னே செல்ல வேண்டும் என்பதே எமது போராட்டம்.

தமிழர்கள் மத்தியில் இருந்து எத்தனையோ மாயைகள் உடைந்திருக்கின்றன. மதம் என்கின்ற மாயையும் உடையும். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தை தாண்டி விட்டால்போதும். பின்பு அனைத்துமே அடுக்கி வைக்கப்பட்ட நெருப்புப் பெட்டிகள் போன்று வேகமாக சரிந்து விடும்.

தமிழர்களிடம் மதம் சார்ந்த ஒரு சிந்தனைப் புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காலாம் காலமாக தமிழர்களை அடக்கி ஆண்டவர்கள் மக்களின் மத நம்பிகையைத் தான் தமக்குச் சாதமாகப் பயன் படுத்தினார்கள்.தமது இன்னல்களைக் கழைய கடவுளைக் கும்பிட்டால் அவர் தமக்கு வழி காட்டுவார் என்று நம்ப வைத்தார்கள்.அதன் மூலம் அவர்கள் தாங்களாகவே தங்களில் நம்பிக்கை வைத்து எதிரிகளுடன் போராட முடியாத வகையில் அவர்களின் நம்பிகைகளை வளர்த்தார்கள்.

அதனால் தான் டக்கிளஸ் முதல் இரானுவத் தளபதி வரை கோவில்களை கட்டுகிறார்கள் திருவிழா எடுக்கிறார்கள்.இதனை உணர்ந்து விழிப்பாக ஏன் மக்கள் செயற்படுகிறார்கள் இல்லை என்பவர்கள் , மக்களின் நம்பிக்கை தான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றூக் கொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கையானது.

கதோலிக்கப் பாதிரியார்களால் அகதிகளுக்கு தமது திருச்சபையில் யாழ்ப்பாணத்தில் நிதி திரட்ட முடிகிறது.மடு மாதா உற்சவத்தை நடத்தாமல் இருக்க முடிகிறது.ஆனால் இது வரை எந்தக் கோவில் தனது நிதியில் இருந்து பணம் அனுப்பி இருக்கிறது? தெரிந்தவர்கள் விபரம் தாருங்கள்.எனக்குத் தெரிந்து புலத்தில் உள்ள கோவில்கள் சுற்று இருக்கும் வீடுகளை வாங்கிப் போட்டுள்ளன, சில கோவில்கள் தனியாரால் நடாத்தப்படு லாபம் கோவில் முதலாளிகளுக்குச் செல்கிறது.சிவயோகம் நடாத்தும் கோவில்கலில் இருந்து மட்டுமே நிதி மக்கலுக்குச் செல்கிறது.மிகுதி கோவில்களில் எல்லாமுமே திருவிழாவும் தேரும் வீடும் காணியும் தான்.ஈல்கிங் கனக துர்க்கை அம்மனுக்கு சுற்றி இருக்கும் பதின் மூன்று வீடுகல் சொந்தம்.அண்ணளவாக ஒரு வீட்டுக்கு மூன் நூற்றி அய்பது ஆயிரம் பவுண்ஸ் என்று பார்த்தால்,மில்லியன் கணக்கில் வரும்.ஆனால் பெயருக்கு நாட்டுக்கு அனுப்பும் தொகையோ சில ஆயிரம் பவுன்சூக்கள் மட்டுமே.

இது உண்மை. அதற்காக கோவிலுக்கு போறவன் எல்லாம் முட்டாள் போகாதவன் எல்லாம் அறிவாளி என்ற பாங்கில பிரச்சாரம் செய்வதனால் எதிர்மாறான விளைவுகள் தான் பலனாகும். நானும் பாக்கிறேன், கடைசி 5-6 வருடமாக சைவத்திற்கு எதிரான, சமய நம்பிக்கையானவர்கள் முட்டாள்கள் என்ற பாணியிலான, பிரச்சாசங்கள் தீவிரமாக நடக்குது. ஆனால் கோவில்களின் எண்ணிக்கை குறையவும் இல்லை. பக்த கோடிகளின் எண்ணிக்கை குறையவும் இல்லை. (கோவிலுக்கு போறதில் அனேகமானவர்கள் பக்தியினால் போவதில்லை என்பது வேறு விடயம்).

அமெரிக்காவான அமெரிக்காவிலையே ஜனாதிபதி தனது உரையின் இறுதியில் "காட் பிளெஸ் அமெரிக்கா" எனக் கூறுவார். அது எந்த மாயையிலும் இல்லை. சனத்தின்ரை உணர்ச்சியை குழப்பாமல் இருப்பதற்கு. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கம்பெயின் இப்ப நடக்குது, சமயம் பற்றியான எந்த ஒரு விவாதத்தையும் எடுக்கிறார்களா என்று பாருங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனை குட்டிக்கு

எங்கள் சமய நம்பிக்கைகளில் நம்பிக்கைமுடையவர்களால் செய்யப்படும் தேங்காய் உடைத்தல் போன்ற காரியங்களை நாங்கள் குறைசொல்லக்கூடாது காரணம் மேலை நாடுகளிலும் எங்கள் கலை, கலாச்சாரமும் மற்றும் சமய நம்பிக்கைகள் காப்பாற்றப்பட்டுக்கொண்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வை நேரஞ்சல் செய்யப் போவதாக ஒரு வலைக்காட்சி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் அல்லது புலிகளின் குரலுடன் அல்லது அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வன்னி மக்களின் இடப் பெயர்வை அங்குள்ள அவலங்களை நேரஞ்சல் செய்தால் இங்குள்ள மக்கள் உணர்வு பெற்று தேங்காய்களை தெருவில் உடைக்காமல் தாயக உறவுகளுக்கு கொடுத்துவிடுவார்கள் பாருங்கள்.

இதுக்கு அந்த தொலைக்காட்சியை குறை கூறுவதற்கு பதில் சமயத்தை குறை கூறி ஒன்றும் நடக்க போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய புலம்பெயர் தேசத்தில்.. யதார்த்த சூழலில்.. சைவ சமய அல்லது இந்து சமய ஆலயங்கள் தான் பெரும்பாலும்.. தமிழ் மக்களை இன்னும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றும் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடி தாம் இனத்தால் மொழியால் மதத்தால் தமிழர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் இந்த ஆலயங்களின் பணி அளப்பரியது.

ஈழத்தில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னாகட்டும்.. இன்றைய அவல நிலையில் ஆகட்டும் பல இடர்கள் தடைகள் மத்தியில் தாயக மக்களுக்கு உதவ என்று தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் ஆலய நிர்வாகிகளை தொண்டர்களை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அண்மையில் லண்டனிற்கு வந்திருந்த மதுரை திருவாடுதுறை ஞானசம்பந்த ஆதீனத்தின் முதல்வர் ( 1983 இல் இனக்கலவரம் நடந்த போது தமிழ் மக்களைக் காக்க முதலில் குரல் எழுப்பி இந்திரா காந்தி அம்மையாருக்கு இது குறித்த தகவல்களை விரிவாக விளக்கியதும் இவர்களே..! தேசிய தலைவர் உட்பட்டோர் கைது செய்யப்பட்ட போது அவர்களை விடுவிக்க கோரியதும் இவர்களே.) பகிரங்கமாக ஆங்கிலத்தில் தான் தமிழீழத்தை ஆதரிப்பதாக கூறினார். விடுதலைப்புலிகள் தலைவரின் பெயரை பகிரங்கமாக உச்சரித்தார். (பொங்கு தமிழில் கூட பெயர் உச்சரிக்க அனுமதிக்கப்படவில்லை..!) ஆயிரக்கணக்கான மக்கள் இருக்க.. பிரித்தானிய பொலிஸ் சூழ்ந்து நிற்க.. மிகவும் துணிவுடன் இதை அவர் சொன்னது மட்டுமன்றி.. எல்லா மக்களையும் தமிழீழத்துக்காக ஒன்றிணைய ஆசீர்வதித்தார்.

நான் கேட்கிறேன்.. இந்த மத விரோத சக்திகள்.. தாயக மக்களின் இந்த அவல நிலைக்கு உதவ என்ன ஏற்பாடுகளை மக்கள் மத்தியில் செய்திருக்கிறார்கள். சவால் விடுகிறேன்.. இவர்களின் ஏற்பாடுகளை மக்கள் முன் கொண்டு வரச் சொல்லுங்கள். மக்களுக்கு அவற்றை இனங்காட்டச் சொல்லுங்கள்.

வெறுமனவே மதத்துவேசத்தை, மத விரோதத்தை சந்தடி சாக்கில் மனிதாபிமானக் களம் என்று பார்க்காது விதைத்து வரும் இவர்களுக்கு யாழ் களம் மகுடம் சூட்டி மகிழலாம். ஆனால் எந்த மனிதாபிமான சிந்தனை உள்ளவனும் இவர்களின் கையாலாகாத் தனத்தை மன்னிக்கமாட்டான்..! :D

Edited by nedukkalapoovan

தமிழர்களுக்கு தனித்துவமான பண்பாடு இல்லை என்பதைத்தான் இந்த ஆலயங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இங்கே சில கள உறவுகள் வெளிப்படையாக தமது கருத்தை வைத்தார்கள். வன்னியில் நடக்கின்ற அவலத்திற்காக எமது மத நம்பிக்கையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

பெரும்பான்மையான தமிழர்களின் நிலைப்பாடு இதுதான். இதுதான் உண்மையான பிரச்சனை.

நாம் சரியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்பதற்கு ஆதாரமும் இதுதான்!

பூனை குட்டிக்கு

எங்கள் சமய நம்பிக்கைகளில் நம்பிக்கைமுடையவர்களால் செய்யப்படும் தேங்காய் உடைத்தல் போன்ற காரியங்களை நாங்கள் குறைசொல்லக்கூடாது காரணம் மேலை நாடுகளிலும் எங்கள் கலை, கலாச்சாரமும் மற்றும் சமய நம்பிக்கைகள் காப்பாற்றப்பட்டுக்கொண்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில கள உறவுகள் வெளிப்படையாக தமது கருத்தை வைத்தார்கள். வன்னியில் நடக்கின்ற அவலத்திற்காக எமது மத நம்பிக்கையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

எவருமே மக்களின் மத நம்பிக்கையையோ அல்லது அவர்களின் குடும்பங்களின் நலனையோ விட்டுவிட்டு வந்து வன்னி மக்களுக்கு உதவக் கோரவில்லை.

மனிதாபிமான அடிப்படையில்.. தாயக உறவுகளுக்கு உதவிக் கரம் நீட்டுக்கள் என்பதுதான் கோரிக்கை.

மத நம்பிக்கையை விட்டுவிட்டால் வன்னி மக்களின் அவலம் தீருமா? நிச்சயமாக இல்லை. அதேபோல் மதமில்லை என்று நம்பிக் கொண்டே இருந்தால் வன்னி மக்களின் அவலம் தீருமா இல்லை. அல்லது மத நம்பிக்கையோடு உதவி செய்தால் வன்னி மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எங்கும் அவர்கள் சட்டம் போடவில்லை..! எனவே அநாவசிய தனிநபர்களின் சிந்தனையில் உள்ள குரோதங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க இந்த மனித அவல வேளையை பயன்படுத்தும் மிலேச்சத்தனமான செயலை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கைவிட்டுவிட்டு..

மக்களின் பங்களிப்புக்களை துரிதப்படுத்தி.. அவை பாதிக்கப்பட்ட மக்களை எவ்வளவு விரைவாக அடைய முடியுமோ அவ்வளவு விரைவாக அடையச் செய்வதுதான் கொஞ்சம் என்றாலும் அவர்களின் அவலத்தைத் தீர்க்கும்.

மக்கள் அவர்களின் நம்பிக்கைகளை விட்டிட்டு வா என்று கோருவதற்கு வன்னி மக்களின் துன்பியலை பாவிப்பதுதான் கொடிய மனித நேயமற்ற செயற்பாடு. எவ்வாறு சிங்களவன்.. மக்களை வருத்தி.. தமிழ் தேசிய மற்றும் தமிழீழ விடுதலை உணர்வை விட்டுவிட்டு வரச் சொல்கிறானோ அதற்கு ஏற்பதாகவே இதுவும் இருக்கிறது.

மனிதாபிமானத்தை முன்னிறுத்துங்கள். கோவில்கள் பற்றியும் அவற்றின் தமிழர் பண்பாட்டு நிலை பற்றியும் பல தடவைகள் ஆராய்ந்து விட்டோம். தோற்றுப்போன கருத்துக்களை மீள மீள திணிப்பதால் அவை வெல்லப்பட்டவையாகி விட முடியாது. எனவே அந்த முயற்சிகளை கைவிட்டுவிட்டு.. சவாலை எதிர்கொண்டு.. வன்னி மக்களின்.. தாயக மக்களின் நலன்களை எவ்வளவு விரைவாக பூர்த்தி செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய அனைவரையும் சாத்தியமான வழிகளில் எல்லாம் ஒருங்கிணைத்து.. செயற்படுத்துவதே இப்போதைய தேவை. மத நம்பிக்கை பற்றி பேசுவதும்.. மத விரோதிகள் இருப்பு அவசியமா என்ற பட்டிமன்றம் நடத்துவதுமல்ல.. இப்போதைய தேவை..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தில் மத நம்பிக்கையாளர்கள் இதனை மறைத்தாலும் இது தான் உண்மையான நிலவரம்.

நான் மறுக்கவில்லை ஆனால் அதற்கான உங்கள் அணுகுமுறைதான் பிழை எனக்கூறுகிறேன்.

நான் கோவிலுக்கு போறதனாலோ, கடவுள் நம்பிக்கை இருப்பதனாலோ, நான் முட்டாள் என நீங்கள் நினைக்கிறீர்களாயின் அதற்கான பதில் :lol::D:o தான்.

ஆனால் இளம் சமூதாயத்திடம் இந்த நம்பிக்கைகள் அற்று வருகின்றன.கேள்வி கேட்கிறார்கள் சுயமாகச் சிந்திக்கிறார்கள் முனைப்புடன் நாட்டுக்காக இயங்கிறார்கள் என்பது ஆறுதலான விடயம்.

இளையவர்களுக்கு மத பற்று மட்டுமல்ல தமிழ் பற்றும் குறைந்து தான் வருகுது

இது உண்மை. அதற்காக கோவிலுக்கு போறவன் எல்லாம் முட்டாள் போகாதவன் எல்லாம் அறிவாளி என்ற பாங்கில பிரச்சாரம் செய்வதனால் எதிர்மாறான விளைவுகள் தான் பலனாகும். நானும் பாக்கிறேன், கடைசி 5-6 வருடமாக சைவத்திற்கு எதிரான, சமய நம்பிக்கையானவர்கள் முட்டாள்கள் என்ற பாணியிலான, பிரச்சாசங்கள் தீவிரமாக நடக்குது. ஆனால் கோவில்களின் எண்ணிக்கை குறையவும் இல்லை. பக்த கோடிகளின் எண்ணிக்கை குறையவும் இல்லை. (கோவிலுக்கு போறதில் அனேகமானவர்கள் பக்தியினால் போவதில்லை என்பது வேறு விடயம்).

அமெரிக்காவான அமெரிக்காவிலையே ஜனாதிபதி தனது உரையின் இறுதியில் "காட் பிளெஸ் அமெரிக்கா" எனக் கூறுவார். அது எந்த மாயையிலும் இல்லை. சனத்தின்ரை உணர்ச்சியை குழப்பாமல் இருப்பதற்கு. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கம்பெயின் இப்ப நடக்குது, சமயம் பற்றியான எந்த ஒரு விவாதத்தையும் எடுக்கிறார்களா என்று பாருங்கள்?

உண்மை என்று சொல்லிக்கொண்டு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

தாம் கடவுளுக்கு உண்டியலில் காசு போட்டால் தாம் வசதியாக வாழலாம்,என்னும் சுய நலனில் இருந்தே பல மில்லியன் பவுண்களை இந்தக் கோவில்கலுக்கு மக்கள் வழங்கின்றனர்.இந்தப் பல மில்லையன் பணமும் யாருக்குச் செல்கிறது?

கோவில் சொந்தக்காரருக்குச் செல்கிறது அல்லது கோவிலை மேலும் பெருப்பிக்க வீடு நிலம் தேர் திருவிழா என்று விரயம் ஆகிறது. நாங்கள் சொல்வது நீங்கள் கடவுள் நம்பிக்கையில் வழங்கும் பணத்தை அல்லலுறும் மக்களுக்கு வழங்குங்கள் என்று.இந்த போஸ்டரும் அதனைத் தான் சொல்கிறது குறைந்த பட்சமாக உங்களால் கடவுள் நம்பிக்கையில் இருந்து வெளியால் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை இந்தக் கோவில் உண்டியலில் காசைப் போடாதீர்கள், திருவிழாக்களுக்கு பணத்தைச் செலவழிக்காதீர்கள் என்று தான் சொல்லப்படுகிறது.இதில் என்ன தவறு இருக்கிறது என்பது புலப்படவில்லை.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டெனில் அன்பே சிவம் எனில் ஏன் அல்லலுறும் மக்களுக்கு வழங்கிங்கள் என்று கோருவதை இங்கே சைவ மதத்திற்க்கு எதிரானதாக பர்கிறீர்கள் என்பது விளங்கவில்லை? கத்தோலிகத் திருச் சபை பகிரங்கமாகவே வன்னி மக்களுக்கு பணம் திரட்டுகிறது ஆனால் இங்கு பல கோடி பவுன்ஸ்களை சொத்துகளாகக் கொண்ட கோவில்களால் ஏன் உத முடியாது இருக்கிறது என்பதே எனது கேள்வி?

வன்னியில் மக்கள் இவ்வாறு அல்லலுறும் போது ஏன் தேங்காய் உடைத்து தெருவெல்லாம் தேர் இழுத்து திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பது நியாயமான கேள்வி இல்லையா? நீங்கல் செய்யும் கொண்டாடங்களை புலத்தில் இருக்கும் மற்ற மக்கள் எவ்வாறு நோக்குவார்கள்? உங்கள் மத வெறி தானே இந்த நியாயமான கேள்வியைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? இவற்ரைச் சொன்னால் எங்கே மக்கள் இந்த கேடு கெட்ட நிலையைக் கண்டு சைவ மதத்தை விட்டு ஓடி விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.ஆனால் நீங்கள் பயப்படுவதை போல ய்கோவின் சட்ச்சிகள் பெந்தகொஸ்தே போன்ற கிரித்துவ மத பிரச்சாரர்கள் எனக்குத் தெரிந்த பல சைவ சமயத்தவரை இந்த கோவில்களின் கேடு கெட்ட நிலையைச் சொல்லியே மதம் மாற்றி இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இந்த யதர்த்தங்களை மறைத்து பூசி மெழுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சைவ மதம் மீதான நம்பிக்கை மரியாதை எல்லாம் புலத்தில் அற்று வருகிறது என்பதே உண்மையான நிலமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.