Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவோடு பேசும் படங்கள்....

Featured Replies

  • தொடங்கியவர்

நிலாவோடு பேசைய படத்தோடு பேசிய மல்லிகை வாசம், விகடகவி, பொன்னி, முனிவர், காயத்ரி, ஜம்முபேபி அனைவருக்கும் நன்றிகள்.

ஜம்முபேபி நீங்கள் எனக்கு எந்தமுறையிலும் கரைச்சல் கொடுக்கலையே. நீங்களும் தொடரலாம்.... அதாவது நிலா பேசும் படங்களோடு பேசலாமே.

  • Replies 124
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா ஏனம்மா இந்த கோபம் ....நீங்கள் தாயகத்தில் இருந்து எழுவது உண்மை.பதில் அவுசில் இருந்து வந்தது உன்மை .கிளை முறியும் என்று பகிடியை ......பகிடியாக எடுங்கோ .....என் பதிலை தப்பாக விளங்கினால் என்னமா செய்ய ? உன் குற்றமா ? என் குற்றமா யாரை நான் குற்றம் சொல்ல ? .........

தனிமடலில் பேசி தீர்க்கலாமே ?

  • தொடங்கியவர்

பெண்ணில உயிரே இல்லை போலிருக்கு....அதை முதலில்ல உறுதி செயுங்கோ.....பிறகு பாட்டு எழுதுவம்.

:(:D ஏன் தான் நம்ம பொன்னிக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ? :D பெண்ணில உயிர் இருக்கு பொன்னி... :D

!!!!!!!!!!! :huh::(:D:mellow:

:( நிலாமதி ஆன்ரிக்கு பொழுது போகலையாம் மல்லிகை வாசம். இதுக்கு போய் இப்படி முழிக்கிறீங்களே....... தொடருங்கோ முழிக்கிறதை விட்டிட்டு :)

  • தொடங்கியவர்

வெண்ணிலா ஏனம்மா இந்த கோபம் ....நீங்கள் தாயகத்தில் இருந்து எழுவது உண்மை.பதில் அவுசில் இருந்து வந்தது உன்மை .கிளை முறியும் என்று பகிடியை ......பகிடியாக எடுங்கோ .....என் பதிலை தப்பாக விளங்கினால் என்னமா செய்ய ? உன் குற்றமா ? என் குற்றமா யாரை நான் குற்றம் சொல்ல ? .........

தனிமடலில் பேசி தீர்க்கலாமே ?

வெண்ணிலாவுக்கு கோவம் வராது ஆன்ரி...... ஆனால் உங்கள் கருத்து............

நீங்கள் எழுதியது நீங்களே இன்னொருக்கால் வாசித்து பாருங்கள் அது பகிடியா இல்லை ஒருவிதமான நக்கலா என்பது புரியும்?

கிளை முறியும் என சொன்னீர்கள்?

அதை ஒரு கவிதை வடிவில் சொல்லி இருக்கலாமே.

ஆனால் நீங்கள் சொல்லிச் சென்ற விதம்..................

என்னத்தை தனிமடலில் பேச போறியள்?

:mellow: நிலாமதி ஆன்ரிக்கு பொழுது போகலையாம் மல்லிகை வாசம். இதுக்கு போய் இப்படி முழிக்கிறீங்களே....... தொடருங்கோ முழிக்கிறதை விட்டிட்டு :huh:

மிக்க நன்றி வெண்ணிலா & நிலாமதி அக்கா... :(:D

  • கருத்துக்கள உறவுகள்

பாருடா பட்ட மரத்துக்கு வந்த வாழ்வை.ஆயிரம் மலரோடும் கனியோடும் இருந்த போதும் இல்லாத பொலிவு போல அத்தனை கண்களும் இப்ப மொய்க்குதே :mellow:

  • தொடங்கியவர்

பேசும்படம் 3 :lol:

peesumpadam3za0.jpg

இது

மாலை நேரத்து மயக்கம்...

மங்கையின் மனதோ

மானிடம் கிறக்கம்..

இல்லையில்லை...

இவள் நடிக்கிறாள்..

ஊடலைக்காண்பித்து

மன்னவன் உயிரை

சோதிக்கிறாள்..

கூடிடும் ஆசையை

நெஞ்சக்கூட்டுக்குள் குவித்து

நாடகமாடுகிறாள்..

தானே சென்று தலைவன் தழுவினால்..

நங்கை மயங்கிடுவாள-அவன்

நெஞ்சப் பஞ்சணைகொஞ்சம் கிடைத்தால்

குங்குமம் தேய்த்திடுவாள்!

அன்று அன்னம் ஒன்று சென்றது தூது நளனுக்காக.

இன்று புள்ளி மான் நான் செல்வேன் தூது கன்னி உனக்காக.

அன்று கன்னி ஜானகி ராமனை பிரிந்தாள் என் மேல் ஆசை கொண்டு - ஆனால்

இன்று பெண்ணே உன்னை சேர்த்து வைப்பேன் உன் ராமனோடு.

ஆண் இனம் உன்னை மான் என வர்ணிக்கும் - எனவே

நான் உனக்காய் தூது செல்லல் என் இனத்துக்கு சேவையாகும்

தேன் மொழியே, நீள் குழல் அழகியே... இன்னும் மனதில் துன்பம் தானோ?

உன் மன்னவனின் மனதை அறிய சென்று வாறேன் இந்த நொடியே

நான் செய்யும் இவ்வுதவிக்கு கைமாறு ஒன்று நீ செய்வாயா?

என்னுடைய மனதிலும் ஓர் மான் அவன் நிறைந்துள்ளான்

அவனிடத்தில் என் கருத்தை நீ எடுத்து உரைப்பாயா?

கன்னி நீ, புள்ளிமான் என் தவிப்பும் நீயும் நன்கு உணர்வாயே...

Edited by Mallikai Vaasam

எந்த இராமன்

பிடித்து வந்த

பெண் மான்

இது?

(எந்த மானைச் சொன்னேன் என்று நீங்கள் குழம்பினால் தான் இது கவிதை!)

Edited by kavi_ruban

  • கருத்துக்கள உறவுகள்

உன் கைகளில் இருப்பது

உணவா அல்லது அமிர்தமா

சொல்லு தேவதையே

எதற்காக தருகிறாய்--இந்த

உணவை என்னை

வளர்க்கவா அல்லது

பிடிக்கவா சொல் தேவதையே

உன் கைகளில் இருப்பது

கம்பளமா அல்லது வலையா

சொல் தேவதையே

உன் அருகில் நான் வருவதால் ..தான்

நான் அழகாகிறேன் நான்

உன் அழகு சிறையில் நான் வாட

என்னை விட்டுவை என் அழகு தேவதையே.................வெண்நிலவே

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் செய்கிறாய்

எங்கோ இருந்து கொண்டு...

மொழி தெரியாக் குழந்தை போல

ஒரே குழப்பம்.

உன் உணர்வின்

பார்வை மட்டும்

பட்டுத் தெறிக்கிறது.

என்றோ விட்டுப் போன

உறவொன்று

சட்டென்று

கை சேர்ந்தாற் போல

சொட்டுக் கண்ணீரில்

மனம் கரைந்து போகிறது.

கரைந்து கொண்டே

இருக்கிறது நேரம்.

கணங்கள் தேடும்

தவிப்பின் படபடப்பு.

மீண்டு விடுபட

நினைத்துத்

தோற்றுப் போகிறேன்.

நட்பின் கனத்த இதயம்

முகம் காணாமலேயே

முட்டி மோதுகிறது.

அங்கொன்றும்

இங்கொன்றும்

புள்ளிகள் போட்டதும்

தொட்டுப் போகும்

கோடுகள்...

கோலங்கள்

அழகழகாய்....

அன்பும்

தூர இருந்தாலும்

தொட்டுச் செல்கிறது

மனதை மிக அழகாய்!!!!

  • தொடங்கியவர்

ஆஹா..! என்னமா கவிதைகள் எல்லாம் எழுதுறீங்க. ரொம்ப நன்னாக எழுதுறீங்க. தொடருங்கள்.

விகடகவி, மல்லிகை வாசம், கவிரூபன், முனிவர் & நுணாவிளான் அனைவருக்கும் நன்றிகள். :lol:

நிலவு மறுமுறை மலர்ந்து விட்டதா..தா சரி நான் தனிமையில் பேசி செல்கிறேன் நிலவுடன்..ன்..சா..சா பாடி செல்கிறேன் நிலவுடன்..ன்.. :)

துள்ளிய புள்ளி மான் சொன்னது

என் தவிர்ப்பு யாரறிவார் என்று..?? :lol:

peesumpadam30ex7.jpg

அப்ப நான் வரட்டா!!

மருமோன் இது யார் சொன்னதோ..

ஆனால் ஜம்மு சொன்னா கும்முன்னுதான் இருக்கும்..

தவிர்ப்பா...தவிப்பா யாரறிவார்?

ஹா..! என்னமா கவிதைகள் எல்லாம் எழுதுறீங்க. ரொம்ப நன்னாக எழுதுறீங்க. தொடருங்கள்.

விகடகவி, மல்லிகை வாசம், கவிரூபன், முனிவர் & நுணாவிளான் அனைவருக்கும் நன்றிகள். :lol:

நன்றி வெண்ணிலா...

அது சரி, 'ஹா' என்ற எழுத்தை எப்படி தட்டச்சு செய்வது? முயன்று பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை...

Edited by Mallikai Vaasam

மருமோன் இது யார் சொன்னதோ..

ஆனால் ஜம்மு சொன்னா கும்முன்னுதான் இருக்கும்..

தவிர்ப்பா...தவிப்பா யாரறிவார்?

மாம்ஸ்..!!

நலமா..??..இது வந்து மாம்ஸ் சூரியா அண்ணா வந்து பூமிகா அக்காவிற்கு சொன்னது..து..நான் வந்து நிலாவுக்கு சொல்லுற மாதிரி.. :)

பக்கத்தில இருக்கிற நட்சத்திரற்கு "ரொக்கட்" விடுறன்..!! :lol:

அட..தவிப்பு தான் மாமா..மாறி எழுதிட்டன் சுட்டி காட்டியதிற்கு நன்றிகள்.. :o

அப்ப நான் வரட்டா!!

நன்றி வெண்ணிலா...

அது சரி, 'ஹா' என்ற எழுத்தை எப்படி தட்டச்சு செய்வது? முயன்று பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை...

` ( + space button) = ஹ

` ( + space button) = ஹ

நன்றி சோலையான் அண்ணை... :)

  • தொடங்கியவர்

நிலவு மறுமுறை மலர்ந்து விட்டதா..தா சரி நான் தனிமையில் பேசி செல்கிறேன் நிலவுடன்..ன்..சா..சா பாடி செல்கிறேன் நிலவுடன்..ன்.. :o

துள்ளிய புள்ளி மான் சொன்னது

என் தவிர்ப்பு யாரறிவார் என்று..?? :)

அப்ப நான் வரட்டா!!

:lol: ம்ம் இப்படி கிழமைநாட்களில் நிலா படங்களோடை பேசுவா :o உது தெரியாதா :o

நீங்கள் நல்லாக தான் பாடி சென்றுள்ளீர்கள்.

நன்றிகள்.

:D ம்ம் இப்படி கிழமைநாட்களில் நிலா படங்களோடை பேசுவா :) உது தெரியாதா :lol:

நீங்கள் நல்லாக தான் பாடி சென்றுள்ளீர்கள்.

நன்றிகள்.

ஓ..அப்படியே அக்கோய்..அப்ப மிச்ச நாட்களிள் நிலா யார் கூட பேசுவா சொல்லவே இல்ல..ல :D ..சரி சரி அக்கா முழுசி பார்கிறது விளங்குது நான் "எஸ்கேப்".. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தவிர்க்க முடியாத காரணத்தினால் நேற்று நிலா படங்களோடு பேசமுடியவில்லை. இன்று சிலமணித்தியாலத்தில் பேசுறேனே. மன்னிச்சிடுங்கோ :(

ஓ..அப்படியே அக்கோய்..அப்ப மிச்ச நாட்களிள் நிலா யார் கூட பேசுவா சொல்லவே இல்ல..ல :icon_mrgreen: ..சரி சரி அக்கா முழுசி பார்கிறது விளங்குது நான் "எஸ்கேப்".. :lol:

அப்ப நான் வரட்டா!!

:unsure: மிச்ச நாட்களில் யாரோடு பேசுவா னு சொல்ல முடியலை. தனிமடலில் சொல்லவா? :o:(:unsure::lol:

  • தொடங்கியவர்

பேசும்படம் 4 :icon_mrgreen:

peesumpadam4pn5.jpg

என்ன அழகு

எத்தனை அழகு

அத்தனையும்..

அவன் வண்ணம்

மட்டுமல்ல..பெண்ணே...

நீ கசக்கியெறியாத உன்

காதலும்தான்!

அன்பே நினைப்பிருக்கா? :icon_mrgreen::unsure:

அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம்

அமைதியான அழகு கடற்கரை ஓரம்

அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து

ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா?

'விரிந்த அந்த வான வெளியினிலே

பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை

மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று

உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா?

'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய்

ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது

ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே

உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா?

கடலின் கரை சேரா அந்த படகு போல - உன்

காதலி நானிங்கே உனை சேர ஏங்குகிறேன்.

கசக்கி எறிந்த ஓவியம் போல் என்னை நீயும் எறிந்தாலும் - நம்

காதலை நான் மறக்க மாட்டேன் என்னுயிர் வாழுமட்டும்.

Edited by Mallikai Vaasam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.