Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவோடு பேசும் படங்கள்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே நீ கசக்கி எறிந்தது

காகிதம் இல்லை நம்

காதலின் சாட்சி

மாலை பொழுதில்

கதிரவன் கண்களை மூட

எத்தனிக்கும் போது

எத்தனை அழகு என்றாய்

அந்த அழகை வரைந்து தாரும்

என் காதலா என்றாய்

வரைந்து கொடுத்தேன்

அந்த காட்சியை

அந்த காகிதம் என் கையில்

என் காதலி ????????? : :icon_mrgreen::unsure::unsure:

Edited by muneevar

  • Replies 124
  • Views 24.1k
  • Created
  • Last Reply

முன்னுரை :

:icon_mrgreen:

எழுதியது சற்றே நீண்டு விட்டது. தோன்றிய எண்ணங்கள் அதை விட நீளம்... ஆனால் பாவம் நிலா என்று சுய தணிக்கை செய்த பின் கிடைத்தது இது... (ஆ! சுருக்கமே இவ்வளவு என்றால்...? பிறகென்ன ஞாபகங்கள் சும்மாவா?)

---------------------------------------------------------------------------------------------------------

நீ வரைந்த

கடற்கரை காட்சியில்

நம் காதலின்

சாட்சியாய் இருந்த

படகைக் காணோம்!

நாம் பேசிய

காதல் மொழி

கேட்க ஆர்வமாய்

துள்ளி வந்த

கடல் அலை காணோம்!

கடலை வண்டி

தள்ளிப் போகும்

வயசான கிழவர்

இல்லை...

அக்கம் பக்கம்

பார்த்துவிட்டு

முத்தமிடும்

உன் குறும்பில்

குங்குமமாய்ச் சிவக்கும்

என் நிலா முகம்

போனதெங்கே?

கடற்கரை கிணற்றில்

தண்ணீர் அள்ளிப் போகும்

பெண்களின் பார்வை படாது

என் முகம் மறைக்கும்

உன் உருவம்

கரைந்தது எப்படி?

அடிக்கடி என் பெயரை

உச்சரிக்கும் உதடுகள்

கடற்கரை மணலிலும்

எழுதிப் பார்த்த

அழகு மறைந்தது

எப்படி?

வசதியாக

இப்படிப் பல

நினைவுகள் மறைந்து

வரைந்த ஓவியம்

எதற்கு என்று

கசக்கி எறிந்தாயா

என் காதலனே?

உன் புன்னகை

சொல்லும்

ஆயிரம் அர்த்தம்

புரிகிறது எல்லாம்!

Edited by kavi_ruban

  • கருத்துக்கள உறவுகள்

கடலின் ஆழம் போல என் காதலும் ஆழமானது ,அன்பே கலங்காதே. i

அருமை வெண்ணிலா

  • தொடங்கியவர்

என்ன அழகு

எத்தனை அழகு

அத்தனையும்..

அவன் வண்ணம்

மட்டுமல்ல..பெண்ணே...

நீ கசக்கியெறியாத உன்

காதலும்தான்!

நன்றாக பேசி இருக்கிறியள் நிலா பேசிய படத்தோடு. நன்றிகள் விகடகவி

அன்பே நினைப்பிருக்கா? :wub::(

:) மல்லிகை வாசம் அருமையாஅக இருக்கு. படம் பார் கவி எழுது என்றது போல, படத்தை அபப்டியே வர்ணிச்சு நல்லாக பேசி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்

அந்த காகிதம் என் கையில்

என் காதலி ????????? : :lol::rolleyes::(

:o:o எங்கே எந்தன் காதலி எங்கே எந்தன் காதலி............. :(

முனிவா நல்லாக எழுதி இருக்கிறீங்க. :)

  • தொடங்கியவர்

முன்னுரை :

:)

எழுதியது சற்றே நீண்டு விட்டது. தோன்றிய எண்ணங்கள் அதை விட நீளம்... ஆனால் பாவம் நிலா என்று சுய தணிக்கை செய்த பின் கிடைத்தது இது... (ஆ! சுருக்கமே இவ்வளவு என்றால்...? பிறகென்ன ஞாபகங்கள் சும்மாவா?)

---------------------------------------------------------------------------------------------------------

:rolleyes: கவிரூபன்.... அச்சோ நிலா பாவம் என உங்கள் நினைவுகளை சுயதணிக்கை செய்தியளா? சுயதணிக்கை நன்னாவே இல்லை. ஆனால் கவி வரிகள் நன்னா இருக்கு,. நன்றிகள்

சரி அடுத்த படத்தோடு சுயதணிக்கை செய்யாமல் பேசுங்கோ என :wub:

கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே :( பாட்டு பாடினேன் நல்லா இருக்கோ

கடலின் ஆழம் போல என் காதலும் ஆழமானது ,அன்பே கலங்காதே. i

:lol: நீச்சல் தெரிஞ்சால் தான் காதலிக்கலாம், அபப்டியா ஆன்ரி :o

அருமை வெண்ணிலா

மன்னா ஹரி அண்ணா வாங்கோ வணக்கம். எபப்டி சுகங்கள்? கண்டு :o கனகாலமாகிட்டு. என்ன செய்யுறீங்க?

வானிலாவின் பக்கம் கடற்கரையில் விழுந்து விட்டதோ..தோ..!! :rolleyes:

உனை ஓவியமாக்கிய ஓவியனை தேடுகிறேன்

உன் ஓவியத்தை வரைந்தவன்

ஓவியத்தை கசக்கினால்

அந்த கசங்கிய ஓவியதிற்கு

வர்ணம் தீட்ட..!! :lol:

nilakkaaaxm5.jpg

அப்ப நான் வரட்டா!!

:lol: மல்லிகை வாசம் அருமையாஅக இருக்கு. படம் பார் கவி எழுது என்றது போல, படத்தை அபப்டியே வர்ணிச்சு நல்லாக பேசி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்

கருத்துக்கு நன்றி வெண்ணிலா... :rolleyes:

மன்னா ஹரி அண்ணா வாங்கோ வணக்கம். எபப்டி சுகங்கள்? கண்டு :lol: கனகாலமாகிட்டு. என்ன செய்யுறீங்க?

நான் நலம்! நீங்கள் நலமா?

flowers003.jpg

untitled.jpg
  • தொடங்கியவர்

வானிலாவின் பக்கம் கடற்கரையில் விழுந்து விட்டதோ..தோ..!! :o

உனை ஓவியமாக்கிய ஓவியனை தேடுகிறேன்

உன் ஓவியத்தை வரைந்தவன்

ஓவியத்தை கசக்கினால்

அந்த கசங்கிய ஓவியதிற்கு

வர்ணம் தீட்ட..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:rolleyes::( தம்பி எப்படி இப்படி எல்லாம்? ஆச்சரியமாக இருக்கு, :wub: ரொம்ப நல்லா இருக்கு. சரி ஓவியனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்கோ என்ன வர்ணம் தீட்டுவம் :o

  • தொடங்கியவர்

பேசும்படம் 5 :lol:

peesumpadam5xu5.jpg

கெஞ்சுகிறேன் வஞ்சி நான்.. எனை வஞ்சிக்காதே!

வஞ்சி இவள் காதலிலே வருந்துகிறேன். - எனை

வஞ்சிக்காது வருவாயா காதலா என்னைத்தேடி? :rolleyes:

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்தாய், - என் வீட்டு

பஞ்சுமெத்தையும் முட் படுக்கையாக, - எனக்கு

தஞ்சமே அன்று நாமிருந்து பேசிய கருங்கல் தான்.

கெஞ்சுகிறேன் நான் உன் அன்பை பொழிவாயா?

கொஞ்சு தமிழில் காதல் மொழிகள் என் காதில் பேசி - என்

பிஞ்சு மனத்தின் வேதனையை ஆற்றுவாயா?

அஞ்சுகிறேன் நான், நீ என் வாழ்வில் இல்லை என்றால்

மிஞ்சுவது என் உடலே.. என் ஆவி பிரிந்திடுமே - எனவே

கெஞ்சுகிறேன் வஞ்சி எனை வஞ்சிக்காது வந்துவிடு! :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக ? யாருக்காக ?

அன்பே உனக்காக இந்த உயிரும் உடலும்

ஒட்டி இருப்பதுஉனக்காக தானே

மங்கையிவள் நெஞ்சில் ஏக்கம் ஓராயிரம் ,

தூக்கமும் தொலைத்தேன் ,உணவும் மறந்தேன்

உறவே நீயும் வந்திடு ,என் உயிர் வாடுது

தவிக்கிறேன் துடிக்கிறேன் ,உன்னை விரும்பினேன்

வந்துவிடு ,சீக்கிரமாய் ,உன் திருமுகம் காண வருவாயா ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னைப் பிடிப்பதே

உனக்கு என்னைப் பிடிப்பதால் தான்

கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்

எனக்கு வருத்தமாயிருக்கிறது.

ஓவியனாய் நான் பிறக்கவில்லையென!

உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,

எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,

இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து

ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!

ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.

கவிதையென்பது எழுதப்படுவதன்று

நிகழ்த்தப்படுவது என்று

நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.

ஊடலும் கூடலும் மட்டுமல்ல

காதலில் தேடலும் சுகம்தான்!

நிலவு இன்னொரு நிலவுடன் பேசியுள்ளது போல் தெரிகிறது.. :o

யாருக்காக என நாட்கள் நகர்கிறது

என் மனமோ நகராமல்

நகைகிறது

நகைக்கு மனதில்

நங்கை இல்லை

நகைக்கு மயங்கும்

அழகிலும்..

இவ்

நங்கை

இல்லை.. :lol:

நகைத்திடும்

உலகம்

நங்கை

இவளை

பார்த்து..!!

நகைக்காது

இவளின்

காதல்

மட்டும்..!! :rolleyes:

நிலவு கூட

ஏதோ

எதிர்பார்பில்

தான்

வானில்

இருந்து

சிரிக்கிறது..

அதை

யாரறிவார்..?? :rolleyes:

nilapesvd3.jpg

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

கெஞ்சுகிறேன் வஞ்சி நான்.. எனை வஞ்சிக்காதே!

ஞ் ஞ் ஞ் ஞ் என மிஞ்சிட்டீங்க மல்லிகை வாசம்.

கவிதை ரொம்ப அழகாக இருக்கு, நன்றிகள் :rolleyes:

யாருக்காக ? யாருக்காக ?

இந்த ரோஜாப்பூ யாருக்காக :lol:

நன்னா இருக்கு நிலாமதி ஆன்ரி. தொடருங்கள்

நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.

ஊடலும் கூடலும் மட்டுமல்ல

காதலில் தேடலும் சுகம்தான்!

:o அட பாவிகளா இபப்டி ஒரு சுகம் இருக்குதா? அச்சோ அச்சோ இதெல்லாம் எப்படித்தான் சிந்திக்கிறீங்களோ?

நன்றிகள் நுணாவிளான் உங்கள் கவிதைப் பகிர்வுக்கு

  • தொடங்கியவர்

நிலவு இன்னொரு நிலவுடன் பேசியுள்ளது போல் தெரிகிறது.. :o

நிலவு கூட

ஏதோ

எதிர்பார்பில்

தான்

வானில்

இருந்து

சிரிக்கிறது..

அதை

யாரறிவார்..?? :lol:

:rolleyes: ஜனா தம்பி நன்னாக தான் எழுதுறியள். அக்காவை கடிக்கிறியள். ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ :lol: . சந்தோசமாக இருக்கு. உங்கள் கருத்துக்களை பார்க்கிறப்போ.

நிலவுகூட ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தான் வானில் இருந்து சிரிக்கிறது அதை யாரறிவார்........? என்ன அழகான வரிகள். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள் ஜம்முதம்பி :rolleyes:

மல்லாந்து படுத்திருப்பது

(வெண்)நிலவோ என

ஒரு கணம்

நினைத்தேன்...

மறு கணம்

நகைத்தேன்...!

கனவிலும்

நிலா நினைவு

வருவதால்

வந்த வினை

இதுவெனத் தெளிந்தேன்!

சரி

யார் இது?

எந்த ராஜாவுக்காக

இந்த ரோஜா வாடிக்

கிடக்கிறது?

தேக்குமரத் தோள்ச்

சொந்தக்காரன்

தேடி வரும் வரை

கோடி கற்பனையில்

வாடிக் கிடக்குதோ?

யாரேனும்

கேட்டுச் சொல்லுங்கள்

நான் வாரி

அணைக்க...!

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளை வந்து பாத்தன் எல்லாம் ஒரே கவிதையாய் இருக்கு எனக்கு ஒண்டு் விழங்கேல்லை அதாலை நானும் எனக்கு முடிஞ்சமாதிரி ஏதாவது எழுதுறன்

நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

அங்காலை மறந்து பேச்சுது :lol::o

  • தொடங்கியவர்

யாரேனும்

கேட்டுச் சொல்லுங்கள்

நான் வாரி

அணைக்க...!

:lol: கவிரூபனுக்கு எப்பவும் லொள்ளுதான் நிலாவோடு. :D

அதுசரி வாரி அணைக்க தயாராகுறியளே. உது உங்க வீட்டுக்காரிக்கு தெரியுமோ :D

உள்ளை வந்து பாத்தன் எல்லாம் ஒரே கவிதையாய் இருக்கு எனக்கு ஒண்டு் விழங்கேல்லை அதாலை நானும் எனக்கு முடிஞ்சமாதிரி ஏதாவது எழுதுறன்

நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

அங்காலை மறந்து பேச்சுது :lol::D

நிலாவோடு பேசும் படம் பார்த்து கவிதை எழுதுறது தானே. உது விளங்கலை என்றாஅல் வேறை என்ன விளங்குமோ :lol:

ரொம்ப தான் லொள்ளு.

காதைப்பொத்தி ஒரு சாத்து சாத்தினால் சாத்ரி மாமாக்கு மறந்துபோன மீதிப்பாடல் வரும் ல :o

  • தொடங்கியவர்

பேசும்படம் 6 :lol:

peesumpadam6ss3.jpg

---

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

Mallikai Vaasam Posted இன்று, 10:27 AM முத்தா எல்லாம் தந்தாலும் ஏமாற மாட்டேனே
:wub::wub:

உன் அருகில் வரும் போது

எத்தனை இன்பம்

என்னை இழக்கிறேன் நான்

என் உதடுகள் உன்

முகத்தில் மேயும் போது

நீ உறங்கும் காட்சி

கண்கொள்ளா காட்சியடா

உன்னை எங்கிருந்து எடுத்தாள்

என் அன்னை சொல்லடா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் அக்காவின் முத்தம் பின் மூர்க்கமான கட்டளையாகவும். வரும். சரி அக்காதானே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.