Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகளின் அடிப்படையில் மக்களை மட்டமானவர்கள் என்று எழுதியவர் இன்ன சாதிக்கு இன்ன பழக்கம் இருக்கிறது என்று எழுதிய சாதி வெறியர்கள் எல்லாம் ஈழத்தில் சாதியே இருந்தது இல்லை என்று எழுதியவர்கள் எல்லாம் இப்போது சாதி பற்றிக் கதைக்க வேண்டாமாம்.

ஈழத்தில் இப்போது சாதிய ஒடுக்குறை தனிந்து விட்டது உண்மை.அதற்கு அடிப்படைக் காரணம் போர்ச் சூழலை எதிர் கொள்ளமுடியாத பெரும்பான்மையான நில வளம் உடைய உயர் சாதியினர் புலம் பெயர்ந்தது மற்றும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ் உயர் சாதித் தலமை ஒரங்கட்டப்பட்டது.

ஆனால் புலத்தில் சாதி இருக்கிறது,சாதீயச்சண்டைகள் இருக்கின்றன.இவற்றைப் பாதுகாப்பது இந்த மத வெறி சாதி வெறிக் கும்பல் தான்.அதற்கான மக்கல் போராட்டங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டித் தான் இருக்கிறது.

ராமசாமி என்ற சாதி வெறியர் எப்படி.. தமிழ் மக்களில் ஒரு பிரிவினரை.. பிராமணர்கள் என்று இனங்காட்டி அவர்களுக்கு எதிராக சாதியத்தை தூண்டி விட்டாரோ.. அதே பாணியில் ஈழத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும்.. தமது சுயநல விளம்பரங்கள் நிலைநாட்ட வேளாளர்.. சாதி இருப்புப் பற்றி.. ராமசாமி - பகுத்தரிவு நாத்திக வெறிக் கூடாரம் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்தக் கூடாரத்தின் இருப்புக்கு.. சாதி உச்சரிப்பும்.. இந்து சமயமும் முக்கியம். இவை இன்றேல்.. இந்தக் கூடாரமும்.. அதன் இருப்பும் உலகில் இல்லாமல் போய்விடும்.

இதே கூடாரம்.. புலம்பெயர் தேசங்களில் சாதி ஒழிக்கப்பட்டு.. இளைய சமூகம்.. மிளிர்ந்து கொண்டிருப்பதாக அறிக்கை விட்டுத் திரிந்தார்கள். இப்போ.. தங்களின் சுயநல சுய தம்பட்ட விளம்பரத்தை.. புலம்பெயர் தேசத்திலும் நீட்டிக்க.. அங்கும் சாதி.. கொடிகட்டிப் பறப்பதாகவும்.. தாம் அந்தக் கொடிகளை அறுத்துக் கொட்ட எடுத்துள்ள அவதார புருசர்களாகவும் இனங்காட்டிக் கொண்டு.. செயற்படுகின்றனர்.

இவர்களுக்கு ஈழத்தில் செயற்பட செயற்பாட்டுத் தளம் இல்லை. காரணம் அங்கு சாதியம் பற்றி பேசி.. சீண்டு முடிதல் செய்து குளிர்காய முடியாது. இவர்கள் தம்மை சாதிக்கு எதிரானவர்கள் என்ற போர்வைக்குள் வைத்துக் கொண்டு.. சாதிப் பிரிவினையை தக்க வைத்துக் கொள்வதற்கு.. புலம்பெயர் தேசமே சரியான தளமாக இருப்பதால்.. இந்து மதத்தையும் அதனோடினைத்துக் கட்டி.. தமது.. சுயநல விளம்பரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

மக்கள்.. இந்த வெறியர்களை இனங்கண்டு ஒதுக்கி வருகின்ற போதும்.. எதிரியானவன்.. இவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மக்களை பிரிக்க.. மக்களின் ஒற்றுமையைக் குலைத்து.. தமிழீழப் போராட்டத்திலின்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பி.. மக்கள் போராட்டத்தை நசுக்க முனைகிறான்.

இந்த வெறியர்களும் தமது சுயநலத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மக்கள் நலனுக்கு.. அளிக்க முன் வராததால்.. தெரிந்து கொண்டு எதிரிக்கு உதவும் வகையில்.. விடுதலைப்புலிகளின் பெயரையும்.. ஆதரவு என்ற போக்கையும் பாவித்து.. தமது வறண்டு போன.. செத்துப் போன.. வன்முறைத்தனமான.. மக்களுக்குள் சாதிப் பிரிவினையை தூண்டி விடும் பாங்கிலான.. மோசமான.. பிற்போக்குத்தனத்தை.. முற்போக்கு என்று கொண்டு.. செய்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி இந்து மதத்தையும்.. கோவில்களையும்.. தமது பிரச்சார வடிவில் இணைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் இந்துத் தமிழ் மக்களை இந்துக்களையும்.. தமிழீழ விடுதலையின் பால் விரோதிகளாக்கிக் கொள்ளவும் தூண்டு கின்றனர். இவர்கள் தொடர்பில் மக்கள் விளிப்பாக இருக்க வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 81
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நான் அன்பழகன் எழுதிய புத்தகத்தை படிக்கவில்லை. அந்தப் புத்தகத்தின் பெயரை தந்தால், அதையும் தேடிப் படிக்கிறேன்.

உண்மையில் முதலில் சவால் விட்டது நான் அல்ல. புத்தகத்தைப் படித்து விட்டு சில பார்ப்பனிய விசுவாசிகள்தான் என்னிடம் சவால் விட்டார்கள். நான் சவாலை ஏற்றுக் கொண்டேன்.

அவர்கள் 3 பூசாரிகளிடம் பேசி சம்மதம் வாங்கி வைத்திருந்தார்கள். நான் எழுதிய புத்தகத்தைப் படிக்காமலேயே அவர்களும் விவாதத்திற்கு வருவதாக சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

பின்பு புத்தகம் அவர்களின் கைக்கு கிடைத்து அவர்கள் அதை வாசித்த போது, அவர்களுக்கு வேர்த்து விறுவிறுவிட்டதாக ஒரு செய்தி. இரண்டு பேர் ஒவ்வொரு காரணங்கள் சொல்லிப் பின்வாங்கினார்கள்.

வந்த ஒருவரும் தானாக வந்ததாக தெரியவில்லை. ஒரு மணித்தியாலமாக "இந்தா வருகிறார், அந்தா வருகிறார்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு பலமுறை தொலைபேசி எடுத்து வரச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள்.

அவரும் வேறு வழியின்றி வந்து, "இன்னொரு நாள் எல்லோரும் சேர்ந்து விளக்கம் தருகிறோம்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

இப்பொழுது இந்தியா போகப் போகின்றார்களாம்.

வந்து என்ன விளக்கம் தரப் போகின்றார்கள் என்று எனக்குத் தெரியாதா? அதைத்தான் யாழ் களக் கண்மணிகள் எனக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறார்களே! அதிலே எத்தனை பெரிய ஓட்டைகள் இருக்கின்றது என்பது யாருக்கு தெரியுமோ இல்லையோ, எனக்குத் தெரியும்.

அந்த ஓட்டைகளை நான் சுட்டிக் காட்டுகின்ற போது, அவர்கள் மீண்டும் இந்தியா ஓட வேண்டி வருமே? பாவம், அடிக்கடி இந்தியா போவதற்கு பணத்திற்கு அவர்கள் எங்கு போவார்கள்?

இங்கே அவர்களுக்காக வாதாடுபவர்கள் பேசாமல் அவர்களுக்காக உண்டியல் குலுக்கி கொஞ்சம் பணம் சேர்த்துக் கொடுக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் பிரான்ஸ், ஜேர்மனி என்று போய் வாறது எல்லாம் கள்ளக்காட் அடிச்சா? அல்லது ஐரோப்பியா பெறியார் இயக்கத்தில் ஏதாவது நன்கொடையாகக் கிடைக்கின்றதா?

நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே? உங்களுக்கு சமஸ்கிருதம் எவ்வளவு தூரம் தெரியும். அந்தப் பிராமணர்களும், மந்திரங்களை மனப்பாடம் பண்ணி அர்த்தம் தெரியாமல் ஓதுகின்றார்கள், உங்களுக்கும் தெரிவது போல இல்லை. ஆக, இதற்குப்போய் மாபெரும் விளம்பரம்???...

  • தொடங்கியவர்

முன்னமேயே பதிவு செய்தால் ஜேர்மனியில் இருந்து பிரான்சுக்கு மிக மலிவாக சென்று வரலாம்.

ஆனால் இந்தியாவிற்கு அப்படி முடியாது.

இந்தப் பூசாரிகள் இத்தனை காலமும் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை ஓதுகின்றார்கள் என்பதை தோலுரித்துக் காட்டுவது என்னுடைய நோக்கம். அவர்கள் இன்னொரு நாள் விளக்கம் தருவதாக சொன்னதில் இருந்தே என்னுடைய இந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது.

ஓதபவனுக்கும் அர்த்தம் தெரியாது. கேட்பவனுக்கும் அர்த்தம் தெரியாது. எத்தனை பெரிய முட்டாள்களாக நாம் இருக்கின்றோம்? நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.

எனக்கு என்ன தெரியும் என்பது இவர்கள் விவாதத்திற்கு வருகின்ற போது உங்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓதபவனுக்கும் அர்த்தம் தெரியாது. கேட்பவனுக்கும் அர்த்தம் தெரியாது. எத்தனை பெரிய முட்டாள்களாக நாம் இருக்கின்றோம்? நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.

கடவுளுக்குத் அர்த்தம் தெரீஞ்சால் போதும்தானே எண்டு இவ்வளவு நாளும் விட்டுட்டம் போல :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்குத் அர்த்தம் தெரீஞ்சால் போதும்தானே எண்டு இவ்வளவு நாளும் விட்டுட்டம் போல :icon_idea:

கடவுளிற்கு எல்லாம் தெரியுமெண்டிறாங்கள் பிறகேன் தமிழ் மட்டும் தெரியாது எண்டிட்டு சமஸ்கிருதத்திலை செய்யினம். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளிற்கு எல்லாம் தெரியுமெண்டிறாங்கள் பிறகேன் தமிழ் மட்டும் தெரியாது எண்டிட்டு சமஸ்கிருதத்திலை செய்யினம்.

செங்கள்ளுச் சாத்திரி

கடவுளுக்கும் தெரியும்தான். ஆனால் ஐயருக்கு தமிழில செய்யத் தெரியாதெல்லே.. சமஸ்கிரும் என்றால்.. இடையில ரண்டு வசனத்த மறந்தாலும் போட்டு நிரப்பியடிக்கலாம். தமிழென்டால் சனம் கண்டுபிடிச்சிடும்.

மற்றது எத்தனை ஐயருக்கு தாங்கள் சொல்லுற மந்திரத்தின்ர அர்த்தம் தெரியும். எல்லாம் நாங்கள் இங்கிலிசில முந்தி பொயம் பாடமாக்கிறமாதிரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கள்ளுச் சாத்திரி

கடவுளுக்கும் தெரியும்தான். ஆனால் ஐயருக்கு தமிழில செய்யத் தெரியாதெல்லே.. சமஸ்கிரும் என்றால்.. இடையில ரண்டு வசனத்த மறந்தாலும் போட்டு நிரப்பியடிக்கலாம். தமிழென்டால் சனம் கண்டுபிடிச்சிடும்.

மற்றது எத்தனை ஐயருக்கு தாங்கள் சொல்லுற மந்திரத்தின்ர அர்த்தம் தெரியும். எல்லாம் நாங்கள் இங்கிலிசில முந்தி பொயம் பாடமாக்கிறமாதிரிதான்.

கவிஞர் காவடி அவர்களே அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்று எனக்கு வழங்கிக் கெளரவித்த செங்கள்ளு சாத்திரி என்கிற பெயரை நீங்கள் பாவித்து என்னை அவமானப் படுத்தி விட்டீர்கள் எனவே துஸ்ட பவ :icon_idea: சத்யாநாஸ் போனேதோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இற்றை வரை எந்த கல்யாண , ருது சாந்தி, இறப்பு , கோயில் பூசைகளில் ஐயர் என்ன சொல்கிறார் என்பது தான் பல வேளைகளில் புரியவில்லை. எனது வகுப்பில் இருந்த ஒருவர் நிறைய விளக்கம் தருவார். ஆனாலும் அவருக்கே என்ன சொல்கிறார் என்பதில் பலத்த சந்தேகம் என்பதை அறிய நாள் எடுக்கவில்லை.

என்றாலும் இது போன்ற நிகழ்வுகள் ஜேர்மனியில் நடை பெறும் போது அப்புகழ் சபேசனையே சேரும். இங்கு கனடா -அமெரிக்காவில் சோத்து மாடுகள்(மன்னிக்கவும் எனது சொற் பிரயோகத்துக்கு) ஆளாளுக்கு கோயில் கட்டி இந்தியாவில் இருந்து கள்ள சாமி வரவளைக்கப்பட்டு ஏதோ அந்தி ஜாம பூஜையாம். மணித்தியாலம் 7 டொலருக்கு வேலை செய்பவர் ஒரு 100 டொலருக்கு பூஜை இத்தகைய ஆட்களை கொண்டு செய்த்து என்னத்தை விளங்கி கொள்கிறார் என்றால் பூச்சியம் தான். யாரும் கடவுளை நம்ப வேண்டாம் என்ற எனது வியாக்கியானம் இல்லை. ஆனால் மக்கள் சுயமாக சிந்திக்க விடுவதில்லை. உ+ம் பைபிள் நோர்வேயில் நோர்வே மொழியிலும். ஜேர்மனியில் ஜேர்மன் மொழியில் போதனை செய்யும் போது ஏன் நாங்கள் மட்டும் புரியாத சமஸ்கிருத்தத்தை ஏற்க வேண்டும்?? சபேசன், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்;

உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்

ஓர்பொருளானது தெய்வம்"

இதுவே வேதங்களின் சாராம்சம் ஆகும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமஸ்கிரும் என்றால்.. இடையில ரண்டு வசனத்த மறந்தாலும் போட்டு நிரப்பியடிக்கலாம். தமிழென்டால் சனம் கண்டுபிடிச்சிடும்.

:) :) :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களமா? பாழ் களமா? என்று தெரியவில்லை.

மய்ய கருத்தாடலில் இருந்து இரண்டு பக்கங்களுக்கு வீண் விவாதம் அரங்கேறி உள்ளது. சபேசன் அய்யா மீண்டும் மீண்டும் கருத்து விவாதத்தின் மையத்திற்கு வந்த போதும் அதிலிருந்து கிளை முளைத்து கிளை முளைத்து வீண் விவாதத்தை முன் வைக்கின்றனர். (எ-கா) வேதங்களை அம்பலப்படுத்தியதற்காக அம்பேத்காரை மேற்கோள் காட்டிய போது வெற்றி-வேல் அய்யா அம்பேத்கர் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்னார் என்று திசை திருப்பல் வேலையைச் செய்தார்.

தமிழன் என்ற அடையாளம் இருக்க, சமஸ்கிருத்தில் வழிபாடு எதற்கு? புரியவில்லை. இந்து மதம் நம் மதம் என்றால் வர்ணபேதங்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதில் தமிழ் நீசபாஷை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகவே, மய்ய கருத்திலிருந்து விலகாமல் பதிலுரைக்க கேட்டுக்கொள்கிறேன்.

நெடுக்ஸ்-க்கு அன்பு வேண்டுகோள்! உங்களுக்கு இராமசாமியாக மட்டுமே தெரிபவர் எங்களுக்கு தந்தைபெரியாராகத் தெரிகிறார். ஆனால், அதற்கான விவாத கருத்தாடல் அரங்கு இந்த விவாதக்கருத்தொடு ஒன்றிவரா. மீண்டும் அதற்கான வாய்ப்பு வரும்.

சந்திபோம். ஒன்று உறுதி தமிழ்க்கடவுள் முருகளை சூத்திரக்கடவுளாக சித்திரிக்கும் போது நான் அவன் கடவுளையும், மொழியையும் மிலேச்சர்களின் கடவுள், மிலேச்சமொழி என்று பதில்சொல்லவதில் என்ன தவறு இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஏன் தேசியத்தலைவரை முடிச்சுப் போடுகின்றீர்கள்? கன்னட ராமசாமிக்கு வழிபாடு செய்யுங்கோ, கும்பிடுங்கோ... ஆனால் தேசியத்தலைவரை முடிச்சுப்போடாதீர்கள்.

  • தொடங்கியவர்

பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள்"தந்தையும் தம்பியும்" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார். இது ஒலிநாடாகவும் வெளிவந்தது.

இரண்டு தலைவர்களையும் நன்கு அறிந்தவர்களுக்கு அவர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் தெரியும்.

ஆனால் நாமோ எதையும் அறியாது "கன்னட சர்மாக்களை" தேரில் வைத்து இழுத்து கொண்டு திரிகின்றோம். எம்மை விட வயது குறைவு என்றாலும் "ஐயா" என்று குழைகின்றோம்.

ஈழத்தின் கன்னட சர்மாக்களின் புரட்டுக்களை எதிர்ப்பதற்கு கன்னட வழிவந்ததாக சொல்லப்படும் தந்தை பெரியாரின் கருத்துக்கள் தேவைப்படுவது என்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம்தான்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்துபட்டு யோசிக்கும் சபேசன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எது தேவையென

யோசித்து அதற்கேற்ப செயலாற்றினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.

அய்யர்களும் அவர்களின் வடை மாலைகளும் எமக்கு தொந்தரவு கொடுப்பவைகள் அல்ல

அங்கே எம் உறவுகள் ஒரு சோற்றுக்கு திண்டாடும் போது இந்த விதண்டாவாதங்கள் இப்போது தேவையா?

எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என கோஷம் போட்டுக்கொண்டு ஒருசில அற்ப சொற்ப விடயங்களால் எமக்குள் ஏன் பிரிவுகள்???

இங்கேயே எமக்குள் ஒற்றுமையை காணவில்லை இதற்குள் ......................?

இரண்டு தலைவர்களையும் நன்கு அறிந்தவர்களுக்கு அவர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் தெரியும்.

இதோடா..

தலைவரை கண்ணாலை காணாதவை எல்லாம் நன்கு அறிந்தவையாம்....

தலைவருக்கும் பெரியாருக்கும் 100 வித்தியாசம் இருக்கும்.... அது தெரியுமா தங்களுக்கு...

பரந்துபட்டு யோசிக்கும் சபேசன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எது தேவையென

யோசித்து அதற்கேற்ப செயலாற்றினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.

அய்யர்களும் அவர்களின் வடை மாலைகளும் எமக்கு தொந்தரவு கொடுப்பவைகள் அல்ல

அங்கே எம் உறவுகள் ஒரு சோற்றுக்கு திண்டாடும் போது இந்த விதண்டாவாதங்கள் இப்போது தேவையா?

எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என கோஷம் போட்டுக்கொண்டு ஒருசில அற்ப சொற்ப விடயங்களால் எமக்குள் ஏன் பிரிவுகள்???

இங்கேயே எமக்குள் ஒற்றுமையை காணவில்லை இதற்குள் ......................?

நீங்கள் சொன்னால் எல்லாம் உறைக்காது... யாராவது மணி கட்டி கொண்டு வந்து சொல்ல வேணும்...

Edited by தயா

சபேசனின் அறிவு வங்குரோது பார்ப்பணனை பூசாரி எண்று சொல்லும் பதம் மூலமே தெரிகிறது...!!

வைனவன் சார்ந்தவன் அந்தணன், பிரம்மம் அறிந்தவன் பிராமணன்( மந்திரங்கள் அறிந்தவன்) வேறு மதங்களை சார்ந்தவன், சிவனை பூசித்தவன் பூசாரி... மந்திரங்கள் சொல்லாது பூக்களாலும், தொழில் முறையால் பெற்ற பொருட்களாலும் பூசை செய்பவன் பூசாரி... இண்றும் வாய்கட்டி பூசை செய்யும் பூசாரிகள் இருந்தாலும் அவர்களை பண்டாரம் எனும் பதத்தால் கேவலப்படுத்த பட்டு உள்ளார்கள்....!!!

பூசாரி என்பதுதான் தமிழர்களின் கோயில்களை பராமரித்தவன் ...!! மற்றய மதங்களின் கலப்பினால்தான் பிராமணன் சைவர்களுக்குள் சேர்ந்து கொண்டான்...

இந்த நிலையிலை சபேசன் வாக்குவாதம் செய்ய போகிறாராம்....

Edited by தயா

அம்பலப்படுத்தியதற்காக அம்பேத்காரை மேற்கோள் காட்டிய போது வெற்றி-வேல் அய்யா அம்பேத்கர் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்னார் என்று திசை திருப்பல் வேலையைச் செய்தார்.

தமிழ் நீசபாஷை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகவே, மய்ய கருத்திலிருந்து விலகாமல் பதிலுரைக்க கேட்டுக்கொள்கிறேன்.

ஐயா பெரீய குயிலையா!

முதலில் அம்பேத்கார் அவர்கள் வேதங்களை பழித்தாக நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இல்லை. அத்தோடு வேதங்களை நேரடியாக வாசித்து தான் புரிந்து கொண்டதாக அம்பேத்கார் எங்கும் சொன்னதும் இல்லை. அவருக்கு சமஸ்கிருதத்தின் மேல் எந்த காழ்ப்புணர்வும் இருந்தது கிடையாது என்று நிரூபிக்கத்தான் நாம் மேற்கூறிய செய்தியை சொல்ல வேண்டிவந்தது.

அப்போது நீங்கள் அதற்கு ஆதாரம் கேட்டீர்கள், அதற்கான சரியான ஆதாரத்தை நாம் இணைத்ததும் வேறுவழியின்றி இப்போது திசை திருப்பல் அது இது என்று கூச்சல் இடுகின்றீர்கள்! உண்மையில் இப்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது தான் ஒரு உண்மையை மழுப்பும் திசைதிருப்பல்!

மேலும்! தமிழை நீசபாசை என்று எங்கும் எவரும் சொன்னதாக ஆதாரம் இல்லை. .ஆனால் தமிழை காட்டுமிராண்டி பாசை என்று ஒரு கன்னடத்து பைங்கிழவர் சொன்னதற்கு ஆதாரம் உண்டு.

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று இதை தான் சொல்வார்கள் போலுள்ளது!

காட்டுமிராண்டி பாசை என்று சொல்லி வசமாக மாட்டி கொண்டதை சமாளிக்க உங்களை போன்றவர்கள் கிளப்பிவிட்ட வீண்புரளி தான் இந்த 'நீசபாசை' புரளி

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

காவடி ஐயா

ஒரு வழி சொல்லவா? இப்போது தலைவர் போராட்டத்தைத் தொடங்கிவலிட்டு போராட்டத்திற்கு அழைத்தது போல, தமிழில் நல்ல சிறப்பான மந்திரங்களை உருவாக்கி பார்ப்பானிகளே, பூசாரிகளே!.. இதைப் பின்பற்றுங்கள் என்று சவால் விட்டிருந்தால் நியாயம் இருக்கும்.

நீங்கள் ஒரு நல்ல தமிழறிஞர் என்பதை அறிவோம். கவிக்கோ என்று பட்டம் வேறு பெற்றிருக்கின்றீர்கள். எனவே, உங்களின் இந்த செயலுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார்.

-------------------

ஐயர்மார் கந்திரத்தின் அர்த்தம் தெரியாமல் ஓதுகினம் என்றது உண்மை தான். ஆனால் கொம்பன்களின் கொம்பைப் புடுங்க புறப்பட்ட நம் தளபதிக்கு அதில் உள்ள ஏதாவதின் அர்த்தம் தெரியுமோ? அல்லது அதைத் தான் படித்தறிந்தாரோ என்பதற்குப் பதில் ... ...

காட்டுமிராண்டி பாசை என்று சொல்லி வசமாக மாட்டி கொண்டதை சமாளிக்க உங்களை போன்றவர்கள் கிளப்பிவிட்ட வீண்புரளி தான் இந்த 'நீசபாசை' புரளி

நீசபாசை என்று சொன்னவரை நாங்கள் என்றைக்கும் ஆதரித்தது கிடையாது. அவரைக் காப்பாற்றிவிட்டவர் கருணாநிதி. ஆனால் தமிழைக் காட்டுமிராண்டி என்றவனின் புகழ்ச்சிப் பெயரில் சில பேர் அலைகின்றார்கள்.

நீசபாசை என்று சொன்னவரை நாங்கள் என்றைக்கும் ஆதரித்தது கிடையாது. அவரைக் காப்பாற்றிவிட்டவர் கருணாநிதி. ஆனால் தமிழைக் காட்டுமிராண்டி என்றவனின் புகழ்ச்சிப் பெயரில் சில பேர் அலைகின்றார்கள்.

இல்லை! தூயவன் இவர்கள் நீசபாசை என்று சொன்னதாக புரளியை கிளப்பி விட்டிருப்பது காஞ்சிப் பெரியவர் எனப்படும் முன்பிருந்த காஞ்சி மடாதிபர் பற்றியது.

அவர் தனது வாழ்க்கை அனுபவங்கள் பற்றி எழுதிய முக்கிய நூலான 'தெய்வத்தின் குரல்' என்ற நூலின் முலப்பிரதியை கூட தமிழில் தான் எழுதி இருக்கிறார்.

தற்போதைய காஞ்சிமட நிர்வாகத்தின் பல்வேறு செயற்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களில் எவரும் தமிழை நீசபாசை என்று சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களும் தங்கள் உறவினர்களுடன் இன்னும் தமிழில் தான் உரையாடுகிறார்கள்.

அத்தோடு தற்போதைய காஞ்சி மடாதிபதியின் பெற்றோர்கள் அவருக்கு "இருள்நீக்கி சுப்பிரமணியன்" என்று நல்ல தமிழில் தான் பெயரும் வைத்துள்ளார்கள்!

நீசபாசை என்றால் தன் குழந்தைக்கு எவரும் அழகிய தமிழ் பெயரிடுவார்களா?

ஆனால் திரு அருட் செல்வம் அவர்களின் குடும்பத்து குழந்தைகளின் பெயர் என்ன?

அருட்செல்வம் என்றால் யார் என்று பார்க்கிறீர்களா? :icon_mrgreen:

கருணாநிதி என்பதற்கு சரியான தமிழ் தான் அது!!!

கவனித்து பார்த்தீர்கள் என்றால் தெரியும், காட்டுமிராண்டி பாசை என்று சொன்னதாக பிரச்சினை உருவான பிறகு தான் அதை சமாளிக்கும் கபட நோக்கத்துடன் நீசபாசை என்று முன்னாள் காஞ்சி மடாதிபர் சொன்னதாக ஒரு புரளி கிளப்பி விடப்ப்பட்டது.

அதற்கு முன்பு தமிழை 'நீசபாசை' என்று எவரும் சொன்னதாக எந்த முறைப்பாடும் இருக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழையும் வடமொழியையும் சேர்த்தே உபயோகித்து வரும் ஒரு நிறுவனம், திடீர் என்று 50 வருடங்களுக்கு முன்பு அதில் ஒரு மொழியை நீசபாசை என்று சொன்னதாக சொல்லப்படுவது சில வீணர்கள் கிளப்பிவிட்ட வீண்புரளி

Edited by vettri-vel

இந்து மதத்தினைத் திருத்தியமைத்தல் எவ்வாறு? இப்படியான ஒரு பண்பில் இந்த விவாதங்கள் தொடர்ந்தால் நன்றாயிருக்கும். சபேசனது அழைப்பிற்கு முகங்கொடுக்காமல் பின்வாங்குவது அறியாமை மட்டுமல்ல. தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணமேதான்.

எனது சந்தேகம் என்ன வென்றால் இவ்வாறான விவாதங்கள், திருத்தங்களினால் ஏற்படும் மாற்றங்களுக்கமைய கோயில்களுக்குச் சென்று வழிபடுவார்களா? என்பதுதான்.

தமிழ் வேதங்களில் ( பன்னிரு திருமுறை) சொல்லப்படாத எவையும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கவில்லை என்பது எனது அசைக்க முடியாத கருத்து. பன்னிரு திருமுறையின் ஆதிக்கத்தினாலேயே சமஸ்கிருதம் கோயில்களோடும் அங்கு பூசை செய்பவர்களுடனும் சிறுத்துப் போனது.

ஈழப்பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் பிராமணர்களால் பூசைகள் நடத்தப்படுவதில்லை. சாதாரண மக்களே ஈடுபடுகிறார்கள். கதிர்காமம் இதற்கொரு உதாரணம். இப்படிப்பட்ட கோவில்களுக்கு இப்படிப்பட்ட நபர்கள் சென்று வழிபடுவார்களா?

பூசை செய்வதற்காக யாரும் புதிதாக மந்திரங்களை உருவாக்க வேண்டியதில்லை என்பதும் எனது கருத்து. ஏனெனில் திருமுறைகளில் அனைத்தும் உண்டு.

இந்து மதத்தினைத் திருத்தியமைத்தல் எவ்வாறு? இப்படியான ஒரு பண்பில் இந்த விவாதங்கள் தொடர்ந்தால் நன்றாயிருக்கும். சபேசனது அழைப்பிற்கு முகங்கொடுக்காமல் பின்வாங்குவது அறியாமை மட்டுமல்ல. தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணமேதான்.

எனது சந்தேகம் என்ன வென்றால் இவ்வாறான விவாதங்கள், திருத்தங்களினால் ஏற்படும் மாற்றங்களுக்கமைய கோயில்களுக்குச் சென்று வழிபடுவார்களா? என்பதுதான்.

தமிழ் வேதங்களில் ( பன்னிரு திருமுறை) சொல்லப்படாத எவையும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கவில்லை என்பது எனது அசைக்க முடியாத கருத்து. பன்னிரு திருமுறையின் ஆதிக்கத்தினாலேயே சமஸ்கிருதம் கோயில்களோடும் அங்கு பூசை செய்பவர்களுடனும் சிறுத்துப் போனது.

ஈழப்பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் பிராமணர்களால் பூசைகள் நடத்தப்படுவதில்லை. சாதாரண மக்களே ஈடுபடுகிறார்கள். கதிர்காமம் இதற்கொரு உதாரணம். இப்படிப்பட்ட கோவில்களுக்கு இப்படிப்பட்ட நபர்கள் சென்று வழிபடுவார்களா?

பூசை செய்வதற்காக யாரும் புதிதாக மந்திரங்களை உருவாக்க வேண்டியதில்லை என்பதும் எனது கருத்து. ஏனெனில் திருமுறைகளில் அனைத்தும் உண்டு.

தமிழில் தாராளாமாக பூசை செய்யலாம் என்பது மட்டும் அல்ல, அப்படி பூசை செய்வது ஊக்குவிக்கப்படவும் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அவை உண்மையிலேயே இறை நம்பிக்கை உள்ளவர்களால் செய்யப்படும் போது அதன் நம்பகத்தன்மை மக்களிடம் அதிகமாக இருக்கும்.

சபேசன் போன்றவர்கள் சைவப்பற்றை வளர்த்துக் கொண்ட பின் இது போன்ற முயற்சிகளை தொடங்கினால் அந்த முயற்சிகள் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகம்.

இல்லையென்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதா என்ற சந்தேகம் தான் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட அனேகரிடம் வரும்.

திருமணத்தின் போது சைவத்தமிழ் பாசுரங்கள் ஒலிக்க தாலி கட்டிய சபேசனுக்கு அதை தினமும் பக்தி பெருக பாடுவதில் என்ன சங்கடம் இருந்து விடப்போகிறது. ஏற்கனவே இருக்கும் கோவில்களை மாற்றும் முயற்சியுடன் தானே ஒரு கோவிலை அமைத்து நிர்வாகம் செய்யும் போது திரு.சபேசனை பார்த்து மற்றவர்களும் அதை நடைமுறைபடுத்தக் கூடும். அதற்கு மக்களிடம் இருந்தே திரு.சபேசன் நிதி திரட்டவும் முயற்சிக்கலாம்.

மேலும், வேதத்தின் சாரம் சொல்ல பன்னிரு திருமுறைகள் கூட தேவை இல்லை இறைவா! தமிழ் வேதம் எனப்படும் திருமூலர் திருமந்திரம் ஒன்றே போதும்.

அத்தோடு பன்னிரு திருமுறைகளும் இயற்றிவர்களும் வேதத்தின் பொருள் அறியாதவர்களோ அல்லது வேதத்தை மறுத்தவர்களோ அல்ல. ஆகவே அவர்களின் பாடல்களில் வேதத்தின் சாரமே பதிந்திருக்கும்

அதிலும் தமிழ் மறையாம் தேவாரம் பாடிய சமயக்குரவர் நால்வரில் சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் மூவரும் அந்தணரே ஆவர்.

அத்தோடு வேதங்களில் உள்ள மந்திரங்கள் ஓதாமல் வேறு மொழிகளில் இறைவணக்கம் செய்யக் கூடாது என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவுமில்லை.

சபேசன் போன்றவர்கள் கண்டிக்க வேண்டியதும் மாற்ற வேண்டியதும் வேதம் சொல்லாத விதிகளை எல்லாம் வேதத்தின் விதிகளாக சொல்லி ஏமாற்றும் போலி வேதிகளையே ஒழிய வேதமந்திரங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாமல் அவற்றை பழிப்பதாலும் மந்திரங்களை தவறாக மொழிபெயர்த்து கோமாளித்தனம் செய்வதாலும் இவர்கள் சாதிக்க போவது ஒன்றும் இல்லை.

சபேசன் இதே களத்தில் திருமூலர் திருமந்திரத்தின் அர்த்த்தையே திரித்து முன்பு ஒரு தடவை ஏமாற்ற முயன்றவர் தானே. இப்படியானவர்கள் அவர்களின் முயற்சிகளில் உள்ள நம்பகத்தன்மையை அவர்களே தான் கெடுத்து கொள்கிறார்கள்

அத்தோடு வடமொழி மந்திரங்களை பற்றி விவாதம் செய்வதானால் வடமொழி அறிவை வளர்த்துக் கொண்டல்லவா செய்ய வேண்டும்.

வேண்டுமென்றால் வடமொழி மந்திரங்கள் பற்றி சபேசனின் அறிவை இங்கேயே பரீட்சித்து பார்க்கலாம் என்று நான் எழுதிய கருத்தே காணாமல் போய் விட்டது!!!

வேதமந்திரங்களில் எத்தனை இவருக்கு தெரியும்?

அவற்றை வாசித்து புரிந்து கொண்டு இவரால் விவாதம் செய்ய முடியுமா?

இல்லை வேறு யாரும் செய்த மொழிபெயர்ப்புகளை சார்ந்து விவாதம் செய்ய போகிறாரா?

அப்படி செய்வதென்றால் அந்த மொழிபெயர்ப்புகளின் சரி பிழை பற்றி இவர் போதுமான ஆராய்ச்சிகள் செய்தாரா?

வேதமந்திரங்களை பற்றி தெரிந்து கொள்வதென்றால் சபேசன் கோவில்களுக்கு தான் போகவேண்டும் என்பதில்லை. ஜேர்மனியின் பல பல்கலைகழகங்களில் அது பற்றிய துறைகள்: உண்டு. அவர்களோடும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தயா,

ஈழத்தை சேர்ந்த பூசாரிகளை பார்ப்பனர்கள் என்று அழைக்க முடியாததன் காரணம் பற்றி அறியத் தந்திருக்கின்றேன்.

இவர்களை பிராமணர்கள் என்றும் அழைக்க முடியாது. பிரம்மம் என்பது மந்திரம் அல்ல. பிரம்மம் என்பது "மெய்ப்பொருள்" பற்றிய ஒரு தத்துவம் என்று சொல்வார்கள். அந்த மெய்ப்பொருளை தலையில் இருந்து பிறந்ததால் இவர்கள்அறிந்து கொண்டார்கள். அதனால் இவர்கள் பிராமணர்களாம். இவர்களை பிராமணர்கள் என்று அழைப்பதன் மூலம் நாம் இந்தப் "புருடாவை" ஏற்றுக் கொண்டவர்கள் ஆகி விடுவோம்.

நண்பர் வெற்றிவேல் சொன்னது போன்று ஒரு சாதரண மந்திரத்தின் விளக்கமோ, உச்சரிப்போ தெரியாத இவர்கள் மெய்ப்பொருளை எப்படி அறிந்து கொள்வார்கள்? இவர்களை பிரமாணர்கள் என்று அழைப்பது ஒரு மோசமான அடிமைப் புத்தி என்பது என்னுடைய கருத்து.

அந்தணர் என்பதன் பொருள் தண்ணளி உடையவன் என்று படித்திருக்கிறேன். இதை வைணவம் சார்ந்ததாக யாரும் சொல்வது இல்லை.

பூசாரி என்பது பூசை செய்பவன்தான். அவன் பூக்களால் இறைவனை அர்ச்சிப்பவன் என்பது உண்மைதான். இன்றைக்கு ஆலயங்களில் பூக்களால் இறைவனை அர்ச்சித்துக் கொண்டு வடமொழியில் உளறுபவர்களை நான் விவாதத்திற்கு அழைத்த பொழுது, எனக்கு மிஞ்சியது "பூசாரி" என்ற சொல்தான்.

வடமொழியில் மந்திரம் சொல்லும் பூசாரிகளை ஆதரிக்கன்றவர்களை நோக்கியும் என்னுடைய அறைகூவல் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

வெற்றிவேல்,

தமிழில் வழிபாடு செய்யும்படி வலியுறுத்துவதற்கும் போராடுவதற்கும் தமிழ்பற்று இருந்தாலே போதுமானது. சைவப்பற்று இருந்தவர்களால் சாதிக்க முடியவில்லை என்பது வரலாறு.

ஓதுவார் ஆறுமுகசாமிக்கும் நாம்தான் உதவ வேண்டி இருக்கிறது. (ஆதரமாக நாரதர் இணைத்த காணொளி "மெய்யெனப்படுவது" பகுதியில் இருக்கின்றது) ஓதுவார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக எத்தன சைவப்பற்றுள்ளவர்கள் வந்தார்கள்? எத்தனை ஆதீனங்கள் வந்தன? யாருமே இல்லை.

இதுதான் யதார்த்தம்.

நீங்கள் செய்யாததால்தான் நாம் செய்கின்றோம். நீங்கள் போராடுங்கள். நாங்கள் வேறு வேலை பார்க்கின்றோம்.

செய்யவும் மாட்டார்கள். மற்றவர்கள் செய்ய முனைகின்ற போது, ஏதாவது வியக்கியானம் செய்து கொண்டு வந்து விடுவார்கள்.

ஜேர்மனியில் "றைன" என்ற இடத்தில் தமிழில் வழிபாடு நடக்கின்றது. அதற்கு காரணமாக இருந்தவர்களும் எம்மைப் போன்றவர்கள்தான்.

பக்தர்கள் செய்ய வேண்டியவற்றை நாம் செய்ய வேண்டிய நிலை இருப்பது பற்றி பக்தர்கள் வெட்கப்பட வேண்டும். இந்த அவமானத்தை களைய வெற்றிவேல் போன்றவர்கள் முன்வர வேண்டும். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

வெற்றிவேல்,

தமிழில் வழிபாடு செய்யும்படி வலியுறுத்துவதற்கும் போராடுவதற்கும் தமிழ்பற்று இருந்தாலே போதுமானது. சைவப்பற்று இருந்தவர்களால் சாதிக்க முடியவில்லை என்பது வரலாறு.

.

நீங்கள் சைவப்பற்றை வளர்த்துக்கொண்டு இந்த முயற்சியை செய்தீர்களானால் உங்கள் முயற்சி சீக்கிரம் வெற்றிபெற்று விடும் என்ற நல்லெண்ணம் தான் நமக்கு.

திருமணத்தின் போது சைவத்தமிழ் பாசுரங்கள் ஒலிக்க தாலி கட்டிய சபேசனுக்கு அதை தினமும் பக்தி பெருக பாடுவதில் என்ன சங்கடம் இருந்து விடப்போகிறது.

ஒரு சில தடவை முயற்சித்து தான் பாருங்களேன்.

இந்த அவமானத்தை களைய வெற்றிவேல் போன்றவர்கள் முன்வர வேண்டும். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்

நாம் இப்போது ஈடுபட்டிருக்கும் சில முக்கிய பணிகள் முடிவடையும் காலத்தில் தமிழ் கல்வித்துறைக்கு ஏதாவது உருப்படியாக செய்யும் எண்ணம் நிச்சயம் உண்டு.

இறை அருள் கூடிவந்தால் பார்க்கலாம்.

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.