Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை எதிர்த்து செயற்பட்ட பரீஸ் மக்களாம்..., அபாண்ட பிரச்சாரம்..!

Featured Replies

இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்...

கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன் வைக்க பட்டது...

அதனை ஒட்டி யாழ்களத்தின் வழமையாக கோயில்களை இடிப்பவர்களும், மணிகளை கள்ளட்டுபவர்களுமாக தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்... வாசிக்கும்போது உணர்ச்சி எல்லாம் பீரிட்டு எழும்பியது... ஆனால் விளைவுதான் வேதனையானது...

சர்வதேச அரங்கின் புலிகளுக்கு எதிராக பிரச்சாரத்துக்காக ஏற்படுத்த பட்ட இணையம் ஒண்று புலிகளின் கோரிக்கையையும், அறிவுரையும் உதாசீனம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகர் பூசையில் தோங்காய்களை உடைத்து புலிகளுக்கு பதிலடி எனும் விதத்தில் செய்தி (கட்டுரை வடிவிலேயே) வெளியிட்டு உள்ளது...

இந்த பிரச்சாரத்தை புலிகள் செய்யவில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.. அப்படி பிரச்சாரம் செய்த மற்றவர்கள் விட்ட தவறுகள் என்ன... விளைவுகளை அறியாமல் பிரச்சாரம் செய்வதால் இப்படித்தான் விளைவு எல்லாரையும் தாக்கும்..

இந்த செய்திகளின் பாதிப்பு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதான பாதிப்புதான்... இங்கே பிரச்சாரம் செய்பவர்கள் இது யாரின் தவறு என்பதை தெளிவு படுத்த வேண்டும்...

ஒருவேலையை உங்களால் செய்ய முடியாது என அறிந்தால் அதை செய்யாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது...

kovil202xc1.jpg

kovil203fs1.jpg

அந்த இணையத்தின் இணைப்பை தர விருப்பம் இல்லை...

செய்தி மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • Replies 74
  • Views 7.8k
  • Created
  • Last Reply

இதுவும் எமது பரப்புரை மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் சுட்டி நிற்கின்றது.

வன்னியின் மனிதாபிமான அவலங்களில் இல்லாத அக்கறை கிழக்கில் தினம் தினம் நடக்கும் படுகொலைகள் கடத்தல்களிற்கு இல்லாத அக்கறை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் கோயில்களில் திருவிழா நடத்துவதில் இருப்பது ஏன் ஏன்று சிந்தித்தால் பலதை புரிந்து கொள்ளலாம்.

எமது சிறிய பொருளாதார வளம் மனித வளம் இப்படியானவற்றில் விரையமடைவதை யார் விரும்புகிறார்கள் அதனால் அவர்களிற் இருக்கும் இலாபம் என்ன என்பதை எதிரியின் இந்த பிரச்சாரம் உறுதி செய்திருக்கிறது.

மதத்தின் மயக்கமும் வெறியும் தேசிய தாளம் போடுபவர்களையும் நிலைகுலையச் செய்கிறது. அன்று கோட்டை கட்டினவர்களையே கோயில் கட்ட வைத்த போதை அல்லவா அது. இன்று சந்ததி சந்ததியாக கு*** கழுவி சீவியம் நடத்துபவர்களை மயக்கத்தில் வைத்திருப்பது ஆச்சரியமானது அல்ல.

  • தொடங்கியவர்

xxxxx

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள், பயங்கரவாதிகள் என்று மட்டுமல்ல.. மத விரோத சக்திகள் என்ற பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள நாத்திகக் கூட்டம்.. விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு முன்னெடுக்கும் செயற்பாடுகளும் முக்கியமாக பிரச்சார தேவைக்காகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

இன்று பாரத தேசத்தில் ஆகட்டும்.. இங்காகட்டும்.. விடுதலைப்புலிகளின் கொள்கை அல்லாத கொள்கைகளை.. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக தம்மை இனங்காட்டிக் கொள்ளும் சிலர் பரப்புரை நோக்கில்.. தமது சொந்த சுயநல விளம்பர நோக்கில்.. தொலைநோக்கற்று எடுத்துச் செல்லும் போது.... சிறீலங்கா அரசு உட்பட வல்லாதிக்க அரசுகள்.. அவ்வாறான பரப்புரைகளை விடுதலைப்புலிகளை மத எதிர்ப்பு சக்திகளாகக் காட்ட.. மத நம்பிக்கை உள்ள மக்கள் அவர்களை எதிர்ப்பதாக இனங்காட்ட பாவிக்க விளைகின்றன.

இது தொடர்பில் விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் சரியான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறின்.. விடுதலைப்புலிகள் மீது அவதூறான பிரச்சாரங்களைச் செய்ய.. சில சுயநல நாத்திகவாதக் கூட்டம் தொடர்ந்து மறைமுகமாக உதவிக் கொண்டே இருக்கும் என்பது வருத்தத்துக்குரிய விடமாக இருப்பதோடு.. அது விடுதலைப்புலிகள் பற்றிய மக்கள் பார்வையில் கணிசமான தாக்கத்தை உண்டு பண்ணும்.

ஏலவே இப்படியான நாத்திகவாதிகள்.. விடுதலைப் புலி ஆதரவுப் போர்வைக்குள் இருந்து கொண்டு நாத்திகவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது.. அது விடுதலைப்புலிகள் குறித்த தவறான பார்வையை உலகுக்கு வழங்கும் என்று பல தடவை எனது கருத்துக்களில் கூட வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்காக சிலர் தம்மை துரோகிகள் எங்கின்றனர் இந்த மத வெறியர்கள் என்று கூப்பாடு போட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.

உலக மக்களில் பெரும்பான்மைச் சதவீதத்தினர் மத நம்பிக்கை உள்ளவர்கள். மத ரீதியில் விடுதலைப்புலிகளை மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுவதன் மூலம் விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் அரசுகளின் செயற்பாட்டுக்கு அது நல்ல பிரச்சாரம் தந்திரமாக இருக்கும். யாழ் களம் இவ்விக்கட்டான சூழ்நிலையிலும் கூட இணைய வழி நாத்திகக் கூட்டம்.. நாத்திகப் பரப்புரைகளை.. தமிழ் தேசிய.. விடுதலைப் புலி ஆதரவுப் போர்வைக்குள் இருந்து கொண்டு செய்ய அனுமதிப்பதில் உள்ள தவறை விளக்கிக் கொள்வதும் அவசியம்...!

அடுத்தவனை மட்டம் தட்டும் இந்த நாத்திகக் கூட்டத்தால் மக்களை ஒரு போதும் ஒற்றுமைப்படுத்த முடியாது. அதுதான் அவர்களின் கொள்கைத் தோல்விக்கு முக்கிய காரணம்.

விடுதலைப்புலிகள்.. நாத்திகவாதிகளோ.. மத எதிர்ப்பாளர்களோ அல்ல. அவர்கள் மத சுதந்திரத்தை அங்கீகரித்தே நிற்கின்றனர். மதச் சார்பற்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்களே தவிர.. அவர்கள் மத விரோதிகள் அல்ல என்ற தெளிவான நிலைப்பாட்டை சரியான வகைக்கு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை.. நாத்திகக் கூட்டம் ஒன்று திட்டமிட்டு செய்யும் பிரச்சாரத்தால்.. இன்று எழுந்துள்ளது. இதனையும் புலம்பெயர்ந்த மக்கள் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொலைநோக்கற்ற.. இந்த நாத்திக மத விரோதக் கூட்டங்களின் சுயநலச் செயற்பாடுகளால்.. பாதிக்கப்படுவது.. விடுதலைப்புலிகளும்.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் மட்டுமே அன்றி.. மதவாதிகள் அல்ல. அந்த வகையில் இவர்களும் எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான செயற்பாட்டையே செய்கின்றனர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எதிலை இருந்து ஆரம்பீக்க போகிறீர்கள்.... நண்பர்களோடை சேர்ந்து ஒருவர் அடிக்கும் பியரின் விலை ஒரு பவுன்ஸ்... மாதம் 30 பவுன்ஸ்... அதிலை இருந்தும் கூட ஆரம்பிக்கலாம்...!! ஆனால் முடிவு சுபமாக இருக்க வேண்டும்...!!

பிறகு பியர் அடிப்பதை புலிகள் தடுக்க முயன்ற புலிகள் மீறி அடித்த மக்கள் எண்று படத்தோடை செய்தி வரப்படாது...!

எதில் இருந்து ஆரம்பிக்க போகிறோமா? என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு?

நாம் 60 , 70 வருடங்களாகவே கோவிலில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம்!

அப்படி செய்து தான் கோட்டையை பிடித்தோம்1

இன்று கோட்டைக்குள் உட்கார்ந்து கொண்டு குரங்காட்டம் போடுகிறோம்!

ஒரு தமிழ் ஆர்வலரை சாடி முரசுகள் ஒலிக்க கவிதை எல்லாம் எழுதுகிறோம்!

மூன்று திருமணங்கள் செய்து முப்பது தலைமுறைக்கு சொத்துகள் சேர்த்தோம்!

கடலில் விழுந்தால் தமிழனுக்கு நாம் கட்டுமரமாவோம்!

ஆனால் கட்டுமரத்தில் சென்ற தமிழ் மீனவன் சுட்டு வீழ்த்தப்பட்டால்

கண்டும் காணாமல் இருப்போம்!

பக்கத்து தேசத்தில் பதைபதைக்க தமிழன் வதைக்கப்பட்டாலும்

பதறாமல் பகுத்தறிவோடு கவிதை மட்டும் எழுதுவோம்!

அதிகம் பேசுவோம் ஆதிசிவனுக்கும் அஞ்சோம்!

சமத்துவம் பேசுவோம் சமயம் பார்த்து பல்டி அடிப்போம்!

அப்படித்தான் நமக்கு கொள்கை பாடம் எடுத்து

கோவில் சிலைகளை உடைக்க வைத்த பெரியவர்கள் சொல்லித் தந்தார்கள்!

அன்று எங்கள் ஐயா சொல்லித்தந்த பாடம் அன்றோ

இன்று கோட்டையில் ஏறி எம்மை குரங்காட்டம் போட வைக்கிறது!

கோவில்கள் தானப்பா எங்கள் இத்தனை புரட்சிக்கும் முதல் படி!

நீங்கள் வேண்டுமென்றால் கோவில் தீர்த்தம் சாப்பிடுவதை

நிறுத்திவிட்டு தமிழ்ப்பணி செய்யுங்கள்

எம்மால் தண்ணியும் பியரும் இன்றி

அவ்வப்போது குளுசையும் இன்றி

தமிழ் பணி செய்ய முடியாது!!!

என்ன கொடுமை இது தயா சார்! :icon_idea:

Edited by vettri-vel

புலிகள் பொதுவாக மதங்களிற்கு எதிரானவர்கள் என்ற கருத்து எங்கு யாரால் பரப்பப்பட்டிருக்கு?

மாறாக இனப்பிரச்சனையை உரிமைப் போராட்டத்தை ஏனைய இடங்களில் நடப்பது போன்று மதங்களிற்கு இடையிலான சிந்தாந்த ரீதியான பிணக்காக இலங்கைத்தீவில் சிறுபான்மை இந்துக்களுகம் பெரும்பான்மை பொளத்தர்களுக்கும் இடையிலானது என்று சில மேற்குல ஊடகங்கள் கூறியிருக்கு.

வடக்கில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்கள் தேசிய பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை போராட்ட ஆதரவுச் போர்வைக்கு ஒழிந்திருந்து கொண்டு இந்து மத வெறியர்கள் செய்த விபச்சாரங்கள் இன்றும் அவ்வப்போது சந்தர்ப்பம் வரும் போது செய்வதும் தான் புலிகளையும் போராட்டத்தையும் பாதித்திருக்கிறது பாதித்துக் கொண்டிருக்கிறது.

தென்னிலங்கையில் பொளத்த வழிபாட்டு இடங்கள் பாதிக்கப்படும் போது போராட்ட ஆதரவுத்தளத்தில் ஒளித்திருந்து கொண்டு இந்து மத வெறியர்கள் கொட்டும் வக்கிரகங்கள் தான் புலிகளையும் போராட்டத்தையும் பாதித்திருக்கிறது.

இவை தான் மதப் பிணக்காக பயங்கரவாதமாக சாயம் பூச ஆதரங்களாக மாறியிருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் மதத்தின் பெயரால் விரையமாக்கப்படுவது பற்றி மக்களிற்கு விழிப்பூட்ட செய்யப்பட்ட பிரச்சாரம் புலிகளிற்கு அவப்பெயர் ஏற்பத்துவதாக கூக்குரல் இடுவது இந்து மத வெறி இவர்களிற்குள் எந்தளவிற்கு ஊறியிருக்கிறது அதை காப்பதற்கு போராட்டம் புலிகள் மனிதாபிமான எல்லாவற்றையும் வைத்து விபச்சாரம் செய்வதற்கு தயங்கமாட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் போல் எம்மால் ஒன்றை தாங்க முடியாது. இஸ்லாமியத் தமிழர்களுடனான உறவு மேம்படுத்தல் எமது இறுதி இலக்கிற்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துவது நாத்திகவாதிகள் தான். இந்து மத வெறியர்கள் தொடர்ந்து பரப்புவது இஸ்லாமிய தமிழர்களிற்கு எதிரான வக்கிரத்தைதான்.

மொத்தத்தில்

-1- வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகக் கோட்பாட்டை பலவீனப்படுத்துவது

-2- புலிகளை இஸ்லாம் பொளத்த மதங்களிற்கு எதிரான பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கான ஆதாரங்களை கொடுப்பது

-3- இன அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மதப்பிணக்காக சிறுமைப்படுத்துவதற்கான கருத்தியலை உருவாக்குவது

-4- சிறிய இனத்தின் மனித வளங்களை போராட்டத்தின் தேவைகளில் இருந்து திசை திருப்பி மத சம்பிராதயங்கள் சொயற்பாடுகளில் மூழ்கடித்து சீரழிப்பது

-5- எமது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சிறிய பொருளாதாரத்தை போர்க்கால அவலத்தின் மத்தியிலும் மதத்தின் பெயரால் கோடிக்கணக்கில் விரையப்படுத்துவதாக இருக்கட்டும்

இதுவரை போராட்டத்தையும் புலிகளையும் பலவீனப்படுத்தியது இந்து மதமும் போராட்டத்தளத்தில் ஒளிந்திருக்கும் அதன் காவலர்களும் தான். இவர்கள் இனங்காணப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.

இவர்களது நடத்தைகள் தெரிந்தோ தெரியாமல் கொடுக்கும் பாதிப்புகள் Gladio போன்ற ஒரு நோக்கத்தை கொண்டது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகவாதிகள் முன்னெடுக்கும் நாத்திகப் பிரச்சாரங்களுக்குள்.. தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு.. விடுதலைப் புலி ஆதரவு கலந்திருப்பது.. நாத்திகக் கொள்கைகளை விடுதலைப்புலிகள் ஆதரிப்பதால் தான் இவர்களும் ஆதரிக்கின்றனரோ என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறது. உண்மையில் நாத்திகவாதிகள்.. தமது பலவீனமானப் பரப்புரைக்குள் விடுதலைப்புலிகள்.. தமிழ் தேசிய.. தமிழீழ ஆதரவு போன்ற பலமான மக்கள் புரட்சிக் கருத்துகளை சேர்த்துக் கலந்தடித்து வழங்குவதன் மூலம் தமது பரப்புரையை மக்கள் மயப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர்.

ஆனால்.. அதுவே இன்று தவறான ஒரு நிலைக்கு.. எதிரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு.. விடுதலைப்புலிகளை மத விரோத சக்திகள் என்று காட்ட பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அல்லல் உறும் மக்களுக்கு கோவில்களும்.. திருவிழாக்களும் தான் பங்களிக்க வேண்டும் என்றில்லை. ஆத்திகர்கள்.. நாத்திகர்கள் எல்லோரும்.. அநாவசிய செலவுகளைக் குறைத்து அதிலிருந்து பெறும் தொகையை அல்லலுறும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நியாயமானது.

கோவிலில் தேங்காய் உடைப்பதையும்.. தேவாலயத்தில் மெழுகுதிரி கொழுத்துவதையும்.. முதன்மைப் படுத்தி.. அதுவே ஏதோ உலகச் செலவீனம்.. என்று பரப்புரை செய்வது நாத்திகவாதிகளுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால்.. அதனால் அல்லல் உறும் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

எல்லா மக்களும்.. கோவில்கள்.. தேவாலயங்கள்.. மசூதிகள்.. பொதுநிறுவனங்கள்.. தனியார் நிறுவனங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒற்றுமைப்பட்டுச் செய்ய வேண்டிய பணியை.. வெறும் தேங்காய் உடைப்புக்குள் அடக்க வெளிக்கிட்ட நாத்திக வாதத்தின் தவறான பரப்புரையின் அணுகுமுறையே இன்று.. விடுதலைப்புலிகளை மத விரோத சக்திகளாக இனங்காட்டி.. தமிழ் மக்களின் ஒற்றுமையை சிறுமைப்படுத்திக் காட்ட எதிரிக்கு உதவியுள்ளது.

இதற்கு.. வெளியில் இருந்து யாரும் வந்து பரப்புரை செய்யவில்லை. எமக்குள்ளேயே இருக்கும்.. சுயநல விளம்பரந்தேடி நாத்திக மத விரோத சக்திகளே காரணமாகி இருக்கின்றனர் என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.

தேங்காய் உடைப்புக்கு எதிரான பரப்புரை நோக்கம்.. நாத்திகவாதிகளின் வசமானதும்.. நாத்திகவாதமாக தொடர்ந்ததும்... விடுதலைப்புலி ஆதரவு என்ற தோற்றப்பாட்டை அவர்கள் காட்டி நின்றதும்.. எதிரிக்கு விடுதலைப்புலிகள் பற்றி தவறான பார்வையை மக்களுக்கு காட்ட உதவியுள்ளது.

இது எவரின் தவறு..???! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

வடக்கில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்கள் தேசிய பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை போராட்ட ஆதரவுச் போர்வைக்கு ஒழிந்திருந்து கொண்டு இந்து மத வெறியர்கள் செய்த விபச்சாரங்கள் இன்றும் அவ்வப்போது சந்தர்ப்பம் வரும் போது செய்வதும் தான் புலிகளையும் போராட்டத்தையும் பாதித்திருக்கிறது பாதித்துக் கொண்டிருக்கிறது.

சும்மா ஆதாரங்கள் இன்றி புரளிகள் கிளப்புவதை நிறுத்திவிட்டு வடக்கில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை வைத்து எந்த இந்து மத அமைப்பு மதப்பிரச்சாரம் செய்தது என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?

அல்லது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈழத்தின் எந்த இந்து மத அமைப்பு ஈடுபட்டது என்று நிரூபிக்க முடியுமா?

ஒரு அரசியல் நடவடிக்கைக்கு மதச்சாயம் பூச நினைக்கும் உங்களை போன்ற மதத்துவேசிகளையும் கடந்து தமிழர்கள் ஒன்றுபடுவது தான் இன்றைய தேவை.

தெரிந்தே இடையுறுகள் செய்வான் துரோகி!! தெரியாமலும் புரியாமலும் இடையூறுகள் செய்பவன் மூடன்!!

Edited by vettri-vel

சும்மா ஆதரங்கள் இன்றி புரளிகள் கிளப்புவதை நிறுத்திவிட்டு வடக்கில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை வைத்து எந்த இந்து மத அமைப்பு மதப்பிரச்சாரம் செய்தது என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?

அல்லது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈழத்தின் எந்த இந்து மத அமைப்பு ஈடுபட்டது என்று நிரூபிக்க முடியுமா?

ஒரு அரசியல் நடவடிக்கைக்கு மதச்சாயம் பூச நினைக்கும் உங்களை போன்ற மதத்துவேசிகளையும் கடந்து தமிழர்கள் ஒன்றுபடுவது தான் இன்றைய தேவை.

தெரிந்தே இடையுறுகள் செய்வான் துரோகி!! தெரியாமலும் புரியாமலும் இடையூறுகள் செய்பவன் மூடன்!!

ஈழத்தில் இந்துக்கள் அமைப்பாக ஒரு பெயரின் கீழ் கூத்தடித்தால் நல்லம். அதனால் போராட்டம் பாதிக்கப்படாது. அவர்களை இலகுவாக இனங்கண்டு ஒதுக்கிக் கொள்ளலாம். ஆனால் போராட்டத்தளத்தினுள் இருந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்து மத வெறியில் கொடுக்கும் வியாக்கியானங்கள் செய்யும் செயற்பாடுகள் தான் ஆபத்தானவை. அது தான் நடந்து கொண்டிருக்கு.

இங்கு கருத்துக்களத்தில் இதுபற்றி பல தடவை பேசப்பட்டிருக்கிறது. அவற்றை தேடி வாசிக்கவும். அது அரசியல் நடவடிக்கை அல்ல, வருத்தத்திற்குரிய ஆனால் அந்தக் காலகட்டத்தில் வேறு வழியின்றி அவசியமாகிப்போன பாதுகாப்பு நடவடிக்கை.

அதற்கு அரசியல் சாயம் பூசுவதும் ஏனைய நியாயப்பாடுகளை இன்றும் வைப்பதும் இந்து மத மயக்கத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தான்.

தெரிந்தே இடையுறுகள் செய்வான் துரோகி!! தெரியாமலும் புரியாமலும் இடையூறுகள் செய்பவன் மூடன்!! :icon_idea::lol:

Edited by kurukaalapoovan

இங்கு கருத்துக்களத்தில் இதுபற்றி பல தடவை பேசப்பட்டிருக்கிறது. அவற்றை தேடி வாசிக்கவும்.

அதற்கு அரசியல் சாயம் பூசுவதும் ஏனைய நியாயப்பாடுகளை இன்றும் வைப்பதும் இந்து மத மயக்கத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தான்.

தெரிந்தே இடையுறுகள் செய்வான் துரோகி!! தெரியாமலும் புரியாமலும் இடையூறுகள் செய்பவன் மூடன்!! :icon_idea::lol:

உங்கள் சிரிப்புகளையும் மழுப்புகளையும் விட்டு விட்டு எந்த இந்து மத அமைப்பு வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை இந்து மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

இது போன்ற புரளிகள் கிளப்புவது அறிவுடையவர்கள் செய்யும் செயலா?! சிந்தியுங்கள்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிரிப்புகளையும் மழுப்புகளையும் விட்டு விட்டு எந்த இந்து மத அமைப்பு வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை இந்து மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

இது போன்ற புரளிகள் கிளப்புவது அறிவுடையவர்கள் செய்யும் செயலா?! சிந்தியுங்கள்!!!

இயலாமை ஒருவனை சிந்தனையற்றவனாக்குகிறது..! அதுதான் நடக்கிறது வெற்றிவேல்.

மத ஒற்றுமையின் அவசியத்தை மதச் சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் நாம் முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம். இக்களம் பூரா. ஆனால் நாத்திகவாதிகளின் தவறான பிரச்சார அணுகுமுறை விட்டுத் தந்த பாதகச் செயலை மூடிமறைக்க.. மதமே இல்லை எனும் நாத்திகவாதிகள்.. இஸ்லாமியரை.. ஒற்றுமைப்படுத்தப் பாடுபடுகினமாம்.. என்ற.. பலவீனமான கருத்தே.. போதும்.. இவர்களின் சிந்தனையற்ற செயற்பாடுகளைச் சொல்ல..!

இதே நாத்திகவாதக் கூட்டம்.. இன்னொரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சிங்கள பெளத்த பேரினவாதத் தேரர்களையும்.. இஸ்லாமியக் கோட்பாடுகளை அதிகம் வலியுறுத்தும் தலிபான்களையும்.. ஒன்றாகக் காட்டி ஒரு படம் போட்டுப் பிரச்சாரம் செய்ததை.. யாரும் மறந்திருக்கமாட்டார்கள்..! அப்போது அதனை வன்மையாகக் கண்டித்தது நாத்திகவாதிகள் அல்ல. மதச் சுதந்திரத்தை வேண்டி நின்றவர்களே..! அது இஸ்லாமிய மக்களை எம்மிடமிருந்து விலக்கும் என்று எச்சரித்ததும் நாமே..! அது எமக்கு தேவையற்ற ஒரு ஒப்பீடு என்று கண்டித்ததும் நாமே..!

அதை இஸ்லாமிய அடிப்படை தீவிர வாதம்.. என்ற போர்வையில்.. சித்தரிக்க முயன்றனர்.. நாத்திகவாதிகள். அது எப்படியாவது இருக்கட்டும்.. ஆனால் அந்த ஒப்பீடு அவசியமில்லை என்ற கருத்தை வலுவாக முன் வைத்தவர்கள் நாம். அந்த தலைப்பு இப்போதும் யாழ் களத்தில் இருக்கிறது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகளுக்கும் இந்து மத எதிர்ப்பிற்கும் சப்ம்பந்தம் இல்லை என்று இதே யாழ்க்களத்தில் வாய் கிளியக்கத்தியவர்கள் இப்போது அப்படியான ஒரு தொடர்பு இருப்ப்பதாக சிறிலங்கா அரசு செய்யும் பிரச்சாரதுக்கு வாக்களத்து வாங்குவது இவர்களுக்கு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை விட மதம் மீதான வெறியே மிகுந்து இருப்பதைக் காட்டுகிறது.இவ்வாறான மத வெறியைக் கிளறி விடுவதன் மூலம் அதனை தமிழ்த் தேசியம் என்னும் கருதியலுக்கு எதிராகத் திருப்பி விடுவதே சிறிலங்கா அரசின் தந்திரம்.இதை வகுத்துக்கொடுப்பது டக்கிளசு போன்ற கைக்கூலிகள்.அதனால் தான் அவர்கள் புலதிலும் யாழிலும் கோவில்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள் என்பது பலமுறை ஆதாரபூர்வமாக இங்கே காட்டப்பட்டது.

புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை அரசியல் என்பது மதம் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.மதங்களை வழி படும் சுதந்திரத்தைப்போல் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை.ஒருவர் மதங்ககளைப் பிரச்சாரப்படுத்துவது போல் இன்னொருவர் மதங்களை விமரிசிக்கவும் அவர் அவருக்கு கருத்தியல் உரிமை இருக்கிறது.

அன்பே சிவம் என்னும் ஒரு மதம் பல ஆயிரம் உயிர்கள் வீடின்றி உணவின்றி அல்லற்படும் போது தெருக்களில் உணவை/பணத்தை வீண் விரயம் செய்வது ஒரு பகுத்தறிவான செயலா என்று கேள்வி கேட்பது பகுத்தறிவுச் சிந்தனை உடைய எவருக்குமே எழும் நியாயமான கேள்வி.இந்தக் கேல்வி மதங்களை நம்பும் ஒருவருகுக் கூட நியாயமாக இருப்பததகவே இங்கே எழுதப்பட்ட பலரின் கருதுக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.ஆனால் இதனைக் கூட தமது மத வெறிக்குளால் பார்க்கும் குறிப்பிட்ட ஒரு மத வெறிக் கூட்டம் புலத்தில் இருப்பதையும் இது காட்டி உள்ளது.சிறிலங்கா அரசின் உளவியற் போரின் இலக்காக இருப்பது இந்த இந்து மத வெறி சாதி வெறிக் கூட்டம்.இதன் மீதான தொடர் விழிப்புணர்வை ஊட்டுவதும் பெரும்பான்மையான சிந்திக்கின்ற பகுதறிவை உடைய மத நம்பிக்கை உடையோரை இந்த மத வெறிக் கூட்டத்தில் இருந்து பிரித்து வைக்கின்ற கடமை புலத்தில் இருக்கின்ற எல்லாத் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வாளர்களுக்கும் இருக்கிறது.சிறிலங்கா அரசின் இந்தச் சதியை முறையடிக்க இது அவசியமானது.

புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை மதம் என்பது அரசியல் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.மதங்களை வழி படும் சுதந்திரத்தைப்போல் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை.ஒருவர் மதங்ககளைப் பிரச்சாரப்படுத்துவது போல் இன்னொருவர் மதங்களை விமரிசிக்கவும் அவர் அவருக்கு கருத்தியல் உரிமை இருக்கிறது.

அன்பே சிவம் என்னும் ஒரு மதம் பல ஆயிரம் உயிர்கள் வீடின்றி உணவின்றி அல்லற்படும் போது தெருக்களில் உணவை/பணத்தை வீண் விரயம் செய்வது ஒரு பகுத்தறிவான செயலா என்று கேள்வி கேட்பது பகுத்தறிவுச் சிந்தனை உடைய எவருக்குமே எழும் நியாயமான கேள்வி.இந்தக் கேல்வி மதங்களை நம்பும் ஒருவருகுக் கூட நியாயமாக இருப்பததகவே இங்கே எழுதப்பட்ட பலரின் கருதுக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்..

உங்களின் மேற்கண்ட கருத்துக்களுடன் நான் முரண்படவில்லை.

ஆனால் விவாதங்களை உண்மையுடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் நாம் நடத்துவது விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நல்ல பல தகவல்களை வழங்கி சிந்தனையை வளர்க்க உதவும் என்று நான் கருதுகிறேன்

ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் அறிவை வளர்க்க பயன்படும். அதற்கு கொஞ்சம் நிதானமும் நல்ல ஆராய்ச்சியும் அவசியம் அல்லவா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை அரசியல் என்பது மதம் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

இக்கருத்து நாத்திக.. ராமசாமி - பகுத்தரிவு வெறியர்களின் கருத்தே அன்றி.. விடுதலைப் புலிகளினதல்ல.

விடுதலைப்புலிகள்.. இடைக்கால நிர்வாக சபைத் திட்டத்தை அறிவித்த போதே.. தமது மதம் சார்ந்த நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளனர். அவர்கள் மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளை மதச் சார்பின்மையை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருபோதும் தாம் தனி நபர் வழிபாட்டை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டவர்கள் அல்ல. இது விடுதலைப்புலிகள் மீது.. ஒரு தவறான பார்வையை ஊட்ட இந்தக் கூட்டத்தினர் செய்யும் பொய் பிரச்சாரமே ஆகும்.

நாத்திக வெறியர்களின் தவறான அணுகுமுறையால் புகலிடத்தில் எழுந்துள்ள இச்சூழலுக்கு.. விடுதலைப்புலிகள் எவ்வகையிலும் பொறுப்பல்ல. என்பதை மக்கள் பொதுவாகவே தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர்.

மத நம்பிக்கையுள்ள மதச் சுதந்திரத்தை அனுபவிக்கும் கோடிக்கணக்கான மக்கள்.. இதை தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். இருப்பினும்.. மக்களிடத்தில்... நாத்திக வெறியர்கள் தேசிய தலைமைக்கும்.. விடுதலைப்புலிகளுக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணும் வண்ணம் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை தவறான திசையில் பாவித்து.. மக்களிடம் புலிகள் மீதுள்ள நம்பிக்கையை சிதைக்க விளையும் எதிரிக்கு துணை போகும் கைங்கரியத்தை தமது பரப்புரைகளால் தெரிந்து கொண்டே செய்கின்றனர் என்பது போலவே அவர்களின் கருத்துக்கள் அமைகின்றன. எனவே மக்கள் இது தொடர்பில் விளிப்புடன் இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் பேரினவாத அரசின்.. மக்களோடு மதம் சார்ந்து அந்நியோன்னியமாகும்.. அணுகுமுறையும்.. மறுபுறம் நாத்திகவாதிகளின்.. விடுதலைப்புலிகள் ஆதரவு என்ற நிலை நின்றான.... நாத்திக கொள்கைப் பரப்பு முன்னெடுப்பும்.. என்ற இரு முனை நகர்வுகளை புலம்பெயர் மக்கள் சந்தித்து.. அவற்றை முறியடித்து.. தமிழீழ தேசிய தலைமையையும்.. விடுதலைப்புலிகளையும்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சீரழிக்க மக்கள் முன் கொண்டு வரப்படும்.. அனைத்துவகையான பிரச்சாரங்களையும் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக நின்று முறியடிக்க வேண்டும்..! அத்துடன் தேசிய தலைமைக்கும் தமிழீழ் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய பங்களிப்பை விரைந்து செய்ய வேண்டியவர்களாகவும் உள்ளனர். :icon_idea:

Edited by nedukkalapoovan

இக்கருத்து நாத்திக.. ராமசாமி - பகுத்தரிவு வெறியர்களின் கருத்தே அன்றி.. விடுதலைப் புலிகளினதல்ல.

விடுதலைப்புலிகள்.. இடைக்கால நிர்வாக சபைத் திட்டத்தை அறிவித்த போதே.. தமது மதம் சார்ந்த நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளனர். அவர்கள் மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளை மதச் சார்பின்மையை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருபோதும் தாம் தனி நபர் வழிபாட்டை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டவர்கள் அல்ல. இது விடுதலைப்புலிகள் மீது.. ஒரு தவறான பார்வையை ஊட்ட இந்தக் கூட்டத்தினர் செய்யும் பொய் பிரச்சாரமே ஆகும்.

//புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை அரசியல் என்பது மதம் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.//

மேலே நான் எழுதியதற்கு நெடுக்கலபோவான் புது விதமான வியாக்கியானம் வழக்கி உள்ளார். நான் எழுதியது பிழயான் அர்தததல் வியாக்கியானம் செய்யப்படுல்லதால் மீண்டும்னான் சொல்ல வந்ததை விவரித்தால், மத வழி பாடு என்பது தனி நபரின் வழிபாடு சாந்த விடயம் அதற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.இந்தியாவில் இருப்பதைப்போல ஒரு அரசியற் கட்சியானது இது இந்துக்களின் தேசம் சிறிலங்காவில் இருப்பதைப் போல் இது பவுதர்களின் தேசம் என்று வாக்குக் கேட்க முடியாது.அரசியலும் மதமும் ஒன்றானவை அல்ல என்பதே மதச் சார்பற்ற அரசு என்பதன் அடிப்படை.

தேவையற்ற வாதம்

உங்களின் மேற்கண்ட கருத்துக்களுடன் நான் முரண்படவில்லை.

ஆனால் விவாதங்களை உண்மையுடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் நாம் நடத்துவது விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நல்ல பல தகவல்களை வழங்கி சிந்தனையை வளர்க்க உதவும் என்று நான் கருதுகிறேன்

ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் அறிவை வளர்க்க பயன்படும். அதற்கு கொஞ்சம் நிதானமும் நல்ல ஆராய்ச்சியும் அவசியம் அல்லவா?

உங்கள் கருதுக்கலுடன் முரண் பட்டாலும் ஆரோக்கியமான விவாதங்களை நடாத்த முற்படுபவர்களில் ஒருவராக் உங்களை நான் காண்கிறேன்.ஆனால் மதம் சார்ந்து இங்கே கருத்தாட முற்படுபவர்களில் பலர் எதாவது ஒரு விடயத்தை எடுத்து ஆரோக்கியமாக கருத்தாட முற்படும் போது ஒன்றில் அதனைத் திசை திருபுவார்கள் சம்ப்ந்தா சம்பந்தம் இல்லாமல் தலைப்புக்குள்ளும் இராமாசமி என்று பெரியார் மீது அவதூறு பொழிவதும் தனி நபர்கள் மேல் வசை பொழிவதையும் காண்கிறோம்.இதனை நீங்கள் ஒரு ஆரோக்கியமான விவாதமாக் கருதுகிறீர்களா?

இது கருத்தியல் இயலாமையால் எழும் காடைத் தனம் அல்லவா?

//புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை அரசியல் என்பது மதம் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.//

மேலே நான் எழுதியதற்கு நெடுக்கலபோவான் புது விதமான வியாக்கியானம் வழக்கி உள்ளார். நான் எழுதியது பிழயான் அர்தததல் வியாக்கியானம் செய்யப்படுல்லதால் மீண்டும்னான் சொல்ல வந்ததை விவரித்தால், மத வழி பாடு என்பது தனி நபரின் வழிபாடு சாந்த விடயம் அதற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.இந்தியாவில் இருப்பதைப்போல ஒரு அரசியற் கட்சியானது இது இந்துக்களின் தேசம் சிறிலங்காவில் இருப்பதைப் போல் இது பவுதர்களின் தேசம் என்று வாக்குக் கேட்க முடியாது.அரசியலும் மதமும் ஒன்றானவை அல்ல என்பதே மதச் சார்பற்ற அரசு என்பதன் அடிப்படை.

"புலிகள் மதவழிபாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதே வேளை மதம் என்பது அரசியல் சார்ந்ததாக அல்லாமால் தனி நபர் வழி பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்."

என்று உங்கள் வசனம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். சொற்களை மாற்றி போட்டு விட்டதால் அர்த்தம் குழம்பிவிட்டது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்ற சொல்லாடலுடன் மக்களை மட்டம் தட்டுதலும் இன்றி.... இந்து சமயத்தின் மீதான எதிர்ப்பு என்ற பார்வைகள் எடுபடா வண்ணமும்.. தமிழீழ விடுதலைப்புலிகளை உள்ளிலுக்காமலும்.. தமிழீழ மக்களின் தேசிய தேவை கருதி.. வீண் செலவுகளைத் தவிர்த்து.. மக்களுக்கு.. போராட்டத்துக்கான பங்களிப்பை அதிகரிக்க.. ஒரு வகை சொல்லப்பட்டிருப்பின்.. அங்கு.. ராமசாமிக்கோ.. நாத்திகத்துக்கோ.. எதிராக கருத்தெழுத வேண்டிய தேவை வந்திராது.

ராமசாமி-பகுத்தரிவு எங்கு திட்டமிட்டு புகுத்தப்படுகுதோ அங்கு.. ராமசாமி முளைப்பார் என்பது தவிர்க்க முடியாதது. நாத்திகவாதம்.. இந்துமதத்தை நோக்கி விரியும் போது.. அதில் உள்ள காடைத்தனங்கள் கண்ணுக்குப் புலப்படாத போது.. அவற்றை எதிர்ப்பவர்கள் மட்டும் கருத்தியல் காடையர்கள் என்றால்.. ராமசாமி- பகுத்தரிவு.. நாத்திக வெறியர்கள்.. இந்து சமய தலைப்புகள் எங்கணும்.. பகுத்தரிவையும்.. நாத்திகத்தை திணிப்பதையும்.. செய்வது காடைத்தனம் இல்லை என்றால் என்னென்பது..! அதுவும் கருத்தியல் வங்குரோத்து காடைத்தனம் தான் என்றால் ஏற்க மறுக்கிறார்கள். அதுவும் அவர்களின் சொல்லாடலின் படி.. காடைத்தனமே..! :icon_idea::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் எமது பரப்புரை மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் சுட்டி நிற்கின்றது.

ஆமாம். ஆரம்பியுங்கள். போனவாரத்திற்கு கலியாணவீட்டிற்குப் போகச் செலவளித்த கணக்கில் இருந்து ஆரம்பியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவன்

இது அப்பட்டமான பொய் மட்டுமல்லாமல், நாத்திகக் கருத்தினைப் பரப்பும் நயவஞ்சகச் செயலுமாகும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது விடுதலைப் போராட்டத்தை வைத்து மதப் பிரச்சாரமோ, அல்லது அது சார்ந்த எந்த வித நடவடிக்கைகளையும் இந்து மதம் செய்தது கிடையாது.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இராமசாமியோடு ஒப்பிடுவதும், அதற்காகத் தான் தேசியத் தலைவர் போராடுவது போலவும், தேசியத்தலைவரை ராமசாமியின் மறுபிறப்பு என்ற வகையில் ஒப்பிட வைத்து அவரை அசிங்கப்படுத்துவதிலும் தான் திராவிடம் பேசும் கும்பல்கள் காலத்தைச் செலவளித்து வந்திருக்கின்றன. .. நீங்களும், உங்களின் மற்றய புனைப்பெயரும் உற்பட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோட்டில அனியாயமாக் கரியாக்கிற காசை நாட்டில சாப்பாடில்லாமல் அல்லற்படுற சனத்துக்குத் தாங்கோ எண்டு கேட்டது மதங்களுக்கு எதிரான நடவடிக்கை எண்டு விளங்கிக் கொண்டால் உந்தப் பக்த கோடிகளையும் விட வடிகட்டின முட்டாள் ஆராவது உலகத்தில இருக்கினமோ?

உந்தப் பக்த கோடிகளின்ர கூத்திலயிருந்து உலகமும் ஈழத்தில இருக்கிற எங்கட சனமும் என்ன விளங்கிக் கொண்டிருக்குமெண்டால், உதுகளுக்குத் தாயக உறவுகளில கரிசனையில்லை, தானுண்டு தன்ர பாடுண்டு எண்டுதான் புலத்தார் இருக்கினம், எப்பவாவது கும்பலிலல கோவிந்தாவா கூப்பாடு போடுறதோட சரி.

இப்பிடித்தான் உதைப்பாக்கிற ஆக்களுக்கு விளங்கியிருக்கும்.

சிங்களவனுக்கும் உதில ஒரு செய்தி சொல்லியிருக்கினம் எங்கட பக்தகோடிகள்.

நீ என்னதான் அடியடிச்சு எங்கட சனத்தைக் கொண்டாலும் பரவாயில்லை, நாங்கள் திரும்பிப் பாக்க மாட்டம், நீ உன்ர விளையாட்டை நடத்து எண்டதுதான் அது.

காசைக் கரியாக்கிறதை எதிர்த்துச் செய்த பிரச்சாரத்தால புலிகளுக்குக் கெட்ட பேர் எண்டுறவை, உந்த பக்தகோடிகளின்ர கூத்தை ஆதரிக்கினமோ இல்லையோ எண்டதை அறிய ஆவல். மேலும், புலிகளுக்கு அவப்பேர் தேடித்தந்த பக்தகோடிகளில ஏன் ஒருத்தருக்கும் கோவம் வரேல?

நாலு விசரங்கள் விசர்த்தனமா ஒரு கருத்தைச் சொன்னா அதைத் தூக்கியந்திட்டினம் இஞ்ச.

புலிகளின் தலைவர் முழுச் சைவர், வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்காலமல் அவர் எந்தச் சண்டையையும் செய்தது கிடையாது என்று எழுதியவர்களையெல்லாம் நாங்கள் பாத்திருக்கிறோமே?

தேசியத் தலைவரின் திருமணத்தை மட்டும் வைத்து இயக்கம் மதவழித் திருமணங்களைத்தான் செய்கிறது என்று உளறிக்கொட்டியவர்களுமுண்டு. ஆனால் தமது போராளிகளின் திருமணத்தில் எள்ளளவும் மதநிகழ்வுகள் தொடர்புறக்கூடாதென்பதில் இயக்கம் நூறுவீதமும் உறுதியாவுள்ளதை அவர்கள் அறியார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட செய்தியைப் பிரசுரித்த இணையத்தளம் காலம் காலமாக தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.. வன்னியில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், ஐ.நா. நிறுவனங்களையும் சேர்ந்தவர்களை பணயக்கைதிகளாக்க புலிகள் நடவடிக்கை எடுக்கின்றனர் என்ற செய்தியையும் பிரசுரித்துள்ளது. பொதுமக்களின் நியாயமான மறியல் போராட்டத்தைத் திரிபுபடுத்தி குறிப்பிட்ட இணையம் செய்தி வெளியிட்டதற்காக, வன்னிப் பொதுமக்களின் நடவடிக்கை பிழையானது என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? இது போலவே தேங்காய் உடைப்பைப் பற்றிய செய்தியையும் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் ஐயா ஒன்றைப் புரிந்து கொள்ள வேணும். அந்த விளம்பரத்தை திசை மாற்றி புலிகள் தான் அப்படிச் சொன்னவை என்று மாற்றியது பகுத்தறிவுப் பெரிசுகள். அந்த மண்டைகழண்டதுகளால் தான் எதிரி அப்படி ஒரு பிரச்சாரமாக மாற்றினான்.

புலிகளின் தலைவர் முழுச் சைவர், வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்காலமல் அவர் எந்தச் சண்டையையும் செய்தது கிடையாது என்று எழுதியவர்களையெல்லாம் நாங்கள் பாத்திருக்கிறோமே?

தேசியத் தலைவரின் திருமணத்தை மட்டும் வைத்து இயக்கம் மதவழித் திருமணங்களைத்தான் செய்கிறது என்று உளறிக்கொட்டியவர்களுமுண்டு. ஆனால் தமது போராளிகளின் திருமணத்தில் எள்ளளவும் மதநிகழ்வுகள் தொடர்புறக்கூடாதென்பதில் இயக்கம் நூறுவீதமும் உறுதியாவுள்ளதை அவர்கள் அறியார்கள்.

வற்றப்பளையில் நேர்த்தி வைக்கின்றது என்ற கதையும், 8ம் இலக்கமாகத் தான் வந்த நாட்களில் சண்டை தொடங்குவார் என்ற கதையையும் கட்டிவிட்டது அற்புதன்.

கடைசியாக என்ன சொல்ல வாறியள். தலைவர் ஜேசுநாதரிடம் நேர்த்தி வைச்சுத் தான் சண்டை தொடங்குறார் என்றா? மாதகல் மேரியிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுத் தான் தொடங்குறவர் என்றோ?

இங்கே கனடாவிலும் கந்தசாமி கோவிலிலும் கொண்டாடினவை தான், மொன்றியலில் வைச்சுக் கொண்டாடினவை தான்.... அவை ஆர் என்று கேட்டால் அதற்கும் எதிரி பிரச்சாரம் செய்வான்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் கடவுள் நம்பிக்கையே கூடாது என்று தலைவர் கட்டளையிட்டதில்லை. அப்படி ஒரு விதியுமில்லை. ஏதோ நீங்கள் தான் புலிகளுக்கு விதி எழுதுறமாதிரிக் கதை கதையாக அளக்கின்றீர்கள்.

எம் விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலையைத் தவிர, எந்த நோக்கத்திற்காகவும் ஆரம்பிக்கவோ, நடத்தவோ இல்லை. அதை இந்து, கிறிஸ்தவம் என்று மதச் சாயம் பூசுவது எப்படித் தவறோ, அவ்வாறே திராவிடக் கொள்கைக்கும் முடிச்சுப் போடுதல் மிகப்பெரும் தவறாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.