Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை எதிர்த்து செயற்பட்ட பரீஸ் மக்களாம்..., அபாண்ட பிரச்சாரம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த வரையில், கனடாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் தங்கள் வருமானத்தில் இலவச சோத்துச் செலவு போக மிச்சத்தை தாயகத்துக்கு அனுப்புகின்றன..! ஆனால் வெளியில சொல்றேல்ல..! :icon_mrgreen:

  • Replies 74
  • Views 7.8k
  • Created
  • Last Reply

வன்னியில் சட்டபூர்வமாக இயங்கும் தொண்டு நிறுவனக்களுக்கு நிதி வழங்குவதை சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒன்றும் செய்து விட முடியாது.சிறிலங்காவில் இருந்து கதோலிக்கத் திருச்சபையால் பகிரங்கமாக இயங்க முடியும் என்றால் புலத்தில் இருந்து சகல பாதுகாப்புக்களுடனும் இயங்கும் கோவில்களுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடியாது என்பதை காதில் பூ வைதிருப்பவர்கள் தான் நம்ப முடியும்.

அப்படி சிறிலங்கா அரசின் நெருக்குதலால் வன்னிக்கு நிதி சேர்த்து அனுப்பமுடியாது எனில் கோவில்களில் இருந்து நிதி போவதாக எழுதுவது எல்லாம் எதன் அடிப்படையில்?

உண்மை அதுவல்ல என்பதை எலோரும் அறிவோம் புலத்தில் இருக்கும் பல் கோவில்களில் சேர்க்கப்படும் நிதி புலத்திலையே கோவிலை பெரிதாகக் கட்டவும் கோவிலுக்குச் சொத்துச் சேர்ப்பதிலும் ,கோவில்லுகு தேர் சப்பறம் கட்டுவதிலுமே சாமிக்கு நகை நட்டு பால் நைவேத்தியம் ஆறுகாலப் பூசை எனச் செலவிடப்படுகிறது.

இது சம்பந்தமாகக் கேள்வி எழுப்பியவர்களை நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றியட்தே பல கோவில்களில் நடக்கும் நடந்த விடயம்.

இன்னொரு பொய்மையான விடயமும் இங்கே மீள மீள எழுதப்படுகிறது.

பெரியார் தமிழ் நாட்டில் அந்த மக்களுக்காப் போராடியவர்.அவரின் போரட்டச் சூழலும் களமும் எங்களின் போராட்டத்தில் இருந்து மாறு பட்டது.இங்கே எவரும் பெரியாரையும் தேசியத்தலவரையும் ஒன்று என்று கூறவில்லை அவதாரம் என்றெல்லாம் கூறவும் இல்லை.அவதாராம் என்பதெல்லாம் சமயங்கள் கூறும் விடயங்கள்.பெரியாரையோ பிரபாகரனையோ புத்தனையோ பகுத்தறிவுள்ள எவனும் அவதாரம் என்றோ கடவுள் என்றோ கூற மாட்டன்.அவர்கள் ஆசாத்தியாமான ஆற்றல் படைத்த மனிதர்கள் கடவுளர்கள் இல்லை.

பகுத்தறிவு என்பது எல்லாருக்கும் ஆனது அது பெரியாருக்கோ சபேசனுக்கோ திராவிட இயக்கதுக்கோ சொந்தமானது இல்லை என்று எழுதிக் கொண்டே , பகுத்தறிவின் பாற்பட்க்டு கேள்வி எழுதினால் உடனே ராமாசாமி நாத்திகம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள் இவர்களுக்கு உண்மையிலையே ஒரு வகை மன வியாதி தான் ஏற்பட்டுள்ளது என ஐயுற வேண்டி இருக்கிறது.

நல்லூர் கந்தன் விவகாரத்தை முதலில் எழுதிய நெடுக்ககாலபோவானே அதே காரணக்களுக்காக நான் எழுதிய போது மாற்றி எழுதுகிறார்,இதில் இருந்து தெரிவது இவர்கள் கருதுக்களை கருதுக்களாகப் பார்க்காமல் யார் எழுதுகிறார்கள் என்று பார்த்து அதற்கு எதிராக எழுதுகிறார்கள் என்று.

Contemporary Dravidian parties

Dravidar Kazhagam

Dravida Munnetra Kazhagam

All India Anna Dravida Munnetra Kazhagam

Marumalarchi Dravida Munnetra Kazhagam

Pattali Makkal Katchi

Desiya Murpokku Dravida Kazhagam

All India Latchiya Dravida Munnetra Kazhagam

more

http://en.wikipedia.org/wiki/Pattali_Makkal_Katchi

62558402hn0.jpg

சென்னை, ஆக. 19- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் - அய்யா நினைவிடத்ல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆக. 17 அன்று 47-ஆம் ஆண்டு பிறந்தநாள். அன்று காலை அம்பேத்கர் மணி மண்டபத் திற்குச் சென்று அங்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் காலை 10.15 மணிக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ தொல். திருமாவளவன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளி யூரிலிருந்து தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்கள் காலக் கோட்டு உதயம், சிந்தனைச் செல்வன், தலைமைக் கழகச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, செய்தித் தொடர் பாளர் ஆர்வலன் ஆகிய முக்கிய பிரமுகர்களும் மற்றும் திரளான தோழர்களும் வந்திருந்தனர்.

http://files.periyar.org.in/viduthalai/20080819/news19.html

ராமதாஸ் பேச்சு

.

Tuesday, 18 September, 2007 02:35 PM

.

விழுப்புரம், செப். 18: கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனையும், தன்னையும் யாரும் பிரிக்க முடியாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

.

திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் பெரியார், அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ் ஆகியோருடைய வெண்கலச் சிலைகள் திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ரெயில்வே துறை இணை அமைச்சர் வேலு உட்பட பலர் பேசினார்கள். தந்தை பெரியார் சிலையை மத்திய அமைச்சர் இளங்கோவனும், அம்பேத்கார் சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவனும், கார்ல்மார்க்ஸ் சிலையை இந்திய பொது உடைமை கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவும் திறந்து வைத்தனர்.

விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றியதாவது: பாமகவின் கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளை செப்டம்பர் 17ல் நிறுவி திறப்பு விழா நடத்த ஒன்னறை மாதங்களுக்கு முன்பு முடிவு எடுத்தேன்.

இந்த தலைவர்களுக்கு திண்டிவனத்தில் சிலைகள் இல்லை. எனவே தான் மூவருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தைலாபுரம் தோட்டத்துக்கு திருமாவளவன் வரவிரும்பினாலும் அதற்கான வாய்ப்பு சிலை சிறப்பு விழாவின் மூலம் அவருக்கு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.

தமிழை பாதுகாக்கவேண்டும் என தொடங்கிய கூட்டத்தில் நாங்கள் இருவரும் இரண்டு கைகளையும் உயர்த்தியபோது, "எங்களுடைய இணைந்த கைகள் பிரியாது. யாரும் எங்களை பிரிக்கவும் முடியாது. பிரித்து பார்க்க நினைத்தாலும் அது நடக்காது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்' என்று கூறினேன்.

தமிழை தாங்கி பிடிக்க வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மக்களுக்கு விடுதலை கிடைக்காது என்பதை நாங்கள் இருவரும் புரிந்து வைத்துள்ளோம்.

மதுரை அருகில் உள்ள மேலூரில் திருமாவளவனுக்கு பிரச்சனை என்றவுடன் பாமக முன்னணி தலைவர்களை அனுப்பி ஆறுதல் தெரிவிக்க சொன்னேன். தாழ்த்தப் பட்ட சமூகத்துக்கு கொள்கை ரீதியாக பாடுபடுவதற்கான தலைவர்கள் யாரும் அப்போது இல்லை. வன்னியர்களில் கூட இப்படி ஒரு நிலை இருந்தது.

அந்த காலக்கட்டத்தில் கொள்கை, கோட்பாடு வழியில் நின்று தாழ்த்தப்பட்ட சமூகத்தை வழி நடத்தி செல்ல திருமாவளவனால் முடியும் என்று நம்பினேன். அதனால் தான் பல மாவட்டங்களில் வந்து கட்சி பணியாற்றுங்கள் என்று அவரை நான் அழைத்தேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி, சமூக, பொருளாதார விடுதலையை அடைய வேண்டும் என்றால் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். மீண்டும் நாம் ஒன்று பட்டுள்ளோம். எங்களுடைய இணைந்த கைகள் மென்மேலும் உயரும். இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றார் ராமதாஸ்.

http://www.maalaisudar.com/newsindex.php?i...p;%20section=19

Edited by narathar

எல்லாவற்றையும் விளம்பரம் போட்டு ஊரைக்கூட்டி செய்து விடமுடியாது.

ஐரோப்பாவில் நம்மவர்களின் சில இந்து கோவில்கள் அந்த அந்த நாடுகளின் புலனாய்துறைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பின் (Vigilance) கீழ் இருப்பதை அறிவீர்களா???

சிலரின் முட்டாள் கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் போட்டு இணையதளங்களில் உடைக்க வெளிக்கிட்டால் சங்கு ஊதிவிடுவார்கள்! பரவாய் இல்லையா!!!

அரைகுறையாக விடயங்களை தெரிந்து வைத்திருப்பவர்களை சமாளிப்பது எப்போதும் பிரச்சினை தான்!!!

சுழல் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு குற்றம் கண்டுபிடிப்பதும் மிகவும் இலகுவான செயல் தான்!!!

கோயில்களின் செயற்பாடுகள் பற்றி நானும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அது பற்றி எழுத முடியாது.

அரைகுறையாக எனக்குப் புரிந்த விடயம் கோயில் மூலம் சேகரிக்கும் பணத்திற்கும் ஏற்கனவே கோயிலில் தேங்கியிருக்கும் பணத்திற்கும் இடையிலான வித்தியாசம்தான்.

இந்த இரண்டுமே புலநாய்வுத் துறையின் கண்காணிப்பின்கீழ்தான் திரட்டப்படுகின்றனவா ?

இக் கருத்தும் முட்டாள்தனமான இருந்தால் பதிலளிக்க வேண்டியதில்லை.

  • தொடங்கியவர்

என் கருத்தை நீக்க்கியவர் தாராளமாக தலைபையும் நீக்க வேண்டும்...

இல்லையேல் நான் நீக்குவேன்....

பழ. நெடுமாறன்

பொது வாழ்க்கை

[தொகு] மாணவர் இயக்கம்

பழ. நெடுமாறன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே தன்னை பொது வாழ்க்கைக்கு அற்பணித்தவர். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 - ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்களை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் அவர்களின ஹோம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் திரு. எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களுடன் இணைந்து ரூ.10,000 நிதித் திரட்டி அளித்தார்.

நூல்கள்

(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)

[தொகு] அரசியல் நூல்கள்

14. புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக

15. தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்

16. பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்

17. தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?

18. மனித குலமும் தமிழ்த் தேசியமும்

19. மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு

20. தடா முதல் பொடா வரை

21. உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிளைகளும் இந்துக் கோயில்களும் அந்தந்த நாடுகளில் இலாப நோக்கற்ற உதவி நிறுவனங்கள் (non-profit charitable) ஆகத்தான் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுவரை சிறீலங்கா அரசினதும் போராட்டத்திற்கு எதிரான சக்திகளின் பிரச்சாரத்துக்கு இலக்கானவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளே அன்றி கோயில்கள் அல்ல.

அரசியல் காரணங்களுக்காக தமிழர் தரப்பு மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்னும் பொழுது எல்லாம் மேற்குலகில் இலக்கு வைக்கப்படுவது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவை தான்

கொடுக்கப்படும் நொண்டிச் சாட்டுகள்:

1- அந்தந்த நாட்டு விதிகள் படி சரியாக ஆண்டு வரவு செலவுக் கணக்குகள் காட்டவில்லை அல்லது காட்டப்பட்டதில் தவறு இருக்கிறது அல்லது பிந்திக் காட்டிவிட்டார்கள்

2- இல்லாவிட்டால் அமெரிக்காவில் நடந்தது போல புலிகளோடு தொடர்பு என்று வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த நாட்டு இந்துக் கோயில்கள் பற்றி சிறீலங்கா அரச தரப்போ போராட்டத்திற்கு எதிரான சக்திகளோ இதுவரை காட்டிய கவனம் என்ன? மாறாக சிறீலங்காவின் தூதுவராலயங்கள் நல்ல உறவுகளைத்தான் பேணுகிறார்கள்.

இலாப நோக்கற்றவர்களாக பதிவு செய்து லட்சக்கணக்கில் செலவு செய்யும் கோயில்கள் பற்றியும் அங்கு பணிபுரிபவர்களின் ஆடம்பர வாழ்க்கை பற்றியும் அந்தந்த நாடுகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். வரவு செலவுக் கணக்கு சரியா பிழையா நேரத்திற்கு அறிக்கை சமர்பிக்கிறார்களா என்பது ஒரு விடையம். தமிழர் தரப்பு மீது அழுத்தம் செலுத்த தொண்டு செய்யும் கோயில்கள் மீது சாக்கு போக்குச் சொல்லி நடவடிக்கை எடுக்க முயன்றிருக்கிறார்களா?

மாவீரர் தினம் பொங்கு தமிழ் என்றால் எந்த அரங்கத்தில் மண்டபத்தில் செய்வது என்று முற் கூட்டியே அறிவித்து ஒழுங்கு படுத்த முடியாத படி சிறீலங்காவும் போராட்டத்திற்கு எதிரான சக்த்திகளும் கவனமெடுத்து இயங்குகிறார்கள்.

ஆனால் இந்துக் கோயில்களின் திருவிழாக்கள் என்று தெருக்களை மூடி தேர் இழுத்து சிதறு தேங்காய் அடித்து காவடி ஆடுவது என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. மாறாக ஆடம்பரமும் விரையமும் குறைஞ்சு போகாமல் தான் பாத்துக் கொள்ள முனைகிறார்கள் போராட்ட எதிர்ப்புச் சக்திகள்.

இங்கு யாரை யார் முட்டாள்களாக வைத்திருக்க முயல்கிறார்கள்?

மதத்தின் பெயரால் கொலையே செய்யும் பொழுது இந்த பெய் பித்தலாட்ட பிரட்டு உறுட்டுகள் எல்லாம் சின்ன விடையம் தான்.

Edited by kurukaalapoovan

இந்தப் பதிவை ஆரம்பித்தவரின் முகத்திரை கிளிந்ததாலே என்னவே நீக்கிவிட்டார். இதே அதன் பிரதி.

இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்...

கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன் வைக்க பட்டது...

அதனை ஒட்டி யாழ்களத்தின் வழமையாக கோயில்களை இடிப்பவர்களும், மணிகளை கள்ளட்டுபவர்களுமாக தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்... வாசிக்கும்போது உணர்ச்சி எல்லாம் பீரிட்டு எழும்பியது... ஆனால் விளைவுதான் வேதனையானது...

சர்வதேச அரங்கின் புலிகளுக்கு எதிராக பிரச்சாரத்துக்காக ஏற்படுத்த பட்ட இணையம் ஒண்று புலிகளின் கோரிக்கையையும், அறிவுரையும் உதாசீனம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகர் பூசையில் தோங்காய்களை உடைத்து புலிகளுக்கு பதிலடி எனும் விதத்தில் செய்தி (கட்டுரை வடிவிலேயே) வெளியிட்டு உள்ளது...

இந்த பிரச்சாரத்தை புலிகள் செய்யவில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.. அப்படி பிரச்சாரம் செய்த மற்றவர்கள் விட்ட தவறுகள் என்ன... விளைவுகளை அறியாமல் பிரச்சாரம் செய்வதால் இப்படித்தான் விளைவு எல்லாரையும் தாக்கும்..

இந்த செய்திகளின் பாதிப்பு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதான பாதிப்புதான்... இங்கே பிரச்சாரம் செய்பவர்கள் இது யாரின் தவறு என்பதை தெளிவு படுத்த வேண்டும்...

ஒருவேலையை உங்களால் செய்ய முடியாது என அறிந்தால் அதை செய்யாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது...

kovil202xc1.jpg

kovil203fs1.jpg

அந்த இணையத்தின் இணைப்பை தர விருப்பம் இல்லை...

ஏதோ உங்கட தலையில தேங்காய் அடிச்சமாதிரி எல்லாரும் குதிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். கீழ இருக்கிறதவிட மேல இருக்கிறது பரவாயில்ல. கருத்து எழுதுற ஒவ்வொருத்தரிண்ட தலையிலயும் ஆக்கள குந்தவச்சு கீழ இருக்கிறமாதிரி இப்பிடி தேங்காயால அடிச்சால்தான் திருந்துவீனம் போல இருக்கிது.

tblfpnnews_16127741337.jpg

indkarur01.jpg

முதலாவதா குறுக்காலபோவான் வாங்கோ. உங்கட தலையில தேங்காய் அடிச்சு நேத்திக்கடனை முடிச்சு வைப்பம். :icon_mrgreen:

ஆனா பாருங்கோ நான் பொளத்த பேரினவாதத்துக்கு மாறிவிட்டன். நேரடியாக சிறீலங்கா தூதரத்தில இருந்து பிரியாணி பொட்டலம் வாறது. மிச்சத்துக்கு இந்திய தூதரத்தில இருந்து குருமா பொட்டலம் வாறது. அதுவும் என்னுடைய நண்பர் நேரடியாக அனுப்புறவர். ஆனபடியா உந்த நேத்திகடன் முடிக்கிறதுக்கு வேறையாரையும் பாருங்கோ

அப்ப நான் வரட்டா

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்

இந்தப் பதிவை ஆரம்பித்தவரின் முகத்திரை கிளிந்ததாலே என்னவே நீக்கிவிட்டார். இதே அதன் பிரதி.

கிளிஞ்சு போனது உங்கட கோமணம்....!! ஈழதமிழீழ மக்களுக்கு விடுதலை எனும் பெயரின் பலவீனமான பெரியார் பிரச்சாரங்களை புகுத்தும் தங்களது கேவலமான செயற்பாடுகளும் அதுக்கு ஆதரவு தரும் நிர்வாகியும் எண்டு உங்களுடைய கருத்து திணிப்பின் பலம் இது...!

இது பலவீனமான உங்களது கருத்தியலின் வெளிப்பாடு.... கிட்ட தட்ட பேரினவாதம் உங்களிடம் தோற்றுதான் போக வேணும்.... இருவருக்கும் அடக்குமுறைதான் ஆயுதம்...!!!

மதம் சார்ந்தவர், நாத்திகவாதி இருவரும் நிலையானவர்கள் கிடையாது.... இருவருமே காலம் மாறும்போது மாறி கொள்வார்கள்.... அதிலை தாங்கள்கூட விதிவிலக்கு இல்லை....

மத சார்பு, எதிர்ப்பு என்பது எல்லாம் வேலை இல்லாத உங்களை போண்றவர்கள் வேலை...!!! அதனால் தோல்வி என்பது உங்களை போண்ற இரண்டும் கெட்டானுகளுக்குதான்....

( இணையவன் இதையும் வெட்டலாம்.... திடமான கருத்து இல்லாத பலவீனமான வரால் அதுதான் முடியும்...)

Edited by தயா

ஒரு பொது அறிவுக் கேள்வி!

சிவப்பு சாயம் போனால் என்ன நிறமாக மாறும்?

1. நீலம்

2. பச்சை

3. காவி

சரியான பதிலை கூறுக

  • தொடங்கியவர்

ஒரு பொது அறிவுக் கேள்வி!

சிவப்பு சாயம் போனால் என்ன நிறமாக மாறும்?

1. நீலம்

2. பச்சை

3. காவி

சரியான பதிலை கூறுக

நானும் ஒரு கேள்வி... கேக்க வேணும்...

உடையிலை அழுக்கு அதிகமானால் என்ன நிறத்துக்கு வரும்...???

1- கறுப்பு

2- சாம்பல்

3- வெள்ளை

4- பழுப்பு

ஒரு பொது அறிவுக் கேள்வி!

சிவப்பு சாயம் போனால் என்ன நிறமாக மாறும்?

1. நீலம்

2. பச்சை

3. காவி

சரியான பதிலை கூறுக

கறுப்பும் சிவப்பும் சாயம் போனால் மஞ்சள் துண்டாக மாறும்!!! :icon_mrgreen:

நம்மிடமும் எக்கச்சக்கமான பொது அறிவுக்கேள்விகள் உள்ளன! ஆனால் ஒரு விவாத தலைப்பை திசை திருப்பக்கூடாது என்னும் பொது அறிவு நம்மிடம் இருப்பதால் கேட்க தயக்கமாக இருக்கிறது!!! :lol:

Edited by vettri-vel

விடுதலை என்பது ஒன்ரினுள் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதில்லை...

எந்த ஒரு மதமும் எந்த ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ விடுதலையையோ அல்லது சுதந்திரத்தையோ, அல்லது ஏன் அமைதியையோ கொண்டுவந்ததாய் நானறியேன். இருந்தாலும் மநங்களை பின்பற்றுவது அவரவர் சொந்தவிருப்பம் ஏன் உரிமை என்றுகூட சொல்லலாம் அதை உணருவது அரிவதும் அவரவர் சொந்த பகுத்தறிவால்தான்.

எது எப்படியோ, சுந்திரத்தோடும் உரிமையோடும் வாழ்வதற்கு பகுத்தறிவு ஒருநிபந்தனயில்லை, அந்தவகையில் எம்மினம் சுதந்திரமடியவேண்டும். அவலங்களில் இருந்து விடுபடவேண்டும் அந்தளவோடு நாம் மத்ததை ஒருபுறம் தள்ளிவைப்போம்.

ஈழத் தமிழர்களில் கலைஞர் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்களில் நாமும் ஒருவர். இந்த நிலையில் வெற்றிவேல் அடிக்கடி சம்பந்தமில்லாமல் கலைஞரை கிண்டல் அடிப்பதில் காணப் போகும் பலன் என்ன?

நாம் ஏதாவது கருத்துச் சொன்னால் சிலருக்கு இங்கே கலைஞர், அன்பழகன், பெரியார் என்று பேசுவதே வாடிக்கையாகப் போய் விட்டது.

ஈழத் தமிழர்களில் கலைஞர் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்களில் நாமும் ஒருவர். இந்த நிலையில் வெற்றிவேல் அடிக்கடி சம்பந்தமில்லாமல் கலைஞரை கிண்டல் அடிப்பதில் காணப் போகும் பலன் என்ன?

நாம் ஏதாவது கருத்துச் சொன்னால் சிலருக்கு இங்கே கலைஞர், அன்பழகன், பெரியார் என்று பேசுவதே வாடிக்கையாகப் போய் விட்டது.

இல்லையே நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையே. ஒரு பொது அறிவுக்கேள்வி கேட்டீர்கள்! ஏதோ நமக்கு தெரிந்த பதிலை நாம் சொன்னோம். :lol:

ஒரு பொது அறிவுக்கேள்விக்கும், ஒரு விவாத தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கும் வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்? :D

நல்ல பகுத்தறிவு தான் போங்கள்! :icon_mrgreen:

Edited by vettri-vel

ஏதோ உங்கட தலையில தேங்காய் அடிச்சமாதிரி எல்லாரும் குதிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். கீழ இருக்கிறதவிட மேல இருக்கிறது பரவாயில்ல. கருத்து எழுதுற ஒவ்வொருத்தரிண்ட தலையிலயும் ஆக்கள குந்தவச்சு கீழ இருக்கிறமாதிரி இப்பிடி தேங்காயால அடிச்சால்தான் திருந்துவீனம் போல இருக்கிது.

tblfpnnews_16127741337.jpg

indkarur01.jpg

முதலாவதா குறுக்காலபோவான் வாங்கோ. உங்கட தலையில தேங்காய் அடிச்சு நேத்திக்கடனை முடிச்சு வைப்பம். :icon_mrgreen:

ஆனா பாருங்கோ நான் பொளத்த பேரினவாதத்துக்கு மாறிவிட்டன். நேரடியாக சிறீலங்கா தூதரத்தில இருந்து பிரியாணி பொட்டலம் வாறது. மிச்சத்துக்கு இந்திய தூதரத்தில இருந்து குருமா பொட்டலம் வாறது. அதுவும் என்னுடைய நண்பர் நேரடியாக அனுப்புறவர். ஆனபடியா உந்த நேத்திகடன் முடிக்கிறதுக்கு வேறையாரையும் பாருங்கோ

அப்ப நான் வரட்டா

குறுக்காலபோவன் வராதபடியால அந்த அணியின் உப தலைவர் சபேசனை பூசைக்கு அழைக்கின்றோம். திரு.வெற்றிவேல் அவர்கள் உங்கட தலையில தேங்காய உடைச்சு நேத்திக்கடனை பூர்த்தி செய்துகொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கேள்வி... கேக்க வேணும்...

உடையிலை அழுக்கு அதிகமானால் என்ன நிறத்துக்கு வரும்...???

1- கறுப்பு

2- சாம்பல்

3- வெள்ளை

4- பழுப்பு

உடையில் மட்டுமல்லாமல், மனதிலும் அழுக்குப் படிந்தால் கறுப்புத் தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவன் வராதபடியால அந்த அணியின் உப தலைவர் சபேசனை பூசைக்கு அழைக்கின்றோம். திரு.வெற்றிவேல் அவர்கள் உங்கட தலையில தேங்காய உடைச்சு நேத்திக்கடனை பூர்த்தி செய்துகொள்வார்.

நல்ல காலம் நான் தப்பீட்டன் , இதில கருத்து எழுதேல்லை . :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பொய்மையான விடயமும் இங்கே மீள மீள எழுதப்படுகிறது.

பெரியார் தமிழ் நாட்டில் அந்த மக்களுக்காப் போராடியவர்.அவரின் போரட்டச் சூழலும் களமும் எங்களின் போராட்டத்தில் இருந்து மாறு பட்டது.இங்கே எவரும் பெரியாரையும் தேசியத்தலவரையும் ஒன்று என்று கூறவில்லை அவதாரம் என்றெல்லாம் கூறவும் இல்லை.அவதாராம் என்பதெல்லாம் சமயங்கள் கூறும் விடயங்கள்.பெரியாரையோ பிரபாகரனையோ புத்தனையோ பகுத்தறிவுள்ள எவனும் அவதாரம் என்றோ கடவுள் என்றோ கூற மாட்டன்.அவர்கள் ஆசாத்தியாமான ஆற்றல் படைத்த மனிதர்கள் கடவுளர்கள் இல்லை.

பகுத்தறிவு என்பது எல்லாருக்கும் ஆனது அது பெரியாருக்கோ சபேசனுக்கோ திராவிட இயக்கதுக்கோ சொந்தமானது இல்லை என்று எழுதிக் கொண்டே , பகுத்தறிவின் பாற்பட்க்டு கேள்வி எழுதினால் உடனே ராமாசாமி நாத்திகம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள் இவர்களுக்கு உண்மையிலையே ஒரு வகை மன வியாதி தான் ஏற்பட்டுள்ளது என ஐயுற வேண்டி இருக்கிறது.

நல்லூர் கந்தன் விவகாரத்தை முதலில் எழுதிய நெடுக்ககாலபோவானே அதே காரணக்களுக்காக நான் எழுதிய போது மாற்றி எழுதுகிறார்,இதில் இருந்து தெரிவது இவர்கள் கருதுக்களை கருதுக்களாகப் பார்க்காமல் யார் எழுதுகிறார்கள் என்று பார்த்து அதற்கு எதிராக எழுதுகிறார்கள் என்று.

தமிழ்நாட்டில் இருந்த மனிதனை ஈழத்தமிழருக்குள் இழுத்துவந்தது உங்களைப் போன்றவர்கள். பார்ப்பானப் பிரச்சனை என்ன ஈழத்திலா நடந்தது? அதை ஏன் எமக்குள் கொண்டு வந்தீர்கள். ஆரம்ப காலத்தில் இந்துக்களை, இந்துவெறியர்கள் என்று தாங்கள் எழுதத் தொடங்கிய கருத்துக்கள் தான் இந்த நிலமைக்குக் காரணம். நான் நினைக்கின்றேன். அத்தலைப்பு தற்போது நாற்சந்திக்குள் இருக்க வேண்டும்.

நல்லூர் கந்தன் திருவிழா வேண்டாம், அது எதிரிக்குப் பிரச்சாரமாகப் போகும் என்ற கருத்தினை நெடுக்காலபோவன் உண்மைத் தன்மையோடு வைத்தார். வெற்றிவேல் கூட ஆதரித்தார். அவர் சொன்ன விதங்களில் நியாயம் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்களில் கோவில் போகாதே, என்று நாஸ்திகக் கொள்கையை இடையில் செருகி, அதற்கு உயிரோட்டம் கொடுக்க முனைந்தது யார்?

முட்டாள்தனமான தமிழ்நாட்டில் ஒவ்வொருவனும் சாதி அட்டைகளைத் தூக்கிக் கொண்டு திரிய வைத்த ஒருவனின்திட்டங்களை ஈழத்தமிழருக்குள் புகுத்தவேண்டிய அவசியமில்லை. அதை இங்குள்ள மேதைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதும் கூட இப்படியர்ன சம்பவங்களை வைத்து இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தைக் கொண்டு செல்லத் தான் இவர்கள் விரும்புகின்றார்களே தவிர, அங்கே வன்னியில் பட்டினியால் வாடும் மக்களுக்கான எந்த வித கருணை நோக்கமும் இல்லை.

நண்பர்களே!

உங்களால் நிச்சயம் தோற்றுக் போன ஒரு கொள்கையை வைத்து எம்மை வெல்ல முடியாது.ஆனால் நாங்கள் தோற்றதாக நினைத்தால் தான் நீங்கள் அதை விட்டு, மக்களின் துயரங்களில் பங்கெடுக்க வருவீர்கள் என்றால், அந்தத் தோல்வியை ஏற்க நாம் தயார்.

இவற்றை எல்லாம் விட்டு விட்டு, எம்மக்களைக் கவனிப்போமா?

குறுக்காலபோவன் வராதபடியால அந்த அணியின் உப தலைவர் சபேசனை பூசைக்கு அழைக்கின்றோம். திரு.வெற்றிவேல் அவர்கள் உங்கட தலையில தேங்காய உடைச்சு நேத்திக்கடனை பூர்த்தி செய்துகொள்வார்.

ரசிக்கத்தக்க நகைச்சுவைகள் எழுதி களத்தை கலகலப்பாக வைத்திருப்பதில் நீங்கள் கில்லாடி தான்!

ஏன் இப்போது அடிக்கடி வருவதில்லை?

எங்காவது அடிக்கடி தேங்காய் பறிக்க போய் விடுகிறீர்களா? நீங்கள் பறித்த தேங்காயை நீங்களே உடைத்து சாப்பிட மனமார்ந்த வாழ்த்துக்கள் :icon_mrgreen::lol:

Edited by vettri-vel

தேங்காய் உடைக்கும் போது கவனம் ஏன் என்றால் சீ 4 உள்ளுக்குள் வைத்திருக்குதாம்

இவற்றை எல்லாம் விட்டு விட்டு, எம்மக்களைக் கவனிப்போமா?

இதைவிட சிறந்த கருத்து ஒன்றை நான் அண்மைக்காலத்தில் யாழ்களத்தில் வாசித்ததாக ஞாபகம் இல்லை!

முதலில் எம்மக்கள் பசிப்பிணி தீர்க்க ஒன்றுபடுவோம்!!!

பிறகு ஆரத்தி எடுப்பதா, மெழுகுவர்த்தி எரிப்பதா, கறுப்பு சட்டை அணிவதா, இல்லை எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்டு அம்மணமாக திரிவதா தமிழ் கலாச்சாரம் என்பதை விவாதிப்போம்!

என் கருத்துக்கள உரைமொழியாக இதை ஆக்கிவிட்டேன் - நன்றி தூயவன்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.