Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1

வாலாசா வல்லவன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?” என்பதைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய முற்படுவோம்.

இவருடைய எழுத்துப் பணி (மொழிபெயர்ப்பாளராக) 1904 இல் சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில் “வந்தே மாதரம்” என்னும் தலைப்பில், இவர் எழுதின ஆரியச் சார்பான பாடல்களைக் காணலாம்.

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம்

அன்னையின் மீது திகழ்

அன்பெனு மேன்கொடி வாடிய காலை

அதற்குயிர் தந்திருவான்

--- --- --- --- ---

வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட

மேவிய நல் ஆரியரை

மிஞ்சி வளைத்திடு புன்மை..

--- --- --- --- ---

வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே” (1)

இவர், இதே சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்

பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

--- --- --- --- ---

வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்

பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)

எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார்.

இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற பாடலில்,

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்

ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்.

--- --- --- --- ---

பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில்

அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்,

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு

அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்

ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்

யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” (3)

என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார். இங்கு, ‘அன்பிலாதிருப்போன் ஆரியன் அல்லன்’ என்று சிவாஜி கூறியதாகப் பாரதி கூறுகிறார். ஆனால் உண்மையிலேயே ஆரியர்கள் அன்புடையவர்களாக இருந்தால் சிவாஜிக்கு ஏன் முடிசூட்ட முன்வரவில்லை? அவர் சூத்திரன் என்பதால் தானே! சிவாஜி ‘போன்சலே’ என்ற சூத்திர சாதியில் பிறந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் சிவாஜி முடிசூட்டிக் கொள்ளப் பெரும் தடையாயிருந்தனர். பிறகு சிவாஜியிடம் பெரும் தொகையாகப் பணமும் செல்வமும் பெற்றுக் கொண்டபின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள ஒப்புதல் தந்தனர். (4) அப்படி இருக்கும்போது ஆரியர்கள் அன்புடையவர்கள் என்று சிவாஜி எப்படிக் கூறியிருப்பார்?

“ஆரிய பூமியில்

நாரியரும் நர

சூரியரும் சொலும்

வீரிய வாசகம் வந்தே மாதரம்”

என்று 1907 இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தே மாதரம்” பாடலில் கூறுகிறார். இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார்.

“அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே

ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே

வெற்று தருந்துணை நின்னருள் அன்றோ?

--- --- --- --- ---

ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ?

வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே

வீரசிகாமணி, ஆரியர் கோனே” (5)

(இந்தியா, 1908)

என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்” என்னும் பாடலில் கூறுகின்றார். இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார்.

பாரதியார் தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பைச் “செந்தமிழ் நாடு”, “தமிழ்” ஆகிய தலைப்புகளில்

“செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

--- --- --- --- ---

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்” (6)

என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)

இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்

அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று

சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்

தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல

நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்

--- --- --- --- ---

செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்

தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்

தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9)

பாரதியார் பரிசுப் போட்டிக்காக மேலே கண்ட பாடலை எழுதும்போது மட்டும் தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை

மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;

ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (10)

என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம் தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதியாருக்குத் தமிழ்மொழி உயர்ந்த மொழி என எழுத மனம் வரவில்லை போலும்.

பாரதியார் எழுதிய கவிதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், கால வரிசைப்படியாகத் தொகுத்து 700 பக்கங்கள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றைப் பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள்ளன. (11). இந்தப் பதினோரு பக்கங்களிலும் கூடத் தமிழை, தமிழ்நாட்டை உயர்த்திச் சொல்ல மனம் வராமல் ஆரியத்தையே உயர்த்திக் கூறுகிறார் பாரதியார்.

பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.” (12)

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பத

Edited by இளங்கோ

  • Replies 71
  • Views 25.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சமயங்களில் இவ்வாறன ஆ;ககங்கள் தேவையா?

தமிழை விட ஆங்கிலத்தையும், மேலைத் தேசக் கலாச்சாரத்தையும் உயர்த்திப் பேசிய ராமசாமியை விட, தமிழில் ஆக்கங்கள் படைத்த பாரதி மேலானவர், என்பதை அவரது அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழின் வளர்ச்சி என்பது அதில் படைக்கப்படும் ஆங்கங்களில் தான் தங்கியுள்ளது. இன்றைக் குழந்தைகள் கூடப் பாரதியாரின் பாடல்களில் இருந்தே தமிழை ஆரம்பிக்கின்றன. ஆனால் தமிழை காட்டுமிராண்டி என்று திட்டித் தீர்த்த கும்பல்களுக்கு ஆங்கிலத்தில் தான் அதிக நாட்டமே தவிர, தமிழில் என்றும் இருந்ததில்லை.

ஒரு இந்தியன் என்றவகையில் இந்திய தேசியத்தை அவர் போற்றிப் பேகினார். அதில் எவ்வித தவறும் இடையாது. என்ன தமிழ்நாட்டை பாகிஸ்தானிய முஸ்லீம் மிதவாதிகள் கூடவா இணைக்கச் சொன்னார்??

இந்தச் சமயங்களில் இவ்வாறன ஆ;ககங்கள் தேவையா?

தமிழை விட ஆங்கிலத்தையும், மேலைத் தேசக் கலாச்சாரத்தையும் உயர்த்திப் பேசிய ராமசாமியை விட, தமிழில் ஆக்கங்கள் படைத்த பாரதி மேலானவர், என்பதை அவரது அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழின் வளர்ச்சி என்பது அதில் படைக்கப்படும் ஆங்கங்களில் தான் தங்கியுள்ளது. இன்றைக் குழந்தைகள் கூடப் பாரதியாரின் பாடல்களில் இருந்தே தமிழை ஆரம்பிக்கின்றன. ஆனால் தமிழை காட்டுமிராண்டி என்று திட்டித் தீர்த்த கும்பல்களுக்கு ஆங்கிலத்தில் தான் அதிக நாட்டமே தவிர, தமிழில் என்றும் இருந்ததில்லை.

ஒரு இந்தியன் என்றவகையில் இந்திய தேசியத்தை அவர் போற்றிப் பேகினார். அதில் எவ்வித தவறும் இடையாது. என்ன தமிழ்நாட்டை பாகிஸ்தானிய முஸ்லீம் மிதவாதிகள் கூடவா இணைக்கச் சொன்னார்??

என்னடா பாரதிமீது இன்னும் எங்கட ஆக்கள் காள்ப்புணர்வை காட்ட இல்லையே எண்டு நினைச்சன்.. ஆசையை நிறைவேற்றி விட்டார்கள்...

என்னடா பாரதிமீது இன்னும் எங்கட ஆக்கள் காள்ப்புணர்வை காட்ட இல்லையே எண்டு நினைச்சன்.. ஆசையை நிறைவேற்றி விட்டார்கள்...

வன்னிக்களம் ஒரு வளத்துக்கு வரும் வரைக்கும் இப்படி பலதையும் தாங்க வேண்டி இருக்கும்.

இந்தச் சமயங்களில் இவ்வாறன ஆ;ககங்கள் தேவையா?

தமிழை விட ஆங்கிலத்தையும், மேலைத் தேசக் கலாச்சாரத்தையும் உயர்த்திப் பேசிய ராமசாமியை விட, தமிழில் ஆக்கங்கள் படைத்த பாரதி மேலானவர், என்பதை அவரது அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழின் வளர்ச்சி என்பது அதில் படைக்கப்படும் ஆங்கங்களில் தான் தங்கியுள்ளது. இன்றைக் குழந்தைகள் கூடப் பாரதியாரின் பாடல்களில் இருந்தே தமிழை ஆரம்பிக்கின்றன. ஆனால் தமிழை காட்டுமிராண்டி என்று திட்டித் தீர்த்த கும்பல்களுக்கு ஆங்கிலத்தில் தான் அதிக நாட்டமே தவிர, தமிழில் என்றும் இருந்ததில்லை.

ஒரு இந்தியன் என்றவகையில் இந்திய தேசியத்தை அவர் போற்றிப் பேகினார். அதில் எவ்வித தவறும் இடையாது. என்ன தமிழ்நாட்டை பாகிஸ்தானிய முஸ்லீம் மிதவாதிகள் கூடவா இணைக்கச் சொன்னார்??

இப்படியான ஆக்கங்கள் எப்போதும் தேவையில்லை... என்டாலும் நீங்கள் சந்தில சிந்து பாடுறீங்கள்... :unsure:

பாரதியார் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்.. அவரது கவிதைகள் தமிழில்தான் உள்ளன.. ஆனால் கட்டுரைகளில் பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்கள்தான்.. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடையே ஏனிந்த வேறுபாடு என்று நமக்குப் புரியவில்லை.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

போச்சடா ......... பாரதி ,

ஆட்டை கடிச்சு , மாட்டை கடிச்சு கடைசியாய் ........ :unsure:

அரிசிக் குவியலுக்குள் கல்லைத் தேடிப் பொறுக்குகிறார்களாம். குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பேர்வழிகள். உருவாக்கக் கூடிய வல்லமையேது மற்று, உருவாக்கப் பட்டதிலிருந்து குறைகாண்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே……. என்று பார்ப்பனியத்தை இகழ்ந்ததோடல்லாமல் கனகலிங்கமென்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு உபநயனஞ் செய்து தன் கையாலேயே பூணூல் அணிவித்தவர் பாரதி. அதனால் பிராமணர்கள் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தார்கள். வேளைக்கு உணவுகூடக் கிடைக்காமல் ஊரின் எல்லையில் போய் ஒதுங்கி வாழ்ந்தார். மனைவி, தன் இனத்துப் பிராமணர்கள் கண்டுவிடாமல் ரகசிமாக உணவனுப்பினாள். அதைத் தின்று உயிர் வாழந்தான் அந்தப் பெருங்கவிஞன்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்…… யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை. உண்மை வெறும் புகழச்சியில்லை… என்றும்,

கள்ளையுந் தீயையுஞ் சேர்த்து – நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்து தௌ;ளு தமிழ்ப் புலவோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்… என்றும் தமிழன்னையின் பகழ்பரப்பியவன் பாரதி.

வானமளந்த தனைத்துமளந்திடும் வண்மொழி….. என்று தமிழன்iனையைப் போற்றியவன் பாரதி.

அவரது காலத்தில் அவருக்குப் பரிச்சயமான சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடையில் அவர் எழுதினாரேயன்றி தமிழை எந்த இடத்திலும் குறைவாக அவர் மதிப்பிட்டது கிடையாது. தமிழில் சில பிறமொழிப் பதங்களை உச்சரிக்கக் கூடிய வகையில் எழுத்துக்கள் இல்லாமையால் வட எழுத்துக்கள் கலக்கப்பட்டன. அவற்றைப் பாரதி போன்றோர் பாவனைக்குக் கொண்டுவந்தனர். அதனால் இன்று தமிழ் செழிப்புற்றுள்ளதேயன்றித் தாழ்ந்துவிடவில்லை.

சும்மா எழுந்த மானத்தில் ஒரு யுகக் கவிஞனின் மீது சேற்றை வாரி இறைக்க முற்படுவதைவிட வேறு நல்ல பல பணிகளைப் புரிவது பயனளிக்கும் என எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியைப் பற்றி எனக்குள் ஏற்பட்ட சில உள்ளுணர்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். பாரதி பெரும் கவிஞன் என்று சிறுவயதில் இருந்து வந்த கருத்தில் எனக்கு இன்றும் மாற்றுக்கருத்தில்லை. அதாவது அவரது கருத்தையல்ல கவிப்புலமையைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். இருபதாம் நூற்றாண்டின் கவி வடிவம் பாரதியிடம்தான் தொடங்குகிறது என்று கருதுகிறேன். அந்த எளிமையும் அழகும் பாரதிக்கே உரிய தனிச் சிறப்பு.

ஆனால் பாரதியின் கவிகளை மிக ஆழமாகப் படிக்கத் தொடங்கிய பிறகு, பெரிய ஈடுபாடு கருத்தளவில் வரவில்லை. பாரதியின் பல கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை கண்டிருக்கிறேன். புதுமை புரட்சி என்று பார்த்தால் கூட பாரதிக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சித்தர்கள் அளவிற்கு பாரதி சாதிய எதிர்ப்பு பேசவில்லை. சாதிகள் இல்லையடி என்பதற்கும் சாதிப் பேயை அடித்து விரட்டு என்பதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வள்ளுவருக்கு இருந்த சமரச உணர்வுகூட பாரதியிடம் இருந்தது போல் தெரியவில்லை.

மிக ஆழமாக பாரதியின் கவிதைகளைப் படித்தால் தமிழுணர்வை விட இந்து உணர்வே வெளிப்பட்டு நிற்கிறது.

பாரதி தமிழ் பற்று உள்ளவராக இருந்திருந்தாலும் தமிழா இந்துவா என்றால் அவர் இந்துவாகவே வெளிப்படுகிறார்.

எல்லா வற்றையும் தாண்டி பாரதியிடம் மன்னிக்கவேண்டும் பாரதியின் கவிதைகளில் எனக்குப் பிடித்த விடயம் அந்தக் காதல் ரசம்தான். காற்று வெளியிடை கண்ணம்மா, தூண்டில் புழுவினைப்போல் சகியே சுடர் விளக்கினைப்போல், சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா போன்ற பாடல்களை விட (எனது தனிப்பட்ட கருத்து) மிக அழகான காதல் பாடல்கள் தமிழில் இருக்க முடியுமா என நினைக்கத் தோன்றுகிறது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் இந்துவாக இருந்து உணர்வை வெளிப்படுத்துவதற்காக தவறு என்பது மனவெறியின் உச்ச அடையாளம். தங்களுக்குப் பிடிக்காததற்காக அவர்களை ஒரு வகையில் குற்றம் சாட்டி தமிழன் இல்லை என்று நிருபிப்பதில் வல்லவர்கள் இவர்கள்.

எந்தவொரு கவிஞனும், பக்தியின்அடிப்படையில் தான் தமிழுக்கு ஆக்கங்கள் தந்து வளப்படுத்தினான். நாத்திகம் பேசிய எவனும் உருப்படியான ஆக்கங்கள் தந்ததில்லை. பாரதிதாசன் கூட தமிழா குனி, நிமிர், நட, என்ற மாதிரியான ஆக்கங்களுக்கே சொந்தமாக இருந்தார்.

இவர்களோடு கூட்டுச் சேர்ந்த மறைமலை அடிகளாரைக் கூட குற்றவாளியாக மாற்ற முனைந்த இவர்களின் எண்ணம் அதுவாகத் தான் இருக்கலாம். ஏன் என்றால் அவர் இந்துவாக இருந்ததால் தான்.

ஆனால் அவர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டை ஏற்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போச்சடா ......... பாரதி ,

ஆட்டை கடிச்சு , மாட்டை கடிச்சு கடைசியாய் ........ :lol:

இளங்கோ என்பவர் தீவிர இராமசாமிப் பக்தன்.

இராமசாமிப் பக்தர்களைப் பொறுத்தவரை.. இராமசாமியே.. தமிழ் மக்களின் இரட்சகன். ஏன் எமது தேசிய தலைவர் கூட இராமசாமியைப் பின்பற்றித்தான் போராட்டம் ஆரம்பித்தார் என்று நாளை எமது தலைவர் பற்றிய தமது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்று எழுதுவார்கள்.

இளங்கோ போன்றவர்கள்.. (மேலே உள்ள கட்டுரையை எழுதியவர் உட்பட) தம்மை தமிழ் எழுத்துலகில் அடையாளப்படுத்திக் கொள்ள சரியோ தவறோ.. தமிழர்கள் கேணயர்கள் என்ற ஒரே தலையாய சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு இப்படி எழுதி வருகின்றனர். அதனை பலர் வெளிச்சம் போட்டும் காட்டியுள்ளனர். இவர் (மேலே உள்ள கட்டுரையை இங்கிணைத்த இளங்கோ) ஒரு பேப்பரில் எழுதி வந்த சாய்ந்த கோபுரங்கள் பற்றி இவருக்கு பகிரங்கமாகவே கடித்தும் உள்ளனர். இருந்தும் திருந்தவில்லை. :icon_mrgreen:

அண்மையில் இதே களத்தில் பாரதியை சிறுமைப்படுத்த அவனுக்கு சிறுவயதில் ஒரு காதலி இருந்தாள்.. பாரதி கஞ்சா அடித்தான்... அதுஇதென்று தமது இட்டுக்களை வைத்து மிகைப்படுத்தி எழுதித் தள்ளினார்கள். பாரதியோடு சம காலத்தில் வாழ்ந்தவர்கள் போல.. அவரோடு கூடச் சேர்ந்து கஞ்சா அடித்தவர்கள் போல எழுதித் தள்ளினார்கள் என்றால்.. இவர்களின் உள்ளுணர்வைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்.

இராமசாமிக்கு எதிராக எழும் உண்மைக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத வேளைகளில் இப்படி பாரதியார்.. ஒளவையார் போன்ற தமிழ் புலவர்களைப் பற்றி தமது உள்ளுணர்வுக்கு ஏற்ப.. புரட்டித் திரித்து.. தாழித்து எடுத்து மக்களுக்கு வழங்குவார்கள் ..!

காரணம் பாரதியார் அடிப்படையில் தமிழன் அதுமட்டுமன்றி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால்.. அவனை மட்டம் தட்டுதலே இவர்களின் பிரதான நோக்கம்..! இவ்வாறான சாதி வெறியத்தனத்தோடு அலையும்.. இந்தக் கும்பல்களின் எழுத்துக்களை படிப்பதை மறுப்பதே இவர்களுக்கு சரியான தண்டனையாக அமையும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான சாதி வெறியத்தனத்தோடு அலையும்.. இந்தக் கும்பல்களின் எழுத்துக்களை படிப்பதை மறுப்பதே இவர்களுக்கு சரியான தண்டனையாக அமையும்..! :lol:

அதனால்தான் சிலருடைய நீண்ட கருத்துக்களைப் படிப்பதில்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்.. அவரது கவிதைகள் தமிழில்தான் உள்ளன.. ஆனால் கட்டுரைகளில் பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்கள்தான்.. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடையே ஏனிந்த வேறுபாடு என்று நமக்குப் புரியவில்லை.. :icon_mrgreen:

சமஸ்கிரதத்தை ஒரு பழிப்பு மொழியாக இனங்காட்டிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் எப்படி.. பார்பர்னம் பற்றிப் பேசுவது. இதையே கொள்கையாகக் கொண்டுள்ள இராமசாமிக் கூட்டத்துக்கு.. சமஸ்கிரதத்தை கலந்தடித்து கட்டுரை வரைந்தால் தானே பாரதியையும்.. பார்பர்னியனாக்கி.. ஒதுக்கி வைக்கலாம்..! தீண்டாமையை வளர்ப்பவர்கள்.. பார்ப்பனர்கள் அல்ல. இந்த இராமசாமி வெறியர்களே என்றேல் அது மிகையல்ல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இராமசாமிப் பக்தர்களைப் பொறுத்தவரை.. இராமசாமியே.. தமிழ் மக்களின் இரட்சகன். ஏன் எமது தேசிய தலைவர் கூட இராமசாமியைப் பின்பற்றித்தான் போராட்டம் ஆரம்பித்தார் என்று நாளை எமது தலைவர் பற்றிய தமது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்று எழுதுவார்கள்

இல்லை. ஏற்கனவே பலர் அப்படி எழுதியதால் தான் தயா அண்ணா உற்பட்ட பலர் இந்த விவாதத்தில் பங்கெடுத்தார்கள். அதனால் தான் நாங்களும், கன்னடர்கள், மலையாளிகள் இணைந்து கொண்டுள்ள திராவிடக் கொள்கையை விட்டு, தமிழ்தேசியத்தை மட்டும் முன்நிறுத்துவதோடு, அதற்காகப் போடுகின்ற போரடிய அனைவரையும், ஆதரவளிக்கின்றோம்.

தமிழை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ராமசாமியை அதனால் தான் ஆதரிப்பதில்லை. ஆனால் ஓரளவாவது தமிழைப் பற்றிச் சிந்தித்த அண்ணாவை ஆதரிக்கின்றோம். அவரைப் பற்றிச் சாடுவதுமில்லை.

பாரதி சின்னவயதில் காதல், கஞ்சா அடித்தான் என்று வியாக்கியானம் செய்வதற்கு என்ன தகுதி இவர்களுக்கு இருக்கின்றது. பெண்ணும், ஆணும் சமனாக இருந்து தண்ணியடித்தால் தான் அதுசமவுரிமை என்று வாதிடும் இவர்களுக்கு அது பற்றி கதைக்க உரிமையுண்டு.

நெஞ்சில் உரமுமின்றி

நேர்மை திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே

நாளில் மறப்பாரடி

கண்கள் இரண்டிருந்தும்

காணும் திறமையற்ற

பேடிகள் கூட்டமடி - கிளியே

பேசிப் பயனென்னடி

Edited by vettri-vel

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்,

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளி யுண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்,

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்.

- - - - - மகாகவி பாரதி - - - - -

Edited by vettri-vel

ஜேர்மனியில் நான் வசிக்கும் நகரத்தில் இருந்த ஒரு பாடசாலையின் பெயர் மாற்றப்பட்டது. ஜேர்மனியின் புகழ் பெற்ற எழுத்தாளராகிய "கார்ல் புரோய்ர்மன்" என்பவரின் பெயரை கொண்டிருந்த அந்தப் பாடசாலை தன்னுடைய பெயரை மாற்றியது.

அதற்கு காரணம் "கார்ல் புரொய்ர்மன்" நாசிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததற்கான ஆதரங்கள் சிலவற்றை ஒரு பத்திரிகை வெளியிட்டதுதான்.

ஆனால் நாங்கள் ஒற்றைப்போக்கு மிக்கவர்கள். சிறுவயதில் பாடசாலையில் படித்ததை எந்த ஒரு ஆய்வுக்கும் இடமின்றி நம்பிக் கொண்டிருப்பவர்கள். ஆள்பவர்களால் எழுதப்படுவதுதான் வரலாறு என்கின்ற ஒரு சிறிய அறிவு கூட இல்லாத ஒரு மக்கள் கூட்டம் நாம்.

ஆறுமுகநாவலர் ஒரு சாதிவெறியர் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. "நாம் விரும்பும் பெரியார் ஆறுமுகநாவலர்" என்று சிறு வயதில் படித்தோம் என்பதற்காக இந்த உண்மை மாறிவிடாது.

அதே போன்றுதான் பாரதியும்.

நாவலரும், பாரதியும் தமிழில் எழுதினார்கள் என்பதால் அவர்கள் குறித்த உண்மைகள் மறைந்து விடாது.

இங்கே பாரதி குறித்த ஒரு ஆய்வு இணைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் தொலைக்காட்சியில் பாரதியின் பார்ப்பனியம் பற்றிய நிகழ்வும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இவைகளுக்கு தர்க்கரீதியான பதில்களை யாரும் இங்கே சொல்லவில்லை. இந்த ஆய்வுகளை நீங்கள் ஆதாரங்களுடன் மறுத்தால், அது நல்ல ஒரு செயலாக இருக்கும்.

ஆனால் இந்த ஆய்வை இணைத்தவரையும், சம்பந்தமேயில்லாமல் தந்தை பெரியாரையும் வசைபாடுவது உங்கள் கையாலகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

தயவுசெய்து இக் கட்டுரையை மறுக்கக் கூடிய உங்கள் வாதங்களை முன்வையுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் நான் வசிக்கும் நகரத்தில் இருந்த ஒரு பாடசாலையின் பெயர் மாற்றப்பட்டது. ஜேர்மனியின் புகழ் பெற்ற எழுத்தாளராகிய "கார்ல் புரோய்ர்மன்" என்பவரின் பெயரை கொண்டிருந்த அந்தப் பாடசாலை தன்னுடைய பெயரை மாற்றியது.

அதற்கு காரணம் "கார்ல் புரொய்ர்மன்" நாசிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததற்கான ஆதரங்கள் சிலவற்றை ஒரு பத்திரிகை வெளியிட்டதுதான்.

ஆனால் நாங்கள் ஒற்றைப்போக்கு மிக்கவர்கள். சிறுவயதில் பாடசாலையில் படித்ததை எந்த ஒரு ஆய்வுக்கும் இடமின்றி நம்பிக் கொண்டிருப்பவர்கள். ஆள்பவர்களால் எழுதப்படுவதுதான் வரலாறு என்கின்ற ஒரு சிறிய அறிவு கூட இல்லாத ஒரு மக்கள் கூட்டம் நாம்.

ஆறுமுகநாவலர் ஒரு சாதிவெறியர் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. "நாம் விரும்பும் பெரியார் ஆறுமுகநாவலர்" என்று சிறு வயதில் படித்தோம் என்பதற்காக இந்த உண்மை மாறிவிடாது.

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்.. என்று பாடியதன் மூலம்.. பாரதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.. இலங்கையை சிங்களவனுக்கு தாரை வார்த்துவிட்டார் என்று எழுதினாலும்.. அதை நிராகரிக்க கருத்தை முன் வையுங்கள் என்று கேட்க.. ஆட்கள் இருக்கிறார்கள். :lol:

ஆனால் பிரித்தானிய ஆளும் வர்க்கம் ஆட்சியில் சம வாய்ப்பளிக்கக் கேட்ட போது நாங்கள் சகோதரர்கள் ஒன்றாய் ஒற்றுமையாய் வாழ்வோம் என்று சிங்களவனின் பல்லக்கில் மயங்கி.. ஆட்சியை சிங்களவனிடம் தாரை வார்த்துவிட்டு வீணி வடித்த ஈழத்தமிழ் தலைவர்களின் செயலைக் கண்டிக்க மாட்டார்கள்.. ஆய்வு செய்யமாட்டார்கள்..!

இப்படித்தான் ஆய்வென்ற பெயரில் சிலர் தங்கள் காழ்ப்புணர்வுகளை கட்டுரையாக்கி இணையத்தில் ஒட்டிவிட்டு.. ஆய்வு செய்கிறார்கள்.. அதற்கு பதிலாய்வு செய்து சமர்பிக்கட்டாம்.

யார் உங்கள் ஆய்வை அங்கீகரித்து.. இதை ஆய்வென்று கருதி தகுதி அளித்தார்கள் என்று முதலில் சொல்லுங்கள்.. அதன் பின்னர் இந்த ஆய்வை இன்னொரு ஆய்வால் வேலை மிணக்கட்டு மறுதலிக்கத்தான் வேண்டுமா என்ற முடிவுக்கு வரலாம்..!

உருப்படியா ஆய்வைச் செய்கிறார்கள்.. ஆரியம் என்பது மாயை.. திராவிடம் என்பது மாயை என்று சொல்கிறார்கள்.. ஆனால் நீங்கள் அதை ஏற்கிறீர்களா. சிறுவயதில் படித்த அதே ஆரிய திராவிட வகுப்புவாத வெறியைத் தானே கொண்டு அலைந்து பாரதியையும் ஆரிய அருவருடி ஆக்கி விட்டிருக்கிறீர்கள்.

தொல்காப்பியன் ஆரிய அருவருடி..!

வள்ளுவர் ஆரிய அருவருடி..!

பிள்ளையார் வாழ்த்துப் பாடிய ஒளவையார் ஆரிய அருவருடி..!

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் ஆரிய அருவருடி..!

இராமனாமாயனம் பாடிய தமிழ் கவி கம்பன்... ஆரிய அருவருடி..!

ஆனால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.. தமிழர்களைக் கருங்காலிகள் என்ற கன்னட இராமசாமி மட்டும்.. திராவிட.. சா.. தமிழ் தொண்டன்..! இராமசாமி வெறியில் உளறியதை இடை நடுவில் கேட்டுவிட்டு.. பகுத்தறிவென்று கொண்டு திரியவில்லையா. அதுபோலத்தான்.. பாரதியும் நாவலரும்... பலருக்கும் அவர்கள் விரும்பும் பெரியார்...!

நாவலர் சாதி வெறியர் என்பதற்கும் மேலால் தமிழ் தொண்டன். சைவத்தின் காப்பகன்..! சைவத்தினை சரிவர பின்பற்றாதோரை நாவலர் வெறுத்திருக்கலாம்..! இராமசாமி கருங்காலிகள் என்று தமிழர்களை வெறுத்தது போல..! :D:icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இதை நீங்கள் ஒரு ஆய்வாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பாரதி பற்றி சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவைகளை உங்களால் யாரும் தர்க்கரீதியாக மறுக்க முடியவில்லை. பாரதி தமிழ் பற்றி பாடியது கூட ஒரு பரிசுக்காகவே என்று கட்டுரையாளர் சொல்கிறார். ஆதரங்களாக சில தகவல்களை தருகின்றார். ஆரியத்தை பாரதி உயர்த்திப் பிடித்தார் என்பதற்கு ஆதாரமாக பல தகவல்களை தருகின்றார்.

உங்களால் எதையும் மறுத்துக் கருத்து வைக்க முடியவில்லை.

பாரதி பற்றிய வாசிப்பு உங்களிடம் போதாமல் இருப்பதே இதற்கு காரணம். சிறுவயதில் பாரதியை பற்றி உயர்வாகப் படித்தது மட்டுமே உங்கள் மனங்களில் இருக்கின்றது. அதற்கு அப்பால் தேடுகின்ற ஆர்வம் உங்களுக்கு இல்லை. தேடுதலில் ஈடுபடுபவர்கள் சில விடயங்களை சொல்கின்ற பொழுது உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வசைபாடல்களில் ஈடுபடுகிறீhகள்.

பாரதியின் பாடல்கள், கட்டுரைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற காலகட்டம் இது. உண்மைகள் வெளிவரத்தான் செய்யும்.

உங்களிடம் சில கேள்விகள் கேட்கின்றேன்

பாரதி அங்கிலேய அரசுக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இங்கிலாந்துப் பிரபு வந்த பொழுது அவரை வாழ்த்தி, ஆங்கிலேய ஆட்சியே இந்தியாவிற்கு சிறந்தது என்று பாடல் எழுதியது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

பாரதி பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கின்றது. தொடர்ந்து பேசுவோம்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி அங்கிலேய அரசுக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இங்கிலாந்துப் பிரபு வந்த பொழுது அவரை வாழ்த்தி, ஆங்கிலேய ஆட்சியே இந்தியாவிற்கு சிறந்தது என்று பாடல் எழுதியது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

பாரதி பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கின்றது. தொடர்ந்து பேசுவோம்.

பாரதி ஒரு விடுதலைக் கவி. அவனைப் பற்றி அவனுக்கு எதிரானவர்கள் இட்டுக்களையும் புரட்டுக்களையும் எழுதியே சென்றிருப்பர். அவற்றை எல்லாம் மையமாக வைத்துக் கொண்டு பாரதியை இனங்காண முடியாது. இனங்காட்டவும் கூடாது.

இப்போ எமது விடுதலைக் கவிஞர் புதுவையைப் பற்றி தமிழனத் துரோகிகள் எழுதுவதை அடிப்படையாக வைத்து இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு.. புதுவையை துரோகி என்று காட்ட அவை ஆய்வில் பயன்படுத்தப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா..??!

அதுபோன்றதே பாரதியின் நிலை. அவனின் சமூக மற்றும் அரசியல் புரட்சிக் குரல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தாக்கத்தின் விளைவு அவனுக்கு எதிரிகளைத் தேடித்தந்தே இருக்கும். காலத்தின் தேவை கருதி பாரதி வெளியிட்ட கருத்துக்கள் திரிக்கப்பட்டு பாரதியை துரோகியாகக் காட்டப் பயன்பட்டிருக்கும்.

இப்போ புதுவை ஆங்கிலத்தில் கவி பாடி இருப்பதால்.. நாளை புதுவையை.. தமிழ் மொழி விரோதி என்று அடையாளம் காட்ட அதனைப் பாவிக்க அனுமதிக்க முடியுமா..??! முடியாது.

பாரதிக்கும் அவனுடைய அரசியல் சமூகச் சூழலில் சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். அது அவனின் பிரதான இலக்கான சமூக.. அரசியல் விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதில் முழுமையாக செல்வாக்குச் செய்வதாக இனங்காட்டி அவனைத் தூசிப்பது... பாரதி மீது வெறுப்புணர்வைக் கிளறிவிட நடக்கும் சதியே அன்றி வேறல்ல..!

அந்த வகையில் மேலுள்ள கட்டுரை என்பது.. பாரதி மீதான அபாண்டப் பழியே அன்றி ஆய்வுப் பொருளல்ல. எனவே இதற்கு.. ஆய்வு ரீதியாக.. அல்லது தர்க்க ரீதியாக பதிலளிப்பது அவசியமானதுமன்று..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

பாரதி பாக்கிஸ்தானிய இஸ்லாமிய அடிப்படைவாதி முகமது ஜின்னாவுடன் கூட்டு வைத்தது போல ஒரு தகவலும் கிடைக்க இல்லையோ...??

பாண்டிச்சேரியிலை சிறை வைக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வராது தடை செய்ய பட்ட பாரதி அண்றையை குறிக்கோளாக இருந்த ஒண்றிணைந்த பாரதம் நோக்கி "வந்தே மாதரம்" சொன்னது தவறு. ஆனால் அண்றில் இருந்தே காவிரியிலை இருந்து தண்ணீர் தராத, தமிழனை மிதித்த கன்னடம் அடங்கிய திராவிட தேசம் கோரியது மட்டும் சரியானதோ...??? என்னமோ சொல்லுங்கோ...

பாரதியார் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்.. அவரது கவிதைகள் தமிழில்தான் உள்ளன.. ஆனால் கட்டுரைகளில் பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்கள்தான்.. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடையே ஏனிந்த வேறுபாடு என்று நமக்குப் புரியவில்லை.. :icon_mrgreen:

அண்ணை சமஸ்கிருதம் இலக்கணத்தை சிதைத்த அளவுக்கு இலக்கியத்தை சிதைக்க இல்லை என்பது தெளிவு...

பழைய அகராதிகளை எடுத்து பாருங்கள் பல சமஸ்கிருத சொற்கள் எல்லாம் தமிழ் சொற்களாக அங்கீகரித்து உள்ளார்கள்...!!!

ஆங்கிலம் எப்படி பல மொழி சொற்களை தனது மொழி சொற்களாக உள்வாங்கியதோ அப்படித்தான் தமிழும் பல மொழிச்சொற்களை கொண்டு இருந்தது... அண்று யாரும் அவைகளை அகற்றி தூர்வார முன்வராத காலத்தில் பாரதி எழுதிய சொற்களில் சமஸ் கிருதம் கலந்து இருந்ததை பாரதி பிழையாக எண்ணி இருப்பாரா என்ன...?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

பாரதி மீதான குற்றசாட்டை என்னாலும் ஏற்கமுடியவில்லை......... காரணம் எனக்கு அந்த வகையில் இன்னும் அறிவில்லை. பாரதியின் காலத்தில் எது சாத்தியமோ..... அதுவே அவனுக்கு எட்டியிருக்கும் என்ற எண்ணம் அந்த கவி மீது வீழும் துசியை துடைக்ககவே துண்டுகின்றது.

ஆரியனோ...? பார்ப்பானோ...? தமிழ் மொழியைபற்றியும் சாதிகளற்ற சமூகம் பற்றியும் ஒரு வரியாவது எழுதி வைத்தானே எனும் எண்ணமே எனக்குள்ளும் உள்ளது.

.........ஆனாலும் ஒருவர் ஒரு இணைப்பை இணைக்கும்போது அது பற்றி பேசி அதன் உண்மை தன்மையை உணர்வதே உகந்தது. ஏன் நாம் இதற்கு சற்றும் தொடர்ரில்லாத பெரியாரை இழுக்க வேண்டும்?

உண்மையிலேயே யாழ்களத்தின் சில கருத்தாளர்களின் கருத்துக்களை பார்த்தால் காறி உமிழவே தகுதியுடையவையாக இருக்கின்றன. நான் பெரியாரை வடம் பிடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

நாம் ஏன் பாரதி பற்றியும் பரதியின் கவிதைகள் பற்றியும் இந்த இடத்தில் கதைக்க கூடாது???

உதாரணத்திற்கு வெற்றி-வேல் என்பவர் பாரதி மீதான கருத்தை எவ்வாறு எதிர்க்கிறார் என்று பாருங்கள்.

உண்மையிலேயே பாரட்டுதலுக்கு உரியது. அதற்கு இளங்கோ சபேசன் போன்றவர்களின் பதிலை நாம் எதிர்பார்க்கலாம்....... அதைவிடுத்து ஏன் பெரியாரை காட்டி நாம் மதம் வளர்க்கவேண்டும்?

ஆரொக்கியமான கருத்தாடல்கள் எமது அறிவை வளர்கும் ..... அதற்கு உங்களை போர்றவர்களின் கருத்து உதவும் என்பதாலேயே இதை எழுதுகிறேன். தயவு செய்து எதைபற்றி பேசுகிறோமோ.... அதைபற்றி பேசுங்கள்.

நன்றி நெடுக்காலபோவான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னோரு பெரிய வேடிக்கை..... பாரதி மீதான குற்றங்களையும் குறைகளையும் ஒருவன் சொல்லும் போது ஓடி வந்து கருத்து வைப்பவர்கள். பெரியார் மீதும் இம்மாதிரியான முழு ஞானமில்லாத குறைகளையும் குற்றங்களையுமே காலம் காலமாக வைத்து வருகிறார்கள். வார்த்தைகளை கூட மாற்றுவதில்லை நான் நினைக்கிறேன் எங்கோ வாசித்ததை அப்படியே மானப்பாடம் செய்து விட்டு குப்பை கொட்டுகிறார்களென்றே.

இது எவ்வகையில் நியாயம் ஆகிறது???

பெரியார் மீது குற்றம்கண்டுபிடிக்க ஆய்வு செய்பவர்கள்.... ஏன் பாரதி என்றவுடன் விலகி நிற்கின்றீர்கள்????

பாரதியுடன் நீங்கள் படுத்தெழுந்து வந்தவரோ???

எனக்கு பெரியார் மீது பக்தியுமில்லை பாரதி மீது வெறுப்புமில்லை...... யாழ்களத்தில் ஒரு கருத்தாடல் நடப்பின்

அது நாகாரீகமான முறையில் ஆரோக்கியமாக நடக்க வேண்டும் எனும் ஆவல் மட்டுமே உள்ளது.

நன்றி நண்பர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.