Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்!

Featured Replies

காங்கேசன்துறை கடலில் கப்பல்கள் மீது கரும்புலித் தாக்குதல்!

வினியோக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், புலிகளின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

- அத தெரன

Meanwhile, Navy spokesperson, Commander DKP Dassanayke told defence.lk that 3 LTTE suicide vessels have come for the attack. Navy sailors providing security onboard the targeted vessels have engaged machine gun fire at the approaching suicide boats effectively, and destroyed two of them before ramming on the ships, he said. However, he added that one of the suicide boat have exploded in close proximity to Merchant Ship Nimalawa causing a considerable damage to the ship's hull .

He further said that the third suicide craft has been captured by navy boats. The LTTE suicide cadre who was operating the boat believed to be killed in the Navy retaliation, he added.

- defence.lk

Edited by சாணக்கியன்

  • Replies 50
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்: காங்கேசன்துறை துறைமுகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்கான இரு வழங்கல் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து தரித்து நின்ற ருகுண (Ruhuna), நிமலவா (Nimalawa) ஆகிய இரு கப்பல்கள் மீது கடற்கரும்புலிகளது மூன்று படகுகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடற்கரும்புலிப் படகுகளை அவதானித்த கடற்படையினர் கனோன் மற்றும் கனரக துப்பாகிகளினால் தாக்குதல் நடத்திய போதும், இரு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ருகுண என்ற வழங்கல் கப்பல் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிமலவா என்ற வழங்கல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நிமலவா கப்பல் கடுமையாகச் சேதடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்களுடன் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/news/221/34//d,topnews_full.aspx

என்ன சாணக்கியன், இதெல்லாம் உங்களுக்கு தேவைதானா? இப்ப உங்களுக்கு மீண்டும் ஒருமுறை துரோகி பட்டம் வழங்கப்போறீனம் செய்தியை ஒழுங்காக போட இல்லை எண்டு. வெட்டி ஒட்டல் திருடர்கள் இஞ்ச இருப்பவர்களை குசிப்படுத்தும்படியாக கவர்ச்சிகரமான தலைப்புடன் செய்தியை ஒட்டும்வரை கொஞ்சம் அமைதியாக இருந்து இருக்கலாம்தானே?

  • தொடங்கியவர்

நீங்க சொல்லுறதும் சரிதான் முரளி... இனிமேல் செய்ய முயற்சிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அருகில் இரண்டு கப்பல்கள் மூழ்குகின்றன‌

இன்று அதிகாலை காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்குகிக்கொண்டிருப்பதாக செய்திகள், தெரிவிக்கின்றன.

றுகுண, நிமலவ ஆகிய இரண்டு வர்த்தகக் கப்பல்களுமே இந்த தாக்குதலால் மூழ்குவதாகவும் காங்கேசந்துற்றைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

-உதயன்

யாழ். கடற்பரப்பில் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:02 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா கடற்படை பேச்சாளர் டிகேபி.தசநாயக்க தெரிவித்திருப்பதாவது:

காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த விநியோகக் கப்பல்களான றுகுண, நிமலவ ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை 5:10 நிமிடமளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தின.

இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் என்றார் அவர்.

இத்தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக எதனையும் வெளியிடவில்லை.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

The Tamil Tigers have attacked two merchant ships carrying supplies to Jaffna in northern Sri Lanka, badly damaging one, defence officials say.

Navy sailors on board the ships fired and destroyed two of the rebel boats and captured a third.

The Tigers have not commented. The Jaffna peninsular is held by the government but cut off by territory controlled by the rebels.

The attack happened in the seas off northern Sri Lanka before dawn.

Three Tamil Tiger boats attacked two merchant ships heading for the Jaffna peninsular which were carrying what the Navy said were humanitarian supplies for civilians.

Northern offensive

A Navy spokesman, Cdr DKP Dassanayake, said sailors on board the ships fired at the attackers with machine guns.

Two of the rebel boats were destroyed, he said, one exploding close enough to cause considerable damage to one on the ships.

Cdr Dassanayake said the third boat was captured.

The Jaffna Peninsula, in the far north of Sri Lanka, is controlled by the government, but land routes to it are cut off by territory held by the Tamil Tigers, so troops and supplies have to be brought in by sea and air.

The attack on the ships comes as government forces push ahead with an offensive in the north, aiming to crush the rebels and end their fight for a separate state for the ethnic Tamil minority.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7683366.stm

(பிபிசி தனது செய்தியில் அரசு சொல்வது போல பொதுமக்களுக்கு உணவு கொண்டு போகும் கப்பல்கள் தாக்கப்பட்டன என்பதை தவிர்த்து.. வழங்கல் கப்பல்கள் என்று மட்டும் சொல்லியுள்ளதுடன்.. இராணுவத்திற்கான வழங்கல்கள் கடல் மற்றும் வான் வழி நடப்பதை முதன்னிலைப் படுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது. சிறீலங்கா கடற்பை மட்டும் மனிதாபிமான நடவடிக்கைக்கான பொருட்களைக் காவிச்சென்ற கப்பல்கள் தாக்கப்பட்டதாக் கூறுவதாக தெளிவாகச் சொல்லியுள்ளது. எமது சில புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள்.. அரசின் செய்தியை அப்படியே சொல்லி வருகின்றன. பாவங்கள்.. குழம்பிப் போய்ட்டார்கள் போல..! பிபிசிக்கு விளங்கிறது அவர்களுக்கு விளங்கவில்லை. வேதனை.) :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக , இராணுவத்தின் விநியோக கப்பல் மீது தாக்குதல் நடாத்திய கரும்புலி வீரர்களுக்கு , வீர வணக்கம் .

இராணுவத்தின் விநியோக கப்பல் மீது தாக்குதல் நடாத்திய கரும்புலி வீரர்களுக்கு , வீர வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இராணுவத்தினருக்குச் சொந்தமான இரு வழங்கல் கப்பல்கள் புலிகளால் தாக்கியளிப்பு

[22 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 9:50 மு.ப இலங்கை]

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இலங்கைக் கடற்படையினருக்குச் சொந்தமான இரு வழங்கல் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என படையினர் அறிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற ருகுண, நிமலவா ஆகிய இரு கப்பல்கள் மீதும் கடற்கரும்புலிகளின் மூன்று படகுகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடற்கரும்புலிகளின் படகுகளை அவதானித்த கடற்படையினர் கனோன் மற்றும் கனரக துப்பாக்கிகளினால் தாக்குதல் நடத்திய போதும், இரு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ருகுண என்ற வழங்கல் கப்பல் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிமலவா என்ற வழங்கல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நிமலவா கப்பல் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்களைக் கொழும்பிலிருந்து காங்கேசத்துறைத் துறைமுகத்திற்கு இக்கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

உதயன்.கொம்(யாழ்ப்பாணம்)

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இராணுவத்தினருக்குச் சொந்தமான இரு வழங்கல் கப்பல்கள் புலிகளால் தாக்கியளிப்பு

[22 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 9:50 மு.ப இலங்கை]

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இலங்கைக் கடற்படையினருக்குச் சொந்தமான இரு வழங்கல் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என படையினர் அறிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற ருகுண, நிமலவா ஆகிய இரு கப்பல்கள் மீதும் கடற்கரும்புலிகளின் மூன்று படகுகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடற்கரும்புலிகளின் படகுகளை அவதானித்த கடற்படையினர் கனோன் மற்றும் கனரக துப்பாக்கிகளினால் தாக்குதல் நடத்திய போதும், இரு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ருகுண என்ற வழங்கல் கப்பல் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிமலவா என்ற வழங்கல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நிமலவா கப்பல் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்களைக் கொழும்பிலிருந்து காங்கேசத்துறைத் துறைமுகத்திற்கு இக்கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

உதயன்.கொம்(யாழ்ப்பாணம்)

இதுதான் முதலில் நடந்த விடயம். ஆரம்பத்தில் அரசு சொன்ன விடயம் மழுப்பலானது. ஆறுதலாக அவிழ்த்து விட்டுள்ளார்கள். இன்னுயிரை ஈய்ந்த அந்த கருவேங்கைகளுக்கு வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels hit back with suicide ship attacks.

(AFP) - Sri Lanka's Tamil Tiger rebels struck back against a major government offensive Wednesday with suicide attacks on merchant ships off the island's northern coast, defence officials said.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rammed explosives-laden boats against the MV Ruhuna and MV Nimalawa which were supplying the besieged Jaffna peninsula, officials said.

The ethnic guerrillas also fought a sea battle with naval units defending the port of Kankesanthurai on the peninsula. At least six members of the elite Black Sea Tiger suicide squad may have perished in the attack, officials said.

"One of the merchant vessels -- MV Nimalawa -- was crippled and the other was damaged," said a defence official who declined to be named. He said a salvage operation was underway.

He said crew were rescued by the navy and there were no reports of casualties among the merchant sailors, who were escorted by heavily armed navy troops.

http://www.afp.com/english/news/stories/ne...517c23c.71.html

Sea Tigers sink Sri Lankan supply ship

[TamilNet, Wednesday, 22 October 2008, 08:10 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) Sea Tigers on Wednesday claimed that they carried out a Black Tiger attack on Sri Lankan ship MV Nimalawa, which carried military and other supplies, in Sri Lankan naval harbour in Kankeasnthu'rai in Jaffna Wednesday morning around 5:00 a.m. Another supply ship, MV Ruhunuwa, sustained heavy damage, the Tigers said.

The Tiger mission was led by Black Sea Tiger Lt. Col. Ilakkiyaa, the deputy commander of the Sea Tigers' female wing, who sacrificed her life with Black Sea Tiger Commando Lt. Col. Kuperan, LTTE officials told TamilNet.

  • கருத்துக்கள உறவுகள்

Sea Tigers sink Sri Lankan supply ship

[TamilNet, Wednesday, 22 October 2008, 08:10 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) Sea Tigers on Wednesday claimed that they carried out a Black Tiger attack on Sri Lankan ship MV Nimalawa, which carried military and other supplies, in Sri Lankan naval harbour in Kankeasnthu'rai in Jaffna Wednesday morning around 5:00 a.m. Another supply ship, MV Ruhunuwa, sustained heavy damage, the Tigers said.

The Tiger mission was led by Black Sea Tiger Lt. Col. Ilakkiyaa, the deputy commander of the Sea Tigers' female wing, who sacrificed her life with Black Sea Tiger Commando Lt. Col. Kuperan, LTTE officials told TamilNet.

காவியமான கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் விடிவுக்காய் கடலோடு கரைந்த கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

வீரவணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!

எங்களுடைய இணையத் தளங்கள் தங்களின் மொழிபெயர்ப்புத் திறமையைச் சிறப்பாகச் செய்து இரண்டு கப்பல்களையும் மூழ்கடித்துள்ளன. நிமலாவ கப்பலுக்கு அருகே புலிகளின் படகு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பலுக்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் மற்றைய கப்பலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் புலிகளின் இரண்டு படகுகளே அழிக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் பதிவு இணையத்தினர் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி கடற்படையின் இரண்டு வழங்கல் கப்பல்களையும் தாக்கியழித்துள்ளனர். எப்போதுதான் இவர்கள் திருந்ததப் போகிறார்களோ?

தாய் மண்ணின் விடியலுக்காய் தமது உன்னதமான உயிர்களை ஈந்து வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலிகள் லெப்.கேணல் இலக்கியா மற்றும் லெப்.கேணல் குபேரன் அகியோருக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கம் :icon_idea:

இழப்பு விவரம் குறித்து விடுதலைப் புலிகள் தெரிவிக்கையில் -

இச்சம்பவத்தில் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியாவுடன் கடற்புலிகளின் கொமாண்டோ லெப். கேணல் குபேரன் வீரச்சாவடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலை அடுத்து துறைமுகப்பகுதியிலிருந்து சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

படையினரின் கப்பல்கள் மீதூன இந்த தாக்குதலை அடுத்து யாழ். குடாநாட்டுக்கான சகல தொலைபேசி இணைப்புக்களும் படையினரால் துண்டிக்கப்பட்டன. முல்லைத்தீவு பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல் நடத்தினர்.

நன்றி புதினம்

கரும் புலிகளே வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அதிகாலை அத்தியாவதிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுணுமற்றும் நிமாலவ கப்பல்கள் தமது வழமையான வழங்கல்பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்றவேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி தாக்குதலை நடத்தியதாக விடுதலை புலிகள் தரப்பு அறிவித்துள்ளாது.

இந்த சம்பவத்தில் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியாவுடன் கடற்புலிகளின் கொமாண்டோ லெப்ரினென்ட் கேணல் குபேரன் வீரச்சாவடைந்துள்ளதாக அச்செய்திகள் மெலும் தெரிவித்தன.

யாழ் பொது மக்களுக்கு அத்தியாவதிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுணு மற்றும் நிமாலவ ஆகிய கப்பல்கள் கடற்புலிகளினால் வடப்பகுதி கடற்பரப்பான காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இன்று காலை 5.10 மணியளவில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள முனைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் மூன்று தற்கொலை தாக்குதல் படகுகள் இத் தாக்குதலினை மேற்கொண்டதாகவும் . வர்த்தக கப்பல்களிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சென்ற கடற்படையினரினர் புலிகளின் படகுகள் மீது இயந்திர துப்பாகி மூலம் தாக்குதல் நடத்தி இரண்டு படகுகளை வர்த்தக கப்பலின் மீது மோதும் முன் தாக்கியழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநயக்க தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை வர்த்தக கப்பலான நிமாலவவிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

www.tamilwin.com

(2ம் இணைப்பு)சிறிலங்கா கடற்படையினரின் பிரதான வழங்கல் கப்பல் கடற்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிப்பு

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:02 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டு வந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ கடற்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் தெரிவிக்கையில் -

காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் பிரதான வழங்கல் கப்பல்களான எம்.வி.நிமல்லாவ மற்றும் எம்.வி. றுகுணுவ ஆகியவற்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் கடற்புலிகளின் சிறப்பு அணிகள் மேற்கொண்ட தாக்குதலிலேயே ஒரு கப்பல் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்ட

காங்கேசன் துறைமுக தாக்குதலையடுத்து இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயம்

வீரகேசரி இணையம் - இன்று அதிகாலை காங்கேசன் துறையில் விடுதலைபுலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மல்லாகம் நீலியம்பளை பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் இவ் எறிகணை தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த எம்.உதயகுமார் (வயது 42) மற்றும் அவரது மனைவி வசந்த நாயகி (வயது 36) ஆகிய இருவரும் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை காங்கேசன் துறைமுகத்தில் விடுதலை புலிகள் மேற்கொண்ட இத்தற்கொலை தாக்குதலையடுத்து காங்கேசந்துறை மற்றும் மயிலிட்டி இறங்கு துறைமுகங்களிற்கு பொருட்கள் இறக்குபவர்களுக்கும் லொறிகளிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தாக்குதலில் சீமெந்தினை ஏற்றிவந்த கப்பலொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் தற்போது யாழ் குடா நாட்டில் சீமெந்து பைகள் வர்த்தக நிலையங்களில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் இ யாழ் மாவட்ட செயலகத்தால் அரச நிர்ணய நிலையில் வழங்கப்படுவந்த சீமெந்து விநியோகமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ் குடாநாட்டு செய்தியாளர் தெரிவித்தார்.

இதுக்கு ஒரே பதில் தாக்குதல்களை முற்றாக நிறுத்துவதுதான்...... ஜானார்த்தனன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.