Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் பூப்படைந்தேன்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாம் ஆண்டு....

சைவ சமய பரீட்சை

குனிந்து கரிசனையோடு

எழுதுகிறேன்.....

என் கண்ணும்

விடைத்தாளும்

விளையாடிகொண்டிருக்கும் வேளை

ஏதோ ஒன்று

அந்நியமாய்...

என் கண்ணில் இடர்ப்பட...

என் மனதிலோ..

வெட்கம்

பூரிப்பு......

ஓர்

இனம் புரியாத மாற்றம்...

இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு..

அது...

என் மூக்கின் கீழோரம்

ஆடவனின்

வீரச்சின்னம்

எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது....

பரீட்சை எழுதவில்லை...

ரசித்திருந்தேன்..

அன்று தான்

பிறந்திருந்த என் மீசையை.....

வருவாயா வருவாயா என

பார்த்து.. களைத்திருந்து...

காத்திருந்து..

என் மூத்தோர்... மீசையை....

நான் பார்த்து அவாப்பட்டு....

இறுதியில் வெற்றி பெற்ற ஆணவம்....

வீதியில் ஓர் அழகான

பெண் பார்த்தால்..

இத்தையல் என் மீது

மையல் கொண்டாளோ???

என்றெண்ணி தற்பெருமை

கொண்டு...

என் படுக்கை

தலையணிகள்......

திக்கம் ரோடு

எனக்கு தேரோடும் வீதியாக....

திக்கம் வடிசாலை - அது

புண்ணிய ஸ்தலமாக...

திக்கம் மீன்சந்தை

எனக்கு W.T.C ஆக

திக்கம் என்னும் பேரை கேட்டால்

திடுக்கிட்டு நான் மலர......

திக்கத்துக்கன்னியவள்

என்னை

திக்கற்றவன்

ஆக்கி விட்டாள்.....

நண்பர் என்று

சொல்லி

ஒரு கூட்டம்...

அது

நான் சொல்லி அழும்

கதை கேட்டு கைகொட்டும்....

திலி கிருபா வினோ கலி நாட்டமை

என்னுடனாக

ஆறு பெரும் சனியன்கள்...

உருப்படியா

ஒண்ணும் செய்யவில்லை.... - ஆனால்

ஊருக்குள்

நாமேதான் மைனர் குஞ்சுகள்......

றாலாமி வீட்டு மண் கும்பி

அறியும்

'- - - - - - - - -' அக்காவிற்கு

நாமென்ன

செய்தோமென்று...... ;-)

தெய்வேந்திரம் எமது

வில்லனாக......

உதயராஜ் வந்து விரல் காட்ட

கண்டவன் எல்லாம்

புத்தி கூற....

சீர் கெட்டு போனது

எம் நிலைமை....

இனி இருந்தால்...

எம்மானம் பறந்தோடும்

அதன்

முன்னே

நாம் மெல்ல பறந்திடுவோம்...

பறந்திட்டோம் பறந்திங்கே

வந்துவிட்டோம்....

போராடத்தொடங்கிவிட்டோம்

எம்

வாழ்கைக்காய்...

அம்மா

இத்தனைக்கும்

காரணம்...

என்

மீசைதானா.....? :)

meesaiua1.jpg

இக்கவிதை எனது நண்பன் ஒருவனால் எழுத்தப்பட்டது, நான் ரசித்தது உங்களின் ரசனைக்காக... :blink:

Edited by Thumpalayan

திக்கம் ரோடு

எனக்கு தேரோடும் வீதியாக....

திக்கம் வடிசாலை - அது

புண்ணிய ஸ்தலமாக...

திக்கம் மீன்சந்தை

எனக்கு W.T.C ஆக

திக்கம் என்னும் பேரை கேட்டால்

திடுக்கிட்டு நான் மலர......

தும்பளையான் நீங்கள் ரசித்த கவி அழகு.

பதிவுக்கு நன்றிகள்.

இன்னும் இப்படி எத்தனை கள உறவுகளை உந்த மீசை பாடாய்படுத்துதோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை எழுதவில்லை...

ரசித்திருந்தேன்..

அன்று தான்

பிறந்திருந்த என் மீசையை.....

வருவாயா வருவாயா என

பார்த்து.. களைத்திருந்து...

காத்திருந்து..

என் மூத்தோர்... மீசையை....

நான் பார்த்து அவாப்பட்டு....

இறுதியில் வெற்றி பெற்ற ஆணவம்....

meesaiua1.jpg

தும்பளையான் , உங்கள் நண்பனின் கவிதையை நானும் நன்றாக ரசித்தேன் . :rolleyes:

அதில் இணைத்துள்ள மீசையின் படத்தை என்னால் , ரசிக்க முடியவில்லை . :icon_idea: பிச்சைக்காரனின் மீசை போல் உள்ளது .

ஒரு அரும்பு மீசையின் படம் கிடைக்கவில்லையா ......

தும்பளை அக்கா..கா..!!.. :icon_idea:

மீசை முளைத்து அதன் பின் ஏற்பட்ட சுகங்கள் மற்றும் வலிகள் தனை..னை இவ் கதையில்..ல் அடக்கிய விதம் அழகு வாழ்த்துக்கள்..ள்..

உங்களுக்கு இல்லை..லை உங்களின் நண்பருக்கு..கு.. :wub: பதிந்த உங்களுக்கு நன்றிகள்..ள்...

எனக்கு கூட பாடசாலையில படிகக்க எப்ப மீசை முளைக்கும் எண்டு பார்த்து கொண்டு தான் இருந்தனான்..ன் பாருங்கோ இப்ப "சேவ்" பண்ணும் எண்டு ஒரே சினமா இருக்கு..கு.. :lol: எல்லாமே கிடைக்க மட்டும் தான் சொகமா இருக்கும் கெடைத்தா பிறகு வலி தான்..ன்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறில் பிறந்து

ஆறால் வளர்ந்து

ஆறும் சேர்ந்து

முருகாய் நீ வந்தாய்.

குறுக்காள் ஒருத்தி

குறுக்கால் வந்தாள்

கூறாய்.

முறுக்கால் முருகன்

கரும்பாயானான்.

(இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்வோருக்கு இன்னொரு பாட்டு பரிசு)

மீசை நரைத்தபிறகும்

மீசை நினைவுகளை

அசை போடவைத்த

ஆசைப் பாவுக்கு பாராட்டுகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரீட்சை எழுதவில்லை...

ரசித்திருந்தேன்..

அன்று தான்

பிறந்திருந்த என் மீசையை.....

அடடா தும்பளையான் மீசைக்காக உங்கட பரீட்சை கூட எழுதவில்லையோ நான் கூட சின்னவயசில களவா அப்பான்ட சேவ்றேசரை சுட்டு மீசைஇல்லாட்டியும் சும்மா வழிக்கிறனான் ஒருக்கா சதையையும் சேத்தெல்ல வழிச்சுப்போட்டன். ஆனா இப்ப ஜம்மு சொன்னமாதிரி இப்ப ஒரே சினமாக்கிடக்கு

Edited by puspaviji

ஆறில் பிறந்து

ஆறால் வளர்ந்து

ஆறும் சேர்ந்து

முருகாய் நீ வந்தாய்.

குறுக்காள் ஒருத்தி

குறுக்கால் வந்தாள்

கூறாய்.

முறுக்கால் முருகன்

கரும்பாயானான்.

சரியோ தெரியவில்லை. :unsure: எதுக்கும் ஒருக்கால் முயல்கிறேன்.

சரவணப்பொய்கையில் பிறந்து, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, உமை தேவி அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைக்கும் போது ஆறு குழந்தைகளும் ஒன்றாகி அழகாய் (முருகு - அழகு) முருகா நீ தோன்றினாய்.

குறுகிய இடையுள்ள (குறத்தி) வள்ளி உன் எதிரில் வந்தாள்.

முறுக்கான, வீரம் பொருந்திய (தேகத்தை உடைய) முருகா...! நீ வள்ளிக்கு கரும்பு போல் இனித்தாய்

இக்கவிதை எனது நண்பன் ஒருவனால் எழுத்தப்பட்டது, நான் ரசித்தது உங்களின் ரசனைக்காக... :unsure:

கவிதைப்பகிர்வுக்கு நன்றி தும்பளையான்... :lol:

தும்பளையான்

உங்கள் நண்பனின் அரும்புமீசைக் கவிதை அழகு. அதனை நீங்கள் இணைத்தமைக்கு நன்றிகள்.

சிறியின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக இதோ :unsure: :unsure:

meesaidz6.png

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியோ தெரியவில்லை. :wub: எதுக்கும் ஒருக்கால் முயல்கிறேன்.

சரவணப்பொய்கையில் பிறந்து, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, உமை தேவி அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைக்கும் போது ஆறு குழந்தைகளும் ஒன்றாகி அழகாய் (முருகு - அழகு) முருகா நீ தோன்றினாய்.

குறுகிய இடையுள்ள (குறத்தி) வள்ளி உன் எதிரில் வந்தாள்.

முறுக்கான, வீரம் பொருந்திய (தேகத்தை உடைய) முருகா...! நீ வள்ளிக்கு கரும்பு போல் இனித்தாய்

உங்களைப் போன்ற தமிழறிஞர்களுடன் களத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி தோழி.

தும்பளையான் கவிதையையும் உள்ளடக்கியுள்ளதி அந்தப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்

உங்கள் நண்பனின் அரும்புமீசைக் கவிதை அழகு. அதனை நீங்கள் இணைத்தமைக்கு நன்றிகள்.

சிறியின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக இதோ :):D

meesaidz6.png

வசம்பு , எனக்கு நீங்கள் இணைத்த படம் தெரியவில்லையே ..........

என்ரை கொம்புயூட்டர் பழுதோ ..... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை சிறித்தம்பி உது வசம்பரின்ரை பக்கத்திலைதான் பழுது

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறித்தம்பி உது வசம்பரின்ரை பக்கத்திலைதான் பழுது

குமாரசாமியண்ணை ,

அதுக்கிடையிலை நீங்கள் ஒண்டை இணைச்சு விடுங்கோவன் . :(

வசம்பு , எனக்கு நீங்கள் இணைத்த படம் தெரியவில்லையே ..........

என்ரை கொம்புயூட்டர் பழுதோ ..... :D

ஐயோ சிறி உங்களுக்காக சிரமமெடுத்து படத்தைக் கொண்டு வந்து இணைத்திருந்தேன். பலமணி நேரமாக அது ஒழுங்காகத் தான் தெரிந்தது. தற்போது தான் தெரியவில்லை. ஏன் தெரியவில்லையென்பது எனக்கும் தெரியவில்லை. நிர்வாகம் கவனித்தால் நல்லது. ஆனாலும் உங்களுக்காக மீண்டும் அந்தப் படத்தை இணைக்கின்றேன்.

meesaiqp2.png

இல்லை சிறித்தம்பி உது வசம்பரின்ரை பக்கத்திலைதான் பழுது

:(எனக்குப் பக்கத்திலையே பார்க்கச் சொல்லுறியள். எனக்கு பக்கத்து வீட்டைப் பார்க்க ஆசை தான். ஆனால் குடும்பத்திலை பிரைச்சினை வந்தாலுமெண்டு அடக்கி வாசிக்கிறன். நீங்க பாட்டுக்கு சும்மா இருக்கிற சிங்கத்தை உசுப்பி விடாதைங்கோ............. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சிறி உங்களுக்காக சிரமமெடுத்து படத்தைக் கொண்டு வந்து இணைத்திருந்தேன். பலமணி நேரமாக அது ஒழுங்காகத் தான் தெரிந்தது. தற்போது தான் தெரியவில்லை. ஏன் தெரியவில்லையென்பது எனக்கும் தெரியவில்லை. நிர்வாகம் கவனித்தால் நல்லது. ஆனாலும் உங்களுக்காக மீண்டும் அந்தப் படத்தை இணைக்கின்றேன்.

meesaiqp2.png

ஆகா .............. அரும்பு மீசை இப்போ தெரிகின்றது , நன்றி வசம்பு நன்றி . :)

நானும் இரண்டாவது படத்தில் உள்ளதை போல அரும்பு மீசை வைக்கப்போகின்றேன் . :(

தும்பளையான் கவிதையையும் உள்ளடக்கியுள்ளதி அந்தப்பா.

ஆகா, மீசையின் பிறப்பை முருகனின் அவதாரத்துடன் ஒப்பிட்டதும் அழகாயிருக்கு :)

உங்களைப் போன்ற தமிழறிஞர்களுடன் களத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி தோழி.

எல்லாம் ஆண்டு 1 சமயபுத்தகத்தில் படித்தது தானுங்க. வேறொன்றுமில்லை. :D

மற்றது, நான் தோழி அல்ல(அதற்காக எதிரியும் அல்ல! :( )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா, மீசையின் பிறப்பை முருகனின் அவதாரத்துடன் ஒப்பிட்டதும் அழகாயிருக்கு :)

மற்றது, நான் தோழி அல்ல(அதற்காக எதிரியும் அல்ல! :( )

ரசித்தேன் இரண்டாவதை தோழா!

முன்னதுக்குக் காரணம்

மீசை இல்லாதவர்களை தேவர்களாக்கி

மீசை உள்ளோரை அசுரர்களாக்கி

தமிழரை இழிவாக்கிய புராணங்களுக்கு

தமிழ்க்கடவுள் முருகனுக்கு மீசைவைத்து

பதிலடி கொடுக்கும் முகம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில இந்தத் தலைப்பை பார்த்து கொஞ்சம் வில்லங்கமான தலைப்பு என்டுதான் நினைச்சன் ஆனால் இது மீசை வில்லங்கமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் நீங்கள் ரசித்த கவி அழகு.

பதிவுக்கு நன்றிகள்.

இன்னும் இப்படி எத்தனை கள உறவுகளை உந்த மீசை பாடாய்படுத்துதோ :lol:

நன்றி வெண்ணிலா... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் , உங்கள் நண்பனின் கவிதையை நானும் நன்றாக ரசித்தேன் . :lol:

அதில் இணைத்துள்ள மீசையின் படத்தை என்னால் , ரசிக்க முடியவில்லை . :lol: பிச்சைக்காரனின் மீசை போல் உள்ளது .

ஒரு அரும்பு மீசையின் படம் கிடைக்கவில்லையா ......

அப்பிடியோ சிறி அண்ணா, உது இளம் துறவியிண்ட மீசை, தாடி போல இருக்கு, எதுக்கும் முனி அண்ணனையும் ஒருக்கா கேக்கிறது நல்லது...

danfoymustachelx3.jpg

இந்த அரும்பு மீசைப் படம் எப்பிடி இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

யாருங்க இந்த மன்மதன் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளை அக்கா..கா..!!.. :lol:

மீசை முளைத்து அதன் பின் ஏற்பட்ட சுகங்கள் மற்றும் வலிகள் தனை..னை இவ் கதையில்..ல் அடக்கிய விதம் அழகு வாழ்த்துக்கள்..ள்..

உங்களுக்கு இல்லை..லை உங்களின் நண்பருக்கு..கு.. :unsure: பதிந்த உங்களுக்கு நன்றிகள்..ள்...

எனக்கு கூட பாடசாலையில படிகக்க எப்ப மீசை முளைக்கும் எண்டு பார்த்து கொண்டு தான் இருந்தனான்..ன் பாருங்கோ இப்ப "சேவ்" பண்ணும் எண்டு ஒரே சினமா இருக்கு..கு.. :( எல்லாமே கிடைக்க மட்டும் தான் சொகமா இருக்கும் கெடைத்தா பிறகு வலி தான்..ன்.. :)

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் அப்பிடித்தான், "சேவ்" பண்ணாமல் வேலைக்குப் போக முடியாது. காலங் காத்தால கன்னத்த வழிக்கிறது பெரிய அரியண்டம் பாருங்கோ. அக்காக்கும் மீசை முளைக்கும் இல்ல ஜம்மு... :lol:

மீசை நரைத்தபிறகும்

மீசை நினைவுகளை

அசை போடவைத்த

ஆசைப் பாவுக்கு பாராட்டுகள்!

பாவினால் பாராட்டிய வாசகிக்கு நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[quote name='Mallikai Vaasam' date='Oct 24 2008, 08:21 PM' post='454856'

கவிதைப்பகிர்வுக்கு நன்றி தும்பளையான்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்

உங்கள் நண்பனின் அரும்புமீசைக் கவிதை அழகு. அதனை நீங்கள் இணைத்தமைக்கு நன்றிகள்.

நன்றி வசம்பு அண்ணா, நீங்கள் இணைத்த மீசைகள் அழகு ஆனால் ஹிட்லர் மீசையைக் காணவில்லை என ஒரு கவலை .

ஒரு சின்ன சந்தேகம், சினிமாப் படங்களில் என் வில்லன் மாரும் மாமா மாமாமாரும் (அதாங்க போலீஸ்) பெரிய மீசை வச்சிருக்கீனம் :lol: . ஹீரோ மாருக்கு மீசை இருந்தாலும் இவயளுக்குத் தானே பெரிசா இருக்கு... :lol:

ஒரு சின்ன சந்தேகம், சினிமாப் படங்களில் என் வில்லன் மாரும் மாமா மாமாமாரும் (அதாங்க போலீஸ்) பெரிய மீசை வச்சிருக்கீனம் :lol: . ஹீரோ மாருக்கு மீசை இருந்தாலும் இவயளுக்குத் தானே பெரிசா இருக்கு... :lol:

ஆண்மையின் அடையாளம், வில்லத்தனத்தின் சின்னமாக மாறியது சினிமாத்தனம் தான்... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில இந்தத் தலைப்பை பார்த்து கொஞ்சம் வில்லங்கமான தலைப்பு என்டுதான் நினைச்சன் ஆனால் இது மீசை வில்லங்கமா

மீசை வந்தாப் பிறகு தானே ஆசைகளும் கூட வாறது புஷ்பாவிஜி அண்ணே, :lol: அதால தானே கன வில்லங்கங்களும் வாறது... :)

யாருங்க இந்த மன்மதன் ?

எல்லாம், சுட்ட படம் தான அக்கா... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.