Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த தயார்-வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது:

பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன்முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை ஆதரித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர்.

இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மாட்டேன் என்று பிரதமர் எனக்கு அளித்த வாக்குறுதியை நம்பினேன். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார்.

புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்திய ராணுவம் தகர்த்தது. கடற்புலிகளை அழிக்க இந்திய ராணுவம் தகவல் கொடுத்து உதவியது. 4 ஆண்டுகளாக புலிகளை அழிக்க இந்தியா திட்டமிட்டு ராணுவ உதவி செய்துள்ளது. இலங்கையின் இனப் படுகொடுலைக்கு இந்திய ராணுவம் உதவுகிறது.

இந்திய அரசின் துரோகத்திற்கு என்ன தண்டனை?. இலங்கையின் உள் நாட்டு பிரச்னைக்கு இந்தியா ஏன் ஆயுத உதவி செய்கிறது?

தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு. மத்திய அரசு செய்த துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்?.

இலங்கையில் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். அதை தடுத்தது இந்தியாதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இலங்கைக்கு உதவ மறுத்தார். அதற்காக அவருக்கு நன்றி சொல்வோம்.

இலங்கையில் ஒருமைப்பட்டை காக்க இந்தியாவின் ஒருமைப்பட்டை குலைத்து விடாதீர்கள். இந்தியா புலிகளுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டும்.

துன்பியல் நிகழ்வுகளை (ராஜிவ் படுகொலை) பற்றி பேசாதீர்கள். போரை நிறுத்துங்கள். உலகின் அனைத்து நாடுகளும் புலிகளுக்கு தடை போட இந்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.

தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம்.

புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும். இலங்கையின் உண்மையான குடிமக்கள் தமிழர்கள் தான். மற்றவர்கள் தான் வந்தேறிகள் என்றார் வைகோ.

கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசுகையில், புலிகளை பயங்கரவாதிகள் என தமிழ் துரோகிகள் சொல்கின்றனர். அகிம்சை போராட்டத்தில் வெற்றி பெறாததால் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும்.

இலங்கைக்கு அளித்து வரும் ராணுவ உதவியை திரும்பப் பெற வேண்டும். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தனி ஈழத்திற்கு உரிய மரியாதையை தர வேண்டும்.

இந்திய இறையான்மையை பிரதமரும், முதல்வரும் காப்பாற்ற மாட்டார்கள். அனைத்து கட்சிகள் கூட்டத்தின் முடிவின்படி 29ம் தேதி ராஜினாமா கடிதம் யார் கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டதால், திமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை என முதல்வர் கருணாநிதி அப்போது சொல்வார் என்றார்.

இந்தக் கருத்தரங்கில் புலிகள் தொடர்பான வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. ஈழத்துக்கு ஆதரவு என்ற பெயரில் கண்ணப்பன் தனி தமிழ்நாடு கோஷத்தையும் எழுப்பியது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/10...-says-vaik.html

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ உதவி செய்கிறாரா அல்லது உபத்திரவம் செய்கிறாரா?

ஆயுதம் ஏந்தல், தனித்தமிழ் நாடு போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் தேவைதானா?

ஈழத்தமிழருக்கு இறுதித்துரும்பாக கிடைத்திருக்கும் அபய கரத்தையும் கட்டிப்போடும் முயற்சியா? :icon_idea:

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ உதவி செய்கிறாரா அல்லது உபத்திரவம் செய்கிறாரா?

வைகோ.. கண்ணப்பன் இருவரும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் அவரவர் சொந்தக் கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர்.

ஈழத்தமிழருக்கான ஆதரவு என்பதற்கும் அதற்கும் தொடர்பை ஏற்படுத்துவதுதான் தவறானது. இருந்தாலும் ஈழத்தமிழருக்கான தமிழக ஆதரவை விரும்பாத சக்திகள் வைகோ மற்றும் கண்ணப்பனின் பேச்சை வைத்து இந்து இதழ் எழுதித்தள்ளியது போல.. தமிழர் விரோத.. தமிழக ஆதரவைச் சிதைக்கும் செயலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.

Edited by nedukkalapoovan

வைகோ.. கண்ணப்பன் இருவரும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் அவரவர் சொந்தக் கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர்.

ஈழத்தமிழருக்கான ஆதரவு என்பதற்கும் அதற்கும் தொடர்பை ஏற்படுத்துவதுதான் தவறானது. இருந்தாலும் ஈழத்தமிழருக்கான தமிழக ஆதரவை விரும்பாத சக்திகள் வைகோ மற்றும் கண்ணப்பனின் பேச்சை வைத்து இந்து இதழ் எழுதித்தள்ளியது போல.. தமிழர் விரோத.. தமிழக ஆதரவைச் சிதைக்கும் செயலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.

இதை தெரியாமல் செய்தால் முட்டாள்தனம்!

தெரிந்து செய்தால் சுயநலம், துரோகம்!

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தமிழ்நாடு மலரும்.

இந்த வார்த்தகளுக்காக வை.கோ உள்ளே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த வார்த்தகளுக்காக வை.கோ உள்ளே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

வைகோ அவர்கள் சொல்லவில்லை, கண்ணப்பன் அவர்கள் கூறியது

கூட்டத்தில் ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப் பன் பேசியதாவது:

புலிகளை பயங்கரவாதிகள் என, தமிழ் துரோகிகள் சொல்கின்றனர். அகிம்சை போராட்டத்தில் வெற்றி பெறாததால் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு, தனி நாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் மலரும்.இந்திய இறையான்மையை பிரதமரும், முதல்வரும் காப்பாற்ற மாட்டார்கள். அனைத்து கட்சிகள் கூட்டத்தின் முடிவின்படி 29ம் தேதி ராஜினாமா கடிதம் யார் கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். "பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டதால், தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என முதல்வர் கருணாநிதி அப்போது சொல்வார்.இலங்கைக்கு அளித்துவரும் ராணுவ உதவியை திரும்பப் பெற வேண்டும். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தனி ஈழத்திற்கு உரிய மரியாதையை தர வேண்டும்.இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைக்கோ ஏன் இப்படிக் கதைக்கிறார் என்டு தெரியேல ஒருNவுளை உணர்ச்சிவசப்பட்டுக் கதைச்சிட்டார்போல

நம்மவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் வார்த்தைளை வகை தெரியாமல் விட்டு விட்டு

இந்து (The HIndu) போன்ற தமிழர் விரோத பத்திரிகைகளுக்கு களம் அமைத்து கொடுத்து விடுகிறார்கள்.

நம்மவர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டும்! ஆத்திரப்பட வேண்டும்! உணர்ச்சி கொந்தளிப்பில் ஒரிரண்டு சர்ச்சிக்குரிய கருத்துக்களை உளறிவிடவேண்டும்,

அதை வைத்தே இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியையும் தமிழர் ஒற்றுமையையும் குழப்பும் தமது சித்து வேலைகளை மீண்டும் முழுவீச்சில்

ஆரம்பிக்க வேண்டும் என்றே இந்து நாளிதல் போன்ற தமிழர் விரோத ஊடகங்கள் கண்கொத்தி பாம்பாக காத்திருக்கின்றன.

ஆகவே தமது ஏமாற்று வேலைகளை இந்து நாளிதழ் போன்ற ஊடகங்கள் முன்னெடுக்கும் விதத்தில் நாமே களம் அமைத்து கொடுத்திடாதவாறு

இராஜதந்திரத்துடன் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டியது இப்போது மிக அவசியமாகும்.

இல்லையென்றால் வெண்ணெய் திரண்டு வரும் போது தாளி உடைந்த கதை ஆகிவிடும்

ஓடு மீன் ஓட வைகோ, சீமான் போன்றவர்களின் வாய்களில் இருந்து உருமீன் வரும் வரையில் இந்து நாளிதல் போன்ற கொக்குகள் காத்திருக்கின்றன.

ஆகவே எச்சரிக்கை அவசியம்.

Our brethren have talked with hearts, but if we are to achieve the goals, we need to talk with brains!

Please!!

Edited by vettri-vel

ஆரோக்கியமான கருத்துக்கள்.

ஈழத்தமிழர் ஆதரவு நிகழ்வுகளில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சொன்னாலும் அதை விமர்சிக்கவும் சீர்திருத்தவும் நெறிப்படுத்தவும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு கடமையும் உரிமையும் இருக்கு.

அனுபவம் என்பது அரசியல்வாதிகளை பக்குவப்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அமெரிக்க சனாதிபதி தேர்தல் அரசியல் வரை இன்று அவதானிக்கலாம்.

எவ்வாறு றிப்பப்பிளிக்கன் துணை சனாதிபதி வேட்பாளரான அலெஸ்கா மாநில கவனர் சாரா பேலன் சர்வதேச அரசியலில் பரீட்சயம் அனுபவம் அற்று தழும்புகிறாரோ அதை போன்றது தான் அடிப்படையில் மாநில அரசியலிற்குள் இயங்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழீழ ஆதரவு அதன் பிராந்திய சர்வதேச பரிமாணங்கள் என்று வந்தவுடன் விடும் தவறுகள். இந்த பலவீனத்தை தமிழ்த்தேசிய எதிர்ப்புச் சக்த்திகள் பயன்படுத்திக் கொள்ள முற்படுவார்கள். இவற்றை அரோக்கியமாக விமர்சித்து எடுத்துச் சொல்லி எமக்காக குரல்கொடுக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் இராசதந்திர பக்குவத்தை மேம்படுத்துவது எமது கடமை.

ஈழத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் களத்திற்கு வரும் முதல் ஆள் நான்: வைகோ ஆவேசம்

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 08:50 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]

ஈழத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் களத்திற்கு வரும் முதல் ஆள் நான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆவேசத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஈழத்தில் நடப்பது என்ன?" எனும் தலைப்பில் அக்கட்சியின் சார்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் வைகோ ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதற்கு ஆதரவு அளித்தனர்.

புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகள் செய்ய மாட்டேன் என்று பிரதமர் எனக்கு அளித்த வாக்குறுதியை நம்பினேன். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார்.

புலிகளின் ஆயுதக்கப்பல்களை இந்திய இராணுவம் தகர்த்தது. கடற்புலிகளை அழிக்க இந்திய இராணுவம் தகவல் கொடுத்து உதவியது. 4 ஆண்டுகளாக புலிகளை அழிக்க இந்தியா திட்டமிட்டு இராணுவ உதவி செய்துள்ளது. இலங்கையின் இனப்படுகொடுலைக்கு இந்திய இராணுவம் உதவுகிறது.

தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு. மத்திய அரசு செய்த துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்.

இலங்கையில் எப்போதோ தமிழீழம் மலர்ந்திருக்கும். அதை தடுத்தது இந்தியாதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

இலங்கையில் ஒருமைப்பாட்டை காக்க இந்தியாவின் ஒருமைப்பட்டை குலைத்து விடாதீர்கள். இந்தியா புலிகளுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டும். போரை நிறுத்துங்கள். உலகின் அனைத்து நாடுகளும் புலிகளுக்கு தடை போட இந்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன். தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவர். தமிழீழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார் வைகோ.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ..ஜயோ... இப்பிடியான ஆவேசப்:பேச்சுக்கள் ஒண்:டுக்கும் உதாவாது என்று இத்தனை காலம் அரசியல் நடத்திற வைகோவிற்கு ஏன் இன்னமும் புரியேல்லை . இவை நிலைமைகளை சிக்கலாக்குமே தவிர தற்போதைய தமழீழ மக்களின் அவலவாழ்விற்கு உதவாது :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.