Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜகா வாங்கிய நடிகர்கள், சுனாமியாய்ச் சீறிய இயக்குநர்கள் - ராமேஸ்வரக் கொதிப்பு -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg2.jpg

அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது.

கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த - இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்கு எதிராகப் பொங்கி எழவும், காறி உமிழவும் தவறவில்லை.

சென்னையிலிருந்து கடந்த 18-ம் தேதி மாலை சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்துக்கு பாரதிராஜா புறப்பட்டபோது கூட, சில முன்னணி நடிகர்கள் நிச்சயமாக ராமேஸ்வரம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அவருக்குத் தரப்பட்டதாம்.

மறுநாள் மதியம் ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு பாரதிராஜா வந்தபோது, வடிவேலு, ஜீவா தவிர வேறு எந்த நடிகரும் வரவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும், ``இப்படி நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டாங்களேய்யா. இன்னிக்கு நம்மை வாழ வெச்சுக்கிட்டு இருக்குறது தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தானேய்யா. அந்த நன்றிக்காவது சில பேர் வந்திருக்கலாமேய்யா. கொஞ்சம் கூட உணர்வு இல்லையேய்யா அவங்ககிட்டே. அவங்களை நம்பி பெருசா ஏற்பாடெல்லாம் பண்ணி வெச்சிருக்கு. இப்படி ஏமாத்திட்டாங்களேய்யா'' என்று ராம.நாராயணனிடம் கடுகடுத்தாராம் பாரதிராஜா.

பாரதிராஜாவின் கோபமும் உணர்வும் சேரன், அமீர், சீமான் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுக்கும் தொற்றிக் கொள்ள, தமிழ் முன்னணி நடிகர்களுக்கு எதிராக மேடையிலேயே அவர்கள் சாட்டையைச் சுழற்றினார்கள்.

இயக்குநர் செல்வமணி பலபடி மேலேறி முன்னணி நடிகர்களைக் காறி உமிழ்ந்தார். ``எங்கிட்டே ஒரு நடிகன், `நான் ராமேஸ்வரத்துக்கு வந்தா அங்கே `ஆய்' போக முடியாது. அதுக்கான வசதி அங்கே இல்லே'ன்னு சொல்றான். இன்னொருத்தன், `ராமேஸ்வரத்துக்கு வந்தா உயிருக்குப் பாதுகாப்பு இல்லே'னு சொல்றான். ஏண்டா இங்கே வாழறவனெல்லாம் கொலைகாரனா? அருவா, வேல் கம்போடதான் சுத்திக்கிட்டு இருக்கானுங்களா? அவனுங்க பாஷையிலேயே சொல்றேன். பன்றிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். நாங்க எல்லாருமே சிங்கம்டா!'' என்று பொறி கலங்கும் அளவுக்கு யாருக்கோ வெடி வைத்துப் பேசினார் இயக்குநர் செல்வமணி.

பக்குவமாய்ப் பேசும் பாரதிராஜா கூட, அன்றைக்கு மேடையில் நடிகர்களுக்கு எதிராக கடுகடுத்த முகத்துடன் பாய்ச்சலைக் காட்டினார். அந்த அளவுக்கு பேசிய அத்தனை பேருமே, நடிகர்களை ஈழத் தமிழர்களின் துரோகிகளாகவும், நம்பிக்கை மோசடிக்காரர்களாகவும் சித்திரித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள்.

இவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாகப் பாய என்ன காரணம் என்பதை அறியும் நோக்கத்துடன் போராட்டத்திற்கு வந்திருந்த சினிமா டெக்னீஷியன்கள் சிலரிடம் பேசினோம்.

``பாரதிராஜா எவ்வளவு பெரிய இயக்குநர். அவர் ஆளாக்கிவிட்ட நடிகர்களெல்லாம் இன்றைக்கு அவருக்கு எதிரா இருக்கானுங்க. பாரதிராஜா ராமேஸ்வரத்துல பேரணி, பொதுக்கூட்டம்னு அறிவிச்சதுமே, `அந்த ஆளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சா'ன்னு கேட்ட நடிகர்கள்தான் அதிகம். இந்தப் பேரணி, பொதுக்கூட்ட அறிவிப்புக்குப் பின்னால அரசியல் இருக்கு. ராம. நாராயணன்தான் பின்னணியில இருந்து தி.மு.க.வுக்கு ஆதரவா திரையுலகினரை ஒண்ணு சேர்க்கறாரு. பாரதிராஜாவை பின்னால் இருந்து இயக்குவதே ராம. நாராயணன்தான்னு நடிகர்கள் பலரும் என் காது படவே பேசுறாங்க. ஆயிரம்தான் அரசியல் இருந்துட்டுப் போகட்டுமே, எடுத்திருக்கிற நோக்கம் எதுக்காகன்னு அந்த ஹீரோக்கள் யோசிச்சுப் பார்க்க வேணாமா? இலங்கையில ஈழத் தமிழர்களை சுட்டுப் பொசுக்கிட்டு இருக்காங்க. இதை யாரும் வாய் வார்த்தையா சொல்லலை. அங்கே நடக்கிற கொடுமைகளை சி.டி.யா போட்டு நடிகர்கள் கையில கொடுத்து, இதைப் போட்டுப் பார்த்துட்டு வாங்கன்னுதான் பாரதிராஜா சொல்லியிருக்காரு. அதைப் போட்டுப் பார்த்துட்டாவது ஹீரோக்கள் ராமேஸ்வரம் வந்துருக்கணுமா இல்லையா? `வர்றோம்... வர்றோம்'னு சொல்லிட்டு கடைசில கழுத்தை அறுத்துட்டாங்க. அந்த சி.டி.யைப் போட்டுப் பார்த்துட்டு கதறிக்கிட்டு ராமேஸ்வரத்துக்கு ஓடி வந்த பிரபல நடிகர்கள் இரண்டே பேருதாங்க. ஒருத்தர் வடிவேலு. இன்னொருத்தர் ஜீவா. இத்தனைக்கும் ஜீவா தமிழன் கிடையாது. அந்தப் பையனுக்கு இருக்கிற உணர்வுகூட மற்ற முன்னணி தமிழ் நடிகர்களுக்கோ, நடிகைகளுக்கோ இல்லாம போனது ரொம்ப ரொம்பக் கொடுமை சார்'' என்று ஒரே மூச்சில் வெடித்து வெதும்பினார்கள், அந்த டெக்னீஷியன்கள்.

`நடிகர், நடிகைகளை இப்படி ஒரேயடியாக கரித்துக் கொட்டுவது நியாயமில்லையே. அவர்களும்தான் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் வைத்திருக்கிறார்களே?' என்று அவர்களிடம் கேட்டோம்.

``அது ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் இல்லை. பாரதிராஜா, ராம. நாராயணன் மற்றும் எங்களுக்கு எதிராக, போட்டியாக நடத்தப் போகும் உண்ணாவிரதப் போராட்டம். ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வு உள்ளவர்கள் அவர்கள் என்றால், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாரதிராஜா பேரணி, கண்டனப் பொதுகூட்டம் என்று அறிவித்ததற்கு முன்பே அறிவித்திருக்க வேண்டியதுதானே! எந்த நடிகருக்கும் ராமேஸ்வரத்துக்கு வர இஷ்டமில்லை. அதைக் காரணமாக வைத்து, `கோடி கோடியாகச் சம்பாதிக்க மட்டும் நடிகர்களுக்கு உலகத் தமிழர்கள் வேண்டும். ஈழத் தமிழர்கள் வேண்டும். ஆனால், அவர்களுக்காகக் குரல் கொடுக்க மட்டும் நடிகர்கள் வரமாட்டார்கள்' என்று எங்கள் தரப்பில் நடிகர்களுக்கு எதிரான கருத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் விதைத்து விடுவோமோ? என்று அஞ்சித்தான் நவம்பர் ஒன்றாம் தேதி ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கத் தயாராகி வருகிறார்கள் நடிகர்கள்.

அவர்கள் நடத்தப் போகும் அந்த உண்ணா நோன்பில் உண்மையில்லை. ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் உணர்வும் இல்லை. அப்படி அவர்களுக்கு உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் நடிகர்கள் சங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? நாங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்திய இதே ராமேஸ்வரத்தில் அவர்களும் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்க வேண்டும். அது எங்களுக்குப் போட்டியான போராட்டமாக இருந்தால்கூட, மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்போம். நடிகர்கள் வடிவேலுவுக்கும், ஜீவாவுக்கும் இருந்த உண்மையான உணர்வில் ஒரு பங்குகூட, கோடி கோடியாகச் சம்பாதிக்கும் எந்த நடிகர்கருக்கும் இல்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு'' என்று தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் கொட்டித்தீர்த்தார்கள், அந்த டெக்னீஷியன்கள்.

மொத்தத்தில் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களுக்காகவும், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ராமேஸ்வரத்தில் பேசிய அத்தனை திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களுக்கு எதிராகவும் கொதித்துவிட்டுத்தான் சென்னை திரும்பினார்கள்.

இந்நிலையில், நவம்பர் முதல் தேதி நடிகர்கள் சென்னையில் நடத்தப்போகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொள்வார்களா? அல்லது தார்மீக ஆதரவு என்று அறிக்கை மட்டும் விட்டுவிட்டு விலகி நிற்பார்களா? என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி.

ஸீ வல்லம் மகேசு

படங்கள் : ச. லோகேஷ்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-26/pg2.php

Edited by pepsi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நடிகர்களுக்கு நடிக்கமட்டும் தான் தெரியும் சிலபேருக்கு அதுகூடத்தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை மருமகன் என்ன செய்து கொண்டிருந்தாராம்?

நவ 1ம் திகதியின் பின்னர் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை சிங்களவன் வாசிச்சால் எங்கடை சனத்தின்ரை தலையிலை போடுற குண்டை ஒண்டுக்கு பதிலாய் இரண்டு குண்டை சந்தோசமாய் போடுவான்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மருமகன் என்ன செய்து கொண்டிருந்தாராம்?

நவ 1ம் திகதியின் பின்னர் பார்க்கலாம்.

போக்கிரிப்பய அடுத்ததா பண்ணப்போற படத்து சூட்டிங்கை எப்பிடி நடத்தலாமென யோசிக்கிறார். :rolleyes:

மக்களே நடிகர்கள் நடத்தப்போகும் உண்ணாவிரதத்தில் நடக்கப்போவது என்ன?

எல்லாரும் முகத்தை மறைக்கிறமாதிரி ஒரு சன்கிளாஸோட ஸ்டைலா மேடையில போஸ் குடுப்பினம்.

நடிகர் சங்கத் தலைவர் (சரத்குமார்) பட்டும் படாமல் ஒரு பேச்சு. பிறகு சர் சர் என்று காரில ஏறி ஓடிடுவினம்.

தீபாவளி ரிலீஸ் இருக்கெல்லோ..

அவர்களுக்கு என்ன தலைவிதியா.. ஏசி அறையில் இருந்தவர்களை வெயில்ல ஊர்வலம் வா என்றா வரதுக்கு. நீங்க இவ்வளவு மணித்தியாலத்துக்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிச்சிருந்தா ஒருத்தர் விடாம வந்திருப்பினம் தானே? அதை விட்டுட்டு வரேல்லை வரேல்லை என்றா எப்படி?

ஊர்வலத்துக்கு போன நடிகர்கள் ஜீவா, வடிவேல், கருணாஸ் ஆகியோருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்தில பார்த்தீபனும் இருந்தவர்..

ஈழத்தமிழர் போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் சத்யராஜையும் காணாதது ஆச்சரியம் தான். அவர் ஊரில் இல்லையோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஜகா வாங்கிய நடிகர்கள், சுனாமியாய்ச் சீறிய இயக்குநர்கள் - ராமேஸ்வரக் கொதிப்பு -குமுதம் ரிப்போட்டர்

pg2mu6.jpg

அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது.

pg2abd5.jpg

கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த - இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்கு எதிராகப் பொங்கி எழவும், காறி உமிழவும் தவறவில்லை.

pg2bzb6.jpg

சென்னையிலிருந்து கடந்த 18-ம் தேதி மாலை சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்துக்கு பாரதிராஜா புறப்பட்டபோது கூட, சில முன்னணி நடிகர்கள் நிச்சயமாக ராமேஸ்வரம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அவருக்குத் தரப்பட்டதாம்.

pg2chb1.jpg

மறுநாள் மதியம் ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு பாரதிராஜா வந்தபோது, வடிவேலு, ஜீவா தவிர வேறு எந்த நடிகரும் வரவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும், ``இப்படி நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டாங்களேய்யா. இன்னிக்கு நம்மை வாழ வெச்சுக்கிட்டு இருக்குறது தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தானேய்யா. அந்த நன்றிக்காவது சில பேர் வந்திருக்கலாமேய்யா. கொஞ்சம் கூட உணர்வு இல்லையேய்யா அவங்ககிட்டே. அவங்களை நம்பி பெருசா ஏற்பாடெல்லாம் பண்ணி வெச்சிருக்கு. இப்படி ஏமாத்திட்டாங்களேய்யா'' என்று ராம.நாராயணனிடம் கடுகடுத்தாராம் பாரதிராஜா.

பாரதிராஜாவின் கோபமும் உணர்வும் சேரன், அமீர், சீமான் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுக்கும் தொற்றிக் கொள்ள, தமிழ் முன்னணி நடிகர்களுக்கு எதிராக மேடையிலேயே அவர்கள் சாட்டையைச் சுழற்றினார்கள்.

pg2dft1.jpg

இயக்குநர் செல்வமணி பலபடி மேலேறி முன்னணி நடிகர்களைக் காறி உமிழ்ந்தார். ``எங்கிட்டே ஒரு நடிகன், `நான் ராமேஸ்வரத்துக்கு வந்தா அங்கே `ஆய்' போக முடியாது. அதுக்கான வசதி அங்கே இல்லே'ன்னு சொல்றான். இன்னொருத்தன், `ராமேஸ்வரத்துக்கு வந்தா உயிருக்குப் பாதுகாப்பு இல்லே'னு சொல்றான். ஏண்டா இங்கே வாழறவனெல்லாம் கொலைகாரனா? அருவா, வேல் கம்போடதான் சுத்திக்கிட்டு இருக்கானுங்களா? அவனுங்க பாஷையிலேயே சொல்றேன். பன்றிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். நாங்க எல்லாருமே சிங்கம்டா!'' என்று பொறி கலங்கும் அளவுக்கு யாருக்கோ வெடி வைத்துப் பேசினார் இயக்குநர் செல்வமணி.

பக்குவமாய்ப் பேசும் பாரதிராஜா கூட, அன்றைக்கு மேடையில் நடிகர்களுக்கு எதிராக கடுகடுத்த முகத்துடன் பாய்ச்சலைக் காட்டினார். அந்த அளவுக்கு பேசிய அத்தனை பேருமே, நடிகர்களை ஈழத் தமிழர்களின் துரோகிகளாகவும், நம்பிக்கை மோசடிக்காரர்களாகவும் சித்திரித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள்.

இவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாகப் பாய என்ன காரணம் என்பதை அறியும் நோக்கத்துடன் போராட்டத்திற்கு வந்திருந்த சினிமா டெக்னீஷியன்கள் சிலரிடம் பேசினோம்.

``பாரதிராஜா எவ்வளவு பெரிய இயக்குநர். அவர் ஆளாக்கிவிட்ட நடிகர்களெல்லாம் இன்றைக்கு அவருக்கு எதிரா இருக்கானுங்க. பாரதிராஜா ராமேஸ்வரத்துல பேரணி, பொதுக்கூட்டம்னு அறிவிச்சதுமே, `அந்த ஆளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சா'ன்னு கேட்ட நடிகர்கள்தான் அதிகம். இந்தப் பேரணி, பொதுக்கூட்ட அறிவிப்புக்குப் பின்னால அரசியல் இருக்கு. ராம. நாராயணன்தான் பின்னணியில இருந்து தி.மு.க.வுக்கு ஆதரவா திரையுலகினரை ஒண்ணு சேர்க்கறாரு. பாரதிராஜாவை பின்னால் இருந்து இயக்குவதே ராம. நாராயணன்தான்னு நடிகர்கள் பலரும் என் காது படவே பேசுறாங்க. ஆயிரம்தான் அரசியல் இருந்துட்டுப் போகட்டுமே, எடுத்திருக்கிற நோக்கம் எதுக்காகன்னு அந்த ஹீரோக்கள் யோசிச்சுப் பார்க்க வேணாமா? இலங்கையில ஈழத் தமிழர்களை சுட்டுப் பொசுக்கிட்டு இருக்காங்க. இதை யாரும் வாய் வார்த்தையா சொல்லலை. அங்கே நடக்கிற கொடுமைகளை சி.டி.யா போட்டு நடிகர்கள் கையில கொடுத்து, இதைப் போட்டுப் பார்த்துட்டு வாங்கன்னுதான் பாரதிராஜா சொல்லியிருக்காரு. அதைப் போட்டுப் பார்த்துட்டாவது ஹீரோக்கள் ராமேஸ்வரம் வந்துருக்கணுமா இல்லையா? `வர்றோம்... வர்றோம்'னு சொல்லிட்டு கடைசில கழுத்தை அறுத்துட்டாங்க. அந்த சி.டி.யைப் போட்டுப் பார்த்துட்டு கதறிக்கிட்டு ராமேஸ்வரத்துக்கு ஓடி வந்த பிரபல நடிகர்கள் இரண்டே பேருதாங்க. ஒருத்தர் வடிவேலு. இன்னொருத்தர் ஜீவா. இத்தனைக்கும் ஜீவா தமிழன் கிடையாது. அந்தப் பையனுக்கு இருக்கிற உணர்வுகூட மற்ற முன்னணி தமிழ் நடிகர்களுக்கோ, நடிகைகளுக்கோ இல்லாம போனது ரொம்ப ரொம்பக் கொடுமை சார்'' என்று ஒரே மூச்சில் வெடித்து வெதும்பினார்கள், அந்த டெக்னீஷியன்கள்.

`நடிகர், நடிகைகளை இப்படி ஒரேயடியாக கரித்துக் கொட்டுவது நியாயமில்லையே. அவர்களும்தான் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் வைத்திருக்கிறார்களே?' என்று அவர்களிடம் கேட்டோம்.

``அது ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் இல்லை. பாரதிராஜா, ராம. நாராயணன் மற்றும் எங்களுக்கு எதிராக, போட்டியாக நடத்தப் போகும் உண்ணாவிரதப் போராட்டம். ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வு உள்ளவர்கள் அவர்கள் என்றால், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாரதிராஜா பேரணி, கண்டனப் பொதுகூட்டம் என்று அறிவித்ததற்கு முன்பே அறிவித்திருக்க வேண்டியதுதானே! எந்த நடிகருக்கும் ராமேஸ்வரத்துக்கு வர இஷ்டமில்லை. அதைக் காரணமாக வைத்து, `கோடி கோடியாகச் சம்பாதிக்க மட்டும் நடிகர்களுக்கு உலகத் தமிழர்கள் வேண்டும். ஈழத் தமிழர்கள் வேண்டும். ஆனால், அவர்களுக்காகக் குரல் கொடுக்க மட்டும் நடிகர்கள் வரமாட்டார்கள்' என்று எங்கள் தரப்பில் நடிகர்களுக்கு எதிரான கருத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் விதைத்து விடுவோமோ? என்று அஞ்சித்தான் நவம்பர் ஒன்றாம் தேதி ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கத் தயாராகி வருகிறார்கள் நடிகர்கள்.

அவர்கள் நடத்தப் போகும் அந்த உண்ணா நோன்பில் உண்மையில்லை. ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் உணர்வும் இல்லை. அப்படி அவர்களுக்கு உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் நடிகர்கள் சங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? நாங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்திய இதே ராமேஸ்வரத்தில் அவர்களும் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்க வேண்டும். அது எங்களுக்குப் போட்டியான போராட்டமாக இருந்தால்கூட, மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்போம். நடிகர்கள் வடிவேலுவுக்கும், ஜீவாவுக்கும் இருந்த உண்மையான உணர்வில் ஒரு பங்குகூட, கோடி கோடியாகச் சம்பாதிக்கும் எந்த நடிகர்கருக்கும் இல்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு'' என்று தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் கொட்டித்தீர்த்தார்கள், அந்த டெக்னீஷியன்கள்.

மொத்தத்தில் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களுக்காகவும், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ராமேஸ்வரத்தில் பேசிய அத்தனை திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களுக்கு எதிராகவும் கொதித்துவிட்டுத்தான் சென்னை திரும்பினார்கள்.

இந்நிலையில், நவம்பர் முதல் தேதி நடிகர்கள் சென்னையில் நடத்தப்போகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொள்வார்களா? அல்லது தார்மீக ஆதரவு என்று அறிக்கை மட்டும் விட்டுவிட்டு விலகி நிற்பார்களா? என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி.

ஸீ வல்லம் மகேசு

படங்கள் : ச. லோகேஷ்

சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, குஷ்புவின் கணவர் சுந்தர். சி, சங்கர், மணிரத்னம் போன்றவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை. இவர்களின் படங்களை உலகெங்கும் நாம் ஏன் பகிஷ்கரிக்க கூடாது என்பதை இவர்கள் விளக்குவார்களா?

தேவையேற்பட்டால் இவர்களின் படங்களின் சர்வதேச உரிமங்களை மொத்தமாக வாங்கும் ஐங்கரன் போன்ற நிறுவனங்களின் வெளியீடுகளையும் நாம் பகிஷ்கரிக்க தொடங்க வேண்டும்.

அத்தோடு ஈழத்தை பிறப்பிடமாக கொண்ட பாலு மகேந்திரா எங்கே போய் ஒளிந்து கொண்டார் என்பதையும் யாராவது அறியத்தர முடியுமா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, குஷ்புவின் கணவர் சுந்தர். சி, சங்கர், மணிரத்னம் போன்றவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் தமிழர்கள் இல்லையே

இவர்கள் தமிழர்கள் இல்லையே

இவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற விவாதம் இனவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் எம்மை இழுத்துவிடும்.

நாம் பேசுவது இனவாதமும் அல்ல. அது நமக்கு ஏற்புடையதும் அல்ல.

அத்தோடு தமிழ் இயக்குநர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் அல்ல!

(ஈழத்தில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கோ சிங்களவர்களுக்கோ நாளை ஒரு அநீதி இழைக்கப்படுமானால், இன்று இருக்கும் இதே வேகத்துடனேயே நாளை நான் அப்படியான ஒரு அநீதியை எதிர்ப்பேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்)

ஒரு இனம் அரச பயங்கரவாதத்தால் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் எங்கும் பறந்து திரிந்து அதே தமிழர்களின் விருந்தோம்பலை ருசித்துக்

கொண்டு, அவனுடன் வியாபாரம் என்றும் வேடிக்கை விநோதம் என்றும் வித்தைகள் காட்டி தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி கொள்ளும் இவர்கள்,

எங்கள் தமிழ் உறவுகள் ஈழத்தில் தன் சொந்த நாட்டிலேயே சிங்கள பயங்கரவாதத்தால் தினமும் இரத்தச் சகதியில் செத்து விழுவதை பார்த்த பின்னும்

ஒரு குரல் கொடுக்க தயங்கினால், இவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதற்கு மட்டும் அல்ல, மனிதர்கள் என்று அழைக்கப்படுவதற்கே தகுதி அற்றவர்கள்.

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அதற்கு விலை ஈழத்தமிழர்களின் விடுதலையும் உயிர்களும் உடமைகளும் அல்ல என்பதை இந்த கனவான்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லை! 100 வருடங்களை கூட இன்னும் தொட்டுவிடாத இந்திய தேசியத்திற்காக தமிழனின் 5000 வருடத்திற்கு மேற்பட்ட மொழியும் கலையும் பண்பாடும் அழிவது தான் நியாயம் என்று இந்த கனவான்கள் நினைப்பார்கள் என்றால், இவர்கள் அதே தமிழனிடம் சினிமா என்னும் பெயரில் வியாபாரம் செய்து தங்கள் பாக்கெட்டுக்களை நிரப்ப கூடாது. பேசாமல் இந்தி படங்களை மட்டும் எடுக்கட்டுமே. தொல்லை விட்டது!!!

கழுத்தை அறுக்க கத்தியுடன் வருபவனையும், சகோதரியை மானபங்கம் செய்பவனையும் கன்னத்தில் முத்தமிட்டால், அவன் ஒன்றில் பைத்தியமாக இருக்க வேண்டும்! அல்லது தாயையும் விற்றுப்பிழைக்க தயங்காத தரங்கெட்டவனாக இருக்கவேண்டும்

இதை மணிரத்னம், சங்கர் போன்ற இயக்குநர் பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் துயரத்தை புரிந்து கொள்ள முடியாதவன் கலைஞனாய் இருக்கத் தகுதி அற்றவன்!

அவன் வெறும் பணம் தின்னி பிசாசு!!

அவ்வளவு தான்!!!

Edited by vettri-vel

தேவையேற்பட்டால் இவர்களின் படங்களின் சர்வதேச உரிமங்களை மொத்தமாக வாங்கும் ஐங்கரன் போன்ற நிறுவனங்களின் வெளியீடுகளையும் நாம் பகிஷ்கரிக்க தொடங்க வேண்டும்.

நம்மவர்களாவது பகிஷ்கரிப்பது???

இலங்கை கிரிக்கட் அணிக்கு வக்காலத்து வாங்கி, கிரிக்கட் வேறு அரசியல் வேறு எண்டு தத்துவம் கதைப்பவர்கள்

பாதுகாப்பு அமைச்சின் செய்தியை காட்டி , நடுநிலைவாதி ஏண்டு தம்பட்டம் அடிப்பவர்கள்

இதுக்கும் எதாவது சொல்லுவார்கள்

சூடு சொரணை இல்லாதவர்கள்

உண்மை...

மான ரோசம் மனுசனுக்கு ரொம்ப அவசியம்..

ஈழத்தமிழர் போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் சத்யராஜையும் காணாதது ஆச்சரியம் தான். அவர் ஊரில் இல்லையோ என்னவோ?

ம்ம் நானும் இதையே நினைத்தேன்..

சத்யராஜ் எப்படி வராமல் போனார்..

இதில் கலந்து கொள்ள தமிழனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை மனிதனாக இருந்தாலே போதும்...

கே.டி.குஞ்சுமோன் மலையாளி அவரே கலந்து கொண்டார் நடிகர் ஜீவாவும் தமிழரல்லர் ...அவரும் அங்கே பங்கெடுத்தார்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழின விரோதிகள் மட்டுமல்ல தமிழனின் அவலத்தைப்பற்றி கவலையில்லாதவர்களின் கஜானா நிரம்ப ....

நாம் ஏன் உதவ வேண்டும் என்று சிந்திக்கவும்!!!

ஐயோ பாவம் பல்லவன் மாமாவும் மனஸ்தாபத்தில இருக்கிறார் போல. பல்லவன் மாமா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ... ? புதினம், தமிழ்நெட் செய்திகள மட்டும் நம்புறவர்கள் கூட நீங்கள் கேட்ட இந்த விசயத்துக்கு ஆதரவு தரமாட்டீனம். நீங்கள் பாவம் என்னமோ எல்லாம் சொல்லி... வேற எதையோ எல்லாம் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறீங்கள். வாசகன் அவர்கள் முன்பு ஒருமுறை அருமையாக பதில் அளிச்சு இருந்தார் நீங்கள் இப்ப கேட்கிற விசயம் பற்றி. உந்த விசயங்கள் எல்லாம் நாங்களும் ஒரு காலத்தில ஆராய்ச்சி செய்தி களைச்சுப்போனது தான் பாருங்கோ. எல்லாம் கதைக்கிறதுக்கு நன்னாத்தான் இருக்கும்.

அன்பு நண்பர்களே நண்பிகளே

நான் சிவாஜி படத்தை புறக்கணிக்கப் போவதில்லை ஏனென்றால் நான் விருப்பி படங்கள் பாத்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போதும் கூட மனிசி சண்டை பிடிக்கிறாள் இணையத்தில் படம் அல்லது சண் ரீவி பாக்க போறாளாம்.நானும் கெஞ்சிக் கூத்தாடித்தான் யாழ் பார்க்க முடியுது. என்ன செய்யிறது நமக்கு நேரக்குறைவு.

:Pசரி விடுங்க... நானும் பாக்கிறன் இலங்கை அரசு மாதிரி நாங்களும் பெரும் எடுப்போடுதான் எதையும் ஆரம்பிக்கிறது. (நாங்கள் என்று நான் குறிப்பிடுவது யாழ்கள நண்பர்களை மட்டும்). ஆனால் முடிவு?????? :P

:o யாழ்களம் முதலில் தனது சினிமாவுக்கான பகுதியை மூடுமா? சினிமா நடிகர் நடிகைகளின் முகத்தையோ அல்லது பெயரையோ தமது முகமூடிகளாக கொண்ட பல நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களின் கருத்தென்ன??? :rolleyes:

முதலில் வீட்டை சுத்தப்படுத்தனும்(யாழ்களம் உங்கள் வீடானால்) அப்பு அப்புறம் ஊரை சுத்தப்படுத்தலாம்.

வீட்டுக்குள்ள ஓணாணை வைச்சிட்டு வெளியிள தேட கூடாது பாருங்க அதுதான் நான் சொல்லுறது.

அன்புடன்

வாசகன்

ம்ம் நானும் இதையே நினைத்தேன்..

சத்யராஜ் எப்படி வராமல் போனார்..

ம்ம்! யாழில் நீங்கள் எழுதியுள்ள சமையல் குறிப்புகளில் ஏதாவது ஒன்றை முயற்சித்து பார்த்து

சத்யராஜ் ஏதும் விபரீதத்தில் மாட்டிக்கொண்டாரோ என்னவோ! :rolleyes::o:o

Edited by vettri-vel

அப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீங்கள்? ஆதரவு தானாக வராத ஆக்கள் எல்லாருக்கும் துரோகி பட்டம் குடுக்கலாமா? இல்லாட்டிக்கு உங்கட நாயுன்ட இடுப்பில தற்கொலை தாக்குதல் செய்யுறதுக்கு குண்டு ஒண்டக்கட்டி கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பமா? வெளிநாட்டில இருக்கிற 90% தமிழரவிட விட நீங்கள் கொஞ்சம் விசேசமானவர் எண்டு சொல்லுறீங்களா? யாழ் நிருவாகத்துக்கும் கூட அப்ப நீங்கள் சொல்லுற விசயம் இல்லப்போல இருக்கிது. யாழில சிலர் தங்களை தேசியவாதிகள் எண்டு காட்டிக்கொண்டு மற்றவனுக்கு மடையன் பட்டம் கட்டினால் உறைக்காமல் வேற என்ன செய்யும்?

சிலர் எப்பவுமே துரோகி முத்திரை இடுப்பில கட்டிக்கொண்டு திரியிறாங்கப்பா.

ஒருநாளைக்கு ஒருவருக்காவது குத்துறதுதான் அவங்கட தமிழ் தேசிய கடமை.

எதிரிக்குதான் வேலை மிச்சம்.

சங்கர் ஐயாவின் எந்திரன் மணிரத்தினம் ஐயான்ர அசோகவனம்.. விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் அபிமான..... இணையத்தளங்களில். ஏதோ என்னால முடிஞ்சது.. :rolleyes:

சிலர் எப்பவுமே துரோகி முத்திரை இடுப்பில கட்டிக்கொண்டு திரியிறாங்கப்பா.

ஒருநாளைக்கு ஒருவருக்காவது குத்துறதுதான் அவங்கட தமிழ் தேசிய கடமை.

எதிரிக்குதான் வேலை மிச்சம்.

இப்படி எல்லாம் நீங்கள் எழுதக் கூடாது.. பிறகு புத்திசீவிகளுக்கு கோவம் வந்திரும்.

சரி நான் ஏகன் பாட்டு கேட்க போறன் வரட்டா.. :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீங்கள்? ஆதரவு தானாக வராத ஆக்கள் எல்லாருக்கும் துரோகி பட்டம் குடுக்கலாமா? இல்லாட்டிக்கு உங்கட நாயுன்ட இடுப்பில தற்கொலை தாக்குதல் செய்யுறதுக்கு குண்டு ஒண்டக்கட்டி கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பமா? வெளிநாட்டில இருக்கிற 90% தமிழரவிட விட நீங்கள் கொஞ்சம் விசேசமானவர் எண்டு சொல்லுறீங்களா? யாழ் நிருவாகத்துக்கும் கூட அப்ப நீங்கள் சொல்லுற விசயம் இல்லப்போல இருக்கிது. யாழில சிலர் தங்களை தேசியவாதிகள் எண்டு காட்டிக்கொண்டு மற்றவனுக்கு மடையன் பட்டம் கட்டினால் உறைக்காமல் வேற என்ன செய்யும்?

முரளி!

புதினம், பதிவு, புலிகளின் உத்தியோகபூர்வமான செய்திகளை எல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளால் துளைத் தெடுக்கின்றீர்கள் சிங்கள ஊடகங்களின் நம்பகத்தன்மையில் கொண்ட அதீத பாதிப்பால் உங்களை இந்த நிலமைக்கு இட்டுச்சென்றிருக்கின்றது என்று நினைக்கின்றேன். மடிக்குள் இருக்கும் கனத்தை யார் அறிவார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோத்துக்கு தாயையே விற்பவனுக்கு இனமானம், தமிழ் உணர்வு என்பவை செல்லாக்காசுகள் சிங்கள அரசின் பணச் செல்வாக்கு இந்த வகையானவர்களை அள்ளி எடுத்து புலிஎதிர்ப்பு செயற்பாடுகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றது.

இவர்களுக்கு யாழ்கள உலா என்பது மிகக் கடினமாக இருக்க வேண்டியதல்ல.

அந்தந்த இடம் அறிந்து அதற்க்கு ஏற்ப்புடையதாக காரியங்களில் இறங்க முடியாதவர்களும் அல்ல இவர்கள்.

அதை விட்டு நான் தான் புலிஎதிர்ப்பாளன் என்று வீரம் பேசுவான் எவனாவது என்று யாரும் நினைக்கவும் மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீங்கள்? ஆதரவு தானாக வராத ஆக்கள் எல்லாருக்கும் துரோகி பட்டம் குடுக்கலாமா? இல்லாட்டிக்கு உங்கட நாயுன்ட இடுப்பில தற்கொலை தாக்குதல் செய்யுறதுக்கு குண்டு ஒண்டக்கட்டி கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பமா? வெளிநாட்டில இருக்கிற 90% தமிழரவிட விட நீங்கள் கொஞ்சம் விசேசமானவர் எண்டு சொல்லுறீங்களா? யாழ் நிருவாகத்துக்கும் கூட அப்ப நீங்கள் சொல்லுற விசயம் இல்லப்போல இருக்கிது. யாழில சிலர் தங்களை தேசியவாதிகள் எண்டு காட்டிக்கொண்டு மற்றவனுக்கு மடையன் பட்டம் கட்டினால் உறைக்காமல் வேற என்ன செய்யும்?

உங்கள் சமீப காலக் கருத்துக்கள் எங்கனும்.. "தற்கொலைத் தாக்குதல்" என்பதை ஒருவகையில் பரிகசிப்பது போன்று அமைகிறது. இந்தப் போக்கு மேற்குலக குடியவான்களிடமும் இருக்கிறது.

செப் 11 அமெரிக்கா மீதான தாக்குதலை.. அடுத்து தற்கொலைத் தாக்குதல் என்பது மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு அவர்களின் உலகலாவிய இராணுவ.. சன நாய் அக.. கொள்கை விரிவாக்கத்துக்கு தடையாக இருக்கின்ற வகையில்.. பயங்கரவாதமாகத் தெரியலாம்.

ஆனால்.. ஆறாய் ஓடிக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களின் குருதி.. 1987 ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை வடமராட்சி தாண்டி.. யாழ்ப்பாணம் வரை நீண்டிருப்பின்.. அன்று பெரும் சமுத்திரமாகி இருக்கும். நீங்கள்.. இன்று இங்கு கருத்தெழுதவும்.. கனடாவில் அசைலப் பிச்சைவாங்கி.. கனடியத் தமிழன் என்று அடுத்தவன்ர கனடாக் காற்சட்டையை அணிந்து கொண்டு மேற்குலக நாகரிகம் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்திராது.

அன்று மில்லர் அண்ணா தன்னை ஆகுதி ஆக்கியிராவிட்டால்.. அதன் பின்னரான இந்திய நகர்வுகள் என்று நிகழ்ந்திராவிட்டால்... லலித் அத்துலத்முதலி தலைமையிலான சிங்கள பேரினவாத கூலிப்படை பாகிஸ்தானிய மற்றும் இஸ்ரேலிய மொசாட் வழிநடத்தலில் செய்த வடமராட்சிப் படுகொலை.. வலிகாமம்.. தென்மராட்சி என்று நீண்டு.. யாழ் குடா நாடே பேரழிவைச் சந்தித்து நின்றிருக்கும்.

அதேபோல்.. இன்று.. வவுனியாவில் கரும்புலிகள் போய் இந்திய ரடார்களைத் தாக்கியிராவிட்டால்.. எத்தனையோ உண்மைகள் உறங்கிக் கொண்டிருந்திருக்கும். அவர்கள் யாருக்காகப் போனார்கள்.. எவருக்காக இறந்தார்கள்.. தமக்காகவா இல்லையே. உங்களைப் போன்று "தற்கொலைத் தாக்குதலை" பரிகசிக்கும்.. ஆட்கள்.. மக்களின் துயரைத் தீர்க்க.. மக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க.. ஏதாவது உருப்படியான வழிமுறையை முன் வைக்கலாமே.

ஈழ மக்களின் குருதியில்.. கனடாவில் போய் சொகுசாக குந்திக் கொண்டு.. மேற்குலக கெடுபிடிகளின் கொள்கை வகுப்புக்கு பிரச்சாரத்தில் மயங்கிக் கிடக்கும்.. உத்தமர்களே.. மனித நேயப் பிதாமகர்களே.. உங்களிடம் ஒரே ஒரு வினவல்.. தற்கொலைத் தாக்குதலும் வேண்டாம்.. ஒரு துப்பாக்கிச் சன்னமும் பாய வேண்டாம்.. எமது பூர்வீக நிலத்தில் எம்மை நாமே ஆளவும் வாழவும் சிங்கள அரசை அனுமதிக்க சொல்லுங்கள். அதன் படைகளை விலகச் சொல்லுங்கள். சொல்பவற்றை செய்து முடியுங்கள். அதன் பின் தற்கொலைக்கு தேவை இருக்கா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்..!!!

Edited by nedukkalapoovan

உங்கள் சமீப காலக் கருத்துக்கள் எங்கனும்.. "தற்கொலைத் தாக்குதல்" என்பதை ஒருவகையில் பரிகசிப்பது போன்று அமைகிறது. இந்தப் போக்கு மேற்குலக குடியவான்களிடமும் இருக்கிறது.

செப் 11 அமெரிக்கா மீதான தாக்குதலை.. அடுத்து தற்கொலைத் தாக்குதல் என்பது மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு அவர்களின் உலகலாவிய இராணுவ.. சன நாய் அக.. கொள்கை விரிவாக்கத்துக்கு தடையாக இருக்கின்ற வகையில்.. பயங்கரவாதமாகத் தெரியலாம்.

ஆனால்.. ஆறாய் ஓடிக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களின் குருதி.. 1987 ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை வடமராட்சி தாண்டி.. யாழ்ப்பாணம் வரை நீண்டிருப்பின்.. அன்று பெரும் சமுத்திரமாகி இருக்கும். நீங்கள்.. இன்று இங்கு கருத்தெழுதவும்.. கனடாவில் அசைலப் பிச்சைவாங்கி.. கனடியத் தமிழன் என்று அடுத்தவன்ர கனடாக் காற்சட்டையை அணிந்து கொண்டு மேற்குலக நாகரிகம் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்திராது.

அன்று மில்லர் அண்ணா தன்னை ஆகுதி ஆக்கியிராவிட்டால்.. அதன் பின்னரான இந்திய நகர்வுகள் என்று நிகழ்ந்திராவிட்டால்... லலித் அத்துலத்முதலி தலைமையிலான சிங்கள பேரினவாத கூலிப்படை பாகிஸ்தானிய மற்றும் இஸ்ரேலிய மொசாட் வழிநடத்தலில் செய்த வடமராட்சிப் படுகொலை.. வலிகாமம்.. தென்மராட்சி என்று நீண்டு.. யாழ் குடா நாடே பேரழிவைச் சந்தித்து நின்றிருக்கும்.

அதேபோல்.. இன்று.. வவுனியாவில் கரும்புலிகள் போய் இந்திய ரடார்களைத் தாக்கியிராவிட்டால்.. எத்தனையோ உண்மைகள் உறங்கிக் கொண்டிருந்திருக்கும். அவர்கள் யாருக்காகப் போனார்கள்.. எவருக்காக இறந்தார்கள்.. தமக்காகவா இல்லையோ. உங்களைப் போன்று "தற்கொலைத் தாக்குதலை" பரிகசிக்கும்.. ஆட்கள்.. மக்களின் துயரைத் தீர்க்க.. மக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க.. ஏதாவது உருப்படியான வழிமுறையை முன் வைக்கலாமே.

ஈழ மக்களின் குருதியில்.. கனடாவில் போய் சொகுசாக குந்திக் கொண்டு.. மேற்குலக கெடுபிடிகளின் கொள்கை வகுப்புக்கு பிரச்சாரத்தில் மயங்கிக் கிடக்கும்.. உத்தமர்களே.. மனித நேயப் பிதாமகர்களே.. உங்களிடம் ஒரே ஒரு வினவல்.. தற்கொலைத் தாக்குதலும் வேண்டாம்.. ஒரு துப்பாக்கிச் சன்னமும் பாய வேண்டாம்.. எமது பூர்வீக நிலத்தில் எம்மை வாழவிட சிங்கள அரசை அனுமதிக்க சொல்லுங்கள். அதன் படைகளை விலகச் சொல்லுங்கள். சொல்பவற்றை செய்து முடியுங்கள். அதன் பின் தற்கொலைக்கு தேவை இருக்கா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்..!!!

நீங்கள் பந்தி பந்தியாக எழுதினாலும் முரளி நாலு வரியில் நடுநிலை கருத்தை எழுதிவிட்டார்................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.