Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிமுகவின் தலைவர் வைகோ தமிழக காவற்துறையினரால் கைது

Featured Replies

மதிமுகவின் தலைவர் வைகோ தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவினைவாதத்தைத் தூண்டியமைக்காக இவர் கைது செ;யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல் விரைவில்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்று ஒரே கைது செய்தியாக உள்ளது .

காலையில் , திருமாவளவன் கைது

இப்போது வைக்கோ கைது :D:blink::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவின் கோரிக்கையை கலைஞா நிறைவேற்றியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பொத்தி பொத்தி வைச்சு.. இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க முடியாது. மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் தெளிவடைகின்ற போது.. அரசியல் நாகரிகமும் மாற வேண்டும். எப்படி அன்று பாரத- இஸ்லாமியர்கள்.. பாகிஸ்தான் ஆகிப் போயினரோ அப்படி இந்திய தேசமும் பல இனக்குழும நாடாக பிரியும். அதற்கு முன்னரே.. மக்களிற்கான அவர்களின் உரிமைகளை இயல்பாக வழங்குதல்.. வன்முறையற்ற பிரிவினையாக அதை முடித்து வைத்து இந்திய உபகண்ட நாடுகளின் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியம் போல. அதில் தமிழ் ஈழமும் உறுப்புரிமை பெற்றிருப்பது கூட்டமைப்புக்கு சிறப்பு.

சோவியத் யூனியன் பிரிந்த போது.. எவரும் அழவில்லை. சன நாய் அகம் கைகொட்டி ஆரவாரித்தது..! ஆனால்.. சன நாய் அகத்திலேயே மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குறைப்படும் போது.. சன நாய் அகம் காப்போர்.. குமுறத்தான் செய்வர்.. அதற்காக.. மக்களின் அரசியல் உரிமை என்பது நாகரிக வளர்ச்சியோடு... மாறாத ஒன்றாக இருக்கும் என்று கனவு காண முடியாது சன நாய் அக வாதிகளே..!

வைகோவின் குரல் இவ்வேளையில் சிறை இடப்படுவது... ஈழத்தமிழருக்குத்தான் பாதிப்பு. :D

Edited by nedukkalapoovan

இக்கைதுகள் தமிழின உணர்வாளர்களை வெருட்டுமா? அல்லது சீண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கண்ணப்பன் மற்றும் பொதுச் செயலாளர் வை.கோ ஆகியோரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் அதற்காக முதல் ஆளாக நான் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலர் வை.கோ நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

"ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் மதிமுக சார்பில் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் பிரிவினைவாதக் கொள்கைகளை முன்னெடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வை.கோ. மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் பெரும் மாற்றம் ஒன்றுக்கு காவற்துறையினரே தூபமிட்டுள்ளதாக எண்ணுகிறேன். :D:D:blink:

  • கருத்துக்கள உறவுகள்

இக்கைதுகள் தமிழின உணர்வாளர்களை வெருட்டுமா? அல்லது சீண்டுமா?

வெருட்டாது.

பிரிவினைவாதம் பேசியவர்களில் வைகோ மட்டும் அடங்கவில்லை. மதிமுக சாராத பலரும் பேசியுள்ளனர்.

இங்கு திமுக நடவடிக்கை எடுத்து.. தன்னை மத்திய அரசுக்கு சார்பாக இனங்காட்ட சட்டத்தைப் பாவிக்கக் கூடிய பலவீனமான ஆள் வைகோவும் அவர் கட்சி சார்ந்தோருமே.

இதில்.. அரசியலும் உண்டு.

ஏலவே அதிமுக வைகோ தொடர்பில் குமுறிவரும் நிலையில்.. கூட்டணிக்கு.. ஆபத்து வந்து கொண்டிருக்கும் நிலையில்.. மதிமுகவை தனிமைப்படுத்தும்.. கலைஞரின்.. இன்னொரு நகர்வும் இதற்குள் அடக்கும்.

நமக்கேன்.. அது. எமது ஈழ ஆதரவுக் குரலொன்று.. சிறையில் அடைபடுகிறதே என்ற வருத்தம் தான் மோலோங்கி நிற்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்படுவது புதிது அல்ல . கலகம் பிறக்கட்டும் அப்போது நியாயம் பிறக்கும் .பின்புலம் பலமாக இருந்தால் சரி .

நல்லது தான்! நாளை நடக்கவிருக்கும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத

வைகோவின் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட இருந்த அவப்பெயரில் இருந்து இது வைகோவை காப்பாற்றும்.

அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத் தேவையான அளவுக்கு அவர் பேசிய கருத்துக்கள் அமையவில்லை என்றே கருதுகிறேன்.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்படுவது புதிது அல்ல . கலகம் பிறக்கட்டும் அப்போது நியாயம் பிறக்கும் .பின்புலம் பலமாக இருந்தால் சரி .
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலையில் செயா அறிக்கை வந்த போதே வைகோ கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக பேசும் வைகோ அதிமுகவுடன் கூட்டணி போட்டதே தவறு. அதுவும் இச்சூழலில் அவர் அங்கே இருப்பது உகந்ததும் அல்ல. எது எப்படியோ செயா இப்பொழுது கைதை பாராட்டி பேசவேண்டும். வைகோ மீண்டும் திமுக அணிக்கு வரவேண்டும். எப்படியும் வெளியே வந்துவிடுவார். பிரபலமாகட்டும் இந்த கைதின் வழியாக. கைது செய்யவில்லை என்றால் கலைஞர் ஆட்சியை அசைத்துப்பார்ப்பார்கள் பார்ப்பனர்கள். அது இந்த கைதின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்த அளவிற்கு போராடுவது கலைஞர் ஆட்சியில் இருப்பதால் தான். உணர்ச்சிவசப்பட்டு கலைஞரை திட்டிவிடாதீர்கள் தோழர்களே :D

எமக்கும் இன்னல்..எம்மை ஆதரிக்கும் உறவுகளுக்கும் இன்னல்..

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் இன்னல்..எம்மை ஆதரிக்கும் உறவுகளுக்கும் இன்னல்..

புரட்சி என்பதே பழகிப் போன இன்பத்தை துறந்து துன்பத்தைத் தாண்டி.. பிறக்கும் ஒரு புதுவித புது இன்பம். அந்தப் புதுவித இன்பத்தை அனுபவிக்க.. துன்பத்தை சுமந்துதான் ஆக வேண்டும்.

ஒரு புதிய குழந்தையை உருவாக்கவே.. மனிதன் இன்பத்துள் கிடந்து.. பின் துன்பத்தில் துடித்து.. பிந்தான் குழந்தையைக் கண்டு இன்புற வேண்டி இருக்கிறது.. :D

மாற்றம் அல்லது புரட்சி என்பது.. இலகுவாக மனிதரின் இயல்பை மாற்றித் தந்திடாது. ஆனால் புதியது பழகிவிட்டால்... பின்னர் அதை மாற்றுவதும் சிரமம்.. அதற்கும் ஒரு புரட்சி தேவை. இன்று ஜன நாய் அகமும்... உலக நாடுகளும் அந்த நிலையில் தான் நிற்கின்றன..! :D

Edited by nedukkalapoovan

பிரிவினைவாத பேச்சு: வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்

வியாழக்கிழமை, அக்டோபர் 23, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

சென்னை: நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல்,

புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.

தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.

வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

விரைவில் கண்ணப்பனும் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். க்யூ பிராஞ்ச் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இலங்கை தூதரகம் மீது கல்வீச்சு:

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்

ம்ம்ம் உண்மை...

ஆயினும் அங்கு துடிப்பதும், போராடுவதும் எங்கள் ரத்தம் :D

வைகோ மீண்டும் திமுக அணிக்கு வரவேண்டும். எப்படியும் வெளியே வந்துவிடுவார். பிரபலமாகட்டும் இந்த கைதின் வழியாக. கைது செய்யவில்லை என்றால் கலைஞர் ஆட்சியை அசைத்துப்பார்ப்பார்கள் . அது இந்த கைதின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்த அளவிற்கு போராடுவது கலைஞர் ஆட்சியில் இருப்பதால் தான். உணர்ச்சிவசப்பட்டு கலைஞரை திட்டிவிடாதீர்கள் தோழர்களே :D

நீங்கள் சொல்வது சரி

(ஆனால் உங்கள் கருத்தில் உள்ள நியாயங்கள், உங்களின் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தை பிரயோகங்களினால் தேவையில்லாமல் அடிபட்டு போவதை உங்களை போன்றவர்கள் உணர்வதில்லை. இன்றைய உலகவழக்கில் உங்களின் சில வார்த்தை பிரயோகங்களே உங்களை பாசிசவாதிகளாக காட்ட எதிராளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விடுகிறது. சிந்தியுங்கள் நண்பரே!

Today we are in an information age and the world has become a global village. It is important to word your opinions in that context or the results will be counter-productive)

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் உண்மை...

ஆயினும் அங்கு துடிப்பதும், போராடுவதும் எங்கள் ரத்தம் :D

நிச்சயமா.. அவர்கள் எங்கள் ரத்தத்திலும் மேலாக.. எங்கள் உயிர் காத்தவர்கள். எங்கள் உயிர் என்றால் மிகையல்ல. வைகோ இந்திய அமைதிப்படையின் கொடுமைகளைக் கூட துணிந்து ஈழத்துக்கு வந்து அதுவும் ரகசியமாக வந்து.. வெளி உலகுக்கும் தமிழக உறவுகளின் பார்வைக்கும் கொண்டு வந்தவர். அதன் பின்னரே.. விபிசிங் போன்ற தலைவர்கள்.. அமைதிப்படை விலகல் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். பிரேமதாச.. அல்லது ஜேவிபி சிங்கள தேசத்தின் நலனுக்காக கொடுத்த அழுத்தத்தை விட வைகோ போன்றவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வே.. அன்று எம்மையெல்லாம் அழிவில் இருந்து காத்தது.

Edited by nedukkalapoovan

வைகோவை அடக்கியதன் மூலம் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் சார்பாக தான் இன்னும் கூடுதலானவற்றைச் செய்வதற்கான கட்டாயத்தேவையை தனக்குத் தானே உருவாக்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் இந்தியா தான் ஜனநாயக நாடு என்பார்கள். ஆனால் வாயைத் திறந்து ஏதாவது கதைத்ததால் உடனே சிறை நிச்சயம். ஆனால் ஐனநாயகம் பற்றிக் கதைக்காத பிற நாடுகள் கூட இந்த அளவு இறுக்கமாக இருந்ததில்லை. ஜெயலலிதா பொடாவில் வைகோவை கைது செய்து துன்புறுத்தியது போக, கலைஞரும் தன் பங்கிற்கு....

பகுத்தறிவு, நீங்கள் அவர் கூட்டணி விட்டு விலத்த வேண்டும் என்று சொன்னதின் அர்த்தம் புரியவில்லை. அதுவும் இச் சந்தர்ப்பத்தில்.... அவ்வாறு விலத்தினால் கைது இடம் பெறாது என்கின்றீர்களா? கூட்டணியில் இருந்ததால் தானா கைது செய்தார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனக்கு இதில் கொஞ்சம் மனவருத்தமுண்டு

அதாவது இன்றைய நிலையில் இவர்கள் இவற்றை தவிர்த்திருக்கலாம் என்பது எனது பணிவான வாதம்

ஆனால் வைகோ போன்றவர்கள் அரசியலிலும் சரித்திரஅறிவிலும் மிகவும் முதிர்ந்தவர்கள்

எனவே எனது கருத்து இவர்களுக்கு பொருந்துமா............???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் இந்தியா தான் ஜனநாயக நாடு என்பார்கள். ஆனால் வாயைத் திறந்து ஏதாவது கதைத்ததால் உடனே சிறை நிச்சயம். ஆனால் ஐனநாயகம் பற்றிக் கதைக்காத பிற நாடுகள் கூட இந்த அளவு இறுக்கமாக இருந்ததில்லை. ஜெயலலிதா பொடாவில் வைகோவை கைது செய்து துன்புறுத்தியது போக, கலைஞரும் தன் பங்கிற்கு....

பகுத்தறிவு, நீங்கள் அவர் கூட்டணி விட்டு விலத்த வேண்டும் என்று சொன்னதின் அர்த்தம் புரியவில்லை. அதுவும் இச் சந்தர்ப்பத்தில்.... அவ்வாறு விலத்தினால் கைது இடம் பெறாது என்கின்றீர்களா? கூட்டணியில் இருந்ததால் தானா கைது செய்தார்கள்??

தூயவன், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கூட்டணியால் வரமுடியாது என வைகோ தெரிவித்திருந்தார். இதே நிலை தான் கலைஞருக்கும். ஆனால் கலைஞர் உறுதியாக மத்திய அரசுக்கு எதிராக நடந்தார். கூட்டணி போய்விடும் என்ற நிலையிலும். ஆனால் இவ்வளவு நாள் ஈழத்தமிழர்களுக்காகவும் புலிகளுக்காகவும் பேசிய வைகோ பாழாய்ப்போன அரசியலில் சிக்குண்டு செயாவுடன் இருக்க முடிவெடுத்தது மடத்தனம். அவர் வீராவேசமாக பேசுவார் ஆனால் அரசியலில் முடிவெடுக்கத் தெரியாதவர். அதனால் தான் பாமாகவை விட கீழே இருக்கிறார். கூட்டணியில் இருந்ததால் கைது செய்யவில்லை. அவரை கைது செய்யச்சொன்னவர்கள் அனைவரும் ஒரே இனம். நம்மினம் இல்லை. ஒருவேளை கலைஞர் கைது செய்யவில்லை எனில் அடுத்த கட்டமாக சூசாமி மூலம் வழக்கு பதிவு செய்து, ஈழப்போராட்டத்திற்கும் வேறு நிலையாகியிருக்கும். இச்சூழ்நிலையில் கலைஞர் செய்தது சரிதான். எப்படியும் வைகோ வெளியே வந்துவிடுவார். கூட்டணியிலிருந்தும் சிறையிலிருந்தும்.

வை.கோ. மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது: வைகோவுக்கு நவம்பர் 6ம் திகதி வரை நீதிமன்றக் காவல்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கண்ணப்பன் மற்றும் பொதுச் செயலாளர் வை.கோ ஆகியோரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் அதற்காக முதல் ஆளாக நான் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலர் வை.கோ நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

"ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் மதிமுக சார்பில் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மாலை கியூ பிரிவு பொலிஸார் திடீரென வைகோவின் சென்னை அண்ணாநகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை பொலிஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வைகோவின் கைதை அடுத்து கண்ணப்பன் கைது செய்யப்படுவார் என அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் பிரிவினைவாதக் கொள்கைகளை முன்னெடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வை.கோ. மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ செயலலிதா கூட இருப்பது மடத்தனமல்ல. இன்று கலைஞர் கைது செய்தது கூட செயலலிதாவின் வாயை முடக்கவே. இப்படிக் கதைப்பவர்களைக் கைது செய்திருப்பேன் என்று செயலலிதா முழக்கம் இட்டபோது செயலலிதா கூட இருந்த வைகோவைக் கைது செய்து, செயலலிதாவின் வாயை முடக்க வைத்துள்ளார் கலைஞர்.

அவர் கலைஞர் கூட இருந்திருந்தால் கலைஞர் ஏன் சங்கடங்களைப் பெற்றிருக்கமாட்டார் என்று நினைக்கவில்லை.

யாரும் என்னவும் சொல்லுஙகள். கடந்த காலங்களில் இருந்த அனுபவங்கள் மூலம் வைகோ அண்ணன் மீது எமக்கு உள்ள மரியாதை தனித்துவமானது. அவர்அரசியல் தெரியாதவர் மட்டுமல்ல, நடிக்கவும் தெரியாதவர். அவர் அவ்வாறன உண்மைத் தன்மையோடு இருப்பதால் தான் பலரும் அவர் கூட விளையாடுகின்றார்கள்.

தன்னைத் தமிழனாக உணர்கின்ற அனைவரும் தமிழர்கள். எனவே அவன் பார்ப்பானியா, தெலுங்கனா என்ற தேடல் அவசியமற்றதே. ஆனால் தமிழனைத் திட்டிக் கொண்டிருப்பவனைத் தமிழன் என்ற பட்டியலில் இணைத்து விட முடியா.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் என்னவும் சொல்லுஙகள். கடந்த காலங்களில் இருந்த அனுபவங்கள் மூலம் வைகோ அண்ணன் மீது எமக்கு உள்ள மரியாதை தனித்துவமானது. அவர்அரசியல் தெரியாதவர் மட்டுமல்ல, நடிக்கவும் தெரியாதவர். அவர் அவ்வாறன உண்மைத் தன்மையோடு இருப்பதால் தான் பலரும் அவர் கூட விளையாடுகின்றார்கள்.

உண்மை. அன்று தொடக்கம் இன்று வரை ஈழதமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உன்னதமான தலைவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.