Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டு கீயூ பிரிவை இயக்குவது யார்?

Featured Replies

தமிழ் நாட்டு கீயூ பிரிவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மத்திய அரசா அல்லது மாநில அரசின் கீழ உள்ளது. தெரிந்தவார்கள் கூறவும்.

உறுதியாக தெரியாவிடினும், அனேகமாக இது மத்திய அரசின் கீழ் தான் வரும் என ஊகிக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பு விடயங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் கீழ் தான் உள்ளது. மாநில காவல் துறையும், மாநில உளவுத்துறையுமே மாநில அரசின் கீழ் வருகின்றன. கியூ பிரிவு தேசிய பாதுகாப்பு விடையங்களை கையாள்வதால் அது மத்திய அரசின் கீழ் வர வாய்ப்புகள் அதிகம். நன்கு தெரிந்தவர்கள் அறிய தாருங்கள்

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து கியூ பிரான்ச் தமிழக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. Central Reserve Police Force (CRPF) மத்திய அரசின்கீழ் இயங்குகிறது.

கீயூ பிரிவானது தமிழ் நாட்டு மாநில அரசின் கீழ் உள்ளது.

கீயூ பிரிவு எனபது ஈழ ஏதிலிகள் புனர் வாழ்வு நிறுவனம்

இதன் பணி அகதிகளக வரும் தமிழ் அகதிகளை விசரணை செய்து சிறைக்கு அல்லது முகாமுக்கு அனுப்புவது.

இது முழுக்க ஈழ போரட்டத்திற்கு ஏதிரானது

உறுதியாக தெரியாவிடினும், அனேகமாக இது மத்திய அரசின் கீழ் தான் வரும் என ஊகிக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பு விடயங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் கீழ் தான் உள்ளது. மாநில காவல் துறையும், மாநில உளவுத்துறையுமே மாநில அரசின் கீழ் வருகின்றன. கியூ பிரிவு தேசிய பாதுகாப்பு விடையங்களை கையாள்வதால் அது மத்திய அரசின் கீழ் வர வாய்ப்புகள் அதிகம். நன்கு தெரிந்தவர்கள் அறிய தாருங்கள்

நீங்கள் சொல்லுவது raw இதுதான் மத்தியரசின் கீழ் இருக்கிறது இதுதான் தேசிய பாதுகாப்பு விடயங்கள் , மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் வகுத்தல் போன்ற விடயங்கள் செய்பவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு கீயூ பிரிவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மத்திய அரசா அல்லது மாநில அரசின் கீழ உள்ளது. தெரிந்தவார்கள் கூறவும்.

உமை அவர்களே இதைத்தெரிந்து என்ன செய்யப்போறியல் சும்மா தான் கேட்கிறேன்

தகவல்களுக்கு நன்றி. சரியாக தெரியாமல் எழுத கூடாது என்று தான் முதலில் நினைத்தேன்... ஆனால் ப்படி எழுதியது எது சரியென்பதை காட்டிற்று.... நன்றிகள்

  • தொடங்கியவர்

உமை அவர்களே இதைத்தெரிந்து என்ன செய்யப்போறியல் சும்மா தான் கேட்கிறேன்

வணக்கம் புஸ்பாவிஜி எல்லாம் ஒரு அறிவுக்குதான். நாளந்தம் எல்லோரும் செய்திகள் வாசிக்கிறார்கள். சிலருக்கு சில விடயங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கும். அப்படித்தான் இதுவும் எனெனில் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்கள் கியூ பிரிவினால்தான் பிடிப்பதாக செய்திகள் வருகிறது.

உங்கள் ஆர்வத்தை பாராட்டகிறேன் உமை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காவல் துறையின் புலன் விசாரணைப்பிரிவான Questioning Branch என்பதின் சுருக்கம் Q பிரிவு,இவர்களுடன் மத்திய புலனாய்வு துறை தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்துவர். அது ஈழ விவகாரம் தொடர்பாக,அகதி முகாம்களில் வசிக்கும் எமது மக்களின் துணையுடன் தேச விரோத காரியங்களில் ஈடுபட, நேரடியாக தொடர்புபடவிடினும் மறை முகமாகத்தொடர்புபடிவினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

ஆனால் தமிழகம் எள் என்றவுடன் எண்னையாய் நிற்பதால் விடயங்கள் இலகுவாக நடத்த படுகின்றன. அனால் மற்ற மாநிலங்கள் அப்படி இல்லை.

உ+ம் குயராத் கிறிஸ்தவ கலவரம் மாநில உளவுத்துறை செயற் பட்டு கட்டு படுத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சு அறிக்கை விட்டும் இன்னும் குயராத் மாநில அரசு செயலில் இறங்க வில்லை இப்போ மத்திய புலனாய்வுதுறை உதவியுடன் பலரை கைது செய்து விசாரனைக்காக சிறையில் அடைத்துள்ளார்கள்.

அதேபோல் பால்தாக்கரே மாநில புலனாய்வுதுறை அவரை பற்றி தகவல் கொடுத்தும் மாநில அரசு இன்று வரை நடவடிக்கை எடுக்க இல்லை.

அனால் தமிழ் நாடு மாத்திரம் விதி விலக்கு.

இன்றைய கலைஞரின் பலத்தின் படி பார்த்தால் வை.கோ, சீமான் கைது எல்லாம் செய்த்துருக்க தேவை இல்லை. மத்திய அரசே இவரின் தயவில் தான் உள்ளது. அப்ப ஏன்டவடிக்கை எல்லாம் உடன் எடுக்கவில்லை என்று ஒருவருமே மிரட்டி கேட்டிருக்க முடியாது.அனால் கலைஞர் அதிகம் வளரவிட்டாலும் பிரச்சனை என்ற முடிவில் தான் கைவைத்தார்

தற்பொழுது தமிழக ஆட்சியும் காங்கிரஸ் தயவில்தான் தங்கியுள்ளது.அதனால் கலைஞரின் கையும் கட்டப்பட்டேயுள்ளது.

தற்போது வைகோ, சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்யாவிடின், பின்பு ஜெயலலிதா ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவரால் இவர்கள் கைது செய்யப்பட்டே ஆவார்கள். ஆனால் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டவர்களை, மீண்டும் அதே காரணத்தைச் சொல்லி கைது செய்ய முடியாது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் வைகோ, நெடுமாறன் போன்றோர் பலவருடங்களின் முன் பேசிய பேச்சுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டவர்கள் என்பதை பலர் மறந்து விட்டீர்கள் போல.

1. ஏற்கனவே கைதாகி, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டவரை மீளவும் மேன்முறையீட்டு செய்து சிறைக்கு அனுப்பவோ, தண்டனையை கூட்டவோ குறைக்கவோ முடியும். நிரபராதி என முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேரினை மீண்டும் வழக்கு தாக்கல் செய்து சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவங்கள் இந்தியாவிலும், உலகெங்கிலும் நடந்துள்ளன/நடந்து வருகின்றன

2. ஜெயாவோ அல்லது கருணாநிதியோ, யார் கைது செய்கின்றனர் என்பதல்ல இங்குள்ள பிரச்சனை. தமிழ் தேசியம் பற்றி எவர் கதைத்தாலோ அல்லது முயற்சி செய்தாலோ அவர்களை சிறைக்கு அனுப்பும் அரசியல் மூறை தான் பிரச்சனை. சீமானோ அல்லது அமீரோ செய்த செயல் கைது செய்யப்படும் அளவிற்கான குற்றமா? அவ்வாறு ஏதேனும் ஒரு சட்டத்தின் மூலம் குற்றம் என வரையறுக்கப்பட்டால், அவ் மனித உரிமைகளிற்கு எதிரான சட்டத்தையே நீக்க முயற்சிகளை ஆளும் தி.மு.க அரசு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கான அரசியல் செல்நெறியோ அல்லது மக்களின் உரிமைகள் மீதான அக்கறையோ எந்த தமிழக பெரிய அரசியல் கட்சிகளுக்கேனும் உண்டா?

நீங்கள் நான் எழுதியதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். குறிப்பிட்டவரை குறிப்பிட்ட ஒரு வழக்கிற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது தண்டனை பெற்றிருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலை பெற்றிருந்தாலோ அவரை திரும்பவும் அதே காரணத்தை வைத்துக் கைது செய்து விசாரிக்க முடியாது. ஆனால் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை வேண்டுமானால் மேன்முறையீடு செய்து திரும்பவும் விசாரணையை நடத்த முடியும். திரும்பவும் விசாரணை நடக்கும் போது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் வராது. சம்பந்தப்பட்டவர் வழக்கு விசாரணையின் போது சமூகம் அளித்தாலே போதும். அதுவும் தொடர்ந்தும் எல்லா விசாரணைகளின் போதும் சமூகம் அழிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மேன்முறையீட்டு விசாரணையில் பாதகமான தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்தும் மேன்முறையீடு செய்ய முடியும்.

தற்போதய சூழ்நிலையில் எமது மக்களின் விடிவிற்காய் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வாய்த்த ஒரு சந்தர்பத்தில் சில விடயங்களை எமக்காக குரல் கொடுத்தோர் தவிர்த்திருக்கலாம். அதுவும் இந்தியாவில் தனித் தமிழ்நாடு மலர்ந்தேயாகும் என்பதெல்லாம் தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ணும் பேச்சுக்கள். இப்படியான பேச்சுக்கள் தான் வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி உடையும் நிலையை உருவாக்குவது.

ஆரம்ப காலத்தில்

கியூ பிரிவினரது பணி

தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று வந்த

தமிழ் ஈழ போராளிகளின் நடமாட்டத்தை கவனிப்பதும்

அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதுமே.

இவர்கள் மாநில அரசின் கீழ் பணியாற்றினாலும்

மத்திய அரசுக்கு தமது அறிக்கைகளை சமர்பித்து வந்தனர்.

மத்திய அரசின் பணிப்பின் பேரில்

மாநில அரசு உருவாக்கிய ஒரு பிரிவினர்.

சந்ததியார் எழுதிய வங்கம் தந்த பாடம் புத்தகத்தில்

இதுகுறித்து எழுதப்பட்டிருந்தது.

வங்க தேசத்தை உருவாக்க பயிற்சி கொடுக்கப்பட்ட

முக்திவாகினி எனும் போராளிகளது

நடமாட்டத்தை இப்படியான ஒரு பிரிவினரே

கண்காணித்து வந்தனர்.

வங்கதேசம் உருவான பின்னர்

இந்தியாவில் பயிற்சி பெற்று வந்த

முக்திவாகினி போராளிகளால் எதிர்காலத்தில்

இந்தியாவுக்கு பிரச்சனை வரலாம் எனும் நிலையை

அறிந்து கொண்ட போது

அனைவரும் இந்தியாவிலே சாகடிக்கப்பட்டனர்.

முக்திவாகினி போராளிகளை கண்காணித்தது போல

தமிழகத்தில் இருந்த ஈழ போராளிகளை கியூ பிரிவினர்

அவதானிக்க உருவாக்கப்பட்டனர்.

கியூ பிரிவினர் செய்யும் ஒரு குளறுபடி அக்காலத்தில் இருந்தது.

அதாவது

இவர்கள் கைதுசெய்யும் சிலரது தகவல்கள்

மாநில அரசுக்கு தெரிவிக்கும்

மத்திய அரசுக்கு தெரிவிக்காது.

சில வேளைகளில்

மத்திய அரசுக்கு தெரிவிக்கும்

மாநில அரசுக்கு தெரிவிக்காது.

இதற்கான காரணம்

சில போராளி அமைப்புகள் மாநில அரசின் தயவிலும்

சில போராளி அமைப்புகள் மத்திய அரசின் தயவிலும்

இருந்து வந்தன.

இதை வேறு வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்?

எது எப்படியானாலும்

இவர்கள் அன்றைய அனைத்து ஈழ போராளிகளது

முகாம்களுக்கும் வீடுகளுக்கும் நேரடியாக சென்று தகவல் திரட்டுவார்கள்.

அல்லது

முன்னால் பெட்டிக்கடை மற்றும் தேனீர் கடை வைத்துக்கொண்டு

நடமாட்டங்களை அவதானிப்பார்கள்.

அனைத்து விடயங்களும் உடனுக்குடன் பரிமாறப்படும்.

இவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது

யாழ்பாண தமிழ்தான்.

அதை புரியாது விழிப்பார்கள் :lol:

நம்மவர் மூன்றெழுத்து என்பார்கள்.

CID என மறைமுகமாக சிக்னல் கொடுப்பார்கள்.

பின்னர்

அவர்களை

மூன்றடா என்பார்கள் :lol:

பின்னர் அதன் பணிகள் விரிவடைந்தன.

அகதியாக வருவோரையும் கண்காணிக்கத் தலைப்பட்டன.

இந்தியாவில் இடம்பெற்ற

கொள்ளைகள் மற்றும் குற்றச்செயல்களை செய்த

பலரைக் கைதுசெய்ய தமிழ்நாட்டு போலீசாருக்கு விபரங்கள் தெரியாத போது

இவர்களே அதை செய்ய முன்வந்தார்கள்.

காரணம் இவர்களிடம் தேவையானவர்களது தகவல்கள் இருந்தமையே.

பின்னர் தொடர்ந்த

குற்றச்செயல்களை தடுக்க நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர்.

Edited by AJeevan

நீங்கள் நான் எழுதியதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். குறிப்பிட்டவரை குறிப்பிட்ட ஒரு வழக்கிற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது தண்டனை பெற்றிருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலை பெற்றிருந்தாலோ அவரை திரும்பவும் அதே காரணத்தை வைத்துக் கைது செய்து விசாரிக்க முடியாது. ஆனால் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை வேண்டுமானால் மேன்முறையீடு செய்து திரும்பவும் விசாரணையை நடத்த முடியும். திரும்பவும் விசாரணை நடக்கும் போது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் வராது. சம்பந்தப்பட்டவர் வழக்கு விசாரணையின் போது சமூகம் அளித்தாலே போதும். அதுவும் தொடர்ந்தும் எல்லா விசாரணைகளின் போதும் சமூகம் அழிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மேன்முறையீட்டு விசாரணையில் பாதகமான தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்தும் மேன்முறையீடு செய்ய முடியும்.

தற்போதய சூழ்நிலையில் எமது மக்களின் விடிவிற்காய் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வாய்த்த ஒரு சந்தர்பத்தில் சில விடயங்களை எமக்காக குரல் கொடுத்தோர் தவிர்த்திருக்கலாம். அதுவும் இந்தியாவில் தனித் தமிழ்நாடு மலர்ந்தேயாகும் என்பதெல்லாம் தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ணும் பேச்சுக்கள். இப்படியான பேச்சுக்கள் தான் வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி உடையும் நிலையை உருவாக்குவது.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி வசம்பு. தவறாகத்தான் புரிந்து கொண்டு விட்டேன்.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி வசம்பு. தவறாகத்தான் புரிந்து கொண்டு விட்டேன்.

உங்கள் புரிந்துணர்விற்கு நன்றிகள்

தமிழ் நாட்டு கீயூ பிரிவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மத்திய அரசா அல்லது மாநில அரசின் கீழ உள்ளது. தெரிந்தவார்கள் கூறவும்.

இந்திய மத்திய அரசின் உளவுத்துறைகள் ஐபி மற்றும் சிபிஐ என்பனவாகும்.ரோ மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய நலன்களுக்கான வெளிநாட்டு உளவுத்துறையாகும். தமிழக அரசின் உளவுத்துறைக்குப் பெயர் சிபிசிஐடி ஆகும். இந்தப் உளவுத்துறையின் சிறப்புப் பிரிவுதான் கியூ பிராஞ் எனப்படுகிறது. 1976 ல் நக்சலைட்டுகள் எனப்படும் இடதுசாரி போராட்ட அமைப்புக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.1983 ப் பின்னர் ஈழப் போராளிகளை கண்காணிக்கும் பொறுப்பு இந்தப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.1990க்குப் பின்னர் இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புக்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் இந்தப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தப் பிரிவு தமிழக காவல்துறை மா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இயங்ககிறது.இந்தப் பரிவினரின் அனைத்து நடவடிக்கைளும் தமிழக அரசின் கீழேயே வருகின்றன. மத்திய அரசோ மத்திய உளவுத்துறையே நேரடியாக இந்தப் பிரிவை இயக்குவதில்லை.

கியூ பிரிவினரது அனைத்து அறிக்கைகளும்

மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்றன.

மாநில அரசு மத்திய அரசின் கீழ்தான் இயங்குகிறது.

ஒரு காலத்தில்

ஒரு சம்பவம் தொடர்பாக

ஒருவரை கியூ பிரிவினர் கைது செய்தனர்.

அவரை விடுவிக்க மக்கள் திலகத்தை நாடினார்கள்.

அவர் தேடியபோது

மாநில ( தமிழ்நாடு) காவல்துறை அப்படி யாரையும் தாம் கைது செய்யவில்லை என்றது.

டில்லி அரசிடம் கைதானவர் குறித்த விபரங்களை தெரியப்படத்திய போது

அவர் கியூ பகுதியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இப்போது புரியும் கியூ பிரிவினர் யார் கையில் இருக்கிறது என்பது.

கைதானவர் வேறு யாருமல்ல.

திலீபன் அவர்களது சகோதரர் வினோத்தான்.

அவர் தற்போது கனடாவில் வாழ்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

INTELLIGENCE :-

The Intelligence Wing comprises Special Branch CID, Q Branch CID, Security Branch CID and Special Division. This looks after collection, collation and dissemination of intelligence apart from providing inputs for security of VIPs. The wing has an Inspector General of Police (Intelligence) and two DIGs. DIG Intelligence-I supervises Special Branch CID and Security Branch CID and DIG Intelligence-II created recently, supervises Q Branch CID and Special Division.

i) SPECIAL BRANCH CID :-

The SB detachment is headed by an Inspector in each district / Commissionerate and the branch, at the state level, is in-charge of collection, collation and dissemination of all information relating to communal tensions, caste related matters apart from law and order issues.

ii) ‘Q’ BRANCH CID :-The ‘Q’ Branch in the Special Branch CID was created in 1971 and was named ‘Q’ Branch in 1976. The State Q Branch CID collects intelligence and information pertaining to extremists, militants and terrorist activities. ’Q’ Branch detachments have been declared as Police Stations with powers to investigate cases pertaining to the activities of the above groups.

iii) SECURITY BRANCH CID :-

The security of the VVIPs / VIPs including foreign Heads of states is looked after by this branch. The Security Branch CID also handles matters relating to activities of foreigners, vital installations, security schemes, and passports and citizenship applications and issues relating to immigration.

The Core Cell in the Security Branch of CID consists of the Close Protection Teams(CPT), Bomb Detection and Disposal Squad (BDDS), Motor Transport Wing, Technical Wing, Dog Squad and Women Contingent.

http://tnpolice.gov.in/Unitint.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாண தமிழ்தான்.

அதை புரியாது விழிப்பார்கள் :rolleyes:

நம்மவர் மூன்றெழுத்து என்பார்கள்.

CID என மறைமுகமாக சிக்னல் கொடுப்பார்கள்.

பின்னர்

அவர்களை

மூன்றடா என்பார்கள் :rolleyes:

அஜீவன் அண்ணா இதை நானும் கேள்விப்பட்டிருக்கேன். இவ்வளவற்றையும் கூறியமைக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

கியூ பிரிவை பற்றிய விடயங்களை தந்த அனைவருக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.