Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது

சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால்

இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள்

http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

Edited by சீலன்

  • Replies 152
  • Views 17.5k
  • Created
  • Last Reply
:lol:அதானே உவை ஒற்றுமை பற்றி பாடினால் போல, நாங்க ஒற்றுமையாய் போயிடுவமா என்ன?? அறிக்கை விட்டு அசத்திடுவோமில்ல :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த பாடலை வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்

ஆனால் புலிகள் தான் இதை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பரப்புரைக்கு இந்த பாடலை

பயன்படுத்தலாம்

அதுவும் ஒரு பிரபல தமிழ் பாடகர் சேர்ந்து பாடுவது மிகவும் வருத்தத்துக்குரியது

இதை புரியாத யாழ் கள அங்கத்தவர்கள் கூறும் பதில்கள் மிகவும் வருத்தத்துக்குரியது

சில நலன்களுக்காக எமது தமிழ் இனத்தை அளிக்க முயலும் இப்படி பட்ட தேச துரோகிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே என் ஆசை

Edited by சீலன்

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

பாடலின் தமிழாக்கம்

ருகுணு - யாழ்

மனோ:

துரை நாங்க இருவரும் சந்திக்கிறம்

வெகு காலத்துக்கு பின்னே

நாடும் ஊரும் மாறிப்போச்சு

புதுமை அய்சே

டெஸ்மன்:

முன்னபோல பார்க்க முடியாது போனாலும்

இந்த வயசிலே

பழைய நட்பு மாறாது ஒரு போதுமே

மனோ:

டெஸ்மன் அன்று யாழ்பாணம் வந்து

பாடினாய் தமிழில் சூடாமாணிக்கே

டெஸ்மன்

அதைக் கேட்டு ஆடினாங்க உங்க ஆட்கள் அப்பப்பா

நினைத்தாலே பரவசமடா மனதுக்குள்ளே...

மனோ:

நம்ம சந்திப்பை

பகிர்ந்து கொள்வோம் மனமகிழ்வோடே

வாயும் வயிறும் நிறைய சாப்பிடணும் - இந்தா

நம்ம தோசை

டெஸ்மன்

எங்க ஆக்கள் திட்டினாலும் பகிரங்கமா மனோ

திருட்டுதனமா முழுங்குறாங்கடா

தோசை வடையெல்லாம்.....

மனோ:

சின்ன வயசில

அம்மா தந்த பால்

அது தமிழா - சிங்களமா என யாருக்கும் புரியல்லடா

என்ன சரியா?

டெஸ்மன்

உன் வாயில போடணும்டா சக்கரை - இருந்தாலும்

டெஸட்டா எடுத்துக்கடா நம்ம தயிர்

டெஸ்மன்

அமைதிப் பேச்சு தொடங்கினாலும் பெரும் வீராப்பாய்

இன்னும் கேட்குதடா அந்த யுத்த சத்தம் பெரு நெருப்பாய்

எப்படா நிற்கும் இந்த விசர் யுத்தம்?

மனோ:

ஐயோ...அவங்க எல்லாம் கயிறுழுக்கிறாங்க வெடி ஓசைக்குள்ளே

விலை வாசி ஏறும்போதுதான் இங்கு தொடங்கும் யுத்தம்

டெஸ்மன்

அடிமையாய் இருந்தாலும்

வெள்ளையனுக்கு கீழே

நாங்க

சந்தோசமாய் இருந்தோம் ஐயா

அந்த சின்ன வயசிலே

யார் யார் குத்தி குதறினாலும்

ஒவ்வொரு தாளத்தில்

சகோதரராக வாழ்வமடா

வாழும் குறுகிய காலத்தில்....

டெஸ்மன் குறித்து

http://en.wikipedia.org/wiki/Desmond_de_Silva

ஆங்கிலம் கலந்த பாடல் ஒன்று

http://www.youtube.com/watch?v=NWpRDW0KqWs...feature=related

Edited by AJeevan

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

எப்படீங்கண்ணா இப்படி?? நீங்களும் உட்காந்து யோசிப்பீங்களோ?? :lol:

எனக்கு உங்க அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியுமுங்கோ!! நீங்கள் இணைத்த இணைப்பில் மற்றவர்கள் எழுதிய கருத்தையும் பார்த்தேனுங்க. அதிலை சில கருத்துக்கள் (உங்களைப் போல் அங்கும் சிலர் இருக்கலாம் தானே) தவிர மற்றவை நல்லபடியாகத் தானே இருக்குதுங்க. அங்கே சில தமிழர்களும் கருத்தெழுதி இருக்காங்க பார்த்தீங்களா??

ஏனுங்கண்ணா இப்ப எனக்கொரு சந்தேகம். அஜீவன் சிங்களப் பாடலை மொழி பெயர்த்து தமிழில் தந்துள்ளார். ஒருவேளை அஜீவனுக்கு டெஸ்மன் வேண்டப்பட்டவராய் இருப்பாரோ?? :lol:

அட ...சீ.... உங்கள் பதிலுகளை பார்த்துப் பார்த்து எனக்கும் உங்களைப் போலவே யோசிக்கத் தோணுது. :):unsure:

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு.

அன்றைக்கு இந்தியாவை

எப்படியெல்லாம் வசை பாடினார்கள்?

இன்று நிலை.............?

அதுபோல

மாற்றங்கள் என்பதும்

தேவைகள் என்பதும்

எந்நேரமும் மாறலாம்.

சிங்களவர்கள் அனைவரும்

தமிழருக்கு எதிரானவர்கள் அல்ல.

பல சிங்கள திரைப்பட இயக்குனர்களும்

கலைஞர்களும்

தமிழர் சார்பானவர்கள் என

இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்

என்பதை பலரும் அறிவர்.

காலம்தான் பதில் சொல்ல வேணும். :lol:

Edited by AJeevan

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

நன்றி சோழியான் உங்கள் கருத்திற்கு. நீங்களும் ஒரு கலைஞன் என்ற ரீதியில் ஏனைய கலைஞர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு...............

நன்றி அஜீவன்

தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் டெஸ்மனின் பாடல் இணைப்பிற்கும், உங்கள் கருத்திற்கும். அதே பக்கத்தில் பல வருடங்களின் பின் டெஸ்மனின் சூடமானிக் பாடலும் கேட்டு இரசிக்க முடிந்தது

http://www.youtube.com/watch?v=LB82EksWZzI...feature=related

Edited by Vasampu

இதை எல்லாம் பெரிதாக எடுக்க கூடாது

தமிழ்நாட்டில புல்களின் பெயரால் ஈழத்தமிழரை அழிப்பதை கண்டும் காண்மல் இஒருக்கும் ஜெயலலிதத புலிகளள அழிக்க வேண்டும் என்று காட்டு கத்துறால் ஆனால் நாங்fகள் புலத்தில தமிழ்த் தேசியயாஅதரவு தொல்லைக்காட்சி என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் ஜெயா ரிவில இருந்து நிகழ்ச்சி போடுறாம் .......

அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி தான் எல்லாம்?

அஜீத் வரவில்லை அர்ஜீன் வரவில்லை என்றி புறக்கணிப்பு ஆனால் ஜெயா செய்யுர கொடுமைக்கு அவரோட ரிவி நிகழ்ச்சி தேவையா??

புது விளக்கம் வேண்டாம் அஜீத் எங்கட காசில படம் ஓட்டுரார்ன் எறு

இன்றைக்கு மனோகரனை திட்டுவது என்றால் என்றைக்கும் முரளியை மன்னிக்கவும் முடியாது.

சசி

ஜெயலலிதாவின் இவ்வளவு காட்டமான அறிக்கைகளின் பின்னும் TRO ஜெயா ரீவியுடன் கைகோர்த்து "ராகமாலிகா"வை ஐரோப்பாவில் நடாத்த முடியுமென்றால், ஜெயா ரீவியின் நிகழ்ச்சிகளை GTV ஒளிபரப்புவதில் என்ன தவறு??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலின் மொழிபெயர்ப்புக்கு நன்றி அஜீவன் அண்ணா.

பாவம் ஜெயலலிதா

தன் வாயால் தன் ஆதரவாளர்களையே

உள்ளே தள்ளிவிட்டார் :lol:

கலைஞர் அரசியல் ஞானிதான்.

சிலரை தள்ள முடியாது

அது அந்த இனத்தின் பலம்.

அது அகன்ற தமிழகம் என்பதைவிட

பாரிய விளைவுகளை உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

நானும் எத்தனையோ சிங்கள களங்களை வாசிச்சிருக்கிறன், அதில எழுதிற ஆக்கள மட்டும் வச்சுக் கொண்டு எல்லாரையும் எப்பிடி எடை போட முடியும்? நீங்கள் எதோ ஒரு வெளிநாட்டில இருந்து கொண்டு ஆளையாள் சுட்டுத் தள்ளுங்கோ எண்டு வீரம் பேசுவியல், கொழும்பில, ஊரில இருக்கிற எங்கட சனம் தான் பாவம்... :unsure: தெரியாமல் தான் கேக்கிறன் சீலன் அண்ணை, நீங்கள் மனோகரன் மாதிரி இருந்தால் பாடியிருப்பீங்களோ? :) அப்பிடி பாடுற ஒரு பெடியனையும் எனக்குத் தெரியும்.

முடிவா இப்ப என செய்யோணும், மனோகரனையும் புறக்கணிக்கோணுமா? :lol: ஏற்கனவே கனபேரை புறக்கணிச்சுப்போட்டம் அதுதான் கேக்கிறன்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கிற அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் சிங்கள தமிழ் ஒற்றுமையைப் பார்க்கிறார்கள். அந்தக் குறுக்கு வெட்டுத் தான் இங்கே இருக்கிற கருத்துகளிலும் தெரிகிறது. ஆனால் சீலன் சொன்ன கருத்து நியாயமானது. பல இடங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரே மாதிரித் தான் இருக்கிறது. ஒரு அமைப்பில், அரசியல் நோக்கத்திற்கு அப்பாற் பட்டு சிங்களவர்களுடன் உறுப்பினராயிருந்தால், திடீரென்று "புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலைக் கண்டிக்கிறோம்" என்று சிங்கள உறுப்பினர்கள் அறிக்கை விடுவார்கள். புலிகளைப் பயங்கர வாதிகளாக நோக்காத தமிழனும் அந்த அறிக்கையில் பங்கெடுத்துக் கொண்டதாக வெளியே தெரிகிறது, இன்றைக்குப் புலிகளுக்கு உள்ள பெரிய தடையே அவர்கள் நூறு வீதமான, ஏன் பெரும்பான்மையான தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என்று தமிழின எதிரிகள் செய்யும் பிரச்சாரம் தான். அந்தப் பிரச்சாரத்திற்கு உடந்தையாக நாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். எல்லாச் சிங்களவர்களும் இனவாதிகள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கஷ்டப் படும் தமிழனுக்குக் கிடைத்ததா என்பது தான் முக்கியமான கேள்வி. தமிழர் கஷ்டம் புரிந்த சிங்களவர்கள் குறிப்பிடத்தக்களவு இலங்கையிலோ வெளிநாடுகளிலோ இருந்தால் எப்படி 60 வீத அல்லது 80 வீத சிங்களவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு என்று கருத்துக் கணிப்புச் சொல்கிறது என்பதும் ஒரு பெரிய கேள்வி தான். அஜீவனுக்கும் வசம்புவுக்கும்: பல சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர், ஆனால் செஞ்சோலையில் சிறிலங்கா குண்டு போட்ட போது இறந்தது யாவரும் புலிப் பயங்கர வாதிகள் என்று நம்பும் சிங்களவர்கள் தான் இந்த இனவாதமற்ற சிங்களவர்கள். இவர்களோடு ஒற்றுமை என்றால் நாமும் இது மாதிரியான கருத்துக்களை ஆதரித்த மாதிரித் தான் ஆகும்.

சீலன் கேட்ட கேள்வியில ஓரளவு நியாயம் இருக்கிது. ஊரில சனத்தை சாக்காட்டிக்கொண்டு சிங்களவரும், தமிழரும் ஒற்றுமைய இருக்கிறதா காட்டுற பார்த்தால் எங்களுக்கு பத்தி எரியும்தான். பாதுகாப்பு இணையத்தளத்திலயும் உப்பிடி தமிழ் - சிங்கள ஒற்றுமை பற்றி ஏதோ ஒண்டு போட்டு இருக்கிது.

ஆனால்.. அடிப்படையில ஒரு விசயம் என்ன எண்டால் விடுதலைப் புலிகளே சொல்ல் இருக்கிறார்கள் இந்த தாயக போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று. அதாவது சிங்கள-தமிழ ஒற்றுமை பற்றிய இந்தப்பாடல் பிழையானது எண்டு விடுதலைப் புலிகள் சொல்லுவார்களா என்பதே சந்தேகம்.

ஊரில பிரச்சனைகள் துவங்க முன்பே பல்லாயிரம் தமிழ் சனங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு தவிர்ந்த இதர பகுதிகளில வாழ்ந்து வருகிதுகள். இவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இல்லையா? இவர்களிற்கு எப்போதும் சிங்கள இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிது. ஏன் எண்டால் அவர்கள் தனித்தமிழ் பகுதியில இல்ல.

அப்படி எண்டால் இவர்கள் சிங்களவர்களுடன் எப்படி வாழவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்? குறிப்பிட்ட பாடகர் மனோகரன் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சிலது இவர் பிறந்து வளந்தது எல்லாமே கொழும்பிலையோ தெரியாது. அப்பிடி எண்டால் உதுக்கு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

தமிழர் எண்டால் அவர்கள் தாயகபோராட்டம் சம்மந்தமாக ஆதரவு தரவேண்டும், தாயக போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பாப்பது தவறானது. நாங்கள் அப்படி இருக்கலாம். ஏன் எண்டால் நாங்கள் சிறீ லங்கா இனவாத அரசுமூலம் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் அப்படியான அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சது எண்டு சொல்லிறதுக்கு இல்ல.

நாங்கள் செய்யக்கூடியது தாயக மக்கள் படும் துன்பங்களை பிரச்சாரம் செய்வது, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எங்களால முடியுமான எதையாவது செய்வது ஒழிய... இப்பிடி அவர் அப்பிடி பாடி இருக்ககூடாது எண்டு சொல்லிறது நியாயபூர்வமானது இல்ல. சரி ஒரு காலத்தில தமிழீழம் கிடைக்கிது எண்டு வையுங்கோ. அதுக்கு பிறகும் தமிழீழம் அல்லாத பகுதிகளில தமிழர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அப்பிடி எண்டால் அந்த நேரத்தில தமிழர்கள் எப்பிடி இருக்கவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கீறீங்கள்?

நாங்கள் எங்கட வசதி, சூழ்நிலைகள் பற்றி மாத்திரம் கவலைப்படுறம். ஆனால்.. சிங்கள பிரதேசங்களில வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சிங்களவர்களுடன் சினேகபூர்வமான உறவை வச்சு இருக்காட்டிக்கு வீட்டுக்கு வெளியில ஒரு அடி எடுத்தும் வைக்க ஏலாது. உந்தப் பாட்டுக்கள் எமக்கு பிழையாக தெரியலாம். ஆனால் சிங்கள இன மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்கின்ற, வாழப்போகின்ற தமிழ் மக்களுக்கு இது தேவையான ஒரு பாடல்.

அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் பாரியார் ஒரு சிங்களவர் என்று எங்கையோ வாசிச்சதாக ஞாபகம். அப்பிடி எண்டால் அவர்கள் எப்பிடி வாழவேண்டும் எண்டு நினைக்கீறீங்கள்? சிங்களத்தில கதைக்ககூடாதா?

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.

முன்பு 'சாது ஜன ராவிய' எனும் சிங்கள பாடகர் குழு தமிழ் - சிங்கள ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றி சிங்கள கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. 'கப்புகே', நந்த மாலினி போன்ற பெரும் புகழ் கொண்டவர்கள் கூட அதில் பாடல்கள் பாடி வந்தனர். சிகல உறுமயவின்(Sihala Urumaya) உண்மையான தீவிர இராணுவ முகம் கொண்ட அமைப்பான 'சிங்கள வீர விதான' (Sinhala Veera Vithana)அமைப்பால் நையப்புடைக்கப் பட்டும் இருந்தனர்.

அதே போல, எப்பவுமே தமிழர்களின் பால் நிற்கும் சினிமா கலைஞர் பிரசன்ன விதானகே (புர கந்த களுவற (Death on a Full Moon Day) எடுத்தவர்), ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய (நிமலராஜன் கொலையில் இருந்து, சிவராம் கொலை வரை ஒவ்வொரு தமிழ் ஊடகவியளர் படுகொலைகளையும் உலக அரங்குக்கு கொண்டு போனவர், புலிகளின் குரல் நிலையம் மீதான தாக்குதலை எதிர்த்த ஒரே ஒரு சிங்கள ஊடகவியலாளர்) போன்றவர்களும் உள்ளனர்

ஆனால், இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்பது தான் யதார்த்தம். பெளத்த சிங்கள கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சிங்கள அதிகார மையமும், அதனை வழிமொழியும் அதன் கலைவடிவங்களும், அரசு இயந்திரமும், பெரும்பான்மை ஊடகங்களும் இவர்களை கோமாளிகள் போல ஆக்கிவிட்டன.

Edited by NIZHALI

இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்றால், இப்படியான பாடல்கள் பற்றிய கருத்துக்களை சிங்கள மக்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். சிங்கள அரசுகளோ அல்லது இனவாத சிங்களக் கட்சிகளோ எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை கோமளிகளாக்கலாம். அதற்காக நாங்களும் அவர்களை கோமாளிகளாக்கி, அவர்களோடு இணைந்து குரல் கொடுக்கும் தமிழர்களையும் துரோகிகள் என்று சிறப்பித்து கொடி பிடித்தால், அந்த இனவாதச் சிங்களவர்களை விட கேவலமானவர்களாக நம்மை அடையாளப் படுத்துகின்றோம் என்பது தான் உண்மை.

மன்னிக்கவும்

...நான் எங்கே அப்படி கூறினேன்? எவரையும் இங்கு நான் துரோகி என்று எப்போதும் கூறவில்லை/கூறுவதும் இல்லை.

உண்மையாக தமிழ் மக்கள் வாழ்வை விரும்பும் சிங்கள கலைஞர்களை சிங்கள பேரினவாதம் இன்று கோமாளிகளாகவே பெரும்பான்மை சிங்கள் மக்கள் முன்பாக காட்டி விட்டிருகின்றது. இது கசப்பான உண்மை. இன்று இவர்கள் எந்த குரலும் எழுப்ப முடியாத நிலையில் தான் உள்ளனர்.

எப்போதும் நீங்கள் அவசரப்பட்டு விடுகின்றீர்கள். நீங்கள் சொன்னதாக எங்காவது நான் குறிப்பிட்டுள்ளேனா?? உங்கள் கருத்தையும் இணைத்துத் தான் பதிலளித்துள்ளேன். அதனால் பார்பவர்களும் அப்படி நீங்கள் சொன்னதாக நினைக்க மாட்டார்கள். ஆனால் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை சிங்கள அரசும் இனவாத சிங்களக் கட்சிகளும் கோமாளிகள் ஆக்கும் போது, நாமும் அவ்வாறு செய்வது தவறென்பதை விளக்கவே நான் முனைந்தேன். அதுபோல் இந்தப் பக்கத்தை இணைத்தவர் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களோடு சேரும் தமிழர்களும் துரோகிகள் என்று குறிப்பிட்டிருந்ததையே பதில்க் கருத்தில் சுட்டிக் காட்டினேன். மற்றும் படி நீங்கள் கூட இந்தச் செய்தியை இணைத்தவரின் கருத்திற்கு சரியான பதிலை தரவுமில்லை.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஓற்றுமை

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஓற்றுமை

புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களுக்கும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைச் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம் விஜி!

Edited by Justin

ஓ...ஓ....ஓ..... அதனால்த் தான் அது ற்றுமை ஆனதோ?? :rolleyes::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.