Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு

Featured Replies

இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார்

[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:30.28 AM GMT +05:30 ]

நிதி உதவி திரட்டுவதை இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அவர் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் தொகையை இலங்கை தமிழர்களுக்காக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் தலைமை செயலாளர் ஸ்ரீபதியிடம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்கள்.

இன்று நிதி கொடுத்தோர் விபரம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்- ரூ. 25 ஆயிரம்

ஆற்காடு வீராசாமி- ரூ. 21,750 (ஒரு மாத சம்பளம்)

துரைமுருகன்- ரூ. 22 ஆயிரம்

பொன்முடி- ரூ. 25 ஆயிரம்

எ.வ.வேலு- ரூ. 22 ஆயிரம்

கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்-ரூ. 22 ஆயிரம்

தங்கம் தென்னரசு-ரூ. 22 ஆயிரம்

வெள்ளக்கோவில் சாமிநாதன்- ரூ. 22 ஆயிரம்

டி.ஆர்.பாலு- ரூ. 50 ஆயிரம்

ஆர்.ராஜா- ரூ. 50 ஆயிரம்

பழனிமாணிக்கம்- ரூ. 50 ஆயிரம்

ரகுபதி- ரூ. 50 ஆயிரம்

வேங்கடபதி- ரூ. 50 ஆயிரம்

ராதிகாசெல்வி- ரூ. 50 ஆயிரம்

கவிஞர் வைரமுத்து- ரூ. 1 லட்சம்

செ.குப்புசாமி - ரூ. 25 ஆயிரம்

கனிமொழி - ரூ. 50 ஆயிரம்

வசந்தி ஸ்டான்லி- ரூ. 25 ஆயிரம்

ஜின்னா- ரூ. 25 ஆயிரம்

கிருஷ்ணசாமி- ரூ. 25 ஆயிரம்

பூங்கோதை- ரூ. 25 ஆயிரம்

தமிழ்நாடு மின் கழக தொழி லாளர் முன்னேற்ற சங் கம் (சி.ரத்தினசபாபதி மூல மாக)ரூ. 3 லட்சம்

கே.சண்முகநாதன் (முதல்- அமைச்சரின் செயலாளர்) ரூ. 10 ஆயிரம்

கே.ராஜமாணிக்கம் (முதல்- அமைச்சரின் செயலாளர்) ரூ. 10 ஆயிரம்

எஸ்.ராஜரத்தினம் (முதல்- அமைச்சரின் செயலாளர்) ரூ 10 ஆயிரம்

எம்.தேவராஜ் (முதல்- அமைச்சரின் செயலாளர்) ரூ. 10 ஆயிரம்

எஸ்.கே.பிரபாகர் (முதல்- அமைச்சரின் செயலாளர்) ரூ. 10 ஆயிரம்

முத்துவாவாசி (சிறப்பு உதவி யாளர், முதல்- அமைச்சர் அலுவலகம்) ரூ. 5 ஆயிரம்

எஸ்.வெங்கட்ராமன் (முதல் நிலை உதவியாளர், முதல்வர் அலுவலகம்) ரூ. 2 ஆயிரம்

கே.ஏழுமலை (முதல்வரின் டபேதார்) ரூ. 1 ஆயிரம்

அ.மருதவிநாயகம் (முதல் வரின் மக்கள் தொடர்பு அலுவலர்) ரூ. 5 ஆயிரம்

ஏ.சி.சண்முகம் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழ கம்) ரூ. 5 லட்சம்

இதுவரை கூட்டுதல் தொகை ரூ. 26,19,750

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனைவருக்கும் .

இந்த நிவாரண நிதி சிங்கள அரசின் கைகளில் தரவா சேர்க்கப்படுகிறது?

அப்படியானால் இதையும் ஒரு ...... ஏமாற்று வேலை என்றே கொள்ள வேண்டிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிவாரண நிதி சிங்கள அரசின் கைகளில் தரவா சேர்க்கப்படுகிறது?

அப்படியானால் இதையும் ஒரு ...... ஏமாற்று வேலை என்றே கொள்ள வேண்டிவரும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உரியவர்கள் மூலம் வழங்கப்படவேண்டும் இல்லை இதையும் ஆட்டையை போட்டு விடுவார்கள் (எல்லாரையும தான்)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதையே சிந்திப்போம் நண்பரே

இது வர்த்தகர்கள்............

திரையுலகம்...........

அரசியல்வாதிகள்................என்று திரண்டு பல மில்லியன்களைத்தாண்டலாம்

அதன்போது சில அழுத்தங்கள் எல்லோர்மீதும் வரலாம்

எனவே நல்லதையே சிந்திப்போம் நண்பரே

  • தொடங்கியவர்

இந்த நிவாரண நிதி சிங்கள அரசின் கைகளில் தரவா சேர்க்கப்படுகிறது?

அப்படியானால் இதையும் ஒரு ...... ஏமாற்று வேலை என்றே கொள்ள வேண்டிவரும்!

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொடுத்தால் உதை உண்மையான முயற்சியாக பார்க்கலாம். சிறீலங்கா அரசிடம் கொடுத்தால் ஈழத்தமிழர்களை மேலும் அவமானப்படுத்தும் நாடகமாகத்தான் பார்க்க முடியும்.

இதைத் தமிழ்நாட்டு உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

வெற்றிவேல் என்ன இது ? இதுவா உதவி செய்ய முன்வரும் எமது உறவுகளிற்கு நீங்கள் காட்டும் அன்பு அல்லது இதுவா உங்கள் பண்பு ? தயவசெய்து நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் என்று தேவையற்ற விதண்டாவாதங்களை குறையுங்கள் ! எமக்காh எமது மக்களிற்காக அவர்கள் செய்யப் போகின்ற உதவிகளின் சிறு பொறியாக உங்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள் ! அல்லது அப்படி பாhக்க முடியாதா ?

எதுவாயினும் எம்மில் பலபேர் செய்திடாத உதவிகளை செய்ய துடிக்கும் எமது தமிழகத்து உறவுகளிற்கு அன்புடன் கூடிய நன்றிகள் உங்கள் உதவிகள் எமது மக்களிடம் சேர்வதை கருத்தில் கொண்டாலே போதும் .

நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல் என்ன இது ? இதுவா உதவி செய்ய முன்வரும் எமது உறவுகளிற்கு நீங்கள் காட்டும் அன்பு அல்லது இதுவா உங்கள் பண்பு ? தயவசெய்து நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் என்று தேவையற்ற விதண்டாவாதங்களை குறையுங்கள் ! எமக்காh எமது மக்களிற்காக அவர்கள் செய்யப் போகின்ற உதவிகளின் சிறு பொறியாக உங்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள் ! அல்லது அப்படி பாhக்க முடியாதா ?

எதுவாயினும் எம்மில் பலபேர் செய்திடாத உதவிகளை செய்ய துடிக்கும் எமது தமிழகத்து உறவுகளிற்கு அன்புடன் கூடிய நன்றிகள் உங்கள் உதவிகள் எமது மக்களிடம் சேர்வதை கருத்தில் கொண்டாலே போதும் .

நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

உண்மையில் நாம் யாரையும் கையேந்தவேண்டிய அவசியமில்லாத இனம்

எதற்கும்

தமிழர்கள் நாம் ஒன்றுபட்டாலே போதும்

ஒரு குரலில் கதைத்தாலே போதும்

எவனும் எம்மில் வாலாட்டமுடியாது

தமிழர்கள் நாம் ஒன்றுபட்டாலே போதும்

அதில் அவர்களும் அடக்கமல்லவா???

வெற்றிவேல் என்ன இது ? இதுவா உதவி செய்ய முன்வரும் எமது உறவுகளிற்கு நீங்கள் காட்டும் அன்பு அல்லது இதுவா உங்கள் பண்பு ? தயவசெய்து நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் என்று தேவையற்ற விதண்டாவாதங்களை குறையுங்கள் ! எமக்காh எமது மக்களிற்காக அவர்கள் செய்யப் போகின்ற உதவிகளின் சிறு பொறியாக உங்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள் ! அல்லது அப்படி பாhக்க முடியாதா ?

எதுவாயினும் எம்மில் பலபேர் செய்திடாத உதவிகளை செய்ய துடிக்கும் எமது தமிழகத்து உறவுகளிற்கு அன்புடன் கூடிய நன்றிகள் உங்கள் உதவிகள் எமது மக்களிடம் சேர்வதை கருத்தில் கொண்டாலே போதும் .

நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

இந்த சர்ச்சையை இப்போதே தொடக்கினால் தான் சிங்கள அரசின் கைகளுக்கு இந்த நிதி செல்வதற்கு தமிழர்கள் மத்தியில் இருக்கும் தீவிர எதிர்ப்பு வெளிக்கொண்டு வரப்படும்.

இந்த நிதி சிங்கள அரசின் கைகளுக்கு போவது என்பது தமிழர்களுக்கு செய்யப்படும் நிவாரண உதவி அல்ல!

தமிழர்களை படுகொலை செய்வதற்கான பண உதவி!

இதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்தி எழுச்சியை ஏற்படுத்த தவறினோமானால் தமிழர் விரோத காங்கிரஸ் ஆட்சியின் மிரட்டலுக்கு பயந்து கலைஞர் இந்த நிவாரண நிதியை சிங்கள அரசின் கஜானாவிலேயே சேர்ப்பார்.

ஏற்கனவே 800 தொன் அரிசியை சிங்களத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தருவதற்கு கலைஞர் ஆமாம் சாமி போட்டு விட்டார்! சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எங்கே போயிற்று?

கலைஞரின் அரசியல் நகர்வுகளை கணிக்கும் அளவுக்கு எனக்கு தமிழக அரசியல் பற்றிய அறிவும் தொடர்புகளும் உண்டு!

Edited by vettri-vel

எங்களின் நீண்ட ஆண்டுகளாக (30 வருடம்) போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலமைச்சர் சொந்த நிதி - 10 லட்சம் ரூபாய்

திமுக மத்திய அமைச்சர்கள் - 50 ஆயிரம் ரூபாய்

திமுக மாநில அமைச்சர்கள் - 25 ஆயிரம் ரூபாய்

எம்.ஜி.ஆர் பல்கலை பேராசிரியர் ஏசி.சண்முகம் - 5 லட்ச ரூபாய்

மின் கழக முன்னேற்ற சங்கம் - 3 லட்ச ரூபாய்

கவிஞர் வைரமுத்து - 1 லட்சம்

கனிமொழி - 50 ஆயிரம் ரூபாய்

செ.குப்புசாமி - 25 ஆயிரம் ருபாய்

கிருஷ்ணசாமி - 25 ஆயிரம் ரூபாய்

ஜின்னா - 25 ஆயிரம் ரூபாய்

ஸ்டான்லி - 25 ஆயிரம் ரூபாய்

முன்னாள் அமைச்சர் பூங்கோதை - 25 ஆயிரம் ரூபாய்

முதலமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், ராஜமாணிக்கம், ராஜரத்தினம், தேவராஜ், பிரபாகர் ஆகியோர் தலா 10 ஆயிரம் ரூபாய்.....

........................................

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த பட்டியலில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்பது தமிழக முதல்வரின் ஆசை மட்டுமல்ல. எங்களின் ஆசையும் கூட. இலங்கை தமிழர்களின் பட்டினி மற்றும் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற உங்களின் 100 ரூபாயும் கூட மதிப்பு மிக்கது தான்.

நீங்கள் செய்யவேண்டியது இது தான்....

நிதியுதவி செய்திட விரும்புவோர் 'ஸ்ரீலங்கன் தமிழ்ஸ் ரிலிப் பண்ட்' என்ற பெயரில் காசோலைகளையும், வரைவுக் காசோலைகளை எடுத்து

தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

http://nellaitamil.com/view.php?page=1015

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொடுத்தால் உதை உண்மையான முயற்சியாக பார்க்கலாம். சிறீலங்கா அரசிடம் கொடுத்தால் ஈழத்தமிழர்களை மேலும் அவமானப்படுத்தும் நாடகமாகத்தான் பார்க்க முடியும்.

இதைத் தமிழ்நாட்டு உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையேதான் நானும் கூறுகிறேன் இருந்தாலும் தமிழ் நாட்டு அரசு இவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது எனது அவா

இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று நிதி குவிந்தது. இன்று ஒருநாள் மட்டும் சுமார் 26 லட்ச ரூபா நிதி சேர்ந்தது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சேர்ப்பது பாதிக்க பட்ட தமிழர் கையில் போய் ..........சேருமா ?

இன்று திருமாவளவன் 2 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து விட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்த நிதியை கண்டிப்பாக சிங்கள இனவாத அரசிடம் கொடுக்கக்கூடாது மாறாக செஞ்சிலுவை சங்கம் அல்லது பன்னாட்டு அமைப்புகள் வாயிலாக நேரடியாக தமிழர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்...

தமிழக அரசு இலங்கைத்தமிழர் நிவாரண நிதி கணக்கு என்று தொடங்கியிருக்கிறது.....

இதிலும் நாராயணனும் மேனனும் சதி செய்யலாம் எனவே எனக்கு நிதி கொடுக்க தயக்கமாக இருக்கிறது....

வேலவன் மற்றும் ஏனைய தமிழ்நாட்டு உறவுகளே

இதை நீங்கள் சிறீலங்கா அரசிடமோ அதன் நிர்வாக அலகிடம் குடுப்பதால் நியாயப்படுத்தப்போவது (நிரூபிப்பது)

-1- சிறீலங்கா நிர்வாகம் வன்னி - தமிழ் மக்களை கொள்கை ரீதியில் தண்டிக்கவில்லை பொருளாதார நிதி தட்டுப்பாடுகளால் அவர்களிற்கு உணவு மருந்தும் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பமுடியாமல் இருக்கிறது.

-2- இந்தியா முக்கியமாக நிதிப் பங்களித்த அல்லது அதை ஒழுங்கு படுத்திய தமிழ்நாட்டு உணர்வாளர்கள் தமிழநாடு அரசு போன்றவை ஈழத்தில் தமிழர்களின் நலன்களின் சிறீலங்கா நிதானமாக நடக்கிறது என்று நம்புகிறீர்கள்.

-3- மொத்தத்தில் எமது விடுதலைப் போராட்டம் வெறும் பயங்கரவாதம் என்ற பிரச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். சிறீலங்கா தமிழர் நலன்களில் சரியாக நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

இப்படி பட்ட உதவியை சிறீலங்கா நிர்வாக அலகினூடாக வழங்கி எமது 30 வருடகால போராட்டத்தையும் 1 லட்சம் மக்களின் இறப்புகளையும் 21 000 மேற்பட்ட மாவீீரர்களின் அர்பணிப்புகளையும் கொச்சைப்படுத்தாது இருப்பது மேல்.

அடிப்படையில் முக்கியமானது உங்கள் உதவிகள் யாரிடம் நம்பிக்கையுடன் கைய்யளிக்கப்படுகிறது யார் மூலமாக ஈழத்தமிழர்களை வந்தடைகிறது என்பது. நீங்கள் எவ்வளவு பங்களிக்கிறீர்கள் என்பதை அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்தலாம்.

தயவு செய்து பேரினவாத சிங்களத்தினதும் இந்திய ஆளும்வர்க்கத்தினதும் அரசியல் பிரச்சார சூழ்ச்சியில் மீண்டும் வீழ்ந்து விடாதீர்கள்.

India to send food aid to S Lanka

Sri Lankan soldier

Civilians have fled as government troops have attacked the Tamil Tigers

India says it is sending food aid to Tamil civilians in Sri Lanka caught up in fighting between government forces and Tamil Tiger rebels.

The announcement to send 800 tonnes of food followed talks in Delhi with Sri Lanka's special envoy, Basil Rajapaksa.

Sri Lanka, which is engaged in a major offensive against the rebels, had been seeking to reassure Delhi about the humanitarian situation in the north.

Thousands of Tamils living in the north have been displaced by the fighting.

This has angered India's Tamil politicians - some in the southern state of Tamil Nadu have threatened to pull out of India's coalition government if Delhi does not act.

One politician said the food aid showed Delhi did not accept Sri Lanka was looking after its Tamil population.

The UN has been allowed to send two food convoys into rebel-held northern areas this month where some 200,000 people have been displaced by fighting.

In September the government ordered humanitarian workers out of the north, saying it could not guarantee their safety.

Sri Lanka's military is continuing an offensive aimed at capturing territory controlled by the Tigers and ending their fight for a separate state for the ethnic Tamil minority.

According to the military, soldiers are now only about 1.5km (one mile) from the outskirts of Kilinochchi.

But with journalists barred from the area, the claims cannot be independently verified.

Many civilians have fled Kilinochchi to escape the fighting in recent weeks

http://news.bbc.co.uk/go/pr/fr/-/2/hi/south_asia/7692410.stm

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவது உறுதிப்படுத்தப் பட வேண்டும். தூதர்கள் மூலமாகவோ தமிழர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் மூலமாகமோ கொடுப்பது தடைசெய்யப் படவேண்டும். உதவி என்ற பெயரில் உளவாளிகளை அனுப்புவதும் தமிழக எழுச்சியை நீர்த்துப் போகச் செய்வதுமான ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தும் குள்ள நரி வேலைகளை அரங்கேற்றலாம்;;;. தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. போரை நிறுத்தச் சொன்னாலே போதும் இருக்கிற வளங்களை வைத்தே மீண்டு வரக்கூடிய வல்லமை ஈழத் தமிழருக்கு உண்டு.அதை விடுத்து தமிழர் சோற்றுக்காக போராடுவதைப் போன்று தமிழரை அவமானப்படுத்தும் செயலுக்கு தமிழர் உடைந்தையாக இருக்கக் கூடாது.கலைஞர் இதை ஒகேனக்கல் போராட்டத்தைப் போல ஆக்கிவிடக்கூடாது.

இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவது உறுதிப்படுத்தப் பட வேண்டும். தூதர்கள் மூலமாகவோ தமிழர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் மூலமாகமோ கொடுப்பது தடைசெய்யப் படவேண்டும். உதவி என்ற பெயரில் உளவாளிகளை அனுப்புவதும் தமிழக எழுச்சியை நீர்த்துப் போகச் செய்வதுமான ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தும் குள்ள நரி வேலைகளை அரங்கேற்றலாம்;;;. தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. போரை நிறுத்தச் சொன்னாலே போதும் இருக்கிற வளங்களை வைத்தே மீண்டு வரக்கூடிய வல்லமை ஈழத் தமிழருக்கு உண்டு.அதை விடுத்து தமிழர் சோற்றுக்காக போராடுவதைப் போன்று தமிழரை அவமானப்படுத்தும் செயலுக்கு தமிழர் உடைந்தையாக இருக்கக் கூடாது.கலைஞர் இதை ஒகேனக்கல் போராட்டத்தைப் போல ஆக்கிவிடக்கூடாது.

நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். ஆற்றில் இடாமல் இடவேண்டிய இடத்தில் இந்த நிதியை தயைகூர்ந்து இடுங்கள். உங்கள் செயற்பாடுகள் எமக்கு மிகமிக உற்சாகத்தை அளிக்கின்றது. அரசியல்வாதிகள் கைகளில் பணம் அதிகம் புழங்கும் என்று கேள்விப்படுவதுண்டு அதையும் மீறி ஒரு கவிஞன் முன்வந்து 1 லட்சம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அது அரசியலிற்கு அப்பால் திரையுலக பெருந்தகைகளையும் வழங்க உந்து கோலாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று திருமாவளவன் 2 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து விட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்த நிதியை கண்டிப்பாக சிங்கள இனவாத அரசிடம் கொடுக்கக்கூடாது மாறாக செஞ்சிலுவை சங்கம் அல்லது பன்னாட்டு அமைப்புகள் வாயிலாக நேரடியாக தமிழர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்...

தமிழக அரசு இலங்கைத்தமிழர் நிவாரண நிதி கணக்கு என்று தொடங்கியிருக்கிறது.....

இதிலும் நாராயணனும் மேனனும் சதி செய்யலாம் எனவே எனக்கு நிதி கொடுக்க தயக்கமாக இருக்கிறது....

வேலவன், பன்னாட்டு அமைப்பு என்று பார்த்தால் செஞ்சிலுவை சங்கம் மட்டுந்தான் இப்போது அங்குள்ளது.

ஆனால் செஞ்சிலுவை சங்கத்தின் நடவடிக்கைகள் ஒரு வரையறைக்குட்பட்டவை. அரசாங்கம் அனுமதிக்கும் பொருட்களைத்தான் அவர்களால் எடுத்துச் செல்லமுடியும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=437586

ஆக தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் மட்டுந்தான் இன்றய நிலையில் முழு உதவிகளை செய்யமுடியும்.

ஆனால் தமிழ்நாட்டு அரசு தமிழர் புனர்வாழ்வு கழகத்திடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிதாகவே உள்ளன. ஏனெனில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் இலங்கை அரசால் முடக்கப்பட்டுள்ளன.

பிச்சை வேண்டாம் ஐயா நாயைப் பிடியுங்கள்.

முதல்வர் கருணாநிதியின் நிதிச் சேகரிப்புக்கும் அதற்கு உதவியவர்க்கும் உதவிக் கொண்டிருக்கும் தமிழக உறவுகளுக்கும் நன்றிகள். இந்த நிதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேருமா? எப்படி? ஆறு கோடி தமிழ் மக்களின் பல நாள் போராட்டங்களை ஒரே நாளில் உப் என்று ஊதித் தள்ளியது சிங்கள சாணக்கியம். உலகெல்லாம் இருந்துவந்த சுனாமி உதவிகளுக்கு என்ன நடந்தது? அவ்வளவு தேவையில்லை இவ்வளவு அவசரமாக நிதி சேகரிப்பவரிடம் ஒரு கேள்வி? சென்ற வருடம் ஐயா நெடுமாறன் அவர்கள் சேகரித்த மருந்துப் பொருட்களுக்கு என்ன நடந்தது? யார் அதை ஈழத்தமிழருக்கு கிட்டாமல் தடுத்தார்கள்? அது போல் இதுவும் முடக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? சுனாமி உதவிகள் போல கடலே காணாத சிங்கள வெறியர்களிடம் உலக உதவிகள் போனது போல இந்த உதவியும் சிங்கள பேரினவாத கொள்ளையரிடம் போய் சேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நிச்சயமாய் நாளை இந்த உதவி 'எமது அரசின் மூலமாகத் தான் வன்னி மக்களுக்குச் சென்றடைய வேண்டும்' என பேரினம் முரண்டு பிடித்தால் அதை தமிழக அரசால் தடுக்க முடியுமா? அல்லது இந்திய மத்திய அரசு தான் தலையிடுமா? தலையிட்டால் இரண்டு அமைச்சர்களை சீனாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் அனுப்பி வல்லரசுக் கனவில் திகழும் இந்தியாவை அச்சங் கொள்ள வைத்து தமது காரியத்தை சாதிக்காது என்பது என்ன நிச்சயம்? பயங்கரவாத அரசு இந்த உதவிகளை ஈழத் தமிழ் மக்களுக்கு குண்டு வீச்சுக்கள் மூலம் தான் கொடுப்பார்கள் என்பது நிச்சயம். பஷிலின் கூற்றுபடி இனி வன்னியில் கிளிநொச்சியில் மரணிக்கும்; பச்சைக் குழந்தை கூட விடுதலைப் புலிதான். அதுவும் தமிழக தமிழரின் நிதியில் வாங்கிய குண்டாகத்தானிருக்கும்.

ஐயா கருணை? உள்ளம் படைத்த முதல்வர்கள் அவர்களே, எமது பிரச்சனையைத் திசை திருப்பாமல் முதலில் உங்கள் பிச்சை போடும் வேலையை நிறுத்தி விட்டு உங்கள் வீட்டு கடி நாயை பிடித்து கட்டி வையுங்கள். நிதி, ஆயுத இராணுவ உதவிகளை நிறுத்தக் கூறி ஈழத்தமிழரை அவர்கள் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ விடுங்கள். அவர்கள் உழைப்பாளிகள். யாரையும் எதிர்பார்க்காத மானஸ்தர்கள். ஏமாந்தோம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். இனியும் ஏமாறுவோம் என்று எண்ணாதீர்கள். ஈழத்தமிழரின் தற்போதைய தேவை என்னவென்று அறிந்து அதைச் செய்யுங்கள்.எம்மை கொச்சைப்படுத்தாதீர்கள்.

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதி வழங்கிய அனைத்து கருணை உள்ளங்களுக்கும் நன்றிகள்.இந்த நிதி உரியவர்களை போய் சேர்கிறதோ இல்லையோ ஆனால் நிதி வழங்கியவர்கள் அல்லலுறும் மக்களுக்கு போய் சேரவேண்டும் என்று தான் கொடுத்தார்கள் ஆகவே அவர்களுக்கு நன்றி சொல்வதுதான் நல்லது.

இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் உதவி: கருணாநிதியிடம் ரூ. 89 லட்சம் நிவாரண நிதி குவிந்தது

[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:47.03 AM GMT +05:30 ]

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் களுக்காக நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

அவர் நேற்று தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். நேற்று வரை ரூ. 33 லட்சம் நிதி குவிந்தது. இன்று 2-வது நாளாக தொழில் அதிபர்கள், திரை உலகத்தினர், அரசு ஊழியர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திரண்டு வந்து முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் நிவாரண நிதி வழங்கினார்கள்.

இன்று மதியம் வரை ரூ. 88 லட்சத்து 86 ஆயிரத்து 307 நிதி குவிந்தது. இன்று தொழில் அதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சமும், மாலினி பார்த்தசாரதி ரூ. 1 லட்சமும், நடிகர் சுந்தர்.சி ரூ. 1 லட்சமும், நடிகை குஷ்பு ரூ. 1 லட்சமும், நடிகர் நெப்போலியன் ரூ. 5 லட்சமும் வழங்கினார்கள்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி சார்பாக ஈ.வி.குமரன் ரூ. 10 லட்சமும், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடிப் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சார்பாக கி.வீரமணி ரூ. 6 லட்சத்து 10 ஆயிரமும், பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் சார்பாக அதன் செயலாளர் கி.வீரமணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரமும், நடிகர் விவேக் ரூ. 1 லட்சமும், சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ரூ. 5 லட்சமும், சரவண பவன் ஓட்டல் தொழிலாளர்கள் ரூ. 5 லட்சமும், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தினர் ரூ. 1 லட்சமும் என ஏராளமானோர் இன்று நிதி வழங்கினார்கள்.

சென்னை மாநகர போலீசார் ரூ. 10 லட்சம் வழங்க உள்ளனர். ஒவ்வொரு போலீசாரும் தங்களின் பதவியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.