Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் பிரம்மாண்ட உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து வாசிக்க

நன்றி என்ற ஒரு சொல்லால் உங்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை சசோதரர்களே. நீங்கள் இப்படி எமக்கு உதவுவது இன்று நேற்று நடைபெறும் சம்பவமில்லை. யாழ் மன்னன் சங்கிலியனை சிறைப்பிடிக்க போத்துகீசரும், சிங்களவரும் யாழ் குடா நாட்டை முற்றுகையிட்ட போது தமிழகத்திலிருந்து ஒரு மன்னன் அவன் தளபதி சகிதம் 5000 படைகளை சங்கிலிய மன்னனுக்கு ஆதரவாக ஈழத்துக்கு அனுப்பியிருந்தானாம். அதேபோல் 1983 இல் பழ. நெடுமாறன் தலைமையில் 5000 தமிழின உணர்வாளர்கள் ஈழம் வந்தானர். அதே போல் 1987 இல் இந்திய படையினர் ஈழம் வந்தனர் அது பின் குள்ள நரிகளின் சதி வேலையால் திசைமாறியது இது வேறுவிடயம். அதே வம்சத்தில் வந்த நீங்களும் இன்று எமக்காக குரல் கொடுப்பது எமக்கு மிகுந்த நம்பிக்கையை தருகின்றது. உங்களது இந்த கிளற்சி இந்த மாபெரும் விடுதலைபோரில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Edited by vidivelli

சிறு துளி பெருவெள்ளம் என்பர் இது சிறு துளியல்ல கடல் அலையே பொங்கி எழுந்திருக்கின்றது உண்மைதான் நன்றி எனறு சொல்லி உங்களை குறைவாக நினைக்கவில்லை. என்றென்றும் ஈழத்தமிழர் நாம் கடமைப்பட்டுள்ளோம் எம் தொப்புள் கொடி உறவுகளிற்கு

இந்த வேளையில் ஆதரவுக்குரல்களை திசை திருப்பிவிட சில துரோகிகள் திட்டமிட்டே சில சில விசமத்தனமான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். சும்மா வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே ஆதரவாகவா வந்தார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பி அவன் ஒரு லட்சம் கொடுத்தானாம் இவன் 1000 கொடுத்தானாம் என்று... எமக்கு ஆதரவாக வருபபவர்களை குறை கூறி புறம்சொல்லி கேவலப்படுத்துகிறார்கள்.பணம் பெரிதல்ல உறவுகளே அந்த குரல்கள்தான் எமக்கு தேவை.

புலிகளின் குரல் நாளிதழ் நாளியில் திரு. இறைவன் அவர்களும் இதையேதான் குறிப்பிட்டார்.

எமக்காக ஆதரவுக் கரம் நீட்டி குரல் கொடுக்கும் தமிழக உறவுகளுக்கு நன்றிகள்!

அவன் ஒரு லட்சம் கொடுத்தானாம் இவன் 1000 கொடுத்தானாம் என்று... எமக்கு ஆதரவாக வருபபவர்களை குறை கூறி புறம்சொல்லி கேவலப்படுத்துகிறார்கள்.

உன்னிடத்தில் கோடிகள் குவிந்து கிடக்கும் போது அதில் லட்சத்தை தானமாக தருவது ஒன்றும் பெரிய விடயம் கிடையாது. உன்னிடம் இருகின்றது அதிலிருந்து சிலவற்றை மனமுவந்து கொடுகின்றாய் அது உன் உணர்வு. ஆனால் ஆயிரம் ரூபாய்கள் தான் மாதம் ஊதியமாக பெறும் எத்தைனையோ பேர் அதிலிருந்து 100 ரூபா முதல் 500 ரூபா வரை தமிழீழத்து சகோதரர்களின் பசியை போக்க தானமாக தந்திருக்கின்றனரே. எவ்வளவு ஒரு உணற்சி மிக்க செயல். முடியுமா என்னால் உன்னால்??? வெறும் 30 காசுகள் தாயகத்துகாக கொடுக்க 300 கேள்வி கேட்கும் இந்த உலகத்தில் எண்ணிப்பார்க்க மிகவும் பெருமையாக இருகின்றது தமிழகத்து உறவுகளே. இருப்பதில் இருந்து சிலவற்றை கொடுப்பதை பார்கிலும் இருப்பதையே கொடுப்பது !!!!!!! கற்பனை செய்து பார்க்க முடியாதது.

இது தான் மிகவும் உயர்ந்தது!!!

சாதாரண திரைப்படத்தொழிலாளர்கள்!

ஒரு நாளைக்கு தொழிலுக்கு போகாவிட்டால் கூட குடும்பம் நடத்த கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களும் இதில் அடக்கம். வடபழனி, கோடம்பாக்கம் தெருக்களிலே இவர்களின் வறுமை நிலையை நேரடியாக பார்த்தவன் என்ற நிலையில் சொல்கிறேன்.

இது போன்ற தொழிலாளர் பெருமக்கள் ஈழத்தமிழர் விடுதலைக்காக தங்கள் ஒருநாள் ஊதியத்தை விட்டுக்கொடுத்து இப்படி ஒரு உண்ணாநிலை போராட்டம் நடத்துவது என்பது கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுப்பதையும் விட மேலானதாகும்!

காலம் கனிந்ததும் இதற்கு தகுந்த கைமாறு செய்ய நாம் மறக்கக்கூடாது!!!

ஈழம் மலர்ந்ததும் தமிழீழத்தின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் குழந்தைகளுக்கு ஆயிரக் கணக்கில் நாம் புலமைப்பரிசில்கள் வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். பின்னாளில், ஈழவிடுதலையின் பின், இதற்கான நிதி திரட்டும் வேலைத்திட்டம் ஒன்றையும் புலம்பெயர் தமிழர்கள் தொடங்க வேண்டும்!!!

Edited by vettri-vel

இது தான் மிகவும் உயர்ந்தது!!!

சாதாரண திரைப்படத்தொழிலாளர்கள்!

ஒரு நாளைக்கு தொழிலுக்கு போகாவிட்டால் கூட குடும்பம் நடத்த கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களும் இதில் அடக்கம். வடபழனி, கோடம்பாக்கம் தெருக்களிலே இவர்களின் வறுமை நிலையை நேரடியாக பார்த்தவன் என்ற நிலையில் சொல்கிறேன்.

இது போன்ற தொழிலாளர் பெருமக்கள் ஈழத்தமிழர் விடுதலைக்காக தங்கள் ஒருநாள் ஊதியத்தை விட்டுக்கொடுத்து இப்படி ஒரு உண்ணாநிலை போராட்டம் நடத்துவது என்பது கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுப்பதையும் விட மேலானதாகும்!

காலம் கனிந்ததும் இதற்கு தகுந்த கைமாறு செய்ய நாம் மறக்கக்கூடாது!!!

ஈழம் மலர்ந்ததும் தமிழீழத்தின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் குழந்தைகளுக்கு ஆயிரக் கணக்கில் நாம் புலமைப்பரிசில்கள் வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். பின்னாளில், ஈழவிடுதலையின் பின், இதற்கான நிதி திரட்டும் வேலைத்திட்டம் ஒன்றையும் புலம்பெயர் தமிழர்கள் தொடங்க வேண்டும்!!!

உண்மைதான். நன்றி மறப்பவர்களல்ல நாம். இவர்களின் இந்த உணர்விற்கு நிச்சயம் கைம்மாறு இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே, உங்கள் ஆதரவு எமக்கு எப்போதும் இருக்கவேண்டும்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்

புகைப்படங்களை பார்க்க.......

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாநிலை போராட்டம் நடாத்திய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தினருக்கு நன்றி .

FEFSI போராட்டத்தில் கவிஞர் தாமரை நிகழ்த்திய உரை (Poet Thamarai Speaks at FEFSI Fasting Protest)

இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஈழத்தமிழர்கள் எப்போதும் எதிரானவர்கள் அல்ல என்பதை

நமது தமிழக சகோதரர்கள் சிலர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!!!

Edited by vettri-vel

இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, சென்னையில் நேற்று திரைப்படத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் உரையாற்றுகையில் நான் இலங்கையில் சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான இராணுவ, போலீஸ் தாக்குதல்களை நேரில் பார்த்தவள் என நடிகை ராதிகா கூறினார்.

சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் எஸ்.விஜயன் தலைமை தாங்கினார்.

இதில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, விஜய டி.ராஜேந்தர், எஸ்.பி.முத்துராமன, அமீர்ஜான், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், ராதிகா, கவிஞர் தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நடிகை ராதிகா பேசுகையில் :

நான் இலங்கையில் படித்து வளர்ந்தவள். சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்களை நேரில் பார்த்தவள். கலவரம், தீவைப்பு, சிங்கள ராணுவத்தின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு மத்தியில் நானும், என் தம்பியும் ஒருமுறை சிக்கிக் கொண்டோம்.

என் தம்பியை குப்பை தொட்டியில் மறைத்து வைத்து, அவன் உயிரை காப்பாற்றினேன். அந்த போராட்டம் இன்னும் ஓயவில்லை. இலங்கை தமிழர்கள் அன்பானவர்கள். அவர்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்றார்.

இயக்குனர் டி.ராஜேந்தர் பேசுகையில் :

இலங்கை தமிழர்களை போன்ற ஒரு பாவப்பட்ட இனத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள், மராட்டியத்தை சேர்ந்தவர்கள், பஞ்சாபிகள் தாக்கப்பட்டால், அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை தமிழ் இன உணர்வு தீ பற்றிக்கொண்டே இருக்கும். தனி ஈழம் பிறந்தே தீரும். தமிழா, அதுவரை சோர்ந்து விடாதே என்றார்.

கவிஞர் தாமரை பேசுகையில் :

மொழி, பாண்பாடு அடிப்படையில் தேசிய இனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழனும் ஒரு தேசிய இனம்தான். தமிழன் மனதில் வன்முறை கிடையாது. வந்தாரை வாழ வைப்பான். போரை நிறுத்து, ஆயுதம் கொடுப்பதை நிறுத்து என்று இலங்கை அரசிடம் நாம் கேட்கிறோம். ஆனால் இன்னும் போர் நிற்கவில்லை.

இங்கே நாம் நிதி திரட்டுவதில் பலன் இல்லை. ஒரு பக்கம் குண்டு போட்டு கொல்கிறான். இன்னொரு பக்கம் பால் ஊற்றுவது எதற்காக? இந்த பணம் ராஜபக்சேவுக்குத்தான் போய் சேரும். மனசாட்சி உள்ள எவரும் நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், நான் தமிழச்சி என்றார்.

நன்றி : தமிழ் வின்

தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு கவிஞர் தாமரை மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை. இலங்கை அரசு தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது. பிற நாடுகளில் நடைபெறும் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் பாரா முகமாக இருப்பதற்குக் காரணம் முதன்மையாக இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே! என கவிஞர் தாமரை எமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு அளித்த பேட்டி பின் வருமாறு:

http://www.tamilseythi.com/interview/thama...2008-11-06.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நேற்று திரைப்படத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பாடலாசிரியை தாமரை, ‘இலங்கைத் தமிழருக்காக இங்கே வசூலிக்கப்படும் நிவாரண நிதிக்கு ஒரு பைசாகூட தரமாட்டேன்’ என்று

கோபமாகக் கூறினார். மேலும் அவர் பேசுகையில்,

”18 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழனுக்கு ஓரளவு சொரனை வந்து இலங்கைத் தமிழர்களுக்காக பேச தொடங்கியிருக்கிறார்கள். உணர்வை மட்டுமே காட்டவேண்டுமானால் எல்லோரும் கூடி ஒப்பாரி பாடிவிட்டுப் போகலாம். போராட்டம் என்பது நமது கோரிக்கைகளை முன்வைப்பதாகும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. இந்திய அரசும் நிறுத்துமாறு கூறவில்லை. போரை நிறுத்த தமிழக அரசும் வற்புறுத்தவில்லை. இங்கு நடப்பது எல்லாமே நாடகம்.

ஈழம் கிடைத்துவிட்டால், தமிழ்நாடு, கர்நாடக நாடு, மலையாள நாடு என்று பிரிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இப்போதே அத்தகைய குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

முதலில் தமிழனாய் இருப்போம். இந்தியனாக இருப்பதுப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம்.

இங்கே நிவாரண நிதி வசூலிக்கிறார்கள். இலங்கையிடம் இந்த நிதியைக் கொடுத்தால் ஒரு கையில் பாலையும், இன்னொரு கையில் விஷத்தையும் கொடுப்பதுப் போலாகிவிடும். குண்டு போடுபவர்கள் தமிழர்களுக்கு நிவாரணத்தைக் கொடுப்பார்களா? நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசா தரமாட்டேன்” என்றார்.

இவவுக்குத்தான் ஈழத்தமிழனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்

http://www.tamilvanan.com/content/2008/11/...ricist-tamarai/

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தாமரை :unsure:

தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு கவிஞர் தாமரை மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை. இலங்கை அரசு தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது. பிற நாடுகளில் நடைபெறும் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் பாரா முகமாக இருப்பதற்குக் காரணம் முதன்மையாக இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே! என கவிஞர் தாமரை எமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு அளித்த பேட்டி பின் வருமாறு:

கேள்வி: நளினியை விடுதலை செய்யக் கோரித் தாங்கள் ஆரம்பித்துள்ள கையெழுத்து இயக்கம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

பதில்: நளினி விடுதலை கோரும் கையெழுத்து இயக்கம் 2006ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. நான் ( கவிஞர் தாமரை) , எழுத்தாளர் பா.செல்வப்பிரகாசம், நெய்வேலி பாலு, கவிஞர் கிருஷாய்கினி ஆகியோர் பேடி முடிவு செய்து தொடங்கினோம். கலை இலக்கியப் படைப்பாளிகளிடம் கையெழுத்துப் பெறுவதை நோக்கமாகக் கொண்டோம். தமிழக முதல்வரை நேரில் சந்தித்துக் கையளிப்பது என்பதையும் அப்போதே முடிவு செய்திருந்தோம்.

கேள்வி: தண்டனை பெற்று வரும் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என ஏன் நினைக்கின்றீர்கள்? முக்கியத்துவம் என்ன?

பதில்: நளினி 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். வெளி உலகையே காணாத, தனிமைச் சிறை! இரண்டு வயது வரை வளர்த்த குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு, அதை மீண்டும் காண முடியாமல் இருப்பது எத்தனை பெரிய கொடுமை! பிற கைதிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், உரிமைகள் நளினிக்கு மறுக்கப் படுகின்றன. ஆயுள் முடியும் வரை ஒரு கைதியை சிறைக்குள்ளே வைக்க வேண்டும்மென்பது "சீர்திருத்தத்" தை நோக்கமாகக் கொண்ட எந்த அரசுக்கும் நியாயம் அல்ல! நளினியின், அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இராபர்ட் பயால், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் விடயங்களில் நடப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்! மனிதாபிமனம் அறவே அற்றுப் போன அரசா அது? அப்படித்தான் எனில் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?

கேள்வி: நளினியை விடுதலை செய்வதற்குத் தமிழக மக்கள் உதவி செய்வார்களா? அவர் குற்றம் செய்தவர் அல்லவா?

பதில்: தமிழக மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறுகிறோம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நளினி குற்றம் செய்தவர் தான். ஆனால் என்ன குற்றம் செய்தார் என்பதை சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும். அவர் தற்கொலைப் படையில் ஒருவர் என்றும், கொலையாளிகளுக்கு அவர்களின் நோக்கம் நிறைவேற உதவி செய்தார் என்றும் அதற்காக சதி செய்தார் என்றும் ஊடகங்களால் பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டே - அரசு வைக்கும் குற்றச் சாட்டே - அவர் குற்றம் நிகழ்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு அதை அறிந்திருந்தார் என்பது தான். அதற்கு ஒரே ஆதாரமாக அவர்கள் முன்வைப்பது நளினியின் " ஒப்புதல் வாக்குமூலத்" தைத் தான். " ஒப்புதல் வாக்குமூலத் "தில் என்ன வேண்டுமென்றாலும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மை. மூவர் கொண்ட நீதிபதிக் குழுவில் ஒருவரான நீதிபதி தாமாஸ் நளினியில் சகோதரர் பாக்கிலராதனின் வாக்குமூலமான " குற்றம் நடந்த பிறகே நளினி அதை அறிந்தார் " என்பதை நம்பி, மேற்கோள் காட்டுகிறார். தன்னை அறியாமல் கொலையாளிகளுடன் நளினி இருந்தார், உதவி செய்தார் என்பதே சாரம்!

என்ன குற்றம் செய்திருந்தாலும் 17 ஆண்டு தனிமைசிறைவாசம் போதுமானது. இனியும் தாமதிக்காமல் அவர் உட்பட நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

கேள்வி: பிரியங்கா நளினியை சந்தித்ததற்கும், தங்கள் கையெழுத்து இயக்கத்திற்கும் எதேனும் தொடர்பு உண்டா?

பதில்: இல்லை, நாங்கள் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்தது 2006 ஆம் ஆண்டு இறுதியில். பிரியங்கா சந்திப்பு 2008 ஆரம்பத்தில்!

கேள்வி: நளினியை விடுதலை செய்வார்களா?

பதில்: நளினி உட்பட நால்வரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே நமது கோரிக்கை. முயற்சி தொடர்கிறது.

கேள்வி: நளினியை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளீர்கள். அதே போல் இலங்கையில் தமிழர்களை இலங்கை அரசாங்கம் அழித்து வருகிறது. இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஈழத்தமிழர்களின் நிலைமைகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறுவீர்களா?

பதில் : இலங்கையில் நடப்பது இனப்படுகொலை. இலங்கை அரசாங்கம் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது. பிற நாடுகளில் நடைபெறும் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் பாரா முகமாக இருப்பதற்குக் காரணம் முதன்மையாக இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே! இரண்டாவதாக இந்திய அரசை வற்புறுத்த இயலாத, விரும்பாத தமிழக அரசு! எல்லாவற்றிற்கும் மேலாக, தன் இனம் அழிகிறதே என்ற எந்த பதைப்பும் இன்றி தன் நலமே பெரிது என்று உண்டு, உறங்கி வாழும் தமிழ்மக்கள்!

தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்காத வரை ஈழத்தமிழர்களின் நிலமை இதுதான்!

தமிழகத்தில் உள்ள சிறு தமிழ் இயக்கங்கள், தமிழ் உணர்வாளர்கள், சிறிது மனசாட்ச உடையவர்கள் இன்னும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என கவிஞர் தாமரை தமிழ்செய்திக்கு மின்னஞ்சல் ஊடாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

http://www.tamilseythi.com/interview/thama...2008-11-06.html

- நேயர்காணல்: தமிழ்செய்தி நிருபர்

  • கருத்துக்கள உறவுகள்

இவவுக்குத்தான் ஈழத்தமிழனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்

அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது

ஆனால் நாங்கள் கொடுத்தது போதாது என்பதனால் வருவதை வேண்டாம் என்று சொல்ல மனம் கூசுகிறது.............???

  • கருத்துக்கள உறவுகள்

Vishal's relief for Lankan Tamils

IndiaGlitz [Thursday, November 06, 2008]

Actor Vishal met the Chief Minister of Tamilnadu M. Karunanidhi earlier today (Nov 6) and handed over a cheque of Rupees 3 lakhs as his contribution to help battered Tamils who are killed, displaced and wounded in the ethnic war raging in the island nation.

vishal0611082wv3.jpg

Earlier, Vishal had said during the Fast conducted by the Nadigar Sangam that he would be contributing 3 lakhs. As reported earlier almost all prominent actors of Tamil Cinema contributed towards the relief fund and an amount of 55 lakhs was raised.

http://www.indiaglitz.com/channels/tamil/article/42823.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.