Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்?

Featured Replies

கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

-விமல்

இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

***

அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

http://www.tamilseythi.com/kaddurai/vethim...2008-11-07.html

குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு எழுதப்பட்டது அல்ல!

புஷ், அப்துல்கலாம், ஒhபமா! ம் நல்ல கற்பனை!

யதார்த்தம் இது தான்!

முதல் கறுப்பர் என்ந தகமை மட்டும் வைத்து ஜனாதிபதியாக முடியாது!

அமரிக்க வரலாற்றில் மிகவும் சிறந்த ஒரு அறிவாளி தற்போது தான் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்!

அப்துல்கலாம் ஜனாதிபதி பதவி வெறும் ஆமா போடும் ஒரு வெற்றுப்;பதவி!

புஷ் ஒரு அறீவினம் அற்ற மரமண்டை!

கிளின்டன் அமரிக்காவில் ஏற்படுத்திய மாற்றத்தை விட பல மாற்றங்கள் ஒபாமாவால் செய்யமுடியும்! அதற்கான சான்று தற்போது அவர் அமைத்துள்ள அவரின் ஆட்சியதிகார அணி!

18 மாத காலத்துள்ள ஈராக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்!

ஆப்கானிஸ்தானில் தேவைப்படும் கூடுதல் படையணி!

அமரிக்க பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம்!

இவை தான் ஒபாமாவின் ஆட்சி வெற்றிக்கான அடிக்கற்கள்!

மீதியை பொறுத்தழருந்து பார்ப்போம்!!!

வேதிமாறன் என்ற பூதம் கிணத்தை விட்டு இன்னும் தலையை தூக்கி பார்க்க இல்ல போல :D என்ன முட்டாள்தனமான கருத்துகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா, அமெரிக்காவின் அண்மைய ஜனாதிபதிகளில் மிகுந்த அறிவுத் திறனுள்ளவர். மிகச் சிறந்த திட்டமிடலாளர், ஒருங்கிணைப்பாளர், கொள்கைப் பிடிப்பாளர்.

இளைய வயதினரையும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களையும் வெளி நீரோட்டத்துக்கு இழுத்து வந்தவர்.

மக்கள் சார்பாகப் பேசும் உணரும் திறனுள்ளவர்.

இன்றுல்ல உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியிலிருந்து மீளும் ஏணியாகத்தான் சர்வதேசம் அவரைப் பார்க்கிறது.

அவரின் வெற்றி சர்வதேசத்துக்குக் கிடைத்த வெற்றி.

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

கடந்த 8 வருடங்களாக அமஎரிக்காவில் நடந்து வந்த சரித்திரத்திலேயே மிகவும் முட்டாள்த்தனமான ஆட்சி என்று எல்லாராலும் கருதப்படும் ஜார்ஜ் புஷ் எனும் கோமாளியின் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கும், உலகத்துக்கு மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பெயருக்காக கதிரையில் அமர்ந்து பிரதம விருந்தினராக மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அட்டைக் காகிதத்தை பராக் ஒபாமா எனும் செயல் வீரனுடன் ஒப்பிட வேண்டாம் !

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியரை ஆலோசகராக நியமித்தார் ஒபாமா!

வெள்ளி, 7 நவம்பர் 2008( 05:02 IST )

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது ஆலோசகராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநர் சோனல் ஷாவை தேர்வு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் சோனல் ஷா இடம்பெறுவார். கூகிள் நிறுவனத்தின் பிலந்த்ரோபிக் பிரிவிற்கு சோனல் தலைமை வகித்து வந்துள்ளார்.

40 வயதாகும் சோனல் ஷா, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று அனுபவம் பெற்றவர். இவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/i...081107013_1.htm

Edited by nunavilan

ஒபாமா, அமெரிக்காவின் அண்மைய ஜனாதிபதிகளில் மிகுந்த அறிவுத் திறனுள்ளவர். மிகச் சிறந்த திட்டமிடலாளர், ஒருங்கிணைப்பாளர், கொள்கைப் பிடிப்பாளர்.

இளைய வயதினரையும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களையும் வெளி நீரோட்டத்துக்கு இழுத்து வந்தவர்.

மக்கள் சார்பாகப் பேசும் உணரும் திறனுள்ளவர்.

இன்றுல்ல உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியிலிருந்து மீளும் ஏணியாகத்தான் சர்வதேசம் அவரைப் பார்க்கிறது.

அவரின் வெற்றி சர்வதேசத்துக்குக் கிடைத்த வெற்றி.

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

கடந்த 8 வருடங்களாக அமஎரிக்காவில் நடந்து வந்த சரித்திரத்திலேயே மிகவும் முட்டாள்த்தனமான ஆட்சி என்று எல்லாராலும் கருதப்படும் ஜார்ஜ் புஷ் எனும் கோமாளியின் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கும், உலகத்துக்கு மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பெயருக்காக கதிரையில் அமர்ந்து பிரதம விருந்தினராக மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அட்டைக் காகிதத்தை பராக் ஒபாமா எனும் செயல் வீரனுடன் ஒப்பிட வேண்டாம் !

சரியாகச் சொல்லியிருக்கீங்க.

ஆனா இன்னொரு தலைப்பாய் வைத்த தலையாட்டியை பற்றி சொல்ல மறந்தீட்டீங்க! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

உண்மைதான்... ஆனால் ஐநாவின் அதிகாரங்கள் தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகளின் அதிகாரங்களுக்குள் கட்டுப்பட்டே இயங்குகின்றது.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

வேதிமாறன் என்ற பூதம் கிணத்தை விட்டு இன்னும் தலையை தூக்கி பார்க்க இல்ல போல என்ன முட்டாள்தனமான கருத்துகள்

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

இங்கே ஒபாமாவுடன் அப்துல்கலாம் ஒப்பிடவில்லை. பா ஜ க மற்றும் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்கள் , அதன் அடுத்த கட்ட நீட்சிகள் இனம்காணப்படுகின்றது.

ஒபமாவின் வெற்றி என்பதை இன வெறி அல்லது நிறவெறி எனபதற்கு எதிரான புரட்சி தீர்மானிக்கவில்லை மாறாக ஏகாதிபத்தியம் சந்தித்த பொருளாதாரத தோல்வி தீர்மானிக்கின்றது.

ஒபமா உள்நாட்டு பொருளாதரத்தை கட்டியெழுப்ப ஈராக்கில் இராணுவ நடவடிக்கைக்கு செலவிடும் தொகையை திருப்ப போவதாக சொல்கின்றார் தவிர ஈராக் மக்கள் மீது உள்ள மனிதாபிமானம் படைகளை மீளப்பெறுவதற்கு முதற்காரணம் அல்ல.

ஏகாதிபத்தியம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் ஈராக் என்னும் நாடே சிதைவடைந்து விட்டது. பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து விட்டார்கள். இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக வடிவமாக ஒபாமா காட்சி தருகின்றார். தவிர ஒபமா ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டுவர ஆட்சிபீடத்தில் ஏற்றப்பட்டவரும் இல்லை, ஏறியவரும் இல்லை. ஆனால் மிதமிஞ்சிய ஏகாதிபத்தியத்தின் போக்குக்கு ஒபாமாவின் வரவு ஒரளவாவது தடுப்பாக அமையும் என்று உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தங்களின் போக்கு மிகத்தவறானது, திருத்தங்கள் கொஞ்சம் வேண்டும் என்பதை ஒபாமவை தேர்ந்தவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சில மாற்றங்களுக்கு முதற்படியாக இது அமையலாம்.

சிறந்த பார்வை.

சமூகத்தின் அடிப்படையில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல், அதன் போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியவே முடியாது. அதே அமெரிக்க முதலாளித்துவ அமைப்பில் ஒபாமா இன்னுமொரு சனாதிபதி. அவரின் கருத்த நிறமும், கவார்ட் பல்கலைகழக (Howard university) பட்டமும் உலகில் பெரும் மாற்றத்தினை கொண்டு வரும் என நம்ப எந்த அடிப்படையும் இல்லை. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் ஏனைய சனாதிபதிகளை போன்ற கருத்தை வைத்துள்ள இவரால், மற்றைய விடயங்களில் முக்கியமாக தேசிய இனங்களின் விடுதலை தொடர்பாக பெரிய மாற்றத்தினை கொண்டு வர முடியும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இஸ்ரேலின் இருப்பை முற்று முழுதாக மறுக்கும் ஈரானுடனும், கமாஸ்(Hamas)/கிஸ்புள்ளா (Hizbullah ) இயக்கங்களுடன் அமைதி முயற்சியில் ஈடுபட்டு எவ்வாறு மத்திய கிழக்கில் நிரந்திர அமைதியினை ஏற்படுத்த முடியும்?

இவரின் கையாளும் முறை, புஷ்களின் முறையில் இருந்து வேறு படலாம். சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும், அமெரிக்க முதலாளித்துவ முறையில் புதிய நுட்பங்களை புகுத்தி முன்னெடுக்கலாம், ஆனால் ஒபாமாவின் இறுதி இலக்கு, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்கத்தினை மேலும் உறுதிப் படுத்துவதாகவே அமையும்

-நிழலி-

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பார்வை.

இவரின் கையாளும் முறை, புஷ்களின் முறையில் இருந்து வேறு படலாம். சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும், அமெரிக்க முதலாளித்துவ முறையில் புதிய நுட்பங்களை புகுத்தி முன்னெடுக்கலாம், ஆனால் ஒபாமாவின் இறுதி இலக்கு, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்கத்தினை மேலும் உறுதிப் படுத்துவதாகவே அமையும்

-நிழலி-

ஒபாமா அமெரிக்காவின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவரேயன்றி உலக மக்களுக்குக் கடமைப் பட்ட தலைவரல்லவே. அமெரிக்காவின் நலனைப் புறந்தள்ளி உலக சமாதான புருஷராக வருவார் என எதிர் பார்ப்பது அறிவீனம். ஆனால் அமெரிக்க நலனை புஷ் போல மோட்டுத் தனமான வழிகளில் முன்னெடுத்து பகை வளர்க்க மாட்டார் என்று மட்டும் எதிர் பார்க்கலாம். இஸ்ரேலைத் தாண்டி பலஸ்தீனத்தை ஆதரித்த முன்னாள் ஜனாதிபதியும் இருக்கிறார்: ஜிம்மி கார்ட்டர். அவரைப் போல ஒருவராக ஒபாமா வருவார். ஆனால் அதற்காக யூதர்ளிடமிருந்து விலகிக் கொள்வார் என்று எதிர் பார்ப்பது முட்டாள்தனம்.

வேதிமாறன் போன்ற அரைவேக்காடுகளின் பதிவு சிரிக்கவேவைக்கிறது :(

கிணத்து தவளை :(

விமர்சிக்கும் நன்பர்கள் மதிமாறன் எழுதியிருப்பதில் எது தவறு என்பதை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வது சரியல்ல. ஊடகங்கள் உறுவாக்கும் மாயத்தோற்றத்தில் நாம் யதார்த்த்ததை மறக்க கூடாது. இந்தியா அப்துல் கலாமை கொன்டாடியதும், உலகம் கோஃபி அன்னானை கொண்டாடியதும் அவர்களின் நிறம், இனம், மதம் இவற்றை வைத்துத்தான், (கலாமுக்கு அறிவாளி என்ற ஒளிவட்டம் வேறு) . புஷ்ஷை விட 'அதிகாரமிக்க' பதவியில் இருந்த கனடலீசா ரைஸ் கருப்பர் இனம் தானே அவர் காலத்தில் தான் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பொருளாதாரம் மற்றும் இராணுவ அடக்குமுறை ஏவப்பட்டது...ஒபாமாவைப் பற்றிய எனது கருத்துக்களை இரு பதிவுகளாக . இட்டுருக்கிறேன். படித்துப்பாருங்கள் ....

http://vinavu.wordpress.com/2008/11/06/obama2/ மற்றும்

http://vinavu.wordpress.com/2008/11/05/obama1/

ஒருவர் பதவிக்கு வருவதற்கு முன்னமே , இந்திய அதிபரையும் அமெரிக்க அதிபரையும் ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்து வேதிமாறனின் உலக அறிவு தெரிகிறது.

எந்த அதிபர் வந்தாலும் பாதுகாப்பு துறைகளில் பெரிய மாற்றம் உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்படாது. அது ஒரு புரட்சியாலன்றி...

இந்திய அதிபர்கள் முன்னைய இலங்கை அதிபர் வில்லியம் கொபல்லாவ போன்றவர்கள்.

இவர்கள் நீட்டும் பைலில் கையெழுத்திட , விருந்துகளுக்கு தலைமைதாங்க ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு தேவையானவர் ஒருவரே தேர்வாகிறார். மக்களால் தேர்வுசெய்யப்படுபவர் அல்ல.......

அமெரிக்க அதிபர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர். அவருக்கு மாற்றங்களை கொண்டு வர சக்தியுண்டு.

இந்திய அதிபருக்கு அந்த சக்தி உள்தென்றால் இலங்கை அதிபர் மகிந்த , இந்திய பிரதமர் சிங்கோடு ஏன் பேசவேண்டும். இந்திய அதிபரோடு பேசலாமே?

இந்திய பிரதமர் போர் நிறுத்தம் செய்ய சொல்லி இலங்கை பிரதமரோடல்லவா பேசவேண்டும்?

அவர் ஏன் மகிந்தவோடு பேசுகிறார்?

இதையே புரியாத ஒரு அரைவேக்காடு வேதிமாறன் :(

இந்திய அதிபர் இலங்கை பிரதமரைவிட சக்தியில்லாதவர் :(

ஐநா செயலாளர் நாயகம் என்பது பலம் பொருந்திய நாடுகள் தேர்வு செய்யும் ஒருவர்.

அதிகமாக அவர்கள் சொல்வதற்கு அதிகம் கட்டுப்படுவார்கள். அதுவே தெரியும் யதார்த்தம்.

வல்லரசுகள் சொல்வதை இவர்கள் சொல்வார்கள் அவ்வளவுதான்? :(

கொண்டலிசா ரைசென்பவர் யார்? அவர் அமெரிக்க அதிபரல்ல? அமெரிக்க அதிபர் சொல்லவேண்டியதை சொல்லச் செல்லும் பணியாளர்.

மறைந்த தமிழ்செல்வன் , பாலசிங்கம் போன்றோர் பேச்சு வார்த்தைகளுக்கு போனாலும் எதையும் முடிவெடுக்க முடியாது. முடிவு தமிழீழ அதிபர் கையில். இதுதான் நிசம்.

நாயைவிட கேவலமான ஒரு நிலையில் இருந்த நீக்ரோ இன கறுப்பின அடிமைகளின் வழி வந்த ஒருவர் இன்று அவர்களுக்கே அதிபராகி உலகமே வியக்கும் நிலையில் இருக்கும் போது கோபி அண்ணாவையும் கொண்டேலிசாவையும் அப்துல் காலமையும் ஒப்பிடுவதில் தெரிவது என்ன?

அபதுல்கலாம் அறிவாளியிலை என்பதல்ல பொருள். அவர்களுக்கு அந்த தகுதி மரியாதையின் நிமித்தம் கிடைப்பதேயன்றி அவர்களால் எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது.

ஒபாவை மேற்கோள் காட்டி இலங்கையிலும் ஒரு தமிழரோ ஒரு முஸ்லீமோ அதிபராகும் நிலை வரும் என்று ரொபெட் பிளேக் கூறியதிலிருந்து இது ஒரு முன்மாதிரி என்பதே உண்மை.

உலகத்தில் பெரும்பாலான வெள்ளை இன மக்களே பாரக் ஒபாவின் வரவையொட்டி மகிழும் ஒரு நேரத்தில் வாழ்த்த மனசு கூட இல்லாமல் இந்த கரிஅமில வாயுவுக்கு என்ன பதிவு வேண்டியிருக்கு?

Edited by Thalaivan

முதலில் கட்டுரையாளர் அப்துல்கலாமையும், ஒபாமாவையும் ஒப்பிடுவதே தவறு. காரணம் இந்தியாவில் ஜனாதிபதியை விட பிரதமருக்கே கூடுதலான அதிகாரம் உள்ளது. முன்பு ஜே.ஆர் காலத்திற்கு முன்புவரை இலங்கையிலும் இதே நிலைமையே இருந்தது. பின்பு ஜே.ஆரால் இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது.

மேலும் ஐ.நாவில் செயலாளராக யார் வரலாம் என்பதை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளே தீர்மானிக்கின்றன. காரணம் ஐ.நாவிற்கு தேவையான நிதியின் பெரும் பகுதிகளை இவ்விரு நாடுகளுமே வழங்கி வருகின்றன. அந்தத் தைரியத்தில் தான் ஐ.நா செயலாளரை தமது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றபடி ஆட்டிப் படைக்கின்றார்கள்.

மேலும் ஒபாமாவின் தெரிவானது இன்று உலகில் வாழும் பெரும்பாண்மையான கறுப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அதனால் அவர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்களா?? ஒபாமாவின் தெரிவென்பது பெரிதாக உலகில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரா விட்டாலும் நிச்சயமாக புஸ்ஸைப் போல் போர் வெறி பிடித்து அலையும் ஆட்சியாக இருக்க மாட்டாது. புஸ்ஸின் போர் வெறி தான் இன்று அமெரிக்காவின் பொருளாதார பாதிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளதை அமெரிக்க மக்களும் தற்போது உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சில மாற்றங்களை நிச்சயம் செய்தே ஆக வேண்டிய சூழ்நிலை தற்போது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் பதவிக்கு வருவதற்கு முன்னமே , இந்திய அதிபரையும் அமெரிக்க அதிபரையும் ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்து வேதிமாறனின் உலக அறிவு தெரிகிறது.

எந்த அதிபர் வந்தாலும் பாதுகாப்பு துறைகளில் பெரிய மாற்றம் உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்படாது. அது ஒரு புரட்சியாலன்றி...

இந்திய அதிபர்கள் முன்னைய இலங்கை அதிபர் வில்லியம் கொபல்லாவ போன்றவர்கள்.

இவர்கள் நீட்டும் பைலில் கையெழுத்திட , விருந்துகளுக்கு தலைமைதாங்க ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு தேவையானவர் ஒருவரே தேர்வாகிறார். மக்களால் தேர்வுசெய்யப்படுபவர் அல்ல.......

அமெரிக்க அதிபர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர். அவருக்கு மாற்றங்களை கொண்டு வர சக்தியுண்டு.

இந்திய அதிபருக்கு அந்த சக்தி உள்தென்றால் இலங்கை அதிபர் மகிந்த , இந்திய பிரதமர் சிங்கோடு ஏன் பேசவேண்டும். இந்திய அதிபரோடு பேசலாமே?

இந்திய பிரதமர் போர் நிறுத்தம் செய்ய சொல்லி இலங்கை பிரதமரோடல்லவா பேசவேண்டும்?

அவர் ஏன் மகிந்தவோடு பேசுகிறார்?

இதையே புரியாத ஒரு அரைவேக்காடு வேதிமாறன் :lol:

இந்திய அதிபர் இலங்கை பிரதமரைவிட சக்தியில்லாதவர் :D

ஐநா செயலாளர் நாயகம் என்பது பலம் பொருந்திய நாடுகள் தேர்வு செய்யும் ஒருவர்.

அதிகமாக அவர்கள் சொல்வதற்கு அதிகம் கட்டுப்படுவார்கள். அதுவே தெரியும் யதார்த்தம்.

வல்லரசுகள் சொல்வதை இவர்கள் சொல்வார்கள் அவ்வளவுதான்? :)

கொண்டலிசா ரைசென்பவர் யார்? அவர் அமெரிக்க அதிபரல்ல? அமெரிக்க அதிபர் சொல்லவேண்டியதை சொல்லச் செல்லும் பணியாளர்.

மறைந்த தமிழ்செல்வன் , பாலசிங்கம் போன்றோர் பேச்சு வார்த்தைகளுக்கு போனாலும் எதையும் முடிவெடுக்க முடியாது. முடிவு தமிழீழ அதிபர் கையில். இதுதான் நிசம்.

நாயைவிட கேவலமான ஒரு நிலையில் இருந்த நீக்ரோ இன கறுப்பின அடிமைகளின் வழி வந்த ஒருவர் இன்று அவர்களுக்கே அதிபராகி உலகமே வியக்கும் நிலையில் இருக்கும் போது கோபி அண்ணாவையும் கொண்டேலிசாவையும் அப்துல் காலமையும் ஒப்பிடுவதில் தெரிவது என்ன?

அபதுல்கலாம் அறிவாளியிலை என்பதல்ல பொருள். அவர்களுக்கு அந்த தகுதி மரியாதையின் நிமித்தம் கிடைப்பதேயன்றி அவர்களால் எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது.

ஒபாவை மேற்கோள் காட்டி இலங்கையிலும் ஒரு தமிழரோ ஒரு முஸ்லீமோ அதிபராகும் நிலை வரும் என்று ரொபெட் பிளேக் கூறியதிலிருந்து இது ஒரு முன்மாதிரி என்பதே உண்மை.

உலகத்தில் பெரும்பாலான வெள்ளை இன மக்களே பாரக் ஒபாவின் வரவையொட்டி மகிழும் ஒரு நேரத்தில் வாழ்த்த மனசு கூட இல்லாமல் இந்த கரிஅமில வாயுவுக்கு என்ன பதிவு வேண்டியிருக்கு?

அப்போ இலங்கையில் தமிழர் ஒருவர் இலங்கை அதிபரானால் தமிழர் பிரச்னை தீர்ந்துவிடுமா???

அப்போ இலங்கையில் தமிழர் ஒருவர் இலங்கை அதிபரானால் தமிழர் பிரச்னை தீர்ந்துவிடுமா???

:lol: உலக மக்களின் பிரச்சனையே தீர்ந்து விடும் .தமிழன் அமேரிக்காவுக்கு ஜனாதிபதியானால் பிறகு பிரச்சனை என்ற வார்த்தையே உலகில் இருக்காது. :)

வே. மதிமாறன் அவர்களின் பதிவுக்கு நன்றி!

நல்ல கருத்துகளை ஆதரிப்பதில் தவறில்லை.

இந்த பதிவு ஒரு மட்டமான பதிவு :rolleyes: மட்டுமல்ல

உலக அறிவே இல்லாத பதிவு

Edited by Thalaivan

நல்ல கருத்துகளை ஆதரிப்பதில் தவறில்லை.

இந்த பதிவு ஒரு மட்டமான பதிவு :rolleyes: மட்டுமல்ல

உலக அறிவே இல்லாத பதிவு

இது ஒரு மட்டமான பதிவு என்று நீங்கள் கருதினால், அது ஏன் என்று உங்களின் கருத்துகளை கூறி விவாதியுங்கள். அவ்வாறு செய்யாமல் வெறும் தட்டையாக சொன்னதை திருப்பி திருப்பி சொல்வதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. உங்களைப் போல எல்லோரையும், கண்ணை மூடிக்கொண்டு, அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்

Edited by NIZHALI

நான் கறுப்பன் அதனால் ஆதரிக்கிறேன். போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

எங்கே இருக்குறீர்கள்

காலைத்தொட்டு கும்பிடணும்போல இருக்கு..............?????

இதுதான் இந்த நூற்றாண்டுக்கான பகிடி

விமர்சிக்கும் நன்பர்கள் மதிமாறன் எழுதியிருப்பதில் எது தவறு என்பதை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வது சரியல்ல. ஊடகங்கள் உறுவாக்கும் மாயத்தோற்றத்தில் நாம் யதார்த்த்ததை மறக்க கூடாது. இந்தியா அப்துல் கலாமை கொன்டாடியதும், உலகம் கோஃபி அன்னானை கொண்டாடியதும் அவர்களின் நிறம், இனம், மதம் இவற்றை வைத்துத்தான், (கலாமுக்கு அறிவாளி என்ற ஒளிவட்டம் வேறு) . புஷ்ஷை விட 'அதிகாரமிக்க' பதவியில் இருந்த கனடலீசா ரைஸ் கருப்பர் இனம் தானே

அடடா அப்படியா??

யாரெல்லாம் உலக அனுபவம் உள்ளவர்கள் என்பதை பதிவுகள் : பதில்கள் மூலம் இப்போதுதான் தெரிகிறது :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.