November 8, 200817 yr கருத்துக்கள உறவுகள் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2000 தொன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்க நிர்வாகியிடம் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இலங்கையில் இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 80 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்காக துணி வகைகள், அரிசி, பருப்பு, சீனி, மருந்து பொருட்கள், தேயிலை, சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, ஆடைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகள் தயாரிக்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கொழும்பு ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ரீஸ் நேற்று மாலை தலைமைச் செயலகம் வந்தார். முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர், அவரிடம் நிவாரணப் பொருட்களை கருணாநிதி ஒப்படைத்தார். பொருட்களை பெற்றுக் கொண்ட பின் தாமஸ் கூறியது: பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு 80 ஆயிரம் பொதிகளில் நிவாரணப் பொருட்களை தந்துள்ளது. இவை மிகுந்த தரமானவையாகும். இதன் எடை 2000 தொன்களாகும்.இந்த நிவாரணப் பொருட்கள் உடனடியாக இந்திய அரசு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்திய தூதரகம் மூலம் சிறீலங்கா அரசிடமிருந்து அவற்றை பெற்று நாங்களே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவோம். இம்மாத இறுதிக்குள் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு தாமஸ் கூறினார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘முதல்வர் வேண்டுகோளுக்கேற்ப நிதி உதவி, நிவாரணப் பொருட்கள் 10 கோடிக்கு ரூபா சேர்ந்துள்ளது. முதல் கட்டமாக 2000 தொன் நிறையுள்ள இந்த நிவாரணப் பொருட்கள் சென்னையிலிருந்து வரும் 8 அல்லது 9ம் திகதி கப்பல் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும். அவை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த பணியை கண்காணிக்கும் பொறுப்பை மத்திய வெளியுறவுத் துறை ஏற்றுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
November 8, 200817 yr என்ன................. ரெண்டர, மூண்டு நாள் சாப்பாடாக்கும் பிச்சை வேண்டாம் நாயை புடி பெரிசு....!
November 8, 200817 yr கருத்துக்கள உறவுகள் இந்தப்பருப்பு அவியுமா ? மருந்து வாகன தொடரணிக்கே அனுமதியை இழுதடிக்கிரார்கலாம் ...இடையில் உள்ள வைக்கோல் பட்டரை நாய்கள் . சாமி விடை கொடுத்தாலும் பூசாரி .......எதோ முயற்சி தானே ............செய்து பாருங்கள் .
November 8, 200817 yr கருத்துக்கள உறவுகள் இந்த பணியை கண்காணிக்கும் பொறுப்பை மத்திய வெளியுறவுத் துறை ஏற்றுள்ளது நல்ல கண்காணிப்பாளர்கள். 15 கடல் மைல் தூரத்தில் இருக்கும் மக்களுக்கு ஏன் கொழும்புக்கு கொண்டு போய் சுற்றி வளைத்துக் கொண்டு வருகிறார்கள். கண்காணிப்பாளர்கள் ஒரு தமிழனையாவது சேர்த்திருக்கக் கூடாதா?இனி பாதுகாப்புதுறை அனுமதி அது, இது என்று இழுத்தடிச்சு எப்ப போய்ச் சேருமோ? ஆனால் நாளை முரசொலியில் கவிதை கண்டிப்பாக வரும்.உடன் பிறப்பே "ஈழத் தமிழனின் இன்னல் அகன்றது".
November 8, 200817 yr கருத்துக்கள உறுப்பினர்கள் பாலைக்காய்ச்சி பூனையளை காவலுக்கு விட்டமாதிரிகிடக்கு உங்கடை நடவடிக்கைகள் ஐயோ.....ஐயோ நீங்களும் உங்கடை கோவண அரசியலும் ????????????????
November 8, 200817 yr கருத்துக்கள உறவுகள் அது எப்படி ? இந்தியத் தூதரகத்திடமிருந்து சிங்கள அரசுக்கு, பின்னர் அவர்களிடமிருந்து செஞ்சிலுவைச் சங்கத்துக்கா? இது எமது மக்களைப் போய்ச் சேருமா? சுனாமி அழிவின்போது வடக்குக் கிழக்குக்கென அனுப்பப்பட்ட பொருட்கள் இன்னும் கொழும்புத் துறை முகத்தில் கிடப்பது இவர்களுக்குத் தெரியாதா ? இது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதை !!!!ஏதோ செய்யுங்கள் !
November 9, 200817 yr குறுக்குவழியில் செல்லுதே என் குறளோவியம் அரசியல் குறுக்குவழியில் மட்டும் அல்ல நேர்வழியிலும் செய்யலாம்! என்ன அதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்!! அவ்வளவு தான்!!! Edited November 9, 200817 yr by vettri-vel
November 9, 200817 yr கருத்துக்கள உறவுகள் குறுக்கு வழியில் வாழ்வு தேடும் திருட்டு உலகமடா ?" நல்ல தொரு தத்துவ பாடல் ...........என்ன செய்வது ? நானும் நீங்களும் அந்த உலகத்தில் தான் வாழ்கிறோம் .........பதிவுக்கு நன்றி ...
November 9, 200817 yr கருத்துக்கள உறுப்பினர்கள் முதல் நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி,நாங்கள் கேட்டது உணவு அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் அறிவீர்கள் ஆகவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் நீங்கள் செய்தது எம் மக்களை திருப்திபடுத்துமா ?
November 9, 200817 yr கலைஞருக்கு நன்றிகள். எம்மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் நிரந்தர தீர்வு அளிக்கா விட்டாலும் சற்று ஆறுதலாவது அளிக்கும்.தொழில் வாய்ப்பு இல்லாது அந்தரிக்கும் உறவுகளின் மனோநிலையினை எமக்காக தமிழகம் உண்டு என்னும் ஒரு ஆறுதலை அவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும். இந்த உணவினை நிச்சயம் இலங்கை அரசு வழங்க அனுமத்திதே ஆகவேண்டும் ஏன் எனின் இந்தொய மத்திய அரசு நிச்சயம் தமிழக அரசியல் சூழ் நிலையை கருத்தில் கொண்டு நிச்சயம் அதனை உரியவரிடம் சேர்க்க அழுத்தங்களை கொடுத்தே தீரும். தமிழக மக்களிடம் இருந்து என்ற வாசகங்களோடு வரும் உணவு பொதிகள் அங்கு அவலப்படும் மக்களுக்கு ஒரு மனோதத்துவ ஆறுதலை நிச்சயம் கொடுக்கும் என்பதனை மறுக்க முடியாத உண்மை என நான் நம்புகிண்றேன் கலைஞரை வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள்.நடேசன் அண்ணாவின் அறிக்கைகளை உற்று பாருங்கள் அவர் கலைஞரை எவ்வாறு அரவனைத்து செல்கிறார்கள் என புரியும் அதேபோல உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை தாம் கொண்டு உள்ளதாக கூட அவர் சொல்லியுள்ளார்.சற்று நிதானமாக உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
November 9, 200817 yr கலைஞரை வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள்.நடேசன் அண்ணாவின் அறிக்கைகளை உற்று பாருங்கள் அவர் கலைஞரை எவ்வாறு அரவனைத்து செல்கிறார்கள் என புரியும் அதேபோல உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை தாம் கொண்டு உள்ளதாக கூட அவர் சொல்லியுள்ளார்.சற்று நிதானமாக உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் கலைஞர் தற்போது போய் கொண்டிருக்கும் பாதை காங்கிரசை டெல்லி அரியணையில் மறுபடியும் ஏற்றும் பாதை என்றே நான் நினைக்கிறேன்!!! இது ஈழத்தமிழருக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை நம்பலாம்!!! Edited November 9, 200817 yr by vettri-vel
November 9, 200817 yr கலைஞர் தற்போது போய் கொண்டிருக்கும் பாதை காங்கிரசை டெல்லி அரியணையில் மறுபடியும் ஏற்றும் பாதை என்றே நான் நினைக்கிறேன்!!! இது ஈழத்தமிழருக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை நம்பலாம்!!! இந்த விடயத்தில் கலைஞரை திட்டுவதை விடுத்து கொஞ்சம் விரிவாக பார்த்தால் கலைஞர் செய்த பெரிய நன்மை( எனக்கு தெரிய முதலாவது நன்மை) என்ன என்பது புரியும்.... இதுவரை ஈழத்தவரை பரிதாபமாக மட்டும் பார்த்து வந்த தமிழகம் இன்னல்களில் பங்காளிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.... 50 ரூபாவை தனது சேமிப்பாக கொடுத்த ஒரு கூலித்தொழிலாளி தனது அண்றாடம் சாப்பாடில் இருந்து விட்டு கொடுத்து இருக்கிறான்.... அவனால் ஈழத்தமிழருக்கு கொடுக்கப்பட்டது பணம் மட்டும் அல்ல அவனது வியர்வை சேர்ந்த இரத்தம்... இந்த பணத்தை வெறும் உதவியாக பார்க்காதீர்கள்... தமிழக மக்கள் இலங்கை படுகொலைக்கு எதிராக போடும் வாக்கு... இலங்கை ஆட்ச்சியாளர்களுக்கு எதிராக விடப்படும் எச்சரிக்கை.... இது ஈழத்தவரை மகிழ்ச்சி படுத்துவதுக்காக இல்லை... ஆனால் இலங்கை ஆட்ச்சியாளர்களை கலவரப்படுத்த போதுமானது....!! கலைஞர் நினைத்து இருந்தால் உதவிகளை தனது ஆட்ச்சி திறை சேரியில் இருந்தோ இல்லை மத்திய அரசிடம் வற்புறுத்தியோ வாங்கி கொடுத்து இருக்க முடியும்.... ஆனால் கலைஞர் போனது மக்களிடம்.... கார்கில் போரின் போது எப்படி 100 கோடி இந்தியர்களிடம் பணம் வசூலித்து பாக்கிஸ்தானுக்கு எதிராக மக்களை ஒண்று படுத்தினார்களோ அது போலதான் இது... அங்கு பணம் வசூலித்துதான் சண்டை பிடிக்கும் , இராணுவத்துக்கு உதவி செய்யும் நிலையிலா இந்தியா இருக்கிறது.....? Edited November 9, 200817 yr by தயா
November 9, 200817 yr இந்த விடயத்தில் கலைஞரை திட்டுவதை விடுத்து கொஞ்சம் விரிவாக பார்த்தால் கலைஞர் செய்த பெரிய நன்மை( எனக்கு தெரிய முதலாவது நன்மை) என்ன என்பது புரியும்.... இதுவரை ஈழத்தவரை பரிதாபமாக மட்டும் பார்த்து வந்த தமிழகம் இன்னல்களில் பங்காளிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.... 50 ரூபாவை தனது சேமிப்பாக கொடுத்த ஒரு கூலித்தொழிலாளி தனது அண்றாடம் சாப்பாடில் இருந்து விட்டு கொடுத்து இருக்கிறான்.... அவனால் ஈழத்தமிழருக்கு கொடுக்கப்பட்டது பணம் மட்டும் அல்ல அவனது வியர்வை சேர்ந்த இரத்தம்... இந்த பணத்தை வெறும் உதவியாக பார்க்காதீர்கள்... தமிழக மக்கள் இலங்கை படுகொலைக்கு எதிராக போடும் வாக்கு... இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக விடப்படும் எச்சரிக்கை.... இது ஈழத்தவரை மகிழ்ச்சி படுத்துவதுக்காக இல்லை... ஆனால் இலங்கை ஆட்ச்சியாளர்களை கலவரப்படுத்த போதுமானது....!! கலைஞர் நினைத்து இருந்தால் உதவிகளை தனது ஆட்ச்சி திறை சேரியில் இருந்தோ இல்லை மத்திய அரசிடம் வற்புறுத்தியோ வாங்கி கொடுத்து இருக்க முடியும்.... ஆனால் கலைஞர் போனது மக்களிடம்.... கார்கில் போரின் போது எப்படி 100 கோடி இந்தியர்களிடம் பணம் வசூலித்து பாக்கிஸ்தானுக்கு எதிராக மக்களை ஒண்று படுத்தினார்களோ அது போலதான் இது... அங்கு பணம் வசூலித்துதான் சண்டை பிடிக்கும் , இராணுவத்துக்கு உதவி செய்யும் நிலையிலா இந்தியா இருக்கிறது.....? கலைஞர் நிதி சேகரிப்பதையோ, உணவுப்பொருள் அனுப்புவதையோ நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அந்த உணவுப்பொருள்களூடன் சிறிலங்கா அரசுக்கு ஒரு கடுமையான செய்தி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதாவது அந்த உணவுப்பொருள்களை ஈழத்தில் கையளிக்கும் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். இது ஈழப்பிரச்சினையில் தமிழகத்தின் செல்வாக்கை சிங்களவர்களுக்கு உறைக்கும் வண்ணம் சொல்லியிருக்கும். ஆனால் காங்கிரசின் தேர்தல் கூட்டை கருதி கலைஞர் டெல்லி ஆட்சியின் மேல் லேசான அழுத்தங்களை கூட பிரயோகிக்க தயாராகவில்லை. அப்படி டெல்லியின் மேல் சில நியாயமான அழுத்தங்களையாவது பிரயோகிக்கும் தைரியம் கலைஞரிடம் உருவாகாத வரை ஈழத்தமிழரின் படுகொலைகளுக்கு மறைமுக பங்காளியாக செயற்படும் கயமையை காங்கிரஸ் ஆட்சி கைவிடப்போவதில்லை. Edited November 9, 200817 yr by vettri-vel
November 9, 200817 yr கருத்துக்கள உறுப்பினர்கள் TRO க்கு எங்கட ஆட்கள் கொடுக்கிற காசு காணாதாம். சும்மா குறணி செய்து கொண்டிருக்காமல் அந்தச் சனம் சாப்பாடு ஆவது கிடைத்து சாப்பிடட்டும் எண்டு சும்மாயிருங்கோ.
November 9, 200817 yr கருத்துக்கள உறவுகள் என்ன................. ரெண்டர, மூண்டு நாள் சாப்பாடாக்கும் பிச்சை வேண்டாம் நாயை புடி பெரிசு....! உண்மையில் பிச்சை வேண்டாம் நாயை புடி என்ற இந்த முதுமொழிக்கு ஈழத்தமிழரும் இந்தியாவுமே உண்மையான உதாரணங்கள் இதற்குமேல் இதற்கு விளக்கம் தேவையில்லை நன்றி
Archived
This topic is now archived and is closed to further replies.