Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவையும் இராணுவத்தினரையும் வாழ்த்தி யாழ். மீனவர் ஊர்வலம்

Featured Replies

இப்ப யாராவது உங்கடை கருத்தை சொல்லவேண்டாம் எண்டு சொன்னவையா?? வாழ்த்திறது கூட பிடிக்கேல்லையா?? சரி அப்ப மாற்றுக்கருத்து மாணிக்கம் எண்டொரு பட்டத்தை தரலாமென யோசிக்கிறன் அதுக்கும் வந்து பேசக்கூடாது.

எனக்கே அப்ப அப்ப நடுநிலைவாதி ஆகிவிடலாம என்று என்ன தோனுகிறது என்ன 22400 க்கு மேற்ப்பட்ட மாவீரர்களின் வீரச்சாவும் ஒன்றுமே அறியாமல் தமிழீழம் அமைப்போம் என்று மட்டும் இன்றும் மாண்டு கொள்ளும் போராளிகலின் தியாகமும் அப்படி பேச விடுவதில்லை........

அரசியல் = அலசுவதுக்கும்,ஆய்வுகலுக்கூம

  • கருத்துக்கள உறவுகள்

அதாலதான் நெடுக்காலபோவான் பயங்கரவாதம் - பயங்கரவாதிகள் எண்டு முத்திரை குத்தப்பட்டது. அப்ப மக்கள் போராட்டம் எண்டுறத மண்டையில போடுற போராட்டம் எண்டு பெயரை மாத்தலாம். கருத்துக்களை சரியான முறையில எதிர்கொள்ளமுடியாத வேளைகளில எம்மவர்களுக்கு தெரிஞ்ச ஒரே ஒரு பதில் இதுதான். நீங்களே இப்பிடி தமிழருக்கு மண்டையில போடலாம் எண்டு ஆதரிச்சு கருத்து சொல்லேக்க, சிங்களவன் செய்த, செய்கின்ற வேலைகள் பற்றி எப்படி நியாயம் கேட்கமுடியும்? மற்றப்பக்கம் த.பு.க தடை செய்யலாமா இல்லையா எண்டு விளக்கம் போகிது. இஞ்சால மண்டையில போடலாமா இல்லையா எண்டு நாங்கள் நிக்கிறம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானது மண்டையில போடுறதா இல்லாட்டிக்கு வாழ்க்கையா எண்டு காலம்தான் பதில் சொல்லவேணும்.

மரண தண்டனையை சட்டமாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா அப்போ.. பயங்கரவாதியா.. இந்தியா பயங்கரவாதியா..??!

அமெரிக்க வல்லாதிக்க நலனுக்கு எதிராக இருக்கும் தலைவர்களை மக்களைக் கொல்லும் சி ஐ ஏ பயங்கரவாத அமைப்பாகவா இனங்காட்டப்படுகிறது.. அரபுலகில் மொசாட் செய்த கொலைகள் எண்ணிலடங்கா.. அதைப் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதம் என்றா அழைக்கின்றனர்.

நெல்சன் மண்டேலா.. எத்தனை போரைப் போட்டுத்தள்ளியதற்காக பயங்கரவாதியானார்... திபெத்திய தலைவர் எதற்காகப் பயங்கரவாதியானார்..

ஆக.. பலமிக்க சக்திகள்.. தமது சுயலாபத்துக்காக வரையறுப்பதையெல்லாம் நாம் கையாள வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களின் கூற்றுக்கு நாம் மெய்ப்பிப்புக் காரணத்தை நாமே உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டியதும் இல்லை. அதையே நீங்கள் இங்கு செய்கிறீர்கள். அவர்கள் சொல்லிட்டார்கள் என்பதற்காக.. நீங்களா காரணங்களை கண்டு தொகுத்து வழங்கி அதுவாகத்தான் இருக்கும் என்று நிறுவியும் விடுகிறீர்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. அவர்கள் பயங்கரவாதம் என்று உச்சரிப்பதன் நோக்கமே அவர்களின் வல்லாதிக்க நலன் சார்ந்தே அன்றி.. மனித உரிமைகள் சார்ந்தல்ல.

எமக்குத் தேவை எமது போராட்டமும்... மக்களின் விடிவும். போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க நினைப்பவர்களுக்கு.. திருந்தச் சந்தர்ப்பம் அளித்து.. திருந்தவில்லை என்றால்.. அவர்களால் போராட்டத்துக்கும் மக்களுக்கும் ஆபத்து என்றால்.. ஒரு சிலருக்காக 100 பேரை அப்பாவித்தனமாக பலியிடுவதிலும்.. அந்த ஒன்றைப் போட்டுத்தள்ளலாம்.

எத்தனையோ தவறான சிகிச்சைகளால்.. டாக்டர்கள் மக்களைக் கொல்லவில்லையா. அப்போ அவர்கள் பயங்கரவாதிகளாகவா முத்திரை குத்தப்படுகின்றனர் இல்லையே.

விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டதுக்கு அவ்வாறு குத்தியவர்கள் சொன்ன காரணங்களைக் காட்டிலும் அவ்வாறு சொன்னவர்கள் உலகில் செய்யும் மனிதப் படுகொலைகள்.. அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளே அதிகம். இதில் கனடிய படையினர் ஆப்கானிஸ்தானில் செய்யும் படுகொலைகளும் அடங்கும்.

என்னைப் பொறுத்தவரை.. அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொன்னால்.. அமெரிக்காவை நானும் அவ்வாறே இனங்காண்கிறேன்..! அதை நீங்கள் ஏற்று.. அமெரிக்காவிடம் இதை வலியுறுத்திச் சொல்வீர்களா.. இங்கு புலிகளைப் பற்றி அமெரிக்கா சொல்வதை வலியுறுத்தும் உங்களால்.. அதைச் செய்ய முடியுமா..??!

நீங்களும் இடங்கண்ட இடத்தில் தான்.. சவாரி செய்ய நிற்கிறியள்..! :unsure:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான், மற்றவன் பிழையாக ஒண்டை செய்கின்றான் என்பதற்காக நாங்களும் அதை திருப்பி செய்யவேணுமா? அமெரிக்கா செய்த தவறுகள் எல்லாம் தண்ணியில மறைஞ்சிட்டிது எண்டு இல்லை. உலகத்தில காலம் நிலமைகள் மாறேக்க செய்த கொலைகளுக்கு அக்கிரமங்களுக்கு ஒருநாளைக்கு பதில்சொல்ல வேண்டி வரலாம். இதுகள்பற்றி மண்டையில போடுறதுகள் பற்றி கதைக்கவெளிக்கிட்டால் அதுபற்றி ஊரில நடந்தது, நேரில கண்ட அனுபவங்கள் எண்டு நிறைய சொல்லலாம். நான் அதுகள் பற்றி குப்பைய கிளற விரும்பவில்லை. சிறுவயதில நேரில கண்ட அனுபவங்கள் எல்லாம் அகோரமானவை. அதுகள் பற்றி இப்ப திரும்பமீட்டுப்பார்த்து கருத்து எழுதுறது எண்டால் இந்தக்கருத்தாடல் பக்கம், பக்கமாக நீண்டுசெல்லும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

  • கருத்துக்கள உறவுகள்

நேரில கண்ட அனுபவங்கள் எண்டு நிறைய சொல்லலாம். நான் அதுகள் பற்றி குப்பைய கிளற விரும்பவில்லை. சிறுவயதில நேரில கண்ட அனுபவங்கள் எல்லாம் அகோரமானவை. அதுகள் பற்றி இப்ப திரும்பமீட்டுப்பார்த்து கருத்து எழுதுறது எண்டால் இந்தக்கருத்தாடல் பக்கம், பக்கமாக நீண்டுசெல்லும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நீங்கள் இப்பவும்.. புலிகள் மீது மறைமுகமாகக் குறை சுமத்துவதைத்தான் சொல்ல நிற்கிறீர்கள். ஆனால்.. உண்மையில்.. இந்தியப் படையினரின் உதவியுடன் மண்டையன் குழுவை இயக்கியவர்கள் இன்று சன நாய் அகவாதிகளாகி அமைச்சர்களாகி எம்பிக்களாகி.. சொல்லி வேலையில்ல..! ஓம் சாந்தி சாந்தி என்பதால்.. உண்மைகளை திரிக்கலாம் என்றாகிடாது. புலிகளை விட அதிகம் இரத்தக் கறை படிந்தவர்கள்.. பயங்கரவாத முலாமில்லாமல்.. சன நாய் அக முலாமில்.. வாழ்கின்றனர் எனும் போது...??! சாந்தியாவது மண்ணாங்கட்டியாவது.

மண்டையன் குழு என்று அப்பாவி இளைஞர்களை வெட்டிக் கோனிப்பையில போட்டவன்.. இன்று அமைச்சரா இருந்து கொண்டு ஊர்வலம் நடத்தச் சொல்ல நடக்கிற அளவுக்கு எமது மக்களில் இன்னும் பலருக்கு உணர்வு இறந்து போய்விடவில்லை... என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது..! :unsure:

அவர்களை சொல்லி திருத்த முடியாது புலிகளை திருத்தலாம் அல்லது புலிகள் மீது அவருக்கு உரிமை இருக்கு என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழை பொருத்தவரை மாப்பி சொன்னது என்னவோ உண்மையாகவே இருக்கின்றது மக்கள் போராட்டததை ஒரளவு மறந்து இருக்கின்றார்கள் என்பதே யதார்த்தம். அதுவும் சமாதான காலத்தில் புலிகளுடன் சேர்நது வேலை செய்த பலர் எந்தவித உதவிகளும் இன்றி நிhகதியாக விடப்பட்டு யாழ்பாணத்தில் படையினர் போட்டுதள்ள தொடங்கியவுடன் மக்கள் தானும் தங்கள் பாடும் இப்பொழுது.....

முரளி அவர்களே

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து எப்ப வெளியேறினீர் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் 2005 ஆம் ஆண்டு வரை அங்கே இருந்தேன். புலிகள் இருந்த போது உண்மையாகவே தமிழீழப் போராட்டத்தை ஆதரித்த மக்கள் எவரும் இராணுவத்தின் ஆக்கிரப்பில் வந்த பின் காலப்போக்கில் மனம் மாறி இராணுவத்தை ஆதரித்து கிடையாது. இராணுவத்தின் நடவடிக்கை மேலும் பலரை புலிகளுக்கு ஆதரவாக மாற்றியது. ஆனால் சில சமயங்களில் இராணுவத்தின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது.

கடத்தல் படுகொலைகள் மூலம் அவர்களை பேச முடியமால் அடக்கலாம் ஆனால் எத்தனை வருடம் சென்றாலும் அவர்களின் அடிமனதில் உள்ள தமிழீழப் போராட்டத்தை ஆதரவை ஒன்றும் செய்யமுடியாது.

புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிய போது 10 வயதுக்கு குறைவாக இருந்த எத்தனை பேர் இப்போது போராட்டத்தில் இணைந்தார்கள். புலிகளையே கணாத இவர்களுக்கு எப்படி உணர்வு வந்தது. 2002 புலிகள் யாழ்பாணம் வந்த போது முகாமலையில் திரண்ட மக்களை நீங்கள் காணவில்லையா?.

நீங்கள் கூறும் இராணுவத்தை ஆதரிக்கும் மக்கள் இவர்கள் தான்

ஒட்டுக்குழுக்களும் அவர்களின் வால்பிடிகளும்

தங்களின் சுயலாபத்திற்காக இடம்மாறும் குழுவினார். இவர்கள் புலிகள் இருக்கும் போது அவர்களின் தீவிர ஆதரவளாராக இனம் காட்டியிருப்பினம். இவைதான் நீர் கூறும் மனம் மாறுவோர்.

புலிகள் இருக்கும் போதே தங்களின் சுயநலத்துக்காக புலிகளை எதிர்த்தவர்கள்.

தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் சில படித்த முட்டாள்கள்.

குற்ற செயல்களுக்காக புலிகளினால் தண்டிக்கப்பட்ட சிலர்.

உங்களுக்கு தெரிந்தவார்கள் இந்த வகையினுள் அடங்குவதாக இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை எங்கள் ஊரிலும் ஒருவரும் புலிகளுக்கு எதிராக ஒரு போதும் செயற்பட்டதில்லை.

உமை அவர்களே,

நான் பதில் கருத்து எழுதி இருப்பது மேலே ஒருவர் இணைச்ச படத்திற்கு. பலாத்காரமாகோ, பவிசாகவோ அத்தனை மக்கள் கூடி இருக்கின்றார்கள். இதற்கு எனது கருத்தை நான் சொன்னேன். நீர் சொல்வது போன்ற நிலமையும் இருக்கிறது. இப்ப யார் இல்லை எண்டு சொன்னது? நான் ஒரு முட்டாள். நீங்கள் ஒரு அறிவாளி போதுமா? அவங்கள் யாரோ படம் எடுத்து போட்டு இருக்கிறாங்கள். உங்களுக்கு ஏன் இஞ்ச இருந்து கொதிக்கிது எண்டு தெரிய இல்லை. அடுத்தமுறை வேண்டுமானால் இப்படி சனம் கூடமுடியாதவரையில் ஏதாவது செய்யமுடியுமா என்று முயற்சித்து பாருங்கள். நம்மோட கோவிக்கிறதில என்ன லாபம்?

யாழை பொருத்தவரை மாப்பி சொன்னது என்னவோ உண்மையாகவே இருக்கின்றது மக்கள் போராட்டததை ஒரளவு மறந்து இருக்கின்றார்கள் என்பதே யதார்த்தம். அதுவும் சமாதான காலத்தில் புலிகளுடன் சேர்நது வேலை செய்த பலர் எந்தவித உதவிகளும் இன்றி நிhகதியாக விடப்பட்டு யாழ்பாணத்தில் படையினர் போட்டுதள்ள தொடங்கியவுடன் மக்கள் தானும் தங்கள் பாடும் இப்பொழுது.....

எவரும் நிர்கதியாக விடப்படவில்லை. மகிந்த ஆட்சிக்கு வந்து யாழ்பாணத்தில் புலி ஆதரவளர்களை இலக்கு வைத்த போது புலிகள் எல்லோரையும் வன்னிக்கு வருமாரு அழைத்தார்கள். எனக்கு தெரிந்த பலர் வன்னிக்கு சென்றார்கள். பலர் தமக்கு உயிர் ஆபத்து என்று தெரிந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து உயிரை பலி கொடுத்து அவர்களின் தவறு.

2002 இலெயே புலிகளுடன் வேலை செய்தவார்களை யுத்தம் தொடங்கும் போது கவனிப்பதாக மிரட்டினார். அதையும் மீறி புலிகளுடன் வெளிப்படையாக வேலை செய்தவார்கள் ஒன்றில் புலிகளுடன் வன்னிக்கு போயிருக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். எனக்கு தெரிந்த நண்பர் கொழுப்பில் வந்து ஒரு வருடம் நின்றுவிட்டு தனக்கு பிரச்சினை இல்லை என்று யாழ்ப்பாணம் போயி அடுத்த நாளே போட்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"கருத்துக்களை சரியான முறையில எதிர்கொள்ளத் தெரியாததால மண்டையில போடுறது சரியா ?"- என்னே ஒரு அருமையான கேள்வி ??

அப்ப டக்கிளசும், ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும், கருணாவும் புலிகளோட கருத்து வேறுபட்டுத்தான் இப்ப தாங்கள் செய்யிறது எல்லாம் செய்யினம் எண்டு சொல்ல வாறியள்?! கருத்து வேறுபாடு எண்டால் பேசாமல் விலகியிருக்க வேண்டியதுதானே? எதுக்குச் சிங்களவனுக்குக் குண்டி கழுவ வேணும்? இல்லைத் தெரியாமல்த்தான் கேட்கிறன், எங்கட சமூகத்தில கருத்து வேறுபாடு எண்டால் ஏதும் அர்த்தம் இருக்குதோ ? தன்ர சுயநலத்துக்காக தாயையும் தங்கச்சியையும் இந்தியனுக்கும், சிங்களவனுக்கும் கூட்டிக் குடுக்கிறதும் கருத்து வேறுபாடு எண்டுதான் சொல்லுறியள்?!

80 களில சிங்களவன் சுத்திச் சுத்தி புக்காராவிலையும், சியா மாச்செட்டியிலும் வந்து குண்டு போடேக்க வாக்கியில அங்க போடு, இங்க போடு எண்டு இப்பத்தையான் சனநாயகவாதிகள் செய்ததும் கருத்து வேறுபாடுதான் போல கிடக்கு ?!

மண்டைதீவில குடும்பத்தைத் தூகில போடு கழுத்தறுத்து, பிள்ளைகளுக்கும், புருசனுக்கும் முன்னாலேயே 6 பேர் மனுசியைக் கற்பழிச்சதும், பின்னர் தூகில் தூக்கிக் கொழுவினதும் கருத்து வேறுபாடுதான் போல கிடக்கு ?!

87 இல இருந்து 90 வரை இந்தியனோடு சேர்ந்து ஊர் ஊரா பொடியளைக் கட்டி தெருத் தெருவா வாகனத்தில் இழுத்துச் சுட்டுச் சாக்காட்டினதும் கருத்து வேறுபாடுதான், அல்லது அகதிச் சாமான் தாரம் வா எண்டு கூப்பிட்டு இந்தியனுக்கு குமரி, கிழவி எண்டு கூட்டிக்கொடுத்ததும் கருத்து வேறுபாடுதான் ?!

புலிகளுக்குத் தெரியவில்லை, இதெல்லாம் கருத்து வேறுபாட்டால தான் இப்பத்தையான் சனநாயகவாதிகள் எல்லாம் அப்ப செய்தவை என்றது.

வாழ்க மாற்றுக்கருத்து, வாழ்க புதிய சனநாயகம் !!!

மண்டையில போடுறதால கருத்து வேறுபாடு இல்லாமப் போகுதோ இல்லைய்யோ, ஆனால் துரோகிகளும், புல்லுருவிகளும் குறைஞ்சது உண்மை.

நல்ல கருத்து வேறுபாடுதான், மகேச்வரியைப் போட்டது, நிமலராஜனைப் போட்டது, உதயன் ஆசிரியரைப் போட்டது, தாரக்கி சிவராமைப் போட்டது, நடேசனைப் போட்டது எல்லாம் கருத்து வேறுபாட்டாலதான் !

மண்டையில போடுறதுபற்றி கதைச்சால் உடன அது புலிகள் மண்டையில போட்டதுகள் பற்றி எண்டு நீங்கள் விளங்கி கருத்து எழுதினால் ஒண்டும் செய்ய ஏலாது. இஞ்ச கருத்து எழுதிற பலர் தங்களை புலி ஆதரவாளராகவும், மற்றவனை புலி எதிர்ப்பாளராகவும் கற்பனை செய்து கருத்தை தொடர்வது போல இருக்கிது. ஒண்டை எழுதினால் உடனயே அதை புலி ஆதரவு எதிர்ப்பு பார்வையாக பார்த்து கருத்துக்களை வைச்சால் நாம ஒண்டும் செய்ய ஏலாது. அவர் ஒருத்தர் புலிகளை மறைமுகமா குற்றம் சொல்லுறமாம் எண்டு சொல்லிறார். இன்னொருத்தர் நேரடியா குற்றம் சொல்லிறமாம் எண்டு சொல்லிறார். கையெழுத்தில ஏதாவது நல்லமாதிரி எழுதிப்போட்டால்தான் இல்லாட்டிக்கு அவாட்டரில ஏதாவது நல்ல படமா போட்டால்தான் இதுக்க நிண்டு நிம்மதியா கருத்தாடல் செய்யலாம் போல இருக்கிது.

நெடுக்காலபோவான்,

கீழ இருக்கிறது நேற்று பிரபலமான யூரியூப் காணொளி இது. இதப்பார்க்க உங்களுக்கு என்ன விளங்கிது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ. எப்பவும் அதிகாரம் இருக்கேக்கதான் ஒருத்தருக்கு மதிப்பு. அதிகாரம் கைவிட்டுப்போனால் ஒருத்தனும் திரும்பியும் பார்க்கமாட்டாங்கள். நாளைக்கு அமெரிக்கா பொருளாதாரம், மற்றும் இராணுவ பலம் சரிஞ்சு கீழ்நிலைக்கு போனால் முன்பு செய்த கொலைகள், சட்டவிரோதமான செய்கைகளிற்கு நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆகவேணும்.

ஓடம் வண்டியில போறதும், பிறகு வண்டி ஓடத்தில போறதும் வழக்கம்தானே? நீங்கள் அமெரிக்கா செய்த பயங்கரவாத நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முடியாது எண்டு சொன்னீங்கள். எண்டபடியால நாங்களும் பயங்கரவாதம் செய்யலாம் எண்டு சொன்னீங்கள். நிலமை எப்போது எப்படியெல்லாம் மாறும் எண்டுறதுக்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியது இந்தக்காணொளி. அதான் இணைக்கிறன்.

மண்டையில போடுறதுபற்றி கதைச்சால் உடன அது புலிகள் மண்டையில போட்டதுகள் பற்றி எண்டு நீங்கள் விளங்கி கருத்து எழுதினால் ஒண்டும் செய்ய ஏலாது. இஞ்ச கருத்து எழுதிற பலர் தங்களை புலி ஆதரவாளராகவும், மற்றவனை புலி எதிர்ப்பாளராகவும் கற்பனை செய்து கருத்தை தொடர்வது போல இருக்கிது. ஒண்டை எழுதினால் உடனயே அதை புலி ஆதரவு எதிர்ப்பு பார்வையாக பார்த்து கருத்துக்களை வைச்சால் நாம ஒண்டும் செய்ய ஏலாது. அவர் ஒருத்தர் புலிகளை மறைமுகமா குற்றம் சொல்லுறமாம் எண்டு சொல்லிறார். இன்னொருத்தர் நேரடியா குற்றம் சொல்லிறமாம் எண்டு சொல்லிறார். கையெழுத்தில ஏதாவது நல்லமாதிரி எழுதிப்போட்டால்தான் இல்லாட்டிக்கு அவாட்டரில ஏதாவது நல்ல படமா போட்டால்தான் இதுக்க நிண்டு நிம்மதியா கருத்தாடல் செய்யலாம் போல இருக்கிது.

அடிசேன் பார் பல்டி ஆள் இப்பவே புலம்ப தொடங்கிட்டுது...........

கிட்ட தட்ட நீங்களே முடிவு எடுத்துவிட்டிர்கள் உங்கள் கருத்து திசைமாறிவிட்டது என்று.

நானும் நினைத்தேன் நடுநிலைவாதி என்று அல்லது மன்னார் பறி போனதில் இருந்து வந்த திசைமாற்றம் என்று பார்த்தால் ஒன்றுமில்லாத ஒன்றாகிவிட்டார் கி..

அப்பவும் நினைச்சேன் சாணக்கியனின் கருத்துக்கு சிங்சாங் போடுகிறார் இஅவர் சாணக்கியன் ஆக முடியாது ஏன் என்றால் சாணக்கியனின் கருத்தில் முரன்பாடு இருந்தாலும் அது அவரின் சொந்த மூளையில் எந்த தடுமாற்றமும் இல்லாத கருத்து அதை நம்பி நீங்கள் ஆரம்பித்தது தவறாக போக போகிறது.

என்ன சொல்லுறீங்கள் வினித்? இஞ்ச பல்டி அடிச்சு என்ன பிரயோசனம்? பல்டி அடிக்கவேண்டிய தேவை என்ன? சாணக்கியன் சொன்ன சில கருத்துக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னேன். அதற்காக நானும் சாணக்கியனும் எப்பிடி ஒரு ஆள் ஆக முடியும்? நெடுக்காலபோவானுடனும் பல கருத்துக்களுடன் உடன்பட்டு இருக்கின்றேன். உங்கட ஆராய்ச்சி விளங்க இல்லை. மேல ஒரு காணொளி இணைச்சு இருக்கிறன். அதைப்பார்க்க உங்களுக்கு என்ன தோன்றுது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ......... ? எல்லாரும் யாழ்ப்பாணத்திலை ,

ஒரு நாள் ஆட்டோ ஊர்வலம் , அடுத்த நாள் மீனவர் ஊர்வலம் என்று ,

பெரிதாக கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை .

அதே... ஆட்கள் மாறி , மாறி ஊர்வலம் வைப்பார்கள் .

இந்த ஆட்கள் கோம்பையன் மணலுக்கு போகும் , ஊர்வலம் தான் நல்ல ஊர்வலம் .

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து எப்ப வெளியேறினீர் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் 2005 ஆம் ஆண்டு வரை அங்கே இருந்தேன். புலிகள் இருந்த போது உண்மையாகவே தமிழீழப் போராட்டத்தை ஆதரித்த மக்கள் எவரும் இராணுவத்தின் ஆக்கிரப்பில் வந்த பின் காலப்போக்கில் மனம் மாறி இராணுவத்தை ஆதரித்து கிடையாது. இராணுவத்தின் நடவடிக்கை மேலும் பலரை புலிகளுக்கு ஆதரவாக மாற்றியது. ஆனால் சில சமயங்களில் இராணுவத்தின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது.

கடத்தல் படுகொலைகள் மூலம் அவர்களை பேச முடியமால் அடக்கலாம் ஆனால் எத்தனை வருடம் சென்றாலும் அவர்களின் அடிமனதில் உள்ள தமிழீழப் போராட்டத்தை ஆதரவை ஒன்றும் செய்யமுடியாது.

புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிய போது 10 வயதுக்கு குறைவாக இருந்த எத்தனை பேர் இப்போது போராட்டத்தில் இணைந்தார்கள். புலிகளையே கணாத இவர்களுக்கு எப்படி உணர்வு வந்தது. 2002 புலிகள் யாழ்பாணம் வந்த போது முகாமலையில் திரண்ட மக்களை நீங்கள் காணவில்லையா?.

நீங்கள் கூறும் இராணுவத்தை ஆதரிக்கும் மக்கள் இவர்கள் தான்

ஒட்டுக்குழுக்களும் அவர்களின் வால்பிடிகளும்

தங்களின் சுயலாபத்திற்காக இடம்மாறும் குழுவினார். இவர்கள் புலிகள் இருக்கும் போது அவர்களின் தீவிர ஆதரவளாராக இனம் காட்டியிருப்பினம். இவைதான் நீர் கூறும் மனம் மாறுவோர்.

புலிகள் இருக்கும் போதே தங்களின் சுயநலத்துக்காக புலிகளை எதிர்த்தவர்கள்.

தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் சில படித்த முட்டாள்கள்.

குற்ற செயல்களுக்காக புலிகளினால் தண்டிக்கப்பட்ட சிலர்.

உங்களுக்கு தெரிந்தவார்கள் இந்த வகையினுள் அடங்குவதாக இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை எங்கள் ஊரிலும் ஒருவரும் புலிகளுக்கு எதிராக ஒரு போதும் செயற்பட்டதில்லை.

உண்மை தான் உமை ! எம்மில் பலபேருக்கு ஏதோ யாழ் மக்கள் எல்லொரும் ஓரேயடியாக மாறிவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள் என்று புரியவில்லை ஆனாலும் சில பகுதி மக்கள் அல்லது சில மக்களின் மனநிலை சிறிது மாற்றம் உள்ளதை பல நாட்களின் யாழிற்கு சென்ற பொழுது உணரக்கூடியதாக இருந்தது .... அதாவது குறிப்பாக விடுதலைப்பொராட்டம் பற்றிய சில தவறான கண்ணோட்டம் குறிப்பாக இளவயதினரிடம் இருப்பதைக் காணலாம் .... அதாவது சிங்களவனும் சிங்கள அரசுகளும் நல்லது ஏதோ எம்மவர்கள் தான் வீம்பிற்காக சண்டை போடகிறாhகள் என்ற நிலையில் இருககிறார்கள் அதவாது ..... எம் பக்கத்தில் உள்ள சில தவறுகளை பெரிதாக தூக்கி பிடித்து புலம்புவது ஏனோ தெரியவில்லை ....

வெறுமனமே ... தொலைக்காட்சியும் ... 24 மின்சாரமும் ..... மோட்டாடர்சைக்களில் சுற்றுவதும் ....ஓரு அழகான பெண்iணை காதலித்து பொழுது போக்குவதும்.....இணையங்களில் பெண்களுடன் அரட்டை அடிப்பதும் .....

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ......... ? எல்லாரும் யாழ்ப்பாணத்திலை ,

ஒரு நாள் ஆட்டோ ஊர்வலம் , அடுத்த நாள் மீனவர் ஊர்வலம் என்று ,

பெரிதாக கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை .

அதே... ஆட்கள் மாறி , மாறி ஊர்வலம் வைப்பார்கள் .

இந்த ஆட்கள் கோம்பையன் மணலுக்கு போகும் , ஊர்வலம் தான் நல்ல ஊர்வலம் .

பிற் குறிப்பு : கோம்பையன் மணல் - சுடலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று முன்னர் எனது நண்பனுடன தொலைபேசியில் கதைத்தேன் அங்கே ஊர்வலம் நடைபெற்றது உண்மையான விடயம் தான் ஆனால் யாழ்மக்கள் அதிலே பெரிதும் பங்குபற்றவில்லை என்றுதான் கூறினான்

அதைவிட என்ன கொடுமையென்டா 1000 ருபாவுக்கும் ஒரு சாராயப்போத்தலுக்கும் எதிரிக்கு துதிபாடுகிறார்கள் உண்மையாக பங்குபற்றியவன் ஒருவன் கூட இல்லை

யாழ்ப்பாணத்தில் குருநகரில் ஒருஇடத்திலிருப்பவர்கள் தான் கூடுதலாக பங்குபற்றினார்களாம் கூடுதலாக என்ன அவர்கள் தான் அங்கே ஆட்டோ சங்கம் என்றும் பேக்கரி உரிமையாளர்சங்கம் என்று சும்மா போஸ்ரர்களை காட்டியவர்கள் அது யாழ்மக்களின் பேரனியல்ல குடிப்பவர்களின் பேரனி

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ......... ? எல்லாரும் யாழ்ப்பாணத்திலை ,

ஒரு நாள் ஆட்டோ ஊர்வலம் , அடுத்த நாள் மீனவர் ஊர்வலம் என்று ,

பெரிதாக கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை .

அதே... ஆட்கள் மாறி , மாறி ஊர்வலம் வைப்பார்கள் .

இந்த ஆட்கள் கோம்பையன் மணலுக்கு போகும் , ஊர்வலம் தான் நல்ல ஊர்வலம் .

உண்மையில்

இதைத்தான் எதிரி எதிர்பார்த்து

இதனைச்செய்வித்தான்

நாம் எல்லோரும் புலம்புகின்றோம்

எனவே அவனுக்கு வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கிழக்கில் சனநாயகத்தை உருவாக்கியது போல வடக்கிலும் உருவாக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள்தான் இப்படியான ஊர்வலங்கள். இவ்வாறு துப்பாக்கி முனையில் நிலைநிறுத்தப்படும் சனநாயகத்தை அமெரிக்க தூதர் ரொபேர்ட் பிளேக் முதல் இந்திய அரசுவரை அங்கீகரிக்கக்கூடும். எனவே ஒரு போத்தல் சாராயத்திற்காகவும் 1000 ரூபா காசிற்காகவும் ஊர்வலம் வைக்கின்றார்கள் என்று சனநாயகத்தை நக்கல் செய்யவது நல்லது அல்ல..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.