Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமெங்கும் கடும் மழை. வெள்ளப் பெருக்கு - பலர் உயிர் இழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.

25_11_08_i10_73009_445.jpg

வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

25_11_08_i06_72993_445.jpg

திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு.

25_11_08_i07_72997_445.jpg

http://www.tamilnet.com/art.html?catid=86&artid=27576#

Edited by yarlpaadi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் வெற்றிச் செய்திகளை தேடித்தேடி பிரசுரித்துக் கொண்டிருக்கும் தமிழ்வின் போன்ற இணையத்தளங்களும்.. புதினம் போன்ற தளங்களும் போதிய அளவுக்கு வெள்ளப்பெருக்குப் பற்றிய செய்திகளையும் அதனால் மக்கள் படும் அவலங்களையும் வெளி உலகுக்கு கொண்டு வரத் தயங்குவதேன்..???! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நேசக்கர அமைப்பு போன்றவை மக்களின் வெள்ள அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிக்க முன் வருதல் வேண்டும்.

25_11_08_i09_73005_445.jpg

Rain, floods add to Vanni IDPs woes

[TamilNet, Tuesday, 25 November 2008, 12:30 GMT]

Continuous torrential rain for four days in several areas of Vanni has caused floods, destroying temporary huts of war-displaced civilians and disrupting transport on several roads of densely populated Northeastern region of Vanni. Several hundred volunteers of Tamils Rehabilitation Organisation and other local NGO were struggling to assist the displaced civilians to find shelter in various schools, churches, temples and other public places as thousands of civilians, forced to vacate their houses due to the Sri Lankan military offensive into Vanni, were deprived of proper shelter by the blockade imposed by the Sri Lankan government.

உண்மைதான் நெடுக்ஸ். சாதாரண மக்களின் துயரினை விட, அவர்களின் அவலத்தினை விட போர் குறித்த வெற்றி செய்திகள் தான் முதன்மை பெறுகின்றது. அரசியல் அறிவூட்டப் படாது வெறும் இராணுவ சகாசங்களின் மூலம் தேசிய இன விடுதலையினை வெல்ல முடியும் என கருத்துருவாக்கத்தினை உருவாக்கியதன் பெறுபேறு இது

ஒரு வேளை.. வன்னியில் மழை தொடங்கியமையால் புலிகள் பெரும் தாக்குதலை செய்து வெற்றி செய்திகள் தருவார்கள் என காத்திருக்கின்றனரோ (பானு அண்ணா குமுததிற்கு வழங்கிய பேட்டியில் சொன்னது மாதிரி) தெரியவில்லை

சரயாகச் சொன்னீர்கள்.

நானும் இந்தக்கேள்வியைத்தான் எனக்குள்ளே கேடடுக்கொண்டேன்.

தமிழ்நெட் இணையத்துக்கு நன்றிகள்.

நான் இந்தப்படங்களை என் தளத்தின் தாயகவலம் பகுதியில் இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிஸடர் நிஹால்

உங்கள் வெப் தளம் பார்த்தேன். உங்கள் கவிதையை ரசிக்க முடியவில்லை. என்ன இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. உங்களுக்கு போராளிகள்மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால் இப்படியா கவிதை எழுதுவது. எந்த ஒரு போராளியும் இதைப்பார்த்து ரசிக்கமாட்டார். முகஞ்சுழிப்பார். தயவுசெய்து தமிழில் இத்தகைய படு பச்சையாக எழுதும் பாரம்பரியத்தை விட்டுவிடுங்கள். இதனால் நாம் தமிழை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிடுவதைவிட வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை. மிகவும் நேரடியாக விமர்சிக்கவேண்டிய கட்டாயம். தகவல் தொடர்புச் சாதனங்களில் தொழில்நுட்ப விருத்தியால் ஏற்படுகின்ற மிக மோசமான பிரதிகூலங்களுக்கு உங்களது வெப்சைட் கவிதை மிகச்சிறந்த உதாரணம். நீங்கள் என்னை எப்படித் திட்டினாலும் பரவாயில்லை மனதிற் பட்டதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.

thamilarivu.com or thamilarivu.co.uk

கறு.. உங்கள் ஆதங்கம் புரிகிறது. அக்கவிதையை.. கவிதைப்பகுதியில் அல்லது பேசாப்பொருளைப் பேசத் துணிந்தோமில்.. போட்டு விமர்சனங்களை கேட்டுக் கொள்ளலாமே.

இது மழைத் தண்ணில மிதக்கும் எம் தமிழ் உறவுகளின் துயர் சொல்லும் பக்கம் என்பதாகக் கொண்டு.. அவர்கள் துயர் தீர்க்க முன்வாருங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் வெற்றிச் செய்திகளை தேடித்தேடி பிரசுரித்துக் கொண்டிருக்கும் தமிழ்வின் போன்ற இணையத்தளங்களும்.. புதினம் போன்ற தளங்களும் போதிய அளவுக்கு வெள்ளப்பெருக்குப் பற்றிய செய்திகளையும் அதனால் மக்கள் படும் அவலங்களையும் வெளி உலகுக்கு கொண்டு வரத் தயங்குவதேன்..???! :lol::lol::lol:

http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

Edited by kuddipaiyan26

வன்னியில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளப்பெருக்குக் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக குடியிருப்புக்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயரவேண்டி அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புளியம்பொக்கணை, தருமபுரம், சுண்டிக்குளம், பிரமந்தனாறு, விசுவமடு புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் பாய்ந்ததில் அம்மக்களின் உடமைகள் சேதமானதோடு தற்காலிக குடிசைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இக்குடியிருப்புக்களிலிருந்

சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக மடு, மாந்தை கிழக்கு, வவுனியா வடக்கு, பூநகரி, கிளிநொச்சியின் மேற்குப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

வன்னியில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளப்பெருக்குக் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக குடியிருப்புக்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயரவேண்டி அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புளியம்பொக்கணை, தருமபுரம், சுண்டிக்குளம், பிரமந்தனாறு, விசுவமடு புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் பாய்ந்ததில் அம்மக்களின் உடமைகள் சேதமானதோடு தற்காலிக குடிசைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இக்குடியிருப்புக்களிலிருந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், இப்ப மழை முடிய இனிமல் தொற்றுவியாதிகள் எல்லாம் பரவ தொடங்கும் அதுக்கும் முகம்கொடுக்கவேணும் :lol:

வன்னிப்பெரு நிலப்பரப்பில் தற்போது பெய்துவரும் பருவ மழை, கடும் காற்று காரணமாக பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

64798999cv6.jpg

பிறந்தே நாள் ஆகியிருக்காத குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த அன்னை அலைகின்றார். யாரை நம்பி??? நாமும் உதவாவிட்டால் யார் உதவுவார்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் மழை வந்தால் ஒழுக்கு வீட்டுக்குள் இருப்பதே பெரும் பாடாக இருக்கும்.

வெற்றுத் தரையில் வெறும் தறப்பாளை கூரையாக போட்டிருக்கும் மக்களின் கதி? அதுவும் கடும் மழை, வெள்ளம், காற்று மத்தியில்?

  • கருத்துக்கள உறவுகள்

போரால் இடப்பெயர்வு இயற்கையால் இடப்பெயர்வு கொடுமை!

உண்மை தான் நாளைக்கு வேற வன்னியில் கடும் தாக்குதல் செய்ய போவதாக உளவு தகவல் தெரிவிக்கின்றன.......

விமானத்தாக்குல நடை பெறும் என்று செய்தி(அரசங்கத்திடம் கேட்டததகவும் அவர்கள் மறுத்து விட்டார்களாம்)

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலத்திலும் மாவீரர் தினத்தை குளப்புவதற்கு குண்டு மழை நிச்சயமாக பொழிவார்கள் என எதிர்பார்க்கலாம். ICRCக்கு( வன்னிக்கு )நேரடியாக உதவ வழி

http://www.icrc.org/Web/Eng/siteeng0.nsf/h...33;OpenDocument

Edited by nunavilan

நன்றி நுணா

  • கருத்துக்கள உறவுகள்

27ம் திகதி அதிகூடிய மழை, காற்றினைத் தமிழகத்தில் எதிர்பார்ப்பதால், யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களிலும் அப்பாதிப்பு இருக்கும். உறவுகளைக் கவனமாக இருக்கச் சொல்லுங்கள்

இயற்கையுமா?:lol: குழந்தைகள் எப்படி தாங்குவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் அடை மழையால் தொடர்ந்து பேரவலம் மூவர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

[28 - November - 2008]

வன்னிப்பெரு நிலப்பரப்பில் பெய்து வரும் கடும் அடை மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், மூவர் உயிரிழந்துமுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் குளங்கள் நிரம்பி வழிகின்ற நிலையில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.

உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம் என்பன நீர் நிரம்பிய நிலையில் உடைப்பெடுக்கும் அபாயமேற்பட்டுள்ளது.

அவற்றின் கீழ் வாழும் மக்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ளுமாறும் இயன்ற வரை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் கேட்கப்பட்டுள்ளனர். மழையுடன் கடும் காற்று வீசி வருவதால் மரங்கள் வீழ்ந்துள்ளன, வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களின் பாதிப்பு தொடர்பில் தமிழீழ காவல்துறை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன துரிதமாக உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர் மழையினால் மழைவெள்ளம் அலுவலகத்தினுள் புகுந்து கட்டிட நெருக்கடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக புதுக்குடியிருப்பு கோட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். புதுக்குடியிருப்பின் இரணப்பாலை, ஆனந்த புரம், கைவேலி, வள்ளிபுனம், உடையார்கட்டு, மல்லிகைத்தீவு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியிருக்கி

வன்னியில் அடை மழையால் தொடர்ந்து பேரவலம் மூவர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு-சிறப்பு புகைப்படங்கள் இணைப்பு

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

தமிழர் தாயகத்தில் பெய்துவரும் அடை மழையினால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன்,

ஏனைய இடங்களில் பல இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வெள்ளம், காற்றினால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன.

வன்னியில் மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து பெய்யும் அடை மழையினால் மக்கள் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு உதவிகளைப் புரிந்துவரும் தமிழர் புனர்வாழ்க்கு கழகத்தின் தொண்டர் பரமேஸ்வரன் பிடித்துள்ள நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.