Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் இருந்து எழுதும் கண்ணீர் மடல்!

Featured Replies

(மட்டுவில் ஞானக்குமாரன்.. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக யேர்மனியில்

வாழ்ந்தவர். பட்டிமன்றம், கவியரங்குகளின் மூலம் யேர்மன் மேடைகளில் எனக்குப்

பரிச்சயமானவர். கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தாயகத்திற்குத் திரும்பிச்

சென்றவர், அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் தனது ஆக்கங்களை என்னுடன் பகிர்வதுண்டு.

இன்று (7.12.2008) கிளிநொச்சியில் இருந்து அவர் நேரில் காண்பவற்றை மின்னஞ்சல்

மூலம் அனுப்பியுள்ளார். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.)*

வன்னியில் இருந்து எழுதும் கண்ணீர் மடல். பாலி ஆறு பாய்ந்து செல்லும் பழம்

பெரும் நகரம் பாழ் அடைந்து போகிறது. சுற்றிவர வேலிபோட்டு தாக்கிக்

கொண்டிருக்கிறது துரியோதனர் கூட்டம்.

என் கண்ணீரை மற்றவரும் மற்றவர் சென்னீரை நானும் துடைத்துதபடி நம்மை நாமே

தேற்றுவதைத் தவிர வேறு நாதியில்லை.

உலக நாடுகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக சேர்ந்து தடை செய்த ஆயுதங்களை எல்லாம் இவர்களுடாக இங்கே எங்கள் மீது

பரீட்சிக்கிறார்கள். போகும் வழியையோ வரும் வழியையோ குறித்துவைத்ததுப் பயணப்

படாத காற்றைப் போலவே இந்தப் பயணம். எங்களைத் தாக்க வேண்டியவற்றில் பெரும்

பகுதியை செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தங்கள் மார்பிலே ஏந்திய மரங்களைத் தாண்டிச்

செல்கிறேன். வளைந்து செல்லும் நீள் அரவத்தைத் தவிர வேறு ஆள் அரவமில்லை. மிதந்து

வரும் காற்றிலே கந்தகப் பொடி வாசமும் அடித்துச் செல்லும் காட்டாற்று

வெள்ளத்திலே அகதி முகாம் வாசமும் கலந்து வருகிறது.

வாசலிலே அரிசி மாக்கோலம் போட்டு எறும்புக்கே பசிதீர்த்வர்கள், தெருவுக்குத்

தெரு தண்ணீர் பந்தலிட்டு மிருகங்களுக்கே தாகம் தீர்த்தவர்கள் தான் சோற்றுக்கும்

தண்ணீருக்கும் தவமிருக்கிறார்கள்.

காற்றையே கூட வடிகட்டி வெளி அனுப்பும் சனநாயக நாடு உயிர் ஒழுகும் ஒருவனின்

கூற்றை உங்களுக்குச் சொல்ல எப்படி அனுமதிக்கும். „மன்னவனும் நீயோ வளங் கொண்ட

நாடும் உனதோ" என்றுரைக்க மாட்டானா?

குண்டுகள் உடலை சல்லடை ஆக்குகிறது. உடல் துண்டுகள் கொட்டுண்ட சில்லறை கணக்காக

தெருவெங்கும் சிதறிக் கிடக்கிறது. ஆனாலும் உறுதியாக நம்புகிறார்கள் விடியல்

வரும் என்று.

வைத்திய சாலைகள் நிறைந்து வழிகிறது. வீடுகள் தோறும் வைத்தியசாலை.

அங்கே ஒரு குழந்தை குண்டுச்சிதறல் பட்டு முனகுகிறது. ஒரு வாரத்துக்கு முன்

நிகழ்ந்த விமானத் தாக்குதலிலே தாயும் தந்தையும் மோசம் போக இவன் மட்டும்

தப்பினான். இப்போ இவனையும் தாக்கியது எறிகணை வந்து.

தொண்டு நிறுவனங்கள் வெளியேறி விட்டன. ஊடகவியலாளருக்கு அனுமதி இல்லை வெளி

உலகத்துக்கு எப்படிச் செய்தி போகும்.

வெள்ளம் வந்து குந்தி இருந்த குடிலையும் அல்லல்படும் குடிகளையும் அடித்துச்

செல்கிறது. யாரும் எமை தீண்டவில்லை என்றறிந்தோ என்னவோ பாம்புகள் வந்து

தீண்டுகிறது.

வன்னி மீது வான் படை வீசியிருக்கிற குண்டுகளோ கிரோசிமாவிலே போட்ட

அளவைப் போல இரு மடங்கைத் தாண்டியிருக்கிறது.(அமெரிக்கா வீசிய அணுகுண்டின் நிறை

13-18 கிலோ வரையான ரி என் ரிக்கு ஒப்பானது.)

மரணதண்டனைக் கைதிக்கு வழங்கப் படும் இறுதி விருப்பங்கள் போல எமது தமிழ் நாட்டு

சகோதரங்களின் உதவிகள். நன்றி உணர்வோடு (தமிழக உறவுகளே!) நீங்கள் இருக்கும் திசை

நோக்கி உடல் கூட்டில் உயிர் இருக்கும் வரை வணங்குகிறார்கள் மக்கள். "தோழனிடமும்

ஏழமை பேசேல்" என்று ஒளவையே பேசிய பின்பாக எது எது தேவை என்று எப்படி

அறிவிப்பது. சராசரி மனிதன் ஒருவனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும்

இவர்களுக்கும் பொதுப்படை தான். அதையும் தாண்டி அவசர நோயாளிகளுக்கு பிராணவாயுக்

கொள்கலங்கள் இல்லை. நிரந்தரப் பாயாளிகளுக்கு பிணி தீர்க்க மருந்துகள் இல்லை.

முட்டையும் பாலும் முயற் கொம்பானது. அரிசி கூட ஆடம்பரப் பொருள் போலானது.

மரவள்ளிக் கிழங்கோடும் முருங்கை இலையோடும் பொழுது கழிகிறது.

யானையின் பலம் தும்பிக்கை போல இந்தச் சேனைகளின் பலம் நம்பிக்கையின்

அத்திவாரத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. "முப்பது கோடியும் வாழ்வோம் வீழின்

முப்பது கோடியும் முழுமையாய் வீழ்வோம்" என்று பாரதி பாடிய பாடல் தான் மரம்

செடி கொடி எங்கும் பட்டுத் தெறிக்கிறது.

இன்னும் வரும்...

தோழமையுடன் மட்டுவில் ஞானக்குமாரன். (கிளிநொச்சி, ஈழம்)

நன்றி. இதை வேறு இடங்களிலும் பதிவிட்டால் (உதாரணமாக வலைப்பதிவு) பலருக்கும் பார்க்க கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மானக் கவிஞனிற்கு என்ன நடந்தது?? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணா!

சோழியான்

இணைப்பிற்கு நன்றிகள் . கவிஞரின் வரிகள் காலத்தின் கொடுமையை கண் முன்னே காட்டி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..மட்டு..அண்ணா வன்னியிலேயே நிக்கிறார்...

அண்ணாவை சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ...

மடல் கண்ணீரை பீய்ச்சி அடித்தது...ரெம்ப அழுதிட்டன்..

இதை சுட்டு ஒட்டலாமோ...? அனுமதி கொடுப்பீங்களோ...?

இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணா.

மின்னஞ்சல் மூலம் எனது நண்பர்களுக்கும் அனுப்பிவிடுகிறேன்.

  • தொடங்கியவர்

அட..மட்டு..அண்ணா வன்னியிலேயே நிக்கிறார்...

அண்ணாவை சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ...

மடல் கண்ணீரை பீய்ச்சி அடித்தது...ரெம்ப அழுதிட்டன்..

இதை சுட்டு ஒட்டலாமோ...? அனுமதி கொடுப்பீங்களோ...?

ஒட்டுவதோடு நின்றுவிடாதீர்கள்..! அந்த மக்களிடம் ஒட்டுதலோடு நிற்போம்!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சோழி அண்ணை உந்த பதிவை விம்பங்கள் - புலிகளின்குரல்- கலகத்திற்கு அனுப்பி வைச்சன்.

அதில இப்ப பாத்தன் கலகம் மட்டும் அதை போட்டு இருக்கு மற்றவையள் போடல..கலகம் போட்டதற்க நன்றி சொல்லி போட்டன்...

இது தான் அந்த பதிவு லிங்....

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=5187

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுவில் ஞானி அண்ணையின்ர பதிவை தற்போது பார்த்தன் விம்பங்களும் போட்டு இருக்கினம்.

அதன் லிங்கீழே

http://www.vimpankal.com/index.php?option=...53&Itemid=2

thx for the vimpankal.com

  • தொடங்கியவர்

Gnanakumaran Kumaralingam

to me

show details 16 Dec (1 day ago) [360.gif]

Reply

vanakkam naan sl.armyyinal kaithu seiyappaddu 3 naal thvira thunpuruthal visaranayin pin enru viduvikkap padden eenenil avarkaludan connucting enru yaro pooda kaditham . gnanakumaran

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் நிலைமையை அப்படியே எழுதியுள்ளார் ஞானகுமாரன் அவர்கள். அது சரி வன்னியில் இராணுவத்திடம் பிடிபடக்கூடிய நிலையிலோ (இடத்தில்) ஏன் இருக்கிறார்?. வி.புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கவில்லையா?

  • தொடங்கியவர்

அவர் வன்னியில் வசிப்பதற்காக செல்லவில்லை. குறிப்பிட்ட நாட்கள் வன்னியில் தங்கினார் என்ற விபரத்தை மாத்திரமே அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய சாலைகள் நிறைந்து வழிகிறது. வீடுகள் தோறும் வைத்தியசாலை.

இதனை வாசித்த போது மனது கனத்தது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.