Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஸ்கோர். கறள்பிடிச்ச பழய இரும்புகளையும் பிணங்களையும் கொண்ட அருமையான கண்காட்சி. இப்படிப்பட்ட சாதனைகளைத்தான் உலகம் புலிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறது. வாழ்த்துக்கள்.

குறுக்கர், நான் இவ்வளவு நாளும் உங்கள மண்டைக்குள்ள கொஞ்சம் சரக்கு கூடிய ஆள் எண்டு நினைச்சா... கடைசியில சுப்பிரமணிய சுவாமி ரேன்ஜில ஒரு ஜோக்கர் ஆகிடீங்களே? :lol:

நீங்கள் தானே உலக ஊடகங்களை கரைச்சு குடிச்சவராய்ச்சே? பி.பி.சி என்ன சொல்லுது? ஏ.பி, ஏ.எப்.பி என்ன சொல்லுதெண்டு உண்மையா தெரியாதோ?

  • Replies 74
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி கேடக இனிமையாக இருந்தாலும் களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்..

களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்

இப்படிப்பட்ட சாதனைகளைத்தான் உலகம் புலிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறது.

சொல்லுங்கண்ணை, புலிகள் என்ன உலகத்திற்குச் செய்து காட்டவேணும் எண்டு.

தமது படைய வெற்றியை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!!!!!

சொல்லுங்கண்ணை, புலிகள் என்ன உலகத்திற்குச் செய்து காட்டவேணும் எண்டு.

தமது படைய வெற்றியை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது.

மின்னல் அண்ணை காமடி எதாவது பண்ணிறியளே இல்லை உண்மையாதான் உதுகளை "படைய வெற்றி" என்றியளோ? :)

கிழக்கை இழந்து வடக்கில் பெருமளவு பகுதிகளை இழந்தும் புலிகள் பொறுமையாக இதுவரை இருந்து என்னத்தை சொல்ல முனைகிறார்கள்?

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருந்து என்ன சொல்ல முனைகிறார்கள்?

இல்லை இவை எல்லாம் சும்மா ஏமாற்றுக் கதைகள் புலிகள் பலவீனமாகி யுத்தத்தில் விட்டுவிட்டு ஓடுகிறார்கள் அவ்வப்போது சாதகமான களசந்தர்ப்பங்கள் வரும் பொழுது சில சமர்களில் எதிரிக்கு இழப்புகளை குடுக்கிறார்கள். அந்த சமர் வெற்றிகளை வைத்து நீட்டி முழக்கி அதி உச்ச பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நடத்தை சிறீலங்கா சொல்லுவதை மறைமுகமாக வலுப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

கடசியில புலிதேவன் சமாதான செயலக வேலையை விட்டுட்டு தமிழ்நெற்றுக்கு ஸ்கோர் சொல்லுற வேலைக்கு வேறை வெளிக்கிட்டிருக்கிறார். மதவாச்சியில நிக்கப் போறன் எண்ட இளந்திரையனிட்டை இருந்து பதில்கள் வருகுது இல்லை எண்டு சர்வதேச ஊடகங்கள் குறைப்படுகுது. இது உலகத்துக்கு என்ன சொல்லும் என்று நினைக்கிறியள்?

***** :D

ஐயோஓஓஓஓஓஓஓ................... துலைஞ்சுது போ!!

உங்கை கனபேர் யாழில் வந்துதான் ஆரம்பிக்கிறது, பின் ஏதாவது பப்பப்பு,..... நாலு ஓசிப்பேப்பரிகளிலை எழுத சந்தர்ப்பமும் கிடைத்த உடன் தராக்கியோ, அத்தாஸோ என நினைப்பது மட்டுமல்லாது, தலைமைப் பொறுப்புகளையும் எடுத்துப் போடுவினம்!!!!

உதை எங்கை ஆருட்டை சொல்லி அழவெண்டு .... ரோகரவெண்டானாம்!!!!!!!!! :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆய்வாளர் டி.பி.எஸ். சனிக்கிழமை பெரியதோர் கட்டுரை ஒன்றை டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியிடக்கூடும். அதற்கு முன்னோட்டமாக இச்செய்தியை பிரசுரித்துள்ளார்..

Black Tuesday" for Army: Nearly 650 casualties in North

The Sri Lankan forces have suffered major losses at the hands of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on a single day of fighting in the North.

Tuesday December 16th turned out to be a “Black Tuesday” for the armed forces as they incurred around 650 casualties in fighting against the LTTE in both the Northern mainland of Wanni as well as the Jaffna peninsula.

Tuesday is the day of Mars regarded as the God of war in Greek mythology.

According to informed defence ministry sources who want to remainin anonymous for obvious reasons , about 170 soldiers were killed and 480 security personnel were injured.

The sources however said about 300 of injured personnel had sustained minor injuries and are classified as “walking wounded”.

Official pronouncements have placed army casualties at a very low number not exceeding three digits.

Likewise the official government position was that about 120 tigers were killed and 250 injured.

The LTTE however reportedly lost around 70 cadres. The figures for injury are not known.

The armed forces launched a co-ordinated attack on LTTE positions in the peninsula and mainland before dawn on December 16th.

Soldiers of 53 division broke out from Kilaly in the Jaffna peninsula and targeted the LTTE’s second line of defence along the Kilaly – Eluthumadduvaal axis.

The army had demolished the LTTE first line of defence in fighting some days ago.

After fierce fighting throughout the day the soldiers withdrew without realising their objective.

The Army lost more than 40 men in the fighting within the peninsula while the LTTE lost around 25. Around 160 soldiers were injured.

Simultaneous to the Kilaly assault within the peninsula soldiers of the 57 and 58 divisions also launched a four – pronged operation.

Soldiers moved out from Kunchuparanthan on the Paranthan – Poonagary road towards Paranthan on the A – 9 highway.

In a second move soldiers broke out from Pulikkulam and moved towards Kilinochchi.

In a third manoeuvre soldiers moved from Malaiyaalapuram towards Kilinochchi.

In the fourth move soldiers broke out from Thirumurugandy on the A – 9 and tried to reach Iranaimadhu.

Though fighting on four fronts the soldiers had a common obstacle to surmount.

This was the 18 km long earthbund constructed by the LTTE to strengthen defences around Kilinochchi and Paranthan.

The “L” shaped bund extended from Kunchuparanthan to the west of Paranthan to Iranaimadhu to the south of Kilinochchi.

After a day of fighting the soldiers managed to seize and hold about 5 km of the earth bund in the areas south of Adamban.

The soldiers however incurred heavy losses in the attempt with about more than 130 being killed and around 320 getting injured.

The LTTE lost about 45 – 50 cadres in the fighting.

“Black Tuesday” ended with about 170 soldiers getting killed and around 480 getting injured thus bringing the casualty toll to nearly 650.

http://transcurrents.com/tc/2008/12/post_152.html

மீண்டும் களமுனையில் நாய் ஒன்று நின்று எட்டிப்பார்க்கின்றது?

என்ன தீபன் படத்தில நாய் எட்டிபாக்கிறத சொல்கின்றீற்களா? அல்லது.........

மின்னல் அண்ணை காமடி எதாவது பண்ணிறியளே இல்லை உண்மையாதான் உதுகளை "படைய வெற்றி" என்றியளோ? :)

கிழக்கை இழந்து வடக்கில் பெருமளவு பகுதிகளை இழந்தும் புலிகள் பொறுமையாக இதுவரை இருந்து என்னத்தை சொல்ல முனைகிறார்கள்?

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருந்து என்ன சொல்ல முனைகிறார்கள்?

இல்லை இவை எல்லாம் சும்மா ஏமாற்றுக் கதைகள் புலிகள் பலவீனமாகி யுத்தத்தில் விட்டுவிட்டு ஓடுகிறார்கள் அவ்வப்போது சாதகமான களசந்தர்ப்பங்கள் வரும் பொழுது சில சமர்களில் எதிரிக்கு இழப்புகளை குடுக்கிறார்கள். அந்த சமர் வெற்றிகளை வைத்து நீட்டி முழக்கி அதி உச்ச பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நடத்தை சிறீலங்கா சொல்லுவதை மறைமுகமாக வலுப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

கடசியில புலிதேவன் சமாதான செயலக வேலையை விட்டுட்டு தமிழ்நெற்றுக்கு ஸ்கோர் சொல்லுற வேலைக்கு வேறை வெளிக்கிட்டிருக்கிறார். மதவாச்சியில நிக்கப் போறன் எண்ட இளந்திரையனிட்டை இருந்து பதில்கள் வருகுது இல்லை எண்டு சர்வதேச ஊடகங்கள் குறைப்படுகுது. இது உலகத்துக்கு என்ன சொல்லும் என்று நினைக்கிறியள்?

***** :D

இது நீங்களா ??? :D:lol::lol::lol:

ஆச்சரியமாக இருக்குது அண்ணா...

ஏன் இந்த மாற்றம் ? உங்கள் பெயரை யாரும் தவறாக பயன்படுத்தியுள்ளார்களா?

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்

காசு பணம் வந்தா நேசம் சில மாசம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ...

பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்

கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி

அடங்காத காள ஒண்ணூ அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி...

ஒருமுறை கேக்க...

Edited by தாயகன்

Behind a wall of censorship horrendous battles are under way in northern Sri Lanka. The details are unclear since no independent reporters have been allowed access, and both sides – the government army and the Liberation Tigers of Tamil Eelam – give out bombastic and unverifiable casualty figures.

Ironically, the only constructive proposals made since the crisis started came from the LTTE in 2003. Their suggested Internal Self-Governing Authority is over-ambitious but it has never been matched by a detailed blueprint from the government side. Until the government comes up with a realistic offer, which will have to involve elements of a federation, there will be no cause for celebration and no chance of compromise and peace.

http://www.guardian.co.uk/commentisfree/20...rs-prison-camps

குறுக்கு!! :)

நாங்கள் மந்தைகளெண்டு நினைச்சு அவர் எழுதினதிலிருந்து இரண்டு பந்தியோட அலுவல்களை முடிச்சா நாங்கள் விடுவமா? மிச்சத்தையும் போடுங்கோ..... அதுவும் சரிவராது தமிழில போடவேணும்.

என்ன இருந்தாலும் அவிச்சறால் வந்து எங்களுக்கு என்னதீர்வு ஒத்துவருமெண்டு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தாங்கள் விட்ட தவறை மூடிமறைக்கவே இப்பிடி செய்கிறர்கள்... அவர்கள் போகும்போது வராத ஞானம் ஏன் இப்ப வருது?

Edited by Sooravali

எங்களுக்கு என்ன தீர்வு வேணும் என்றதை எங்கடை தேசிய தலைமையால் தான் முன்வைக்க முடியும். அந்த தீர்வை பெற்றுக் கொள்ளுவதற்கான தகுதி, பெற்ற பின்னர் அதை காப்பாற்றி பராமரிப்பதற்கான தேசிய அறிவியல் பொருளாதார படை பலம் இருக்கு என்பதை நிரூப்பிக்க வேண்டிய பொறுப்பும் தேசிய தலைமைக்குத்தான் இருக்கு.

புலிகள் வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையில் இருந்த அதிகாரங்கள் அவர்களது பலம் திறமைகளிற்கு அப்பாற்பட்டது (over-ambitious) என்பது 3ஆவது நபர் பார்வையில் நியாயமானது. அந்த தகுதி இல்லை என்பதை நிரூபிக்கும் செயல்களில் ஈடுபடுவது எதிரிகளின் வேலையாக இருக்கும் (உதாரணம் கருணாவை பிரித்தெடுத்த சிறீலங்காவின் தந்திரம் அதைத் தொடர்ந்து படிப்படியாக விரிவாக்கப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு).

எமது தேசிய தலைமை எதை முன்வைக்குதே அதை கேள்விக் குட்படுத்தும் குறைந்தபட்ச தகுதி சர்வதேச சமூகத்திடம் இருக்கும். தமது சுயநலன்களிற்கான பேரம் பேசல்களிற்கு அப்பால் தகுதி இல்லாதவர்களை அங்கீகரித்து புதிய புதிய தேல்வியடைந்த நாடுகளை உருவாக்கிவிடுவோம் என்ற நியாயமான பயமும் இருக்கும்.

தமிழர்கள் ஒரு தனிநாட்டிற்குரிய பக்குவமான பொறுப்புள்ள திறமையுள்ள தரப்பு என்பதை நடத்தையில் நிரூபித்து நம்பிக்கையைப் பெறவேண்டியது எமது கடமை. நீங்கள் கேட்டதை எல்லாம் அங்கீகரிக்க வேண்டிய வில்லங்கம் எதுவும் ஒருவருக்கும் இல்லை.

இதை சிறுபிள்ளைத்தனமான வெற்றுப் பிரச்சாரங்களால் உடலங்களை வைத்து பொறுக்கி எடுத்த ஆயுதங்களை வைத்து கண்காட்சி நடத்தி காணொளியிலும் படங்களிலும் சர்வதேசத்திற்கு காட்டி செய்ய முடியாது. கண்காட்சி நடத்த வேண்டிய தேவை ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் தயாக மக்களை நோக்கி இருக்கு. ஆனால் அதை சர்வதேசத்திற்கு காணொளியிலும் படங்களிலும் காட்டும் தேவையில்லை. சர்வதேசத்தின் கவனத்தை 2 வழிகளில் பெறலாம் அதில் ஒன்று அல்கைதா வழி.

தனிநாட்டிற்குரிய தகுதி என்பது சமாதான காலத்தில் நாடா வெட்டி திறப்பு விழாக்கள் நடத்தி மேடைப் பேச்சு மூலம் வெட்டி விழுத்தி பேசி விட்டு எதிரியின் ஆக்கிரமிப்பு தொடங்கியவுடன் எல்லாம் சீர்குலைந்து தலைவிரி கோலமாக கூத்தாடுவதில் அல்ல. ஆக்கிரமிப்பிலும் கட்டுக்கோப்பை பேணுவதில் (அது ஊடக உறவாடலாக இருந்தாலும்) தான் திறமையும் தகுதியும் சர்வதேச சமூகத்திற்கு நிரூபிக்கப்படுகிறது. இதை சிதைத்து சீர்குலைந்த நடத்தையை காட்டுவது தான் எதிரியின் குறிக்கோள்.

அடுத்து வெளிநாட்டு அரசுகள் என்ன தீர்வை முன்மொழிய வேண்டும் என்று புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவது ஒரு ஆபத்தான பாதை. வெளிநாட்டு அரசுகள் திணிக்கக் கூடிய தீர்வுகளிற்கு புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவு இருப்பதான மூலாம் பூசுவதற்கு வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது. தீர்வு என்பது பலத்தினை நிரூபித்து பாதுகாத்து தக்கவைத்துத்தான் பெற முடியும். இதை தமிழர் சார்பில் முன்மொழிந்து அதற்கான தகுதியை செயற்பாட்டில் காட்டுவதற்குத்தான் ஒரு பன்முகப்பட்ட முன்னணிச் சக்தி இருக்கிறது.

Edited by kurukaalapoovan

மிக மிக சரியான கருத்துகள்.... நன்றி குறுக்ஸ்

சர்வதேசத்தின் கவனத்தை 2 வழிகளில் பெறலாம் அதில் ஒன்று அல்கைதா வழி.

மற்றது என்ன ????????????????????????????

இராணுவத்திற்கு கறுப்பு செவ்வாய் என்ன... கறுப்பு புதன், கறுப்பு வியாழன் என்று மாசக்கணக்கா உப்பிடி கொஞ்சம் கொஞ்சமா மண் அணையை அரிக்கிற அளவுக்கு ஆள்பலமும், எல்லை இல்லாத ஆயுத இறக்குமதியும் இருக்கு... அதைவிட இழப்புகளால அழுத்தங்கள் எதுவும் வராத வகையில் செய்தித்தணிக்கையும் வேற இருக்கு... இதில புலிகளின்டை உண்மையான இழப்புகள்... கையிருப்புகள் எதுவும் தெரியாம துள்ளிக் குதிக்கிறதில அர்த்தமில்லை!

இங்க ஒருத்தரும் துள்ளி குதிக்கேல, தாங்கள் அழாமல் இருந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

. இதில புலிகளின்டை உண்மையான இழப்புகள்... கையிருப்புகள் எதுவும் தெரியாம துள்ளிக் குதிக்கிறதில அர்த்தமில்லை!

புலிகளின் இழப்பை ஒவ்வரு நாளும் புலிகளின் குரல் வானொலில சொல்லிட்டு தான் இருக்கினம் நீங்கள் அதை கேட்டா தானே உங்களுக்கு அது தெரியும் .. இல்லாட்டி மாத கடசில சொல்லுவினம் எத்தை போராளிகள் செத்து இருக்கினம் என்று..அவர்களின் படம் குட இணைய தளங்களில் வரும் மாத கடசில...

தமிழனா பிறந்து தமிழ் ஈழ போராட்டத்தை பற்றி தெரியாத முட்டால் என்ரா நிரா தான் இருப்பிர்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்
மிக மிக சரியான கருத்துகள்.... நன்றி குறுக்ஸ்
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த இவர் சொல்கிறார்

இவர் முதலில் யாருக்கெல்லாம் புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறார்

தன்னை மிகுந்த மேல் இடத்தில் வைத்து

மற்றவர்களை மிகவும் தாழ்ந்த இடத்திலிருத்தி

கதை அளக்கிறார்

எதை எழுதினாலும் பிழை பிடிக்கிறார்

எதைக்காட்டினாலும் உதாசீனப்படுத்துகிறார்

அடி வாங்கினாலும் திட்டுகிறார்

திருப்பியடித்ததற்கும் திண்ணையை உடைக்கிறார்

இவரது சொல்லுக்கு எந்த பெறுமதியுமே கிடையாதபோது..............???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவருக்கு குறுக்கு புத்தி எட்டி போடு டம்மாங்குத்து குட்டு..

இதை புலிகள் பின் பற்றின அதோ கெதி தான்..சும்மா வாய்க்கு வந்தவற்றை பறையாதீங்கோ..

சர்வதேசத்தின் கவனத்தை 2 வழிகளில் பெறலாம் அதில் ஒன்று :) அல்கைதா வழி.... :lol:

அல்கொய்த வழி எண்டால் புலிகள் தொலைஞ்சுது...சும்மா உங்கட முசுபாத்திகள

விடுதலை வேட்கையோட விளையாடதீங்கோ..உங்கட குறுக்கு புத்திய கொஞ்சம் நெடுக்கால விட்டு

மாத்துங்கோ... :lol:

தமிழனா பிறந்து தமிழ் ஈழ போராட்டத்தை பற்றி தெரியாத முட்டால் என்ரா நிரா தான் இருப்பிர்

குட்டிப்பையன் பதிலடிகள் பலமா இருக்கு... :) , உங்கள் கருத்துக்கு மறுப்பு கூறமுடியாது அவரால, ஏனென்றால் நீங்கள் சொன்னதுபோல் புலிகள் எல்லாவற்றையும் அறிவித்துக்கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் சிறிலங்கா ராணுவம் தங்களின் விபரங்களை ஊர், பெயர் சொல்லி வெளியிடுவதை காணமுடியாது.

என்னத்த இவர் சொல்கிறார்

..................

இவரது சொல்லுக்கு எந்த பெறுமதியுமே கிடையாதபோது..............???????

:lol:

-----------

குறுக்காலபோனவரே...

தங்களின் மாற்றங்களுக்கு காரணம் என்னவென்று கேட்பதில் இனி அர்த்தமில்லை.

களத்தில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளும் நல்லதாக இல்லை...

நான் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதைப்போல்த்தான் தமிழ் மக்களும் விடுதலைப்புலிகள்தான் எல்லாமே என்றிருக்கிறார்கள், ஏற்றுக்கொண்டுள்ளார்கள், ஒரு சிலரைத்தவிர. நீங்கள் கூறிய கருத்தால் அந்த ஒருசிலருக்குள் நீங்களும் அடங்குகிறீங்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நான் ஒன்றும் வீரவசனங்கள் பேசரவவில்லை... களத்திலே நிற்கும் போராளிகளை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு இணையாக எங்களை ஒருபோதும் ஒப்பிட முடியாது... அவர்களின் தியாகங்கள் எங்கே... நாங்கள் எங்கே...? நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

அவர்களை ஒருகணம் எண்ணிப்பார்த்தால் இப்படி விதண்டாவாதமா பேச வராது.

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போவருக்கு குறுக்கு புத்தி எட்டி போடு டம்மாங்குத்து குட்டு..

இதை புலிகள் பின் பற்றின அதோ கெதி தான்..சும்மா வாய்க்கு வந்தவற்றை பறையாதீங்கோ..

சர்வதேசத்தின் கவனத்தை 2 வழிகளில் பெறலாம் அதில் ஒன்று :) அல்கைதா வழி.... :lol:

அல்கொய்த வழி எண்டால் புலிகள் தொலைஞ்சுது...சும்மா உங்கட முசுபாத்திகள

விடுதலை வேட்கையோட விளையாடதீங்கோ..உங்கட குறுக்கு புத்திய கொஞ்சம் நெடுக்கால விட்டு

மாத்துங்கோ... :lol:

உண்மையில் என்றோ விடிந்திருக்கவேண்டிய எமது வாசலை அடைத்ததே இந்த அல்கைதா என்ற சனியன் அமெரிக்காவை இடித்ததுதான்

அதை பின் பற்றச்சொல்லும் ஒருவர்

இன்றும் எம்முடையே உண்டு என்றால் அவரைப்பற்றி கணக்கு போடுங்கோ

எங்களை எங்கோ கொண்டுபோய் விடப்பார்க்கிறார் என்று??????

அல்கொய்த வழி எண்டால்

காரணம் எதுவுமில்லாமல்

மலையோட எமது தலையை மோதுவது

என்றுதான் அர்த்தம்

ரெண்டு கிழமையா பொப்கோன் சாப்பிடேலாமலிருக்கே எண்டு சோகத்திலே இருக்கிற ஆளை எல்லாருமா போய் சீண்டினா ஆத்திரம் தானே வரும்... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு கண்டியளோ.. அதுதான் உப்பிடி புலம்புறார்.. :)

இராணுவத்திற்கு கறுப்பு செவ்வாய் என்ன... கறுப்பு புதன், கறுப்பு வியாழன் என்று மாசக்கணக்கா உப்பிடி கொஞ்சம் கொஞ்சமா மண் அணையை அரிக்கிற அளவுக்கு ஆள்பலமும், எல்லை இல்லாத ஆயுத இறக்குமதியும் இருக்கு... அதைவிட இழப்புகளால அழுத்தங்கள் எதுவும் வராத வகையில் செய்தித்தணிக்கையும் வேற இருக்கு... இதில புலிகளின்டை உண்மையான இழப்புகள்... கையிருப்புகள் எதுவும் தெரியாம துள்ளிக் குதிக்கிறதில அர்த்தமில்லை!

கனகாலம் கண்டு... எப்பிடி இருருக்கிறிங்கள்?

நீங்கள் சொன்னதை திரும்பவும் ஒருக்கா சொல்லுங்கோ.. சில சனத்துக்கு அடிக்கடி சொல்ல வேண்டிக்கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.