Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது போராட்டத்தின் இன்றைய நிலைகுறித்து: இரு பதிவுகள்…

Featured Replies

தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வேண்டும் என்ற தெளிவில், எவ்வாறு எமது உரிமைகள் விரைவில் உறுதி செய்யப்படலாம் என்ற வழிகளை ஆராயும் சிந்தனைகள் தெரிந்தோ தெரியாமலோ எம்மக்களை நேசிக்கும் அனைவரின் மனங்களிலும் இன்று எழவே செய்கின்றன. அவ்வகையில், எனக்குத் தோன்றிய இரு வேறு எண்ணங்களை யாழ்களத்தோடு பகிர்ந்து உங்கள் கருத்துக்களை அறிவதற்காகக் கீழே தனித் தனியாகப் பதிவிடுகின்றேன்.

பதிவு 1

------------

ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றெமது மக்கள் மத்தியில் உள்ள மிகப்பெரும்பான்மைக் கருத்து இழந்த நிலங்கள் விரைவில் மீட்கப்படவேண்டும் என்பதாகவே அமைகிறது. போராட்டம் அவசியம் என்பதற்கும் நிலமீட்பு அவசரம் என்பதற்குமிடையேயான வித்தியாசம் பற்றி அல்லது அவ்வாறொரு வித்தியாசம் உள்ளது என்பது பற்றி அனேகம் பேர் பேசுவதாகத் தெரியவில்லை.

மேலே செல்லுமுன்னர், சுருக்கமாகச் சில தரவுகளை மனதிருத்தி நகர்வோம்.

ஈழப்போர் ஒன்று பனிப்போரின் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்து முடிந்தது, ஈழப்போர் ஒன்றின் முடிவில் தமிழர் போராட்டம் பெருமளவில் கரந்தடிப் போராட்டமாகவே இருந்தது. இந்தியப்படைகளுடனான போராட்டம் பனிப்போர் சேடமிழுத்த காலத்தில் நிகழ்ந்தது. இந்தியப்படைகளுடனான போராட்டத்தின் பின்னர் தான் புலிகளின் சீருடையே அமுலிற்கு வந்தது என்கையில் இதர மரபு வழிகள் பற்றிப் பேசத்தேவையில்லை. ஈழப்போர் இரண்டு பனிப்போரிற்கு அப்பாலான உலக மாற்றத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. உலகம் தன்னை புதிதாக எவ்வாறு ஏக வல்லரசின் கீழ் வடிவமைப்பதென்று தெளிவின்றி இருந்த காலம் அது. வட அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சிநிலை படிப்படியாகச் சரிபெற ஏறத்தாள 1987 பங்குச் சந்தைச் சரிவு முதல் தொண்ணூறுகளின் முதற்பகுதிகள் வரை சென்றது. மூன்றாம் ஈழப்போர் ஏக வல்லரசின் கீழ், வடஅமெரிக்காவின் பொருளாதாச் செழிப்பான காலத்தில், உலகமயமாக்கல் சிலிர்த்தெழு முன்னர் நடைபெற்றது. மூன்றாம் ஈழப்போர் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, உலகில் யுஎஸ்எஸ்கோல் மீதான தாக்குதல் தொட்டு சீனாவுடனான அமெரிக்க முறுகல் வழியாக அமெரிக்காமீதான இஸ்லாமியத் தாக்குதல் வரை நிகழ்ந்து முடிந்தன (அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதலிற்குச் சொற்ப நாட்கள் முன்னால் சீனாவில் தரையிறங்க நேர்ந்த அமெரிக்க விமானம் தொடர்பில் நிகழ்ந்த பரப்பான செய்திகள் பலரிற்கு ஞாபகம் இருக்கலாம், இன்றைக்கு உள்ள நிலவரத்தை அச்செய்திகளின் தன்மையோடு ஒப்பிடின் பல தெளிவுகள் பிறக்கும்). அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல்களால் தான் மாற்றம் தேவைப்பட்டதா அல்லது தாக்குதல் சந்தர்ப்பவசமாகப் பாவிக்கப்பட்டனவா அல்லது இன்னமும் ஒருபடி மேலே சென்று தாக்குதல்கள் நடைபெறட்டும் என்று அமெரிக்கா தான் விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததா என்பன போன்ற விவாதங்களிற்கு அப்பால் உலகம் புதிதாகத் தன்னை வடிவமைக்க முடிவெடுத்தது...

உலகம் தனது புதுப் பாதையையும் அதன்; வேகத்தையும் தீர்மானித்ததன் பின்னர் ஈழப்போர் நான்கு ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஆனையிறவின் வீழ்ச்சி கடந்து ஈழப்போர் செல்கின்றது.

ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னரும் “புலிகள் இனி என்ன கடலுக்கையா குதிக்கப்போயினம்” என்ற கேலி எழுந்தது தான். இப்போதும் எழுகின்றது தான். ஆனால் அன்றைக்கிருந்த சவால்களிற்கும் இன்றைக்குள்ள சவால்களிற்குமிடையே பாரிய வித்தியாசம் உள்ள நிலையில், கேலிக்குப் பதிலளிப்பதற்கு முன்னர் சற்றுச் சிந்திப்பது அவசியம்.

உலகில் எமக்கு நேரடியாக வெளிப்படையாகக் காசோலை அனுப்புவதற்கு எந்த நாடுமில்லை என்பது தெளிவானதன் பின்னர் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வதற்கான பணத்தைத் திரட்டுவதற்கு எமக்கிருக்கும் வழிகளை ஏறத்தாள மூன்று பாரிய பிரிவுகளிற்குள் அடக்கலாம். ஒன்று தமிழ் மக்களின் (புலம் பெயர்ந்தோர் உட்பட்ட, தாயகத்தில் வரி உள்ளடங்கலான அனைத்தும்) பங்களிப்பு, இரண்டு கறுப்புச்சந்தை மற்றும் குற்றமாகக் கருதப்படும் இதர பரிமாற்றங்கள். மூன்று பினாமிகளின் தொழிற்பாடு. (இவ்வழிகள் அனைத்தும் பாவிக்கப்படுவதாக நான் கூறவில்லை. இவைதவிர பணம் புரட்டக் கூடிய பிற வழிகளை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. அவ்வளவு தான்).

மேற்படி வழிகள் அனைத்தையும் எமது போராட்டம் பயன்படுத்துகின்றது என்று ஒரு பேச்சிற்கு எடுத்து கொண்டு மேற்படி மூன்று பிரிவுகளையும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தால்:

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை, பங்களிப்பு என்று இருந்தால் அது அவர்களது வருமானத்தில் எத்தனை விகிதமானதாக இருக்கும் என்பதை வாசகர்;கள் ஊகிக்கலாம். மேலும், புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நூறு வீதம் போராட்டத்திற்காக மட்டுமே உழைத்து அனைத்தையும் போராட்டத்திற்கே கொடுத்தாலும் கூட, புலம்பெயர்ந்த எமது மொத்த மக்கள் தொகை ஒரு மில்லியனிற்கும் குறைவானது. ஆறு பில்லியன் உலக சனத்தொகையில் ஒரு மில்லியன் பற்றி நாம் அதிகம் கற்பனை செய்யத் தேவையில்லை. தாயக மக்கள் நிலவரமும் நிதி தொடர்பில் அத்தனை சாதகமாய் இல்லை.

அடுத்தது கறுப்புச் சந்தை மற்றும் குற்றமாகக் கருதப்படும் இதர வழிவகைகளும் கையாளப் படுகின்றன என்று பேச்சிற்கு வைத்துக் கொண்டால். குற்றமாகக் கருதப்படும் சந்தையிலும் கூட போட்டிகள் இல்லாமலில்லை, உண்மையில் அங்குதான் போட்டிகள் அதிகமாய் இருக்கும் என்பது ஊகிக்கக்கூடியது. அதுவும் இரண்டாயிரத்து ஒன்றின் பின்னர் இப்போட்டிகள் தடைகள் இன்னமும் அதிகரித்துள்ளன. கறுப்புச் சந்தையிலும் பலம்பொருந்தியவர்களே வெல்வர். கப்பற்போக்குவரத்து, விமானசேவை, நாடுகளிற்கிடையேயான எல்லைகள், உலக போலிஸ் காரர்கள் என்று பல விடயங்களை அடிப்படையாக் கொண்ட கறுப்புச் சந்தையிலும் போட்டிகளினதும் அதிகாரத்தினதும் உயர்வு தாழ்வுகள் பெரும்பங்கு வகிக்கும் (கருப்புச் சந்தை என்பதால் அங்கு உலக நாடுகள் போட்டியிடுவதில்லை என நாம்; நினைத்து விடமுடியாது). கருப்புச்சந்தை ஏற்கனவே பிரச்சினைகள் நிறைந்தது என்பதால் அங்கு கூட்டணிகள் அமைத்துக் கொள்ளும் பெரும் புள்ளிகளும் எம்மைப் போன்ற தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களோடு கூட்டணி அமைத்து இன்னும் பிரச்சினையைக் கூட்டாதிருக்கவே விரும்புவர். எமது இயக்கம் மீதான சர்வதேச தடைகளிற்கு இப்படியும் ஒரு பரிமாணம் கற்பனை செய்யப்படக்கூடியது (றிஸக் அசெஸ் பண்ணாத வியாபாரம் இல்லை). புதிய உலக ஒழுங்கில் எமது போராட்டத்திற்குக் கருப்புச் சந்தையால் வரக்கூடிய பங்கு என்று இருந்தால் அது கூடுவதற்குப் பதில் குறைந்தே இருப்பது தவிர்க்கமுடியாதது.

பினாமிகள் என்ற செயற்பாடும் இருப்பதாய் நாம் கருதின், சர்வதேச சந்தையை எடுத்துக் கொண்டால் இங்கு சிறு வியாபாரங்கள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தான் எப்போதும் செயற்பட்டு வந்திருக்கின்றன இனியும் செயற்படும். பெரு வியாபார முதலைகளாய் ஆதல் என்பதற்குப் பாரிய முதலீடுகள் மட்டும் அன்றி அதற்கான சிந்தனையும் அவசியம். எமது சமூகம் இன்று வரை நூறுமில்லியன் டொலர்கள் ஆண்டு வருமானம் பெறும் நிறுவனங்களின் மட்டத்தில் கூட பெரிதாய்ச் செயற்படத்தொடங்கவில்லை. அரிதாய் ஒரு சிலரே நூறு மில்லியன் மட்டத்தில் இன்னமும் உள்ளபோது, நூறு மில்லியன் மட்டத்தையே பினாமிகள் பரந்தளவில் அடைவதற்கு இன்னமும் நாட்பிடிக்கும்.

இதுவெல்லாவற்றிற்கும் மேலால் மேலுள்ள மூன்று பிரிவுகளும் சேர்ந்து (ஒப்பீட்டு ரீதியில் குறைந்து விட்டாலும்) வளங்களைப் புரட்டுகின்றன என்று கொள்ளின், களத்திற்கும் களத்திற்குத் தொடர்பான இடங்களிற்குமான போக்குவரத்து என்பதிலும் கூடப் புதிய உலக ஒழுங்கில் உள்ள போட்டிகளால் சிக்கல்கள் நாளிற்கு நாள் அதிகரிக்கும் என்பது நாம் ஊகிக்கக் கூடியது.

ஆனால் சிங்களத்தைப் பொறுத்தவரை, உலகம் சிங்களத்தின் பக்கம் தாம் சேர்வது தான் தமது நலன்களிற்கும் சாதகம் என்று முடிவெடுத்த நிலையே உள்ளது. புலம் பெயர்ந்த சிங்களவர்கள் போரினால் ஆதாயம் தேடும் நிலை தான் அவர்களிற்கு உள்ளதே தவிர அவர்களின் பங்களிப்பு அங்கு அரசிற்குத் தேவைப்படவில்லை. இப்போதெல்லாம் சிங்களத்தின் போர் நடவடிக்கைகளில் தமது பங்கு பற்றி உலகம் ஒப்புக்குத் தன்னும் மறைக்க முனையாத நிலையே படிப்படியாகத் தோன்றிவருகின்றது.

தலைவரின் இராணுத் திட்டமிடல்த் திறனாலும், போராளிகளின் வர்ணிக்கமுடியா அர்ப்பணிப்புக்களாலும், மக்களின் நிபந்தனையற்ற ஆதரவினாலும் காலத்திற்குக் காலம் அதிசயங்கள் ஈழமண்ணில் அனைத்துச் சவால்களையும் சமாளித்து நிகழ்த்தப்பட்டவண்ணம் தான் உள்ளன என்றபோதும், போராட்டத்தின் தார்;பரியங்கள் பற்றி மக்கள் எப்போதும் தெளிவான புரிதல்களை வைத்திருப்பது அவசியம் (அப்போது தான் எமது பங்களிப்பு வினயமானதாக இடம்பெறும்).

இறுதி யுத்தத்திற்கான முழுப்பங்களிப்பு, ஒரு வீட்டிற்கு ஒரு போராளி என்று புதிய எல்லைகளைப் பரீட்சித்தபின்னரே இன்று நாம் ஒரு மாபெரும் சிங்கள இராணுவ முனைப்பை எதிர்கொண்டு நிற்கின்றோம். இழந்த நிலங்களை நிட்சயம் மீட்க முடியும் என்றபோதும் “மீழப் பிடி” என்று கோசம் எழுப்புமுன்னர் நாம் சற்றேனும் சிந்திக் வேண்டும். புலம்பெயர் மண்ணில் தொடர்ந்து வேலை இழக்கும் ஒருவர் அடுத்த வேலைக்கு விண்ணபிக்க முன்னர் தனது தகமைகள், திறன்கள், போட்டிகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலவர மாற்றங்கள் போக்குகள் பற்றிச் சிந்திப்பதற்குச் சொற்ப நாட்களையேனும் எடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை. ஆனால் போராட்டத்தைப் பொறுத்த வரை நிலத்தை இழந்தால் அதை மீளப் பிடி என்ற கோசமன்றி வேறெதுவும் ஆதரவாளர் மத்தியில் இப்போது கேட்பதாய் இல்லை.

என்னென்ன காரணங்களிற்காகத் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் சந்திக்கப்படனவோ அக்காரணங்களில் எதுவும் மறைந்து விடவில்லை மறையப் போவதும் இல்லை. மேலும் புதிய சவால்கள் உருவாவது தான் எதிர்பார்;க்கக் கூடியது. இந்நிலையில் எமது போராட்டத்தின் வடிவம் ஆதரவாளர்களால் சிந்தனைக்குட்படுத்தப்படவேண

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

டீ பொனொ வின் "Lateral thinking" என்று கேள்விப் பட்டிருக்கிறேன், என் மர மண்டைக்கு ஒரு நாளும் சரி வந்ததில்லை. இப்போது புரிகிறது. நன்றி இன்னுமொருவன்.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றி ஜஸ்ரின்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வித்தியாசமான கருத்துக்கள். நேரங்கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களை முன்னுதாரணமாக கொண்டு புலம்பெயர் மக்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும்.

சில கேள்விகள்:

உலகபொருளாதார மந்த நிலையால் ஆயுத விலைகளும் சரிந்து விழும் தானே ?

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி.

ஆயுத விலை பற்றிய கேள்விi விட்டுவிடுகின்றேன் :wub:

Edited by Innumoruvan

நல்ல கட்டுரை..... போராட்டம் தெற்கு நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிதாயினும், ஒரு புதிய சிந்தனையாக இதனைக் கொள்ள முடியும். அமெரிக்கா ஆப்கனிற்கு போவதற்கும் புலிகள் தெற்கிற்கு போவதற்கும் நிறைய வித்தியாசம்., தள வேறுபாடு என்பன உண்டு.

நல்ல வித்தியாசமான கருத்துக்கள். நேரங்கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களை முன்னுதாரணமாக கொண்டு புலம்பெயர் மக்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும்.

சில கேள்விகள்:

உலகபொருளாதார மந்த நிலையால் ஆயுத விலைகளும் சரிந்து விழும் தானே ?

பொருளாதார சரிவின் போது தான் ஆயுதங்களின் தேவை இன்னும் அதிகரிக்கும். வறுமையும், வளப் பங்கீட்டில் இடம் பெறும் சமமின்மையும் அரசுகளின் இருப்புக்கு சவாலாக மாறுகையில், அவ் அரசுகளால் இனக் குழுமங்களிடையே பேதங்கள் ஊக்குவிக்கப் பட்டு உள் நாட்டு கிளர்ச்சி வெடிக்கும். அல்லது அரசுக்கு எதிரான அமைப்புகள் எழுச்சி பெற்று ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆபிரிக்காவில் சூடான், எத்தியோப்பியா, உகண்டா போன்ற நாடுகள் இவற்றிற்கு நல்ல உதாரணம். அங்கு உணவுக்கு வழியில்லை எனும் நிலையிலும் கிளர்ச்சிக்கான ஆயுதங்கள் பெரும் செலவில் வாங்கப் பட்டு, ஒவ்வொரு பிரதேசத்திலும் குட்டி சர்வாதிகாரிகள் தோன்றினர். ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும் போது, அதனை உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரமும் சரிவடையும் போது ஆயுதங்களின் விலை மேலும் அதிகரிக்கும். அத்துடன் உலக வல்லரசுகள், தம்மை பொருளாதார அழிவிலிருந்து மீட்க ஆயுதம் நிறைய விற்க கூடியவாறு பலகீனமான தேசங்களில் பிரச்சனைகளையும் கலவரங்களையும் தோற்றுவிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு 2 ஒரு நல்ல விடயம் தான் ,,பதிவு 1 சீ சீ சீ அந்த பழம் புளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.