Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போரா அல்லது இன அழிப்பா?

Featured Replies

சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போரா அல்லது இன அழிப்பா?

காட்சி ஒன்று:

சிறீ லங்கா இனவாத அரசு வெளிநாட்டு கடனிலும், வெளிநாடுகளின் அன்பளிப்பு பணத்திலும் வாங்கிய விதம் விதமான விமானங்களினை வெளிநாட்டுவிமான ஓட்டிகள் ஓட்டி, தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி குண்டுகளை கொட்டி, அப்பாவித் தமிழர்களை கொன்றும், அங்கவீனம் அடையச்செய்தும், மனநோயாளிகள் ஆக்கிக்கொண்டும் இருக்கின்றார்கள்.

காட்சி இரண்டு:

இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பங்களாதேசம் என்று வெவ்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு செய்யும் பேரினவாதிகளின் இராணுவத்திற்கு ஆலோசனைகள் கூறுவதோடு, இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு நேரில் சென்று பல்வேறு உதவிகளை செய்கின்றார்கள்.

காட்சி மூன்று:

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபடும்போது சிறீ லங்கா இனவாத கடற்படையினால் சுட்டுக்கொல்லப் படுகின்றார்கள், கைது செய்யப்படுகின்றார்கள், பல்வேறுவிதமான சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். தவிர, சிறீ லங்கா நாட்டைவிட்டு பாதுகாப்பு காரணங்களிற்காக அகதியாக தமிழ்நாடு செல்லும் தமிழ் அகதிகளும் சிறீ லங்கா கடற்படையினால் துன்புறுத்தப் படுகின்றார்கள், கொல்லப் படுகின்றார்கள்.

காட்சி நான்கு:

சிறீ லங்காவில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் சிறீ லங்கா அரசினாலும், அதன் கைக்கூலிகளினாலும் கடத்தப்படுகின்றார்கள், கைதுசெய்யப்படுகின்றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். சிறீ லங்கா அரசினால் தமிழ் ஊடகங்கள் பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றன, பகிரங்க எச்சரிக்கை செய்யப்படுகின்றன. தமிழ் ஊடக நிலையங்கள் இனவாத அரசின் தாக்குதல்களினால் சேதமாக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன.

காட்சி ஐந்து:

சிறீ லங்கா அரச படை புலனாய்வாளர்களினாலும், கைக்கூலிகளினாலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகின்றார்கள், கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி சிறைகளில் அடைக்கப்படுகின்றார்கள், கொலைசெய்யப்படுகின்றார்கள்.

காட்சி ஆறு:

மனித உரிமை அமைப்புக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு சிங்கள இனவாதஅரசினால் பலப்பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. வெளிநாடுகளை தளமாக கொண்டு இயங்கும் மக்கள் நலன்புரி அமைப்புக்கள் அனைத்தும் சிறீ லங்கா அரசினால் பலாத்காரமாக தமிழர் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

காட்சி ஏழு:

சிறீ லங்கா இராணுவம் தமிழர் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்கள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்கள் செய்து தினமும் தமிழர்களை கொல்கின்றது, காயப்படுத்துகின்றது.

காட்சி எட்டு:

சிறீ லங்கா இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணி அப்பாவி தமிழ் மக்கள் பயணம் செய்யும் வாகனங்களை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல்கள் செய்கின்றது. குழந்தைகள் உட்பட வயது, பால் வேறுபாடின்றி தமிழர் மடிகின்றார்கள், காயப்படுகின்றார்கள்.

காட்சி ஒன்பது:

இந்தியாவைச் சேர்ந்த இராணுவ தொழில்நுட்ப நிபுணர்கள், அதிகாரிகள் சிறீ லங்கா இராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து தமிழ் மக்களினை கொல்லும் இன அழிப்பில் பங்குபற்றுகின்றார்கள். பல்வேறு தொழில்நுட்ப, ஆயுத உதவிகளை இந்தியா சிறீ லங்கா தீவிரவாத அரசிற்கு கொடுத்து மகிழ்கின்றது.

காட்சி பத்து:

தமிழர் பிரதேசங்கள் மீது திட்டமிட்ட பொருளாதார தடைகள் ஏற்படுத்தப்பட்டு தமிழ்மக்கள் நீண்டகால ரீதியாக உடல், உளநலம் குறைந்தவர்களாகவும், ஆற்றல்கள் சிதைக்கப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டு சிங்கள அரசினால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள்.

மேலுள்ள காட்சிகள் சம்மந்தமாக சில கேள்விகள்:

1. வரலாற்றில் எந்தெந்த உள்நாட்டு போர்களில் ஓர் நாட்டு அரசு தனது நாட்டை சேர்ந்த மக்களை விமானக்குண்டுவீச்சு மூலம் வயது வேறுபாடின்றி திட்டமிட்டு கொல்கின்றது? அல்லது கொன்றுள்ளது?

2. வரலாற்றில் எந்தெந்த உள்நாட்டு போர்களில் ஓர் நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தை அழிக்க அதேநாட்டின் பெரும்பான்மை இனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசிற்கு உலகநாடுகள் ஒன்றிணைந்து இராணுவ உதவிகள் செய்கின்றன? அல்லது செய்துள்ளன?

3. உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறீ லங்கா கடற்படையினருக்கு வெளிநாடான இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டினை சேர்ந்த கடற்தொழில் செய்யும் அப்பாவி மீனவர்களை கொல்லவேண்டியதன், துன்புறுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

4. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசினால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன், கைது செய்யப்படுவதன், சித்திரவதைகள் செய்யப்படுவதன் காரணம் என்ன? சிறீ லங்கா இனவாத அரசினால் ஊடக நிலையங்கள் சேதமாக்கப்படுவதன் காரணம் என்ன? சிறீ லங்கா அரச தலைவரினால் ஊடகவியலாளர்கள் பகிரங்க எச்சரிக்கை செய்யப்படவேண்டியதன் காரணம் என்ன? ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படவேண்டியதன் காரணம் என்ன?

5. சிறீ லங்கா உள்நாட்டுப்போரில் போரில், சிறீ லங்கா இனவாதிகளினால் போரில் ஈடுபடாத அப்பாவி தமிழ் மக்கள் தண்டிக்கப்படுவதன் - கொலை செய்யப்படுவதன் காரணம் என்ன? தமிழ் கைக்குழந்தைகளுமா போரில் ஈடுபடுகின்றன?

6. சிறீ லங்கா அரசு நேர்மையான முறையில் உள்நாட்டுபோரில் ஈடுபட்டால் மனித உரிமை அமைப்புக்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏன் முட்டுக்கட்டைகள் போடவேண்டும்? மனித நலன்புரி அமைப்புக்களை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய முடியாத வகையில் ஏன் தடைசெய்யவேண்டும்?

7. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசபடைகள் போர் நடைபெறாத இடங்களில் - தமிழ் மக்களின் குடியிருப்புக்களை நோக்கி செறிவான தாக்குதல்கள் செய்வதன் காரணம் என்ன? சிறீ லங்கா அரசினால் அப்பாவி தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதன் நோக்கம் என்ன?

8. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசபடைகள் தமிழ் பொதுமக்களின் வாகனங்களை - செஞ்சிலுவை சங்க வண்டிகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் - இவற்றை குறிவைத்து தாக்குதல் செய்வதன் காரணம் என்ன?

9. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசிற்கு வெளிநாட்டு படைகளும், வெளிநாட்டு அரசுகளும் ஓடியோடி உதவிகள் செய்வதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?

10. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசு ஏன் பெரும்பான்மை இனத்தை ஒருவிதமாகவும், சிறுபான்மை இனத்தை இன்னொருவிதமாகவும் நடாத்தவேண்டும்? உள்நாட்டுப்போரில் சிறீ லங்கா அரசினால் சிறுபான்மை இனம் மட்டும் தண்டிக்கப்படுவதன் மர்மம் என்ன?

தமிழர் ஆதங்கம்:

மேலுள்ள பத்து காட்சிகளும் சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போர் அல்ல, திட்டமிட்ட இன அழிப்பு என்பதற்கு சுருக்கமான பத்து சாட்சியங்கள். அரசியல் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எப்போது இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளப் போகின்றார்? ஜெயா தொலைக்காட்சியில் Little Super.. அந்த Star இந்த Star என்று விதம்விதமாக குழந்தைகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றார்கள். விசுவின் மக்கள் அரங்கத்தில் பலதும் பத்துமான விடங்கள் பற்றி குழந்தைகளே விவாதமும் செய்கின்றார்கள். இப்படி ஆரோக்கியமான முறையில் தமிழ்நாட்டு குழந்தைகளை ஊக்குவிக்கின்றார்கள். ஆனால்.. தாயகத்து குழந்தைகள் சிங்கள இனவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக படுகொலை செய்யப்படும்போது, அங்கவீனர்கள் ஆக்கப்படும்போது... அவற்றை கண்டுகொள்ளாது.. போரில் மக்கள் இறப்பது வழமை . எனவே இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று அறிக்கை விடுவது மனிதத்தன்மை உள்ள ஒருவர் சொல்கின்ற வார்த்தையா?

ஜெயலலிதா அம்மையார் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. சிங்கள இனவாதிகளினால் கொலைகள் செய்யப்படுவதை ஊகுவிக்காமலாவது இருக்கலாமே? வரலாற்றில் எத்தனையோ பல ஆயிரம் கொடை வள்ளல்களை, அரசர்களை, தலைவர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பாரம்பரியத்தை உடையது தமிழ்நாடு. ஆனால் அம்மையாரின் செயற்பாடுகள் தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதும்போல் இருக்கின்றதே!

உங்கள் சிந்தனைக்கு:

சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போர் அல்ல. சிறீ லங்காவில் பேரினவாத அரசினால் தமிழர் மீது திட்டமிட்ட இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பின் நேரடித் தாக்கத்தினால் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள், பல இலட்சம் தமிழர்கள் காயப்பட்டு உள்ளார்கள், அங்கவீனம் அடைந்து உள்ளார்கள், பல இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளார்கள். தமிழ் மக்களின் சொத்துக்கள், வளங்கள் அனைத்தும் சிறீ லங்கா அரச பயங்கரவாதிகளினால் சூரையாடப்பட்டுள்ளன, சிதைக்கப்படுள்ளன. தமிழினம் மீது சிங்கள பேரினவாதிகளினால் காலம், காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டமிட்ட ஓரங்கட்டல் காரணமாக தமிழர் வாழ்வு சின்னாபின்னமாக்கப்பட்டு உள்ளது.

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்க ஏனைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களைப்போல் ஜெயலலிதா அம்மையாரும் முன்வந்தால் எத்தனையோ இலட்சம் அப்பாவி தமிழ்மக்களின் உயிர்களும், உடமைகளும் சீறீ லங்கா அரசினால் ஒருதலைப்பட்சமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பேரவலத்தில் இருந்து காக்கப்பட மிகவும் உதவியாய் இருக்கும்.

செயற்பாடு:

உங்களிற்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் மூலம் மடல் எழுதி சிறீ லங்கா இனவாதிகளின் கொலைகளை ஊக்குவிக்கவேண்டாம் எனக்கேட்டு அம்மையாருக்கு மடல்கள் அனுப்பலாம். தாம்படுகின்ற பேரவலத்தை சொல்கின்ற தாயகத்தில் உள்ள குழந்தைகளின் மடல்களும் ஜெயலலிதா அம்மையாருக்கு அனுப்பப்படலாம். இதன்பின்னராவது அம்மையாரின் மனநிலை மாறாதா என்று எதிர்பார்போம்..! பெரியவர்களை புறக்கணித்தாலும், சிலவேளைகளில் அம்மையார் குழந்தைகளிற்காவது மனம் இளகக்கூடும்.

நன்றி! வணக்கம்!

பி/கு: ஒவ்வொரு காட்சியையும் பிரதிபலிக்கும் படங்களை அவற்றின் அகோரம் காரணமாக இங்கு இணைக்கவில்லை.

Edited by முரளி

1. வரலாற்றில் எந்தெந்த உள்நாட்டு போர்களில் ஓர் நாட்டு அரசு தனது நாட்டை சேர்ந்த மக்களை விமானக்குண்டுவீச்சு மூலம் வயது வேறுபாடின்றி திட்டமிட்டு கொல்கின்றது? அல்லது கொன்றுள்ளது?

சதாம் ஹுசைன் ஈராக்கில் நிகழ்த்தியது தவிர அடுத்தது இலங்கை எல்லா அரசுகளும் (ஜே.ஆர், பிரேமதாசா, சந்திரிக்கா, பிரேமதாசா) மற்றும் அமைதி நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை அரசின் அனுமதியுடன் வந்த ராஜீவின் இந்திய படைகள்

2. வரலாற்றில் எந்தெந்த உள்நாட்டு போர்களில் ஓர் நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தை அழிக்க அதேநாட்டின் பெரும்பான்மை இனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசிற்கு உலகநாடுகள் ஒன்றிணைந்து இராணுவ உதவிகள் செய்கின்றன? அல்லது செய்துள்ளன?

1.எரித்திரியா

2. கிழக்கு திமோர்

3.வியட்நாம்

அவை சுதந்திரம் பெற்று விட்டன.... நாம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம்

3. உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறீ லங்கா கடற்படையினருக்கு வெளிநாடான இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டினை சேர்ந்த கடற்தொழில் செய்யும் அப்பாவி மீனவர்களை கொல்லவேண்டியதன், துன்புறுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

தமிழராய் பிறந்தமையால், நிச்சயம் அவர்கள் தமக்கிடையே எந்த ஒற்றுமையும் இன்றி சாதி, பிரதேசம் மற்றும் பொருளாதார ரீதியில் பிரிந்து இருப்பார்கள் என்ற 100 வீத உண்மையை உணர்ந்தமையால்.

4. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசினால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன், கைது செய்யப்படுவதன், சித்திரவதைகள் செய்யப்படுவதன் காரணம் என்ன? சிறீ லங்கா இனவாத அரசினால் ஊடக நிலையங்கள் சேதமாக்கப்படுவதன் காரணம் என்ன? சிறீ லங்கா அரச தலைவரினால் ஊடகவியலாளர்கள் பகிரங்க எச்சரிக்கை செய்யப்படவேண்டியதன் காரணம் என்ன? ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படவேண்டியதன் காரணம் என்ன?

வடக்கு கிழக்கை போன்று (அது புலிகளானாலும் சரி, கூலிக்கு எலும்புத்துண்டு பொறுக்கும் படையானாலும் சரி) விமர்சனத்தினை ஏற்க விரும்பாத சர்வாதிகார அரசியலில் உள்ள விருப்பினால்

5. சிறீ லங்கா உள்நாட்டுப்போரில் போரில், சிறீ லங்கா இனவாதிகளினால் போரில் ஈடுபடாத அப்பாவி தமிழ் மக்கள் தண்டிக்கப்படுவதன் - கொலை செய்யப்படுவதன் காரணம் என்ன? தமிழ் கைக்குழந்தைகளுமா போரில் ஈடுபடுகின்றன?

ஏனெனில் அவர்கள் தமிழர்கள்

6. சிறீ லங்கா அரசு நேர்மையான முறையில் உள்நாட்டுபோரில் ஈடுபட்டால் மனித உரிமை அமைப்புக்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏன் முட்டுக்கட்டைகள் போடவேண்டும்? மனித நலன்புரி அமைப்புக்களை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய முடியாத வகையில் ஏன் தடைசெய்யவேண்டும்?

அப்படி தடை செய்தாலும், எவரும் கேள்வி கேட்காமல் தடுப்பதற்கு பிராந்தி(ய) பலவான் இந்தியா இருப்பதால்

7. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசபடைகள் போர் நடைபெறாத இடங்களில் - தமிழ் மக்களின் குடியிருப்புக்களை நோக்கி செறிவான தாக்குதல்கள் செய்வதன் காரணம் என்ன? சிறீ லங்கா அரசினால் அப்பாவி தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதன் நோக்கம் என்ன?

அரசின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தமிழ் மக்களை கொல்ல, காணாமல் போகடிக்க முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்கள் ஆன தமிழ் துணை இராணுவப் படை உண்டு... ஆனால் புலிகளின் பிரதேசத்தின் அப்படி இல்லையே... ஆகவே செறிவான (எறிகணை) தாக்குதல்கள்

8. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசபடைகள் தமிழ் பொதுமக்களின் வாகனங்களை - செஞ்சிலுவை சங்க வண்டிகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் - இவற்றை குறிவைத்து தாக்குதல் செய்வதன் காரணம் என்ன?

கேட்க யாரும் இல்லை...அப்படி கேட்டாலும் இந்தியா அவர்களின் வாயை மூடும்

9. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசிற்கு வெளிநாட்டு படைகளும், வெளிநாட்டு அரசுகளும் ஓடியோடி உதவிகள் செய்வதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?

எமது ஒற்றுமை இன்மை

10. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள சிறீ லங்கா அரசு ஏன் பெரும்பான்மை இனத்தை ஒருவிதமாகவும், சிறுபான்மை இனத்தை இன்னொருவிதமாகவும் நடாத்தவேண்டும்? உள்நாட்டுப்போரில் சிறீ லங்கா அரசினால் சிறுபான்மை இனம் மட்டும் தண்டிக்கப்படுவதன் மர்மம் என்ன?

ஏனெனில்...அவர்கள் தமிழர்கள். இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களில் இப்பொது கை வைப்பதை விட அதிகமாக வைத்தால் ஏனைய முஸ்லிம் நாடுகள் கேட்கும்...நமக்குத்தான் யாரும் இல்லையே

:::::::::::::

இது வெறும் இன அழிப்பல்ல.... அதே இனத்தில் உள்ள வேறு சிலரின் உதவியுடன் நடாத்தப் படும் விசேட இன அழிப்பு (உலகின் இப்படி தன் தாய் மடியை கூட அறுத்து எதிரிக்கு கூட்டி கொடுக்கும் வேறு இனம் இருக்கின்றதா என சொல்லவும்)

சிறிலங்காவில் நடைபெறுவது இனவழிப்புத்தான், அதில் மாற்றுக் கருத்து யாரிடமும் இருக்க முடியாது. சரித்திர காலம் தொடக்கம் தற்போது வரையும் நிகழ்ந்து கொண்டிருப்பது அதுவே. இப்போது உலக அரசியல் தேவைகளுக்காகவும் கேந்திர பிராந்தி நலன்களுக்காகவும் இன்று திரிபுபடுத்தப்பட்டு சம்பவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

முரளி ஏன் இவ்வளவு பெரிய எழுதுகளாய் எழுதுகின்றீர்? வாசிக்கவே முடியாமல் உள்ளாது.

மேற் கூறிய 10கேள்விகளும் பதில்களும் ஆழமாக சிந்திக்க வைத்து வாயை மூடவைக்கும் நிழலியின் பதில்களும் அருமை.. ஆனால் எல்லாம் தமிழ் மக்களுக்கு புரிந்திருப்பார்கள், ஆனால் வெளி உலகத்திற்கு சரியாக கொண்டு செல்லப்படவில்லை.

பி,பி.சி இல் அல்லது சி என்.எனிலோ, அல்லது அல் அசிராவிலோ இந்தமாதிரி கேள்வி பதில்களை ஒழுங்கு பண்ணினால் உலகிலுள்ள மக்கள் எல்லாரையும் போய் சேரும்.. ஏன் ஜெயலலிதா கூடத்தான்.. ஆனால் இவர்களுக்கு போய் சேர்ந்தாலும் சாக்கடை அரசியலினால் பிரஜோசனம் இல்லை.. தமிழகமக்கள் விழிப்படைந்தால் மட்டும் போலிகளை வைக்கும் இடத்தில் வைப்பார்கள்...

ஆனால் உலகின் கண்களுக்கு சென்றடைய வேண்டும். இதற்கு வழி உடன் செய்ய முடியுமா? ஆம் முடியும் உங்கள் நாடுகளில் உங்கள் வாக்குகளை நம்பியிருக்கும் எம்பிக்கள், அரசியல் செல்வாக்குகள், தமிழ்பொதுசன ஊடகங்களின் தோழமை உணர்வுகளுடன் அணுகு முறைகள், தொண்டு நிறுவனவங்களின் செல்வாக்குகள் .. இப்படி எத்த்னையோ வழிகள்.. முடியும், முடியும் முயலுங்கள்.... உங்கள் முயற்சிகளை தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி!

உங்களால் வகுக்கப்பட்டுள்ள இந்த பத்து காட்சிகளுக்குள்ளும் அடங்கியுள்ள மையக்கருத்து ஒன்றே ஒன்று மட்டும்தான், அதாவது இன அழிப்பு.

ஆனால் எங்களது எதிரிக்கு உதவிக்கொண்டிருக்கும், உங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த வெளிநாட்டு சக்திகளின் நோக்கங்கள் அதாவது எதிர்பார்ப்புகளில் தான் சற்று வித்தியாசங்கள் உள்ளன, அவற்றைப்பற்றி இங்கு நான் விரிவாக்க விரும்பவில்லை.

அடுத்ததாக ஜெயலலிதா அம்மையாரின் அறிக்கையைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், அது அம்மையாரின் தனிப்பட்ட கோமாளித்தனமான கருத்து, இதுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

ஜெயா தொலைக்காட்சியில் Little Super.. அந்த Star இந்த Star என்று விதம்விதமாக குழந்தைகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றார்கள். விசுவின் மக்கள் அரங்கத்தில் பலதும் பத்துமான விடங்கள் பற்றி குழந்தைகளே விவாதமும் செய்கின்றார்கள். இப்படி ஆரோக்கியமான முறையில் தமிழ்நாட்டு குழந்தைகளை ஊக்குவிக்கின்றார்கள். ஆனால்.. தாயகத்து குழந்தைகள் சிங்கள இனவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக படுகொலை செய்யப்படும்போது, அங்கவீனர்கள் ஆக்கப்படும்போது... அவற்றை கண்டுகொள்ளாது.. போரில் மக்கள் இறப்பது வழமை . எனவே இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று அறிக்கை விடுவது மனிதத்தன்மை உள்ள ஒருவர் சொல்கின்ற வார்த்தையா?

மேலே உள்ள பந்தியில் உங்களால் ஆதங்கப்பட்டுள்ள விடயங்கள் அரசியலும், வியாபாரமும் சம்பந்தப்பட்ட விடயங்கள், ஆனால் தமிழீழ மக்களின் விடயங்கள் அதுக்கப்பாற் பட்டவை, ஆகவே அரசியல் வாதிகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கலாமா?

இருந்தாலும் இத்துடன் தொடர்புபட்ட விடயத்தில் எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்யுது, அதாவது இப்படிப்பட்ட கோமாளிகளோடு தமிழீழ ஆதரவாளர்களான வை.கோ போன்றவர்கள் எப்படித்தான் கூட்டு வைத்திருக்கின்றார்களோ?

2 ஆவதாக மற்றவன் தமிழ் இனத்தை அழிக்கிறான இல்லையா எண்டதற்கு முதல் நாங்களே எங்களை அழிக்க உதவும் கட்டுரைகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50133

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம், இரத்தினதூவீபம், இலங்கை, ஸ்ரீ லங்கா ஆதிகாலம் முதல் தமிழ்-சிங்கள மன்னர் படையெடுப்புகள் நடந்தன. பரதகண்டத்தின தென்னாட்டு சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆதரவு தமிழ் மன்னர்களுக்கு படை பலங்களை கொடுத்து உதவி செய்வார்கள், மறுபுறம் வடநாட்டு ஆரியர்கள், பல்லவமன்னர்கள் சிங்கள மன்னர்களுக்கு படை பலம் கொடுத்து உதவி செய்வது.

ஆனல் அந்நியர் ஆட்சிகள் இந்திய, இலங்கை நிலங்களை விட்டு அகன்ற பின்னர், குறிப்hக பிரித்தானிய சாம்பிராச்சியம் அஸ்த்தமித்த பின்னர், இந்த நாகரிக உலகில் இந்திய வடநாட்டு ஆட்சி ஆதிக்க வெறிபிடித்தவர்களும், வேடுவர் பரம்பரை சிங்களவர் காட்டுத்தர்பார் தமிழர்கள் மீது நடத்துகிறார்கள்.

அதேசமயம் எட்டப்பன், காக்கைவன்னியன், காட்டிக்கொடுப்பவர்களும். ஆனந்தசங்கரி, டக்கிளஸ், போன்ற இனத்துரோகிகளும், கருணா, பிள்ளையான் போன்ற எதிரியின் பாசறையில் அடைக்கலம் புகுந்து அவனுக்கு துணைபோகும் துரோகிகளும், ஜெயலலிதா, தங்கபாலு போன்ற தமிழின உணர்வற்ற தமிழக அரசியல் துரேகிகள் இருக்கும்வரை, கலைஞர் போன்ற ஆட்சிக்கட்டில் மௌனித்து போயிருக்கும் வரை ஈழத்தமினம் மீட்சி பெறுவது மிக கடினம்.

ஆனால் சரித்திரத்தில் என்றுமில்லதவாறு தமிழர்கென நிதானமாக செயற்பட காலதேவதை தமிழ்தாய்க்க பரிசாக தந்த தமிழ் தயாயின் தவப்புதல்வன் பிரபாகரன் அவன் வழிநடத்தும் தமிழினம் காக்க உலகத்தமிழினத்தை ஒற்றுமை படுத்தவந்த தமிழர்படை - புலிப்படை சிங்களப்படையை விரட்டியடித்து ஈழத்தமிழர்க்கென தனிநாடு ஒன்றினை அமைத்து, நேர்மையான ஆட்சிநடத்துவர்.

இது காலத்தின் கட்டாயம். காலம் இட்ட கட்டளை.

பென்மன்

என்.வை.

தமிழ் நம்மை வளர்த்தது.

இனி நாம் தமிழை வளர்ப்போம்.

தமிழை செவிமடுப்போம்.

தமிழால் பேசுவோம்.

தமிழால் எழுதுவோம்;.

நமது அடையாளம் தொலைந்து போகக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் முரளி, வல்வைமைந்தன் அவர்களுக்கு பென்மன் எழுதிக்கொள்வது,

வல்லைமைந்தன் 3ம் பந்தியில் குறிப்பிட்டது போல அரசியல் கோமாளிகளுடன் வை.கோ போன்ற ஈழவிடுதலைப்போரில் தம்மை முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில். தமிழக அரசியலில் கூட்டுச்சேர்ந்திருப்பது என்பது புரியாத புதிர்தான்

பென்மன்

என்.வை.

தமிழ் நம்மை வளர்த்தது.

இனி நாம் தமிழை வளர்ப்போம்,

தமிழை செவிமடுப்போம்,

தமிழால் பேசுவோம்,

தமிழால் எழுதுவோம்

ஏன்எனில் நமது அடையாளம் தொலைந்து போகக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடப்பது இன அழிப்ப அல்லது உள்நாட்டுப் போரா என்று எங்களுக்கே சந்தேகம் வந்தால் அது பிழை. அது இன அழிப்புத்தான் என்று நாங்கள தான் உலகிற்கு காட்ட வேண்டும். ஒரே நாளில் 10, 000 பேரைக் கொல்வதும் இன அழிப்புத்தான் 30 வருடங்களில் 200, 000 பேரைக் கொல்வதும் இன அழிப்புத்தான்.

போராட்டத்தை முன்னின்று நடத்துபவரை அம்மக்கள் முன்னிருத்திக் கொண்டாடுவதில் தவறில்லை. பிடேல் கஸ்ட்ரோ, யாஸீர் அரபாத், தலை லாமா, நெல்ஸன் மண்டேலா, கோ சீ மின், மாவோ என்று மக்கள் போராட்டங்களை வழிநடத்தியவர்கள் இன்றும் மக்களால் உயர்ந்த மனிதர்களாக நேசிக்கப்படுகிறார்கள். அப்படி நேசிப்பது பிழை என்று ஒருவர் கருதினால் அது அந்த உயர்ந்த மனிதர் மேல் நமக்கிருக்கும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுகிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

ஈழத்தில் நடப்பது இன அழிப்ப அல்லது உள்நாட்டுப் போரா என்று எங்களுக்கே சந்தேகம் வந்தால் அது பிழை. அது இன அழிப்புத்தான் என்று நாங்கள தான் உலகிற்கு காட்ட வேண்டும். ஒரே நாளில் 10, 000 பேரைக் கொல்வதும் இன அழிப்புத்தான் 30 வருடங்களில் 200, 000 பேரைக் கொல்வதும் இன அழிப்புத்தான்.

போராட்டத்தை முன்னின்று நடத்துபவரை அம்மக்கள் முன்னிருத்திக் கொண்டாடுவதில் தவறில்லை. பிடேல் கஸ்ட்ரோ, யாஸீர் அரபாத், தலை லாமா, நெல்ஸன் மண்டேலா, கோ சீ மின், மாவோ என்று மக்கள் போராட்டங்களை வழிநடத்தியவர்கள் இன்றும் மக்களால் உயர்ந்த மனிதர்களாக நேசிக்கப்படுகிறார்கள். அப்படி நேசிப்பது பிழை என்று ஒருவர் கருதினால் அது அந்த உயர்ந்த மனிதர் மேல் நமக்கிருக்கும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுகிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரகுநாதன். வேறு யாரை முன்னிருத்த முடியும் என்ற கேள்வியையும் கேட்டு வையுங்கள். என்ன சங்கரியாரையே டக்களசையோ அட நம்மட கருணா, பிள்ளையான் கூட்டத்தையே நியாயப்படுத்துவதற்காக முன்னிருத்திக் கொள்வார்களும் உண்டு. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவொரு பாலகனைக்கேட்டாலும் இலங்கையில் நடைபெறுவது இன அழிப்புதான் என்று உடனடியாக சொல்லிவிடுவார்கள்.

ஆனால் தேன்குடிப்பவர்களுக்கும் ஈழத்தையே நாசமாக பார்ப்பவர்களுக்கும் சுய இன்பத்தில் நாட்டமோ என்னவோ?

மாப்பு!

யாழ்களத்திலை கனகாலத்துக்குப்பிறகு நல்லதொரு தலையங்கம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதுபோல் இப்படியான தலைப்புக்களை திறமையுள்ளோர் ஆரம்பிக்கவேண்டும் என்பது என் அவா :unsure:

  • தொடங்கியவர்

அனைவரிண்ட சிந்தனைப் பரிமாற்றங்களுக்கும் மிக்க நன்றிகள். நிழலி அருமையான நீண்ட பதில்களை எழுதி இருந்தீங்கள், நன்றி!

முரளி ஏன் இவ்வளவு பெரிய எழுதுகளாய் எழுதுகின்றீர்? வாசிக்கவே முடியாமல் உள்ளாது.

நான் வழமையாய் வேற வேற இடங்களில யாழை பார்க்கேக்க யாழிண்ட Default எழுத்து அளவு சின்னன் போல இருந்திச்சிது. எழுத்துகொஞ்சம் பெரிய அளவில இருந்தால் வாசிக்க இலகுவாய் இருக்கும் எண்டு எழுத்து அளவை 04 இல போட்டன். உங்கட கணணியில இருக்கிற எழுத்து அளவிண்ட Default Settings சிலது ஏற்கனவே பெரிய அளவில இருந்தால் இப்போது அதைவிட பெரிய அளவில தோன்றும் எண்டு நினைக்கிறன். இனிவரும் காலங்களில எழுத்திண்ட அளவை பெருப்பிக்காமல் யாழ் Default Settingsஇலயே போடுறன். முந்தி யாழ் எழுத்துக்கள் கொஞ்சம் பெரிசாய் தெரிஞ்சிது. இப்ப கொஞ்சம் சின்னன் ஆகீட்டிது போல இருக்கிது. நீண்ட பெரிய கட்டுரை எண்டால் சிறிய எழுத்துக்கள் வாசிக்க கொஞ்சம் கஸ்டமாய் இருக்கலாம். ஆனால் ஒரு பிரச்சனை எழுத்து அளவை 04 இல போடேக்க எழுத்திண்ட தெளிவு குறைவாக வருகிது. எழுத்துகளுக்கு இடையில இடைவெளி குறைஞ்சு நெருக்கமாகவும் இருக்கிது. ஏன் எண்டு தெரிய இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.