Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு தைரியமான அண்ணா, இதற்கெல்லாம் கவலைப்படலாமா?

நாங்கள் எல்லாம் இருக்கிறம்,அந்த ஆண்டவன் அருள் எப்போதும் கிடைக்கட்டும்.

என்நாளும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க இறவனை வேண்டிகிறோம் அண்ணா.

  • Replies 136
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களின் plusசே உங்களின் மனோ தைரியம் தான்.மீண்டுமொரு முறை உங்கள் அறுவை சிகிச்சை வெற்றி அடைந்ததை இட்டு மகிழ்ச்சி.எல்லாவற்றுக்கும் இறைவன் துணை புரிவார்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் ஜீவா, நுணாவிலான்.

நிழலி,

ஒன்றுகூடல் பற்றிய உங்கள் ஓர் கருத்தை இங்கு கண்டேன். இது சம்மந்தமாக சிறு விளக்கத்தைத் தரவிரும்புகின்றேன்.

மேலே ஒன்றுகூடல் தொடர்பாய் சுண்டலுக்கு நான் எழுதிய பதிலை சரியாக நீங்கள் விளங்கவில்லை என நினைக்கின்றேன். நான் ஒன்றுகூடல் என்று குறிப்பிட்டது 2008இல் நாம் கனடாவில் செய்ததை அல்ல. யாழ் நாற்சந்தியில் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக ஒன்றுகூடல் சம்மந்தமாக செய்யப்பட்ட கருத்தாடல்கள், அவை தொடர்பான சில விடயங்களின் பாதிப்பே மேலே சுண்டலுக்கு நான் எழுதிய பதிலில் காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் உள்ளவர்கள் ஒன்றுகூடல் செய்வது வேறு, இன்னொருவர் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது ஒன்றுகூடல் செய்வது வேறு எனும்வகையில் முன்பு நாற்சந்தியில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாய் சமயம்வாய்க்கும்போது நாம் தொடர்ந்து யாழ் நாற்சந்தியில் உரையாடலாம்.

தலைமறைவு வாழ்க்கை என்பதை விட சற்று தனிப்பட்ட ஒதுக்கமான வாழ்வில் நான் அதிகம் ஈடுபடுகின்றேன், சற்று ஒதுங்கி வாழும் வாழ்வை நான் அதிகம் விரும்புகின்றேன் என்பது உண்மையே. இப்படியான போக்கு இன்று, நேற்றல்ல எனக்குள் மிக நீண்டகாலமாகவே பலப்பல வருடங்களாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து விளக்குவது என்றால் ஒரு புத்தகம் எழுதவேண்டிவரும்.

வெளிப்படையாக உங்கள் ஆதங்கத்தை கூறியமைக்கு நன்றி.

இன்றுதான் இந்த திரியை பார்த்தேன் நண்பரே ..........உங்கள் மனத்தைரியமும், உண்மையான மனமும் ,வஞ்சகம் இல்லாத வார்த்தைகளும்

மனதை தொட்டு நிற்கிறது................உங்கள எதிர்காலம் சிறக்கும் ..........இன்னல்கள் தீர்ந்து அமைதியான,ஆரோக்கியமான ,வாழ்க்கை கிடைக்கும் .......................இறைவன் துன்பங்களின் பாதையினூடாகவே எம்மை இன்பத்தின் உச்சிக்கு கொண்டுசெல்பவர்.............நல்ல மனம் உள்ளோர் பேறுபெற்றவர்கள் ..............அவர்களை நான் கைவிடமாட்டேன் ............[இறைவனின் வார்த்தை ] சிறந்து வாழ் வாழ்த்துகிறேன்

நன்புடன் தமிழ்சூரியன்

சத்திரசிகிச்சை பிரச்சனைகள் இன்றி முடிந்ததை இட்டு மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி தமிழ்சூரியன், குளம்ஸ்.

யாருக்காவது உதவக்கூடும் என்பதால் Rhinoplasty பற்றி கீழ்வரும் தகவல்களை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் சத்திரசிகிச்சை செய்யப்படுவதற்கு ஒரு மாதத்தின் முன்பு எனது சத்திரசிகிச்சை நிபுணர் Dr Bernd Neu உடன் உரையாடினேன். இவர் கனடாவில் நான் பெற்ற ஆறு Rhinoplasty சத்திரசிகிச்சைகளில் ஐந்தை (தற்போது செய்ததுடன்) செய்தவர். 2001இல் முதலாவது சிகிச்சையை பெறும் முன்னர் எனது தோற்றத்தையும் தற்போதுள்ள எனது தோற்றத்தையும் காண்பித்தார். 1000 மடங்குகள் முன்னையதை விட எனது தோற்றம் நன்றாக உள்ளது என்று கூறினார். எனக்கு எனது முன்னைய படத்தையும் தற்போதைய படத்தையும் பார்த்தபோது அவரது கூற்றின் உண்மை விளங்கியது.

ஆனால், இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்ன என்றால் எத்தனை சத்திரசிகிச்சைகளைப்பெற்றாலும் இயற்கையில் உள்ளதுபோன்ற தோற்றத்தை ஒருபோதும் பெறமுடியாது. அது உலகத்தில் எவ்வளவு சிறப்பான நிபுணர் என்றாலும் செய்யமுடியாத விடயம். அதாவது இதற்கும் எல்லைகள் உள்ளன. எனது நிலமை சற்று சிக்கலானது (பிளவடந்த அன்னம் + உதடு இரண்டும் பிறப்பில் தோன்றியதால்).

ஒவ்வொருவரின் நிலமையினைப்பொறுத்து எவ்வளவு தூரம் சிகிச்சைகளின்மூலம் அவர்களது முகத்தின் தோற்றத்தை முன்னேற்றமுடியும் என்பதில் வேறுபாடுகள் உள்ளன. இந்தத்தடவை ஐந்தாவது தடவையாக அவர் எனக்கு சத்திரசிகிச்சையை செய்யமுன்னர் இப்படியே விடலாம், ஆனால் விருப்பம் என்றால் இன்னோர் சத்திரசிகிச்சை மூலம் தோற்றத்தை மேலும் சிறிது முன்னேற்றமுடியும் என்று கூறினார். 2001இல் ஆரம்பித்த பயணம். இவ்வளவு காலம் சென்றுவிட்டது, சரி பரவாயில்லை இன்னும் ஒரு சத்திரசிகிச்சை என்று நினைத்து நானும் உடன்பட்டேன்.

பலர் நினைப்பது என்ன என்றால் பிளாஸ்ரிக் சேர்ஜரி என்றால் ஒரு தடவையிலேயே முகத்தின் முழுத்தோற்றமும் மாறி பூரணத்துவம் பெற்றுவிடும், இயற்கையில் உள்ளதுபோன்று அச்சொட்டாக முகத்தின் தோற்றத்தை மாற்றியமைக்கமுடியும் என்று. இது தவறானது. ஒவ்வொரு சத்திரசிகிச்சைகளின்போதும் சிறிது சிறிதாகவே தோற்றத்தை முன்னேற்றமுடியும், அத்துடன் இயற்கையில் உள்ளதுபோன்ற தோற்றத்தை 100% அச்சொட்டாக உருவாக்கமுடியாது.

எனக்கு பிறப்பில் பிரச்சனை தோன்றியதால் இவ்வாறு முகத்தில் சத்திரசிகிச்சைகளை பெறவேண்டி ஏற்பட்டது. ஆனால், பிறப்பில் எதுவித சிக்கலும் இல்லாமல் தமது முகத்தின் தோற்றத்தை மேலும் அழகுபடுத்துவதற்காகவும் பலர் Rhinoplasty சிகிச்சையை பெறுவதுண்டு (உதாரணமாக சினிமாவில் உள்ளவர்கள், செல்வந்தர்கள்). இப்படியானவர்களுக்கு சிகிச்சை செய்யப்படும்போது ஒரு தடவையிலேயே அவர்களின் முகத்தின் தோற்றத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடலாம். ஒரு சத்திரசிகிச்சை மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக காணப்படலாம்.

bernd.pngbernd2.png

Dr Bernd Neu அவர்களின் இணையத்தளம்: http://www.drneu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு! உங்கள் மனத்தைரியம் தான் உங்களுக்கு அத்திவாரம்.....துன்பத்திலும் நல்லதை வெளிக்கொண்டு வருபவனை "அவன்தான் மனிதன்" என்று சொல்வார்கள்.

மிக்க நன்றிகள் ஜீவா, நுணாவிலான்.

நிழலி,

ஒன்றுகூடல் பற்றிய உங்கள் ஓர் கருத்தை இங்கு கண்டேன். இது சம்மந்தமாக சிறு விளக்கத்தைத் தரவிரும்புகின்றேன்.

மேலே ஒன்றுகூடல் தொடர்பாய் சுண்டலுக்கு நான் எழுதிய பதிலை சரியாக நீங்கள் விளங்கவில்லை என நினைக்கின்றேன். நான் ஒன்றுகூடல் என்று குறிப்பிட்டது 2008இல் நாம் கனடாவில் செய்ததை அல்ல. யாழ் நாற்சந்தியில் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக ஒன்றுகூடல் சம்மந்தமாக செய்யப்பட்ட கருத்தாடல்கள், அவை தொடர்பான சில விடயங்களின் பாதிப்பே மேலே சுண்டலுக்கு நான் எழுதிய பதிலில் காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் உள்ளவர்கள் ஒன்றுகூடல் செய்வது வேறு, இன்னொருவர் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது ஒன்றுகூடல் செய்வது வேறு எனும்வகையில் முன்பு நாற்சந்தியில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாய் சமயம்வாய்க்கும்போது நாம் தொடர்ந்து யாழ் நாற்சந்தியில் உரையாடலாம்.

தலைமறைவு வாழ்க்கை என்பதை விட சற்று தனிப்பட்ட ஒதுக்கமான வாழ்வில் நான் அதிகம் ஈடுபடுகின்றேன், சற்று ஒதுங்கி வாழும் வாழ்வை நான் அதிகம் விரும்புகின்றேன் என்பது உண்மையே. இப்படியான போக்கு இன்று, நேற்றல்ல எனக்குள் மிக நீண்டகாலமாகவே பலப்பல வருடங்களாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து விளக்குவது என்றால் ஒரு புத்தகம் எழுதவேண்டிவரும்.

வெளிப்படையாக உங்கள் ஆதங்கத்தை கூறியமைக்கு நன்றி.

நன்றி முரளி...

சரி இதை விடுங்கள்....நேரம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவாவது எழுதுங்களேன்...

நேற்று என் மனைவியிடம் நான் சொன்னது ..."ஒழுங்காக - நிதானமாக எழுதத் தெரியாத நானெல்லாம் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கின்றேன், நிதானமாக ஆராய்ந்து விரிவாக எழுதக் கூடிய முரளி போன்றவர்கள் ஏன் அடிக்கடி எழுதாமல் இருக்கின்றார்களோ தெரியாது" என... உண்மையில் இது கூட ஒருவகையில் சமூக அக்கறையின்மை தான். நான் நேற்று தமிழகத்தினைச் சேர்ந்த ஒரு project manager உடன் கதைத்துக் கொண்டு இருந்தேன். Extraordinary வகையைச் சார்ந்தவர்..(ஏதோ ஒரு சமூகவியல் சம்பந்தமாக் PhD செய்து விட்டு IT க்கு வந்து வெறுமனே project manager ஆக இருக்கின்றார்...கொஞ்சம் கிறுக்கும் இருக்கு) கதைக்கும் போது இன்னும் இன்னும் அதிக நேரம் கதைக்க வேண்டும் போல இருந்தது. மிகவும் விரிந்த பார்வை கொண்டவர்.. அவரிடம் சொன்னேன்...பல விடயங்களை தெளிவாக தெரிந்த நீங்கள் எல்லாம் எழுதாமல் இருப்பதால் தான் நானெல்லாம் எழுதிக் கொண்டு இருக்கின்றேன் என்று"... உங்களுக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதோ பழைய திரியை யாரோ புதுசா பாத்து கருத்து எழுதினம் என்டு நினைச்சன்.மாப்ஸ் உங்கள் சிகிச்சை முடிந்து திரும்பியதை இட்டு மகிழ்ச்சி.

மிக்க நன்றி சஜீவன்.

ஒரு சில சிரமங்கள் உள்ளபடியால் வழமை நிலைக்குத்திரும்புவதற்கு இன்னும் ஓர் கிழமை பிடிக்கும் போல் உள்ளது. முழுமையாக நான் நாளாந்தம் ஈடுபடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடமுடியாதவாறு கட்டுப்போடப்பட்டுள்ளது போல் உணரும்போதே கொஞ்சம் உளைச்சலாக உள்ளது.

நிழலி,

சிறிய அளவில் சில எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். கனடா தமிழர்களின் எதிர்காலத்தினை மையப்படுத்தி தமிழில் ஒரு தளத்தினை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அங்கு விடயங்கள் ஓரளவு நிறைந்ததும் யாழிலும் சிறிது பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

பொதுவான விடயங்கள் சம்மந்தமாக ஆங்கிலத்திலும் எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எழுத்துக்கூட்டி எழுதவேண்டி உள்ளதால் அது சம்மந்தமான தளங்களும் சற்று மெதுவாகவே நகர்கின்றன.

நன்றி!

இந்த பதிவு இன்றைய யாஹூ செய்தி பகுதியில் பார்த்தேன். இதில் தனது உடலை பர்பி பெண் பொம்மைக்கு இணையாக கருதப்படும் கேன் ஆண் பொம்மை போன்று தனது உடலை மறு சீரமைத்திருக்கும் ஆண் பற்றியது. இதுவரை 90 அறுவை சிகிச்சைகளுக்கு உடபட்டிருக்கிறார். இவரது உடல் அமைப்பு சத்திர சிகிச்சைக்களுக்கு முன்னரும் அழகாக தான் இருந்திருக்கிறது. பிறப்பில் எந்த குறைபாடுகளும் இல்லை.

http://www.odditycen.../comment-page-1

http://ca.news.yahoo...-230142704.html

சில மனிதர்கள், அவர்களது உடலில் பிறப்பில் பெரிதாக எந்த குறைபாடுகள் இல்லது பிறந்த பின்னும், உடல் மறு சீரமைப்பிறகு அடிமையாகி அதையே வாழ்க்கையாக்கி கொண்டிருக்கிறார்கள்.

Edited by KULAKADDAN

இணைப்புக்கு நன்றி குளம்ஸ். அந்தக்காணொலிகளைப் பார்த்தேன்.

அந்த ஆணின் கதையைக்கேட்கும்போது மண்டைக்கால் போகின்றது. அவர் அதை வாழ்வாக நினைக்கின்றார். ஒன்றும் செய்யமுடியாது.

பெண்ணின் கதை ஓரளவு பரவாயில்லை போல் உள்ளது. அவர் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு, பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக அப்படிச்செய்கின்றார். ஒரு காலத்தில் செயற்கை மார்பகங்களை அகற்றியபின் வழமை நிலைக்குத்திரும்புவேன் என்று கூறுகின்றார். இவரது கதை ஆணின் கதையுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ மேல் போல் தென்படுகின்றது.

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.