Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் இளைஞன் தீக்குளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சகோதரர் முத்துக்குமாரின் தீக்குளிப்பு படம் இருக்கிறது..!:(

http://www.envazhi.com/?p=2828

  • Replies 81
  • Views 7.5k
  • Created
  • Last Reply

ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார் - படங்கள்!

எரிந்த நிலையில் முத்துக்குமார்.

fire4fp5.jpg

சம்பவம் நடந்த சாஸ்திரி பவன்.

fire5hw0.jpg

மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு, வைகோ,

தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்...

fire2bp7.jpg

முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தைப்

படிக்கும் வைகோ.

fire3uo9.jpg

படங்கள் நன்றி : புதுவை கோ.சுகுமாரன்

http://kosukumaran.blogspot.com/2009/01/blog-post_29.html

Edited by vasisutha

மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்ம் முத்துக்கமார் நாங்கலெல்hம் உன்னுடைய காலின்கீழே

கண்ணீர் அஞ்சலிகள்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் உயிர் ஈர்ந்த உத்மனுக்கு என் கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுபவங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரா உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

உறவை பிரிந்துள்ள குடும்பத்துக்கு எனது ஆழ்த்த கவலைகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக உறவுகளே ..இப்படியான செய்கைகள் வேண்டாம்.. உயிர்களை பறிகொடுப்பது ஈழதமிழ்னுடன் நிறுத்தி கொண்டு தமிழகத்தில் உள்ள உறவுகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்... சகோதரா உன்னுடைய இறப்பை பார்த்து மனம் உருக இந்திய அரசாங்கம் ஒன்றும் பாசகாரரர் அல்ல...அவர்கள் கொடுகொளர்....எதோ ஒரு ஈழத்தமிழ் ஆதரவாளன் இல்லாமல் போனான் என சந்தோசப்படுவார்கள்...

ஆகவே என் இனிய தமிழ் உறவுகளே..உயிர்கள் விலை மதிப்பில்லாலது.

அதை போக்க்வேண்டாம்...உங்கள் கரங்கள் மட்டும் போதும் எம்மில் பலப்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருநாள் விடியும் போதும் , இன்று எத்தனை ஈழத்தமிழன் சாகப்போகின்றான் என்ற அச்சத்துடனே நாம் இருக்கும் வேளையில் .......

தமிழகத் தமிழன் முத்துக்குமாரின் தீக்குளிப்பு வேதனையளிக்கின்றது . இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுகின்றேன் .

தமிழன் அழிவதில் இலங்கையோ , இந்திய அரசோ கவலைப்படப் போவதில்லை என்பதனை மனதில் கொள்ளுங்கள் , தமிழ்நாட்டு உறவுகளே .

தியாகி முத்துக்குமாரின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

வீரவணக்கம் தோழரே! உங்களைப்போன்றோர் உயிர்விடக்கூடாது! உங்களைப்போன்றோரால்தான் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கமுடியும்!

புலம்பெயர்ந்தோரே! அங்கே ஒரு இளைஞன் கடுந்தீயில் தன்னை கருகவைத்துள்ளான். ஆனால் எம்மில் பலரோ குளிரை காரணம் காட்டி வீதியில் இறங்கவில்லை. முத்துக்குமாரின் கனவு நனவாவது எமது கையில்தான உள்ளது! இனியாவது உணர்ந்து செயற்படுவோமாக!

Edited by eelamlover

2u8ikg1.jpg

சகோதரனே உனக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெறும் இனபடுகொலையையும் அதற்கு துனைபோகும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலம் நாளை காலை பத்துமணிக்கு கொளத்தூரிலிருந்து தொடங்குகிறது.

முடிந்தவர்கள் சென்று கலந்து கொள்ளலாம்

இடம்: கொளத்தூர்

நேரம் : 10 AM (30-01-2008)

Bus Routes : 114,142, 170,148,170A,242

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரனே உனக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி எனக்கு இல்லை.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்வதென்று தெரியவில்லை...,கண்ணீர்தான் வார்த்தைகளாக வருகின்றன. :(

மாவீரனிக்கு எனது வீரவணக்கங்களும் கண்ணீரஞ்சலிகளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலையில் எழுந்ததும் கவலைச் செய்திகளாகவே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு இன்று முத்துக்குமார் எணும் உடன் பிறவா சகோதரன் எங்களுக்காகத் தீக்குளித்து இறந்ததை கேள்விப்பட்டு அழுத கண்கள் இன்னும் அழுது ஓயவில்லை......

கரும்புலிக்கு ஒப்பான வீரத்துடன் கொள்கைக்காய் உன்னையே கருக்கிய நீயும் எங்கள் கரும்புலிதான் அண்ணா.... நீயும் தமிழினத்தின் விடிவுக்காய் உயிர் தந்த மாவீரன் தான் அண்ணா.....

உன் குடும்பத்தையும் பாராமல் ஈழத்தமிழனுக்காய் உயிர் தந்த தியாகம் இங்குள்ள எம்மவர் பலரை திருத்த வேண்டும்.... எழுச்சிப் போராட்டத்துக்காகச் செல்லக்கூட நேரமில்லாமல் உழைப்பவர்களுக்கு....

ஆனால் ஒரே ஒரு கவலை நண்பனே.... தமிழின அழிப்பையே முழுமூச்சாகக் கொண்டிருக்கும் இந்திய நடுவன அரசிடம் நியாயம் கேட்டு உன் உயிரை மாய்த்துவிட்டாய். இனியும் அகிம்சை வேண்டி உன்னைப் போன்ற உறவுகள் தனிமனிதப் போராட்டத்தில் தங்கள் உயிரைப் போக்காமல் கொடுங்கோல் அரசிற்கு எதிராக மக்கள் எழுச்சி கொள்ளுங்கள். இதுவே இந்தக்காலத்திற்கு வேண்டியது....

நண்பன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்களும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்...

இளங்கவி

உறவே உந்தன் தியாகத்தை வார்த்தைகளால் வரையமுடியவில்லை

எமது கண்ணீரைக்காணிக்கையாக்குகிற

வீரனே உனக்கு தலை வணங்குகிறேன்.

உன் தியாகத்தினை தமிழினம் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

mudthukumaran.jpg

deepam11.gif

FIRE1.jpg

flower5.gif

சகோதரனே முத்துகுமாரா! ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாய்? உன்னை போன்ற உன்னதமானவர்கள் தமிழகத்திலே வாழ்ந்தால் தான் இந்திய அரசின் கபடங்கள் வெளிப்படும். எமக்காக ஓங்கி அங்கிருந்து குரல்கொடுக்கவேண்டிய நீ? மனம் குமுறுகின்றது. என்ன செய்ய நீ முந்திக்கொண்டாய்! வேண்டாம் இதுபோன்ற விபரீத முடிவுகள். தமிழன் நீ...... தமிழகத்திலே இதுபோல் முன்னே ஒருவரும் தீகுளித்திருக்கின்றார் அவரையும் இந் நேரத்தில் நினைவு கூருகின்றோம். உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் ஒருவன்

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்

இன்று உனக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை!

சுதந்திர ஈழத்தில் உன்னை ஒரு நாள் சந்திப்பேன்!

அன்று உன் பாதங்களை பன்னீர் பூக்களாலும் கண்ணீர் பூக்களாலும் பூசிப்பேன்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்

mudthukumaran.jpg

deepam11.gif

இதை மொழிபெயர்த்து மீடியாக்களுக்கு அனுப்பி முத்துக்குமாரின் போராட்டத்தை உலகின் கவணத்திற்கு கொண்டுவருவோம்!

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.