Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராண்ட தமிழர்கள் 'பயங்கரவாதி'களான கதை

Featured Replies

(ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பதிவாக அமைகிறது இந்தக் கட்டுரை. இது முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவு இல்லையென்றாலும் சில காலப்பகுதிகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திரமடைந்த காலப்பகுதியை அண்மித்த காலங்களில் நடந்த சம்பவங்கள்இ நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றை நினைவூட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் . இந்தக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்இ திருத்தங்கள் குறித்த விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் - மணிவாசகன்)

பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை

ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில நாடுகளும், `பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தி அதனை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றனர்.

ஈழ மண்ணினதும், ஈழத் தமிழர்களதும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற எவரும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, தமது சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவதற்காக நடக்கின்ற இந்தப் போராட்டத்தை, பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்தியதற்காக நிச்சயமாய் ஒருநாள் வெட்கித் தலைகுனிவார்கள்.

தம்மண்ணைத் தாமே ஆண்ட ஈழத் தமிழரது வரலாற்றையும் வியாபார நோக்கங்களுக்காக இலங்கைக்குள் வந்தவர்கள் தமது பரிபாலனத் தேவைகளுக்காக விட்ட தவறுகளையும் தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தமது கதிரை ஆசைக்காகச் செய்த துரோகங்களையும் சிங்கள இனவெறி அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் சற்றே மீட்டுப் பார்ப்போம்.

ஆரியரால் தம்பபன்னி என்றும் கிரேக்கரால் செரண்டிப் என்றும் ஆங்கிலேயரால் சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவானது பண்டைக் காலத்தில் பல அரசர்களின் கீழ் ஆளப்பட்ட பல பிரதேசங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. அநுராதபுர இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், வன்னி இராச்சியம், பொலநறுவை இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என இந்த அரசுகள் பல காலப்பகுதிகளிலும் பல பெயர்களால் அழைக்கப்பட்டும், ஆளப்பட்டும் வந்திருக்கின்றன.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய இராச்சியங்கள் தமிழர்களாலேயே ஆளப்பட்டு வந்திருக்கின்றன. சிங்கள இராசதானிகள் கூட பல தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக அநுராதபுரத்தை ஆண்ட எல்லாளனுடைய வரலாற்றை சிங்களவர்களால் கூட மூடி மறைத்துவிட முடியவில்லை. அதேபோல 1815ம் ஆண்டு கண்டியை பிரிட்டிஸார் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது கண்டியை ஆண்டு கொண்டிருந்த சிறிவிக்கிரம இராஜசிங்கனும் தமிழ் அரசனே. அதேபோல யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியன்இ வன்னியில் குறுநில மன்னனாக இருந்த பண்டார வன்னியன் ஆகியோர் அந்நியரை எதிர்த்து காட்டிய வீரம் வரலாற்றில் மறக்க முடியாதது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் ஆளப்பட்ட காலத்தில் கூட இலங்கைத்தீவு முழுவதும் ஒரே ஆட்சிக்குட்பட்டதாக அமையவில்லை. 1815ம் ஆண்டு கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றி இலங்கைத்தீவை தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் இலங்கை பல பரிபாலனப் பகுதிகளாகவே ஆளப்பட்டு வந்தது. ஆனால் 1833ம் ஆண்டு கோல்புறூக் மற்றும் கமரோன் ஆகியோரின் பரிந்துரையுடன் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தின்படியே இலங்கை ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.

தனியாக ஆளப்பட்ட தமிழர் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களுடன் சேர்த்;து ஆளப்பட்ட போதிலும் இது குறித்து தமிழர் தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடின்றி கல்வித்தகமைக்கும் திறமைக்கும் முன் உரிமை கொடுத்தமையையும் தமிழ்த் தலைவர்களினது அசமந்தப் போக்கையும் இதற்கான காரணங்களாகக் கூறலாம். இதேபோல சிங்களத் தரப்பிடமிருந்தும் ஆங்காங்கே சில சல சலப்புக்கள் ஏற்பட்ட போதிலும் பெரிதான அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலை 1910ம் ஆண்டு வரை நீடித்தது.

ஆனால் 1910ம் ஆண்டிற்கும் 1948ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் சிங்களப் பேரினவாதிகளின் சுயரூபம் வெளிப்பட்ட சம்பவங்களும் இன வன்முறைச் சம்பவங்களும் நடந்து முடிந்தன. இந்த வகையில் 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாகச் செயற்பட்ட பிரிட்டிஸ் நிர்வாகம் இராணுவ சட்டத்தை பிறப்பித்தது. கலக்காரர்களை படையினர் சுட்டுக் கொண்டனர். இராணுவச் சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்தனர். பலருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினர். சுதந்திர இலங்கையின் முதற்பிரதமராக இருந்த டி.எஸ் சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் சட்டசபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பிரதிநிதியாக இருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் லண்டனுக்குச் சென்று மரணதண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்காக வாதாடி அவர்களை விடுதலை செய்வித்தார். இதனால் இராமநாதன் நாடு திரும்பிய போது அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரது வீடுவரை தாமே இழுத்துச் சென்றது வரலாறு. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

அக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த முக்கியமான அரசியல் இயக்கங்களாக இலங்கைத் தேசிய சங்கம், அரசியல் சீர்திருத்தக் கழகம், யாழ்ப்பாண சங்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம். சேர் பொன் அருணாசலம் தலமையில் இயங்கிய அரசியல் சீர்திருத்தக் கழகம் 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்றது. இலங்கைத் தேசிய காங்கிரஸின் உதயத்தோடு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பொன் அருணாச்சலத்தின் கனவு சில காலங்களுக்குள்ளாகவே தவிடு பொடியானது. சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப் போக முடியாமல் அல்லது சிங்களத் தலைவர்கள் ஒத்துழைக்காததால் பொன் அருணாச்சலம் தன் தலைமைப் பதவியைத் துறந்தார்.

1823ம் ஆண்டு சேர் பொன் அருணாசலம் இலங்கைத் தமிழர் மகாசபை எனும் அமைப்பை ஆரம்பித்தார். அதன் அங்குராப்பண கூட்டத்தில் அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

‘சிங்களத் தலைவர்களுடன் இனியும் ஒத்துப் போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர்கள் தன் மானத்துடன் வாழ தனியான அமைப்பொன்று அவசியம். அதுதான் இனி நமது இலக்கு. அதனை அடைய தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை, தோழமை அவசியம். நமது இலக்கை விளக்கி நாடெங்கிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பெருமைக்குரிய பாரம்பரியத்தின் சொந்தக்காரரான நாம் தமிழர் நலன்களுக்காகவே மட்டும் பாடுபடும் சுயநலமிகள் அல்லர் என்பதையும் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும்.’

இன வேறுபாடின்றி, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிங்களத் தலைவர்களினது நலனுக்காகவே செயற்பட்ட ஒரு தலைவரிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வருவதற்கு அவர் சிங்களத் தலைவர்களால் எவ்வளவு தூரம் வஞ்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நேயர்கள் புரிந்து கொள்வீர்கள்.

இலங்கைக்கென புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1927ம் ஆண்டு டொனமூர் இலங்கைக்கு வந்தார்.டொனமூர் கமிசனிடம் 50இற்கு 50 பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஜி.ஜி. பொன்னம்பலம் வலியுறுத்த மக்கள் தொகையில் 64வீதமாக இருந்த சிங்களவர்கள் அதனை எதிர்த்தனர். ஜி.ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை நிராகரித்த டொனமூர்; 1931 இல் சர்வஜன வாக்குரிமையைப் பிரகடனம் செய்தார்.டொனமூர் திட்டத்தின்படி உருவான அரசாங்க சபைக்கு 1931இல் தேர்தல் நடந்தது. யாழ் இளைஞர்கள் பகிஸ்கரித்ததால் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காங்கேசன்துறை பருத்தித்துறை ஆகிய நான்கு தொகுதிகளின் தேர்தலும் நடக்கவில்லை.இவ்வாறாக முதலாவது பொதுத் தேர்தலிலேயே தமிழர்கள் தேர்தல் பகிஸ்கரிப்பை ஆரம்பித்து விட்டது வரலாறு.

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் 2ம் உலகப் போரும் ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் இலங்கை அரசியலில் தமது அக்கறையைக் காட்டவில்லை.இந்தக் கால கட்டத்தில் சிங்களப் பேரினவாதச் சக்திகளும் எழுச்சி பெறத் தொடங்கின. A.P ஜெயசூரியா முதலான சிங்கள இனவாதிகளையும் சேர்த்துக் கொண்டு SWRD பண்டாரநாயக்கா சிங்கள மகாசபையை அமைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களும் பொன்னம்பலம் தலைமையில் தமிழர் மகா சபையை அமைத்து 50: 50 என்ற கோசத்தை தீவிரமாக எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து டொமினியன் அந்தஸ்தில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கத் தீர்மானித்து அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு தலைவர்களைக் கேட்டனர். தலைவர்களால் வழங்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விசாரித்து தீர்மானங்களை மேற்கொள்ள சோல்பரிக் கமிசனை நியமித்தது.தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைக்க SJV செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள் கொழும்பு சாகிராக் கல்லூரியில் கூடி ஆலோசித்தனர். அங்கு வைத்துத் தமிழர் மகா சபை தமிழ் காங்கிரசாக மாறியது. 50: 50 கோரிக்கையை தக்க நியாயங்களுடன் சோல்பரிக் கமிசன் முன் வைக்கத் தீரமானித்தது. ஆனால் அந்தத் திட்டத்தை சோல்பரிக் கமிசன் கண்டு கொள்ளாமல் அமைச்சர்கள் வழங்கிய திட்டத்தை சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொண்டது.இதனால் கோபமடைந்த தமிழ் தலைவர்கள் சோல்பரிக் கமிசனால் தயாரிக்கப்பட்ட வெள்ளையறிக்கையை எதிர்த்து வாக்களிக்கும் படி அரசாங்க சபையின் தமிழ் உறுப்பினர்களைக் கேட்க அவர்களும் ஒத்துக் கொண்டனர்.இதனை அறிந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் உறு;பபினர்களைச் சந்தித்து 'முதலில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைவது தான் முக்கியம். பிறகு எங்களிடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எங்களை நம்புங்கள்’’ என்று பலவாறாக வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். அதை நம்பி ஏமாந்த தமிழ் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் வெள்ளையறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதுஅதற்கிணங்க இலங்கைக்கும் டொமனியன் அந்தஸ்தில் சுதந்திரம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியாக ஆண்டு வந்த தமிழினம் அந்நியரிடம் அடிமையாகி இருந்த காலம் முடிந்து சிங்களவரிடம் அடிமைப்பட்ட வரலாறுக்கு கட்டியம் கூறப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடந்த தேர்தலில் இலங்கைத் தேசிய காங்கிரசும் சிங்கள மகா சபையும் இணைந்து மலர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதிலும் அதற்குப் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. எனினும் DS சேனநாயக்கா ஆட்சியடைக்க முன்வந்தார். அப்போது ஆளுனராக இருந்த sir ஒலிவர் குணதிலக தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் இந்தியர் என்ற அனைத்துத்தரப்பும் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்பட்டாலே முழு சுதந்திரம் கிடைக்கும் எனச் சொன்னதும் DS சேனநாயக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினார். சகல சமூகத்தவரையும் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது கூடத் தமிழர் அமைச்சரவையில் சேராமல் பகிஸ்கரித்திருந்தால் இலங்கைக்குப் ப+ரண சுதந்திரத்தை வழங்குவது குறித்து ஒன்றிற்கு இரண்டு தடவைகள் யோசித்திருப்பார்கள். ஆனால் சி. சுந்தரலிங்கமும் சி. சிற்றம்பலமும் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டு ஒட்டுக்குழுக்களின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்கள்.

அமைச்சரவையில் அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றதால் திருப்தியடைந்த பிரிட்டிஸ் அரசு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் நாள் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர்.அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த வரலாறு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சுதந்திரம் பெற்றதுமே சிங்கள இனவெறி மௌ;ள மௌ;ள விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.தனக்குப் பதில் பிரதமர் பதவி தரப்படவில்லை என்ற கோபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த SWRDபண்டாரநாயக்கா உடனடியாக மக்கள் மனதில் இடம்பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்தார். மதம், மொழி என்பனவே மக்களைக் கவர்வதற்கான இலகுவான வழி எனக் கண்ட பண்டாரநாயக்கா நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.அந்த வாக்குறுதிகள் அவரைப் பிரதமர் கதிரையிலும் அமர்த்தின. தான் கொடுத்த வாக்குறுதிப்படியே அதனைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதற்கான சட்டநகலில் நியாயமான அளவு தமிழ் உபயோகம் என்ற பதத்தையும் சேர்த்துக் கொண்டார். அதை எதிர்த்து பேராசிரியர் AP ஜயசூரியா நாடாளுமன்ற வளவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிக்க பயந்து போன பண்டாரநாயக்கா நியாயமான அளவில் தமிழ் என்ற பதத்தை நீக்கி தனிச் சிங்களச் சட்ட வரைவைக் கொண்டு வரத் திட்டமிட்டார்;.

தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட தினத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் தந்தை செல்வாவும் தொண்டர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். அரசினால் ஏவிவிடப்பட்ட குண்டர்கள் வந்து தந்தை செல்வாவையும் தொண்டர்களையும் தாக்கினர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தூண்டி விடப்பட்டன. தமிழர் கடைகள் உடைமைகள் நொறுக்கப்பட்டன. 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இதனிடையே தமிழர் தாயகத்தை கூறு போடும் ஒரு முயற்சியாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவு படுத்தப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த புத்தளம் போன்ற பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகினர். மணலாறு பகுதிக் குடியேற்றம் தமிழர் தாயகத்தைக் கூறு போட்டது. அரசுக்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்து வந்த சி. சுந்தரலிங்கம் சிங்களவரின் போக்கினால் வெறுப்புற்று 'தனித் தமிழீழம் தமிழர் மீட்சிக்கு வழி' எனக் குரல் கொடுத்தார்.தமிழ் மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பண்டாராநாயக்கா தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த முன்வந்தார். இந்தப் பேச்சுக்களின் முடிவில் பண்டா செல்வா ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவு சுயாட்சியை வழங்க பண்டாரநாயக்கா முன்வந்தார். இதை அறிந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி தன் பங்குக்கு இனவாதத்தைக் கையில் எடுத்தது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த JRஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயாத்திரை ஒன்றைத் தொடங்கினார். இந்த நிலமையைத் திசை திருப்புவதற்காக பண்டாரநாயக்கா வாகன இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்கள சிறி எழுத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் பகுதிகளில் இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் பகுதிகளில் தமிழில் சிறி என்று எழுதவும் சிங்கள எழுத்துக்களை அழிக்கவும் செய்தனர். இந்தப் போராட்டங்கள் மலையகத்திலும் நடைபெற்றன. இதன் போது பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் ச+ட்டில் இரண்டு தமிழ் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.பண்டாரநாயக்க

Edited by Manivasahan

இணைப்புக்கு நன்றி மணிவாசகன்

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி தலைவன்

இதில் பல வியடங்கள் தவற விடப்பட்டிருக்கலாம். எனவே அது குறித்த உங்கள் கருத்துக்களையும் தாருங்கள். அவற்றையும் சேர்த்துக் கொண்டு இதனை முழுமைப்படுத்த நினைக்கிறேன்.

நன்றி மணிவாசகன். இப்படியான வரலாற்றுப்பெட்டகங்கள் யாழ் இணையத்தில் நிரந்தரமாக வைக்கப்படுதல் மூலம் எமது இளம் சந்ததிகளும் அறியக்கூடியதாகவும், மொழி பெயர்த்து வெளிஉலகிற்கும் கொண்டு செல்லலாம்.. மோகன் அண்ணை கவனத்துக்கு கொண்டு வரவும்..

  • தொடங்கியவர்

நன்றி Kuggoo

நான் அறிந்த விடயங்களையும் வாசித்துப் பெற்ற தகவல்களையும் மட்டுமே வைத்துத் தயாரிக்கப்பட்டதால் இது முழுமையானதாக இருக்காது. அதனால் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்த உங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்.

கருத்துக்கு நன்றி தலைவன்

இதில் பல வியடங்கள் தவற விடப்பட்டிருக்கலாம். எனவே அது குறித்த உங்கள் கருத்துக்களையும் தாருங்கள். அவற்றையும் சேர்த்துக் கொண்டு இதனை முழுமைப்படுத்த நினைக்கிறேன்.

இப்படியாய் சிங்களவருக்குப் புரியாத அகிம்சை மொழியில் பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அவர்களுக்குப் புரிகின்ற பாசையிலே பேசுவதற்கு இளைஞர்கள் அணிவகுக்கத் தொடங்கிக் கொண்டிருந்தனர். இந்த இளைஞர்களில் ‘தம்பி’ என்று மற்றவர்களால் அழைக்கப்படும் தேசியத்தலைவ்ர திரு பிரபாகரனும் ஒருவர்.

இவரும் இன்னும் சில இளைஞர்களுமாய் இணைந்து புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் விடுதலைப் போரை ஆரம்;பிக்கின்றனர்.

மணிவாசகன்

இங்கே பலரது பெயர்கள் விடப்பட்டுள்ளன. அவற்றையும் இணையுங்கள். நமக்காக சரித்திரத்தை மாற்றி எழுதக் கூடாது. அது இப்படி ஆகிவிடும்.

இராமநாதன் நாடு திரும்பிய போது அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரது வீடுவரை தாமே இழுத்துச் சென்றது வரலாறு. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

இன்று உள்ள போராட்ட வடிவம் கூட நாளை வேறு விதமாக மாறலாம்.

எனவே இலங்கை தமிழர் எப்போதும் இப்போதைய நிகழ்வை மட்டுமே கொண்டு வருகின்றனர்.

அதனால் தமிழருக்கான தேசத்துக்கு

வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள்

ஈழத்தை தன் சொந்தமாக்க வாய்ப்பாக்கிக் கொண்டார்கள்.

எனவே அது சரியோ தவறோ அனைத்தையும் இடம்பெற வைக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை மணிவாசகன் நன்றி.புலிகள் போராட தொடங்கிய ஆரம்ப காலத்தை என்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்பது எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

மணிவாசகன்

இங்கே பலரது பெயர்கள் விடப்பட்டுள்ளன. அவற்றையும் இணையுங்கள். நமக்காக சரித்திரத்தை மாற்றி எழுதக் கூடாது. அது இப்படி ஆகிவிடும்.

இன்று உள்ள போராட்ட வடிவம் கூட நாளை வேறு விதமாக மாறலாம்.

எனவே இலங்கை தமிழர் எப்போதும் இப்போதைய நிகழ்வை மட்டுமே கொண்டு வருகின்றனர்.

அதனால் தமிழருக்கான தேசத்துக்கு

வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள்

ஈழத்தை தன் சொந்தமாக்க வாய்ப்பாக்கிக் கொண்டார்கள்.

எனவே அது சரியோ தவறோ அனைத்தையும் இடம்பெற வைக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்.

வணக்கம் தலைவன்

நீங்கள் கூறிய விடயங்களையும் கவனத்தில் எடுக்கிறேன். தகவலுக்கு நன்றி

நல்ல கட்டுரை மணிவாசகன் நன்றி.புலிகள் போராட தொடங்கிய ஆரம்ப காலத்தை என்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்பது எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.

வணக்கம் ரதி

நீங்கள் குறிப்பிட்ட அந்த்க காலப் பகுதி தொடர்பான தகவல்கள் போதிய அளவில என்னிடம் இருக்கவில்லை. அதனால் விரிவாக எழுத முடியவில்லை. திருத்தங்கள் செய்யும் போது அதனையுமு; கவனிக்கிறேன்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மணத்திலும் இடுங்கள் தமிழ் நாட்டு சகோதரர்கள் பார்ப்பார்கள்.

  • தொடங்கியவர்

நன்றி கந்தப்பு,

  • கருத்துக்கள உறவுகள்

அருந்தகவலுக்கு நன்றி மணிவாசகன். மேலும் மேலும் தகவல்களை இணையுங்கள். அப்போது ஒரு முழுமையானதாகி விடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நன்றி.

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி.

முழுமையாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். உங்கள் கருத்துக்கள், தகவல்களையும் எதிர்பார்க்கிறேன்.

தமிழர் தாயகம், சிறீ லங்காவில முன்பு நடைபெற்ற பலப்பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. துசு எண்டால் என்ன? ஜெயவர்த்தனாவை துசு எண்டு சில இடங்களில சொல்லி இருக்கிறீங்கள். அப்பிடி எண்டால் என்ன எண்டு தெரியவில்லை.

டக்லஸ், கருணா ஆக்கள் அந்தக்காலத்திலேயே இருந்து இருக்கிறீனம் எண்டு அறிய ஆச்சரியமாய் இருந்திச்சிது. தமிழன் எல்லாரையும் இலகுவில நம்பிவிடுவான். சிங்களவன் எல்லாரையும் இலகுவில ஏமாத்திவிடுவான் எண்டு உங்கட கட்டுரையை வாசிக்க விளங்கிது.

பொதுவாகச் சொன்னால்... இதை வாசிக்க வயிறு பத்தி எரியுது! எல்லாரும் தமிழனிண்ட தலையில மலசலம் கழிச்சுப்போட்டு போறாங்கள். தமிழர் என்ன பாவம் செய்திச்சீனமோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவாசகன் அண்ணா; உங்களது இந்தக்கருத்தை எல்லா இடமும் போடுங்கோ நானும் உங்களுடையதை முத்தமிழ் குழுமத்தில் போடறேன்.

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு இணைப்பு மணிவாசகன்

  • தொடங்கியவர்

தமிழர் தாயகம், சிறீ லங்காவில முன்பு நடைபெற்ற பலப்பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. துசு எண்டால் என்ன? ஜெயவர்த்தனாவை துசு எண்டு சில இடங்களில சொல்லி இருக்கிறீங்கள். அப்பிடி எண்டால் என்ன எண்டு தெரியவில்லை.

டக்லஸ், கருணா ஆக்கள் அந்தக்காலத்திலேயே இருந்து இருக்கிறீனம் எண்டு அறிய ஆச்சரியமாய் இருந்திச்சிது. தமிழன் எல்லாரையும் இலகுவில நம்பிவிடுவான். சிங்களவன் எல்லாரையும் இலகுவில ஏமாத்திவிடுவான் எண்டு உங்கட கட்டுரையை வாசிக்க விளங்கிது.

பொதுவாகச் சொன்னால்... இதை வாசிக்க வயிறு பத்தி எரியுது! எல்லாரும் தமிழனிண்ட தலையில மலசலம் கழிச்சுப்போட்டு போறாங்கள். தமிழர் என்ன பாவம் செய்திச்சீனமோ..

JR ஜுயவர்த்தனாவை JR என்று சுருக்கமாக குறிப்பிடவார்கள். அந்த எழுத்துக்களை நான ஆங்கிலப்படத்தாமையால்் ஏற்பட்ட தவறு. மன்னிக்கவும்.

மணிவாசகன் அண்ணா; உங்களது இந்தக்கருத்தை எல்லா இடமும் போடுங்கோ நானும் உங்களுடையதை முத்தமிழ் குழுமத்தில் போடறேன்.

நன்றி அண்ணா.

நன்றி தமிழ்தங்கை .

சில விடயங்கள் இன்னும்் சேர்க்கப்பட வேண்டும். அதன் பின் வேறு ஊடகங்களிலும் சேர்க்க நினைத்துள்ளேன்.

நீங்கள் இணைத்தமைக்கு நன்றி

நல்லதொரு இணைப்பு மணிவாசகன்

நன்றி குமாரசாமி

Edited by Manivasahan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.