Jump to content

இப்படியும் ஒரு குடும்பமா?

Recommended Posts

பதியப்பட்டது

நிலா அக்காவின் குடும்பம் பெரிய குடும்பம். நிலா அக்காவுக்கு அப்பா, அம்மா , நான்கு அண்ணன்மார்கள்.இரண்டு அண்ணன்மார் திருமணம் ஆனவர்கள்.இரண்டு பேர் படித்து முடித்து விட்டு வேலை செய்கிறார்கள்.. நிலா அக்காவும் ஒரு பட்டதாரிதான்....

இரண்டு தினத்துக்கு முன் நான் நிலா அக்கா வீட்டிற்குப் போயிருந்தேன் நிலா அக்காவைக் கண்டதும் எனக்கு சந்தோசமாய் இருந்தது..

”என்னக்கா இந்த பக்கம்.?. குழந்தை பிறக்கப் போகுது போல? என்ன குழந்தை” என்று ஆவலாய்க் கேட்டேன்...

”ஏன்டி நான் என்ர அம்மா வீட்டுக்கு வரக் கூடாதோ? ம்ம்ம்ம் இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கு.. குழந்தை பிறந்து விடும்.. ஆனால் என்னை மாதிரி பெண்ணாய் பிறக்காமல் இருந்தால் சரிதான்” என்றார் சோகமாக....

பதிலுக்கு நானும்..”ஏன் அக்கா இப்படிச் சொல்லுறியள்.. உங்களுக்கு என்ன குறைச்சல்” என்றன்.

நிலா அக்காவின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம்.. எல்லோரும் படித்தவர்கள்.. நிலா அக்கா வீட்டின் ஒரே மகள்.. அவரின் அப்பா அவருக்கு நீச்சல் குளத்துடன் வீடு கட்டிக் கொடுத்திருந்தார் ..

”என்னக்கா உங்கள் கணவர் வர வில்லையா” என்றேன் . அவ்வளவுதான் அழ ஆரம்பித்தார்.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை..

நிலாக்காவின் அப்பா வெளியில் வந்தவர் மகளைப் பார்த்ததும் அவரும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..

நான் எதுவும் புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன்..

நிலா அக்கா என்னைப் பார்த்து "அதை விடு உனக்கு எப்ப கலியாணம்" என்றார்.

எனக்கு ஒன்றும் புரியா விட்டாலும் ”ஏன் அக்கா கலியாணத்துக்கு என்ன அவசரம்” என்று கேட்டேன்...

ம்ம்ம் ”அதுகும் சரிதான். படித்து முடி” என்றார் நிலா அக்கா.

ஆனால் சற்றுத் தயங்கியபடி “இந்த அக்கா எது சொன்னாலும் கேட்பியா?” என்றார்..

”என்னக்கா நீங்களும் எனக்கு ஒரு அக்காதானே சொல்லுங்கோ” என்றேன்.

”இல்லை நீ கலியாணம் பண்ணும் போது அப்பா அம்மா பாக்குற பொடியனை செய்.அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லம் .என்னோட வாழ்க்கை மாதிரி உனக்கும் ஆகக் கூடாது ” என்று சொல்லி அழுதார்...

”என்னக்கா நீங்கள்தானே சொன்னீங்கள் உங்கட கலியாணத்துக்கு முதல் நாள் என்னைப் போல நீயும் காதலித்து செய் என்று இப்ப என்ன நடந்தது” என்று கேட்டேன்.

அவ்வளவுதான் அந்த அக்கா திரும்பவும் அழ ஆரம்பித்தார்....

எனக்கு ஒன்றும் புரியா விட்டாலும் ”நீங்கள் சொல்லுறதைக் கேக்குறன் ஆனால் நீங்கள் அழாதையுங்கோ” எனறேன்...

அப்போது வெளியில் சென்றிருந்த நிலாக்காவின் அண்ணன் வந்தார்..”சுஜிம்மா அவள் அழட்டும் விடும்மா ”என்றார்

அவர்கள் இப்படி கூறி நான் கேட்டதே இல்லை..அவர்களின் ஒரே தங்கையின் கண்ணில் இருந்து கண்ணீர் வரக் கூடாது என்று முந்தி அடிக்கடி கூறுவார்கள்.. இப்ப என்ன இப்படிக் கூறுகிறார் என்று கவலையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.....

"சுஜிம்மா என் தங்கையின் வாழ்க்கையில் நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது அதனால் தான் உனக்குச் சொல்லுகிறேன். நீயும் எனக்கு ஒரு தங்கைதான் என்று தன் தங்கையின் சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்..

நிலாக்கா அவரின் ஊரைச் சேர்ந்த பிரதீப் என்பவரைக் காதலித்தார் அவரின் நான்கு அண்ணான்மாரும் சேர்ந்து நிலா அக்காவின் ஆசைப்படி காதலித்தவரையே திருமணம் செய்து கொடுத்தனர்,,... ..யாரும் எதிர் பார்க்காத அளவு விமரிசையாக அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை..படிப்பிலும் சரி பணத்திலும் சரி மாப்பிள்ளை வீட்டாரும் குறைந்தவர்கள் இல்லை...பெடியன் விமான ஒட்டுனர்.. நல்ல வேலை நல்ல சம்பளம்.. நிலா அக்காவும் படித்தவர்தான்..அவரும் நல்ல வேலையில்தான் இருந்தார்..

பிரதீப்பின் தங்கை நிலாக்காவின் அண்ணனைக் காதலித்து இருக்குறார்...எல்லாருக்கும் தெரிந்த விடயம் தான் ,,நிலாக்காவின் அண்ணனை விருப்பம் இல்லை என்று கூறி இருந்தும் .. பிரதீப்பின் குடும்பம் மாப்பிளை கேட்டு வந்த போது அவர் வேறு பெண்ணை விரும்புகின்றேன் என்றும் அவளுக்கு துரோகம் செய்ய இயலாது என்றும் கூறி மறுத்துள்ளார். கதை பழசாகி காலங்களும் உருண்ட்டோடி விட்டன..பிரதீப்பின் தங்கை வேறு திருமணமும் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டர்..

ஆனால் பழிவாங்க எண்ணினான் பிரதீப் ..

நிலா அக்காவை ஆசை வார்த்தைகள் பேசி காதலித்துத் திருமணமும் முடித்து தன்னோடு கூட்டிக் கொண்டு போய் கொடுமைப் படுத்தினான் அந்தப் பாவி..கட்டியவன் என்றால் பொறுத்துக் கொள்ளலாம் குடும்பமே சேர்ந்து கொடுமைப் படுத்தியது தன் குடும்பத்துடன் நிலா அக்காவை பேச விடாமல் தடுத்தனர்... வீட்டிலேயே சிறை வாழ்க்கை வாழ்ந்தார்... இப்படிச் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்தார் நிலா அக்கா..தற்போது வயிற்றில் குழந்தையுடன் பிறந்த வீட்டுக்கே துரத்தி விட்டனர்..

வீட்டுக்குத் துரத்தியது மட்டுமில்லாமல் கொடிய பிரதீப் குடும்பத்தார் ரோட்டில் வைத்து காரால் இடிக்கவும் வந்தார்கள்.. இது மட்டும் இல்லாமல் அவருக்கு டைவோர்ஸ் நோட்டீசும் அனுப்பி விட்டார்கள்..

பிரதீப்புக்கு இரண்டாம் திருமணம் நடாத்த அவரின் பெற்றோர்கள் பொண்ணு பார்க்கிறார்கள்..

இந்த அக்காவுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகுது.. இந்த குழந்தையோட அப்பா மறு மணம் முடிக்கத் தயாராகிறார்.... என்ன கொடுமையோ....

நான் இரண்டு தினம் முதல் பிரதீப்பின் அப்பாவை ஒரு கலியாணவீட்டில் பார்த்தேன்..அவர் வேறு ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருப்பதை நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..அவர்கள் நிலா அக்காவின் குடும்பத்தைப் பழி வாங்கவே பிரதீப்புக்குக்கு நிலா அக்காவை கலியாணம் செய்து கொடுத்தார்களாம்...இந்த குடும்பம் சந்தோசமாய் இருக்கவிடக் கூடாதாம்..என்று ஆவேசமாக கூறிக்கொண்டிருந்தார்

அவர் சொன்னதை கேட்டு என்னால கண்ணீர் வடிக்கதான் முடிந்தது.. நான் ஏசுவதற்குப் போனேன்.. ”இப்படி கதைத்தால் உன்னை வாயாடி பொண்ணு என்று சொல்லுவார்கள்” என்று எனது அம்மா என்னைத் தடுத்து விட்டார்..

அந்த அக்கா நிம்மதி தேடி எனது விட்டுக்கு வந்துள்ளார்.. அவர் இரவில் அழுவதை நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்..தாங்க முடிய வில்லை. வாயால் ஏசினால் தானே வாயாடி...அதனால் பேனாவால் பேச எண்ணி உங்களிடமும் கூறி என் கவலைகளையும் குறைத்துக் கொள்கின்றேன்..

நிலா அக்கா மாதிரி ஒரு பெண்ணை இவர்கள் தேடினாலும் எடுக்க முடியாது அவ்வளவு நல்ல மனசு. அவர் நினைத்து இருந்தால் அவர்கள் வாழ்க்கையை வேறு விதமாய் அமைத்திருக்க முடியும்.. அவரைத் தேடி எத்தனை நல்லவர்கள் வந்தார்கள்.. இதுதான் விதி என்பார்கள் போல.. ”நல்லவர்களுக்கு காலம் இல்லை” என்று எனது அம்மா அடிக்கடிச் சொல்வார் ஆனால் அதை இப்போது தான் நான் உண்ர்கின்றேன்

...(தொடரும்)..

நம் நாட்டில் பாவம் மக்கள் எப்படியோ கஸ்ர படுகுறார்கள்.. ஆனால் இப்படி பட்ட சிலது இருக்குதுகள்..இவர்களை முதலில் நாடு கடத்த வேணும்..

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உதுகளுக்கு எல்லாம் கதைத்து சரிவராது .............. கத்தியால ஒரு கை எடுத்தால் தான் அவன் அடுத்த கலியாணமும் செய்யமாட்டான்(ஒரு கை இல்லாதவனுக்கு யார் பொம்பிளை வருவார்) தான் மற்றவர்களுக்கு தான் என்ன செய்தது என்றும் விளங்கும் ஆனால் ஓன்று அந்த பொடியனுக்கு கை எடுக்கும்போது தகப்பனுக்கு ஒரு வெட்டாவது வெட்டனும். உங்கட அக்கவிண்ட அண்ணாமார் நல்லவர்கள் போல் இருக்கு அதுதான் சட்டத்தின்வழி போகினம்.பல நேரங்களில் வன்முறைதான் சிலவற்றுக்கு நிரந்தர தீர்வை விரைவாக தேடித்தருகின்றது :unsure: .

அது உண்மைதான் சுப்பண்ணை.. அவர்கள் றொம்ப நல்லவர்கள் அதனால்தான் அவர்கள் எதுகும் பண்ணமால் இருக்குறார்கள்.. நான் ஒரு பெடியானாய் பிறந்து இருந்தால் சத்தியாம அடி குடுத்து இருப்பன்..அந்த அக்கா படும் வேதனை பாக்கவே பரிதாமாய் இருக்கு.. ஒரு கணவன் தான் பக்கத்தில் இருக்க வேணும் குழந்தை பிறக்கும் போது வயித்தில இருக்கும் போது ஆனால் இங்கு வேற நிலமை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏனம்மா என் பெயரை கதா நாயகிக்கு வச்சீங்க . (சும்மா ) நான்( நிலாமதி )என்று நினைச்சுக்க போறாங்க . :unsure: .........

...நல்ல படிபினையான கதை i திக்கி திணறி சொல்லி முடிசுடீங்க.

Posted

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

தெரியாதவங்கள் இப்படிதான் சொல்லுவார்கள் சுவை.. இது உண்மை சுவை நான் நேரில் பார்த்தன்..குடும்ப விபகாரம் எழுத கூடாது என்று நினைத்தன்..ஆனால் அந்த அக்கா மேல் எந்த தப்பும் இல்லை அதனால் எழுதினன் சுவை.. ஊருக்கு தெரியும் மாப்பிளை வீட்டு காரார் மேல் தப்பு என்று.. அவர்கள் வாயாலயே சொல்லி இருக்குறார்கள்.. தங்கள் மகளுக்கு மாப்பிளை குடுக்கலை.. நாங்கள் ஏன் சந்தோசமாய் வத்து இருக்கணும் இவங்க பெண்ணை என்று.. என்னை மன்னிக்கவும் தப்பா சொன்னால்.. நன்றி சுவை

ஏனம்மா என் பெயரை கதா நாயகிக்கு வச்சீங்க . (சும்மா ) நான்( நிலாமதி )என்று நினைச்சுக்க போறாங்க . :unsure: .........

...நல்ல படிபினையான கதை i திக்கி திணறி சொல்லி முடிசுடீங்க.

நிலாமதி அக்கா நிலா என்பது துய்மையானது உங்களை போல அதுதான் இந்த பெயர் வத்தன்.. என் என்றால் அந்த அக்காவும் துய்மையானவங்கள்தான்..அந்த அக்காவின் பெயர் கூட இதுல சமந்த பட்டுதான் வரும் அதனாலும்தான் வத்தன்.. நன்றி அக்கா நான் தப்பா எதுகும் சொன்னால் மன்னிக்கவும் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன செய்யுறது..இதுக்கு தமிழீழ காவல் துறையிட்ட விட்ட 'வயரிங்' வேலை செய்து இப்படியான வழக்கெல்லாம் நல்ல வடிவா தீர்ப்பு சொல்லு அனுப்புவாங்கள்..என்ன செய்யிறது எல்லாம் காலம்

Posted

என்ன செய்யுறது..இதுக்கு தமிழீழ காவல் துறையிட்ட விட்ட 'வயரிங்' வேலை செய்து இப்படியான வழக்கெல்லாம் நல்ல வடிவா தீர்ப்பு சொல்லு அனுப்புவாங்கள்..என்ன செய்யிறது எல்லாம் காலம்

உண்மைதான் லேயர் எல்லாம் காலம்தான். என்ன செய்வது இது கரி காலம்.. நன்றி உங்கள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுஜி உங்கள் கதையை மூன்று முறை படித்தேன் அப்போதுதான் விளங்கியது எழுத்து பிழைகளை திருத்தி கொண்டால் இன்னும் நன்றாக இனிக்கும் [இருக்கும்]

காதலின் கபளிகரம் பல பேருக்கு பாடமாக அமைகிறது

Posted

சுஜி உங்கள் கதையை மூன்று முறை படித்தேன் அப்போதுதான் விளங்கியது எழுத்து பிழைகளை திருத்தி கொண்டால் இன்னும் நன்றாக இனிக்கும் [இருக்கும்]

காதலின் கபளிகரம் பல பேருக்கு பாடமாக அமைகிறது

முனிவர் நன்றி உங்கள் கருத்துக்கு எனக்கு உண்மையில் எங்க எழுத்து பிழை என்று தெரியவில்லை நானும் திரும்ப திரும்ப படித்து எழுத்து பிழைய சரி பண்ணுறேன்.. நன்றி முனிவர்

Posted

உண்மைக்கதையென்று சொல்கிறீர்கள்

சினிமாவில்தான் இப்படியெல்லாம் நடப்பதாக காட்டுவார்கள்

நிஜவாழ்க்கையிலும் இப்படியான பேர்வழிகள்

இருக்கின்றார்களா? இப்படியாக பேர்வழிகளுக்கு

தகுந்த தண்டனை வாங்கிக்குடுக்கவேண்டும்

உண்மைதான் லேயர் எல்லாம் காலம்தான். என்ன செய்வது இது கரி காலம்.. நன்றி உங்கள் கருத்துக்கு

சுஜிம்மா இது என்ன காலம்

Posted

உண்மைக்கதையென்று சொல்கிறீர்கள்

சினிமாவில்தான் இப்படியெல்லாம் நடப்பதாக காட்டுவார்கள்

நிஜவாழ்க்கையிலும் இப்படியான பேர்வழிகள்

இருக்கின்றார்களா? இப்படியாக பேர்வழிகளுக்கு

தகுந்த தண்டனை வாங்கிக்குடுக்கவேண்டும்

சுஜிம்மா இது என்ன காலம்

இருக்குறார்கள் சிவா ஆனால் சிலர் வெளியில் சொல்லுவது இல்லை.. நானும் சினிமாவில்தான் பார்த்தன் சிவா ஆனால் இப்பதான் நேரில் பார்த்தன்.. கல்யாணம் பண்ணுவதுக்கு பயமாய் உள்ளது.. இது என்ன காலம் என்று தெரிய வில்லை.. ஏன் இப்படி மக்கள் என்று புரிய வில்லை.. நாம் ஒரே இனம்தானே இதில் என்ன பழி வாங்குதல்.. நாம் இங்கு ஒற்றுமையா இருக்கா வேணாமா? அங்க இருக்குற உறவுகளைதான் பிரிந்து இருக்குறம் என்றால் இங்குமா இப்படி? என்னமோ ஒன்றும் புரிய வில்லை..

Posted

எனக்குத் தெரிந்தும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒருவேளை ஒரே நபர்களாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தாலும் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்துவிட்டது... இவ்வாறு இருப்பதைக்காட்டிலும் நாக்கை இழுத்து சாகலாம்

நன்றி நிலவன் உங்கள் கருத்துக்கு.. இவருக்கு நான் அறிந்த வரையில் கல்யாணம் இன்னும் ஆக வில்லை.. ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்.. நாக்கு இழுத்து வைத்து எல்லாம் சாக மாட்டார்கள்..உயிரோட நல்லாதன் இருக்குறார்கள் என்ன பண்ண..இதுதான் உலகம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது உண்மையில் நடந்த கதைதானா?

நம்பவே முடியவில்லை!!!!!!!

அதுசரி

இன்று என்னதான் நம்பும்படியாக நடக்கிறது?????????

Posted

இது உண்மையில் நடந்த கதைதானா?

நம்பவே முடியவில்லை!!!!!!!

அதுசரி

இன்று என்னதான் நம்பும்படியாக நடக்கிறது?????????

தியா நான் ஏன் பொய் சொல்லுறன் உங்களுக்கு சந்தேகம் என்றால் நான் தனி மடலில் எழுதுறன் இது யாருக்கு நடந்தது என்று.. அப்ப புரியும்.. ஆமாம் எனக்கு அதிர்ச்சியாதான் முதலில் இருந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

சரி சுவி நான் கூலாயிட்டன் அதுசரி சுவி எங்களுக்கு பிரீத்தி டிக்கற் போட்டு தந்தா என்றால் என்னவென்று போய் பார்க்கலாம் என்ன சொல்லுறிங்கள் சுவி :( (முதல் ஜம்முவோட இந்த வேலை தானே இங்க பார்த்திட்டு இருந்தனாங்கள் இப்பத்தான் ஆளை காணல :wub: )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுஜிஅக்கா எனது பெயரைபார்த்துவிட்டு பதில் சொல்லவும். நீங்கள் அவர்களை பற்றியா எழுதியுள்ளீர்கள்?

Posted

சரி நடந்தது நடந்துபோச்சு. கவலைப்பட்டு அழுது ஒன்றும் ஆகப்போறதில்லை. விழுந்தா எழுந்திருக்கவேண்டும். புதுத்பலத்துடன் எழுந்திருக்கவேண்டும். விவாகரத்து பத்திரமும் தந்திருக்கிறார். சந்தோசமா வாங்கி பயன்படுத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ரெடி சுப்ஸ்! கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று திரிந்து கையையும் கடிக்கத் துவங்கீட்டுது. அவ ரிக்கட் எடுத்துத் தந்தால் நீங்கள் ஆச்சிரமத்திலிருந்து தேங்காய்ச் சொட்டு கொண்டு வாங்கோ, நான் பரிஸில வாங்கின புழுக்கொடியல் கிடக்கு கொண்டுவாறன் கொறிச்சுக் கொண்டுபோய் இரண்டுபேருமாய் குட்டையைக் குழப்பிப்போட்டு வருவம். (பிரச்சிணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது இரண்டு மூன்று ட்ரிப்பாவது அடிக்கவேனும்!!!

சுஜி! சும்மா, சும்மா மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது. எனது அகராதியிலேயே இல்லாத வார்த்தை 'மன்னிப்பு". அடுத்த அகராதி வாங்கும்போது கவணமாய் பார்த்து வாங்க வேணும்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி சுவி நான் கூலாயிட்டன் அதுசரி சுவி எங்களுக்கு பிரீத்தி டிக்கற் போட்டு தந்தா என்றால் என்னவென்று போய் பார்க்கலாம் என்ன சொல்லுறிங்கள் சுவி :D (முதல் ஜம்முவோட இந்த வேலை தானே இங்க பார்த்திட்டு இருந்தனாங்கள் இப்பத்தான் ஆளை காணல :lol: )

சுப்பு தாத்தா எனக்கும் சேர்த்து பயணசீட்டு போடுங்கோ நான் வந்தால் அந்த மாப்புக்கு கடிதான்[சங்கு இருக்காது] :D:lol:

ஜோவ் சுப்பண்ணை நானே படிச்சுட்டு இருக்குற பிள்ளை.. என்னயா இது இடையில் திக்கெட் எல்லாம் போட சொன்னால் நான் ரோட்டில் பிச்சைதான் எடுக்க வேணும்.. இதுக்கு நீங்கள் எல்லாம் ஒகே என்றால் வாங்க பிச்சை எடுத்து விட்டு அவர்களை பாக்கலாம்

சுஜிஅக்கா எனது பெயரைபார்த்துவிட்டு பதில் சொல்லவும். நீங்கள் அவர்களை பற்றியா எழுதியுள்ளீர்கள்?

அவர்கள் என்றால் யாருங்க? மருதங்கேணி... என்னுடன் படித்தவரை பற்றி நான் எழுதினன்.. அப்ப உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இப்படி நடந்து இருக்கா?

சரி நடந்தது நடந்துபோச்சு. கவலைப்பட்டு அழுது ஒன்றும் ஆகப்போறதில்லை. விழுந்தா எழுந்திருக்கவேண்டும். புதுத்பலத்துடன் எழுந்திருக்கவேண்டும். விவாகரத்து பத்திரமும் தந்திருக்கிறார். சந்தோசமா வாங்கி பயன்படுத்துங்கோ.

நன்றி உங்கள் கருத்துக்கு ஆதிபன் சொல்லி பாக்குறன் உங்கள் கருத்தை அவர்களுக்கு

நான் ரெடி சுப்ஸ்! கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று திரிந்து கையையும் கடிக்கத் துவங்கீட்டுது. அவ ரிக்கட் எடுத்துத் தந்தால் நீங்கள் ஆச்சிரமத்திலிருந்து தேங்காய்ச் சொட்டு கொண்டு வாங்கோ, நான் பரிஸில வாங்கின புழுக்கொடியல் கிடக்கு கொண்டுவாறன் கொறிச்சுக் கொண்டுபோய் இரண்டுபேருமாய் குட்டையைக் குழப்பிப்போட்டு வருவம். (பிரச்சிணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது இரண்டு மூன்று ட்ரிப்பாவது அடிக்கவேனும்!!!

சுஜி! சும்மா, சும்மா மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது. எனது அகராதியிலேயே இல்லாத வார்த்தை 'மன்னிப்பு". அடுத்த அகராதி வாங்கும்போது கவணமாய் பார்த்து வாங்க வேணும்!!!

ஜோவ் சுவை யார் ரிக்கட் வாங்கி குடுக்குறது... எனக்கு நீங்கள் சாப்பிடுறதுல கொஞ்சம் கொண்டு வாங்க.. என்ன புதுசான சாப்பாட இருக்கு.. குட்டை குழப்புறது என்றே முடிவு பண்ணி விட்டிங்களா?ஒகே மன்னிப்பு கேட்க வில்லைங்கோ

சுப்பு தாத்தா எனக்கும் சேர்த்து பயணசீட்டு போடுங்கோ நான் வந்தால் அந்த மாப்புக்கு கடிதான்[சங்கு இருக்காது] :D:lol:

எல்லாரும் முதல் என்னுடன் பிச்சை எடுக்க வாங்க அப்புறம் நம் அவர்களை கடிக்குறவங்க கடிக்கலாம் சப்பிடுறவங்க சாப்பிடலாம்.. குட்டை குழப்புறவங்க குழப்பலாம்.. எதோ நல்லது நடந்தால் சரிதான்.. முனிவர் கதை திருத்த பட்டு உள்ளது பாருங்கள்.. சியா திருத்தி குடுத்து உள்ளார்..

Posted

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

இருக்குறார்கள் சிவா ஆனால் சிலர் வெளியில் சொல்லுவது இல்லை.. நானும் சினிமாவில்தான் பார்த்தன் சிவா ஆனால் இப்பதான் நேரில் பார்த்தன்.. கல்யாணம் பண்ணுவதுக்கு பயமாய் உள்ளது.. இது என்ன காலம் என்று தெரிய வில்லை.. ஏன் இப்படி மக்கள் என்று புரிய வில்லை.. நாம் ஒரே இனம்தானே இதில் என்ன பழி வாங்குதல்.. நாம் இங்கு ஒற்றுமையா இருக்கா வேணாமா? அங்க இருக்குற உறவுகளைதான் பிரிந்து இருக்குறம் என்றால் இங்குமா இப்படி? என்னமோ ஒன்றும் புரிய வில்லை..

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

Posted

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

நிகே நன்றி உங்கள் கருத்துக்கு உண்மையில் அருவருப்பாகதான் உள்ளது என்ன பண்ண இதுதான் உலகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம்???

அவர்கள் என்றால் யாருங்க? மருதங்கேணி... என்னுடன் படித்தவரை பற்றி நான் எழுதினன்.. அப்ப உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இப்படி நடந்து இருக்கா?

என்ன சுஜிஅக்கா எனது பெயரை பார்த்துவிட்டு பதில் சொல்ல சொன்னே. நீங்கள் வெறுமனயே இப்படி கேட்டால் எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.