Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

நீங்கள் பெரிய திட்டங்களை போடுகிறீர்கள். அவைகள் நடைபெறுமானால் மிகவும் நன்மையாக அமையும்.

அதே வேளை தமிழ்நாட்டில் இருந்து வருபவைகளை ஒட்டுமொத்தமாக எக்காலத்திற்கும் புறக்கணிக்க வேண்டியது அவசியம் இல்லை என்பது கருத்து.

கலைஞர் குடும்பத்திற்கும், சன் குழுமத்திற்கும் எங்களின் கோபத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதே "அயன்" புறக்கணிப்பு பற்றிய கோரிக்கையின் அடிப்படைக் காரணமாகும்.

கலைஞர் ரீவி வேணும்.. சன் ரீவி வேணும். ஆனால் அயன் படத்தை புறக்கணிச்சு ஆணித்தரமாக கோபத்தை காட்டுவம் என்றால்.. இதில எப்படி கோபம் ஆணித்தரமாகக் காட்டப்படும். வெளியிடப்படும் நிலையில் இருக்கும் ஒரு படத்தை புறக்கணிக்கச் சொல்வதால்.. அது விநியோகித்தர்கள் மீதும் தியேட்டர் உரிமையாளர்கள் மீதும் காட்டப்படும் கோபமாக இருக்குமே அன்றி சன்னுக்கோ கலைஞருக்கோ.. இதனால் கோபம் வெளிப்படுவதை உணரத்தக்க பாதிப்புக்கு வழியே இல்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply

சபேசன் உங்களுடைய கருத்துக்களுடன் ஓரளவு ஒத்து போகமுடிகின்றது. கலைஞர் குடும்பத்துக்கு எமது எதிர்ப்பை காட்டவேண்டிய அவசியமுள்ளது. இதை நன்றாக ஆராய்ந்த பின்னர்தான் செய்யவேண்டும். எடுத்தற்கெல்லாம் பகீஸ்கரிக்க ஆதரித்தால் பலரையும் பகையாளிகளாக்க வேண்டும்.

உண்மையில் இந்த நட்டம் சண் குழுமத்துக்கு மட்டும் என்றால் நாங்கள் எங்கள் பணியை செய்யலாம்.

ஒரு இலங்கை தமிழன் எடுத்த படத்தை எதிர்த்த பலர் இன்று உங்கள் கருத்தை எதிர்க்கின்றார்கள். அழுவதா சிரிப்பதா? இதை அவர்கள் ஆரம்பித்திருந்தால் தவறே இல்லை.

:D:):D :D :D

இவையும் யாழில் தடைசெய்யப்பட்டன என்றால் ஏன் இன்னும் இவைகளை வைத்திருக்கிறீர்கள்

இணையவன் விளக்கம் தரமுடியுமா ???

இணையவன் ஒழிக :icon_idea:

tamilsvoice,

ஒருவரது கருத்தை மறுக்க வேண்டுமானால் அதற்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். அப்படி பதில் கருத்து எழுத விரும்பாவிட்டால் அத் தலைப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே பண்பாகும். சக உறுப்பினரைக் தாழ்த்தி எழுதுவதால் உங்கள் தரப்பை நியாயப்படுத்த முடியாது. இதனால் ஆக்கபூர்வமான விவாதங்களும் திசைமாறி பயனற்றதாகிவிடும்.

இன்னொருவரின் கருத்துக்களை வார்த்தைகளால் எதிர்கொள்ளாது முகக்குறிகள் மூலம் பதிலளித்த விதம் அக் கருத்துக்களைக் கேலி செய்வதாக அமைந்தமையாலேயே உங்கள் கருத்து நீக்கப்பட்டது.

tamilsvoice,

ஒருவரது கருத்தை மறுக்க வேண்டுமானால் அதற்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். அப்படி பதில் கருத்து எழுத விரும்பாவிட்டால் அத் தலைப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே பண்பாகும்.

சக உறுப்பினரைக் தாழ்த்தி எழுதுவதால் உங்கள் தரப்பை நியாயப்படுத்த முடியாது.

இதனால் ஆக்கபூர்வமான விவாதங்களும் திசைமாறி பயனற்றதாகிவிடும்.

இப்படி ஒன்று இருக்கிறதா ?

இன்னொருவரின் கருத்துக்களை வார்த்தைகளால் எதிர்கொள்ளாது

எழுதுவது எல்லாவற்றையும் வெட்டி விட்டு எதிர்கொள்ள சொல்லுவது எதனால்

முகக்குறிகள் மூலம் பதிலளித்த விதம் அக் கருத்துக்களைக் கேலி செய்வதாக அமைந்தமையாலேயே உங்கள் கருத்து நீக்கப்பட்டது.

அதற்காகத் தான் முகக்குறிகளை பயன் படுத்த வேண்டியுள்ளது

இனி ஊமைப் பாசையில் யாழில் எழுதுவது எப்படி ???? சொன்னால் எழுதலாம்

இதற்கு விளக்கம் சொல்லுங்கள் இவை எல்லாம் ஆக்க பூர்வமான கருத்தாடல்களா ???

இதில் எங்கும் தனிநபர் தாக்குதல்கள் இல்லை யா ?????

நிழலி

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

ஏற்கனவே தனது முடிவைச் சொல்லி விட்டு அதற்கு ஆதரவாக தான் சொல்வதை மற்றவர்களுக்கு திணிப்பது

நிழலி

அயன் எப்ப ரிலீஸ்? இப்படியாக ஒரு படம் வந்துள்ளதென்றும் அதனை எம் எதிரிகள் தான் தயாரித்தனர் என்றும் தகவல் தந்தமைக்கு நன்றி

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

நிழலி

சபேசன் உங்களைப் போன்ற தெளிவாக, பிரச்சனைகளை சரியான திசையில் இருந்து பார்த்து எழுதக் கூடியவர்கள்

நீங்கள் எதிர்க்க சொன்ன ஒரே காரணத்திற்காக மக்கள் எதிர்க்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள் சபேசன்?

நீங்கள் எதிரி என்று சுட்டும் விரலின் முன் இருப்பவர்களை எல்லாம் எம் தமிழ் மக்கள் எதிரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு

நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களோ தலைவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

எதிரிகளின் எண்ணிக்கையை கூட்ட மட்டுமே எமக்கு தெரியும். ஆதரவு கொடுப்பவர்களை தூக்கி கொண்டாட தெரியாத நாம் எம் விருப்பு படி நடக்காதவர்களை எதிரிகளின் பட்டியலில் இட்டு வெற்று முழக்கம் இட்டு எம் ஒவ்வொருவரையும் தலைவர்களாக கற்பனை செய்கின்றோம்

உங்களின் சொல்லைக் கேட்டு வரும் போவோரை எல்லாம் எதிரிப் பட்டியலில் இட்டு இன்னும் இன்னும் சீரழிய அவர்கள் உடன்படப் போவதில்லை

பாவம் சபேசன் நீங்கள். உங்களின் அயன் படப் புறக்கணிப்பு பற்றிய கருத்தாடலில் ஏற்பட்ட மனச் சோர்வை இங்கு சொருகி களைப்பாறுகிறீர்கள்

நிழலி

எம் எதிரி... பிரதான எதிரி சிங்கள இனவாதிகளும் அவர்களின் ஆரிய சகபாடிகளும் தான். எம் இலக்கு அவர்கள் மட்டும் தான்

எம் பிரதான எதிரி இந்திய வல்லாதிக்க வெறியும் அதன் முதுகெழும்பான பார்பனியமும் தான்

நிழலி

சீனா

எனக்கு இராஜீய உறவுகளை வளர்ப்பது என்பதே என்ன என்று தெரியாது

> உலகின் எந்த ஒரு குட்டான் குட்டி நாடுகள் அல்லது இனக் குழுமத்தின் ஆதரவைக் கூட எடுக்க தெரியாது

>எம்மை எதிர்ப்பவர் அனைவரையும் எதிர்த்தே பழக்கப் பட்டு போனதால்

> எந்த சர்வதேச உதவியும் இன்றி என் வீட்டின் உறுப்பினர்கள் உதவியினால் மாத்திரமே என் வீட்டில் பால் பொங்க எல்லாக் காலத்திலும் முடியும் என்ற வைராக்கியம் இருப்பதால்

>நான் தமிழன் என்பதால் (றோயல் family)

உங்களின் எதிரிப் பட்டியல் மேலிம் நீள என் வாழ்த்துகள்

தயா

smile.gif எல்லாம் விளம்பரம் மயம்....

தூயவன்

இத்தனை மக்கள் அவலங்கள் நடந்தபோதும், அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நான் கடவுளுக்கு சபேசன் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். ஏன் அதையும் ஒரு காரணம் சொல்லிப் புறக்கணிக்கவில்லை??

உருப்படியாக ஏதாவது செய்யலாமே !!!!.

1. சன் TV பார்க்க வேண்டும், அதில் வரும் நாடகங்களைப்பார்க்க வேன்டும்

2.இந்தியாவில் இருந்து தான் கோயில் பூசகர் வர வேண்டும், எமது இளைஞர்கள் எத்தனையோ பேருக்கு அந்த தகுதி இருந்தும் அவர்கலுக்கு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள்.

3.பாலு மகேந்திரா என்ற ஒருவர் அகில இந்திய ரீதியில் பிரசித்தம் பெற்ற இயக்குனர் ஒன்றுமே பேசாமல் இருக்கிரார், அவரை தட்டிக் கேற்க வக்கில்லை

4.விஜய்யுடைய குப்பைகளை முண்டியடித்துக்கொண்டு பார்ப்போம், இந்த லட்சனத்தில் எமது ஊர் பெணை திருமணம் செய்தபடியால் தான்

ஈழத்து மருமகன் என்ற புருடா வேறு அவரை புறக்கணிக்க மாட்டோம்.

இவை எல்லாவற்றிற்கும் விளக்கம் தாருங்கள் பின்னர் நான் சொல்கின்றேன்

அல்லது இதையும் தூக்கி விட்டு உங்களை நல்லவராக எழுதுங்கள்

Edited by tamilsvoice

வணக்கம்,

சபேசனின் கருத்துக்கள் பல முரணாக இருந்தாலும்.. தற்போதையை நிலை .. தமிழரின் எதிர்காலம்... என்று நீண்ட கால நோக்கில யோசிக்கேக்க இந்த புறக்கணிப்பு சரி மாதிரி தெரியுது. குறிப்பிட்ட ஒரு படம் என்று இல்லாமல் பாரிய எடுப்பில புறக்கணிப்பில இறங்கினால் தான் தமிழ்நாடு விழித்துக் கொள்ளும்.

நாங்கள் தொடர்ந்து சீர்யல்களையும், படங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தால்... அவையளும் நமது பிரச்சனைகளை கணக்கில எடுக்க மாட்டார்கள். பாரிய அளவில புறக்கணிப்பில ஈடுபட்டு அது ஒரு கொஞ்சக்காலத்துக்கு ஆக்குறைஞசது இன்னும் ஒரு மூன்று மாதத்துக்காவது போனால்தான் குத்துக்கல்லாய் இருக்கிற சிலர் விழிப்பு அடைந்து ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

குறிப்பிட்ட ஒரு படம் என்று இல்லாமல் பாரிய அளவில தென்னிந்திய சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சிகள் எல்லாத்தையும் புறக்கணிக்க வேண்டும். அப்பத்தான் நாங்கள் என்ன மனநிலையில இருக்கிறம் என்று புரியவேண்டியவர்களுக்கு புரியும். இல்லாவிட்டால்.. அவர்கள் செயற்பாடுகளில மாற்றம் வரப்போவது இல்லை.

அண்மையில வைத்தியர் பிரையன் செனவிரட்ன கூட இந்தியாவின் முக்கியத்தை சொல்லி இருந்தார். இந்தியா என்ன செய்கிதோ அதைத்தான் உலகம் எமது விசயத்தில பின்பற்றும். பாரிய புறக்கணிப்புக்கள் மூலம் நாங்கள் அழுத்தம் கொடுத்தால்தான் ஆகக்குறைந்தது தமிழ்நாட்டையாவது எம்சார்பாக சாதகமான முறையில திருப்ப முடியும். இல்லாவிட்டால் சின்னத்திரையினுள்ளேயே தமிழீழத்தையும் தமிழர் பிணங்களையும் பார்த்துவிட்டு நாங்கள் கொட்டாவி விட வேண்டியதுதான்.

நன்றி!

உண்மைதான் முரளி நீங்கள் சொல்வது மிகவும் சரி அது சரி எப்ப திரும்பவும் மாப்பிள்ளையாகினீர்கள். அடிக்கடி புதுமாப்பிள்ளையாகின்றீர்கள

என்னத்தை சொல்லிறது சோழன். ஒரு நாளைக்கு நூறு இருநூறு சனம் எண்டு ஆடு மாடு மாதிரி கொல்லுறாங்கள். எங்களால அதைக்கூட நிறுத்த முடியவில்லை. சிங்களவன் உண்மை சொன்னாலும் உலகம் அவன் சொல்லைத்தான் கேட்கிது. பொய் சொன்னாலும் உலகம் அவன் சொல்லைத்தான் கேட்கிது. ஒருத்தனும் கொலைகளை நிறுத்துவதற்கு ஆயத்தமாக இல்லை. சிறீ லங்கா கிரிக்கட் வீரர்களுக்கு நுளம்பு கடிச்சிட்டிதாம் எண்டால் மட்டும் உலகம் பதைபதைக்கிது.

நாங்கள் வெறும் செல்லாக் காசுதான் போல. பேசாமல் மொட்டை அடிச்சுப்போட்டு ஏதாவது ஆச்சிரமத்தில போய் ஒதுங்கலாம் போல இருக்கிது.

கருநாயுக்கும் பெயர் முரளிதரனாம், மற்றது பந்துபோடுற சிங்களவனுக்கும் அதானாம் பெயர் அதான் எண்ட பெயரை மாத்திப்போட்டன்.

கனடாவில ஒரு நாயுக்கு காய்ச்சல் எண்டால் தலைப்பு செய்தியாய் வருகிது. ஒரு நாளைக்கு 100 தமிழ் அப்பாவிகளை சிங்களவன் கொல்லுறான். அதுபற்றி ஒண்டும் கவலைப்படுவார் இல்லை. அதாவது உலகத்தில வெளிப்படையாக கொலை செய்யக்கூடாது. இரகசியமாக இருட்டடியாக என்னமும் செய்யலாம். வேற என்னத்தை சொல்லிறது?

எங்களால முடிஞ்சது குரல் குடுக்கிறது மாத்திரம் தான். சனங்களை காப்பாற்று எண்டு போற வாற இடங்களில எல்லாம் கத்திகொண்டு திரியுறம். மேல்மாடி பிழையாய்ப்போச்சிது எண்டு எப்ப பலாத்காரமாய் பிடிச்சு உள்ளுக்க போடப்போறாங்களோ தெரியாது.

வேற என்னத்தை சொல்லிறது?

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் அவுஸ்திரெலியாவுக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா வந்திருந்தார். அவர் 3 புத்தகங்களை அவுஸ்திரெலியா ஊடகவியாளார்கள், அரசியல்வாதிகள், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். அதில் ஒரு புத்தகம் அண்மைக்காலங்களில் தமிழ் நாட்டு ஊடகங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வந்த செய்திகளின் தொகுப்பு. அதில் அதிக ஆக்கங்கள் இந்து, தினமலர் பத்திரிகையில் இருந்தே பெறப்பட்டிருந்தது. அதிலும் இந்து, தினமலர், மற்றும் சில தமிழ் நாட்டுப்பத்திரிகையில் 2006ல் வந்த தமிழக மீனவர்களைக் கொன்ற விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகள் அதிக இடம் பிடித்தன. றோவின் சூழ்ச்சியினால், புலிகள் தான் மீனவர்களைக் கொன்றதாக சில மீனவர்களின் பேட்டிகள் இவ்வூடகங்களில் வந்தன.

அக்காலத்தில் சன் தொலைக்காட்சியும் புலிகள் தான் மீனவர்களைக் கொன்றதாக தலைப்புச் செய்திகளை வெளியிட்டது. ஆனால் மக்கள் தொலைக்காட்சி மட்டும் அம்மீனவர்களுடன் சென்ற சிறுவன் ஒருவனின் பேட்டியை வெளியிட்டு இக்கொலைக்கு சிறிலங்கா அரசு தான் பொறுப்பு என்ற செய்தியை வெளியிட்டது. அக்காலத்தில் சிட்னியில் தரிசனம் தொலைக்காட்சியூனூடாக ஈழத்தமிழர்கள் மக்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தார்கள். தரிசனம் இல்லாத சன் தொலைக்காட்சியை உடைய ஈழத்தமிழர்களும், இந்திய, மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களும் சன் செய்தியில் வந்த பொய்யான செய்திகளைப் பார்த்தார்கள்.

சிட்னியில் உள்ள சன் தொலைக்காட்சி நிலையத்துக்கு சில ஈழத்தமிழர்கள் பொய்யான செய்தியை வெளியிட வேண்டாம் என்று தொலைபேசியில் சொல்லும் போது, சிட்னியில் சன் தொலைக்காட்சியை ஓளிபரப்புச் செய்யும் இந்தியத் தமிழர்கள் சன் தொலைக்காட்சி எப்பொழுதும் உண்மையைத்தான் சொல்வது என்று பதில் அளித்தார்கள். எனக்குத் தெரிந்த புலிகள் மீது ஆதரவு உள்ள சன் தொலைக்காட்சி வைத்திருப்பவர் சன் செய்தியைப் பார்த்துவிட்டு தவறுதலாகப் புலிகள் மீனவரைச் சுட்டிருக்கலாம் என்று சொன்னார். சன் தொலைக்காட்சி ஈழத்தமிழர்களிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக செயற்பட்டு வருவதற்கு உதாரணங்களில் ஒன்று மேலே நான் சொன்ன விடயம். இப்பொழுது தேர்தல் காலம், காங்கிரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்கள் சன் தொலைக்காட்சியில் வரவுள்ளது. நான் சன் தொலைக்காட்சியை பல காலங்களாக புறக்கணிப்பவன். அவர்கள் தயாரிக்கும் அயன் படத்தையும் புறக்கணிப்பேன்.

துரோகிகளின் பொருட்களை உடனே புறக்கணிப்போம்...-தமிழகத்திலிருந்து அதிபதி-

கரிகாற் சோழன் தனக்கெதிராக மன்னர்கள் 7 பேர் அமைத்த பெருங்கூட்டணியை முறியடித்து வெண்ணிப் போரில் வெற்றி பெற்று உலகப்புகழ் பெற்றான்.

கால்களில் வெடிமருந்து தீப்பற்றி கருகியதால் 'கரிகாலன்' என்ற புனைப்பெயர் பெற்ற நமது தேசியத்தலைவரை எதிர்த்து நான்காம் ஈழப்போரில் இப்போது 7 பேர் (இந்தியா இலங்கை சீனா பாகிஸ்தான் இஸ்ரேல் ரஷ்யா) கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

அந்த சோழனின் கொடியும் புலிக்கொடிதான் நமது தலைவரின் கொடியும் புலிக்கொடிதான். கரிகாற் சோழன் இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டினான். நமது தலைவரோ ஈழம் முழுவதையும் வெல்ல தொடர்ந்து போராடுகிறார். இத்தகைய போராட்டத்திற்கு ஊறு விளைவிப்பதற்கு இன்று புற்றீசல் போல துரோகிகள் புறப்பட்டுள்ளார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் சீன ஜப்பான் அரசுகள் நமது பணத்தில் உண்டு கொழுத்துவிட்டு நமக்கே துரோகம் செய்கிறார்கள். . இவர்களுடைய பொருட்களை தமிழர்கள் அனைவரும் ஈழம் மலரும் வரை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். எட்டு கோடித் தமிழர்களும் உடனடியாக இந்த நிமிடத்திலிருந்து துரோகிகளின் பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.

1) சிறீலங்கா அரசின் பொருட்கள் (சிறீலங்கா ஏர்லைன்ஸ் காபி பொருட்கள் ஆயத்த ஆடைகள் உணவுப் பொருட்கள் மரச்சாமாங்கள்) கனடாவில் இருந்து மட்டும் சிங்களத்தின் தமிழின அழிப்பு போருக்கு வருடம் தவறாமல் 111.3 மில்லியன் டாலர்கள் செல்கிறது.

2) சீன அரசின் பொருட்கள் (சீன கைபேசிகள் கார்கள் பைக்குகள் பொம்மைகள் சைனீஸ் உணவுகள் சீன செராமிக் பாத்திரங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் பட்டாசுகள் சீன டூல்ஸ் - உபகரணங்கள்) சீன கைபேசிகள் மட்டும் இந்தியாவில் ஆண்டு தோறும் 2500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகின்றன.'

3) இந்திய வட நாட்டவரின் மாருதி கார்கள் பஜாஜ் ஹீரோ ஹோண்டா பைக்குகள் ஆடைகள்

4) ஜப்பான் பொருட்கள் (ஜப்பான் நாட்டின் ஹோண்டா சுசுகி டொயொட்டா மிட்சுபிசி கார்கள் பைக்குகள் பொம்மைகள் ஆடைகள் எலக்ட்ரானிக் பொருட்கள் விட்டு உபயோகப் பொருட்கள்).

5) சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன்) தயாரிக்கும் திரைப்படங்கள் (ரோபோ - எந்திரன் அயன் தீ படிக்காதவன் காதலில் விழுந்தேன் திண்டுக்கல் சாரதி குருவி போன்ற படங்களை யாரும் பார்க்க வேண்டாம்).

6) சன் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள்7) கலைஞர் ஜெயா ராஜ் தொலைக்காட்சிகள்

8) சன் DTH, SCV

எமது இனம் அழிவின் விளிம்பில் இருக்கும் போது சிறு துரும்பையும் அவர்களின் அழிவை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். இந்த சிறு தியாகத்தை செய்வதினால் நம் உயிர் ஒன்றும் போய் விடப் போவதில்லை. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்தும் இவர்களின் துரோகத்திற்கு தக்க பாடம் கற்பிப்போம். முடிந்தவரை அல்ல. எட்டு கோடித் தமிழர்களும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.

நம்மிடமிருந்து ஒரு பைசா கூட இவர்களுக்கு போகக் கூடாது. அப்போதுதான் இவர்கள் வழிக்கு வருவார்கள்.தமிழகத்திலிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயன் படத்தை கள்ளக் கொப்பியில் பாருங்கள்

இந்தியாவில நடிக - நடிகைகள் சொன்னால்தான் ஓட்டே கிடைக்கும் நிலை.

மன்மோகன் - சோனியா - அத்வானி - கருணாநிதி - ஜெயலலிதா சொன்னா நம்ப மாட்டாங்க.

இன்னமும் MGRரை வைத்து ஓட்டு வாங்கிற நிலை அங்க?

திரையில செய்யிறதை நிஜமாவும் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்திய பாமர மக்களுக்கு எப்பவும் இருக்கு.

திமுகவின் அமோக வெற்றி எம்ஜீஆரை வைத்தே கிடைத்தது.

ஜெ, கமலுக்கு கோடி ரூபாதாரன் கட்சிக்கு பேசுங்க என்று கேட்க

கமல் உடனே அமெரிக்காவுக்கு கம்பி நீட்டினார்.

கடைசியில் சிம்ரன்தான் ஜெக்கு கிடைத்தார்.

இப்படியான கமலே தமிழீழம் சார்பாக தனது கருத்தை பகிரங்கமாக வைத்தது எவரும் எதிர்பார்க்காது.

ரஜனி எப்போ வருவேன் எப்படி வருவேன் என தெரியாத நிலையானாலும்

யாருக்காவது விரலை காட்டிப் போட்டு மலையேறிடுவார்.

ரஜனி ஒரு காலத்தில் இராமயணத்தை வைத்து ஈழப் பிரச்சனை குறித்து பேசியவர்.

ரஜினியின் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றை விடுதலைப் புலிகளைச் சார்ந்தோர்

ஒரு காலத்தில் மண் கவ்வ வைத்து குதித்ததையும் மறந்து

ரஜனி : நடிகர்களின் உண்ணாவிரத மேடையில்

மகிந்தவுக்கு சவால் விட்டார்

"மகிந்த நீயென்ன வீரன்" என்று?

இப்ப கெப்டனும் விரல் காட்ட த் தயார்.

சீமான் போலவே. அமீர் : பாரதிராஜா : செல்வமணி : மணிவண்ணன் இப்படி

பலர் சிறைக்கு செல்லக்கூட தயார்?

இவர்களே உங்கள் செய்கைகளால் இப்போது சற்று சிந்திக்கிறார்களாம்?

நாம உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ என்று....

ஒருவர் மேல் கைவைத்தால் அது தொடர் கதையாக தொடரும் என அவர்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்?

இது அவர்களது ஆதரவை இழக்க நிச்சயம் வழி வகுக்கும். அடித்தாளம் போட்டுட்டீங்க.

தொடர்ந்து முட்டாள்தனம் செய்துள்ளோம் என நிச்சயம் வருந்துவீர்கள்.

அதுகூட புரியோமோ எனக்கு தெரியாது?

அதுவும் டூ லேட்தான்?

எண்ணை திரண்டு வரும் வேளையில் சட்டியை உடைத்தவர்கள் போல.

அல்லது

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல.

சினிமாவை விளம்பரப்படுத்தும் பலமான ஊடகம் இன்று தொலைக்காட்சி.

அது யாருடையது என்பது பிரச்சனையேயில்லை?

அதுவே நமது பிரச்சனையும்?

விளங்கவில்லையா?

நம் பிரச்சனையை அவர்கள் கொண்டு வராததால்தானே நமது கோபம்?

.....................

வெளிநாட்டில் உங்கள் போராட்டம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால்

அவர்கள் தயாரிப்பு செலவைக் குறைத்து

இந்தியாவுக்குள் மட்டும் திரைப்படங்களை வெளியிடும் நிலையை உருவாக்கிக் கொள்வார்கள்.

அவர்களது முக்கிய வருமானம் இந்தியாதான்.

வெளிநாடல்ல..... அது கிடைக்கும் கிடைக்காது.

கலைஞர்களது போராட்டத்தில்

சிறீலங்காவுக்கு எதிராக தமிழக கலைஞர்கள் பேசும்போதே

சிறீலங்காவில் அவர்களது படைப்புகளுக்கு பிரச்சனை வரும் எனத் தெரியும்.

அதேபோல் இது அவர்களுக்கு பெரிய பிரச்சனையுமில்லை.

அதுபோல இதுவும்......

இனி

நமது தொலைக்காட்சிகளும் : வானோலிகளும்

இந்திய திரைப்பட பாடல்களையும் ஒலி - ஒளிபரப்பும் நிலையை தவிர்க்க வேண்டும்.

இது சரியென்றால் அதையும் உடன் இவர்கள் அமுலாக்க

உடனடி புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும்.?

நாடகங்கள் : பாடல்கள் : சந்திப்புகள் : ஆட்டம் : கொண்டாட்டம்

எல்லாத்தையும் புறக்கணியுங்கள்.

அவர்களது பாடல்களை இவர்கள் பாடினாலும்

அதையும் புறக்கணியுங்கள்.

அப்போதுதான் நீங்கள் உண்மையான தேசியவாதி.

இல்லையென்றால் .................

அதையும் உடனே செய்வீர்களா?

இதுதான் முக்கியம் என்றால்

உலக அரங்குக்கு கொண்டு போக வேண்டிய பிரச்சனையை

கோடம்பாகத்துக்குள் இறுக்கி நாத்திய ஜாம்பவான்களாக

நம்ம புறக்கணிப்பாளர்களே காரணமாவார்கள்?

உலகத்துக்கே எல்லாம் சொல்லித் தருவோம் என்று முழங்கியவர்கள்

இப்ப வீதி வலம் வருகிறார்கள்?

உலகம் நம் காலடிக்கு வந்தது - கண்டு கொள்ளவில்லை

இப்போது நாம் உலகத்தின் காலடியில் நின்று கதறுகிறோம்

அவர்கள் கண்டு கொள்வதேயில்லை.

நமது தேவை தமிழர்களை மட்டும் காப்பதல்ல?

அதற்கும் மேலே..........

இப்போது உலகம் தமிழர்களை மட்டும் காக்க முயல்கிறது.

அதையே இப்படியான கருத்துகள் சொல்கின்றன.

இலங்கையில் நிலவிவரும் பயங்கவாத தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் கோடன் டுகிட் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினைக்கான தீர்வினை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை எட்ட வேண்டும். அத்துடன் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பயங்கவாத நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சகல தரப்பினரும் இணைந்து சமாதானத்தினை உருவாக்க முயல வேண்டும் எனவும் ராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, " எமக்கு என்ன விருப்பம், விருப்பமில்லை என்பது கேள்வியல்ல.உடனடியாக இலங்கைக்குத் தேவைப்படுவது குறித்து நான் விளக்கியுள்ளேன்" என கோடன் டுகிட் தெரிவித்தார்.- வீரகேசரி

தனியொருவருடன் உள்ள கோபத்தில்

முழு ஆதரவையும் இழக்கும் நிலையை உருவாக்காதீர்கள்.

அது எமது அழிவுக்கே தூபமிடும்?

எதிரிகளை உருவாக்க உனக்கு காலம் தேவையில்லை - ஆனால்

நண்பர்களை உருவாக்க பொறுமையும் காலமும் உனக்கு மிக மிக அதிகம் தேவை.

இதையும் வாசித்துவிட்டு என்னை கைக்கூலி என்று எழுதுங்கள். <_<

மந்தைகளாக கூட இருக்கலாம் . வாத்துகளாக இருக்கலாகாது.

(குறிப்பு : நான் இந்த ஒரு டீவியையும் பார்ப்பதில்லை. வாழும் நாட்டு தொலைக் காட்சி. செய்திகள் இணையத்தில். தமிழ் திரைப்படம் பார்த்து 5 வருடமாகிறது)

Edited by Thalaivan

நாம் புறக்கணிக்கின்ற போது அவர்களுக்கு ஒரு பயம் வரவேண்டும். . இங்கு படங்களை விநியோகிப்பவர்களை குறிவைக்க வேண்டும். அவர்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு நாம் முடிந்தவரை இணையத்தில் விட்டுவிடவேண்டம்.. காதலில் விழுந்தேன் படத்துக்கு மு.ம.அழகரி செய்ததுபோல் நாமும் செய்ய வேண்டும்.

நமது பணம்தான் அவர்களை தூக்கி நிறுத்துகின்றது என்ற கசப்பான உண்மையை எமது எதிராளிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

திருவாசகத்துக்கு உருகாதவர்கள்

ஒருவாசகத்துக்கும் உருகார்

வன்னியிலுள்ள அந்த மக்களின் நிலைக்கு இன்று உருகாமல் இரண்டுமணிநேர திரைப்பட சுகம்தான் பெரிதென்று நினைத்தால்

வாழ்க்கையில் என்றுமே திருந்த மாட்டார்கள். மனிதராக இருப்பதற்கு தகுதியுமற்றவர்கள்.

சபேசன் என்ன பயந்துவிட்டீர்களா? வாருங்கள் தட்டுவோம் தட்டுவோம் திறக்கப்படும் வரை

தட்டுங்கள் ஐயா பரவாயில்லை

முட்டி உடைத்து விடாதீர்கள்.

பின்னர் கதவை பூட்ட முடியாது.

தட்டுங்கள் ஐயா பரவாயில்லை

முட்டி உடைத்து விடாதீர்கள்.

பின்னர் கதவை பூட்ட முடியாது.

இதையெல்லாம் நாங்கள் உணருகின்றோம். ஆனால் அவர்களும் புரிந்து கொள்வார்கள் ஏன் நாம் இப்படி செய்கின்றோம் என்று. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எதற்காக சிலர் இப்படி கண்டபடி எதிர்க்கின்றனர் என்று. ஏன் நீங்களும் இந்த படத்துக்கு விநியோகஸ்தரா?

இதே சிலர் கொஞ்ச காலத்துக்கு முன்னர் ஒருவர் தமிழ் திரைப்படத்தை பார்த்த போராட்டத்தை வளர்த்தோம் என்று பேசியதற்காக இங்கு குதியோ குதியென்று குதித்தனர். ஏன் அப்போது இந்த ரஜனி கமல் கவலைப்பட மாட்டார்களா? எப்படித்தான் அடிக்கடி கருத்தை பலரால் மாற்றிக் கொள்ள முடிகிறதோ?

சண் குழுமத்துக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அவர்கள் சரியான வழிக்கு வருவார்கள்.

இதையெல்லாம் நாங்கள் உணருகின்றோம். ஆனால் அவர்களும் புரிந்து கொள்வார்கள் ஏன் நாம் இப்படி செய்கின்றோம் என்று. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எதற்காக சிலர் இப்படி கண்டபடி எதிர்க்கின்றனர் என்று. ஏன் நீங்களும் இந்த படத்துக்கு விநியோகஸ்தரா?

இதே சிலர் கொஞ்ச காலத்துக்கு முன்னர் ஒருவர் தமிழ் திரைப்படத்தை பார்த்த போராட்டத்தை வளர்த்தோம் என்று பேசியதற்காக இங்கு குதியோ குதியென்று குதித்தனர். ஏன் அப்போது இந்த ரஜனி கமல் கவலைப்பட மாட்டார்களா? எப்படித்தான் அடிக்கடி கருத்தை பலரால் மாற்றிக் கொள்ள முடிகிறதோ?

சண் குழுமத்துக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அவர்கள் சரியான வழிக்கு வருவார்கள்.

நான் நினைச்சன் சிறீலங்காவோடதான் நாங்கள் போராடுறம் எண்டு.

இப்பதான் தெரியுது இந்த கேவலமான சினிமாக்காரரோடு போராடுறம் எண்டு.

உங்கட பாசையில அவுத்து போட்டு ஆடுறவங்களோடு...............

மன்னிக்கவும் நண்பர்களே யாழிலுள்ள படவிநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டத்தினை கைவிடுவோம். இங்கு எவருமே எந்தவித போராட்டமும் நடாத்த வேண்டாம். கருணாநிதியையும் குறை சொல்லவேண்டாம். நாளை சிலவேளை அவர் தமிழீழம் பெற்று தரலாம். அவரை கோபப்படுத்தினால் இதையெல்லாம் விட்டு ஒதுங்கிவிடுவார்.

டென்மார்க்கில் அம்மன் கோவில் இருப்பது போல் நாம் சோனியா அம்மனுக்கு ஐரோப்பிய நாடுகளில் கோவில் கட்டி கும்பிடுவோம் அவர் மனம் குளிர்ந்து தமிழர்களுக்கு உதவி செய்ய வருவார். இப்போது இவர்கள் என்ன செய்தாலும் குறை கூற வேண்டாம். எந்தவித எதிர்ப்பையும் காட்ட வேண்டாம். அவர்களை கோபப்பட வைத்தால் தமிழீழ மக்களை கைவிட்டுவிடுவார்கள்.

சோனியா அம்மனுக்கு அரோகரா

கருணாநிதி கந்தனுக்கு அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நண்பர்களே யாழிலுள்ள படவிநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டத்தினை கைவிடுவோம். இங்கு எவருமே எந்தவித போராட்டமும் நடாத்த வேண்டாம். கருணாநிதியையும் குறை சொல்லவேண்டாம். நாளை சிலவேளை அவர் தமிழீழம் பெற்று தரலாம். அவரை கோபப்படுத்தினால் இதையெல்லாம் விட்டு ஒதுங்கிவிடுவார்.

நீங்க வேற சோழன், இப்ப நாங்கள் இழிச்ச வாயர் மாதிரி "எல்லாரும் வந்து எங்கட காசில சாப்பிட்டுட்டு எங்கட பிளேற்றிலயே ரண்டுக்கிருந்துட்டுப் போங்கோ" எண்டு பெருந்தன்மையா இருக்கிறதால தான் கொஞ்சமாவது தமிழர் உயிரோட இருக்கினம். இல்லாட்டி அரிசியும் பருப்பும் கிடைக்குமா எங்களுக்கு? வாழத் தான் முடியுமா எஙகளால அரிசி பருப்பு இல்லாம? (விளங்குதோ அண்ண?)

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Thalaivan' date='Mar 26 2009, 01:05 PM' post='500465']

இந்தியாவில நடிக - நடிகைகள் சொன்னால்தான் ஓட்டே கிடைக்கும் நிலை.

மன்மோகன் - சோனியா - அத்வானி - கருணாநிதி - ஜெயலலிதா சொன்னா நம்ப மாட்டாங்க.

இன்னமும் MGRரை வைத்து ஓட்டு வாங்கிற நிலை அங்க?

திரையில செய்யிறதை நிஜமாவும் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்திய பாமர மக்களுக்கு எப்பவும் இருக்கு.

திமுகவின் அமோக வெற்றி எம்ஜீஆரை வைத்தே கிடைத்தது.

ஜெ, கமலுக்கு கோடி ரூபாதாரன் கட்சிக்கு பேசுங்க என்று கேட்க

கமல் உடனே அமெரிக்காவுக்கு கம்பி நீட்டினார்.

கடைசியில் சிம்ரன்தான் ஜெக்கு கிடைத்தார்.

இப்படியான கமலே தமிழீழம் சார்பாக தனது கருத்தை பகிரங்கமாக வைத்தது எவரும் எதிர்பார்க்காது.

ரஜனி எப்போ வருவேன் எப்படி வருவேன் என தெரியாத நிலையானாலும்

யாருக்காவது விரலை காட்டிப் போட்டு மலையேறிடுவார்.

ரஜனி ஒரு காலத்தில் இராமயணத்தை வைத்து ஈழப் பிரச்சனை குறித்து பேசியவர்.

ரஜினியின் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றை விடுதலைப் புலிகளைச் சார்ந்தோர்

ஒரு காலத்தில் மண் கவ்வ வைத்து குதித்ததையும் மறந்து

ரஜனி : நடிகர்களின் உண்ணாவிரத மேடையில்

மகிந்தவுக்கு சவால் விட்டார்

"மகிந்த நீயென்ன வீரன்" என்று?

இப்ப கெப்டனும் விரல் காட்ட த் தயார்.

சீமான் போலவே. அமீர் : பாரதிராஜா : செல்வமணி : மணிவண்ணன் இப்படி

பலர் சிறைக்கு செல்லக்கூட தயார்?

இவர்களே உங்கள் செய்கைகளால் இப்போது சற்று சிந்திக்கிறார்களாம்?

நாம உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ என்று....

ஒருவர் மேல் கைவைத்தால் அது தொடர் கதையாக தொடரும் என அவர்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்?

இது அவர்களது ஆதரவை இழக்க நிச்சயம் வழி வகுக்கும். அடித்தாளம் போட்டுட்டீங்க.

தொடர்ந்து முட்டாள்தனம் செய்துள்ளோம் என நிச்சயம் வருந்துவீர்கள்.

அதுகூட புரியோமோ எனக்கு தெரியாது?

அதுவும் டூ லேட்தான்?

எண்ணை திரண்டு வரும் வேளையில் சட்டியை உடைத்தவர்கள் போல.

அல்லது

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல.

சினிமாவை விளம்பரப்படுத்தும் பலமான ஊடகம் இன்று தொலைக்காட்சி.

அது யாருடையது என்பது பிரச்சனையேயில்லை?

அதுவே நமது பிரச்சனையும்?

விளங்கவில்லையா?

நம் பிரச்சனையை அவர்கள் கொண்டு வராததால்தானே நமது கோபம்?

.....................

வெளிநாட்டில் உங்கள் போராட்டம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால்

அவர்கள் தயாரிப்பு செலவைக் குறைத்து

இந்தியாவுக்குள் மட்டும் திரைப்படங்களை வெளியிடும் நிலையை உருவாக்கிக் கொள்வார்கள்.

அவர்களது முக்கிய வருமானம் இந்தியாதான்.

வெளிநாடல்ல..... அது கிடைக்கும் கிடைக்காது.

கலைஞர்களது போராட்டத்தில்

சிறீலங்காவுக்கு எதிராக தமிழக கலைஞர்கள் பேசும்போதே

சிறீலங்காவில் அவர்களது படைப்புகளுக்கு பிரச்சனை வரும் எனத் தெரியும்.

அதேபோல் இது அவர்களுக்கு பெரிய பிரச்சனையுமில்லை.

அதுபோல இதுவும்......

இனி

நமது தொலைக்காட்சிகளும் : வானோலிகளும்

இந்திய திரைப்பட பாடல்களையும் ஒலி - ஒளிபரப்பும் நிலையை தவிர்க்க வேண்டும்.இது சரியென்றால் அதையும் உடன் இவர்கள் அமுலாக்க

உடனடி புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும்.?

நாடகங்கள் : பாடல்கள் : சந்திப்புகள் : ஆட்டம் : கொண்டாட்டம்

எல்லாத்தையும் புறக்கணியுங்கள்.

அவர்களது பாடல்களை இவர்கள் பாடினாலும்

அதையும் புறக்கணியுங்கள்.

அப்போதுதான் நீங்கள் உண்மையான தேசியவாதி.

இல்லையென்றால் .................

அதையும் உடனே செய்வீர்களா?

இதுதான் முக்கியம் என்றால்

உலக அரங்குக்கு கொண்டு போக வேண்டிய பிரச்சனையை

கோடம்பாகத்துக்குள் இறுக்கி நாத்திய ஜாம்பவான்களாக

நம்ம புறக்கணிப்பாளர்களே காரணமாவார்கள்?

உலகத்துக்கே எல்லாம் சொல்லித் தருவோம் என்று முழங்கியவர்கள்

இப்ப வீதி வலம் வருகிறார்கள்?

உலகம் நம் காலடிக்கு வந்தது - கண்டு கொள்ளவில்லை

இப்போது நாம் உலகத்தின் காலடியில் நின்று கதறுகிறோம்

அவர்கள் கண்டு கொள்வதேயில்லை.

நமது தேவை தமிழர்களை மட்டும் காப்பதல்ல?

அதற்கும் மேலே..........

இப்போது உலகம் தமிழர்களை மட்டும் காக்க முயல்கிறது.

அதையே இப்படியான கருத்துகள் சொல்கின்றன.

தனியொருவருடன் உள்ள கோபத்தில்

முழு ஆதரவையும் இழக்கும் நிலையை உருவாக்காதீர்கள்.

அது எமது அழிவுக்கே தூபமிடும்?

எதிரிகளை உருவாக்க உனக்கு காலம் தேவையில்லை - ஆனால்

நண்பர்களை உருவாக்க பொறுமையும் காலமும் உனக்கு மிக மிக அதிகம் தேவை.

இதையும் வாசித்துவிட்டு என்னை கைக்கூலி என்று எழுதுங்கள். <_<

மந்தைகளாக கூட இருக்கலாம் . வாத்துகளாக இருக்கலாகாது.

(குறிப்பு : நான் இந்த ஒரு டீவியையும் பார்ப்பதில்லை. வாழும் நாட்டு தொலைக் காட்சி. செய்திகள் இணையத்தில். தமிழ் திரைப்படம் பார்த்து 5 வருடமாகிறது)

இந்த தகவல்களை இவர் எங்கிருந்து பெற்றார்? இது வெறுமனமே எழுந்தமாத்திரத்தில் எழும் வேதாந்தமல்லவா? நான் என்ன எழுதினாலும் வெட்டும் நிர்வாகிகளே. உங்கள் மீது எனக்கு இன்னமும் மரியாதைதான் உண்டு காரணம் உணர்ச்சி வசபட்டு நான் தவறுகள் விடலாம் சில ஒழுக்கநெறிகளை களவிதிகளை மீறியிருக்கலாம். ஆனால் இது வெறும் பித்தலாட்டமாக தெரியவில்லையா உங்களுக்கு?

என்னையும் கைகூலியாக எழுதுங்கள் என்ற பதத்தை பலகாலமாக இந்த யாழகளத்தில் கைகூலிகள்தான் எழுதிவந்துள்ளார்கள். நக்கிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? இந்த பதத்தை பாவித்தே இவர்கள் யாழ்களத்தில் தமது அங்கத்தவர் பதவியை தக்க வைத்த கொண்டு இங்கே விசங்களை கக்குகின்றார்கள். கக்கினார்கள். பின்பு காணமல் போனார்கள்? என்ன இறந்தா போனார்கள் மீண்டும் வேறு பெர்களில் வருகிறார்கள்.

உங்களுக்கு சொந்த புத்தியே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

நாங்கள் நட்டப்படுவோமாக இருந்தால் மக்களாவது தமிழீழமாவது. போங்கய்யா போங்க.

விட்ட காசை எடுக்க விடமாட்டங்கள் போலை இருக்குதே. இந்தப்பா சபேசன் அடுத்த படங்களிலை கைவையுங்கோ. இதிலை மட்டும் கைவைக்கவேண்டாம். அடுத்த படத்திலிருந்து பகீஸ்கரிப்போம். இந்த படத்தை பகீஸ்கரிச்சால் திரையுலகம் கோவிக்கும். சீமான் கமல் ரஜனி எல்லாம் உங்களுக்காக கதைக்க மாட்டினம்.

என்னதான் சொன்னாலும் இந்த சபேசன் புரிந்து கொள்ள மாட்டன் என்கின்றாரே. அப்பு ராசா இந்த படத்துக்காக 50 ரூபா வட்டிக்கு காசு எடுத்து குடுத்திருக்கின்றன். இதை விட்டுங்கோ கோ..........................

தமிழீழமாவது மண்ணாங்கட்டியாவது. மக்கள் எக்கேடும் கெடட்டும் படத்தை நான் ஓட்டியே தீருவன்.

எப்பிடி கத்தியும் கேட்கமாட்டார்களே.

கொண்ட முதலுக்கே மோசம் . நான் எப்படித்தான் எழுதினாலும் கண்டு பிடித்து விடுகின்றார்களே.

இந்த தகவல்களை இவர் எங்கிருந்து பெற்றார்? இது வெறுமனமே எழுந்தமாத்திரத்தில் எழும் வேதாந்தமல்லவா? நான் என்ன எழுதினாலும் வெட்டும் நிர்வாகிகளே. உங்கள் மீது எனக்கு இன்னமும் மரியாதைதான் உண்டு காரணம் உணர்ச்சி வசபட்டு நான் தவறுகள் விடலாம் சில ஒழுக்கநெறிகளை களவிதிகளை மீறியிருக்கலாம். ஆனால் இது வெறும் பித்தலாட்டமாக தெரியவில்லையா உங்களுக்கு?

என்னையும் கைகூலியாக எழுதுங்கள் என்ற பதத்தை பலகாலமாக இந்த யாழகளத்தில் கைகூலிகள்தான் எழுதிவந்துள்ளார்கள். நக்கிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? இந்த பதத்தை பாவித்தே இவர்கள் யாழ்களத்தில் தமது அங்கத்தவர் பதவியை தக்க வைத்த கொண்டு இங்கே விசங்களை கக்குகின்றார்கள். கக்கினார்கள். பின்பு காணமல் போனார்கள்? என்ன இறந்தா போனார்கள் மீண்டும் வேறு பெர்களில் வருகிறார்கள்.

இதாவது பரவாயில்லை அடித்து அடித்துச் சொல்லி எழுதி வந்ததை நிர்வாகம் தூக்கியும் ஒன்றும் தெரியாதவர் போல் எழுதுகின்றார் இன்னும் இவர் கைக்கூலி இல்லை என்றால் யாருக்காக மாரடிக்கின்றார்

சீமான் போலவே. அமீர் : பாரதிராஜா : செல்வமணி : மணிவண்ணன் இப்படி

பலர் சிறைக்கு செல்லக்கூட தயார்?

இவர்களே உங்கள் செய்கைகளால் இப்போது சற்று சிந்திக்கிறார்களாம்?

நாம உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ என்று....

இவரிடம் சொல்லி அழுதார்கள் என்று எழுதவில்லை போங்கள்

ஒருவர் மேல் கைவைத்தால் அது தொடர் கதையாக தொடரும் என அவர்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்?

இது அவர்களது ஆதரவை இழக்க நிச்சயம் வழி வகுக்கும். அடித்தாளம் போட்டுட்டீங்க.

தொடர்ந்து முட்டாள்தனம் செய்துள்ளோம் என நிச்சயம் வருந்துவீர்கள்.

அதுகூட புரியோமோ எனக்கு தெரியாது?

அதுவும் டூ லேட்தான்?

என்ன ஒரு கரிசனை புல்லரிக்கின்றது

யார் முட்டாள் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்

சன் குழுமத்திற்கு எதிரான புறக்கணிப்பை ஒட்டு மொத்த சினிமாக் கெதிரான புறக்கணிப்பாக மாற்ற மிகவும் படாத படு படுகின்றது ஒரு தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை இட்டு சபேசன் வெற்றியடைந்து விட்டார் வாழ்த்துக்கள் இப்போது ஈழதமிழர்கள் திரைப்படம் பார்க்க செல்வது குறைவு சில திரையரங்குகளில் இந்திய தமிழர்கள்தான் அதிகம் இருக்க கண்டேன் இந்த தலைப்பால் பல ஈழதமிழர்களும் செல்ல போகிறார்கள் போல் உள்ளது நல்லதொரு வியாபார உத்தி :(:(

தமிழ் வாயிஸ் எல்லாம் விட்டதை எடுப்பதற்குத்தான். எஜமான விசுவாசம்.

சிலவேளை மா.க . வோ என்ன இழவோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.