Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்படவில்லை

Featured Replies

பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

http://www.orunews.com/?p=3341#more-3341

கனடா தொடங்கி அவுஸ்ரேலியா ஈறாக இன்று பிரித்தானியாவில் .......... இது புலம்பெயர் எம்மவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியே!!!!

............ அடிமேல் அடி அடித்தால், .......!!! ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் நாம் வெற்றியடைய வேண்டும் அதற்கு முயற்சி ரொம்ப அவசியம்

உண்மையில் இது இனம் புரியாத வெற்றி.

அது போக நாம் களைப்படையாது இனும் இது போன்ற வெற்றிச் செய்திகளை புலம் பெயர் நாட்டில் செய்ய வேண்டும்

குறிப்பாக பெல்ஜியத்தில் லண்டன், பரிஸ் ஜேர்மன் நெதர்லாந்த் உறவுகள் செய்த சாதனைகளள தொடர்ந்து செய்ய வேண்டும்.

இன்னும் இன்னும் வெற்றி பெற வேண்டும் அதுக்கு நாம்தான் ஒன்றாக இணைந்து உழைக்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கேட்க மிகவும் மகிழ்சியாக இருக்கிறது!!!

இது வெறும் ஆரம்பமே....விடுதலைபுலிகள் தடையை நீக்க பண்ணுவது...தமிழீழத்தை அங்கீகரிக்கப்பண்ணுவது என்று எமக்கு என்னும் பல கடமைகள் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

நாமெல்லாம் மகிழ்ச்சி அடையவேண்டும் ஆனால் அதற்குமுன் தெரியவேண்டியது:

தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் போடப்பட்டிருந்த தடையை இப்போது நீக்கியுள்ளார்களா? அல்லது ஒருபோதும் தடையே போடவில்லையா?

யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் திலீபன் கூறிய மக்கள் போராட்டம் ஆரம்பித்து இருக்கிறது.நல்ல செய்தி. இன்னும் தொடர்வோம்.

இது வெறும் ஆரம்பமே....விடுதலைபுலிகள் தடையை நீக்க பண்ணுவது...தமிழீழத்தை அங்கீகரிக்கப்பண்ணுவது என்று எமக்கு என்னும் பல கடமைகள் உண்டு

மேற்கு நாடுகள் இலங்கையின் சுய ரூபத்தை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளன..

அத்துடன் புலம் பெயர்மக்களின் பலவிதமான போரட்டங்கள் மேலும் வலுவூட்டுகின்றன..

எதாவது ஒரு நாடு முதலில் புலிகளின் தடையை நீக்கிவிட்டால் போதும் அதுவே மற்றைய நாடுகளும் தொடரவழி ஏற்படுத்தும்.. அதற்கும் புலம் பெயர் மக்களின் பங்களிப்புகள் மிக அவசியம்....

தாயகத்திலும் மண்முழுமையாக கைப்பற்றாது காக்கப்படல் சமாந்திரமாக இருக்க வேண்டும்..

வரும் நாட்கள் மிக மிக கடினமான முக்கியமான காலங்களாகவும் தமிழர்தரப்பில் இராஜதந்திர காய் நகர்த்தல்கள் செய்து எமக்கு சாதகமாக மாற்ற வேண்டிய காலம்..

தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் எமக்கு சாதகமாக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் கொடி வானளாவப் பறகடகட்டும்.

கனடா தொடங்கி அவுஸ்ரேலியா ஈறாக இன்று பிரித்தானியாவில் .......... இது புலம்பெயர் எம்மவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியே!!!!

............ அடிமேல் அடி அடித்தால், .......!!! ..........

***

புலிக்கொடி தடையே செய்ய படவில்லை எண்று சொன்னால்... அதை கேட்டு போட்டு போராட்டதுக்கு வெற்றி எண்டு முழங்குகிறீயள்...???

அடிமேலை அடி எல்லாம் அடிக்கிறம் எண்டுறீயள்..?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தடையே செய்ய படவில்லை எண்று சொன்னால்... அதை கேட்டு போட்டு போராட்டதுக்கு வெற்றி எண்டு முழங்குகிறீயள்...???

அடிமேலை அடி எல்லாம் அடிக்கிறம் எண்டுறீயள்..?

***

தாங்களாகவே கற்பனை பண்ணிக்கிட்டு.. கொடிக்கு தடை என்று சொல்லி சனங்களை தடுத்துப் போட்டு இப்ப ஆகா பொலிஸ்காரன் சொல்லிட்டான் தடையில்லையாம் என்றுதுகள்.

ஆக இவ்வளவு நாளும் இல்லாத தடையை இவை தாங்களே தங்களுக்குப் போட்டு வைச்சிட்டு.. இப்ப... போராடி தடை நீக்கிட்டம் என்றாப் போல எல்லோ இருக்குது கதை..! :o:rolleyes::unsure:

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் வெற்றி தமிழீழ விடுதலையின் பின்னரே!

***

தாங்களாகவே கற்பனை பண்ணிக்கிட்டு.. கொடிக்கு தடை என்று சொல்லி சனங்களை தடுத்துப் போட்டு இப்ப ஆகா பொலிஸ்காரன் சொல்லிட்டான் தடையில்லையாம் என்றுதுகள்.

ஆக இவ்வளவு நாளும் இல்லாத தடையை இவை தாங்களே தங்களுக்குப் போட்டு வைச்சிட்டு.. இப்ப... போராடி தடை நீக்கிட்டம் என்றாப் போல எல்லோ இருக்குது கதை..! :o:rolleyes::unsure:

இது லண்டனிலை மட்டும் இல்லை எல்லா நாடுகளிலையும் நடந்து இருக்கிறது... அதுதான் இன்னும் கேவலமாக இருக்கு...

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது புலம் பெயர்ந்தவர்களின் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டங்கள் மேலும் முனைப்புப் பெற்று எமது தடையை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடாவது நீக்கும் படி செய்யவேண்டும். மற்ற நாடுகள் தானாகவே நீக்க முன்வருவார்கள். கொலைவெறி சிங்களவனின் பொய்பிரச்சாரங்கள் வலுவிழந்து கொண்டு இருக்கும் இச்சந்தர்பததை சாதகமாக்கி முனைப்புடன் எமது அறவழி போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். நிச்சயம் வெற்றி நமதாகும்.

ஜானா

புலிக்கொடி தடை செய்ய படாமல் எப்படி போராடி தடையை நீக்கினார்களோ...???

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடி பிடிக்க தடையில்லை என்றால் ஏன் இவ்வளவு நாளும் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திலும் பெரிதாக கொடி பிடிக்கவில்லை? லண்டனில் பாரளுமன்றத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட கொஞ்சப் பேர் தானே கொடி பிடித்து இருந்தார்கள்.

சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்து திரும்பும் போது ஒரு அம்மா தலைவரின்ட படத்தை அங்கேயே விட்டு விட்டு வந்தா.நான் கேட்டேன் ஏன் விட்டுட்டு வாறீங்கள் என அப்போது அவ சொன்னா இங்க[லண்டனில்] வைத்திருந்தால் காவல்த்துறைக்கு யாரவது அறிவித்தால் அவர்கள் வந்து கைது செய்வார்களாம் இது உண்மையா?

இது லண்டனிலை மட்டும் இல்லை எல்லா நாடுகளிலையும் நடந்து இருக்கிறது... அதுதான் இன்னும் கேவலமாக இருக்கு...

crying_baby_2.gif

Edited by Nellaiyan

மேற்கத்தேய தேசங்களில் தடை வந்தவுடன் .......... எல்லாம், அவனொருவன் கரீபியன் தீவுகளில் தன்னலமற்று தேசியக்கொடியுடன் இறங்கு மட்டும் ...... இன்று வரை யாரும் தேசியக்கொடி பற்றி மூச்சு விடவில்லை!! அப்போதெல்லாம் எமக்கு இது தடை செய்யப்பட்டதோ? என்று கூட விசாரிக்க பயம்!!!!!

தடை செய்ததிலிருந்து இன்று தான் மேற்கத்தேயத்தில் தேசியக்கொடி பறக்கிறது!!!!!! நாட்களல்ல...... மாதங்களல்ல.... வருடங்களாக மறந்திருந்தோம்!!! தடை செய்ததோ, செய்யவில்லையோ அல்ல பயத்தில்!!!!!!! ஆனால் நேற்று கனடாவில் இல்லை என்றவுடன், இன்று லண்டனிலும் பகிரங்கமாக கேள்வியாக கேட்கத் தலைப்பட்டோம்!!

இத்தனை வருடங்கள் தேசியக்கொடி இல்லாமல் போராட்டங்கள் லண்டன், அவுஸ்ரேலியா, கனடா ஈறாக நடந்தபோது, எம் அறிவாளிகள் மன்னிக்கவும் யாழ்கள அறிவாளிகள் பகிரங்கமாக ....... ம்ம்ம்ம்ம்ம்.. பய்யம்ம்ம்ம்ம்ம்!!

  • தொடங்கியவர்

அதிகப்பிரசங்கிகளுக்கு மட்டும் இது:

இதை ஏன் செய்தியாக்கினார்கள்? கனடாவில் பொலிஸார் சொன்னதை ஏன் எல்லா ஊடகங்களும் செய்தியாக்கினார்கள்?

விடை இலகு!! தடைகளுக்கு பின் பல எம்மவர்களின் வீடுகளில் படங்களையும், பொருடகளையும் ஒளித்தும், எரித்ததும் புதிதல்ல. வெட்கம்தான். ஆனால் உண்மையாக மிகப் பெரும் ஆதரவாளர்கள் வீடுகளிலேயே நடைபெற்றது.

இன்றும் ஊர்வலங்கள், ஆதரவாக கதைப்பதற்கு கூட எம்மில் பலர் பயப்படுகிறார்கள். தடை என்பது கொடிக்கு இல்லை என்று தெரியும். அப்போ, ஏன் அதை பகிரங்கமாக நாம் தாங்கவில்லை. பயம், பயம், பயம். தடை இல்லை என்று கூறினாலும் தடைதான் என்று வாதிடுபவர்கள் எம்மில் பலர். அவர்களுக்கான ஒரு செய்தியாக இதை ஏன் எடுக்கக்கூடாது?

மேலதிகமாக தேவையில்லை என நினைக்கிறேன்.

Edited by Bond007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் இளையோர்கள் மட்டும் துணிந்திருக்காவிட்டால் இன்றுவரை எம் சனம் புலிக்கொடிக்கு தடையென்றே இருந்திருக்கும்.

உணமையில் புலிகளை தடை செய்தபோது புலிக்கொடியைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மாவீரர் தினத்தில் அங்கு வந்த பொலிஸிடம் இதை விவாதிக்க எவருக்கும் அறிவும் இருக்கவில்லை. துணிவும் இருக்கவில்லை. எதையும் தட்டிக் கேட்டால்த்தான் சரியான நியாயம் பிறக்கும். கனடாவில் உலகத்தமிழர் அமைப்பு தடைசெய்யப்பட்டது. எடுத்தார்களா சட்ட நடவடிக்கை? கனேடிய அரசு, பொலிஸ், உளவுத்துறை (CSIS, RCMP) அமைப்புக்களுக்கு பிடிக்காதென்று தமக்குள்ளே ஒரு கற்பனையை செய்து, சில வியாக்கியானம் பேசுபவர்கள் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகத்தமிழர் அமைப்பு கனடாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. அதற்கும் பயங்கரவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? வழக்குத்தாக்கல் செய்து நாம் வெல்கிறோமோ தோற்கிறோமோ பிரச்சனையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல்விட்டது, அந்த சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று தானே பொருள்படுகின்றது?

உண்மையில் விடுதலைப்புலிகளை தடை செய்தபோதே தெருவில் இறங்கியிருந்தால், உலகத்தமிழர் அமைப்பின் தடையை நிறுத்தியிருக்கலாம்.

சரி இனியாவது இந்த அவனுக்குப் பிடிக்காது இவனுக்குப் பிடிக்காது என்று எம் பயத்திற்கு பல காரணங்கள் சொல்லாமல் துணிந்து இறங்குவோம்.

என்றோ நாம் செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுக்கும் இளையோர்களுக்கு என் நன்றி.

லண்டனில் நடந்த பேரணிக்கு புலி கொடியையும், புலி சின்னங்களையும் யாரும் கொண்டு வராமல் இல்லை... மஞ்சள் உடுப்பு போட்ட அண்ணை மாரும் அக்கா மாரும் தன்மையாக தம்பி புலி கொடியை இந்த நிகழ்விலை பிடிக்காதேங்கோ எண்டு கேட்டு கொண்டது சில நிலை இல்லாமல் மாறி கதைக்கிற அண்ணை மாருக்கு தெரிந்து இருக்க இல்லை.. காரணம் புலி சின்னங்களையோ இல்லை புலி கொடியையோ கொண்டு வந்து இருக்க வில்லை..

SKY தொலைக்காட்ச்சி பேட்டி எடுக்கும் போது பின்னாலை இருந்து புலி கொடியை உயர்த்தி அசைப்பது தெரிகிறதா... (அசைப்பது நான் இல்லை )

dsc00038w.jpg

இந்த கொடியை பிடித்தவர்கள் கைது செய்ய பட வில்லை...

கனடா தொடங்கி அவுஸ்ரேலியா ஈறாக இன்று பிரித்தானியாவில் .......... [b]இது புலம்பெயர் எம்மவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியே!!!!

............ அடிமேல் அடி அடித்தால், .......!!! ..........

தடை செய்ததிலிருந்து இன்று தான் மேற்கத்தேயத்தில் தேசியக்கொடி பறக்கிறது!!!!!! நாட்களல்ல...... மாதங்களல்ல.... வருடங்களாக மறந்திருந்தோம்!!! தடை செய்ததோ, செய்யவில்லையோ அல்ல பயத்தில்!!!!!!! ஆனால் நேற்று கனடாவில் இல்லை என்றவுடன், இன்று லண்டனிலும் பகிரங்கமாக கேள்வியாக கேட்கத் தலைப்பட்டோம்!!

இத்தனை வருடங்கள் தேசியக்கொடி இல்லாமல் போராட்டங்கள் லண்டன், அவுஸ்ரேலியா, கனடா ஈறாக நடந்தபோது, எம் அறிவாளிகள் மன்னிக்கவும் யாழ்கள அறிவாளிகள் பகிரங்கமாக ....... ம்ம்ம்ம்ம்ம்.. பய்யம்ம்ம்ம்ம்ம்!!

ஏனுங்கண்ணா போராடி தடை நீக்கினீங்கள் எண்டியள் பிறவு யாருமே கொண்டு போக இல்லை எண்டீங்கள்...

கடைசியா என்ன முடிவுதான் எடுத்தீயள்... போராடி புலி கொடி மீதான தடை நீக்க பட்டதோ இல்லை... இல்ல மக்கள் அறி வில்லாமல் இருந்தவையோ...??

Edited by தயா

முடியல்.......... அதே தலவின் பாசையில் ..........

ஒரு கொடிக்கும் நூற்றுக்கணக்கான கொடிகளும் எம்க்கு வித்தியாசம் தெரியவில்லை????????? இப்போராட்டம் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் நடைபெற்றதில் ..... பல வருடங்களுக்கு பிறகு ..... "புலிக்கொடி" ...... லண்டனில்!!!!

மஞ்சள் உடுப்பு போட்ட அண்ணை மாரும் அக்கா மாரும் தன்மையாக தம்பி புலி கொடியை இந்த நிகழ்விலை பிடிக்காதேங்கோ எண்டு கேட்டு கொண்டது

இதை ஏன் கூறினார்கள்?????????? உது விளங்கினால் போதும்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.