Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களில் புலிக்கொடி தேவையா?

Featured Replies

இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது இது நமது போராட்டத்தில் நிறைய பின்னடைவை ஏற்படுத்துகின்றது,உண்மையில் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இதுவே உலக நாடுகளில் மட்டுமன்றி, சர்வதேச அமைப்புகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் இவ்வாறு சொல்வதால் துரோகி முத்திரை குத்தப்படலாம் ,ஆனால் இது முக்கிய பிரச்சனை ஆகவே ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

உதாரணத்திற்கு......

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி , முதுகில் மட்டை கட்டிக்கொண்டு இருக்கவும் .

இப்போ நல்லாய் வாங்கிக் கட்டப்போகின்றீர்கள் . :(

  • தொடங்கியவர்

தராக்கி , முதுகில் மட்டை கட்டிக்கொண்டு இருக்கவும் .

இப்போ நல்லாய் வாங்கிக் கட்டப்போகின்றீர்கள் . :(

தமிழ்சிறி இது ஆரோக்கியமான விவாதம் அவர்கள் அவ்ர்களது நியாயங்களை சொல்லவும் சரியாக இருந்தால் நல்லம் தானே.

அப்ப என்ன கொடி பிடிக்கலாம்... சிறீ லங்கா தேசியக்கொடியை பிடிக்கலாமா? இல்லாட்டிக்கு எங்கட கோவணத்தை கழற்றிபுடிக்கலாமா? தமிழர்களின் தேசியத்தின் அடையாளம் தேசியக்கொடி. இதன்மூலம் தான் நாங்கள் தமிழர் என்று அடையாளப்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இது ஆரோக்கியமான விவாதம் அவர்கள் அவ்ர்களது நியாயங்களை சொல்லவும் சரியாக இருந்தால் நல்லம் தானே.

ஈழத்தமிழரின் அடையாளமே புலிக்கொடி தானே ...... தராக்கி .

அதுகும் இல்லாவிட்டால் கோமணக் கொடியை தான் , காட்ட வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன கொடி பிடிக்கலாம்... சிறீ லங்கா தேசியக்கொடியை பிடிக்கலாமா? இல்லாட்டிக்கு எங்கட கோவணத்தை கழற்றிபுடிக்கலாமா? தமிழர்களின் தேசியத்தின் அடையாளம் தேசியக்கொடி. இதன்மூலம் தான் நாங்கள் தமிழர் என்று அடையாளப்படுத்த முடியும்.

:mellow::lol:

ஒரு சமூகம் ஆரோக்கியமாக இருக்க அதன் செயற்பாடுகளுக்கான திறந்த விவாதம் அவசியம். ஆகவே தராக்கியின் கேள்வி நியாயமானது மட்டும் அன்றி காலத்தேவையானதும் கூட என்று கருதுகின்றேன்

ஆரம்பத்தில், நான் புலிக் கொடியையும் தேசியத் தலைவரின் படத்தினையும் காவிக்கொண்டு திரிவது சரியான செயல் அல்ல என்றே கருதி எழுதியும் வந்தேன். பல கவயீர்ப்பு நிகழ்வுகள் இவையின்றியே நடந்தன. ஆனால் சர்வதேசம் அதனை தமக்கு சாதகாமாக்கி புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து வெளியே எடுத்து கொலைஞர்களிடம் ஒப்படைத்த பின் புலிகளை அழிக்க முனையும் செயலை ஆரம்பிக்க தொடங்கியது... அப்போது தான் என் கருத்தில் இருந்த தவறு புலப்பட்டது

இதனை அண்மையில் விகடனில் வந்த ஈழப் பெண்மணி ஒருவரின் கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு எழுதியிருந்தார்.

புலம் பெயர் நாடுகளில், பயங்கரவாதம் என்று தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிக் கதைக்காமல், உங்கள் கவன ஈர்ப்பை நடத்துங்கள்' என்றார்கள். நாங்களும் செவி சாய்த்தோம். எங்கள் போராட்ட உணர்வை, தமிழீழ உணர்வை ஒதுக்கிவைத்து, மக்கள் அழிவதை மட்டும் எடுத்துக் காட்டினோம். அவர்களோ, மக்களை வெளியேற்றி ராணுவத்திடம் கொடுத்துவிட்டு, இனி புலிகளை அழியுங்கள் என்று சொல்ல ஆசைப்பட்டார்கள். நாங்கள் விழித்துக்கொண்டோம். இப்போது 'புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள்' என்ற போராட்டத்தை அங்கீகரி' என்றே போராடுகிறோம். உன் எழுத்துக்களும் இதையே செய்யட்டும், சகோதரா! அவர்களின்றி நாங்கள் இல்லை. நாங்கள் இன்றி அவர்கள் இல்லை. இதை உலகுக்கு உணர்த்து!

முழுக் கடிதத்தின் இணைப்பு: Link

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் அடையாளமே புலிக்கொடி தானே ...... தராக்கி .

அதுகும் இல்லாவிட்டால் கோமணக் கொடியை தான் , காட்ட வேண்டும் .

ஐயோ நீங்களும்மா சிறி அண்ணா :lol::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கையில் ஏந்துவோம் புலிக்கொடி! அதுவே எமது வெற்றிக்கொடி!!

akeepan - பங்குனி 23, 2009 திங்கட் கிழமை - 06:27 AM

புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர் தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது. அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படும். குறிப்பாக இலங்கை அரசு பாய்ந்தடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பதென்பது அதன் விளைவுகள் மிக அழுத்தமாக இருக்கும் என்பதனையே கோடிட்டுக் காட்டுகிறது. இத்தாக்கங்களின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் அதன் பலாபலன்கள்,விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது பற்றி பார்ப்போமானால்... எழுச்சிகள், பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள் தமிழீழ தேசியக்கொடியை தாங்கி வருவதிலிருந்து சர்வதேசத்திற்கு அழுத்தம் திருத்தமாக சில விடயங்களை சொல்லவருகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரும் வேறுவேறில்லை; விடுதலைப்புலிகளே தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகள், புலிகளே தமிழரது காவலர்கள்; தமிழர்கள் அனைவரும் தமிழீழத் தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள், தமிழீழத் தீர்வே தமிழரின் நிரந்தரத் தீர்வாக அமையும்; என்பவற்றை ஆணித்தரமாக உலகத்திற்குச் சொல்லிவைக்க முற்பட்டிருக்கிறார்கள்... தமிழீழ தேசியக்கொடியின் கீழ் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில், சர்வதேசத்தின் பார்வை இலங்கையை நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில், சர்வதேசம் தமிழர் விடயத்தில் ஏதாவது தீர்வினை முன்வைக்க முயற்சிக்கும்.அத்தீர்வானது தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையுமா? என்பது சந்தேகமே. சர்வதேசமானது இலங்கையரசையும் அனுசரித்தே நடக்க முனையும். அப்படிப்பட்ட தீர்வானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையாது. தமிழ்மக்களின் முப்பது வருடகாலப் போராட்டத்திற்கும் அவர்களின் தியாகங்களுக்கும் ஈடாக அது இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் மரணங்களுக்கும் , பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களுக்கும், இந்த நிமிடம்வரை வன்னி மண்ணில் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கு

இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது

ம்....படங்களை பார்க்கவே தெரிகின்றது..உண்மைதான்

இந்த நேரத்தில் மக்களின் அவலங்களையும் வெளிகொண்டுவரும்போதுதான் போராட்டத்தின் வலுவை அதிகரிக்கரிக்கும்.

தேசியக்கொடியை பின்னனியில் பாவிக்கலாம்.

P.S:தேசியக்கொடியை பாவிக்க வேண்டாம என்று சொல்லவில்லை :mellow:

தேசியக்கொடியை கொண்டுபோகாவிட்டால்... கனடாவில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் குறிப்பிட்ட பேரணியை புலிகளுக்கு எதிரான பேரணியாக காரணம் காட்டி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சிறீ லங்கா பிரச்சாரத்தை முடிக்கி விடுவதாக பலராலும் சொல்லப்படுகின்றது. பிறகு அவையள் சொல்லுவீனம் ஆயுதங்களை நிபந்தனை இல்லாமல் போட்டுட்டு கையை உயர்த்திக்கொண்டு கோத்தபாயாவுக்கு முன்னால் முழங்காலில போய் நில்லுங்கோ என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நீங்களும்மா சிறி அண்ணா :D:mellow:

குட்டிப்பையா ,

கலைஞனும் , நானும் ஒரு நிமிட இடைவெளியில் , கிட்டத்தட்ட ஒரே கருத்தை பதிந்தது அதிசயமாகத்தான் உள்ளது பையா . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா ,

கலைஞனும் , நானும் ஒரு நிமிட இடைவெளியில் , கிட்டத்தட்ட ஒரே கருத்தை பதிந்தது அதிசயமாகத்தான் உள்ளது பையா . :D

ஹிஹி ஒக்கே

அது சரி சிறி அண்ணா தாத்தாமார் கோமனத்தை அவுட்டு காட்டலாம்..என்ன மாரி சின்ன பெடியங்கள் என்னத்தை காட்ட முடியும் :mellow::lol: ...

என்ன தராக்கி இது போதுமா இன்ன மும் வேணுமா?

நாம் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்போது எமது தேசியத்தையும் வெளிப்படுத்த வேண்டும். தமிழனுக்கு என்று ஒரு கொடி இருக்கின்றது .அவன் ஒரு தனி இனம் என்பதையும் இவர்களுக்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. புலிகள் யார்? அவர்களை தள்ளி வைக்க முடியுமா? தமிழர்கள் புலிகள் புலிகள்தாள் தமிழர் எனும்போது அந்த கொடியை தாங்கி செல்வதில் எந்தவித பிரச்சனையுமில்லை.

இந்த கொடியினால்தான் இலங்கை அரசாங்கம் சிக்கலில் உள்ளது. புலிகளை தடைசெய்த நாடுகள் புலிக்கொடி கொண்டு செல்வதை தடைசெய்யாதமையால் அவர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். இலங்கை அரசு இனப்படுகொலை செய்கின்றது என்ற விடயம் உலக அரங்கில் தெளிவாக விளங்கப்பட்டுள்ள நேரத்தில் புலிக்கொடியை தடைசெய்ய இலங்கை அரசு அதிகம் அழுத்தம் கொடுக்க முடியாமலுள்ளது

இந்த நேரத்தில் இலங்கை அரசினால் அதிக அழுத்தம் கொடுக்கப்படுமாக இருந்தால் சிலவேளை விளைவுகள் நேர்மாறாகவும் மாறலாம். இலங்கை அரசு பொதுமக்களை தாக்குகின்றது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றபோது இலங்கையினால் கேட்டுக்கொள்ள முடியுமா புலிக்கொடியை தடைசெய் என்று? சீனாவுடனான இலங்கையின் காதல் அதிகரிக்க அமெரிக்கா இலங்கை என்ற விபச்சாரியை கைவிடும் சந்தர்ப்பமும் வரலாம். அப்படி ஒன்று நடந்தால் நல்லது

அதுசரி அண்ணா அந்தந்த நாடுகளே புலிக்கொடி கொண்டு போவதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இலங்கைதான் குய்யோ மாயோ

என்று கத்துகினம். இதற்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும்படி வெளிநாட்டிலுள்ள தமது தூதுவரலாயங்களை பணித்துள்ளதாக கேள்விப்பட்டனான். நீங்களும் அதற்காக பிரச்சாரத்தில் இறங்கிவிட்டீர்களோ? என்ன மெதுவாக ஆழம் பார்த்து ஆழம் இல்லையென்றால் காலைவிடும் எண்ணமோ? பத்திரம் தலை. நீங்களும் இலங்கை தூதுவராலய பணியாளரோ? ( :mellow::lol::D:o )

கெல்மெட்டிலை இங்கு பலர் திரிவதாக சொல்கின்றார்கள். தூதுவராலய காசுகள் நல்லா வேலை செய்யுது

Edited by chozhan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

காலத்தின் தேவைக்கேற்ப எம் போராட்டங்களை மாற்ற வேண்டும் . பிருத்தானியாவில்

மக்கள் புலிக்கொடி இல்லாது இலட்ச்சக்கணக்கில் ஒன்று கூடியதை பிபிசி எவ்வாறு திரிபுபடுத்தி எழுதியது என்பதை யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் அவலங்கள் முழுமையாக உலகிற்க்கு உணர்த்தப்பட்டாகி விட்டதகவே நான் கருதுகின்றேன்.இப்போது எம் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வெளிக்கொணர்வதே எம் முக்கிய பணி அப்போராட்டமானது அதன் எல்லையை தொடச் சொற்ப்ப காலங்களே உள்ள நிலையில் அதற்க்கான அங்கீகாரமே உலகிடம் இருந்து நாம் கேட்க்க வேண்டும். அதுவே மக்களின் அவலங்களையும் இல்லாதொழிக்கும். எனவே தேசியக்கொடியை ஏந்தி செல்வதே இப்போதைய காலகட்டத்தில் முக்கியமானதாகும் என்பதே என் கருத்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை பிடிக்கின்ற புலிக் கொடி காணது.ஆர்ப்பாட்டத்திற்கு போற அனைவரும் புலிக் கொடி பிடிக்க வேண்டும்.

புலிக்கொடியை கொண்டு போவதால் பிரச்சனை என்று யார் சொன்னார்கள்..?? நானறிய எந்த நாடுகளும் இந்த விடயத்தில் இதுவரை எதிர்மாறான கருத்துக்களை சொல்லவில்லை..சொல்லப்போவதும் இல்லை.. நாங்கள் கொண்டு செல்வது தமிழீழ தேசிய கொடி.. கேட்பது..தமிழீழம்.. கொடியில்லாத ஒரு நாட்டை யார் தான் அங்கீகரிப்பார்கள்.. ??

கருத்து சொல்வதற்கு யாவருக்கும் உரிமை உள்ளது... தராக்கி அவர்களே உங்களுடைய இந்த கேள்விக்கு கிடைக்கும் பதில்களே இந்த தேரியக்கொடி விடயத்தை மேலும் மேலும் வலுவூட்டும்..இப்படியான ஒரு களத்தை திறந்துவைத்தமைக்கு நன்றிகள்...

மக்களின் அவலங்கள் முழுமையாக உலகிற்க்கு உணர்த்தப்பட்டாகி விட்டதகவே நான் கருதுகின்றேன்.

இன்னமும் எமது மக்கள் கிணத்துத்தவளையாய்தான் இருக்கிறார்கள் என்டதுக்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது இந்த வசனம்.

தழிழ் ஊடகங்கள்தான் மக்களின் அவலங்களை போட்டுக்காட்டியபடியுள்ளன ஆனால் மேற்கத்தைய ஊடகங்களில மருந்தளவுக்கும் இல்லை..

காஸாவின்ட அவலங்களை வெளியிடுறதுக்கு முன்டியடிக்கும் ஊடகங்கள் ஏன் எமது மக்களின்டைய வெளியிட பின்னிக்கின்றன?

சரியான முறையில செய்திகள் போய்சேருதில்லை..அதை பற்றி ஆராய்ந்து ஏதாவது உருப்படியா செய்யிறதை விட்டுட்டு நாங்கள் தமிழில போட்டு தமிழை வடிவு பாத்துக்கொண்டிருந்தால் எமது செய்திகள் மேற்குலகின் காதுக்கும போய்சேராது, மாறாக சிங்களவனின் தணிக்கையும் புளுகும் தான் போய்சேரும்.

ஹிஹி ஒக்கே

அது சரி சிறி அண்ணா தாத்தாமார் கோமனத்தை அவுட்டு காட்டலாம்..என்ன மாரி சின்ன பெடியங்கள் என்னத்தை காட்ட முடியும் :mellow::lol: ...

அதுவும் இல்லையே? :D

என்னைப் பொறுத்த வரை பிடிக்கின்ற புலிக் கொடி காணது.ஆர்ப்பாட்டத்திற்கு போற அனைவரும் புலிக் கொடி பிடிக்க வேண்டும்.

இருக்கிறதையாவது பிடிக்க வேணும்.

இல்லையென்றால் அதையும் புடுங்கிக் கொண்டு போயிடுவினம்.

50க்கு 50

ஒருவர் அவலம் மற்றவர் புலிக் கொடி.

கவனயீர்ப்பு போராட்டங்கள் திசை மாறி போவதை உணர்ந்துதான் இவ்வாறு இங்கே எழுதினான்

கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் கவனத்திற்கு.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

Edited by hari

எம்மினம் சிங்களதின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, தேசிய விடுதலையை முன்னிறுத்தியபோதுதான், எதிரி எம்மீதான இன அழிப்பை உக்கிரமாக்கினான். சுதந்திரமாக உயிர் வாழ்வதென்பது ஒவ்வொரு மனிதனுடையதுமான அடிப்படை உரிமை. அந்த உரிமையை யாரிடம் இருந்தும் இரந்துபெறவேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களின் அந்த உரிமையை, எமது தன்மானத்துடன் பேரம்பேசுவதுதான் தவறு. அவ்வாறு பேரம் பேச முற்படுபவர்கள்தான் தமிழ்த் தேசியப் போராட்டத்தை எம் அடையாளமான தேசியக் கொடியையும் கண்டு மிரள்கிறார்கள். இதைப் பார்த்துப் பயந்து, தேசியம் வேண்டாம், உயிர் தந்தாற் போதும் என்பது போல புலம்பெயர் உறவுகள் நடந்துகொண்டால், எதிரியும் இந்த உலகமும் சந்தர்ப்பதைத் தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும். எமது தாயகம், தேசியம், தன்னாட்சி உறுதிப்படுத்தப்படுவதே ஈழத் தமிழன் மீதான சிறீ லங்காவின் இன அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

முதலாவதாக புலிக்கொடி புலிக்கொடி என்று சொல்வதை அடியோடு நிறுத்துங்கள்.

அது தமிழர்களின் கொடி பாரெங்கும்

பறந்தது பறக்குது பறக்கும்

அது எங்கள் தேசியக்கொடி! அதனை ஐக்கிய நாடுகள் சபையில் பறக்க வைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்பிடி ஒரு குளப்பமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aa2.jpgaa1.jpgaa3.jpgaa4.jpgaa5.jpgaa6.jpgaa7.jpg

இனிவரும் காலங்களில் இப்படியான பதாகைகளையும் தூக்கிச்செல்ல வேண்டும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா ,

உங்கள் படங்கள் அழகு .

பார்த்து ரசித்தேன் செண்பகத்தையும் .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொடி என்பது எமது அடையாளம்.இங்குள்ளவர்களுக்கு நாம் சிறிலங்காபிரஜைகள் இல்லை தனியான தேசிய இனம் என்பதைப் புரிய வைக்கும்.தமிழர் வேறு புலிகள்வேறு அல்ல என்பதைப் புரிய வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.