Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசியவர்த்தக கொண்டாட்ட நிகழ்வை கவனயீர்ப்பு / எழுச்சி நிகழ்வாக கனடாவில் இம்முறை செய்யலாமா?

Featured Replies

வணக்கம்,

நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் பலரும் அறிந்த கொண்டாட்டம் நிகழ்வை இம்முறையும் செய்வதா அல்லது இல்லையா என்று நம்மவர்களின் கருத்துக்களை கேட்கும் ஓர் நேரடி நிகழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கருத்துக்கணிப்பும் நடாத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எவரும் எப்படியான தமது கருத்துக்களையும் இவ்விடயத்தில் ஒளிவு மறைவு இன்றி கூறலாம் என்றும், சொல்லப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு - அதாவது வழமையான இந்த கொண்டாட்டத்தை இம்முறை ஓர் எழுச்சி நிகழ்வாக நடாத்துவதா அல்லது இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டம் சம்மந்தமாக கடந்த பல வாரங்களுக்கு முன்னரே பலர் மத்தியில் சலசலப்பு தோன்றிவிட்டது. தற்போதைய நிலையில் இதுபற்றி சிந்திக்கவே கூடாது என்று பலராலும் சொல்லப்பட்டது. இந்தவகையில் யாழ் இணையம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நன்றாகப்படுகின்றது. வரும் மே மாதம் 16, 17ம் திகதிகளில் நடைபெற உள்ள இந்த எழுச்சி நிகழ்வாக நடைபெறக்கூடிய குறிப்பிட்ட நிகழ்வு சம்மந்தமான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முதலில் நேற்று பலர் கூறிய கருத்துக்களில் சில கருத்துக்களின் சாரம்சம்:

  • இன்றைய காலகட்டத்தில் இப்படியான ஒரு விசயத்தை நினைத்ததே தவறு.
  • வேற்று இனமக்கள் பங்குபற்றுவதன் காரணத்தால் இந்நிகழ்வை எழுச்சி நிகழ்வாக மாற்றி செய்வது மிகுந்த பயனைத் தரும்.
  • இதுபற்றி மக்களிடம் கேட்கத் தேவையில்லை. கனடாவில் உள்ள தமிழர் தலைமை எதைச் சொல்கின்றதோ அதை மக்கள் செய்வார்கள்.
  • மந்தமான பொருளாதார நிலமையில் இப்படியான ஓர் நிகழ்வு கனடாவில் உள்ள நம்மினத்துக்கு பலவித நன்மைகளை கொண்டுவரும்.
  • தமிழீழம் கிடைத்தபின்னர் இதைச் செய்யலாம்.
  • இந்த நிகழ்வை சுமார் மூன்று ஆறுமாதங்களுக்கு தள்ளி வைக்கலாம்.
  • இந்நிகழ்வு மூலம் நன்கொடைகள் பெறப்பட்டு அதை தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கக்கூடியதாக இருப்பதனால் இந்நிகழ்வை செய்யலாம்.
  • செத்தவீட்டினுள் நின்று சிரிக்கக்கூடாது. கலியாணவீட்டில் நின்று அழக்கூடாது. எனவே இந்தகொண்டாட்ட நிகழ்வை வழமைபோலவே செய்யவேண்டும். ஏனெனில் வேற்று இன மக்களிடம் நமது விசயங்களை திணிக்கக்கூடாது.
  • இம்முறை கட்டாயம் செய்யவேண்டும். இல்லாதுவிடின் அடுத்தவருடம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.
  • இந்நிகழ்வு நம்மவர்கள் செய்த கவனயீர்ப்பு போராட்டங்களை கேலிக்கூத்தாக்கிவிடும்.
  • இந்நிகழ்வை திரிவுபடுத்தி சிறீ லங்கா அரசு வேறுவிதமான பிரச்சாரங்கள் செய்யக்கூடும்.
  • இந்த எழுச்சிநிகழ்விற்கு மாற்றீடாக பிரித்தானியாவில் வாழும் நம்மவர்கள் செய்தது போன்று நாம் கனடாவில் இருந்து வணங்காமண் போன்ற செயற்திட்டத்தை செய்யலாம்.
  • இந்நிகழ்வை செய்யாமல் இருப்பது மாற்றுக்குழுக்கள், புல்லுருவிகள் திட்டங்கள் வெற்றிபெற உதவும்.

இப்படி வகை வகையாக ஏராளம் கருத்துக்கள் கூறப்பட்டன. மக்களினால் மக்களுக்காக ஊடகங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயற்படுவதனால் அனைவரினதும் திறந்த கருத்துக்கள், எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கூறப்பட்டு உள்ளது.

எனது கருத்து:

2000ம் ஆண்டில் இதுபோன்ற ஒரே ஒரு நிகழ்வில் மாத்திரமே நான் கலந்து இருக்கின்றேன். இவ்வாறான வேறு ஒரு நிகழ்விலோ அல்லது நம்மவர் கொண்டாட்டத்திலோ நான் கலந்துகொள்ள இல்லை. இதனால் இந்த நிகழ்வை செய்யலாமா அல்லது செய்யக்கூடாதா என்று என்னால் சொல்ல முடிய இல்லை. ஆனாலும்...

எனது ஆதங்கம்: நம்மவரின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையாக இப்போது இருக்கின்றது. ஏற்கனவே செய்துவரும் நிகழ்வை இம்முறை செய்யாவிட்டால் அதனால் பல பாதகங்கள் வரும். அதேவேளை இதைச் செய்தால்.. வேறுவிதமான பிரச்சனைகள் வரக்கூடும்.

நான் கூறக்கூடிய கருத்து: இந்த நிகழ்வு எழுச்சி நிகழ்வாக செய்யப்படுகின்றது அல்லது வழமை போன்ற நிகழ்வாக செய்யப்படுகின்றது அல்லது நிகழ்வு இரத்துச் செய்யப்படுகின்றது என்பது வேறு பிரச்சனை... ஆனாலும்..

நம்மவர் எவ்விதமான முடிவுகள் எடுத்தாலும் அது சிறீ லங்கா பயரங்கவாத அரசின் பிரச்சாரங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் துணைபோவதாய் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தவிர மாற்றுக் குழுக்கள், துரோகிகளின் திட்டங்கள் வெற்றிபெறுவதற்கு அல்லது அதற்கு ஊக்கியாக நம்மவர் நடவடிக்கைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

எவ்விதமான முடிவு எடுத்தாலும் அதனால் நம்மவருக்கு வரக்கூடிய பாதகமான விளைவுகளை இயலுமான அளவு குறைக்க அல்லது இல்லாது செய்ய மாற்று நடவடிக்கைகள், திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட, பிரயோகிக்கப்படவேண்டும்.

அடுத்ததாக,

இந்த நிகழ்வு எழுச்சி / கவனயீர்ப்பு நிகழ்வாக நடாத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டால் பின்வரும் விசயங்களையும் செய்யலாம்:

இரத்ததானம் வழங்குதல்.

வாகனங்களில் கவயீர்ப்பு செய்யக்கூடிய வகையில் அங்கு வரும் மக்களுக்கு சுவிசில் செய்ததுபோல் வாகனங்களில் அவலங்களை வெளிப்படுத்தக்கூடிய Stickers வழங்கலாம் / விற்பனை செய்யலாம்.

எதிர்காலத்தில் எழுச்சி நிகழ்வுகள் செய்வதற்கு தொண்டர்களை சேர்க்கலாம்.

சிறீ லங்கா பொருட்கள், சேவைகளை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்கு இந்தநிகழ்வை சாதகமாக பயன்படுத்தலாம்.

குறிப்பாக, கடந்த மனிதச்சங்கிலியின் போது நம்மவர்கள் வீதிப் போக்குவரத்திற்கு இடைஞ்சலால இருந்தார்கள் என்று கனேடிய ஊடகங்களில் மிகுந்த குறைகூறப்பட்டது. நம்மவர்கள் கனேடிய பொருளாதாரத்துக்கு சாதகமான வழிகளில் எப்படி உதவுகின்றார்கள் என்று இந்நிகழ்வு மூலம் வெளிக்காட்டப்பட வேண்டும்.

நிகழ்வு வலைத்தளம்: http://www.businessfestival.ca/

இந்த தென்னாசிய வர்த்தக கொண்டாட்ட நிகழ்வு பற்றிய உங்கள் கருத்து என்ன?

உங்கள் கருத்துக்களிற்கும், எண்ணப்பகிர்வுக்கும் நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனமக்கள் பங்குபற்றுவதன் காரணத்தால் இந்நிகழ்வை எழுச்சி நிகழ்வாக மாற்றி செய்வது மிகுந்த பயனைத் தரும்.

பல வழிகளிலும் எமக்கு பயன் தர கூடிய வகையில் , அது பிரச்சார வடிவமாக இருக்கலாம் அல்லது வன்னியில் எமது மக்களுக்கான உதவிகளாக இன்னும் பல வகைகளில் நாம் பயன்படுத்தலாம். இந்நிகழ்ச்சியை எம்மவர் தலைமை தாங்கி நிகழ்த்துவார்கள் எனில் எமக்கு பயன் படக்கூடிய வகையில் மாற்றியமைக்கலாம். மொத்தத்தில் எமக்கு சாதகமாக மாற்றுவது தான் சமயோசிதமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து. வன்னியில் சிறிலங்கா அரசினால் எமது மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை ஒரு பொருட்காட்சியாக (exibition) கூட வைக்கலாம். இளையவர்களுக்கான தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய ஓவிய போட்டியை கூட நடத்தலாம். வேறு நாட்டவரையும் பங்கு பற்ற அழைக்கலாம். இன்னும் பல நினைவில் வரும் போது எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nitharsanam.com/?art=27577

நன்றி - நிதர்சனம்

ஒரு வர்த்தக விழாவை எழுச்சி விழாவாக எப்படி செய்வார்கள்?...மக்கள் எழுச்சியோடு போய் பொருட்களை வாங்க வேண்டுமா?....இந்த நிகழ்ச்சி நடந்தால் அது சிங்கள பரப்புரைக்கு தீனிபோடும் நிகழ்வாகவே அமையும். National Post பத்திரிகை ஒரு நாள் ரோட்டில் நிண்டு கொடி பிடிக்கிறார்கள் மறு நாள் கொண்டாடுகிறார்கள் என்டு ஏளனம் செய்து கட்டுரை எழுதும்..மீண்டும் ஒரு போராட்டம் செய்தால் கிடைக்க வேண்டிய கவனம் Mainstream Media's இலிருந்து நிச்சயம் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

image002yi3.gif

விதியே! விதியே!.. தமிழச்சாதியை என் செய நினைத்தாயோ?

இன்னும் வீணராய் இகழ்பட வாழ்வதாய் ஏதும் சாபமுளதோ?

கண்ணினும் இனிய தாயகம் தீய்வதில் எழுந்திட்ட பெருநெருப்பை

மண்ணினில் மூடிட முனையும் இக்கூட்டம் மாறுவதெப்போது?

மாறுவதெப்போது???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் முற்று முழுதாக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு, அல்லது கருத்து அறிதல் ஒரு கண் துடைப்பு. நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நானோ நாலு பேரிடம் கேட்டால் அவர்கள் எனக்கு ஆதரவாக மட்டுமே பேசுவார்கள். மற்றவர்களின் இலக்கங்களை கூட தவறுதலாக என்ற பெயரில் துண்டிக்கவும் முடியுமல்லவா?

சி.எம்.ஆர், ரி.வி.ஐயின் இந்த செயறப்பாடு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது அவர்களால் முன் வைக்கப்படும் நியாய பூர்வமான காரணங்கள் என்று நீங்கள் எல்லோரும் எதை சொல்கின்றீர்கள்?

பனிக்காலத்தில் எழுச்சி கொண்டு மக்கள், வீதியில் இறங்கி போராட வேண்டும் கோடைகாலத்தில் வெட்கம் கெட்டத்தனமாக இவர்களில் கூத்தாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று இங்கு யாராவது நினைத்தால் சற்று விளக்கமாகவே பதில் அளியுங்கள். மனசாட்சியும். மனித நேயமும் உள்ள மனிதர்களால் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்திருக்க முடியாது.

மக்களை எழுச்சி கொள்ள செய்ய வேண்டிய ஊடகங்கள் வெறும் ___________________ செயற்ப்படுதில் அர்த்தமில்லை. இவர்கள் நினைத்தது செய்ய இருப்பது பற்றி ஏற்கனவே வேறு இடத்தில் குறிப்பிட்டேன். ஆனால் இவர்கள் இப்படி குள்ள நரித்தனம் செய்து நிகழ்வை நடாத்துவார்கள் என்று எண்ணியிருக்கவில்லை.

இவர்களுக்கு கருத்து தெரிவித்த குறிப்பிட்ட சிலர் எங்கிருந்து முளை விட்டார்கள் என்று தெரியவில்லை. இன்று காலை தொடக்கம் இரவு வரையான காலப்பகுதியில் நான் பேசிய குறைந்தது 50 பேர் இதற்க்கு எதிர்பை தான் தெரிவித்தனர். இதையும் தான்டி மண்டபம் பறிபோய் விடும் இதை இவ்வருடம் செய்தால் மற்றைய கால கட்டத்தில் செய்ய முடியாது என்று சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்ள நாம் முட்டாள்கள் இல்லை.

உண்மை சொல்கின்றோம்.. யுவன் சங்கர் ராஜாவினது மட்டுமல்ல கொண்டாட்டத்தையும் புறக்கணிக்க வேண்டும் புறக்கணிப்போம்...

இவர்களுக்கு சொல்லி புரியாது அடிபட்டு, நொந்து போட்ட முதல் எடுக்காமல் திண்டாடும் போது தான் புரியும் மக்களின் அவலத்தில் இவர்கள் கொண்டாடினால் இவர்கள் திண்டாடியே தீர்வார்கள்...!

தேசசியம் பாடிய படி இவார்களின் பின்னால் திரியும் சிலர் இனி ஏந்த முகத்தை கொண்டு மக்களே எழுந்து வாருங்கள் போர் தூக்குவோம் என்று கேட்பார்கள்? எந்த முகத்தை கொண்டு தாகமக்கள் அவலம் பற்றி, சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு கூறுவார்கள்?

சிறிலங்கா பொருட்களுக்கு கனடாவில் லேபல் அடிப்பது போல ஏதாவது ஆலோசனை வழங்கியிருக்கலாம் அப்படியே தான் வாக்கெடுப்பு ஆலோசயையும் முன் வைத்திருக்கின்றார்கள் போல.

நாங்கள் எல்லோரும் முட்டாள்களாக, அவர்கள் எல்லோரும் புத்திசாலிகளாக வாழ்வதாய் எண்ணம்...

Edited by Nitharsan

  • தொடங்கியவர்

சிக்கலான சில விசயங்கள்:

வர்த்தக நிகழ்விற்கு சிங்கள வானொலிசேவையும் வந்து கடைபோடக்கூடும். எப்படியும் சிறீ லங்கா அரசாங்கம் உள்ளே தனது கைவண்ணத்தை காட்ட முயற்சிக்கும். இதனால் சிறீ லங்கா பொருட்கள், சேவைகள் புறக்கணிப்பை அங்கு வைத்து பிரச்சாரம் செய்வது கடினமான காரியமாக போகலாம்.

அடுத்தது,

இப்போதே தாயக நிலமை மிகவும் மோசம். இன்னும் ஒரு மாதத்தினால் குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும் தருணத்தில் தாயக நிலமை மிகவும் பலமடங்கு கேவலமாக இருக்கக்கூடும்.

எனவே, இப்போதே நிகழ்வை இரத்துச்செய்யாமல் கடைசிநேரம் வரை பேசாமல் இருந்தால்... இறுதி நேரத்தில் நிகழ்வை இரத்துச்செய்வதனால் இப்போது இரத்துச்செய்வதை விட பலமடங்கு பாதகங்கள் வரக்கூடும்.

நாங்கள் இன்னும் ஒரு மாதத்தில் எமது கவனயீர்ப்புக்களை இன்னும் வேகமாக அதிகரிக்கவேண்டி வரும். அந்த நேரத்தில் வர்த்தக நிகழ்வு வரும் போது எப்படி மக்களை ஒருநிலைப்பட்ட மனதில் வைத்து இருக்கமுடியும் என்பது கேள்விக்குறி.

தமிழன் என்றைக்குமே சுயநலவாதிதான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறான். கொத்துக் கொத்தாய் எங்கள் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதைப் பற்றி விவாதங்கள் நடத்தி, கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கப் போகிறானாம். வணங்காமண்ணுக்கோ அல்லது நாளாந்தம் நடக்கும் எழுச்சி நிகழ்வுகளுக்காக ஓரிரு நிமிடங்களை மட்டுமே செலவழிக்க முடியும். ஆனால் கொண்டாட்டத்திற்கு மட்டும் மணித்தியாலக்கணக்காக இருந்து சிந்தித்து, கருத்துக் கணிப்பு எடுக்க முடிகிறது. ஆஹா என்ன பெருந்தன்மை. இதிலும் ஒரு நல்ல விசயம்தான் நடந்திருக்கிறது. அவர்களின் உண்மையான முகத்தை அடையாளம் காண முடிந்ததே. மற்ற ஊடகங்களை அலட்சியம் செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். வாழ்க தேசியவாதிகள்.

நிதர்சன், உங்களின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். கடந்த காலங்களில் இவர்கள் தேசியவாதத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மற்றைய ஊடகங்களை ஓரங்கட்டினார்கள். ஏன் இன்றுவரையிலும்கூட இங்குள்ள தேசியவாதிகள் இதனை வெளிப்படையாக வரவிட்டுவிட்டார்களே. என்னைப் பொறுத்தவரையில், இவர்களும் புறக்கணிக்கப்படவேண்டியவர்க

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கமுங்க!

நான் கூற நினைத்த பல விடயங்களை நிதர்சன் அவர்கள் அக்குவேறு ஆணிவேறாக தெளிவுபடுத்தியுள்ளார்.

அதாவது இன்றைய காலகட்டத்தில் நாம் தூங்கும்போதோ அல்லது தேனீர் அருந்தும்போதோ எங்கள் கண்களின் முன் திரைப்படம்போல் தோன்றுவது வன்னி அவலம்.

நிலமை அப்படியிருக்கும்போது நடத்தலாமா, நடத்தக்கூடாதா என்ற நினைப்பே வந்திருக்கக்கூடாது. நடத்துவது, நடத்தாதது அவர்கள் விருப்பம் இருப்பினும் நாங்கள் அதாவது பொதுமக்கள் ஊடகங்களினால் திசைதிருப்பப்படுவது மன்னிக்கமுடியாத விடயம்.

அவதிப்படும் எம்மக்களுக்கு அகதிகள் என்ற பட்டத்தை வழங்கி நிதிசேகரிக்க எத்தனை வழிகளை கையாள்கின்றாங்கள்.

இந்த நிகழ்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவது வழமை, பல லட்சம் பணம் வசூலாவதும் வழமை. சுருட்டவேண்டியதை எல்லாம் சுருட்டிய பின்பு செலவின் கணக்கில் சேர்ப்பது தான் இங்கு வழமை.

இவை அனைத்தும் வழமையாக இங்கு இடம்பெறும் விடயங்கள்.

_____

ஆனால் எல்லாவற்றையும் மீறி இந்த நிகழ்வு இங்கு இடம்பெறுமானால், தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு பாதகமான பல விடயங்கள் உருவாக சாத்தியமுள்ளன.

வன்னியில் இடம்பெறும் அனர்த்தங்கள் மூலம், புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு தமிழ்மகன் வீடுகளிலும் ஏதோ ஒருவிதமான சோக உணர்வுகளை காணக்கூடியதாகவுள்ளது.

எங்களால் நிகழ்த்தப்படும் கவனயீர்ப்பு போராட்டங்களிற்கு வாங்கோ, பங்களியுங்கோ என்று கூறிய அதே ஊடகங்கள் எப்படி இந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கமுடியும்?

அடுத்ததாக இந்த நிகழ்வை பல்காலாச்சார நிகழ்சி என்று கூறிக்கொண்டு, எமது மக்களை தமிழ்த்தேசிய விரோதிகளுடன் முட்டிக்கொள்ள களம் அமைத்துக் கொடுக்கின்றீர்களா?

நீங்கள் உண்மையில் நன்மைதான் செய்ய விரும்பினால், திறந்த வெளியில் ஒரு எழுச்சி நிகழ்வை ஒழுங்கு செய்யுங்கள்.

நிதி சேகரிப்பும் உங்களது திட்டமாக இருந்தால், உங்களது ஊடகத்தை சில மணத்தியாலங்கள் ஒதுக்கி கொடுங்கள் எதுவித செலவுமில்லாது பல லட்சம் நிதியை சேகரித்துக்கொள்ளலாம்.

தயவுசெய்து அப்பாவி மக்களை கவர்ச்சி வார்த்தைகளினால் ஏமாற்ற முயலாதீர்கள்.

Edited by Valvai Mainthan

வன்னியில் திண்டாட்டம் கனடாவில் CMR , TVI, CTR இன் கொன்று ஆட்டம்

இந்த கொன்று ஆட்டம் ஏற்கனவே CMR , TVI, CTR நிர்வாகத்தால் நாடாத்துவது முடிவு செய்ய்ப்பட்டுவிட்டது

அதை கருத்துக் கணிப்பு ஒன்றை நாடாத்தி அதில் தமது அருவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றியீட்டி அதன் மூலம் மக்கள் தீர்ப்பு என்று சொல்லி நாடாத்தும் கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றத

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்

நம்மவர் வானொலியைப்பற்றி தெரியாது. நான் ஒருகாலமும் கேட்டது இல்லை. ஆனால் தமிழ்விசன் தொலைக்காட்சியை பல வருடங்களாக பார்த்து வருகின்றேன். குறிப்பாக கடந்த மூன்றுமாதங்களாக ஆங்கில நிகழ்ச்சிகள், இதர தொலைக்காட்சிகளை தவிர்த்து மிகவும் அதிக அளவில் தமிழ்விசன் தொலைக்காட்சியை பார்த்துவருகின்றேன்.

தாயகம் சம்மந்தமாக பல விசயங்களை செய்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால்.. இப்போது உள்ள நிலமையில் அவர்களது வேகம் காணாது என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து தாயக நிகழ்ச்சிகளை, செய்திகளை, அவலங்களைப்பற்றி சொன்னால்... சனத்துக்கு மெண்டல் ஆக்கீடுமாம். இதனால... வழமைபோல சீரியல்கள் - தொடர்நாடகங்கள், சினிமா படங்கள், உங்கள் விருப்பம் என்று நிகழ்ச்சிகள் போகிது. அங்க இருக்கிற சனம் எப்பிடி மெண்டலா இருக்கிது எண்டு நிலமையை எங்களோட ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறிதளவு மெண்டல் அடைஞ்சாக்கூட பரவாயில்லை.

இந்தவகையில,

தாயகத்தில் தமிழினம் அழிவின் விளிம்பில இருக்கிற இந்த வரலாற்று காலகட்டத்தில கனடாவின் தமிழர் தலமை தமது பொறுப்பை உணர்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

குறிப்பிட்ட நேரஞ்சல் நிகழ்ச்சியின்போது கனடாவில் உள்ள சில பிரபலங்களின் கருத்துக்களையும் இடையிடையே ஒளிபரப்பினார்கள். அதில் கருத்துச்சொன்ன அனைவருமே... குறிப்பாக கனடா தமிழ் காங்கிரஸ் டேவிட் பூபாளபிள்ளை, தமிழர் தகவல் திருச்செல்வம், கலைஞர் வர்ண ராமேஸ்வரன், வானம்பாடி இசைக்குழு கலைஞர் என அனைவரும் எழுச்சி நிகழ்வாக குறிப்பிட்ட வர்த்தக நிகழ்வை வைக்கவேண்டியதன் அவசியத்தை சொல்லி இருந்தார்கள்.

இன்று கருத்துக்கணிப்பு பற்றி தமிழ்விசன் தொலைக்காட்சியில் இதுவரை ஒருதகவலையும் நான் காண இல்லை. இன்று இரவு இதுபற்றி ஏதாவது போகின்றதோ தெரியவில்லை.

தமிழ் தேசியத்தின் பெயரால் வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் இப்படியான கபட வேடதாரிகள் தம் உண்மையான முகத்தினை எல்லோரிற்கும் காட்டிவிட்டார்கள். சிங்கள தேசியத்தின் பெயரால் குழந்தைகளையும் விட்டு வைக்காது கொலைசெய்யும் சிங்கள கொலைக்கார கூட்டத்திற்கும், தமிழ் தேசிய உணர்வை கொச்சைப் படுத்தும் தமிழ் போலித் தேசியவாதிகளான இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை

Edited by நிழலி

நம்மவர் வானொலியைப்பற்றி தெரியாது. நான் ஒருகாலமும் கேட்டது இல்லை. ஆனால் தமிழ்விசன் தொலைக்காட்சியை பல வருடங்களாக பார்த்து வருகின்றேன். குறிப்பாக கடந்த மூன்றுமாதங்களாக ஆங்கில நிகழ்ச்சிகள், இதர தொலைக்காட்சிகளை தவிர்த்து மிகவும் அதிக அளவில் தமிழ்விசன் தொலைக்காட்சியை பார்த்துவருகின்றேன்.

தாயகம் சம்மந்தமாக பல விசயங்களை செய்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால்.. இப்போது உள்ள நிலமையில் அவர்களது வேகம் காணாது என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து தாயக நிகழ்ச்சிகளை, செய்திகளை, அவலங்களைப்பற்றி சொன்னால்... சனத்துக்கு மெண்டல் ஆக்கீடுமாம். இதனால... வழமைபோல சீரியல்கள் - தொடர்நாடகங்கள், சினிமா படங்கள், உங்கள் விருப்பம் என்று நிகழ்ச்சிகள் போகிது. அங்க இருக்கிற சனம் எப்பிடி மெண்டலா இருக்கிது எண்டு நிலமையை எங்களோட ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறிதளவு மெண்டல் அடைஞ்சாக்கூட பரவாயில்லை.

இந்தவகையில,

தாயகத்தில் தமிழினம் அழிவின் விளிம்பில இருக்கிற இந்த வரலாற்று காலகட்டத்தில கனடாவின் தமிழர் தலமை தமது பொறுப்பை உணர்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

குறிப்பிட்ட நேரஞ்சல் நிகழ்ச்சியின்போது கனடாவில் உள்ள சில பிரபலங்களின் கருத்துக்களையும் இடையிடையே ஒளிபரப்பினார்கள். அதில் கருத்துச்சொன்ன அனைவருமே... குறிப்பாக கனடா தமிழ் காங்கிரஸ் டேவிட் பூபாளபிள்ளை, தமிழர் தகவல் திருச்செல்வம், கலைஞர் வர்ண ராமேஸ்வரன், வானம்பாடி இசைக்குழு கலைஞர் என அனைவரும் எழுச்சி நிகழ்வாக குறிப்பிட்ட வர்த்தக நிகழ்வை வைக்கவேண்டியதன் அவசியத்தை சொல்லி இருந்தார்கள்.

இன்று கருத்துக்கணிப்பு பற்றி தமிழ்விசன் தொலைக்காட்சியில் இதுவரை ஒருதகவலையும் நான் காண இல்லை. இன்று இரவு இதுபற்றி ஏதாவது போகின்றதோ தெரியவில்லை.

கலைஞன், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனைபேரும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டுவிட்டார்கள். சிலர், ஏற்கனவே எலும்புத்துண்டோடுதான் இருந்தார்கள். ஒருசிலர் இப்போது இணைந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இவ்வளவு காலமும் இதைப் பற்றிக் கனடாவின் தமிழர் தலைமைக்குத் தெரியாமலா இவ்வளவும் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்??? கொத்துக் கொத்தாய் மக்கள் அழிந்து கொண்டிருக்கும்போது, கொண்டாட்டத்திற்கான வேலைகளைச் செய்து கொண்டு வெளியில் தேசியவாதம் என்று நடித்திருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு இனியாவது கனடியத் தமிழ்மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவார்களா????

கனடிய தமிழர் தலமை என்பது யார் என்று சற்று விளக்கமுடியுமா?......உலக தமிழர் இயக்கமா?..கனடிய தமிழ் காங்கிரஸ்ஸா?..இல்லை வேறு யாராவதா?

கனடிய தமிழர் தலமை என்பது யார் என்று சற்று விளக்கமுடியுமா?......உலக தமிழர் இயக்கமா?..கனடிய தமிழ் காங்கிரஸ்ஸா?..இல்லை வேறு யாராவதா?

எனக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது மட்டும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது மட்டும் தெரியும்.

உலகத்தமிழர் இயக்கத்தின் ஆளுமை பல வருடங்களுக்கு முன்னமே செயலிழந்துவிட்டது.

கனடிய தமிழர் தலமை என்பது யார் என்று சற்று விளக்கமுடியுமா?......உலக தமிழர் இயக்கமா?..கனடிய தமிழ் காங்கிரஸ்ஸா?..இல்லை வேறு யாராவதா?

எனக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது மட்டும் தெரியும்.

தலைமை யார் என்று தெரியாமலே பின்னால் போயிருக்கிறார்கள் என்பது வேதனை.

இப்போது உண்மை முகங்கள் தெரியத் தொடங்கியுள்ளன?

ஆட்களை செட் பண்ணி நாடகம் போட்டிருக்கிறார்கள்.

நிதர்சனின் கருத்தே சரியானது.

அனைவரும் பகிஸ்கரியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள். இம்முறை தெற்காசிய வர்த்தக கொண்டாட்ட நிகழ்வு நடைபெறமாட்டாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நிப்பாட்டுந்கோ... இது நடக்க மாட்டுது எண்டு அறிவிச்சிடினம்.. பிறகு தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்காமல் உருப்படியான வேலையால் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் உணர்வுகளை புரிந்து தமது முடிவினை அறிவித்த சிஎம்ஆர்இ ரிவிஐ நிறுவனங்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்தக்கொள்ளும் அதே நேரம் இதற்காய் உழைத்த அனைத்து மக்களுக்கும் செயற்ப்பாட்டாளர்களுக்கும் எமது நன்றிகள்.

வெற்றியின் உச்சத்தில் நாம் கொண்டாடும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் எமது காலத்தின் பணியை இவ்போதே செய்ய தயாராவோம்.

நன்றி

  • தொடங்கியவர்

வணக்கம், கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

நேற்று குறிப்பிட்ட நிகழ்ச்சி இரத்துச்செய்யப்படுவதாய் தொலைக்காட்சியில் அறிவித்தார்கள். கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் தனிப்பட்ட நன்றிகள்.

இன்றைய மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நம்மவர் ஊடகங்களின் கைகளில் மிகப்பாரிய பொறுப்புக்கள், கடமைகள் இருக்கின்றது. நம்மவர் ஊடகங்கள் மூலம் நாங்கள் இன்னமும் அதி உச்ச பயன்பாட்டை பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நமது ஊடகங்கள் மனம் வைத்தால் இன்னும் பெரிய அளவில் தாயக மக்களிற்கு, போராட்டத்திற்கு பலம் சேர்க்கலாம்.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.