Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி, றோ போடும் அடுத்த நாடகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இந்திய லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையிலும் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையிலும் அதனைச் சீர்குலைக்கும் நோக்கோடு தமிழக அரசும் றோ இந்திய உளவு அமைப்பும் சேர்ந்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.

இதன்படி கருணாநிதியைக் கொல்லப் போவதாக புலிகள் மிரட்டல் விட்டுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி பரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக காவல்துறை உசார்படுத்தப்பட்டுள்ளதாம். மேற்படி கொலை அச்சுறுத்தல் கடிதம் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளதாம்.

இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தே தனது கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்த வைகோவை கட்சியை விட்டு வெளியேற்றி தனது குடும்ப வாரிசுகளை கட்சியின் முதன்மைப் பதவிகளில் இருத்தி சுகம் கண்டவர் கருணாநிதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி..

Karunanidhi receives death threat

Tamil Nadu Chief Minister M Karunanidhi on Friday received a death threat allegedly from the banned LTTE, police said.

Police said a letter carrying the symbol of the proscribed outfit issuing the death threat was received at Karunanidhi's Gopalpuram residence.

Following the threat, security has been stepped up for the Chief Minister, who already is in the 'Z plus' category.

A case has been filed with the Central crime branch of the city police which is probing the matter.

Police officials said the Union Home Ministry had already warned of a terror threat to Karunanidhi from LTTE, which is engaged in what is been termed as the "last ditch battle" in Sri Lanka. (PTI)

டெயிலிமிரர்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

இதன்படி கருணாநிதியைக் கொல்லப் போவதாக புலிகள் மிரட்டல் விட்டுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி பரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக காவல்துறை உசார்படுத்தப்பட்டுள்ளதாம். மேற்படி கொலை அச்சுறுத்தல் கடிதம் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளதாம்.

:(:lol:

Edited by kuddipaiyan26

தமிழக அரசும் றோ இந்திய உளவு அமைப்பும் சேர்ந்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.

நாடகத்தின் தலைப்பு மீண்டும் கண்ணகியா? :(

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் படித்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது...இது இலங்கை அரசின் சின்னபுத்தி விளையாட்டாகவே இருக்கும்.

இருந்தாலும் இந்த சொறிநா**க்கெல்லாம் ஒரு மாநகராட்சி வண்டி போதாதா...! தரதரவென்று இழுத்துச் சென்று சிதையிலேற்ற? :(

ஆனால் அப்போதும் சிதையிலிருந்தெழுந்து "அய்யோ கொல்றாங்களே" என ஊளையுமிட்டு நாடகமும் போடும் இந்த கபடதாரி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Edited by kuddipaiyan26

விட்டிடுங்க பாவம் கிழவன்.விடாதீர்கள் சாபக்கேடு றோவை.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் என்னய்யா இந்தக்கோலம்? இது தேவைதானா? நீங்களும் ஒரு மனிதப்பிறவி தானா?

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி தமிழ் நாட்டு உறவுகள் றோ என்ன எல்லா தமிழின விரோத சக்திகளுக்கும் வருகின்ற தேர்த்தல் மூலம் ஒரு பாடம் படிப்பியுங்கள். அப்போ தான் முத்துகுமார் உட்பட்ட பல வீரத்தமிழர்களின் ஆத்மா சாந்தியடையும். தமிழ் நாட்டு முடிவுகள் தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று பல ஊடகங்கள் சொல்கின்றன. ஒற்றுமையாக சகோதரர்களே நல்ல முடிவு ஒன்றை எடுங்கள். நிச்சயமாக கருணாநிதி --காங்கிரஸ் கூட்டமைப்பு அல்ல உங்கள் தெரிவு. றோ கோட்டை போன பல வரலாறுகள் உண்டு. இம்முறையும் வரலாறு மீண்டு எழுதப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பெயரில் கருணாநிதி குடும்பத்துக்கு மிரட்டல்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்க சின்னத்துடன் முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினரைக் கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் வந்து இருப்பதைத் தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு ``இசெட் பிளஸ்'' அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 3-4-2009 அன்று முதல்-அமைச்சரின் கோபாலபுர இல்ல முகவரியில் பெறப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தி மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளோடு ஆணையர் ராதாகிருஷ்ணன் அவசர ஆலோசனை நடத்தினார்.

மேலும் நகர் முழுவதும் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் இரவு ரோந்தும், கண்காணிப்பும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமாரியின் நேரடி மேற்பார்வையில் இ.பி.கோ.506, 507 (மர்ம கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று இரவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணையும் தொடங்கப்பட்டது.

குடும்பத்தோடு தீர்த்துக் கட்டுவோம்..

முதல்வர் கருணாநியையும், அவரது குடும்பத்தாரையும் தீர்த்துக் கட்டப் போவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. தமிழரசன் என்ற பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் இனம் அழிவதற்கு காரணமாக செயல்படும் கருணாநிதியே, சோனியாவின் கைப்பாவையாக செயல்படுகிறாய். தேர்தல் பிரசாரத்துக்கு நீ ரோட்டுக்கு வரத்தானே செய்வாய். அப்போது உன்னை பார்த்துக் கொள்கிறோம். உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் சாகும் நேரம் வந்துவிட்டது என்று மிரட்டப்பட்டுள்ளது.

thatstamil.com

புலிச்சின்னம் கருணாவிடமும் இருக்கு.. புலிகளிடம் இருந்து ஓடும்போது புலிகளின் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு ஓடினவன். அவன்தான் புலிகளின் பெயரால் கடிதம் போட்டு இருப்பான். இதற்கு யோசனை கொடுத்தது றோவாக இருக்கும்.

றோ கருணாநிதியை போட்டுத்தள்ளிட்டு புலிகளில் பழிபோடப் போகுதோ???? எல்லாம் சோனியாவுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சின்னம் கருணாவிடமும் இருக்கு.. புலிகளிடம் இருந்து ஓடும்போது புலிகளின் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு ஓடினவன். அவன்தான் புலிகளின் பெயரால் கடிதம் போட்டு இருப்பான். இதற்கு யோசனை கொடுத்தது றோவாக இருக்கும்.

றோ கருணாநிதியை போட்டுத்தள்ளிட்டு புலிகளில் பழிபோடப் போகுதோ???? எல்லாம் சோனியாவுக்கே வெளிச்சம்.

:D

புலிச்சின்னம் கருணாவிடமும் இருக்கு.. புலிகளிடம் இருந்து ஓடும்போது புலிகளின் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு ஓடினவன். அவன்தான் புலிகளின் பெயரால் கடிதம் போட்டு இருப்பான். இதற்கு யோசனை கொடுத்தது றோவாக இருக்கும்.

றோ கருணாநிதியை போட்டுத்தள்ளிட்டு புலிகளில் பழிபோடப் போகுதோ???? எல்லாம் சோனியாவுக்கே வெளிச்சம்.

பிரியங்கா ( வதேரா) புருசனின் தகப்பனான மாமனாரை குடும்ப பிரச்சினை காரணமாய் போட்டு தள்ளி போட்டு தூக்கில தொங்கீட்டார் எண்டு கதை விட இல்லையே...??? அதுமாதிரி இதுவும் நடக்கலாம்.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ; கருணாயால் மட்டும் தானா இந்த கைங்கரியத்த செய்யமுடியும் ?

அவன் எப்படியோ துரோகிதான் , அவன் செய்யமாட்டன் என்பதிட்கில்லை ,

ஆனாலும் இந்த விழயாட்ட பார்த்தா சோனியா ரோ கம்பெனி வேல போலத்தான் தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

றோ கருணாநிதியை போட்டுத்தள்ளிட்டு புலிகளில் பழிபோடப் போகுதோ???? எல்லாம் சோனியாவுக்கே வெளிச்சம்.

வயதுபோன காலத்தில், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஒரு முதுபெரும் தலைவராக இருப்பவர் தனது இனத்துக்காக, சமூகத்துக்காக, எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். அதனையே பல தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களாகட்டும், மாட்டின் லூதர் கிங் அவர்களாகட்டும், தமது வாழ்நாளில் தமது சமூகத்திற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு தங்களை அர்பணித்தார்கள். அதன் விளைவாக அவர்களது பெயர் இன்றும் வாழ்கிறது. ஆனால் இங்கு டாக்டர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் தனது குடும்பத்துக்காக அரசியலையும் தனது பல தலைமுறைகளுக்காக பெருமளவிலான சொத்துகளையும் சேர்த்து வைத்ததேயன்றி வேறெதையும் அவர் செய்யவில்லை என்பதை வரலாறு பதிந்து கொள்ளத்தான் போகிறது. என்னுடைய கவலை யாதெனில், அவர் சற்றுக் காலம் வாழ வேண்டும். ஏனென்றால் அனைத்துத் தடைகளையும் கடந்து எட்டுக்கோடித் தமிழினமும் தனது மானத்தை மீட்டு நிமிரும் காட்சியை அவர் பார்க்க இருக்க வேண்டும். ஆனால் அவர் இருப்பாரோ தெரியாது. இம்முறை பெற இருக்கும் தமிழினத் துரோகத்துக்கான பரிசின் ஏக்கத்தால் ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித் தானாகவே போகக்கூடிய வாய்ப்புள்ள நிலையிலே "றோ" வுடன் சேர்ந்து போடும் நாடகம் எடுபடுமா தமிழக மக்களிடம் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதனை இப்படியும் ஒரு கோணத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அதாவது மத்தியில் காங்கிரசைப் பதவியில் அமர்த்துவதற்கு தமிழகத்தின் வாக்கு வங்கி மீது " ராஜீவின் " மறைவு இனியெடுபடாது என்பதை உணர்ந்த " றோ " இப்போது இப்படியான ஒரு நாசகாரத்திட்டத்தைப் போட்டுள்ளதோ தெரியவில்லை.

தனது முதுமைக் காலத்தில் அமைதியாக வாழ்ந்து சமூகத்துக்கு ஏதாவது நன்மையைச் செய்துவிட்டுப்போவோமே என்பதே, எந்த ஒரு சாமானியனதும் வாழ்வில் நிகழ்கிறது. ஆனால் இவர் போன்றோர் பதவிக்காக, பதவியின் சுகங்களுக்காக வாழ்பவர் என்பதை பலமுறை நிரூபித்தவர். முத்துக்குமார் மூட்டிய தமிழ்மானத் தீ இந்திய நடுவணரசை, தமிழக அரசியல் நடிகர்களை இப்:போதுதான்; சிந்திக் வைக்கிறதுபோலும். எனவே தமிழக உறவுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.

ஆனால் தமிழகத்தை ஆண்ட புரட்சித் தலைவர் திரு எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு தமிழக மக்களிடம் மட்டுமல்ல உலகத்தமிழர்களிடமும் என்றும் மாறாத மதிப்பும் நன்றியும் இருந்து கொண்டே இருக்கும். அவரைப்போன்ற ஒரு தலைவரை தமிழகம் பெறுமாயின் எமக்கும் மகிழ்வே. என்ன செய்வது கொடிய நோயென்னும் காலன் அவரை எம்மிடமிருந்து பிரித்திருக்காவிடின் சில விபரீதங்கள் நிகழ்ந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேர்தலின் போதும் , புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருணாநிதி கூறிக்கொள்வது வழக்கம் .

முன்பொருமுறை , புலிகளுடன் சேர்ந்து தன்னை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டதாக வைக்கோ மீது கருணாநிதி குற்றம் சாட்டியதாக ஞாபகம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.