Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை பணயக் கைதிகளாக்கி முன்னேறிய சிங்களப் படை 'பாதுகாப்பு வலய'த்தில் கோரத் தாண்டவம்: 1,496 தமிழர்கள் படுகொலை; அவர்களில் 476 பேர் சிறுவர்கள்

Featured Replies

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஒருநாள் இன அழிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 1500 பேர், காயமடைந்தவர்கள் 3000 இற்கும் மேல் - புலிகளின் குரல் தவபாலன்.

அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு தற்போது நடந்துவரும் மனிதப் பேரவல்ம் குறித்து புலிகளின் குரல் செய்தியாளர் கிரு தவபாலன் வழங்கிய செய்தியில் இன்றைய மிலேச்சத்தனமான சிங்கள இன அழிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது 1500 ஐத் தாண்டிவிட்டதாகவும் காயமடைந்தோர் குறைந்தது 3000 ஆவது இருக்கும் என்றும் கூறியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் 298 பேர் சிறுவர்கள் என்றும் காயமடைந்தவர்களில் 1000 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைகள் எதுவுமேயின்றி வீதிகளிலும் பற்றைகளிலும் சிறிது சிறிதாக இறந்துவருவதாகவும் கூறினார். இன்னும் பல இடங்களில் மறைந்திருந்தவர்களாகக் கருதப்படும் பெரும்ளவு பொதுமக்களின் கதி குறித்து எதுவுமே தெரியவில்லை என்றும் கூறினார். அப்பிரதேச முழுமையானதொரு மயான பூமியாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எங்கும் மரண ஓலமும் சதைச் சிதறல்களும் கணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஓலமிடும் மக்களுக்கு உதவுவதற்குக் கூட இடம் கொடாமல் தொடர்ந்து அகோர எறிகணைத் தாக்குதல் அம்மக்களை நோக்கி மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

50,000 பொதுமக்களைச் சிறைப்பிடித்தபின் வன்னி முழுவதும் நச்சு வாயுக்களை ஏவி மீதமுள்ள தமிழரை அழிக்கும் அதன் நோக்கத்தில் சிங்களம் இன்று பல தமிழர்களைச் சிறைப்பிடித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

புலிகளின் மண்ணரணைக் கைப்பற்றியதாக ராணுவம் கூறியதை ஒத்துக்கொண்ட அவர், பின்னர் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் அம்மண்ணரண் மீண்டும் புலிகளின் வசம் வந்துவிட்டதாகவும் கூறினார்.

இறுதியாக, புலம்பெயர் சமூகம் இன்றைய பொழுதில் செய்ய வேண்டியது என்னெவெனில், தொடர்ந்தும் தமது முழுதான சக்தியைப் பாவித்து வன்னியில் பலியிடப்படும் எமது சொந்தங்களின் துயரை உலக அரங்கில் ஓங்கி அறைந்து கூறுவதுதான் என்றும் கூறினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை மனிதக் கேடயமாக்கி முன்னேறிய சிங்களப் படை 'பாதுகாப்பு வலய'த்தில் கோரத் தாண்டவம்: 1,496 தமிழர்கள் படுகொலை; அவர்களில் 476 பேர் சிறுவர்கள்

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து - 'பாதுகாப்பு வலய' பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று நேற்றைய நாள் தம்மிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி, இன்று அதிகாலை அளவில், அம்பலவன்பொக்கணை பகுதி ஊடாக சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

மக்களை மனிதக் கேடயங்களாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் - எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத்தை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

இருந்த போதும் - தமது இந்த மனிதக் கேடய முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர், இதன் போது பெருமளவிலான மக்களைக் கொன்றனர்.

இந்த தாக்குதல்களும் படையெடுப்பும் - இன்று திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணி தொடக்கம் நடத்தப்பட்டன.

சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும், ஒரு கட்டத்தில் தானும் அவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் 'புதினம்' வன்னிச் செய்தியாளர் இந்தப் பேரவலத்தின் நடுவில் இருந்து தெரிவித்தார்.

சிங்களப் படையினர் வீசிய ஒரு வகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி கொல்லப்பட்டுள்ளர். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன.

சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த இந்த பகுதிகளில் - ஏராளமான கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஏராளமானோர் இப்போது அதிகளவில் இறந்து கொண்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இப்போதும் முள்ளிவாய்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.tamilsweet.com/Tamils/page.php?95

Edited by Maddy

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து - 'பாதுகாப்பு வலய' பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று நேற்றைய நாள் தம்மிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி, இன்று அதிகாலை அளவில், அம்பலவன்பொக்கணை பகுதி ஊடாக சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

மக்களை பணயக் கைதிகளாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் - எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத்தை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

இருந்த போதும் - தமது இந்த பணயக் கைதிகள் முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர், இதன் போது பெருமளவிலான மக்களைக் கொன்றனர்.

இந்த தாக்குதல்களும் படையெடுப்பும் - இன்று திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணி தொடக்கம் நடத்தப்பட்டன.

சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும், ஒரு கட்டத்தில் தானும் அவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் 'புதினம்' வன்னிச் செய்தியாளர் இந்தப் பேரவலத்தின் நடுவில் இருந்து தெரிவித்தார்.

சிங்களப் படையினர் வீசிய ஒருவகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி கொல்லப்பட்டுள்ளர். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன.

சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த இந்த பகுதிகளில் - ஏராளமான கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஏராளமானோர் இப்போது அதிகளவில் இறந்து கொண்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இப்போதும் முள்ளிவாய்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinam.com/full.php?2b34OOK4b...2f1eW2cc4OcY4be

4 ஆம் இணைப்பு:‐ வன்னிப் பகுதியில் இருந்து கிடைத்த உடனடிச் செய்தி ‐ மிகப்பெரிய மனிதப் பேரவலத்தில் வன்னி:

வன்னிப் பகுதியில் படையினரால் அறிவிக்கப்பட்ட சூனியப் பிரதேசத்தில் இன்று கடும் அளவில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் மேலும் மோசமான இடநெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் தற்போது பாதுகாப்புக் கருதி பின்வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதைப் போலன்றி சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களே தற்போது வரை படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் பகுதியூடாக படைத்தரப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலினால் படைத்தரப்பு கைப்பற்றப்பட்ட கணிசமான அளவு பகுதிகளில் இருந்து பின்வாங்கி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இப்பகுதியிலுள்ள பிரதான விநியோக மார்கத்தை இலக்கு வைத்து இன்று படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் அந்தப் பகுதிகளின் பாதுகாப்பை நிலைகொள்ள வைத்துள்ளதாக அவர்கள் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே இப்பகுதிகளில் சிக்குண்டதாகத் தெரிவிக்கப்படும் 8 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே தற்போது படையினரால் பிடித்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறத்தில் ஏனைய மக்கள் பாதுகாப்பாக விடுதலைப் புலிகளால் பின்னால் உள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதிகளில் ஏற்கனவே மிக மோசமான இட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் மேலும் மோசமான இட நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே விடுதலைப் புலிகள் முன்னரங்கப் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகவும் தற்போதுவரை இரு தரப்பிற்கிடையிலும் மிக மோசமான மோதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் படைத்தரப்பும் கணிசமான இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் இந்த மோதல்களின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயன ஆயுதங்களைப் பெருமளவில் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினரால் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள் மற்றும் கனரக எறிகணைத் தாக்குதல்களால் பெருமளவு பொதுமக்கள் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளான் மற்றும் புதுமாத்தளான் பகுதிகளில் இவர்களின் சடலங்கள் பல பகுதிகளிலும் சிதறிக் கிடப்பதாகவும் இப்பகுதிகளில் தொடர்ந்தும் எறிகணைகள் வீழ்ந்த வெடிப்பதால் உயிரிழந்தவர்கள் மற்றும் பரிதாபமாக உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பான விபரங்கள் கிடைக்கப் பெறாத நிலையே தொடாவதாகவும் தன்னார்வப் பணியாளர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் பலர் கிடப்பதாகவும் அவர்களை மீட்பதற்கு எவரும் அங்கு செல்ல முடியாதிருப்பதால் அவர்கள் அங்கேயே உயிரிழந்து போகலாம் என அஞ்சப்படுகின்றது.

வன்னிப்பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் படைத்தரப்பு மிக மோசமான தாக்குதலை தொடர்ந்தால் மக்களுக்கு மிக மோசமான உயிர்ச் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு பகுதியைக் கைப்பற்றி 30 ஆயிரம் வரையான மக்களை தாம் விடுதலை பெறச் செய்ததாக இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: globaltamilnews

http://www.globaltamilnews.net/tamil_news....=8586&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலயம் என்றாங்க.. அப்புறம் புலிகளின் பகுதி மீட்பு என்றாங்க.. சிங்களவனுக்கு தெரிவதெல்லாம்.. தமிழனை அழிக்கிறது மட்டும் தான்.

கூட்டிக் கொண்டு போன மக்களுக்கு என்ன ஆகிறதோ.. ஆண்டவனுக்குத்தான் தெரியும். வவுனியா போகுவரை ஐநா சபை ஐஸ்கிறீம் சாப்பிட்டிட்டு இருக்கும். இவங்களும் இவங்கட ஐநா சபையும்.. மனித உரிமைகளும்.. வெங்காயமும்..! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் உயிர்தான் உலகத்திலேயே பெறுமதியற்ற உயிர் .

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.