Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

ஆகா மதனுக்கு இனி கால் நிலத்தில படாதே :P :)

இந்தப்பக்கம் மதன் அண்ணாவைக் காணவே முடியல்லை. ஏன் என்னாச்சு? :roll:

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply

இளைஞனின் உராய்வுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்ததைக் களம் வழி கேள்வியுற்று மகிழ்வுறுகின்றோம்..! முன்னர் கூறியது போல அன்றி தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..!

வாழ்த்துக்கள் இளைஞன்...! நிகழ்வு தொடர்பான..சொந்த அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்ட வசி, கிருபன்ஸ், ஸ்ராலின் ஆகியோருக்கும் நன்றிகள்...! :P

குருவியா கொக்கா?! :)

குருவியா கொக்கா?! :lol:

இதில என்ன சந்தேகம் உங்களுக்கு...குருவிண்ணா..! :P :wink: :)

இதில என்ன சந்தேகம் உங்களுக்கு...குருவிண்ணா..! :P :wink: :)

"தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..! "

கொக்குத்தான் தண்ணிரை கண்டவுடன் ஒற்றைகாலில் நிற்குமாம். அதனால் தான் அப்படி கேட்டாராக்கும்

"தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..! "

கொக்குத்தான் தண்ணிரை கண்டவுடன் ஒற்றைகாலில் நிற்குமாம். அதனால் தான் அப்படி கேட்டாராக்கும்

தண்ணீருக்குள் நிக்கும் என்பது சரி...தண்ணீரைக் கண்டவுடனுமா நிக்கும்...?! எது எப்படியோ...கொக்கு ஒற்றைக்காலில் நிப்பதும் விசயத்தோடதான்...அது கொக்கு..இது குருவி...! :P :lol:

வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா :)

ஏன் வாழ்த்துக்களை சோகமா சொல்றீங்க ?

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

ஓகஸ்ட் மாதம் (2005ம் ஆண்டு) 27ம் நாள், சனிக்கிழமை மாலை ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபத்தில் (இலண்டன்) இளைஞன் சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதை நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது. நூல் வெளியீட்டை முதன்மையாகக் கொண்டு அரங்கு ஒன்று நிகழ்வு மூன்று என்ற நோக்கில் நூல் வெளியீடு, ஆவணக்கண்காட்சி, கலைநிகழ்வு என மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. இம் மூன்று நிகழ்வுகளினதும் நாயகர்கள் இளந்தலைமுறையினராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

nool13.jpg

மாலை 3:30 மணிக்கு ஆவணக்கண்காட்சி தொடங்கியது.இந் நிகழ்வினை கவிஞரும், தமிழ்ப்பற்றாளருமாகிய திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் மரபுவழியாக ஒளியேற்றி தொடக்கி வைத்தார். யேர்மனியில் வசித்து வரும் திரு.அன்ரன் யோசப் அவர்களால் நடத்தப்பட்ட இக் கண்காட்சியில் இலங்கை - இந்திய - உலக நாணயங்கள், பணஓலைகள், முத்திரைகள், செய்தித்தாள்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வகையான சேகரிப்புக்களும், ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் தமிழ் மன்னர் காலத்து நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் என இதுவரை பலர் பார்த்திராத நாணயங்கள் மற்றும் பணஓலைகள் காணக்கிடைத்தன. தனது சேகரிப்பின் ஒரு சிறு பகுதியையே திரு.அன்ரன் யோசப் அவர்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைத்திருந்தார் - இருப்பினும் அத்தனை பொருட்களும் நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது. பலரின் ஆர்வத்தையும் தூண்டிய இந்நிகழ்வை பலரும் வரவேற்றார்கள் - அதேபோல் இந்த அரும் பெரும் பணியை விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருக்கும் திரு.அன்ரன் யோசப்பின் செயல்வீரத்தை வியந்து பாராட்டினார்கள். கிடைத்தற்கரிய இந்த ஆவணங்களை நம் நாட்டில் மக்கள் பார்க்கவேண்டும் - எனவே ஈழத்திலும் இதுபோன்ற கண்காட்சிகளை வைக்கவேண்டும் என்கிற கருத்துக்களை சிலர் கூறினர். புலம்பெயர்ந்த இளந்தலைமுறையினர்க்கு பயனுள்ள இக் கண்காட்சியை இலண்டனில் இன்னும் விரிவாக நடத்தவேண்டும் என்கிற கருத்தையும் இன்னும் சிலர் முன்வைத்தார்கள். நாம் பலவிடயங்களை முன்னர் ஆவணப்படுத்தத் தவறியமையால் தான் இன்று பலதை இழந்து நிற்கிறோம் என்கிற ஆதங்கக்குரல்களையும் கேட்க முடிந்தது.

nool1.jpg

nool17.jpg

nool18.jpg

மாலை 4:30 மணிக்கு உராய்வு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. இந் நிகழ்வினை திருமதி.சங்கரலிங்கம் அம்மையார் மங்கள விளக்கேற்றி மரபுவழி தொடக்கி வைத்தார்.அடுத்து தாயக விடுதலைக்காய் தம்முயிர் நீத்த மாவீரர்க்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்வி.அபிராமி இராஜமனோகரன் தாய்மொழி வாழ்த்து பாட நிகழ்வு இனிதே தொடங்கியது.

nool19.jpg

nool3.jpg

nool2.jpg

நிகழ்வில் முதலாவதாக நாடகக் கலைஞர், ஊடகவியலாளர் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் [iBC] தொடக்க காலப் பணிப்பாளர் - தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் [TTN] தலைமைப் பொறுப்பில் இருந்தவர்) திரு.ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்தும் நிகழ்வுகளை அவரே நெறிப்படுத்தினார். இந்த உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் எப்படி தனக்கு அறிமுகமானான், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (IBC) அவனது கவிதை வாசிப்புக்கள், தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (TTN) உண்டான நேரடிச் சந்திப்பு என தனக்கும் கவிஞனுக்கும் இடையிலான பல்வேறு அனுபவங்களை நிகழ்வின் இடையிடையே பகிர்ந்துகொண்டார். இளங்கவிஞன் சஞ்சீவ்காந்த்தை உரிமையோடு கவிக்கூர் என்று அழைத்து, தனக்கு பிடித்த கவிதைகளை கவிஞனின் குரலிலேயே வாசிக்கச் செய்து தனது விளக்கத்தை உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் கூறினார். நாடகபாணியிலான இந்த தலைமையுரையை பலரும் இரசித்தார்கள்.

nool20.jpg

அதனையடுத்து சிவசிறி பாலகுமாரக் குருக்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். உராய்வு என்கிற கவிதை நூலின் பெயரை அறிவியல் அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும் அணுகி விளக்கம் சொன்னார். உராய்வு என்பது இரு பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது உருவாகிறது என்றும், அதுபோலவே இக் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளும் சமூகத்தினது பல்வேறுபட்ட உராய்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இக் கவிதைகள் வேண்டிநிற்கும் சமூகமாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழவேண்டும் என்பதைக் கூறி, கவிஞனை வாழ்த்தி தனதுரையை நிறைவுசெய்தார்.

nool5.jpg

அடுத்ததாக கவிஞர் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். இவ்வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு எப்படித் தனக்கு கிட்டியது என்றும், கவிஞனுக்கும் தனக்குமிடையிலான அறிமுகம் பற்றியும் குறிப்பிட்டார். கவிதைத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ள அறிவியல், பெண்விடுதலை போன்ற பல்வேறு கருப்பொருட்களையும் முன்னிறுத்தி அவை சார் கவிதைகளையும் வாசித்து தனது உரையை ஆற்றினார். உராய்வு என்றால் என்ன என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் அளித்தார். உராய்வு தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒலிநயத்துடன் இருக்கின்றன என்றும், ஒலிநயமுள்ள கவிதைகள் உணர்வை தீண்டுவனவாகவும், இலகுவாக பிறரைச் சென்றடைவனவாகவும் அமையும் என்றும் கூறினார்.அதேபோல் இவ்வயதிலேயே தனது கவிதைகளை சமூகம் சார்ந்து இயற்றும் இவ் இளங்கவிஞன், தம் வயதில் மாபெரும் கவிஞனாக திகழ்வான் எனக் கூறினார்.

nool4.jpg

அதன்பின் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உராய்வு கவிதை நூலை வெளியிட்டு வைக்க, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும் - தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனருமான பொன் சத்தியசீலன் அவர்கள் நூலைப் பெற்றுககொண்டார். அதைத் தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்திய பொன் சத்தியசீலன் அவர்கள் இளங்கவிஞன் சஞ்சீவ்காந்தை மனதார வாழ்த்தியதோடு, இந்த இளந்தலைமுறையினரையும் அவர்களது முயற்சிகளையும், படைப்புக்களையும் வரவேற்றார்.

nool6.jpg

nool7.jpg

அவரைத் தொடர்ந்து "அப்பால் தமிழ்" இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட அவர், இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் அழியப் போகிறது என்று எதிர்காலம் பற்றி புலம்புவதை தவிர்த்து - இப்படியான இளைஞர்களை வரவேற்று செயலில் இறங்கவேண்டும் என்பதை அழுத்திக் கூறினார். கவிஞன் சஞ்சீவ்காந்தின் புனைபெயரான இளைஞன் என்பதைக் குறியீடாகப் பயன்படுத்தி, இன்றை இளைஞர்களும் - தமிழ் சமூகமும் பற்றி சிறப்பாக தனது கருத்துக்களை முன்வைத்த அவர், கவிதை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. கவிதையின் இயல்பு கவிதையின் எளிமை என்றும், சாதாரண சொற்களே கவிதையாக மாறுகிறது என்றும் சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்கினார்.

nool8.jpg

அடுத்ததாக மேடையேறிய அரசியல் ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அறிவுடை சமூகத்தின் தேவை பற்றியும், தேடல் பற்றியும் பேசிய அவர் உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் அவற்றைத் தான் காண்பதாகவும் தெரிவித்தார். அறிவியல் - தொழில்நுட்பம் சார் கவிதைகளை முன்னிறுத்திப் பேசி, இக் கவிஞன் கவிதை என்கிற படைப்போடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை வேறுபல துறைகளிலும் மிளிர்வான் என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.

nool9.jpg

மாலை 19:00 மணியளவில் கலைநிகழ்வுகள் தொடங்கின. நூல் வெளியீட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வாக அமைந்த இந்நிகழ்வில் முதலாவதாக இசை நிகழ்வு இடம்பெற்றது. உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மூன்றைத் தெரிவு செய்து அவற்றைப் இனிமையாக இசையமைத்து செல்வி அபிராமி இராஜமனோகரன் மிக அற்புதமாகப் பாடினார். செல்வன் செந்தூரன் இராஜமனோகரன் வேய்ங்குழல் இசைக்க, செல்வி சிவகாமி இராஜமனோகரன் வயலின் இசைக்க, செல்வன் செந்தூரன் அனந்தசயனன் மிருதங்கம் இசைக்க இசை நிகழ்வு செவிக்கு விருந்தாகியது.

nool16.jpg

அதைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சாந்தி தயாபரன் நெறிப்படுத்திய இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. அவரது மாணவர்களான செல்வன் கஜிநாத் ஜெயக்குமார், செல்வன் சாயிபிரகாஷ் இராமகிருஷ்ணன், செல்வி சோபனா தயாபரன், செல்வி தீபிகா குணராஜா, செல்வி நிஷாந்தினி பாஸ்கரன், செல்வி ஸியான் யேசன், செல்வி கரோஷினி சிவராஜா, செல்வி ஷர்மி சிவராஜா, செல்வி பிரியங்கா குமாரகுலசிங்கம், செல்வி சரணியா குமாரகுலசிங்கம் ஆகியோர் சிறப்புற அபிநயித்த நடன நிகழ்வு பார்வையாளர் கண்களுக்கு விருந்து படைத்தது. குறிப்பாக திருக்குறளுக்கு பொருள் சொல்வதாய் அமைக்கப்பட்ட நடனம் பலரைக் கவர்ந்தது.

nool12.jpg

உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் சஞ்சீவ்காந்த் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வை இனிதே நிறைவுசெய்து வைத்தார்.

nool15.jpg

nool14.jpg

நன்றி - குயிலி

ஏன் வாழ்த்துக்களை சோகமா சொல்றீங்க ?

இல்லை..வாழ்த்து சொல்ல தாமதமாகி விட்டது அதுதான்.. :lol:

விழா நிகழவுகளை அழகுற தொகுத்துத் தந்த குயிலிக்கும் அதை இங்கு தந்த மதனுக்கும் நன்றிகள்..! :idea:

எங்க மதன் உங்களை ஒளிச்சிட்டீங்கள்..! :P :lol:

போட்டிருக்கே முதல் படத்தில் ... ஆனா முகம் மட்டும் தான் தெரியலை :lol:

கவிதைகளை எங்க வாசிக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை எங்க வாசிக்கலாம்?

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினால் வாசிக்கலாம். :wink:

விழா நிகழ்வுகளை அழகுற தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகள்...

நன்றி மதன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினால் வாசிக்கலாம். :wink:

ஒரு சில கவிதைகளை களத்தில் போடலாமே.. :roll:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்...

  • தொடங்கியவர்

அனைவருக்கும் எனது நன்றிகள் முதலில்.

நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விபரங்களை நான் இங்கு விபரமாக எழுத நினைத்தேன். அப்பால் தமிழில் இருந்து விரிவான விளக்கமான கட்டுரையை இங்கிணைத்து எனது வேலையை மதன் சுலபமாக்கவிட்டார். நன்றி. இருப்பினும் மேலதிகமாக அக்கட்டுரையில் குறிப்பிடப்படாத சில விடயங்களை மட்டும் இங்கு நான் எழுதுகிறேன்.

* நிகழ்வு ஏற்கனவே குறிப்பிட்டது போல் சரியாக மாலை 3:30 மணிக்கு தொடங்கியது.

* ஆவணக்கண்காட்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இடப் பற்றாக்குறை காரணமாகவும், விமானத்தில் அனைத்தையும் கொண்டு செல்லமுடியாத காரணத்தினாலும் அன்ரன் அண்ணாவின் சேகரிப்பில் 50 இல் 1 பகுதியே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* எதிர்வரும் காலங்களில் இலண்டனில் இந்த ஆவணக்கண்காட்சியை முழுமையாக வைப்பதற்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் அதற்கான செயற்பாடுகளில் இறங்க முன்வந்துள்ளார்கள்.

* திரு ஏ.சி.தாசீசியஸ் ஐயாவும் அவரது மனைவியும் அரங்குள் வந்தவுடன் மாலை 4:30 மணியளவில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

* கிருபன் எற்கனவே குறிப்பிட்டது போல் நாடகபாணியிலான முறையில் தனது தலைமையுரை ஏ.சி.தாசீசியஸ் ஐயா நிகழ்த்தினார். அங்கு உரையாற்ற வந்தவர்களையும், அவர்களது தனித்துவங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

* லண்டனில் இருந்தபோதும் பல கவிஞர்கள் நிகழ்விற்கு வராததை உரிமையோடு கண்டித்தார். வெத்திலை பாக்கு வைத்து அழைத்தால் தான் இப்படியான இலக்கிய நிகழ்வுகளிற்கு இவர்கள் வருவார்களா என்று கோபித்தார்.

* இரவி அருணாச்சலம் அவர்களை நிகழ்விற்கு உரையாற்ற அழைத்திருந்தபோதும், சில பல காரணங்களால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை.

* நிகழ்விற்கு அழைக்கப்பட்டோரில் ஒரு சிலர் வராதது மனதுக்கு சிறு கவலையை அழித்தபோதும், எதிர்பார்க்காமல் பலர் நிகழ்விற்கு வருகை தந்தது உற்சாகத்தையும் பெருமையையும் தந்தது.

* 50 - 60 வரையிலான ஆர்வலர்கள் நிகழ்வில் சமூகமளித்திருந்தார்கள்.

* திருமண, பிறந்தநாள் வைபவங்கள் போன்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வந்து அரங்கை நிறைக்காமல் படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் என்று பலரும் வந்து நிகழ்வை முழுமையாக்கியமை மகிழ்ச்சியளித்தது.

* பொன். சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை), அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன், கவிஞர் கந்தையா இராஜமனோகரன், கவிஞர் கி.பி.அரவிந்தன், கவிஞர் வேணுகோபால், மருத்துவர் சசிகலா இராஜமனோகரன், திரு. ஏ.சி.தாசீசியஸ் ஐயா, ரி.ஜி.சிங்கம் (ஆரம்பகாலத்தில் ஐபிசி இல்), அங்கயற்கண்ணி (தமிழரசு கட்சி), கவிஞர் புதுவை இரத்தினதுரையின் தம்பி மற்றும் பலர் (பெயர்கள் ஞர்பகத்தில் இல்லை) நிகழ்விற்கு வந்திருந்தார்கள்.

* யாழ் இணைய நண்பர்கள் மதன், வசி சுதா, ஸ்ராலின், கிருபன் ஆகியோர் வந்திருந்தார்கள். கிருபன் நூல் வெளியீடு முடிந்ததும் அவசரமாய் பொகவேண்டும் என்று சொல்லிவிட்டு மின்னல் போல் மறைந்துவிட்டார். நிகழ்விற்கு முதலில் வருகை தந்தவர் வசி. பின்பு ஸ்ராலின். மதன் வாகன நெரிசலில் சிக்கி சிறிது தாமதமாக வந்து சேர்ந்தார். மதனை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டேன். ஸ்ராலின் தன்னை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருபன் நிகழ்வு மேடையில் நூலை பெறும்போது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

* கோவில் மண்டபத்தில் இவ் இலக்கிய நிகழ்வு நடந்ததால் விழா ஒழுங்கமைப்பாளர்கள் கோவில் குருக்களை வாழ்த்துரைக்காக அழைத்திருந்தார்கள். அவரும் கோவில் பற்றியோ, கடவுள் . மதம் பற்றியோ எதுவும் கதைக்காமல், உராய்வு என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாகவும், மொழி ரீதியாகவும் விளக்கி உரையாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று.

* மேடையேறிவிட்டோம் - கவிஞனைப் புகழவேண்டும் என்பதற்காக பொய்யாக யாரும் புகழ்ந்து தள்ளவில்லை என்பது மன நிறைவைத் தந்தது. கவிதைகள் பற்றியும், என்னுடனான தமது அறிமுகங்கள், அனுபவங்கள் பற்றியும் பகிரப்பட்டது. உரைகளின் இடையே சில விடயங்கள் நகைச்சுவையாக பேசப்பட்டன. திருமணமாகாத ஆண்கள் - விசாவுக்கான திருமணம் பற்றிய கவிதை, சீதனம் பற்றிய கவிதை போன்றவற்றை நகைச்சுவையாக கையாண்டார்கள்.

* மகாகவியின் கவிதையினை சொல்லிவிட்டு மிச்சம் என்னவென்று ஏ.சி.தாசீசியஸ் ஐயா கேட்க அரங்கில் அமர்ந்திருந்த கவிஞர் கி.பி.அரவிந்தனின் மனைவி அதை அழகாகச் சொன்னார்.

* காந்தி, திலீபன், தந்தை பெரியார் பற்றிய குட்டிக் கவிதைகள் ஏ.சி.தாசீசியஸ் ஐயாவிற்கு மிகவும் பிடித்து போயின.

* அறிவியல் சார்ந்த கவிதைகள் அனைவருமே தங்களது உரையில் முக்கியமாக தொட்டுச் சென்ற ஒரு விடயமாக இருந்தது.

* எனது மூன்று கவிதைகளை செல்வி அபிராமி இராஜமனோகரன் அழகாக பாடினார். பாடலாக்குவதற்கு இலகுவாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அதில் ஒரு கவிதை ஏற்கனவே பாடலாக்கப்பட்டு இராகம் 2001 இறுவட்டில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இரண்டு நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவர்களும் இளைஞர்கள் தான்.

* எதிர்பாராத விதமாக நிகழ்விற்கு தீபம் தொலைக்காட்சியிலிருந்து தினேஷ் (செய்தி வாசிப்பவர்) வந்திருந்தார். அவருடன் K.T.குருசாமி(மலையக மக்கள் முன்னணி) வந்திருந்தார். ஏ.சி.தாசீசிய் ஐயாவின் கையால் கவிதை நூலை பெற்றுச் சென்றார்.

* மொத்தத்தில் இது இளைஞர்களின் நிகழ்வாகவே அமைந்திருந்தது. எல்லோருக்கும் நிறைவைத் தந்த நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமது நேரத்தை பயனுள்ளதாகக் கழித்த மனநிறைவை எல்லோரிடமும் காணக்கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

* ஒரு இளைஞனாக எனது எழுத்துக்களை எல்லாம் தொகுத்து அரங்கேற்றிய இந்த நிகழ்வு எனக்குள் பல பொறுப்புக்களை தந்துள்ளது. பல விமர்சனங்களை எதிர்நோக்குவதற்கான தொடக்கப்புள்ளியை இட்டுள்ளது. உராய்வு தொகுப்பின் பல உராய்வுகளை சந்திப்பதற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது.

* உரையாற்றிய அனைவருமே என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் காணக்கிடைத்தது.

நன்றி

* நூல் வெளியீட்டு நிகழ்வு நடக்கப்போகிறது என்கிற அறிவிப்பை செய்த ஊடக நண்பர்களிற்கு எனது நன்றி.

- தினக்குரலில் செய்தியை இணைத்த சாந்தி அக்காவிற்கும், தினக்குரல் பத்திரிகையினர்க்கும் நன்றி.

- இலண்டனில் வெளியாகும் ஒருபேப்பர் நாளிதழுக்கும் நன்றி. நிகழ்வு பற்றிய செய்தியை இணைத்திருந்தார்கள்.

- தீபம் தொலைக்காட்சியினர் முதல்நாள் செய்தியின் முடிவில் நூல் வெளியீட்டு நிகழ்வையும் ஒரு செய்தியாகச் சொன்னார்கள். நன்றி.

- ஐ.பி.சி. வானொலி 22.08.2005 (ஞாயிற்றுக்கிழமை) காலையில் என்னுடனான நேர்காணலின் மூலம் நிகழ்வு பற்றிய தகவலையும் சொல்லியிருந்தார்கள். நன்றி.

- ரி.ரி.என் தொலைக்காட்சியினர் நிகழ்வைப் பதிவு செய்வதற்கு வருவதாக இருந்தார்கள் - தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவர்களால் வருகைதரமுடியவில்லை. அவர்களுக்கும் நன்றி.

- இலண்டன் வானொலி என்கிற வானொலியும் நிகழ்வு பற்றிய விரிவான அறிவிப்பை செய்திருந்தது அவர்களுக்கும் எனது நன்றி.

- மற்றும் இணையத்தளங்கள் அப்பால் தமிழ், தமிழமுதம், வன்னித்தென்றல் போன்றனவிற்கும் நன்றி.

* நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்து தந்த உலகத் தமிழ்க் கலையகம், அப்பால் தமிழ் ஆகியவற்றிற்கும் எனது மனமார்ந்த நன்றி.

- நிகழ்வை ஒருங்கமைத்த எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி) அண்ணாவிற்கு முதலில் எனது நன்றிகள்.

- நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன், கி.பி.அரவிந்தன் அண்ணா ஆகியோர்க்கும் மனம்நிறைந்த நன்றி.

- நிகழ்வன்று உதவிகளை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. :lol:

*** இந்த நிகழ்வில் முக்கியமான ஒரு விடயம் உள்ளது.

- நூலை படைத்த இளைஞன் நான் யேர்மனி நாட்டில் உள்ளேன்.

- நூல் அச்சானது இலங்கையில்.

- நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்தவர் கி.பி. அரவிந்தன் அண்ணா பிரான்சில் உள்ளார்.

- நூல் வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் இலண்டன்.

இப்படி நான்கு நாடுகள் சங்கமம் ஆன நிகழ்வு இது. பல்துறை இளைஞர்கள் இணைந்த அரங்கு இது. ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே இது நடந்தது. எனவே இந்நிகழ்வில் நேரடியாகவும், புறம்நின்றும் பங்காற்றிய அனைவர்க்கும் மறுபடியும் நன்றி.

தகவலுக்கு நன்றிகள் இளைஞன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

மேலும் சில படங்கள் .........

nool26.jpg

nool69.jpg

nool73.jpg

nool18.jpg

nool53.jpg

nool54.jpg

nool55.jpg

nool56.jpg

nool43.jpg

nool45.jpg

nool47.jpg

nool35.jpg

nool33.jpg

nool30.jpg

nool23.jpg

nool24.jpg

nool25.jpg

படங்களுக்கு நன்றி மதன் ஆமா எங்க உங்கள் படத்தை காணவில்லை நீங்கள் இளைஞனுடன் சேர்ந்து எடுக்கவில்லையா?

  • தொடங்கியவர்

நன்றி மதன். :lol:

உராய்வு தளத்தில் அனைத்து படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

http://uraayvu.appaal-tamil.com/

இதோ அனைவரும் எதிர்பார்க்கும் அந்த 1000$ படம்:

nool78.jpg

:lol:

நல்லாயிருக்கு படங்கள்

வாழ்த்துகள்.......................

nool78.jpg

யாழ்கள நண்பர்களின் படம்

தெளிவாயிருக்கு.................. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.