Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் + பிரபுதேவா + பிறேம் = ஈழத் தாண்டவம்

Featured Replies

என்ன எழுதுறதென்றே தெரியவில்லை, :unsure:

  • Replies 58
  • Views 12.8k
  • Created
  • Last Reply

கலங்காத நெஞ்சங்களையும் கலங்கடித்து விட்டதொரு உண்ணதமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் நடனங்கள் ரிரிஎன் தொலைக்காட்சியில் பார்த்தது போல நினைவு. இவர் பிரான்சில் இருந்தவர் என்று நினைக்கிறேன்.

எங்கள் துயரத்தை எடுத்துக்காட்டி கண்கலங்க வைத்துவிட்டார். :unsure:

இவர் தான் மொரீசியஸ்சிலும் பின்னர் பிரான்சிலும் இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=B31OJpCKKr4

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

என் சகோதரனுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் சரியான தருணத்தில் சரியான நிகழ்வு தமிழீழமகன் என்பதை நிருபித்து விட்டான்...................... நன்றி சொல்லி தப்பவில்லை நான் தொடரட்டும் உங்களால் இயன்ற பணிகள்....! ராம்கோபாலின் முகவரியை பெற்று தரமுடியுமா???

அவலங்களில் இருந்து மீளுவோம் நாம் உறுதி!!!!!! இல்லையேல் வித்தாகுவோம்.........................!

வன்னிக்குள் இருந்து...............

  • கருத்துக்கள உறவுகள்

அவன் இனவுணர்வை வெளிப்படுத்தியுள்ளான்..... நாங்கள்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் இன்னும் பல மக்களுக்கு ஈழத்தில் உன்மையில் என்ன நடக்கின்றது என்று பல மக்களுக்கு தெரியாமலே உள்ளது .

காரணம் , தொலைக்காட்சிகளோ , பத்திரிகைகளோ , அரசியல் வாதிகளோ ( ஒரு சிலரைத்தவிர ) உண்மைநிலையை மக்களுக்கு சொல்வதில்லை .

பலரிடம் இணையத்தளம் மூலமாக உண்மை நிலையை அறியும் வசதியும் இல்லை .

இந்நிலையில் இப்படியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகத்தான் உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் .

ஒரு நிகழ்ச்சியில் அரங்க பார்வையாளர்களையும் , நடுவர்களையும் கண்ணீர் சிந்த வைத்த நிகழ்ச்சி என்றால் இதுவாகத்தான் இருக்கும் .

இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த விஜய் தொலைக்காட்சிக்கும் , அருமையாக , பலைரை சென்றடையக்கூடிய விதத்தில் நிகழ்ச்சியை நடாத்திக்காட்டிய பிரேம் கோபால் குழுவினருக்கும் , அதனை இங்கு இணைத்த சரவெடிக்கும் நன்றியும் , பாராட்டுக்களும் .

மீண்டும் நன்றி பிரேம் கோபால் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிகழ்ச்சியை நடத்திய விஜய் டி. வி க்கும் பிரேம் கோபாலுக்கும் நன்றி தெரிவித்து ஒரு மைல் அனுப்ப ஆசைப்படுகின்றேன். அவர்களின் இ.மெயில் முகவரி கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா .

வளரும் பயிரை முளையிலேயே தெரியும் என்பது போல் , பிரேம் கோபாலுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது .

உங்கள் நிகழ்சி மூலம் எமது அவலத்தை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி .

எமது நிகழ்ச்சிகளை திட்டமிட்டு ஒதுக்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் , விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு கோடி நன்றி .

இப்போ....

தமிழ் ஈழத்தில் குடிப்பதற்க்கு தண்ணீர் இல்லை..

சத்தியமா என் ...

கண்களில் அழுவதற்க்கு கண்ணீர் இல்லை...

விஜய் ரீவிக்கு நன்றி நன்றீ...

www.youtube.com/TamilMahan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உங்களுடைய நன்றியை தெரிவியுங்கள்.

http://forum.indya.com/forumdisplay.php?f=429

இது அந்த நிகழ்ச்சிகான கருத்துக்களம்!

இணைப்புக்கு நன்றி.. ஒருவரும் செய்ய நினைக்காதை செய்து சிந்திக்க, கவலைப்பட வைத்துள்ளார்.. கவலையை கட்டுப்படுத்த முடியவில்லை..

முடியுமானவரை உலகம் எங்கும் கொண்டு செல்வோம் இந்த நிகழ்ச்சியை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத்து உறவு பிரேம் கோபாலுக்கு நன்றி பாராட்டுக்கள்

இந்த வீடியோ பாசம் முன் பக்கத்தில்

www.paasam.com

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரனே

சரியான தருணத்தில் செய்யப்பட்ட அருமையான ஓர் நிகழ்சி. பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலும் எங்கள் வேதனை புரியவைத்த நண்பனே உனக்கு என் வணக்கம்.

உன்னைப்போல் ஒவ்வொரு தமிழனும் தனக்கு பரிச்சயமான துறைகளில் எங்கள் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்பதற்கு நீயோர் உதாரணம். தொடரட்டும் உன் பணி. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த சந்தர்ப்பத்தை நல்லமுறையாக பயன் படுத்தி ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை எடுத்துகூறிய உங்களுக்கு நன்றிகள்

வாழ்த்துகள்

இவர் போல ஒவ்வொரு தமிழரும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

தலைவணங்கா தலைவன்!

தங்கம் நிகர் தம்பி தங்கையர்!!

தரணியிலே தமிழருக்கு

தமிழீழம் நிச்சயம்!!!

எழுதி வைத்துக்கொள்

என் தோழா!!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரா உனக்கு கோடான கோடி நன்றி நல்ல நேரத்தில் நல்லதருணத்தில் மிகவும் திறமையாக உள்ளது மனதில் உள்ள வேதனைக்கு உயிர்கொடுத்திருக்கிறாய் நன்றி பாராட்டுக்கள்

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா

என்னையும் கலங்க வைத்துவிட்டது இந்த நிகழ்ச்சி

Youtube இணைப்பு

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ...re=channel_page

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4...re=channel_page

youtube இல் இணைத்தமைக்கு நன்றி....பல தமிழக தளங்களில் இணைத்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆர்வமுள்ள விடயங்கள்மூலமே போராட்டத்தை அதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதிற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் பிரேம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களில் யார் அடுத்த பிரவுதேவா. என்ற நிகழ்ச்சியில் இலங்கையில் நடக்கின்ற கொடுமைகளை நடனத்தின் மூலம் நிகழ்த்தி காட்டிய பிறேமுக்கு தலை வணங்குகிறேன்.

பாராட்டுக்கள் பிறேம்.

இன்று தான் பார்த்தேன் என்பதை விட அழுதேன். எமக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களிலும் எம்மவலங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதற்கு இவர் போன்றவர்கள் ஒரு முன்னுதாரணம்.

ஒரு கையாலும் ஓசை எழுப்ப முடியும் என்பதற்கு இது இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையிலும் திருந்தாத ஜென்மங்கள் நாட்டுக்கு நாடு இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய சூழ்நிலையை பாவித்து பலரை இவர்கள் முடக்க முனைகிறார்கள். எங்கே அவன், இவன் பெயர் எடுத்து, எமது கதிரைக்கு ஆப்பு வந்து விடுமோ என்ற பயத்தில், வெவ்வேறு காரணங்களைக் கூறும் முடக்குகிறது/உடைக்கிறது/.... ஒரு கூட்டம். .... வேதனை .........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுவதை தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலாத பாவியாய் இருகிறேன்னே....

உங்களில் யார் அடுத்த பிரவுதேவா. என்ற நிகழ்ச்சியில் இலங்கையில் நடக்கின்ற கொடுமைகளை நடனத்தின் மூலம் நிகழ்த்தி காட்டிய பிறேமுக்கு தலை வணங்குகிறேன்.

பாராட்டுக்கள் பிறேம்.

இது எனக்காக அல்ல என் மக்களுக்காக (Link of the video)

இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் பதில் சொல்லணும் :icon_idea:

Edited by kumuthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.