Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க)

இதோ குறு நாடகம்

அங்கம் ஒன்று

திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்

வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்

நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய் களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.

மன்னர்: ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை

(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர் அப்போது இரு இளம் பெண்கள் தலைவிரி கோலமாக உள் நுளைகிறனர்.

ஒருத்தி: மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா

மன்னர்: என்ன இங்கு மலிவு விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன பிரச்சனை

ஒருத்தி : மன்னா எனது பெயர் தமிழினி இதோ இவளது பெயர் அஸ்வினி

மன்னர் : மொத்தத்திலை எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா

தமிழினி: மன்னா

மன்னர்: என்னா

தமிழினி: நான் எனது கணவர் சிதம்பரத்தாருக்கு காச்சல் எண்டு முகத்தாரின் கடையில் பாண் வாங்கி கொண்டு போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த அஸ்வினி பாணை பறித்து வைத்துகொண்டு அது தன்னுடைது எண்டு பொய் சொல்லுகிறாள் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.

அஸ்வினி: இல்லை மன்னா இல்லை இதோ பாருங்கள் பாண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவள்தான் பொய் சொல்கிறாள்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நீட்டுகிறாள்)

தமிழினி: மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்

(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)

மன்னர்: சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.

தமிழினி: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்

மன்னர்: ஆமா இந்த நாட்டுக்கு அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண் தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி மதனை வரச்சொல்லுங்கள்

மதன் வந்து வணங்கிவிட்டு: மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை வெட்ட வேண்டும். துடிக்கிறது முக்கு முடி(அவருக்குமீசையில்லை)

மன்னர்: அமெரிக்காவை அடிச்சு பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்

தளபதி மதன்: மன்னா ஒரு பிரச்சனை

மன்னர்; : உமக்குமா என்னய்யா பிரச்சனை

தளபதி மதன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....

மன்னர்: யோவ் நாம் இப்ப சண்டை தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)

;தளபதி மதன்:ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பாணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)

(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)

மன்னன்: யாரய்யா அது புதிசா திறந்த வீட்டிற்கை சே கோட்டைக்கை டண்ணின்ரை நாய் புகுந்த மாதிரி.நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்

வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் முகத்தார் எனது கடை பாணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்

மன்னர்: கொஞ்சம் முதல் வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்

முகத்தார் : மன்னிக்கவும் மன்னா நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம் செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து

மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்

முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்

மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?

முகத்தார் : பீடி வாங்கத்தான் மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள் மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்

மன்னர் : காலங்காத்தாலை என்னது வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது

  • Replies 58
  • Views 16.3k
  • Created
  • Last Reply

:lol::lol::lol: அருமை கலக்கிட்டீங்கள் சாத்திரி. நல்ல நகைச்சுவையாக

எழுதுகிறீர்கள்.. மேலும் தொடருங்கள். :lol::D

:D

--

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol::lol:

super :lol::lol::lol:

சாத்திரி நாடகம் நல்லாத்தான் இருக்குது ஆனாக் கவனம் புதுசு புதுசா விதி முறையள உருவாக்கிக் கொண்டிருக்கினம், யாராவது வித்தியாசம எழுதினாலோ அல்லது வேண்டியவை கடதாசி போட்டா கத்திதான்.

பேசாம வெட்டி ஒட்டி முக நயனங்களப் போட்டா பிரச்சனை இல்லப் போல.குத்தகைக் காரர் வருவினம், நான் வாறன்...

சாத்திரி நாடகம் அருமை. :lol: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :oops:

உங்கள் அனுமதி கிடைக்குமா? :roll:

சாத்திரி நாடகம் அருமை.

மேலும் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு நன்றி அண்ணா :P

அன்புடன்

jothika

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நாடகம் அருமை. :டழட: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :ழழிள:

உங்கள் அனுமதி கிடைக்குமா? (ரசிகா)

தாராளமாக போடுங்கள் எந்த பல்கலை கழகத்தில் படிக்கிறீர்கள். ஆனால் குறு நாடகமென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது வரவேண்டுமே வசனங்கள்; காணாதே மீதியை நீங்கள் எழுத போகிறீர்களா ? அல்லது அங்கம் இரண்டு விரைவில் வரும்

சாத்திரி நாடகம் அருமை. :டழட: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :ழழிள:

உங்கள் அனுமதி கிடைக்குமா? (ரசிகா)

தாராளமாக போடுங்கள் எந்த பல்கலை கழகத்தில் படிக்கிறீர்கள். ஆனால் குறு நாடகமென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது வரவேண்டுமே வசனங்கள்; காணாதே மீதியை நீங்கள் எழுத போகிறீர்களா ? அல்லது அங்கம் இரண்டு விரைவில் வரும்

நன்றிகள் சாத்திரி

ஆமா நீங்கள் சொல்வது சரி. உங்கள் அங்கம் 2 வந்ததும் அதையும் சேர்த்து பொடுறன் இல்லாவிட்டால் மிகுதியை நான் எழுதுகிறேன். பார்ப்பம் நேரம் கிடைத்தால்.

சாத்திரி, கலக்குறிங்க...அங்கம் 2 எப்பொழுது வெளிவருகிறது?

சாத்திரி நீ மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவன் எண்டதை புரூவ் பண்ணிவிட்டாய் (கள உறவுகளுக்காக அப்பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டியிலும் இல்லங்களுக்கிடையே நாடகப் போட்டி வைப்பார்கள் இதன் மூலம் மாணவர்களின் கலைத்திறமை வளர்க்கப்படுகிறது என்பதால் )

அந்த வகையில் வந்த சாத்திரிக்கு ஊர்உறவெண்ற முறையில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...............முகத்தார

ஐயா சாத்திரி கதை நல்லாகத்தான் இருக்கு, தொடருங்கள், ஆனால் கதையில் கள உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்துகிறீர்கள், யாருடைய மனதையும் புண்படுத்தாமலும் யாருடைய பெயருக்கும் களங்கம் வராமலும் கவனமாக உங்கள் கதையை தொடருங்கள், அரசகுடும்பத்தை சேர்ந்த உறப்பினர்கள் தேவையில்லா வில்லங்கங்களை சந்திக்கவிரும்புவதில்லை!

சாத்திரியாரே நாடகம் நல்லாயிருக்கே தொடர்ந்து எழுதுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாஹரி பயப்பட வேண்டாம் இது முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதபடுவது யாரையும் நோகடிக்க அல்ல யாராவது தங்கள் பெயர் இதில்வருவதை விரும்பாவிட்டால் எனக்கு தனிமடல் முலம் அறியதரும்படி கேட்டுள்ளேன். ஆனால் மன்னர் தான் பாவம் என்ன செய்யபோறாரோ தெரியாது

அப்ப எனக்கு அல்வா இருக்கு என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? பரவாயில்லை நான் எதையும் தாங்கும் உள்ளம், மற்றவர்களை நோகடிக்காமல் இருந்தால் சரி, மந்திரியாரே...! பார்த்தீரா ? மன்னர் பட்டத்தை 2005க்கு பதிவுசெய்யாமல் விட்டது தப்பாக போய்யிட்டுது

நல்லா இருக்கு..........................தொடருங்கள்...

...........

கொஞ்சமாவது சிரிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் இரண்டு

திரை விலகுகிறது

மன்னர் அந்தபுரத்தில் கட்டிலில்படுக்கவைக்கபட்டிர

தளபதி: ஆகட்டும் மன்னா வெற்றி வேல் வீரவேல்

மன்னர் : தளபதியே வாளை கையில் வைத்துக்கொண்டு எதுக்கையா வேல் வேல் எண்டு கத்துறீர்

தளபதி : அதுவா மன்னா வாள் வாள் என்று கத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காதல்லவா கழுதை என்று நினைத்து விடுவார்கள் அதனால்தான் வேல் வேல் எண்டு கத்துறன்

:D:D

:idea:

00000033.gif00000033.gif00000033.gif
:D:D:D:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எனக்கு அல்வா இருக்கு என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? பரவாயில்லை நான் எதையும் தாங்கும் உள்ளம், மற்றவர்களை நோகடிக்காமல் இருந்தால் சரி, மந்திரியாரே...! பார்த்தீரா ? மன்னர் பட்டத்தை 2005க்கு பதிவுசெய்யாமல் விட்டது தப்பாக போய்யிட்டுது

என்ன மன்னா பதிவு செய்யுறது.. உங்களை பற்றி தானே ரொம்ம சாதிரியார் சொல்லுறார் அப்ப நீங்கள் தனே மன்னர் . பேந்து என்ன கவலை ஆனால் என்ன எல்லாம் மன்னரை பற்றி உண்மையை சொல்லுறாரோ.. :wink: :D

நன்றாக இருக்கு சாத்திரியார் .. தொடர வாழ்த்துக்கள்

«ôâ º¡ò¾¢Ã¢, ¿¡¼¸õ «ó¾ Á¡¾¢Ã¢ :D ... ¸ÄìÌí§¸¡ ¸ÄìÌí§¸¡... ¿¨¸îͨŠ«í¸í¸û ¦¾¡¼Ã Å¡úòÐì¸û. «§¾¡¼ ¸Ç ¯È׸Ǣýà §À¨ÃôÀ¡Å¢ì¸¢È¾¢Ä ¬ð§ºÀ¨É ¯ûÇ¡ì¸û þôÀ§Å ¦º¡øÄ¢ô§À¡Îí§¸¡. .«ðÄ£Šð º¡ò¾¢Ã¢ìÌ ¾É¢Á¼øÄ¡ÅÐ ¾ÂÅ¡ ¦¾Ã¢Å¢Ôí§¸¡ :D

மன்னர்: மன்னர் மயங்கி விழுந்து மணி மாலை களவு போய்விட்ட தென்று மற்றைய நாட்டரசர்கள் அறிந்தால் காறி துப்ப மாட்டார்களா? பேசாமல் எமது ஒற்றர் தலைவன் டண்கனை வரச்சொல்லும் அவர்முலம் துப்பறிந்து இரகசியமாக பிடிக்கலாம்
என்னத்த துப்பறியப்போறார்? இவரும் இவரின் நாய்யும், இவரின் நாய் கொழும்பில் ஒரு போஸ்ட் கம்பத்தையும் விட்டுவைக்காது காலை தூக்கி தூக்கி தன்ட வேலைசெய்யவே அதுக்கு நேரமில்லை அது போய் துப்பறியப் போகுதாம்.24.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.