Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடான கோடி நன்றிகள் தமிழக வாக்காள பெருமக்களுக்கு

Featured Replies

முதல் நன்றி

எவரின் கணிப்புகளை கண்டும் மயங்காமல் ஓட்டளிப்பவர்கள் நாங்கள் என நிருபித்ததற்கு

இரண்டாம் நன்றி

ஈழ பிரச்னை முக்கியமான பிரச்சினையாக நினைத்து ஈழ மக்கள் எங்கள் தொப்புள் கோடியே என நிரூபிப்பதற்காக வேறு அனைத்து வகையிலும் பிறரை விட நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் திமுக / காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏறத்தாழ 57% எதிராக நல்ல வாக்குகளாக வாக்களித்ததற்கு

மூன்றாம் நன்றி

ஒரே பக்கம் சாய்ந்து பின்னர் அழுதுகொண்டு இருக்காமல் ஒரே பிரச்னையான ஈழ பிரச்சனைக்காகவே திமுக கூட்டணியிலிருந்து 10 க்கும் மேற்பட்ட இடங்களை பிடுங்கி எதிர்கட்சிக்கு கொடுத்ததற்கு. மேலும் இப்போது பத்துதான் ஒழுங்கா ஈழ பிரச்னையை கையாளவில்லைஎன்றால் மொத்தம் பறிபோகும் ( சட்டமன்ற தேர்தல் ) என திமுக கூட்டணிக்கு எச்சரிக்கை கொடுத்ததற்கு

நான்காம் நன்றி

கடைசி வரை பதவியை அனுபவித்து விட்டு ஈழ சொந்தங்களின் பிணத்தை வைத்து அரசியல் வியாபாரம் ஆடியவர்களை துடைத்து எறிந்ததற்கு

ஐந்தாம் நன்றி

நினைத்த போது வந்து எங்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு விளையாட நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல என அதிமுக வுக்கு நிருபித்ததற்கு

ஆறாம் நன்றி

அதிமுக 12 தொகுதிகளில் வென்றதன் ஒரே காரணம் ஈழ பிரச்னை தான் என்று தெரிந்தும் தமிழர்கள் சொரணை இல்லாதவர்கள் மற்றும் இனமானம் இல்லாதவர்கள் என திட்டும் கூட்டங்களை கண்டு கோபம் கொண்டு எதிராக திரும்பாமல் பரிதாபம் மட்டும் கொண்டு இன்னும் உதவ காத்திருப்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல்வாதிகளால் , தமிழ்நாட்டில் நடந்த , 400 தமிழ் மீனவர்களின் படு கொலைகளையே தடுத்து நிறுத்த முடியாது இருந்த போது .......

அவர்களை நோக்கி நாம் இனி எந்த ஒரு நம்பிக்கையும் வைக்காமல் இருப்பதே நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாக்காளர்களுக்கு ஈழத்தமிழனின் நன்றிகள்.

தமிழக மக்களுக்கு என்று பல பிரச்சனைகள் உள்ளன. அன்றாட வாழ்வே பிரச்சனையான பல தமிழக உறவுகள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஈழத்தமிழனுக்காகவும் கடந்து போன தேர்தலில் வாக்களிக்காமல் இல்லை. அதற்காக முதற்கண் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றிகள் பல.

ஈழத்தமிழர்கள் மீது தமிழக கட்சிகளுக்கு என்று பொதுவான அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டுள்ள தமிழக மக்கள் அவை அனைத்தும் ஒன்றுதிரண்டு ஈழத்தமிழர்களின் நலன்காக்க உரிமை காக்க செயற்பட வேண்டும் என்ற தீர்ப்பையே இத்தேர்தலில் அளித்துள்ளதாக தமிழக தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன.

ஈழத்தமிழர்களின் நலனில் சிறிதும் அக்கறை செய்யாத பலரும் மற்றும் அரசியலுக்காக ஈழத்தமிழரின் நலனை உச்சரித்த சிலரும் ஈழத்தமிழரின் நலனை போராட்டங்களை பரிகாசம் செய்த சிலரும் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

வைகோ போன்ற ஈழ உணர்வாளர்கள் பண முதலைகளின் முன் தோற்றாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளனர். அந்த வாக்குகளை அளித்த வாக்காளப் பெருமக்களுக்கு மிக்க நன்றிகள்.

மதிமுக வை இந்திய நாடாளுமன்றத்துக்கு ஈரோடு மக்கள் அனுப்பியுள்ளனர். ஈரோடு சொந்தங்கள் ஈழத்தமிழர் பற்றிய அதிக அக்கறை கொண்டவர்கள். அதற்காக தமிழகத்தின் இதர பகுதி மக்களுக்கு அக்கறை இல்லை என்பதல்ல இதன் அர்த்தம். ஒப்பீட்டளவில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். தவறாக இருப்பின் தமிழக உறவுகள் மன்னிக்க வேண்டும்.

தமிழக மக்களின் இந்த தேர்தல் தீர்ப்பானது சில இடங்களில் பணம் மற்றும் சதிகளால் மாற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் தமிழக மக்கள் தமது சொந்த தேவைகளோடு ஈழத்தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையாகி இருக்கிறது.

தமிழக மக்களின் ஈழத்தமிழர் தொடர்பான தீர்ப்பு என்பது தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களின் உரிமை காக்க உழைக்க முன்வர வேண்டும் என்பதே. எல்லாக் கட்சியினரிடமும் ஈழத்தமிழர் மீதான அக்கறை இருக்கிறது. அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. அவற்றை ஒன்றுபட்ட சக்தியாக்கி ஈழத்தமிழரின் நலன் பேண பாவிக்க வேண்டும் என்பதையே தமிழக மக்கள் உணர்த்த முற்பட்டுள்ளனர். இதனை தமிழக கட்சிகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தொடர்பான தமிழக கட்சிகளின் கருத்தொற்றுமைக்கு தமிழக மக்கள் கண்ட.. உதாரணம்:

* திமுக இறுதியில் தமிழீழம் அமைக்க முயற்சிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

* அதிமுகவும் இதே வாக்குறுதியை அளித்துள்ளது.

* தமிழக காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தானும் தனிப்படக் கூறி இருந்தது.

* விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தியது.

* மதிமுக எப்பவும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னுறுத்தியது.

* பாமக எப்பவும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னுறுத்தியது.

* தேமுதிக வும் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

* பாஜகவும் ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை செய்தது.

* இதை விட திரையுலகம் ஈழத்தமிழரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தது.

இதர கட்சிகளும் இதனிலின்றும் மாறுபட்டதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி...

கட்சி சாரா முத்துக்குமாரில் இருந்து காங்கிரஸ் கட்சி சார் உறுப்பினர் வரை ஈழத்தமிழருக்காக தீக்குளித்ததை தமிழக மக்கள் மறக்கவில்லை.தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்துள்ளனர். அவர்களின் கருத்தையே தமிழக மக்களும் பிரதிபலித்துள்ளனர்.

தமிழக மக்களின் இந்த இன உணர்வை தமிழக அரசியல் கட்சிகள் கருத்தில் எடுத்துச் செயற்படுமா.. தமிழக மக்களின் இந்தத் தேர்தல் தீர்ப்பை இனங்கண்டு மதிப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு பொறுத்திருக்க அவகாசமே இல்லை. ஏனெனில் அவர்களின் இறுதி மூச்சு இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் அடங்கிப் போய்விடுமோ என்ற அச்சமே மேலோங்கி இருக்கிறது. வன்னியில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் தமிழ் மக்கள் மிக ஆபத்தான சூழலை எதிர்காலத்தில் சந்திக்க உள்ள நிலையில் தமிழக உறவுகளின் தீர்ப்பை தமிழக கட்சிகள் கருத்தில் எடுத்து ஈழத்தமிழருக்காக ஒன்றிணைந்து இந்திய நடுவன் அரசுக்கு தேவையான அழுத்தங்களை கொடுத்து தமிழின அழிப்பைச் செய்யும் சிறீலங்கா சிங்கள அரசை கட்டுப்படுத்த முயற்சிப்பதே இப்போதைய அவசர மற்றும் உடனடித் தேவையாகும்.

மூலம்: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பான உண்மைகள்:

நிறைய தமிழக மக்களுக்கு ஈழத்தில் என்ன நடிக்கிறது என்பதே தெரியவில்லை., ஏன், முத்துக் குமாரின் மரணம் கூட இரட்டடிப்பு செய்யப்பட்டு மக்களுக்கு சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது - உபயம் "கறுணா" நிதி, Jஎயலலித.

அனைத்து தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள், மிகக் கச்சிதமாக ஈழ ச்ய்திகள்மக்களுக்கு சென்றடையமல் பார்த்துக் கொண்டது (விலக்கு: விகடன்).

இறுதி யுத்தம் போன்ற குறுந்தகடுகள் இன்னும் நிறைய மக்களுக்கு சென்றடையவில்லை.

தேர்தலில் "கருணா" நிதி கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதி தண்ணியாக (வாட்டர் மற்றும் குவாட்டர்) இறக்கப்பட்டது.

ஈழ ஆதரவு கட்சிகளின் உண்மையின்மை (இவர்கள் பிணம் விழுவதை தடுப்பதை விட வாக்கு விழுவதிலேயே காலத்தை தள்ளி விட்டார்கள்.

என்னுடைய பார்வை: தமிழக, இந்திய மீடியாக்களின் ஆதரவின்றி, தமிழக மக்களை முழு அளவில் எழுச்சியடைய செய்வது கடினம்.

என்னுடைய பார்வை: தமிழக, இந்திய மீடியாக்களின் ஆதரவின்றி, தமிழக மக்களை முழு அளவில் எழுச்சியடைய செய்வது கடினம்.

எழுச்சி அடைந்தாலும் பிரயோசனம் இல்லை தமிழனுக்கு இறையான்மை உள்ள அரசு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

" மக்கள் தொலைக்காட்சியில் " தேர்தல் அன்று ஈழத்தமிழரின் அவல நிகழ்ச்சி தொடர்பாக காட்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது ,

மின்சாரத்தை நிறுத்தி அந்நிகழ்ச்சியை மக்களை பார்க்க விடாமல் செய்ததாக அறிந்தேன் .

என்னுடைய பார்வை: தமிழக, இந்திய மீடியாக்களின் ஆதரவின்றி, தமிழக மக்களை முழு அளவில் எழுச்சியடைய செய்வது கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

200, 500, 1000 உரூவா காசுக்காக மனசாட்சியில்லாமல் எங்கட தமிழ் பெண்களையும் , குழந்தைகளையும் ,மக்களையும் முற்றிலும் கொன்றொழிக்க கொங்கிரசு திமுகவினருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவில் தனது சன்ரிவி குழுமத்தின் உதயா ரிவி தொழிலுக்காக கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்க மறுக்கும் திமுகவிற்கு தமிழக மக்களின் ஓட்டுக்கள்.

தமிழக மக்களை குழப்பும் லங்கா சீன உளவுப்பிரிவின் கைக்கூலிகள்.

இவர்களையெல்லாம் தமிழக மக்கள் புரியும் வரை தமிழக மக்களிடத்தில் ஒரு எழுச்சியும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மைகள்:

தமிழக, இந்திய மீடியாக்களின் ஆதரவின்றி, தமிழக மக்களை முழு அளவில் எழுச்சியடைய செய்வது கடினம்.

இவ்வளவு துயரங்களையும் முத்துக்குமார் போன்ற பத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்க்கொடைகளையும் கண்டபின்பும் கால் காசுக்கு விலைபோகும் ஜடங்களுக்கு இனியும் சொரணை வர வாய்ப்புகள் அரிது. இதற்கு மேலும் வேதனை தமிழர்களுக்கு இனி வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பார்வை: தமிழக, இந்திய மீடியாக்களின் ஆதரவின்றி, தமிழக மக்களை முழு அளவில் எழுச்சியடைய செய்வது கடினம

நீங்கள் சொல்வது உண்மைதான் கதிர்வேல்

தமிழகத்தை பொருத்தவரை மக்கள் பெரும்பான்மையான நேரத்தை சன் டிவி யில் தான் விறையம் செய்கிறார்கள்.

அதில் அவர்கள் கூருவதுதான் உளகில் நடந்து கொண்டு இருக்கிறது ,

என்று என் கூ முட்டை தமிழினம் எண்ணி கொள்கிறது.

அதனால்தான் தனியே கலைஞர் டிவி் சேனல் உருவாக்கிய குள்ள நறி.

தமிழக ஆட்டு மந்தையாம் எம் மக்களிடம் எடு படாததால்.

மீண்டும் இரத்த பாசம் உருவாகி மாரனிடம் ஒட்டிகொண்டது அந்த குள்ள நறி.

தமிழனின் உணர்வை மழுங்கடிக்கும் குள்ள நறியின் குடும்ப தொல்லைகாட்சிகளை.தமிழனை விட்டு புறக்கணிக்க வேண்டும்.(அழிக்கவேண்டும்)

Edited by anbujaya

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழகத்தில் படித்த காலத்தில் என்னிடம், சிங்கள நாட்டுக்குப் பிழைக்கச் சென்று பின்னர் அவர்களிடம் சண்டை போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்ட சக மாணவர்கள் நிறையப் பேர். அவர்களிடம் நாங்கள் அப்படிச் சென்றவர்கள் அல்லர் என்று சொல்லி விளங்கப்படுத்த வேண்டி இருந்தது. இப்போதுள்ள மாதிரி ஊடக வசதி இல்லாத அந்தக் காலத்தில் தமிழகம் பல உண்மைகளை அறியாமல் இருந்திருப்பதில் நியாயம் உள்ளது.

ஆனால் இந்த தகவல் தொழிநுட்ப யுகத்திலும் சமீபத்தில் இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டதாக அறிந்தேன். அது கேட்டவர்களின் தவறு அல்ல. பிரபலமான ஊடகங்கள் (சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள்) மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்லாததே காரணம். அண்டிப்பிழைக்க வந்த சிங்களவன் தமிழனைக் கொல்கிறான் என்கிற உண்மை மக்களைச் சென்று அடைய வேண்டும்.

ஒரு நடிகரே தமிழகத்துக்கு ஈழத்தமிழர் எல்லோரையும் அழைத்து மீள் குடியேற்றத் தான் தயார் என்று ஒருமுறை அறிவித்ததாக ஞாபகம். அந்த அளவில்தான் எல்லாம் உள்ளது. இதற்கு யாரையும் நொந்து பிரயோசனம் இல்லை.

Edited by Danguvaar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.