Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் புற நிலை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கண்டிப்பாக இளையோரே முன்னிலை வகிக்கவேண்டும். அவர்களிடம் போட்டி பொறாமை பழிவாங்கல் தன்மை இருக்காது.மாறாக வேகமும் விவேகமும் இருக்கும். அதை;துலக நாடுகளிலும் தொடர்பாடலை இலகுவாக செய்வார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் போதும்.

  • Replies 102
  • Views 11.1k
  • Created
  • Last Reply

அண்மையில் பிரான்சில் தமிழ் அமைப்புக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார்கள். இந்தத் தமிழ் அமைப்புகள் பிரான்சில் பரவலாக பல நகரங்களிலும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் அரச அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டவை. இவை மக்களின் பங்களிப்புடனும் அரசாங்கம் வழங்கும் உதவிப்பணத்துடனும் பல்வேறு செயற்பாடுகளினால் வரும் வருவாயைக் கொண்டும் பொருளாதார ரீதியாக ஆரோக்கியத்துடன் இயங்குகின்றன. ஜனநாயக ரீதியாகச் செயற்படும் இவ்வமைப்புக்களைப் புற நிலை அரசுக்கான அடித்தளமாகப் பயன்படுத்தலாம்.

உடனடித் தேவையான வன்னி மக்களுக்கான அவசர உதவிகளை முதல் நோக்கமாக வைத்து இவாறான அமைப்புக்கள் இணைய முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியமில்லை...

1) மோகன் வெளிப்படையான கருத்துப்பகிர்விற்கு முன்வராமல், கருத்துக்களை தன்னிச்சையாக நீக்கும்வரை!

3) விடுதலைபுலிகள், தமிழீழம், தமிழ்தேசியம் என்ற வரையறைகளுக்கு அப்பால் செல்லும் களவிதிகளுக்கு உட்பட்ட உரையாடல்களை அனுமதிக்காதவரை!

காலத்தின் தேவை கருதி யாழும் மாறத்தான் வேண்டும்.

இதை மாணவர்களிடமும், இளைய தலைமுறையிடமும் விட்டால் சரியாக இருக்கும் எனப் படுகின்றது. பெரியவர்களின் ஆலோசனைகளையும் ஆதரவினையும் எடுத்துக் கொள்ளலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன உறவுகளே?????

  • தொடங்கியவர்

ஒரு அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மாணவர்கள், இளைய சமுதாயத்தினரிடம் மட்டும் கொடுத்து விட்டால், அது அரசு போன்ற தோற்றத்தைக் கொடுக்காது.

இளைய சமுதாயத்தினர், பெரியவர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள் என்று எல்லோரையும் கொண்டதாக எமது புறநிலை அரசு அமைய வேண்டும்.

சிங்கள, இந்திய அரசுகளின் ராஜதந்திரத்திற்கு ஈடுகொடுத்து அரசியல் வேலைகளை செய்யக் கூடிய திறமைசாலிகளும், கொள்கைப்பிடிப்பாளர்களும் வேண்டும்.

இளைய சமுதாயம் என்று வருகின்ற பொழுது நான் பரமேஸ்வரன் போன்றவர்களை முன்மொழிவேன். இப்படியானவர்களிடம் அரசியற் தெளிவும் கொள்கைப் பிடிப்பும் இருக்கின்றது. மக்களும் நிச்சியமாக தேர்ந்தெடுப்பார்கள்.

Edited by சபேசன்

ஒரு அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மாணவர்கள், இளைய சமுதாயத்தினரிடம் மட்டும் கொடுத்து விட்டால், அது அரசு போன்ற தோற்றத்தைக் கொடுக்காது.

இளைய சமுதாயத்தினர், பெரியவர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள் என்று எல்லோரையும் கொண்டதாக எமது புறநிலை அரசு அமைய வேண்டும்.

சிங்கள, இந்திய அரசுகளின் ராஜதந்திரத்திற்கு ஈடுகொடுத்து அரசியல் வேலைகளை செய்யக் கூடிய திறமைசாலிகளும், கொள்கைப்பிடிப்பாளர்களும் வேண்டும்.

இளைய சமுதாயம் என்று வருகின்ற பொழுது நான் பரமேஸ்வரன் போன்றவர்களை முன்மொழிவேன். இப்படியானவர்களிடம் அரசியற் தெளிவும் கொள்கைப் பிடிப்பும் இருக்கின்றது. மக்களும் நிச்சியமாக தேர்ந்தெடுப்பார்கள்.

நன்றி சபேசன்!

காலத்தேவைகேற்ப தகுந்த கருத்தினை முன்வைத்துள்ளீர்கள்.

நீங்கள் சொல்வதுபோல் எல்லோரையும் அடக்கிய ஒரு தலைமையை உருவாக்குவது சிறந்ததுதான்.

"தமிழருக்கான அரசு" என்று வரும்போது அது புலிக்கொடியின் கீழ்தான் அமையவேண்டும். அதற்கு தகுதியானவர்களை இனங்கண்டு "என்றும் நம்பிக்கையுடைய" அவர்களை தலைமைகளாக அமர்த்த வேண்டும்.

பெரும்பாலும்.... தூய மனத்துடன், மனந்தளராமல் போராடுபவர்களாக மாணவர்களும் இளம் தலைமுறையினருமே செயற்படுவதாகவே தெரிகின்றது. அதனால்தான் இக்கருத்தினை முன்வைத்தேன்.

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்

தமிழீழ புறநிலை அரசுக்கான பொருளாதர அடிப்படை பற்றியும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

மற்றைய புறநிலை அரசுகள் தமது பொருளாதாரத் தேவைகளை வெளிநாடுகளில் வாழ்ந்த தம்முடைய மக்களிடம் ஒரு சிறிய தொகையை வரியாக அறவிட்டு சமாளித்துக் கொண்டன.

பெரும்பாலான புறநிலை அரசுகள் தமது நாட்டிற்கான இராணுவத்தை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டியிருந்தன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருளாதார வளம் தேவைப்பட்டிருந்தது.

தமிழீழப் புறநிலை அரசு ஒரு இராணுவத்தை கட்டி எழுப்புவதற்கு உலகம் அனுமதி அளிக்கப் போவது இல்லை. ஈழத்திலும் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக என்றாலும் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல் தெரிகின்றது.

அப்படியான நிலையில் இதுவரை ஆயுதப் போராட்டத்திற்கு ஒன்று குவிக்கப்பட்ட பொருளாதார வளத்தின் பெரும் பகுதியை நாம் புறநிலை அரசுக்கு வழங்கலாம்.

உதாரணமான ஒவ்வொருவரும் தமிழீழப் புறநிலை அரசுக்கு மாதம் 10 யூரோக்களை வரியாக செலுத்தலாம். அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து உருவாக்கும் புறநிலை அரசு பொருளாதாரத் தேவைகளை சுலபமாக ஈடுசெய்யும் என்றே நான் நம்புகிறேன்.

Edited by சபேசன்

சபேசனினதும் காவடியினதும், மற்றும் ஏனையோரின் கருத்துகளுடன் நானும் இணங்குகின்றேன். இது பற்றிய விவாத்தை ஆரம்பித்த சபேசனிற்கு நன்றிகள். காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தாடல்

இப்போது நான் இருக்கும் மனநிலையில் காத்திரமான கருத்துகளை வைக்க முடியாமல் ஆத்திரமான கருத்துகள் தான் வருகின்றன. எவ்வளவு நன்மை செய்தாலும் இறுதியில் என்னையும் கூட simple ஆக துரோகி பட்டம் கொடுத்து மகிழ்ந்து விடுவார்களோ என்று வேற பயம் இருக்கு. என் மனம் கொஞ்சம் தணிந்த பின் என் கருத்துகளை வைக்கின்றேன்

தமிழீழ புறநிலை அரசுக்கான பொருளாதர அடிப்படை பற்றியும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

மற்றைய புறநிலை அரசுகள் தமது பொருளாதாரத் தேவைகளை வெளிநாடுகளில் வாழ்ந்த தம்முடைய மக்களிடம் ஒரு சிறிய தொகையை வரியாக அறவிட்டு சமாளித்துக் கொண்டன.

பெரும்பாலான புறநிலை அரசுகள் தமது நாட்டிற்கான இராணுவத்தை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டியிருந்தன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருளாதார வளம் தேவைப்பட்டிருந்தது.

தமிழீழப் புறநிலை அரசு ஒரு இராணுவத்தை கட்டி எழுப்புவதற்கு உலகம் அனுமதி அளிக்கப் போவது இல்லை. ஈழத்திலும் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக என்றாலும் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல் தெரிகின்றது.

அப்படியான நிலையில் இதுவரை ஆயுதப் போராட்டத்திற்கு ஒன்று குவிக்கப்பட்ட பொருளாதார வளத்தின் பெரும் பகுதியை நாம் புறநிலை அரசுக்கு வழங்கலாம்.

உதாரணமான ஒவ்வொருவரும் தமிழீழப் புறநிலை அரசுக்கு மாதம் 10 யூரோக்களை வரியாக செலுத்தலாம். அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து உருவாக்கும் புறநிலை அரசு பொருளாதாரத் தேவைகளை சுலபமாக ஈடுசெய்யும் என்றே நான் நம்புகிறேன்.

"வரி" என்ற வார்த்தையை "பங்களிப்பு" என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

  • தொடங்கியவர்

வரி என்று சொல்வதா, பங்களிப்பு என்று சொல்வதா போன்றவையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

புறநிலை அரசு பற்றி மக்களுக்கு புரிய வைத்து, இதை குழப்ப முனைபவர்களை சமாளித்து, இப்படியான ஒரு அரசை உருவாக்குவதுதான் மிகப் பெரிய சவால். இதை செய்து விட்டால், மற்றவையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

வரி என்று சொல்வதா, பங்களிப்பு என்று சொல்வதா போன்றவையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

புறநிலை அரசு பற்றி மக்களுக்கு புரிய வைத்து, இதை குழப்ப முனைபவர்களை சமாளித்து, இப்படியான ஒரு அரசை உருவாக்குவதுதான் மிகப் பெரிய சவால். இதை செய்து விட்டால், மற்றவையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

நிச்சயமாக சபேசன்

[வரி என்று சொன்னாலே அலறியடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் சொன்னேன்]

இதை மாணவர்களிடமும், இளைய தலைமுறையிடமும் விட்டால் சரியாக இருக்கும் எனப் படுகின்றது. பெரியவர்களின் ஆலோசனைகளையும் ஆதரவினையும் எடுத்துக் கொள்ளலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன உறவுகளே?????

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்!

தமிழீழ புறநிலை அரசு நல்ல ஓர் யோசனைதான். ஆனால்... நடைமுறைச்சிக்கல்கள் என்று பார்த்தால்.. இது எப்படி சாத்தியமாகும் என்று சொல்லத்தெரியவில்லை. ஜனநாயக வழியில் என்று போனால்... அனைத்து தரப்பினரையும் உள்வாங்கவேண்டிவரும். அதாவது புலி எதிர்ப்பாளர்களும் உள்ளடக்கம் பெறுவார்கள். இது முதலாவது சிக்கல்.

அடுத்ததாக... ஏற்கனவே நாடுகள் வாரியாக அரசியல் அமைப்பு என்று கிட்டத்தட்ட சொல்லக்கூடிய வகையில் அமைப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக, கனடா தமிழ் காங்கிரஸ். பல்வேறு நாடுகளில் உள்ள இப்படியான வெவ்வேறு அமைப்புக்களை முதலில் ஒன்றிணைக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். தவிர, தலைமைக்கான போட்டி நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும்.

உதாரணமாக... பச்சையாக சொன்னால்... கனடா காங்கிரஸ்காரர் தமது சொல்லின் கீழ் செயற்படக்கூடிய கனேடிய தமிழ்மக்கள் கூட்டம் இன்னுமோர் பிரதிநிதியின் (புறநிலை அரசின் கனடா பிரதிநிதிகள்) கட்டளைகளிற்கு கீழ்ப்பட்டு இயங்குவதை எப்படி வரவேற்பார்கள் என்று சொல்லத்தெரியவில்லை.

தவிர, தமிழ் ஊடகங்களிடையே ஓர் ஒற்றுமை புரிந்துணர்வு இல்லை. ஒவ்வொருத்தரும் தங்களை எழுப்புவதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள எல்லா தமிழ் மக்களிற்கும் ஒரே செய்தி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படுவதில்லை. பாரபட்டசம் காட்டப்படுகின்றது. இப்படி பல விசயங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.

மேலும்... தமிழீழ தேசியத்தலைவர் உயிருடன் இருகின்றாரோ அல்லது இல்லையோ... ஆனால்.. தலைவர் இருக்கின்றார் அல்லது இல்லை என்று கூறி தற்போது இருகூறுகளாக பிரிந்துள்ள வெளிநாடுகளில் வாழும் மக்கள்கூட்டம் இப்படியான புறநிலை அரசில் ஒன்றுசேர்வார்களா?, ஒற்றுமையாக செயற்படுவார்களா? இவர்களை ஒன்றிணைத்து காரியமாற்ற முடியுமா என்பது கேள்விக்குறி.

எப்படியோ செப்படிவித்தைகள் மூலம் நடைமுறைச் சாத்தியமான, ஆற்றல்மிக்க புறநிலை அரசு ஒன்று விரைவில் அமைந்தால் சந்தோசம்.

  • தொடங்கியவர்

கலைஞன்,

நீங்கள் சொல்வது போன்று நிறைய சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புலி எதிர்ப்பாளர்கள் புறநிலை அரசில் இடம் பெறுவதை நான் சிக்கலாகப் பார்க்கவில்லை. அதை ஒரு நல்ல விடயமாகத்தான் பார்க்கிறேன். மக்களின் வாக்குகளை பெற்று அவர்கள் வந்தால் வரட்டும்.

புறநிலை அரசுக்கான உறுதியான யாப்பினை வரைவதன் மூலம் பல சிக்கல்களை நாம் தீர்க்கலாம்.

இதுவரை புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளில் எத்தனையோ முரண்பாடுகள் இருந்தன. ஆனால் தேசியத் தலைவரின் பெயரில் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தில் புறநிலை அரசு வரவேண்டும். மக்களால் ஒரு புறநிலை அரசு உருவாக்கப்படுகின்ற பொழுது, அனைவரும் அதற்கு மதிப்பளித்து, கட்டுப்பாடுடன் நடக்க வேண்டிய நிலை உருவாகும்.

கனடா தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் தமது "இடம்" போய்விடும் என்று கலங்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். காரணம் புறநிலை அரசு அமைந்தால், இப்படியான அமைப்புகளும் மக்களின் ஆணையைப் பெற்று அதில் இடம் பெறுவார்கள்.

தமிழீழப் புறநிலை அரசு அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மக்களினுடையதாக இருக்க வேண்டும்.

புறநிலை அரசு பற்றிய ஒரு பாரிய பரப்புரையை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமையும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் தொடர்ந்தும் இருக்கப் போவது இல்லை. இந்ந நிலை மாறுவதற்குள் புறநிலை அரசை உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் புற நிலை அரசு... இந்தப் பதத்தை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க முடியுமா..??!

தமிழீழம் என்ற ஒரு நிலப்பரப்பு இப்போது உலகில் எங்கும் இல்லை. எந்த ஒரு உலக அரசும் தமிழீழம் என்பதை உச்சரிக்கத் தயாராக இல்லை.

நோர்வே உட்பட மேற்குலக நாடுகள் தமிழ் மக்களுக்கு அனைத்து சமூகங்களைப் போலவும் வாழ சம உரிமை கொடுக்கக் கேட்கின்றன.

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டம் என்பது மேற்குலக நாடுகள் சிறீலங்கா மீது செலுத்த இருக்கும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு அனுமதிப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் நாளை சிறீலங்காவுடன் நெருங்கி உறவாடும் வேளை வரின்.. விடுதலைப்புலிகளுக்கு எவ்வாறு தடைகள் வந்தனவோ அவ்வாறு 24 மணி நேரங்களுக்குள் புலம்பெயர்ந்தவர்கள் நடத்தும் கூட்டங்கள் முயற்சிகள் அனைத்தும் ஒடுக்கப்படும். அது ஒன்றும் அவ்வவ்வரசுகளுக்குப் பெரிய காரியமில்லை.

1998 இராணுவ இராணுவ வெற்றிகளை மையமாக வைத்து தமிழ் மக்கள் முன் இறுதிப் போர் மாயை மானை அவிழ்த்துவிட்டு கவுண்டு கொட்டியாச்சு.. எனி புலம்பெயர் நாடுகளில் நடக்கும் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களை மையமாக வைச்சு அடுத்த மாய மானை தமிழ் மக்களுக்கு காட்டிவிட சிலர் முனைகின்றனர்.

சிங்கள தேசியம்.. இன்று சர்வதேச அரங்கில் தமிழ் தேசியத்தை முறியடிக்கும் நிலை இருக்க.. தமிழீழப் புறநிலை அரசு.. என்பது இன்னொரு மாய மான்..! ஏன் தமிழர்கள் யதார்த்தத்தை தரிசிக்க திராணி அற்றவர்களா..??!

இதுதான் தமிழர்கள் இன்று இருந்ததையும் இழந்து நிற்க முக்கிய காரணம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்காலபோவான் ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள காடையருடன் கைகோர்த்து தமிழர்கள் வாழலாம் என்று சொல்லவாறீங்கள் போல இருக்கின்றது?

என்னைப்பொறுத்தவரையில் இந்த புறநிலை அரசு என்பது... உருவாக்கப்படுவது நடைமுறையில் சாத்தியம் குறைவாக இருந்தாலும் அல்லது கடினமான பணியாக அமைந்தாலும் அப்படி ஒன்று அமைவது மிகவும் நல்லது என்று நினைக்கின்றேன். இங்கு சட்டவிரோதமாக நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை. இதனால்... தடைகள் செய்வார்கள் என்று அஞ்சத்தேவையில்லை.

ஆனால்.. சிக்கல் என்ன என்றால்... விடுதலைப்புலிகள் அமைப்பை இந்த புறநிலை அரசு காட்சிப்படுத்துவதாக இருந்தால் அல்லது அந்த விம்பத்தை தோற்றுவதாக இருந்தால்... தடைகள், சிக்கல்கள் வரக்கூடும்.

கடலினூடாக பயணம் செய்யும்போது படகில் செல்லவேண்டும். தரையினூடாக செல்லும்போது வண்டியில் செல்லவேண்டும். கடலில் வண்டி பயன் அற்றது. தரையில் படகு பயனற்றது. புறநிலை அரசு என்று வரும்போது இந்தச்சிக்கல் இருக்கின்றது. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது படகை அல்லது வண்டியை தூக்கி எறிந்துவிட்டு காலத்திற்கு ஏற்ற சாதனத்தை தேர்வு செய்ய தமிழ்மக்கள் தயாராக இருக்கின்றார்களா? இந்தவிடயத்தில் தமிழ்மக்களை ஒன்று சேர்க்கமுடியுமா? ஒன்று சேர்வார்களா?

  • தொடங்கியவர்

இப்படிப் பார்த்தால் நாங்கள் இங்கே எதுவுமே செய்யத் தேவையில்லை என்று ஆகி விடும்.

ராஜபக்ஸ குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற முயற்சியை விட தமிழீழத்தின் புறநிலை அரசை அமைக்கு முயற்சி இலகுவானது என்று நினைக்கிறேன்.

நாம் எமக்குள் தேர்தல் நடத்துவதை எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது. ஒரு கட்டமைப்பையும், ஒரு தலைமைக் குழுவையும் அமைப்பதையும் யாரும் தடுக்க முடியாது. இந்தக் கட்டமைப்பை தமிழீழப் புறநிலை அரசு என்று நாம் பரப்புரை செய்வதையும் தடுக்க முடியாது:

இந்தக் கட்டமைப்பின் ஊடாக எமது பொருளாதாரத்தை ஒன்று குவித்து, அனைத்து வேலைகளையும் செய்வோம்: உலக நாடுகளை இந்த புறநிலை அரசுடன் பேசுவதற்கு தூண்டுவோம்.

முக்கியமாக

தமிழீழம் என்பது மாயமான் அல்ல. இன்றைய போரில் நாம் தோற்று விட்டோம்: இரண்டாயிரம் ஆண்டுகளாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துள்ளன. சில நூற்றாண்டுகள் கழித்து நாம் மீண்டும் வெற்றி பெறலாம்.

அதற்காக என்றாலும், ஒரு புறநிலை அரசை உருவாக்கி, தமிழீழம் என்ற கனவை தலைமுறை தலைமுறையாக கொடுத்துக் கொண்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான் ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள காடையருடன் கைகோர்த்து தமிழர்கள் வாழலாம் என்று சொல்லவாறீங்கள் போல இருக்கின்றது?

எனது கருத்து அதுவல்ல. தமிழீழத்துக்கு வெளியில் ஒரு அரசு அர்த்தமற்ற முயற்சி. எமது விடுதலை என்பது எமது மண்ணை அடிப்படையாகக் கொண்டது. வெளிநாடுகளில் தமிழீழ ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்கலாம். ஆனால் தமிழீழ எல்லைகளுக்கு அப்பால் ஒரு அரசு தமிழர்களுக்கு எந்த அதிகார வரம்புகளும் அற்ற ஒரு மாய மானாகவே இருக்கும்.

எமது எதிர்கால செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளை மையமாக மட்டும் கொண்டிருக்கக் கூடாது. தமிழீழத்தை நோக்கியதாக தமிழீழ மண்ணில் அமைய வேண்டும். சிங்கள அரசின் ஒவ்வொரு நகர்வுகளையும் எனி நாம் ஜனநாயக வழியில் முறியடிக்க தயாராக இருக்க வேண்டும். தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் தேர்தல்களை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும். எமது மக்களை மண்ணை சிங்கள ஆட்சியாளர்களிடம் அடகு வைத்து வைத்துவிட்டு.. நாம் ஒரு புறநிலை அரசை பெயருக்கு நிறுவுவதன் மூலம்.. மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன பயன் கிடைக்கும். எமது இந்த முயற்சி தாயக மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பை எவ்வாறு தடுத்து நிறுத்தும்..??!

எம்மால் ஒரு மனிதாபிமானக் கப்பலையே வன்னிக் கரைக்குக் கொண்டு போக முடியவில்லை. இந்த நிலையில்.. எமக்கு தமிழீழப் புறநிலை அரசு அவசியமா.. தமிழீழத்துள் எமது அரசியல் பலம் அவசியமா..??! இதன் மூலம் சிங்கள அரசை ஆதரிக்கச் சொல்லவில்லை. எமது மக்களோடு இருந்து ஜனநாயகத்தோடு பயணித்துக் கொண்டுதான் அடித்த படிநிலைக்கு நாம் போக வேண்டும்.

புலம்பெயர் நாடுகளை மையமாகக் கொண்ட தமிழீழ அமைப்பு என்பது வணக்கா முடிக்கு நிகழ்ந்ததையே எப்போதும் நிகழ்த்தும்..! காரணம் புலம்பெயர் நாடுகள் மீது அரசியல் ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ நாம் செல்வாக்குச் செய்வது என்பது அத்துணை சுலபமான விடயம் அன்று. ஆனால் எமது மண்ணில் எமது மக்களின் பலத்தோடு எமது அரசியல் கருத்தியல் பலத்தை உலகுக்குக் காட்ட முடியும். அவர்களோடு புலம்பெயர் மக்களும் தமது பலத்தை ஒருமிக்க வேண்டியதே இன்றைய தேவை என்பது எனது நிலைப்பாடு. இது தவறானதாகக் கூட படலாம்.

கிழக்கின் தேர்தலை புறக்கணித்தோம். என்ன ஆனது. வடக்கின் தேர்தலையும் புறக்கணித்தோம் என்றால் என்ன ஆகும். இந்த புறநிலை அரசுகள்.. எமது மண்ணில் எதை சாதிக்க முடியும்..??! தமிழீழம் என்பதை அதன் எல்லைகளுக்கு வெளியில் இருந்து உச்சரிப்பதைவிட அதன் எல்லைக்குள் இருந்து உச்சரிப்பது பலம் என்று நினைக்கிறேன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்,

சில சர்வதேச அரசியல் காய் நகர்த்தலை புறநிலை அரசினாலேயே செய்ய முடியுமென படுகிறது.. காரணம் தாயகத்தில் சிங்கள அடக்குமுறைக்குள்ளேயே எந்த ஒரு கட்டமைப்பும் இருக்கும். அவர்களால் அதை மீறி எதையும் செய்யமுடியாது. புறநிலை கட்டமைப்பில் அவர்களும் சேந்து கொள்வது என்னும் பலமுள்ளதாய் அமையுமல்லவா?

இந்த தளத்தில் சில தகவல்கள் இருகின்றன: http://en.wikipedia.org/wiki/Exile_government

வணங்காமண்ணுக்கு நிகழ்ந்த கதி கசப்பான உண்மைதான். ஆனால்... இப்படிப் பார்த்துவிட்டு புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கக்கூடாது. புறநிலை அரசால் சாதிக்கக்கூடிய விடயங்களுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது என்பது உண்மை. தவிர, தாயகத்து அரசியலுடன் சமாந்தரமாக பயணிக்கவேண்டிய தேவையும் இப்படியான புறநிலை அரசு அமைக்கப்பட்டால் அதற்கு இருக்கின்றது.

தற்போது உள்ள நிலமையைப் பார்த்தால் தாயகத்தில் தமிழ்மக்களை உண்மையில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் // அங்கத்தவர்கள் சிறீ லங்கா ஜனநாயக நீரோட்டத்தில் இடம்பெறமுடியுமா என்பதே பெரியதோர் கேள்விக்குறியாக இருக்கின்றது.

மகிந்த அரசாங்கம் தமிழ்கட்சிகளை ஓரம்கட்டுவதோடு... பேரினவாத அரசியல் கட்சியில் தமிழர்களை அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றது. இப்படியான போக்கும் தாயகத்தில் உள்ள தமிழர்களிடையே பிளவுகளையும், பதவிப்போட்டியையும் உருவாக்கும் என்பது திண்ணம். இது எதிர்காலத்தில் பல டக்லஸ் தேவானந்தாக்களையும், கருணாக்களையும், லக்ஷ்மன் கதிர்காமர்களையும் உருவாக்கப்போகின்றது.

இப்படியான ஓர் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புகளுக்கு (சும்மா ஓர் கதைக்கு) தேர்தலில் வெற்றி கிடைக்குமா என்பதே சந்தேகம். மேலும், தேர்தலில் நடைபெறும் ஊழல்களை, சிறீ லங்கா பயங்கரவாத அரசாங்கத்தினால் செய்யப்படும் ஜனநாயக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்.

இந்தநிலையில்... சிங்களக் குடியேற்றங்களும் தொடரப்போகின்றது...!

அப்படியாயின்...

தாயகத்தில் சிறீ லங்கா அரசின் ஆணையின் கீழ் நடைபெறும் 'ஜனநாயகம் (?)'' என்பதே ஓர் மாயமான்! இதுவே யதார்த்தம் நெடுக்காலபோவான்.

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் ஆணைக்கு உட்பட்ட ஆட்சியில் தாயகத்தில் மக்கள் எப்படி ஜனநாயக ரீதியாக வாழமுடியும்? இது சாத்தியப்படப்போவதில்லை.

தாயகத்தில் (+ தென்பகுதியிலும்) தமிழ் மக்கள் அடிமை வாழ்வை வாழ்கின்றார்கள், வாழப்போகின்றார்கள்.

Edited by கலைஞன்

தமிழீழம் என்பதை அதன் எல்லைகளுக்கு வெளியில் இருந்து உச்சரிப்பதைவிட அதன் எல்லைக்குள் இருந்து உச்சரிப்பது பலம் என்று நினைக்கிறேன்..! :rolleyes:

சான்ஸே இல்லை... அவனவன் தமிழ் எண்டு சொல்லவே பயப்புடுறான்......

சான்ஸே இல்லை... அவனவன் தமிழ் எண்டு சொல்லவே பயப்புடுறான்......

பயங்கரவாதிகளுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் - அரசாங்கம்

இதுவே யதார்த்தம். இப்படியான நிலையில்... தாயகத்தில் ஜனநாயக ரீதியாக.. ?

இந்த கருத்தாடல் பற்றிய முக்கியத்துவம் ஒரு புறம் இருக்கட்டும். இவ்வாறான ஒரு கோணத்தில் எழுச்சி கொள்வது என்பது தாயக மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை சற்று கவனத்தில் கொள்ளுதல் அவசியமானது. எமது முடிவுகள் ஒவ்வொன்றும் சிங்கள சிறையில் இருந்து விடுபட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் இருந்து வருவதைக் காட்டிலும் சிங்களச் சிறையில் இருக்கும் எமது உறவுகளின் பொருட்டு நிதானமாக வர வேண்டும்.

எடுத்தேன் கவுத்தேன் என்று தனியரசு புறநிலை அரசு என்ற கோணத்தில் நகர முடியாது. இதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. இன்றய நிலையில் சரணடைந்த புலிகள் என்ற நிலையில் 10 000 பேர் இராணுவத்தின் கைகளில் உள்ளனர். இது வெளிப்படையானது. மறைமுகமாக இவை எத்தனை ஆயிரம் என்று தெரியாது. இதை விட இராண்டு லட்சத்து எழுபதாயிரம் மக்கள் வடிகட்டப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் விபரம் இன்னும் இல்லை.

ஒட்டுமொத்த வன்னிச் சனமே கால் கைகளில் விலங்கிடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை இல்லாதொழிக்கப்படுகின்றது. தனி தமிழீழ அரசு என்ற எண்ணம் உளவியல் ரீதியில் புடுங்கி எறியப்படுகின்றது. சிங்களம் போராட்டத்தை அளிப்பதில் வெற்றி பெற்றதோடு நிற்கவில்லை. அவ்வாறானதொரு எண்ணமே இனி வரக் கூடாது என்றளவில் அதை அடியோடு அழிக்கும் வரை ஒயப்போவதில்லை.

நாம் எடுக்கும் பிரிவினை அடிப்படையிலான தனியரசுக்கான முயற்சிகள் எந்தளவு தூரம் இராணுவத்தின் கைகளில் சிக்கியுள்ள மக்களை பாதிக்கும் என்பதை சிந்தித்தேயாகவேண்டும். இத்தால் நான் சொல்லவருவது இவ்வாறான சிந்தனைகள் தவறு என்பதில்லை, மாறாக நாம் படிப்படியாக நகரவேண்டும். எமது மக்களின் பாதுகாப்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் இவ்வாறான முயற்சிக்கு மூன்றாம் தரப்பின் கண்காணிப்பை வலியுறுத்துதல் என்று யதார்த்தத்துக்கு தேவையானதும் பொருத்தமானதுமான பாதையில் பயணிப்பதே முதலில் நல்லது.

சிங்களம் தனது இறுதி இலக்கை அடைந்தது ஒன்றும் கடந்த பதினைந்து மாத யுத்தம் மூலம் கிடையாது. மாறாக அது படிப்படியாக மதரீதியில் தமிழர்களை பிரித்து பிரதேச ரீதியில் தமிழர்களை பிரித்து புத்திஜீவிகள் மற்றும் குழுக்களை பிரித்து தமிழர்களை பலவீனமாக்கி தொடர்ச்சியாக ராணுவரீதியில் வெற்றி பெற்றது என்பதே கண்கூடான உண்மை. நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தனியரசு புறநிலை அரசு என்று முழக்கமிடும் போது எமக்கும் தாயக மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவது சிங்களத்தின் தவிர்க்கமுடியாத தேர்வாக அமையும். இந்த அமைவில் தாயகமக்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும்.

தாயகத்தில் தமிழீழ தனியரசு என்ற முழக்கமும் இதன் பொருட்டு மக்கள் படைக்கட்டுமானம் மற்றும் இதர முயற்சிகளுக்கு உட்பட்ட மக்கள் இன்று எதிர்மறைவிழைவை சந்திக்கின்றனர். சுதந்திர வாழ்வுக்காக முன்னர் தயார்படுத்தப்பட்ட நிலை இன்று அடிப்படை சுதந்திரத்தையும் உயிரையும் குடிக்கும் அபாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இருந்து மக்கள் மீள்வதற்குரிய மாற்று வழிகள் அடிப்படைகள் எதுவும் இல்லை.

நாம் துரோகி என்று யாரைவேண்டுமானாலும் சொல்லலாம். நிச்சயமாக. ஒவ்வொருவரும் மற்றவரை பார்த்து துரோகி என்று சொல்வதற்கு தாராளமான காரணங்கள் இருக்கின்றது. தமிழர்களை பொறுத்தவரை துரோகி என்ற பதம் ஒரு வலுவற்ற நகைப்புக்குரிய ஒன்று. நாம் பிரிவினைகளில் இருந்து படிப்படியாக இனமாக ஒருங்கிணைய வேண்டும். எமது இனத்துக்குள் இருக்கும் பல்வேறுபட்ட பிரிவினைகள் முரண்பாடுகள் களையப்படவேண்டும். அனுசரிப்புகளும் விட்டுக்கொடுப்புக்களும் மறத்தல்களும் மன்னிப்புக்களும் தாராளமாகி ஒருவரை ஒருவர் நேசித்து இனமாக ஒருங்கிணையவேண்டும். அப்போதே நாம் பலம்பெறமுடியும். பலவீனமான நிலையில் தனியரசு புறநிலை அரசு போன்றவை வெற்றிபெறமாட்டாது. இது எதிர்மறைவிழைவுகளுக்குள் எம்மைத் தள்ளும். அடையாளம் தேடும் போட்டி நிலை மற்றும் பல முரண்பாடுகளுக்குள் இந்த சிந்தனை சிக்குப்படும். பின்னர் புறநிலை அரசும் அர்த்தமற்றதாகும் போது புலம்பெயர்ந்த மக்களின் சுதந்திரம் மீதான நம்பிக்கையும் சிதைந்து சீரளிந்து போகும் அபாயம் உள்ளது.

எமக்கு காத்திரமான ஸ்திரமான ஒரு தலமை புலிகள் மட்டுமே. இந்த புலிகளுக்கு பலமான ஒன்று மாவீரர்களே. அவர்களே புலிகளை இயக்கிய சக்தி. என்றும் அவர்களே இயக்குவார்கள். தற்போதைய சூழலில் இந்த மாவீரர்களையும் அவர்களது இலட்சியங்களையும் நம்பிக்கையுடன் பற்றிகொண்டு அவற்றையே தலைமைக்கு ஒப்பாக ஏற்று மக்களின் பாதுகாப்புக்காக போராடுவோம். எமது போராட்ட காலத்தின் நினைவு தினங்களை இதுவரை இல்லாதளவு எழுச்சியுடன் கடைப்பிடிப்போம். படுகொலைகளை பேரெழுச்சியுன் நினைவுகூருவோம். இவ்வாறான கோணத்தில் ஒன்றிணைவோம். ஒன்றிணைவதற்கான அத்துணை வழங்களையும் பற்றி சிந்திப்போம்.

Edited by sukan

சுகன்

புறநிலை அமைப்பு நிச்சயமாக தேவையானதொன்று, காரணம் தனிய போராட்டம் வெற்றி எல்லாத்துக்கும் மேல் இனி வரும் காலங்களில் சர்வதேசத்தை கையாள இது தேவைப்படுகிறது. எமது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களால் நாம் சாதித்தது ஏது? அதனால் சில தூரம் போகமுடிந்ததே ஒழிய முக்கியமான எதையும் சாதிக்க முடியவில்லை.

சரி இனியும் புலிகள் திரும்பவும் வருவார்கள் என்று வைத்துக்கொள்வோம்.... இவ்வளவுகாலமும் புலிகளின் சர்வதேச தொடர்புகளாலும் காய் நகர்த்தல்களாலும் கடைசியில் அரசியல் துறைத்தலைவரையே காப்பாற்ற முடியாமல் போனதே?

தமிழ் நாடளுமன்ற உருப்பினர்களின் கையரு நிலைதான் நாங்கள் காலாகாலமாக பார்த்தாச்சே... அவர்களும் சாய்க்கப்பட்ட பொளுது எவர்தான் குரல் கொடுத்தார்கள்?

எல்லாத்துக்கும் மேலாக சர்வதேச ரீதியில் எமக்கான குரல் எங்களுக்காக தோற்ருவிக்கப்படவேண்டும். இது சவால் மிக்கதுதான் ஆனால் மலைச்சவன் மலை ஏறமாட்டான். ஒன்ருமட்டும் உறுதி தாயகம் அன்னியனின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அங்கிருந்து சுத்ந்திரமான கருத்துக்கள் வரமுடியாது.

இன்னும் இதை பற்றி விவாதிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.