Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் உங்களுக்கு அவசியமா?

Featured Replies

இந்த கேள்வியை உங்கள் முன் எழுப்புதற்காக வெட்கப்படுகின்றேன். இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் இந்த கேள்வியை கேட்பதற்காக வெட்கப்படுகின்றேன். ஆனாலும் கேட்கவேண்டியுள்ளதே? :o :o :o :o

அவசியம் என்கின்ற எல்லோருடைய (?)பதிலும் காதில் ஒலிப்பதனால் சில கருத்துக்களை வைக்கின்றேன். சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை ஆலோசனைகளை தெரிவியுங்கள்.

போராட்டத்துக்கான சரியான ஒரு பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.

போராட்டத்துக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதல்.

மாற்றுக்கருத்தாளர்களையும்(?) போராட்டத்தில் இணைத்தல்

நாம் எமது போராட்டத்தை எடுத்த உடனேயே உயர்மட்டத்துக்கு எடுது்துச்செல்ல முயன்றோம் அதில் நாம் தோல்வியுற்றுள்ளோம். அதனால் ஒரு மாதத்தில் ஒரு நாள் இரண்டு மாநிலங்களில் பரப்புரைகளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செய்யலாம் வாய்களை கறுத்த துணியினால் கட்டிக்கொண்டு துண்டு பிரசுரங்களை கொடுத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி இப்படி பிரச்சாரம் செய்தால் நிச்சயமாக இவர்களை கவரும்

போராட்டத்துக்கு இளைஞர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை

போராட்டங்களை செய்யவேண்டும்.(இப்போது பல நாடுகளில் பெரியவர்கள் முரண்பட்டுள்ளார்கள் ) தமிழ் சட்டத்தரணிகள் அடங்கிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி சட்டரீதியான பிரச்சனைகளை அணுகவேண்டும்

மாற்றுக்கருத்தாளர்கள் தமிழீழத்தை எதிர்க்கின்றார்களா? அல்லது புலிகளை எதிர்கின்றார்களா? அநேகமாக புலிகளை த்தான் எதிர்க்கின்றார்கள். இப்போதுதான் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்களே (:(:lol: ) அதனால் இவர்களும் போராட்டத்துக்கு முன் வருவார்கள்

உங்கள் கருத்துக்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமாக ஆலோசனை செய்வோம் வழி கிடைக்கும்.

புலிகளை எதிர்கின்றார்களா? அநேகமாக புலிகளை த்தான் எதிர்க்கின்றார்கள். இப்போதுதான் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்களே

புலிகள் இல்லாதபடியால் மாற்றுக்கருத்தளர்களும் இனி இல்லை

புலிகளின் ஆயுதம் மெளனித்த அடுத்த நிமிடமே மாற்றுக்கருத்தாளர்களின் கருத்துக்களும் மெளனித்து விட்டது

ஈழத்தமிழன் ஈழத்தில் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் சிங்களத்துடன் கூடியிருந்து சிங்களவனுக்கு குழி பறிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லாதபடியால் மாற்றுக்கருத்தளர்களும் இனி இல்லை

புலிகளின் ஆயுதம் மெளனித்த அடுத்த நிமிடமே மாற்றுக்கருத்தாளர்களின் கருத்துக்களும் மெளனித்து விட்டது

--------

அதெப்படி ஜில் உறுதியாக சொல்கிறீர்கள் .

இனி தமிழருக்கு தலைமை தாங்க , தான் தயார் என்று ஒரு குரல் வந்துதே ........ , நீங்கள் கேட்க வில்லையா ?

அதெப்படி ஜில் உறுதியாக சொல்கிறீர்கள் .

இனி தமிழருக்கு தலைமை தாங்க , தான் தயார் என்று ஒரு குரல் வந்துதே ........ , நீங்கள் கேட்க வில்லையா ?

அப்படி வந்ததா? சரி வரவேற்போம் தலமையை கொடுப்போம் ஈழம் வாழ் எம்மவரை மீள் குடியேற்றுவோம்.புலத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியதை செய்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் நடந்த போராட்டங்களில் அஹிம்சை வழிகள் பல பரீட்சித்து பார்க்கப்பட்டன ,அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் நீங்கள் சொன்னமாதிரி கறுப்புத்துணியால் வாயைகட்டிக்கூட மெழுகுவர்த்தியும் ஏந்தி எம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன,ஒன்றல்ல இரண்டல்ல பல போராட்டங்கள் நடாத்தப்பட்டன இவற்றைஎல்லாம் அந்தந்த அரசுகள் தாங்களும் கண்களையும் வாயையும் காதையும் ஏதோ ஒரு நிறத்துணியால் கட்டிவிட்டு ஏதும் தெரியாதது போல எம்மை ஆட்டுமந்தை கூட்டங்கள் போல் பார்த்தன ஆனால் மக்களும் சலிக்காமல் தொடர்ந்து போராடினார்கள் கடைசியில் நடந்தது என்ன ? ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசின் நிகழ்ச்சி நிரலில் துளியளவு மாற்றம் கூட ஏற்படாமல் அவர்களின் இனவழிப்பு போர் நிகழ்த்தி முடிக்கப்பட்டது (இது இனவழிப்பின் முடிவு அல்ல இதுவே ஆரம்பம் ) இனிமேலும் அப்படியான அகிம்சைவழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அந்தந்த அரசுகளின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று எப்படி நம்புகிறீர்கள் ? இனிமேல் நாம் இப்படியான போராட்டங்களை முன்னெடுத்தாலும் அந்தந்த அரசுகள் கூறப்போகும் பதில் " சிறிலங்காவில் போர் முடிந்துவிட்டது இனிமேல் மக்கள் கொல்லப்படமாட்டர்கள் " " புனர்வாழ்வுக்கு தேவையான நிதி உதவிகளை நாம் அளிக்கிறோம் " "சிறிலங்கா அரசு தமிழ்மக்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" "ஸ்ரீலங்கா அனுமதிக்காமல் நாம் அந்த நாட்டுக்குள் நுழையமுடியாது" இப்படியே அவர்கள் பதில் இருக்கப்போகின்றது.இதில் நாம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்துக்கு மறைமுகமான நன்மை ஒன்றை செய்கின்றோம் என்னவென்றால் நாம் நடாத்தும் போராட்டங்களால் எம் மக்களுக்கு உதவுவதற்கென நிதி உதவிகளை நாடுகள் வழங்குகின்றன அவை நேரடியாக சிறிலங்க பயங்கரவாத அரசையே சென்றடைகின்றன (வெளிநாட்டு நிறுவனங்களை அரச பயங்கரவாதம் அனுமதிப்பதில்லை ) இன் நிதிவளங்களை கொண்டு ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு தனது ராணுவத்தை பலப்படுத்தியும் ஏழை சிங்கள மக்களுக்கு சில உதவிகளை செய்து எமக்கு எதிராக திருப்பிவிடுதலுமே நடக்கப்போகின்றது (ராணுவத்தில் சிங்கள ஏழை குடும்பத்து இளைஞர்களே சேருகின்றார்கள்,சிங்கள ஏழைகளின் குடும்பங்களுக்கு உதவிகளையோ அல்லது சலுகைகளையோ வழங்குவதன் மூலம் அவர்களை இலகுவாக கவரலாம் ) புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது என்று நான் கூறவரவில்லை ஆனால் அந்த போராட்டங்கள் மட்டும் போதாது என்று எண்ணுகிறேன்.

வெளிநாட்டு அரசுகள் எமக்கு உதவி செய்யவேண்டுமென்றால் அவர்கள் எம்மிடம் இருந்து எதையாவது எதிர்பார்ப்பார்கள் (அவர்கள் ஏதிர்பார்ப்பது எம்மிடம் இருந்து பணம் அல்ல அல்லது எம்மிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே ஓன்று தான் அது எது என்று நீங்களே விளங்கிகொள்ளுங்கள்) ,அவர்கள் எதிர்பார்ப்பை சரியாகக்கணித்து அவற்றை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எம் திட்டங்களை அமைத்து ரகசியமாக நகரவேண்டும்,நாம் எதையும் விட்டுக்கொடுக்காமல் அல்லது எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் அடைவதற்கு நாம் மிகவும் வலியவர்கள் அல்ல ஆகவே சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக்கொண்டு இறுதிகொள்கையில் உறுதியாக இருப்போமானால் வரும் காலம் தமிழர்களுக்கு வசந்த காலங்களாக அமையும்ஸ்ரீலங்கா அரசு எம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு எமக்கு கொடுத்துள்ள விலைமதிக்கமுடியாத சக்தி "புலம்பெயர் தமிழர்களை தாயகம் நோக்கி ஒன்றுபடவைத்தது " ஆகவே நாம் இவற்றை சரியாக பயன்படுத்தி எமது இறுதி இலக்கை அடையவேண்டும். மாற்றுக்கருத்தாளர்கள் எம்முடன் சேர்வதற்கு சிலகாலம் எடுக்கும் ஏனென்றால் அல்லது ஏதிர்பார்ப்புக்கள் சிதிவடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை பயங்கரவாத அரசாங்கம் எடுத்துவருகின்றது ஆனால் இவற்றால் மாற்றுக்கருத்தாளர்கள் நேரடியாக பதிக்கப்படுவதற்கே சில காலம் எடுக்கும் அதன் பின்பு எமது குறிக்கோளையும் எமது போராட்டத்தையும் நிச்சயம் உணர்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக சரியாக சொன்னீர்கள். சிங்களவன் தன காரியத்தை சாதிக்க, கூட்டி கொடுக்கவும் தயங்கியதில்லை. நாம் அவன் அளவுக்கு தரம் தாழ வேண்டிய அவசியமில்லை. அந்தந்த நாட்டின், இனத்தின், மக்களையும், தலைவர்களையும் நாம் அவர்களுக்காக உழைப்பதின் மூலமாகவும், அவர்களோடு நம் நோக்கத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில் முழுவதுமாக ஒத்துழைத்தும் நம் நோக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

சுப்பண்ணை நாம் சும்மா இருப்பது தற்போது நல்லதா? சும்மா இருந்தால் இங்குள்ளவர்கள் தங்கள் இலக்கை மறந்துவிடுவார்கள் அல்லவா? எம்முடைய போராட்டம் தொடரப்படவேண்டும். வெள்ளம் வருவதற்கு முன்னரே அணையை கட்ட வேண்டும். முன்பு புலிகள் மீது தடைவந்தபோது எல்லோரும் மௌனமாக இருந்தமையால்தான் இன்று எமக்கு இந்தநிலை.

இப்போது ஐரோப்பிய நாடுகள் இலங்கை மீது சற்று சீற்றமாக இருக்கின்றார்கள் அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டுமல்லவா? இப்போதோ அத்திவாரத்தை புலம்பெயர் தமிழர்கள் கட்ட வேண்டுமல்லவா?

இல்லை சோழன் சும்மா இருக்க சொல்லவில்லை ஆனால் தற்போது எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் எமக்கு மட்டும் சாதகமாக அமையவேண்டும் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஒரு துளி நன்மையும் நாம் எடுக்கும் செயற்பாடுகளினால் கிடைக்கக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நாம் போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கோரிக்கையை வைத்து போராடத்தொடங்க்கிய போது எல்லா நாடுகளும் கூறியது விடுதலை புலிகள் மக்களை தடுத்துவைக்கக்கூடாது என்றே தவிர ஸ்ரீலங்கா பயங்கரவாதத்துக்கு போரை நிறுத்த பாரிய அழுத்தங்களை வழங்கவில்லை,இதை ஸ்ரீலங்கா பயங்கரவாதம் சரியாகப்பயன்படுத்தி எமது போராட்டங்களினால் தமது இலக்கினை இலகுவாக அடைந்திருந்தார்கள் இது நாம்விட்ட தவறுகளில் ஓன்று. ஆகவே இனிவரும் காலங்களில் நாம் செய்யும் போராட்டங்களினால் எமக்கு நன்மை ஏற்படாவிட்டாலும் ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசுக்கு ஒரு நன்மைகூட ஏற்படுத்திக்கொடுக்கக்கூடாத

தமிழனுக்கு தமிழீழம் ஒண்டுதான் கேடு... 33 வருசமா போராடின தலைவரை ஒரு இனமாய் சேர்ந்து பலப்படுத்த முன்வராதவை இனி வந்திட போகினமாக்கும்...

போராட்டதுக்கு பிள்ளைய விட மாட்டினம், வரி கள் எல்லாம் குடுக்க மாட்டினம், குடும்ப கஸ்ரம் எண்டு காசும் குடுக்க மாட்டினம், ஆனால் எல்லாருக்கும் தமிழீழம் வேணும்....

தமிழனுக்கு எதாவது கிடைக்கும் எண்டால் அது சிங்களவன் பிச்சையாக போட்டால்தான் கிடைக்கும்.... அந்த பிச்சையை எடுத்து தங்களுக்கு தர இன்னும் எங்களுக்கு தேசிய தலைவர் வேணும் எண்டு அடம்பிடிக்கிற கூட்டத்தை என்ன எண்டு சொல்ல...

Edited by தயா

  • தொடங்கியவர்

அந்த ஒரு சில நாடுகளை எமக்கு சார்பாக கொண்டுவருவதற்கான முயற்சியைதான் சுப்பண்ணை நாம் முன்னெடுக்க முயலவேண்டுமென்று நான் கூறுகின்றேன். இந்தியா தானக சிலகாலத்தில் எமக்கு ஆதரவு தர வரக்ககூடும்.(நிச்சயமாக அவர்கள் இலங்கையினால் ஏமாற்றப்படுவார்கள்)

அது காலத்தின் கைகளில்தான் உள்ளது. ஆனால் இந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை எமக்கு சார்பாக கொண்டுவர முயலவேண்டும். எதிரியின் எதிரி எமக்கு நண்பர்கள். இது புலம்பெயர் தமிழர்கள் கையில்தான் உள்ளது. முயலவேண்டும். ஒரு கூட்டு முயற்சி பேதங்கள் களையப்படவேண்டும். இது இளையோர்கள் கைளில்தான் உள்ளது.

  • தொடங்கியவர்

தமிழனுக்கு தமிழீழம் ஒண்டுதான் கேடு... 33 வருசமா போராடின தலைவரை ஒரு இனமாய் சேர்ந்து பலப்படுத்த முன்வராதவை இனி வந்திட போகினமாக்கும்...

போராட்டதுக்கு பிள்ளைய விட மாட்டினம், வரி கள் எல்லாம் குடுக்க மாட்டினம், குடும்ப கஸ்ரம் எண்டு காசும் குடுக்க மாட்டினம், ஆனால் எல்லாருக்கும் தமிழீழம் வேணும்....

தமிழனுக்கு எதாவது கிடைக்கும் எண்டால் அது சிங்களவன் பிச்சையாக போட்டால்தான் கிடைக்கும்.... அந்த பிச்சையை எடுத்து தங்களுக்கு தர இன்னும் எங்களுக்கு தேசிய தலைவர் வேணும் எண்டு அடம்பிடிக்கிற கூட்டத்தை என்ன எண்டு சொல்ல...

தயா 33 வருடமாக தலைவர் யாருடைய ஆதரவுடன் போராடினார்? இவ்வளவு வளர்ச்சியும் எங்கிருந்து வந்தது? மக்கள் தாராளமாக உதவி செய்தனர். ஆனால் இங்குதான் பலர்............. நான் அதை வெளிப்படையாக சொல்லவிரும்பவில்லை. இங்குள்ளவர்களும் ஏதோ பணத்துக்கு மேல் புரளுகின்றனர் என்று நீங்கள் உங்களை வைத்துக் கொண்ட சொல்கின்றீர்கள். பலர் மிகவும் கஸ்டப்பட்டு வாழ்கின்றனர். எதுவாக இருந்தாலும் முடிந்த அளவு உதவி செய்துள்ளனர். மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். இங்கு செயற்பாட்டாளராக செயற்பட்டவர்கள் மிகவும் தொல்லை கொடுத்துள்ளனர்.

பல குடும்பங்களில் கணவன் மட்டும் வேலை செய்வார் இரண்டு மூன்று குழந்தைகள் என்றால் அவர்களால் எப்படி ஆடம்பரமாக வாழமுடியும்? வேலை செய்கின்ற இடங்களில் 8000 10000 யூரோக்களா கொடுக்கின்றார்கள்.? வீடு் வாடகை என்பன கட்டத்தேவையில்லையா?

குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லாதீர்கள் புலம்பெயர் தமிழர் முடிந்த அளவு செய்திருக்கின்றார்கள்.

தமிழீழம் வேண்டுமா என்ற இந்த கேள்வியினை முதலில் நாங்கள் ஈழத்தில் எஞ்சி உள்ள மக்களிடம் கேட்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமிழீழம் என்பது உணர்வு சார்ந்தது. ஆனால், எஞ்சியுள்ள ஈழ மக்களுக்கு அதுவே இன்று உயிர் வாழ்தலுடன் சம்பந்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சோழன் இன பற்றுள்ள புலம் பெயர் தமிழார் என திருத்துங்கள்......இனப்பற்று இல்லாதவர்புலம்பெயர் நாடில் குடிமக்களாய் ஆனவர்கள் ..........பங்களிக்க அசட்டையாய் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை. தமிழன் இல்லத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை.தாயகத்தில் ஈழத்தமிழன் எனும் அடியாளம் தேட ஒரு நாடு வேண்டும் அதை தான் தலைவர் முன்னேட்டுத்தார். அகிம்சாவழி... பேச்சு வார்த்தை என்று தொடங்கி .............பின்னர்தான் ஆயுதபோராட்டமாக் மாறியது அது உங்களுக்கும் புரியும் என வே இன அடியாளம் தேவை அதற்கு ஒரு நாடு தேவை. உரிமையுடன் வாழ ஒரு இடம் தேவை. இருந்த உரிமையை இனவெறி அரசு பறிக்க தற்போது அழிக்க முடிவெடுத்து விடார்கள் . அது தான் நடந்து கொண்டு இருக்கிறது . எமக்கு ஒரு அடியாளம் நிலைநாட ஒரு நாடு தேவை . இத்தனைக்கும் பின்பு .....போராட்டம் வடிவ மாற்ற முடன் புலம் பெயர் கைகளில் கொடுக்க பட்டு இருக்கிறது . அதை முன்னேடுக்க வேண்டும்.

தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு வைத்தால். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரைப்பற்றி சந்தேகங்கள் முடிந்து இப்போ தமிழீழம் பற்றி சந்தேகம் அனைத்து தமிழர்களுக்கும் எழுந்துள்ளமையே தமிழர்கள் மத்தியில் எவ்வளவு குழப்பத்துக்கு மத்தியில் தாயக பணியை ஆற்றியுள்ளனர் என்பது தெளிவு. புலிகள் அழிந்தனரா? தலைவர் வீரச்சாவடைந்தாரா? என்ற கேள்விகளே இன்னும் விடை தெரியாமல் இருக்கும் போது எல்லோரும் மாற்றுத்தலைமை பற்றி பேசுகின்றனர்.

அது மட்டுமன்னி, எட்டப்பன், சித்தன் களோடும், கூட்டிக்கொடுக்கும் கயவர்களோடும் உறவாடலாமா? என்று கேட்கின்றனர். தமிழீழத்தை புலத்தில் இருப்பவர்கள் மறந்து போகலாம்! இன்னும் நிலத்தில் இருக்கும் மக்கள் கூட சிஙகளத்தின் அளவுக்கதிகமான (கிடைக்குமா?) கவனிப்பால் அந்த இலக்கை மறந்து போகலாம். புதிதாய் முளைத்த தலைவர்கள், கையை தூக்கிய படியே தம் உயிரை காத்தவர்கள் என்று எல்லோருமே தமிழீழம் வேண்டாம் என்று சொல்லலாம்!

நானோ நீங்களோ அமைதி வழி போராட்டத்தை நாடலாம். ஆனால் தமிழீழம் வேண்டி தமிழினம் நடாத்திய போராட்டத்தில் உயிர் கொடை கொடுத்த மாவீரர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? அந்த இளமை கால உணர்களை தூக்கி எறிந்து விட்டு கல்லறைகளை தம் கனவில்லமாக்கி எம் தோழர்களிடம் நீங்கள் என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்!

அது மட்டுமல்ல...

போராட்டத்தில் போராளிளோடு இணைந்து ஏக காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன பதிலை சொல்லி விட்டு தமிழீழம் வேண்டாம் என்று சொல்ல போகின்றீர்கள்?

தமிழீழம் சாத்தியமா? இல்லையா என்பது வேறு விடயம்! அதைப்பற்றிய விவாதங்கள் இங்கு அவசியமற்றவை ஆனால் அதற்காய் உழைக்க வேண்டிய நாமே எமக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

தமது உயிர்களை துச்சமென மதித்து இறுதி வரை போராடிய போராளிகளையும் இன்னும் தலைமையில் கட்டளைக்காய் தேசமெங்கும் காத்திருக்கும் அந்த புலி வீரர்களின் இலட்சிய வெறி ஒரு கணம் நாம் எண்ணி பார்ப்போம்!

ஆயுதங்களை கீழே போட்ட உடனே பல புற்றுக்குள் பல பாம்புகள் முளைத்து வந்து விட்டன...! அதையும் கவனத்தில் எடுப்போம்

ஆயிரத்தில் ஒரு வார்த்தை பறவைகள் .

எட்டப்பன்இ சித்தன் களோடும்இ கூட்டிக்கொடுக்கும் கயவர்களோடும் உறவாடலாமா? என்று கேட்கின்றனர். தமிழீழத்தை புலத்தில் இருப்பவர்கள் மறந்து போகலாம்! இன்னும் நிலத்தில் இருக்கும் மக்கள் கூட சிஙகளத்தின் அளவுக்கதிகமான (கிடைக்குமா?) கவனிப்பால் அந்த இலக்கை மறந்து போகலாம். புதிதாய் முளைத்த தலைவர்கள்இ கையை தூக்கிய படியே தம் உயிரை காத்தவர்கள் என்று எல்லோருமே தமிழீழம் வேண்டாம் என்று சொல்லலாம்!

நானோ நீங்களோ அமைதி வழி போராட்டத்தை நாடலாம். ஆனால் தமிழீழம் வேண்டி தமிழினம் நடாத்திய போராட்டத்தில் உயிர் கொடை கொடுத்த மாவீரர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? அந்த இளமை கால உணர்களை தூக்கி எறிந்து விட்டு கல்லறைகளை தம் கனவில்லமாக்கி எம் தோழர்களிடம் நீங்கள் என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்!

அது மட்டுமல்ல...

போராட்டத்தில் போராளிளோடு இணைந்து ஏக காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன பதிலை சொல்லி விட்டு தமிழீழம் வேண்டாம் என்று சொல்ல போகின்றீர்கள்?

தமிழீழம் சாத்தியமா? இல்லையா என்பது வேறு விடயம்! அதைப்பற்றிய விவாதங்கள் இங்கு அவசியமற்றவை ஆனால் அதற்காய் உழைக்க வேண்டிய நாமே எமக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

தமது உயிர்களை துச்சமென மதித்து இறுதி வரை போராடிய போராளிகளையும் இன்னும் தலைமையில் கட்டளைக்காய் தேசமெங்கும் காத்திருக்கும் அந்த புலி வீரர்களின் இலட்சிய வெறி ஒரு கணம் நாம் எண்ணி பார்ப்போம்!

ஆயுதங்களை கீழே போட்ட உடனே பல புற்றுக்குள் பல பாம்புகள் முளைத்து வந்து விட்டன...! அதையும் கவனத்தில் எடுப்போம்

யாரையும் நாம் மறக்கவில்லை என்போம்

அதற்கும் அங்கே எழுதிவைத்துள்ளார்கள்

அது:-

உங்களுக்கு அஞ்சலி செலுத்த சிலநிமிடங்கள் சாய்த்த தலைகளை நிமிர்த்தி

மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்

உங்கள் கனவு நனவாகும் வரை போராடுவோம்

தயா 33 வருடமாக தலைவர் யாருடைய ஆதரவுடன் போராடினார்? இவ்வளவு வளர்ச்சியும் எங்கிருந்து வந்தது? மக்கள் தாராளமாக உதவி செய்தனர். ஆனால் இங்குதான் பலர்............. நான் அதை வெளிப்படையாக சொல்லவிரும்பவில்லை. இங்குள்ளவர்களும் ஏதோ பணத்துக்கு மேல் புரளுகின்றனர் என்று நீங்கள் உங்களை வைத்துக் கொண்ட சொல்கின்றீர்கள். பலர் மிகவும் கஸ்டப்பட்டு வாழ்கின்றனர். எதுவாக இருந்தாலும் முடிந்த அளவு உதவி செய்துள்ளனர். மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். இங்கு செயற்பாட்டாளராக செயற்பட்டவர்கள் மிகவும் தொல்லை கொடுத்துள்ளனர்.

தேசியத்தலைவர் தனது 100 வீத வாழ்க்கையையும் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தார்கள் நீங்கள் எவ்வளவு வீதம் எண்டு கேட்டால் முடிந்த அளவு எண்டுறீயள்... முடிந்த அளவு எண்டது நேரம் கிடைக்கும் போது... சரி நேரமே இல்லை போராட எல்லாம் முடியவில்லை காசு மட்டும்தான் கொடுக்க முடிந்தது எண்டு வைத்து கொள்ளலாம்...

அதாவது உங்களாலை முடிந்த அளவு எண்டதை இப்படி சொல்லாமா..?? இங்கிலாந்தில் இருக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கை 300 000 கிட்டத்தட்ட 75 ஆயிரம் குடும்பங்கள் + தனி நபர்கள் வருமா....???

இந்த 3 லட்ச்சம் மக்களும் காசு மட்டுமே கொடுக்கிறார்கள் எண்டு வைத்து கொள்ளலாம்... ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு பவுண்ஸ் வீதம் கொடுத்து இருந்தால் மாதம் 9 மில்லியன் பவுன்ஸ்... வருடம் 108 மில்லியன் பவுண்ஸ் ஈழம் நோக்கி பிரித்தானியாவில் இருந்து மட்டும் போனதா...?? அவ்வளவு காசு போராட்டத்துக்கு போய் சேர்ந்ததா...??

அப்படி சொல்வீர்கள் எண்டால் மேலும் விவாதிக்கலாம்...

பல குடும்பங்களில் கணவன் மட்டும் வேலை செய்வார் இரண்டு மூன்று குழந்தைகள் என்றால் அவர்களால் எப்படி ஆடம்பரமாக வாழமுடியும்? வேலை செய்கின்ற இடங்களில் 8000 10000 யூரோக்களா கொடுக்கின்றார்கள்.? வீடு் வாடகை என்பன கட்டத்தேவையில்லையா?

ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு பவுண்ஸ் கொடுக்க கூடவா வளி இல்லாமல் இருந்தார்கள்...

குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லாதீர்கள் புலம்பெயர் தமிழர் முடிந்த அளவு செய்திருக்கின்றார்கள்.

அதாவது நல்லதொரு தலைவர் கிடைத்து அவருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் எல்லாம் திரண்டு கிளர்ந்து இருந்தும் எங்களை உலகம் எல்லாம் திரண்டு ஒடுக்கி விட்டார்கள்... அப்படியா...?? அப்படி எண்றால் இனியும் உங்களால் தமிழீழம் அமைக்க முடியாது...

பணம் மட்டும் இல்லை இன்னும் நிறையவே செய்ய இருந்தும் எல்லாத்தையும் கோட்டை விட்டு போட்டு இப்ப தமிழ் ஈழம் வேணுமோ எண்டு விவாதம் மட்டும்தான் செய்ய முடியும்...

இனி எதை எடுத்தாலும் சுயகௌரவத்தோடை எதுவும் கிட்டாது... கிடைப்பதும் கிடைக்க போவதும் பிச்சை மட்டும்தான்...

Edited by தயா

தேவையா??????? இல்லையா????? ......... கொடுத்தோமா?????? இல்லையா????? ......செய்தார்களா??????? இல்லையா???????

என்பவைகள் அல்ல இன்றைய கேள்விகள்!!!!! இன்று எம்முன் உள்ள ஒரே கேள்வி எம்மக்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறோம்?????????????

சர்வதேசமும் வாய் மூடிய நிலையில் ஒரு இளம் சந்ததியே அழித்தொழிக்கப்படப் போகிறது!!!!!!! எமக்காக தம்மை அர்பணித்து புறப்பட்ட உறவுகளில் எஞ்சியிருப்போரும் காலகட்டத்தில் எங்கள் ஓலங்களின் மத்தியிலும் அழித்தொழிக்கப்படப் போகிறார்கள்.

.......நானோ நீங்களோ அமைதி வழி போராட்டத்தை நாடலாம். ஆனால் தமிழீழம் வேண்டி தமிழினம் நடாத்திய போராட்டத்தில் உயிர் கொடை கொடுத்த மாவீரர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? அந்த இளமை கால உணர்களை தூக்கி எறிந்து விட்டு கல்லறைகளை தம் கனவில்லமாக்கி எம் தோழர்களிடம் நீங்கள் என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்!

அது மட்டுமல்ல...

போராட்டத்தில் போராளிளோடு இணைந்து ஏக காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன பதிலை சொல்லி விட்டு தமிழீழம் வேண்டாம் என்று சொல்ல போகின்றீர்கள்?

தமிழீழம் சாத்தியமா? இல்லையா என்பது வேறு விடயம்! அதைப்பற்றிய விவாதங்கள் இங்கு அவசியமற்றவை ஆனால் அதற்காய் உழைக்க வேண்டிய நாமே எமக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

தமது உயிர்களை துச்சமென மதித்து இறுதி வரை போராடிய போராளிகளையும் இன்னும் தலைமையில் கட்டளைக்காய் தேசமெங்கும் காத்திருக்கும் அந்த புலி வீரர்களின் இலட்சிய வெறி ஒரு கணம் நாம் எண்ணி பார்ப்போம்!

எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள்...

ஆயுதங்களை கீழே போட்ட உடனே பல புற்றுக்குள் பல பாம்புகள் முளைத்து வந்து விட்டன...! அதையும் கவனத்தில் எடுப்போம்

எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கு என்று யாருக்குத் தெரியும்....வெளிய வரும்போது தானே அடையாளமும் காணலாம் :wub::rolleyes::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.