Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

Featured Replies

நல்லது. சீமான் ஐயா அவர்களை ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் கட்ட ஈழப்போர்கள்பற்றி தொடர்ந்து முழங்கும்படி கேட்டுக்கொள்வோம். சாகப்போவது நாங்கள் இல்லைத்தானே. தாயகத்தில் இருக்கும் யாரோ மக்கள்தானே துவம்சம் செய்யப்படப் போகின்றார்கள். எனவே எங்களுக்கு பிரசனை இல்லை. யாராவது எதையாவது சொல்லிவிட்டு போகட்டும். நாங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றோம். ஆட்லறி குண்டோ ஆட்டுக்குட்டியோ எங்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக்கொண்டு வந்து எம்மேல் விழப்போவதில்லை.

நாங்கள் இங்கு அட்டகாசமாக புலிக்கொடிகளை பிடித்து வீரம் காட்டிக்கொண்டு இருப்போம். அங்கு தாயகத்தில் புலி உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியை தூக்கிக்கொண்டு சிங்கள படைகளிடம் போய் சரணடையட்டும்.

நல்ல கொள்கை. நல்ல சித்தாந்தம். வாழ்த்துகள்!

Edited by கலைஞன்

  • Replies 57
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக குரல் கொடுக்கும் சீமான் , வைக்கோ , நெடுமாறன் ஐயா போன்றவர்களை விமர்சிக்கும் எங்கடை சனத்தின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை . :(

தமிழ்சிறி இங்கு சீமான் ஐயாவை அல்ல... ஐந்தாம் கட்ட ஈழபோர்... மற்றும் அதுதொடர்பான கருத்துக்கள் பற்றியே நாங்கள் கருத்துசொன்னோம்.

மக்கள் போரட்டம் செய்வதற்கு கூடும் இடங்களில், மக்கள் முன் பொறுப்பாளர்களாக

இனம் காணப்பட்ட நபர்கள் மக்களை மனச்சோர்வடையவைக்கும் கதைகளை நிறுத்தவது நல்லது.

நோர்வே நாட்டில் அதிகப்படியான கருத்துக்கள் விதைக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இங்கு சீமான் ஐயாவை அல்ல... ஐந்தாம் கட்ட ஈழபோர்... மற்றும் அதுதொடர்பான கருத்துக்கள் பற்றியே நாங்கள் கருத்துசொன்னோம்.

ஓகே , அப்ப சரி கலைஞன் .

சீமானைக் குறைகூறுவதற்கு எந்த இலங்கைத்தமிழனுக்கும் உரிமை கிடையாது. தனக்கு எந்த விதமான இலாபமுமின்றி எமக்காக பலதடவைகள் சிறைவாசம் சென்றவர். இந்தியாவில் எத்தனை முத்துக்குமார்கள் தீக்குளித்து மாண்டார்கள்!. எம்மில் எத்தனை பேர் தீக்குளித்து மாண்டார்கள்? குறிப்பாக கனடாவில் முதன் முதலில் வீதியை மறிக்க முற்பட்டபோது எத்தனை பேர் ஒதுங்கி நின்றாக்கள். சரி ஒதுங்கி நின்றவர்களை விடுவோம் எத்தனை பேர் எதிர்த்து நின்றார்கள். மாணவர்கள், இளையோர்கள் இல்லையென்றால் இப்போதும் புலிக்கொடி பழைய உடுப்புகளுடன் பத்திரமாக இருந்திருக்கும்; கனடா காற்றுப்பட்டு கசங்கியிராது!!!.

இத்தகைய ஈனப்பிறவிகள் ஈழத்திலேயே பிறந்திருக்கிறார்கள். இத்தகைய பிறவிகள் எம்முடன் உள்ள போதும் எமக்காக குரல் கொடுத்ததுடன் மட்டுமின்றி, செயலிலும் காட்டிவருகின்றார். இதுவா நமது நன்றிக்கடன். இதைத்தானே நமது தலைவனுக்கும் செய்தீர்களோ? அதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியாக தமிழீழம் இருந்தபோதும் அதை பிரகடனப்படுத்தாது மாயமாக மறைந்துள்ளான்.

சீமானின் பேச்சு எப்போதும் வன்முறை கலந்ததாகவே இருக்கும். இதில் அவரை குறைகூற முடியாது. இந்தியாவில் அகிம்சைப்போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது என நன்கு உணர்ந்தவர். அத்துடன் நாம் முதலில் ஒன்றை நன்கு உணர வேண்டும்.. எதிரிகளை நாமாக உருவாக்கக்கூடாது. அதிலும் நண்பர்களை எதிரிகளாக்குவது என்பது தமிழ் இனச்சுத்திகரிப்பு என்ற விருட்சத்தை விழுதுபோல தாங்கும்..

நண்பர்களே,

மற்றவரை குறைகூறுவதை நிறுத்துங்கள். நாடென்ன நமக்கு செய்ததென விடுத்து, நாமென்ன நாட்டிற்கு செய்தோமென உணர்தல் நன்று. எல்லோரும் ஒருகுடையின் கீழ் ஒன்றிணைவோம். தலைவன் காட்டிய பாதையில் தமிழர்களின் கெளரவமான சுய நிர்ணயத்திற்காக உழைப்போம். மாயைகள் மறையும். கூடவே சில மாயங்களும் மறையும்!!!

கடமையை செய், பயனை எதிர்பாராதே!!!

Edited by nishanthan

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

சென்னை: பிரபாகர‌ன் செ‌‌த்து ‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம்?. வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடைய மா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றியுள்ளார்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள?

அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள.

எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை.

நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம். இதுதா‌ன் ஜனநாயகமா?

... த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.

பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌ வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம்? வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்... என்றார் சீமான்.

courtesy: Thats Tamil

சீமானின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே! இணைப்பிற்கு நன்றி Sniper.

மக்கள் போரட்டம் செய்வதற்கு கூடும் இடங்களில், மக்கள் முன் பொறுப்பாளர்களாக

இனம் காணப்பட்ட நபர்கள் மக்களை மனச்சோர்வடையவைக்கும் கதைகளை நிறுத்தவது நல்லது.

நோர்வே நாட்டில் அதிகப்படியான கருத்துக்கள் விதைக்கப்படுகின்றது.

இது மக்களுக்கு பல தவறான கருத்துக்களைச் சொல்லி திசை திருப்பும் காலம், மனச்சோர்வடையவைக்கும் காலம் என்பது தமிழ் மக்களாகிய நாம் யாவரும் அறிந்ததே...

யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களே சில சமையம் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே???

இளையோர் வரிசையில் நீங்கள் சேர்ந்து கொண்டு இப்படியான சாக்குப் போக்கு சொல்லாமல் காலத்தின் கட்டாயத்தால் உங்களுக்கு என்று கொடுக்கப் பட்ட கடமையை செய்ய முயற்சியுங்கள்.

மனச்சோர்வடையவைக்கும் கதைகளை நிறுத்தவது நல்லது என்று சொல்ல்வதைவிட, மனச்சோர்வடையவைக்கும் கருத்துக்களை நாம் கேளாமல் இருப்பது மேல், அல்லது அப்படி கேட்டும் அதனை தலைக்கு எடுத்து நடைமுறைப் படுத்தாமல் இருபது அதிலும் மேல் என்பது எனது கருத்து.

.

சீமான் இப்ப பேசிறது தவறு. கட்டி காத்து வளர்த்த ஒரு விடுதலையை , ஒரு நடை முறை தமிழீழ அரசை , அழிக்க முற்பட்ட இந்தியாவை அதற்கு சார்பாக வாய் மூடி நின்ற தமிழக அரசை அதை நிறுத்து என்று தட்டி கேட்காத ஒளித்திருந்த தமிழகமே இப்ப மீண்டும் எங்களை சாவுக்குள் தள்ள முற்படுகிறீர்கள்.

உங்களால் தமிழக அரசின் மௌன கொலையை தடுத்திருக்க முடியும்.,

ஏன் வீதிக்கு இறங்கி போராட தமிழக மக்கள் முன்வர இல்லை?

ஆர்ப்பாட்டம் செய்து எத்தனை தமிழர்கள் பொலிஸ் சுட்டு செத்தார்கள்? எங்கையாவது கலவரம் வெடித்ததா?

ஒன்றும் இல்லை ,

அங்க இங்க நாலு தமிழ் உணர்வாளர்கள் றோட்டில் நின்று கத்தினார்கள்?

எங்கே போனீர்கள் 6 கோடி தமிழரும்.

முதலில் உங்களை தயார்படுத்துங்கள் ,பிறகு பார்ப்பம் தமிழீழ மக்கள் 5ம் கட்ட ஈழப்போர் நடத்த விருப்பமோ என்று.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஓங்கி தாக்கும் போது கைதட்டியோரும்.....

சீமான் எங்களுக்காக வீரவாசமாக பேசிய போது சீமான் பேச்சு கேட்டீங்களா என்று கேட்டவர்களும் தான் இன்று விமர்சனம் செய்ய முனைவதாக படுகின்றது.

புலிகள் வீரியமுடன் தாக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தமிழீழம் கிடைக்கும் என்றார்கள்... ஆனால் அது தங்கள் மேல் வைத்த நம்பிக்கை இல்லை அங்கு போராடிய போராளிகள் மீது வைத்த நம்பிக்கை என்று இப்போது தமிழீழத்தை வேண்டாத ஒன்றாக பேசும் நபர்களை பார்க்க தோன்றுகின்றது.

தமிழீழம் என்ற ஒன்றை தாயக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நீங்கள் எல்லாம் தயார் என்றால் தமிழீழ மக்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டினம் தானே! சீமான் வாய் அளவில தனும் பேசுறார் ஆனால் இங்க உங்கட எழுத்தில கூட அந்த தொனியில்லை....

வெட்கப்பட வேண்டிய விசயம்... நேற்று முன்தினம் கனடாவில் தமிழீழ தாகத்திலும் பார்த்தம் எங்கட மக்களின்ர எழுச்சியை... வாழைப்பழத்தை உரிச்சு கொடுத்தாலும் திண்ணாத கூட்டம் இந்த "புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் கூட்டம்" தமிழீழம் எட்டும் கனியாக இருக்கும் போது அதை பறிக்க வக்கில்லாமல் இருந்திட்டு இப்ப சீமான் அப்பிடி பேசுறான் இப்பிடி பேசுறான் என்று சொல்லுறது.

சீமானுக்கு வேற வேலை இல்லை. உங்கள போல சுயநலக்கூட்டத்துக்கு எல்லாம் உதவி செய்ய முயற்ச்சிக்கிறார் பாருங்க. தானுன்டு தன் படமுண்டு என்றா இந்த புலம்பெயர் யாம்பவான்கள் இயக்குனர் சீமான்ர படத்தை விசில் அடிச்சுப்பார்த்திருப்பினம்.. அது எங்கட சனம் முகாமுக்குள்ள கிடந்தா என்ன.... முள்வேலிக்குள்ள செத்தா என்ன...

இப்ப மட்டும் அக்கறை பொத்துக்கிட்டு வருது....மக்கள்... தேசம்... விடுதலை.... எல்லாத்தையும் இழந்ததுக்கு முழமைக்கும் காரணம்... புலத்தில புண்ணாக்கு வேலை செய்யுற எங்கட சனம் தான்.. அதை ஏற்றுக்கொள்ளாததுகள் ஏன் தான் ஏதோ வாயாள கத்தி ஜெயிலுக்காவது போய் வாறவனை விமர்சிக்குதுகளோ தெரியல்ல.

தமிழீழம் எட்டும் கனியாக இருக்கும் போது அதை பறிக்க வக்கில்லாமல் இருந்திட்டு இப்ப சீமான் அப்பிடி பேசுறான் இப்பிடி பேசுறான் என்று சொல்லுறது.

ஒவ்வொரு ஈழத்தமிழனனும் ஆழமாக சிந்திக்கவேண்டிய கருத்து

நன்றி

சீமான் அவர்கள் அவர்களது கருத்தை சொல்லட்டும். அனால், இது போல் பலர் பேசி பேசி தூண்டிவிட்டு தான் நாம், பயங்கரவாத அமைப்பாக பேர் வாங்கினோம் என்று மறந்து விட கூடாது.... போர் என்றால் இனி நீங்களும் நானும் தான் களத்தில் இறங்க வேண்டும். இங்குள்ள எத்தனை பேர் நாம் இறப்பதை விரும்பிகிறார்கள் என்று கேளுங்கள். இவ்வளவு சீக்கிரத்தில் வேண்டாம் நமக்கு போர், நமக்கு வேண்டியது ஒரு பொறுப்பான போராட்டம், அது நம்ம உணர்வுகளை மற்றவர்கள் மதிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இங்கு இருக்கும் நாம் எல்லாரும் தமிழ் அன்னையின் குழந்தைகள் தான், நாம் ஒருமித்த கருத்து என்று வந்தால் தான் அதை செய்ய வேண்டும். இவ்வராக 5'ஆம் கட்ட போர் என்று வேண்டாம்...

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம். சீமானால் பேசப்பட்ட ஐந்தாம் ஈழப்போர் பற்றிய கருத்து தமிழக மேடை ஒன்றில் வைத்து அந்த மக்களுக்காகப் பேசப்பட்டது. புலம்பெயர் தமிழனுக்காகப் பேசப்பட்டது அன்று. அவர் பேசியவுடன் அதைப் பார்த்தவர்கள் கப்பல் ஏறி இலங்கை சென்று ஐந்தாம் ஈழப்போரைத் தொடங்கி விடப்போவதில்லை. ஆனால் அவர்களினுள் தமிழின எழுச்சி உணர்வு விதைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் என்பது திண்ணம்.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே ஈழத்தமிழர் பிரச்சினையை எந்த ஒரு பெரிய ஊடகமோ அரசியல் கட்சியோ சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லாதது. இன்னமும் பிழைக்கப் போன தமிழர்களுக்கு சண்டை என்ன வேண்டிக்கிடக்கு என்று கேட்கக்கூடியவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னும் கோடிக்கணக்கில் இருக்கும்போது சீமான் போன்றவர்கள் அவர்களுக்கு புரிவது மாதிரித்தான் பேசியாக வேண்டும்.

தமிழின உணர்வாளர்களை எந்த ஒரு காரணாத்துக்காகவும் விமர்சிப்பதை தற்காலத்தின் தேவை கருதி தவிர்த்துக் கொள்வோம்.

சீமான் ஐயாவின் பேச்சுக்கள் தமிழக மக்களுக்கு மட்டுமான பிரச்சார செய்திகளாக எடுக்கப்படுவது இல்லை. அது பல்வேறு மட்டங்களில் சிந்தனைகளை சீர்தூக்கி பார்ப்பதற்கும் பரந்த அளவில் பிரயோகம் செய்யப்படுகின்றது. நம்மவர் ஊடகங்களில் பாரியளவில் இந்த சிந்தனைகள் பரப்புரை செய்யப்படுகின்றன.

ஐந்தாம் கட்ட ஈழபோர் என்று நம்மவர் மத்தியில் தற்போது சிந்தனை தூவப்படுவது எவ்வளவு ஆபத்தானது என்று தற்போது ஏற்பட்ட பேரவலத்தை கண்டபின்பும் தெரியவில்லையானால் என்ன செய்வது?

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள்தான். ஆனால் ஏன் எப்படி எதற்காக அப்படி புண்ணாக்காய் போனார்கள்? இந்த புண்ணாக்குகள் ஏன் எப்படி எதற்காக கடந்த சில மாதங்களில் திடீரென உலகெங்கும் கிளர்ந்து எழுந்தார்கள்?

புலம்பெயர் மக்களும் சீமான் ஐயா போல் நிச்சயம் சிறை சென்று இருப்பார்கள். ஒருவர் இருவராக அல்ல... ஆயிரக்கணக்கில்! ஏன் என்றால் அந்தளவு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் கவனயீர்ப்பின்போது ஈடுபட்டு இருந்தார்கள். ஏதோ அந்தந்த நாடுகளில் இருந்த அரசாங்கங்கள், நிருவாக கட்டமைப்புக்கள் தமிழ்நாடு அரசுபோல் அல்லாது சற்று இரக்கம் காட்டியமையால் தப்பினார்கள்.

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள் என்று சொல்லப்படும்போது இந்த புண்ணாக்குகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரின்போது தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்பது எத்துணை முட்டாள்தனமானது.

சண்டித்தனங்கள், வரட்டு கெளரவங்கள் இனிமேல் பயனற்றது. ஆயுதம்மூலம் சில இராணுவத்தை கொல்லாம். ஆனால்.. அது தமிழ்மக்களுக்கு தாயகத்தில் மனிதப்பேரவலம் தவிரவேறு ஒன்றையும் பெற்றுத்தரப்போவது இல்லை.

அரசியல் ஒன்றுதான் இனி ஒரே கதி. இதைப்புரியாது தொடர்ந்தும் ஐந்து, ஆறு, ஏழு கட்ட ஈழபோர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு பிரயோசனம் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? அவர்களிற்கு உணர்வு ஏற்றுவதற்கு எப்படியும் பேசலாமா? அதான் தேர்தல் முடிவில் எல்லாம் பார்த்தோமே!

நான் சொன்ன‌து சீமான் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்காக‌ப் பேசிய‌து என்று..! அதை ஊட‌க‌ வியாபாரிக‌ள் வேறு இட‌ங்க‌ளுக்கு காவிச்சென்றால் அதுக்கு அவ‌ர் என்ன‌ செய்வார்..! சிறீல‌ங்காவிலும்தான் உள்ளூர்ச் சிங்க‌ள‌வ‌னுக்கு ஒருமாதிரியும் வெளிநாட்டுக்கார‌னுக்கு ஒரு மாதிரியும் ம‌ந்திரிமார் க‌தைக்கின‌ம்..! அதை சிங்க‌ள‌வ‌ன் புரிந்துகொள்ள‌வில்லையா? அற‌ப்ப‌டித்த‌ த‌மிழ்ச்ச‌மூக‌ம் இப்ப‌ அடிமுட்டாள் ரேஞ்சில‌ இருக்கா?

ஐந்தாம் கட்ட ஈழபோர் என்று நம்மவர் மத்தியில் தற்போது சிந்தனை தூவப்படுவது எவ்வளவு ஆபத்தானது என்று தற்போது ஏற்பட்ட பேரவலத்தை கண்டபின்பும் தெரியவில்லையானால் என்ன செய்வது?

தூவ‌ப்ப‌ட்ட‌து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிடையே. அதை நாம் எம‌க்கான‌தாக்கிக் குழ‌ப்பிக் கொள்ள‌ வேண்டாம்.

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள்தான். ஆனால் ஏன் எப்படி எதற்காக அப்படி புண்ணாக்காய் போனார்கள்? இந்த புண்ணாக்குகள் ஏன் எப்படி எதற்காக கடந்த சில மாதங்களில் திடீரென உலகெங்கும் கிளர்ந்து எழுந்தார்கள்?

எல்லாரும் புண்ணாகுக‌ளா இல்லாத‌ கார‌ண‌த்தினால‌ கிளர்ந்து எழுந்தார்க‌ள்.

புலம்பெயர் மக்களும் சீமான் ஐயா போல் நிச்சயம் சிறை சென்று இருப்பார்கள். ஒருவர் இருவராக அல்ல... ஆயிரக்கணக்கில்! ஏன் என்றால் அந்தளவு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் கவனயீர்ப்பின்போது ஈடுபட்டு இருந்தார்கள். ஏதோ அந்தந்த நாடுகளில் இருந்த அரசாங்கங்கள், நிருவாக கட்டமைப்புக்கள் தமிழ்நாடு அரசுபோல் அல்லாது சற்று இரக்கம் காட்டியமையால் தப்பினார்கள்.

இவ்வ‌ள‌வு நாள் இத்த‌னை த‌ர‌ம் ந‌டைபெற்ற‌ போராட்ட‌ங்க‌ளில் சில‌ விரும்ப‌த்த‌காத ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெற்றிருக்க‌லாம். ஆனால் எம்மைப்போன்ற அரசியல் வலிமைகுன்றிய வேறு எந்த‌ ஒரு ச‌மூக‌த்தாலும் இந்த‌ அள‌வு ஒழுக்க‌த்துட‌னும் க‌ட்டுப்பாட்டுட‌னும் ந‌டந்துகொண்டிருக்க‌ முடியுமா என்ப‌து கேள்விக்குறியே. அதன் பெருமை புலம்பெயர் புண்ணாக்குகளையே சாரும்.

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள் என்று சொல்லப்படும்போது இந்த புண்ணாக்குகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரின்போது தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்பது எத்துணை முட்டாள்தனமானது.

அடுத்த‌ ஈழ‌ப்போர் க‌ள‌த்துக்கு வெளியே ந‌ட‌க்கும் என்ப‌து புலிக‌ளே ஏற்க‌ன‌வே சொன்ன‌து. புண்ணாக்குக‌ளுக்கு இதுகூட‌த் தெரியாம‌லா இருக்கும்? ஆக‌வே பெரும்பான்மை புண்ணாக்குக‌ள் ஆயுத‌ப்போரைப் ப‌ற்றி சிந்திக்க‌வே இல்லை என்ப‌து எனது தாழ்மையான‌ க‌ருத்து.

சண்டித்தனங்கள், வரட்டு கெளரவங்கள் இனிமேல் பயனற்றது. ஆயுதம்மூலம் சில இராணுவத்தை கொல்லாம். ஆனால்.. அது தமிழ்மக்களுக்கு தாயகத்தில் மனிதப்பேரவலம் தவிரவேறு ஒன்றையும் பெற்றுத்தரப்போவது இல்லை.

யாரும் இல்லையென்று சொல்ல‌வில்லை. சீமான் த‌மிழ்நாட்டுக்கு வைத்த‌ த‌விடு ஈழத்த‌மிழ‌ருக்கான‌து அல்ல‌.

அரசியல் ஒன்றுதான் இனி ஒரே கதி. இதைப்புரியாது தொடர்ந்தும் ஐந்து, ஆறு, ஏழு கட்ட ஈழபோர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு பிரயோசனம் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? அவர்களிற்கு உணர்வு ஏற்றுவதற்கு எப்படியும் பேசலாமா? அதான் தேர்தல் முடிவில் எல்லாம் பார்த்தோமே!

நான் ஏற்கனவே சொன்னது போல, புலிகல் பயங்கரவாதிகள், ஈழத்தமிழர் சிங்களவனின் நாட்டைப் பிரித்துக் கேட்கிறார்கள் போன்ற சிந்தனைகள் இரண்டு சகாப்தங்களாக தமிழ்நாட்டில் ஊன்றப்பட்டுவிட்டது. அது ஒரே வருடத்தில் அகற்றப்பட்டுவிடாது. அவர்களைக் குறைசொல்லியும் எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. எமது பாசத்துக்குரிய தலைவனே ஒட்டுமொத்த தமிழினத்தின் எழுச்சியையுமே விரும்பியிருந்தாரே தவிர வெறும் ஈழத்தமிழரை வைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் ஐயாவின் பேச்சுக்கள் தமிழக மக்களுக்கு மட்டுமான பிரச்சார செய்திகளாக எடுக்கப்படுவது இல்லை. அது பல்வேறு மட்டங்களில் சிந்தனைகளை சீர்தூக்கி பார்ப்பதற்கும் பரந்த அளவில் பிரயோகம் செய்யப்படுகின்றது. நம்மவர் ஊடகங்களில் பாரியளவில் இந்த சிந்தனைகள் பரப்புரை செய்யப்படுகின்றன.

ஐந்தாம் கட்ட ஈழபோர் என்று நம்மவர் மத்தியில் தற்போது சிந்தனை தூவப்படுவது எவ்வளவு ஆபத்தானது என்று தற்போது ஏற்பட்ட பேரவலத்தை கண்டபின்பும் தெரியவில்லையானால் என்ன செய்வது?

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள்தான். ஆனால் ஏன் எப்படி எதற்காக அப்படி புண்ணாக்காய் போனார்கள்? இந்த புண்ணாக்குகள் ஏன் எப்படி எதற்காக கடந்த சில மாதங்களில் திடீரென உலகெங்கும் கிளர்ந்து எழுந்தார்கள்?

புலம்பெயர் மக்களும் சீமான் ஐயா போல் நிச்சயம் சிறை சென்று இருப்பார்கள். ஒருவர் இருவராக அல்ல... ஆயிரக்கணக்கில்! ஏன் என்றால் அந்தளவு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் கவனயீர்ப்பின்போது ஈடுபட்டு இருந்தார்கள். ஏதோ அந்தந்த நாடுகளில் இருந்த அரசாங்கங்கள், நிருவாக கட்டமைப்புக்கள் தமிழ்நாடு அரசுபோல் அல்லாது சற்று இரக்கம் காட்டியமையால் தப்பினார்கள்.

புலம்பெயர் மக்கள் புண்ணாக்குகள் என்று சொல்லப்படும்போது இந்த புண்ணாக்குகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரின்போது தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்பது எத்துணை முட்டாள்தனமானது.

சண்டித்தனங்கள், வரட்டு கெளரவங்கள் இனிமேல் பயனற்றது. ஆயுதம்மூலம் சில இராணுவத்தை கொல்லாம். ஆனால்.. அது தமிழ்மக்களுக்கு தாயகத்தில் மனிதப்பேரவலம் தவிரவேறு ஒன்றையும் பெற்றுத்தரப்போவது இல்லை.

அரசியல் ஒன்றுதான் இனி ஒரே கதி. இதைப்புரியாது தொடர்ந்தும் ஐந்து, ஆறு, ஏழு கட்ட ஈழபோர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு பிரயோசனம் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? அவர்களிற்கு உணர்வு ஏற்றுவதற்கு எப்படியும் பேசலாமா? அதான் தேர்தல் முடிவில் எல்லாம் பார்த்தோமே!

இப்படியே அவன் துரோகி,இவன் துரோகி

நீ துரோகி, நான் துரோகி

இது சரியில்ல அது சரியில்லன்னு சொல்லி சொல்லியே

இல்லாத துரோகிகளை உருவாக்கிவிட்டிருக்கிறோம்

துரோகியாகிய ஈழக்கருணாவிடமும், தமிழ்க்கருணாவிடமும் கெஞ்சுகிற நிலைக்கு வந்தாகிவிட்டது

ஆதரவாகப்பேசுகிற அனைவரும் நமக்கு எதிரியல்ல என்பதை எப்போதுதான் கற்றுக்கொள்ளப்போகிறோமோ?

ஆனால் ஈழமக்களுக்காக பேசிய பேச்சுக்காக தனது நட்பையும் வியாபாரத்தையும் இழந்து நிற்கிற சீமானை உங்களால்

கோடம்பாக்கத்தில் மீளக்குடியமர்த்த முடியுமா ?

ஜயா ,அவரிடம் மக்களை குடியமர்த்த உதவுங்கள் என்று கேட்டதில் என்ன தப்பு இருக்கு.கோடம்பாக்கதில் குடியமர்த்த நான் என்ன மேடை பேச்சாளனா?

தமிழின உணர்வாளர்கள் .....ஆனந்த சங்கரியும். 1977 ஆம் ஆண்டளவில் தமிழின உணர்வாளர்தான் இந்த வரிசையில் பலரை நாங்கள் கண்டுள்ளோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ்கேப்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்களால் தான் தமிழ் நாட்டில் சில தொகை மக்களாவது உணர்வு பூர்வமாக எமக்கு தார்மீக ஆதரவு தருகிறார்கள். அவரது சில கருத்துக்களை நாம் ஏற்காவிட்டால் பறவாயில்லை. அதற்காக இப்படி போட்டு தாக்க வேண்டுமா? . எமது மக்களுக்காக அவரது தியாயங்களை எம்மவர்களில் எத்தனை வீதமானவர்கள் செய்தீர்கள் என்று உங்கள் மனச்சாட்சியை கேட்டு சொல்லுங்கள். கடந்த 30 வருடங்களாக எத்தனை இராணுவம் இறந்தது என கணக்கு போட்டவர்கள் நாங்கள் தான். இப்போ 5ம் கட்ட போர் என அவர் சொன்னதும் ஏன் இப்படி கொதித்து போக வேண்டும்? எமக்கே இவ்வளவு தமிழ் மக்களின் உயிர்களை காவு கொடுத்தும், நாம் ஆயிதம் வத்திருந்தும் ஒரு சிங்கள மக்களையாவது கொல்லவில்லையே என ஆத்திரம் வரும் போது 5ம் கட்ட போர் ஒன்று எமக்கு நடைமுறை சாத்தியம் இல்லாத போது அது தமிழ் நாட்டு மக்களை நோக்கிய பேச்சாக நாம் எடுக்கலாம் தானே.!!

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் தனது வாழ் நாளில் இரண்டுதடவைதான் அழுதானாம் முதலாவது அவன் தாய் இறந்த போது இரண்டாவது முதலாம் உலக மகா யுத்தத்தில் ஜேர்மன் தோற்ற போது அந்த வெறி அவனை ஒரு கொடுமைக்காரானாகவே மாற்றியிருந்தது சாதாரண மனிதனிலேயே இவ்வளவு மாற்றத்தை அந்த இழப்பு ஏற்படுத்தியிருக்கிறது சீமானின் சீற்றத்தில் நியாயம் இருக்கிறது.பொதுவாக மனவேதனைக்கு மருந்து காலம் தான், காலப்போக்கில் எல்லோரும் மறந்து மாறி விடுவர் ஆனால் கொள்கைப்பற்றுதியும் திடமும் கொண்டவர்களே தடைகளை உடைத்தெறியும் பேராற்றல் கொண்ட நீரோட்டம் தம் போக்கிலேயே சென்று கொண்டிருப்பார்கள்.

நாமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுகிறோம் இது போதும் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று ஆனால் தீர்மானிப்பவர்கள் இன்னமும் எதிரியால் அழிக்கப்படுக்கொண்டிருக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா ,அவரிடம் மக்களை குடியமர்த்த உதவுங்கள் என்று கேட்டதில் என்ன தப்பு இருக்கு.கோடம்பாக்கதில் குடியமர்த்த நான் என்ன மேடை பேச்சாளனா?

தமிழின உணர்வாளர்கள் .....ஆனந்த சங்கரியும். 1977 ஆம் ஆண்டளவில் தமிழின உணர்வாளர்தான் இந்த வரிசையில் பலரை நாங்கள் கண்டுள்ளோம்.

அவர் மீளக்குடியமர்த்த எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ?

நீங்கள் மீளக்குடியமர்த்த ஏதேனும் செய்கிறீர்களா ?

தனது சொந்த தொழிலையே இழந்து நிற்கும் அவர்

தமிழக அரசாங்கத்தின் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளார்

ஆனந்த சங்கரியுடன் சீமானை ஒப்பிடும் உங்கள் மேலான எண்ணம்..அடடடா

இப்போது புரிகிறது ஏன் போராட்டம் இந்த நிலைக்கு வந்து நிற்கிறதென்பது!

சீமான் போன்றவர்களால் தான் தமிழ் நாட்டில் சில தொகை மக்களாவது உணர்வு பூர்வமாக எமக்கு தார்மீக ஆதரவு தருகிறார்கள். அவரது சில கருத்துக்களை நாம் ஏற்காவிட்டால் பறவாயில்லை. அதற்காக இப்படி போட்டு தாக்க வேண்டுமா? . எமது மக்களுக்காக அவரது தியாயங்களை எம்மவர்களில் எத்தனை வீதமானவர்கள் செய்தீர்கள் என்று உங்கள் மனச்சாட்சியை கேட்டு சொல்லுங்கள். கடந்த 30 வருடங்களாக எத்தனை இராணுவம் இறந்தது என கணக்கு போட்டவர்கள் நாங்கள் தான். இப்போ 5ம் கட்ட போர் என அவர் சொன்னதும் ஏன் இப்படி கொதித்து போக வேண்டும்? எமக்கே இவ்வளவு தமிழ் மக்களின் உயிர்களை காவு கொடுத்தும், நாம் ஆயிதம் வத்திருந்தும் ஒரு சிங்கள மக்களையாவது கொல்லவில்லையே என ஆத்திரம் வரும் போது 5ம் கட்ட போர் ஒன்று எமக்கு நடைமுறை சாத்தியம் இல்லாத போது அது தமிழ் நாட்டு மக்களை நோக்கிய பேச்சாக நாம் எடுக்கலாம் தானே.!!

நுனவிலன்

மிகச்சரியாக கணித்திருக்கிறீர்கள்

5ம் கட்ட ஈழப்போரானது தமிழ்கத்திலிருந்து கூட முன்னெடுக்கப்படுக்கப்படலாம

  • தொடங்கியவர்

இதுவரை கருத்துக்கள் கூறிய உங்கள் யாவருக்கும் தலைவணங்குகிறேன். ஒவ்வொருவரும் பதிக்கப்பட்டுள்ளீர்கள் ஏதாவது ஒரு விதத்தில் உறவையோ, சுற்றத்தையோ, நட்பையோ இழந்து...நானும் தான்...நானும் சீமானை போன்று தமிழக தமிழன் தான்...எனக்கு தமிழீழ மக்களாகிய நீங்கள் புலத்திலோ புலம் பெயர்ந்த இடத்திலோ இருந்தாலும் என் சொந்த்தங்கள்தான்.

சீமானின் உரையை படித்தேன், கேட்டேன், நானும் சிந்தித்தேன் வெறும் மேடைப் பேச்சு போதாது செயல் வடிவம் வேண்டுமென்று. நான் அன்றாடம் கண்விழிக்கும் தேசிய தலைவர் முகம் எனக்கு ஒவ்வொரு நாளும் உறுதியயை சொல்லும் மனம் தளராதே சகோதரனே! போராட்டம் முடிவதில்லை வடிவங்கள் மாறுகின்றன, உன் பங்கை நீ உண்மையாக செய் என்று கூறும். நானும் அவருடன் மனதில் பேசிவிட்டுத்தான் காரியங்களுக்கு செல்வேன் -40 என்ன புயல் காற்றேன்னெ அவர் மனதில் நிற்கும் போது எமனே நடுங்குவான்.

இத்தருணத்தில் நமக்கு உள்ள ஒரு குறை என்னவென்றால் நமக்கு புலம் பெயர் தேசங்களில் வழிநடத்த சரியான தலைமை இல்லாததே! எல்லோரும் தாங்கள் கூறுவதைத்தான் மற்றவர் கேட்டேயாக வேண்டும் என்று நினைக்கின்றனர் இது சரியா?

இனிமேல் என்ன செய்யலாம் என்பதை இவ்வளவு கருத்துக்களை எழுதிய நாம் என்றாவது மாற்றாக சிந்தித்து, ஒரு ஒற்றுமையாக இன்றைய தேவை, 3 மருத்துவர்கள் + 1 அரச அதிபர் + 1 பாராளுமன்ற உறுப்பினர் இவர்களை அனைத்துலக ஊடகவியாலர்கள் சந்திக்க சிறிலங்கா அனுமதிக்க வேண்டும், அவர்கள் பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும் என போராட்ட வடிவம் செய்தோமா? சீமான் மீது குறை நிறை இரண்டும் உள்ளது.

கொழும்பு எரியவும், சிங்களவன்ம் சாகவும், கடைசி தமிழன் உள்ளவரை போராடுவான் என கூறியது தவறே! ஏனென்றால் அதற்கு கைதட்டல் மாத்திரம் போதாது செயல்வடிவமும் வேண்டும் அதற்கு முன் அது தேவை தானா? எங்களுக்கு தமிழீழம் தான் தேவை உங்களில் சிலர் கூறியது போல் எம்மை அழித்துக் கொள்ள தேவை இல்லை ஆனால் எம்மை காத்துக் கொள்ள ஆயுதம் தேவை.

எனவே இந்த நேரத்தில் இராஜதந்திரமான பணிகளை முன் எடுப்பதே முக்கியம் அப்படிச் செய்தால் மேல் ஒருவர் கூறியது போல் ஏதாவது ஒரு நாடு தமிழீழதை பெற்று தரும் இல்லை என்றால் ஆதரிக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் எழுச்சி கொள்ளாதது பற்றி ஒரு உறவு கவலை பட்டது நியாயமே! நானும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அப்படித்தான் இருந்திருப்பேன் ஏனெனில் யாழில், திருமலையில் தமிழர் எவ்வாறு உள்ளனரோ அப்படித்தான் அங்குமுள்ளனர் மேலும் விழிப்புணர்வும் போதாது.

காசுக்கு விலை போனான் தமிழன் என்று மனம் நோகும் சீமான் உண்மையைத்தான் சொல்லியுள்ளார் இருக்கும் உணர்வாளர்களை வைத்து பரப்புரை செய்யவேண்டும்.

எனவே இதற்கெல்லாம் மூளை பலம், ஆள் பலம், செயல் பலம் தேவை...வெறுமனே நானும் நீங்களும் யாரிடமும் குறை படாது முதலில் கருத்துக்களை பகிர்ந்து செயலாற்றுவோம்.

நான் தயார்...நீங்கள் தயாரா?

எஸ்கேப்

:D:lol: என்ன எட்டிப் பார்த்துட்டு எஸ்கேப் ஆகிறீங்கள் அண்ணா?

தமிழகம் இருந்த அசண்டைப்போக்கால் 26 வருடம் கட்டி காத்த விடுதலை போர் நெருக்கடிக்குள் தள்ளி ஈழத்தமிழரை துடுப்பில்லாத படகு போல் எல்லாரையும் நடுக்கடலில் விட்டுவிட்டு போய்விட்டார்கள்.

தமிழகம் விழித்து உதவி செய்திருந்தால் இவ்வளவு தூரம் நாங்கள் கூனிகுறிகி சிங்களத்திடம் சிறைப்பட்டிருக்க மாட்டோம்.

அதன் ஆதங்கத்தில் தான் சீமானை கோபிக்கிறோமே தவிர அவரது தனிப்பட்ட தமிழ் உணர்வை காயப்படுத்த வில்லை. அவரே தன்னை தானே கேள்வி கேட்டால் தனது தமிழகமக்கள் ஏன் இப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் மீது ஒரு வெறுப்பு தான் வரும்.

என்றைக்கு சிங்கள அரசு நிழலாக இயங்கிய தமிழீழ அரசை அடித்து பிடித்ததோ அன்றிலிருந்து வெறுமையையே உணர்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சீமான் ஜீக்கு ஒரு "ஒ" போடுங்கோ .....மறப்போம் மன்னிப்போம் என்ற கலைஞரின் கொள்கைப்படி நடப்போம்......

  • தொடங்கியவர்

ஏன் யாரும் பதில் தரவில்லை நான் கேட்டத்ற்கு? தயவு செய்து வாருங்கள் நன்றாக சிந்தித்து பணியற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனவே இதற்கெல்லாம் மூளை பலம் ஆள் பலம் செயல் பலம் தேவை...வெறுமனே நானும் நீங்களும் யாரிடமும் குறை படாது முதலில் கருத்துக்களை பகிர்ந்து செயலாற்றுவோம்.

நான் தயார்...நீங்கள் தயாரா?

நான் தயார் ஐயா

ஏனெனில் எனக்கு என் மண்வேண்டும்

அதை யாருக்கும்..................

எந்தக்காரணத்துக்காகவும்...........

.......

எவருக்காகவும்............................

எந்தக்காலத்திலும்.............

இழக்க மாட்டேன்

இழக்கவும்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.