Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெட்டிப் பெண்ணிலைவாதம் பேச மறுத்த ஈழத்துப் பெண்கள் அவலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

w2.jpg

ஈழத்தில் அடுப்பங்கரையில் புகைமண்டிப் போயிருந்த தமிழ் பெண்களின் கூந்தலில் மேற்கு நாட்டு கூந்தல் ஸ்பிரே பர வழி செய்தவர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் என்றால் அது மிகையல்ல.

ஊருக்குப் பயந்து, சமூகப் பழக்க வழக்கங்களுக்குப் பயந்து ஒடுங்கி வாழ்ந்த பெண்களை விழிப்புணர்வூட்டி இன விடுதலை நோக்கிய பாதையில், சமூக விடுதலை நோக்கிய பாதையில் கொண்டு வந்த அவர்.. பல பெண்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயரவும் காரணமாக இருந்துவிட்டார் என்பதும் உண்மை.

இந்த மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்ட பெண்கள் இன்று மேற்கு நாட்டுக் கலாசாரங்களால் உள்வாங்கப்பட்டு அங்கே என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அத்தனையையும் செய்கின்றனர். அதில் நல்லவையும் உள்ளன கெட்டனவும் உள்ளன.

மேற்கு நாடுகளில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பதல்ல எமது வேலை. அவர்கள் செய்வதை செய்யட்டும் அதன் விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

இன்றைய எமது வினவல் என்பது மேற்கு நாடுகளிலும் சரி இந்தியா போன்ற நாடுகளிலும் சரி ஒரு கூட்டம் பெண்கள் பெண்ணிலைவாதம் என்ற வாத அடிப்படையை கொண்டு கூட்டம் கூடுகின்றனர்.. மார்தட்டிக் கொள்கின்றனர்.. சுயபிரகடனங்கள் போட்டுக் கொள்கின்றனர்.. புகழ் தேடிக் கொள்கின்றனர்... ஏன் இன்னும் சிலர் தாமே மனித இனத்தில் பெண்களின் புரட்சியாளர்கள்.. முன்னோடிகள் என்று தமக்குத் தாமே மகுடம் கூட சூடிக் கொள்கின்றனர்.

அண்மைய ஆண்டொன்றில் மேற்கு நாடு ஒன்றில் (இங்கிலாந்து) தமிழ் பெண்கள் உள்ளாடை அணிவது தொடர்பாகக் கூட பெண்ணிலைவாதிகள் விவாதித்தனர் என்றால் பாருங்களேன்.

ஆனால் ஈழத்தில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத அரச படைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெண்களை சிறுமிகளை குழந்தைகளை கணவன்மாரை வகை தொகையின்றிக் கொன்ற போது இந்தப் பெண்ணியவாதம் அந்த பெண்களுக்காக பேச மறுத்துவிட்டது. அவர்களுக்காக நீதி கேட்க.. அவலத்தில் துடித்த பெண்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை. ஏன் வழமையாக அவர்கள் செய்யும் கவிதை புரட்சியைக் கூட செய்ய முன்வரவில்லை.

போர்க்களத்தில் வீழ்ந்த தமிழ் சகோதரிகளின் உடல்களை சிங்கள இன வெறியர்கள் நிர்வாணமாக்கி மேய்ந்த போது மேடைகள் தோறும் கொக்கரிக்கும் பெண்ணியவாதம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டது.

இன்று 3 இலட்சத்துக்கும் அதிக மக்கள் (பெண்கள் சிறுமிகள் உள்ளடங்க) ஈழத்தில் சிங்களப் படைகளின் காவலின் கீழ் முட்கம்பி வேலிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அங்கு பெண்கள் படும் துன்பம் என்பது சொல்லில் அடங்காது. ஒரு பெண் குளிக்கக் கூட ஒரு மறைப்பை செய்ய முடியாத நிலை. இயற்கைக் கடனைக் கூட ஒரு மறைவிடம் அமைத்து செய்ய முடியாத நிலை.

அதுமட்டுமன்றி இந்த முகாம்களில் சிங்கள ஓநாய்களுக்கும் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களுக்கும் தினமும் இரையாகும் பெண்களும் அவர்களின் மரண ஓலங்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

கடந்த 3 வாரங்களில் மட்டும் 62 பேர் இந்த முகாம்களில் இறந்துள்ளனர். இதில் மூதாளர்களும் சிசுக்களுமே அதிகம். இந்த மூதாளர்களில் பெண்களும் அடங்குவர். இந்த 62 பேர் யுத்த முனையில் யுத்தத்தின் போது இறந்திருந்தால் அது ஒரு செய்தியாக என்றாலும் வெளிவந்திருக்கும். ஆனால் சிங்கள அரசின் நாசிய கொள்கை ரீதியான ரகசிய, திட்டமிட்ட இன அழிப்பு இந்த 62 பேரை சிறுகச் சிறுகச் சாகடித்திருப்பது இந்த உலகுக்குத் தெரியவில்லை. இப்படி சாகடிக்கப்பட்டது இந்த 62 பேர் மட்டுமல்ல இது 5 அல்லது 6 வது தொகுதி என்றே செய்திகள் கூறுகின்றன. இப்படி இன்னும் இன்னும் சாகடிக்கப்பட இருக்கின்றனர் என்பதும் உண்மை.

அதுபோக.. வாழ வேண்டிய பெண்கள், சிறுமிகள் இன்று வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி, கல்வி இன்றி சிங்களப் படைகளின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் வெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கும் நிலையும் காணாமல் போதல்களும் கடத்தப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்படுவதும் தொடர்கிறது. இப்படி அடைக்கப்படுவோரின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி கேட்க எவரும் இல்லை. அவர்களின் நலன்களை நேரில் சென்று கவனிக்க ஆயிரம் மாதர் சங்கங்களும் பெண்ணிலை அமைப்புக்களும் உள்ள இந்த உலகில் ஒரு பெண்ணிலை அமைப்புக் கூட முன்வரவில்லை.

w3.jpg

//சிங்களப் படைகளின் தாக்குதலில் உடல் கிழிந்து தான் சுமந்த சிசுவுடன் இறந்து கிடக்கும் தமிழ் தாய்.//

நாம் கிட்லரின் நாசிய வதை முகாம்களில் அது நடந்தது இது நடந்தது என்று படிக்கிறோம்.. முழங்குகிறோம்.. உணர்ச்சியை வெட்டிக்கு மேடை போட்டு பேசிக் கொட்டி தீர்த்துக் கொள்கின்றோம் (வெட்டி வீராப்புக் காட்டி காலத்தை வீணடித்துக் கொள்கின்றோம்). ஆனால் எம் கண் முன்னால் நடக்கும் அதே கொடுமைகளை கண் மூடி அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம். பெண்ணின் உள்ளாடைக்கு விடுதலை வேண்ட குரல் கொடுத்த பெண்ணிலைவாதிகளும்.. பெண்கள் தற்கொலைப்படையில் இருப்பது பெண்மைக்கு இழுக்கு என்று வரிந்து கட்டிப் பேசிய பெண் மகான்களும் இன்று இந்த கொடுமைகளுக்காக ஏன் ஒரு வரி தன்னும் பேச முன்வரவில்லை. இவர்களின் கண்ணுக்கு நவீன கிட்லர் ராஜபக்சே செய்யும் இன அழிப்பின் கனதி புரியவில்லையா.. அல்லது அவர் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடுமைகள் தான் தெரியவில்லையா ...??!

வன்னி இன அழிப்புப் போரின் போது ஒரு ஐநா அங்கீகாரமுள்ள அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசுகிறார்.. "தமிழ் ஆண்களின் குருதி இந்து சமுத்திரத்தை செந்திறமாக்கட்டும் தமிழ் பெண்கள் எமது படைகளுக்கு இரையாகட்டும்" என்று. இன்றை நாள் வரை இந்த கூற்றை வெளியிட்ட அந்த அதிகாரியை.. அந்த நாட்டை எந்தப் பெண்கள் அமைப்பும் பகிரங்கமாகக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

ஆக பெண்ணிலைவாதம் என்பது ஒரு சில படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் குந்தி இருக்கும் பெண்களின்.. அல்லது ஓய்வுபெற்றுவிட்டு வேலை வெட்டி இன்றி வீட்டில் இருக்கும் பெண்களின்.. அல்லது சமூகத்தில் ஏதாவது மாறுதலாகப் பேசி கைதட்டலும் புரட்சியவாதி என்ற அடைமொழிகளும் பெற்றுக் கொள்ள பேராசை கொண்டலையும் பெண்களின்.. நான் படித்த படிப்புக்கு ஆண்களுக்கு சரிநிகரானவள் என்ற மமதையை வெளிப்படுத்த நினைக்கும் பெண்களின்.. வாதநிலையாக உலகில் இருக்கிறதே அன்றி.. பெண்களின் நிலை கண்டு அவர்களுக்குத் தேவையான மனிதாபிமானம், அடிப்படை மனித உரிமைகள் நோக்கி அவற்றிற்காக அர்ப்பணிப்போடு பாடுபட அது முன்வரத் தயாராக இல்லை என்பதை அது உறுதி செய்திருக்கிறது.

ஒருவேளை கவிதை கதை கட்டுரைகளால் ராஜபக்சவை கவிழ்க்க முடியாது அவரின் முன் செயற்பாடுகளே தோற்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று தமது பலவீனத்தை தாமே ஒத்துக் கொண்டு பெண்களையும் பெண்ணிலைவாதத்தையும் கைவிட்டு விட்டனரா இந்தப் பெண்கள் என்று கூட கேட்கத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையை பெண்ணிலைவாதிகளை சாட எழுதவில்லை. அவர்களின் உண்மைத் தன்மையை உலகம் காண எழுத வேண்டி நேர்ந்துவிட்டது. இதற்கு மேலும் உலகில் பெண்களின் நிலை பேச இப்படி ஒரு கூட்டம் அவசியமா எம்மத்தியில் என்ற வினவலும் எழாமல் இருக்க வாய்ப்பில்லை.

சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்ப செயற்படும் துணிச்சல் வேண்டும். இன்றேல் இந்தப் பெண்ணிலைவாதம் என்பது கூட கவிதை கதை மேடைப் பேச்சு பேசும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அம்சமாகவே இந்த உலகில் இருக்கும். அதனிடம் அதிகம் காத்திரமான செயற்பாடுகளை மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள் தனமானதாகவே இருக்கும்.

ஆனால் இந்த வேளையில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும், பெண்ணிலைவாதம் பேசாத ஆனால் சமூகப்பணிபுரிய தம்மை அர்ப்பணித்த சில சகோதரிகள் தொண்டு அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரிலும் மறைமுகமாகவும் உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இருந்தாலும் அவை போதுமானவையாகவோ பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படவுள்ள பெண்களின் மீட்சிக்கு முழுமையாக உதவும் சக்தி உள்ளனவாகவோ இன்னும் அமையப் பெறவில்லை என்பதும் வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு சிறீலங்கா சிங்கள அரசின் நாசிய வழி இன அழிப்புக் கொள்கையும் அணுகுமுறைகளும் அது விதித்துள்ள தடைகளும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆக.. பெண்களே பெண்களை கையறுநிலையில் வதை முகாம்களில் சிங்கள இன வெறியர்களிடம் கையளித்துவிட்டு வாழாதிருக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. எல்லாவற்றிற்குமாக போராட வேண்டியதாக உலகத் தமிழ் சமூகம் இருக்கிறது. அது தனது கடமையை செய்யுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பொறுத்திருப்பு காலத்துள் எத்தனையோ தமிழ் உயிர்களை சிங்களம் அழித்துவிடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறுக்கக்கூடாது. செயல்களும் செயற்பாடுகளும் துரிதமாக தொடர்சியாக வெல்லும் வரை அமைய வேண்டும். செய்வார்களா உலகத் தமிழ் மக்கள்..??!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் தாழ்வு.(நல்லவை என்று எழுதிப்படிப்போம்.. ஆனால் அதன் வழி செயற்பட மறுபோம்.. இந்த நிலையும் மாற்றுவோம்.)

source: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

வெளிநாடுகளில் பெண்களை சில ஆண்கள் நடாத்தும் விதத்தை பார்க்கும்போது இங்கு வெளிநாடுகளில் இப்படி பெண்கள் சீரழிவதைவிட தாயகத்தில் சிங்களக்காடையர்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவது நல்லதுபோல தெரிகின்றது.

வீடுகளில் பெண்களை எத்தனை ஆண்கள் அடிமைகளிலும் கீழாக நடாத்துகின்றார்கள் என்று நேரில் கண்ட ஒருசிலருக்குத்தான் தெரியும். சமூகத்திற்குப் பயந்து இதுகளும் அடிமைகள் மாதிரி வாழுதுகள். இங்கே இத்தனை கொடுமைகள் செய்யும் ஆண்கள் ஊரில் எப்படி எப்படியெல்லாம் பெண்களை வதைத்து இருப்பார்கள், வதைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இப்படியான நிலமையைப் பார்க்கும்போது அங்கு தாயகத்தில் சிங்களக்காடையர்கள் மூலம் பெண்கள் சீரழிவது பரவாயில்லை போல இருக்கின்றது.

Edited by கலைஞன்

.

இப்படியான நிலமையைப் பார்க்கும்போது அங்கு தாயகத்தில் சிங்களக்காடையர்கள் மூலம் பெண்கள் சீரழிவது பரவாயில்லை போல இருக்கின்றது.

என்ன நீங்களும் இப்படி சொல்லிபோட்டிங்கள்?

எல்லாதுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது.ஆண்,பெண் என்றில்லாமல் மனிதம் என்று பார்த்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் பெண்களை சில ஆண்கள் நடாத்தும் விதத்தை பார்க்கும்போது இங்கு வெளிநாடுகளில் இப்படி பெண்கள் சீரழிவதைவிட தாயகத்தில் சிங்களக்காடையர்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவது நல்லதுபோல தெரிகின்றது.

வீடுகளில் பெண்களை எத்தனை ஆண்கள் அடிமைகளிலும் கீழாக நடாத்துகின்றார்கள் என்று நேரில் கண்ட ஒருசிலருக்குத்தான் தெரியும். சமூகத்திற்குப் பயந்து இதுகளும் அடிமைகள் மாதிரி வாழுதுகள். இங்கே இத்தனை கொடுமைகள் செய்யும் ஆண்கள் ஊரில் எப்படி எப்படியெல்லாம் பெண்களை வதைத்து இருப்பார்கள், வதைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இப்படியான நிலமையைப் பார்க்கும்போது அங்கு தாயகத்தில் சிங்களக்காடையர்கள் மூலம் பெண்கள் சீரழிவது பரவாயில்லை போல இருக்கின்றது.

மிக மோசமான இன அழிப்பின் ஒரு பகுதியாகவே தாயகத்தில் பெண்கள் மீது அனைத்து வகை வன்முறைகளையும் சிங்கள இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதனை ஒரு சில ஆண்களின் சமூக அறிவற்ற நாகரிகமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு நோக்குவது சரியானதன்று.

இரண்டுக்கும் வெவ்வேறு பரிமானங்கள் உள்ளன.

நீங்கள் குறிப்பிட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் தம்மைப் பாதுகாக்கப் பல வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு தொலைபேசி அழைப்புப் போதுமானது உண்மையில் அந்த ஆண்களால் அவர்கள் துன்பப்படுத்தப்படின் அவர்களை சிறையில் அடைக்க.அதுமட்டுமன்றி குறித்த பெண்களுக்கு மறுவாழ்வளிக்க பல அமைப்புக்கள் உள்ளன.

அதேபோல் வெளிநாடுகளில் பெண்களாலும் ஆண்கள் துன்பப் படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குத்தான் தீர்வுக்கு ஒரு வழியும் இல்லை. இது கவலையளிக்கும் விடயமும் கூட.

ஆனால் தாயகப்பெண்கள் முறையிட இந்த உலகில் யாரும் இல்லை. முறையிட்டாலும் நடவடிக்கை எடுக்க யாரும் இல்லை. எமது மக்களின் கவசமான விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவென்பது வெறும் அரசியல், இராணுவ பரிமானத்தில் மட்டுமன்றி சமூக அளவிலும் பாதிப்பை உண்டு பண்ணப் போகின்ற ஒரு அபாயகரமான சூழலை.. சாதாரண.. தவிர்க்கக் கூடிய.. பெண்களின் பிரச்சனைகளோடு ஒப்பிடுவது மிகத் தவறான செயற்பாடாகும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

....

இப்படியான நிலமையைப் பார்க்கும்போது அங்கு தாயகத்தில் சிங்களக்காடையர்கள் மூலம் பெண்கள் சீரழிவது பரவாயில்லை போல இருக்கின்றது.

அண்ணா, நீங்கள் சொல்வது போல வெளிநாடுகளில் பல பெண்கள் ஆணாதிக்கத்திற்கு உட்படுத்தப் பட்டு குடித்துவிடு அடிப்பதும், வேலைக்குப் போகும் மனைவியை வேதனைக்குரிய வார்த்தைகளால் வசைபாடுவதும், மனைவியிடம் பணம் பறிப்பதும், வீட்டில் பிள்ளைகளைப் படிக்கவிடாது மனைவியுடன் நித்தம் சண்டைபோடுவதும், ஒரு வேளை அந்தப் பெண்ணுக்காக குடும்பத்தினர் பேசவந்தால் முறை தவறிப் பேசுவதும், ஏன் போலீஸ் வந்தால் கூட இது குடும்பப் பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்ளவோம் என்று சொல்லி தப்புவதும் இந்த நிலை மீண்டும் தொடர்ந்ததால் பெண்ணகளின் வாழ்கை தனிமைப் படுத்தப்பட்டும் ஏன் சில தற்கொலையில் முடிந்திருப்பதும் உண்மை தான்...

அதே நேரம், சில பணத்தாசை, பொருளாசை, பதவியாசை பிடித்த மனைவியாலும் அவர்களின் பெண்ணாதிக்கத்தலும் சில ஆண்கள் பாதிக்கப் பட்டும் இருக்கிறார்கள்... (மேற்குலகில் பல திருமணங்கள் பாதியில் முறிந்து காணப் படுகிறது... இதை வேறு ஒரு தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறன்.)

ஆனால் எம்மண்ணில் நடப்பது இதுவல்ல... நெடுக்ஸ் அண்ணா கூறியதுபோல, 'மிக மோசமான இன அழிப்பின் ஒரு பகுதியாகவே தாயகத்தில் பெண்கள் மீது அனைத்து வகை வன்முறைகளையும் சிங்கள இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதனை ஒரு சில ஆண்களின் சமூக அறிவற்ற நாகரிகமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு நோக்குவது சரியானதன்று.'

தயவு செய்து இரண்டையும் ஒப்பிடாதீர்கள்...

தாயகத்தில் ஆண்களும்தான் கேவலமான முறையில் நடாத்தப்படுகின்றார்கள். ஆண்களின் சடலங்கள்கூட கேவலப்படுத்தப்பட்டுள்ளன, கேவலப்படுத்தப்படுகின்றன. ஆண்குறிகளைக்கூட வெட்டி எடுக்கின்றார்கள். தலைவர் என்று காட்டப்பட்ட ஓர் சடலத்தில் கோவணம் மாத்திரம் கட்டி இருந்தார்கள்.

இப்படிப் பார்க்கும்போது எத்தனைபேர் தாயகத்தில் அல்லல்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து இருந்தீர்கள், குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்?

அதாவது விடயம் என்ன என்றால்.. இந்தக்கட்டுரையின் உள்ளார்ந்தம் பெண்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களை சீண்டுவது என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் பெண்களை கிண்டல் செய்துள்ளதுபோக, வெளிநாட்டில் வாழும் ஆண்கள் என்ன செய்கின்றார்கள், எப்படி வாழ்கின்றார்கள் என்று ஒருவரிகூட சொல்லப்பட இல்லை. கட்டுரை ஆசிரியர் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களான ஆண்கள் யோக்கியவான்கள் என்று சொல்கின்றாரா அல்லது அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லத்தேவையில்லை என்று நினைத்து இருக்கின்றாரா?

இல்லை.. கட்டுரை ஆசிரியரின் தேவை வெளிநாட்டில் உள்ள பெண்களை வேலை வெட்டி அற்ற சடங்கள் என்று கூறவேண்டியதன் முனைப்பை அவதானிக்க முடிகின்றது.

தாயகம் என்று பார்க்கும்போது நாங்கள் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்ப்பது இல்லை. எல்லோருமே எமது சகோதர, சகோதரிகளே. இவர்களிற்கு தனித்தனியாக குரல்கொடுக்கத் தேவையில்லை. பெண்களின் அவலங்கள் பற்றி பேசுபவர்கள் இந்த பொதுவான விடயத்தின்கீழ் - தாயகத்து மக்கள் - என்ற பார்வையில் குரல் கொடுத்து இருக்கலாம். குரல் கொடுத்துக்கொண்டு இருக்கலாம்.

ஒரே குடையின் கீழ் இருந்து குரல் கொடுக்கும்போது ஆண், பெண் என்று பிரிந்து நிற்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கடந்த பல மாதங்களாக இப்படித்தான் புலம்பெயர்நாடுகளில் உறவுகள் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஒரு சில ஆண்கள் செய்த, செய்யும் தவறுக்கு... முழு ஆண்களும் பொறுப்பு என்றவகையில் நான் சாடுவதுபோல் மேலே சொல்லப்படுவது போலவே... ஒரு சில பெண்களின் செய்கைகளிற்கு பெரும்பான்மையான பெண்களை குற்றம் சொல்வதாக இந்தக்கட்டுரை எனக்குப்படுகின்றது.

மேலும்... மேலே நான்கூறிய கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை. இதுபற்றி வேண்டுமானால் இன்னொரு தலைப்பில் கருத்துப்பரிமாற்றம் செய்யலாம். ஆண்களின் ரவுடீசம் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இருக்கின்றது, சீரழித்துக்கொண்டு இருக்கின்றது, சீரழிக்கப் போகின்றது என்று அனுபவப்பட்டவர்களிற்கு, சம்பவங்களை நேரில் கண்டவர்களுக்கு புரியும்.

சமூகம் எனப்படுகின்ற பாதுகாப்பு கலசத்தின்கீழ் நின்று - சமூகத்தை பாதுகாப்பு கவசமாக உபயோகித்து அதன்கீழ் நிலையெடுத்து ஆண்கள் செய்கின்ற கேவலமான செயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏன் என்றால் எங்கள் சமூகம் அப்படித்தான் - ஆண்களுக்கு மட்டும் சார்பாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

கட்டுரையாளரின் நோக்கம் பெண்ணிலைவாதம் பேசுகின்றவர்கள் இன்றைய ஈழத்துப் பெண்களின் அவலம் தொடர்பில் ஏன் பேச முன்வரவில்லை என்பதாக இருக்கின்றதே தவிர சீண்டுவதாக காண்பது அத்துணை சரியான பார்வையாக இல்லை.

கட்டுரையாளர் எந்த இடத்திலும் பெண்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று சொன்னதாகத் தெரியவில்லை. பெண்ணிலைவாதம் என்பதை கையில் எடுத்திருப்பவர்களின் நிலை அப்படியாக இருக்குமோ என்றே ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ஐநா பிரமானங்களின் கீழ் மனித உரிமைகள் எல்லா மனிதருக்கும் அளிக்கப்பட்டுள்ள போதும் பெண்கள் சிறுவர்களுக்கு விசேட கவனிப்புக்கள் அளிக்கப்படுகின்றன. போர்க்கள இராணுவ விதிமுறைகளில் கூட பெண்களுக்கு குழந்தைகளுக்கு தனியான விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவை ஆண்களுக்கு இல்லை.

அதுமட்டுமன்றி சிறீலங்கா படையினர் ஆண்களை துன்புறுத்துவது என்பது பெண்களை துன்புறுத்துவது என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் பெண்களைக் குழந்தைகளை துன்புறுத்துவது என்பது மோசமான ஒரு நிலையாகவே உலகில் நோக்கப்படுகிறது.

உலகில் ஆண்கள் பல பாதிப்புக்களை சந்திக்கின்ற போதும் ஆண்களுக்கு ஆண்கள் தினம் கொண்டாடுவதில்லை. பெண்களுக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு இருக்கிறது. ஆண் மனிதனாக இருப்பினும் பாரபட்சமாக நடத்தப்படுவது ஏனோ உலகில் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. பாதிப்புக்களின் தன்மைகள் வேறுபடுகின்ற போது இவ்விடயத்தில் எல்லோரையும் ஒரு சேர நோக்கி தான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்ட படங்களுக்கு ஏன் அதிக முன்னுரை வழங்கினர். காரணம் உலகின் அனுதாபத்தை அதிகம் ஈர்த்துக் கொள்ளத்தான்.

கலைஞன் தவறான கண்ணோட்டத்தில் கட்டுரையை நோக்குகிறார் என்று மட்டும் தெரிகிறது. கட்டுரையாளர் கேட்பது சும்மா நேரங்களில் அவசியமற்ற விடயங்களில் எல்லாம் பெண்களுக்கு அது தேவை இது தேவை என்போர் பெண்கள் இவ்வளவு இடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்க மறுக்கின்றனர் என்பதும்.. இந்தப் பிரச்சனைகளை சர்வதேச மகளிர் அமைப்புக்களூடு சர்வதேச மட்டத்துக்கு ஏன் எடுத்துச் செல்ல முயல்கிறார்கள் இல்லை என்பதும் தொனிப்பது தெரிகிறது.

ஆண்களை விட பெண்கள் பாதிக்கப்படுகின்ற போது பொதுவான பார்வை என்பது பாதிக்கப்படும் தரப்புக்கு அதிக அனுதாபத்தை ஈட்டித்தருவதோடு மக்களை அதிகம் ஆத்திரம் கொள்ளச் செய்வதுமாக இருப்பது வழமை.

ஆனால் ஈழத்துப் பெண்களின் பாதிப்பில்.. இந்த நிலை வெளிப்படவில்லை. புலம்பெயர்ந்த பெண்கள் கூட.. பெண்களின் குழந்தைகளின் நிலைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆண்களை விட பெண்களே அதிக அசெளகரிகங்களையும் பாலியல் சித்திரவதைகளையும் போரரங்குகளில் சந்திக்கும் நிலையில் பெண்களின் நிலை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியது முக்கியமாகும்.

எத்தனையோ ஆண்களை சுட்டுப் புதைத்த இடத்தில் ஏற்படாத தாக்கம் கிருசாந்தி குமாரசாமி விடயத்தில் எழுந்தது எப்படி ஏன். அவரும் மாண்டு போன ஒரு மனிதன் என்ற கணக்கில் பல ஆண்களோடு ஒருவராக மனிதனாகப் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் தானே..??! ஏன் அப்படிச் செய்யவில்லை...??!

அடிப்படையில் கலைஞனின் பார்வை கட்டுரையாளர் யார் என்பதன் அவரின் தன்மை என்பது தொடர்பில் அணுகப்படுவதாகவே தெரிகிறது. அவர் சொல்ல முனையும் விடயத்தை கலைஞன் உள்வாங்க முயலவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

பாதிக்கப்படும் ஈழத் தமிழ் பெண்களின் நிலையை அடுத்த உலகப் பெண்கள் மாநாட்டில் எதிரொலிக்கச் செய்ய பெண்ணிலை பற்றிப் பேசும் பெண்கள் முன் வர வேண்டும் என்பதே கட்டுரையாளரின் ஆதங்கம் நேரிடையின்றி கேட்டு நிற்கிறது.

புலம்பெயர் பெண்களுக்கு இதில் அதிக பொறுப்பு இருப்பதால் தான் கட்டுரையாளர் புலம்பெயர் பெண்களை மையப்படுத்தி இதனை எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிலைவாதம் என்றால் என்னங்கோ?

யாராவது சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 21ம் திகதி ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 21ம் திகதி ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் யாருக்கு எத்தனை தினம் என்பதல்ல. ஈழத்து தமிழ் பெண்களின் அவலத்தை உலக அரங்குக்கு கொண்டு வர பெண்களும் தங்கள் பங்களிப்பை மேலதிகமாகச் செய்து உதவ வேண்டும் என்பதே.

உங்கள் கருத்துக்கு தந்தையர் தினம் போல உலக மகளிர் தினத்துக்கு மேலதிகமாக அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டலாம். :rolleyes:

பெண்ணிலைவாதம் என்றால் என்னங்கோ?

யாராவது சொல்லுங்களேன்

பெண்களின் இன்றைய நிலை தேவைகள் குறித்துப் பேசுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிப் பேசப்படுவதாகத் தெரியவில்லை.. பல சந்தர்ப்பங்களில்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

பெண்ணிலைவாதம் என்றால் என்னங்கோ?

யாராவது சொல்லுங்களேன்

எனக்கும்தான் புரிய வில்லை யார் ஆவது கறுப்பிக்கி பதில் சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்ளுறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையின் நோக்கம் யாருக்கு எத்தனை தினம் என்பதல்ல. ஈழத்து தமிழ் பெண்களின் அவலத்தை உலக அரங்குக்கு கொண்டு வர பெண்களும் தங்கள் பங்களிப்பை மேலதிகமாகச் செய்து உதவ வேண்டும் என்பதே.

உங்கள் கருத்துக்கு தந்தையர் தினம் போல உலக மகளிர் தினத்துக்கு மேலதிகமாக அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டலாம். :rolleyes:

நீங்கள் கலைஞனுக்கு எழுதிய பதிலில் ஆண்களுக்கு என ஒரு தினம் கொண்டாடப்படுவதில்லை என எழுதியிருந்தீர்கள் அதற்கு பதிலாகத் தான் நான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணியவாதம் ஆண்களுக்கு எதிரானதா?

பெண்ணியம், பெண்ணியல்வாதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகிறது. இருப்பினும் பெண்ணியம் பற்றிய தப்பபிப்பிராயங்கள், கண்ணோட்டங்களில் மாறுதல்களைக் காண முடியவில்லை. இந்தப் பின்னடைவுக்கு அல்லது பெண்ணியல்வாதத்தின் நியாயங்கள் சமூகத்தை முழுமையாகச் சென்றடையாமைக்கு என்ன காரணம்?

கல்வி, பொருளாதார முன்னேற்றங்களை நுகராத நலிவடைந்த பெண்களிடத்தில் எழுச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோகத்திலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும், மறுக்கப்படும் பெண்களின் உரிமைகள் சுதந்திரங்களை வென்றெடுப்பதற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமுகத்தின் பொய்மைகளைத் தகர்ந்தெறிவதற்காகவும் சொல்லால், செயலால் போராடுவதையே பெண்ணியம்என்று கருதப்படுகிறது.

பெண்களுக்கான இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் பெண்கள் என்பதே இதன் விசேடமாகும். கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்ட பெண்களில் சிலரே இத்தகைய முன்னெடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். கற்றோம், பெற்றோம் என்றில்லாமல் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கத்தில் பெண்கள் மேற்கொள்ளும் பெண்ணியல் முன்னெடுப்புகள் பாராட்டப்பட வேண்டியதுதான்.

எனினும் பெண்ணியம், எண்ணியல்வாதம் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் முகம் சுளிப்பதும் விமர்சிப்பதும் மாறிய பாடில்லை. பெண்ணியல்வாதம் தலைதூக்கிய ஆரம்ப கால கட்டத்தில் ‘இது மேலைத்தேயயநாகரீகம், எமது கலாசார ஒழுக்க நெறிகளை மீறும் செயல், பாரம்பரிய கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் முயற்சி’ என்ற குற்றச்சாட்டுக்கள் காரசாரமாக முன்வைக்கப்பட்டன. காரணம், சமூக, கலாசார முன்னேற்றங்களுக்கு பெண்களின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பின் அவசியத்தையும் உணராத காலமது. பெண்களை பாடசாலைக்கு அனுப்புவதா இல்லையா என்பது குறித்தே அப்போது ஆராய்ந்தார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்களை முடக்கி வைத்தார்கள். பெண்கள் வீட்டை விட்டுக் கிளம்புவது, முதலீட்டுவது, சொத்துக்களை நிர்வகிப்பது என்பன அசாத்தியமான விடயங்களாகவும் பெருங்குற்றங்களாகவும் கருதப்பட்டன.

இன்று நிலைமை மாறிவிட்டது. சமூக, பொருளாதார மலர்ச்சிக்கு பெண்களின் முக்கியத்துவம் எத்துணை அவசியமானது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இதனாலேயே பெண் கல்வி வீதம் அதிகரித்துள்ளது. ஆசிரியர்களாகவும், தாதியர்களாவும் பணியாற்றுவதே பெண்களுக்குப் பொருத்தமானது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் பல துறைகளிலும் பணியாற்றுவதற்கான சமூக அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இத்துணை முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் பெண்ணிலைவாதத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுவது எதனால் என்ற கேள்வி இயல்பானதே.

இதற்கு அடிப்படைக் காரணம், பெண்ணிலைவாதம் எனப்படுவது தமக்கு எதிரானதொரு செயற்பாடு என்ற ஆண்களின் எண்ணம். இந்த மனப்பாங்கை ஆணாதிக்கம் என பெண்ணிலைவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஆண்களிடத்தில் இத்தகைய ஆதிக்க சிந்தனை ஏற்படுவது எதனால் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நலிவடைந்த பெண்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலரின் செயற்பாடும் இந்த நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. பெண்ணிலைவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில பெண்களின் நடவடிக்கைகளினாலே பெண்ணிலைவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் எல்லாப் பெண்களும் விமர்சனத்துக்குள்ளாகின்றனர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலைஞனுக்கு எழுதிய பதிலில் ஆண்களுக்கு என ஒரு தினம் கொண்டாடப்படுவதில்லை என எழுதியிருந்தீர்கள் அதற்கு பதிலாகத் தான் நான் எழுதினேன்.

பெண்களில் அன்னை என்பவள் எப்படி விசேடமாகப் பார்க்கப்படுகிறாளோ அப்படியே ஆண்களில் தந்தை என்பவர். அவை வேறு தினங்கள்.! அவை அன்னையருக்காகவும்.. தந்தையர்களுக்காகவும் கொண்டாடப்படும் தினங்கள். அதில் உரிமைகள்.. கொடுமைகள் முன்னிலைப் படுத்தப்படுவதிலும்.. ஒன்றுகூடல்களும் நினைவுகூறல்களுமே முன்னிற்கின்றன. உலகில் மகளிருக்காக கொண்டாடும் தினம் என்பது வேறு. உலகப் பெண்கள் மாநாடே நடக்கிறது. ஈழத்துப் பெண்களின் அவலத்தை அங்கு ஒலிக்கச் செய்ய வேண்டும். ஈழத்துப் பெண்களின் உரிமைப் போராட்டத்தை உலகின் முன் நியாயம் காட்டி முன் வைக்க வேண்டும்.

யாரோ ஒரு நடிகை தமிழகப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசிவிட்டாள் என்பதற்காக கிளர்ந்தெழுந்த தமிழகம்.. ஆயிரம் ஆயிரம் தமிழ் பெண்களின் உயிர்களை.. கற்பை சிங்களம் சூறையாட அனுமதித்துவிட்டு வாழாதிருப்பதும்.. குஸ்புவுக்காக ஒலித்த பெண்ணுரிமைக் குரல்களும்.. பெண்ணிலைவாத குரல்களும்.. இங்கு மெளனித்துக் கிடப்பதும் ஏனென்றுதான் புரியவில்லை..???! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் இன்றைய நிலை தேவைகள் குறித்துப் பேசுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிப் பேசப்படுவதாகத் தெரியவில்லை.. பல சந்தர்ப்பங்களில்..! :icon_mrgreen:

இதைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும்.ஆனால் ஏன் வீண் வம்பு <_<:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும்.ஆனால் ஏன் வீண் வம்பு :icon_mrgreen:<_<

என்ன தெரியும் என விழாவாரியாக விளக்கம் தேவை.எப்படி வீண்வம்பு?

நெடுக்காலபோவான், கட்டுரை ஆசிரியர் எழுதிய கீழ்க்கண்ட கருத்துக்களிற்கான எனது சிந்தனைகள் தடித்த எழுத்தில் அவற்றின் கீழே இருக்கின்றது. நீங்கள் எனது கோணத்திலும் சிந்தித்துப் பாருங்கள். நன்றி!

ஈழத்தில் அடுப்பங்கரையில் புகைமண்டிப் போயிருந்த தமிழ் பெண்களின் கூந்தலில் மேற்கு நாட்டு கூந்தல் ஸ்பிரே பரவ வழி செய்தவர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் என்றால் அது மிகையல்ல.

ஈழத்தில் தலையில் சீப்பு படாத ஆண்களின் பரட்டைத்தலையில் மேற்கு நாட்டு கூந்தல் ஸ்பிரே, மற்றும் ஜெல் பரவ வழி செய்தவர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் என்றால் அது மிகையல்ல.

ஊருக்குப் பயந்து, சமூகப் பழக்க வழக்கங்களுக்குப் பயந்து ஒடுங்கி வாழ்ந்த பெண்களை விழிப்புணர்வூட்டி இன விடுதலை நோக்கிய பாதையில், சமூக விடுதலை நோக்கிய பாதையில் கொண்டு வந்த அவர்.. பல பெண்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயரவும் காரணமாக இருந்துவிட்டார் என்பதும் உண்மை.

பெண்களுக்கு ரவுடீசம் செய்துகொண்டு இருந்த ஆண்களுக்கு விழிப்புணர்வூட்டி இன விடுதலை நோக்கிய பாதையில், சமூக விடுதலை நோக்கிய பாதையில் கொண்டு வந்த அவர்.. பல ஆண்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயரவும் காரணமாக இருந்துவிட்டார் என்பதும் உண்மை.

இந்த மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்ட பெண்கள் இன்று மேற்கு நாட்டுக் கலாசாரங்களால் உள்வாங்கப்பட்டு அங்கே என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அத்தனையையும் செய்கின்றனர். அதில் நல்லவையும் உள்ளன கெட்டனவும் உள்ளன.

இந்த மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்ட ஆண்கள் இன்று மேற்கு நாட்டுக் கலாசாரங்களால் உள்வாங்கப்பட்டு அங்கே என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அத்தனையையும் செய்கின்றனர். அதில் நல்லவையும் உள்ளன கெட்டனவும் உள்ளன.

மேற்கு நாடுகளில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பதல்ல எமது வேலை. அவர்கள் செய்வதை செய்யட்டும் அதன் விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

மேற்கு நாடுகளில் ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பதல்ல எமது வேலை. அவர்கள் செய்வதை செய்யட்டும் அதன் விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

இன்றைய எமது வினவல் என்பது மேற்கு நாடுகளிலும் சரி இந்தியா போன்ற நாடுகளிலும் சரி ஒரு கூட்டம் பெண்கள் பெண்ணிலைவாதம் என்ற வாத அடிப்படையை கொண்டு கூட்டம் கூடுகின்றனர்.. மார்தட்டிக் கொள்கின்றனர்.. சுயபிரகடனங்கள் போட்டுக் கொள்கின்றனர்.. புகழ் தேடிக் கொள்கின்றனர்... ஏன் இன்னும் சிலர் தாமே மனித இனத்தில் பெண்களின் புரட்சியாளர்கள்.. முன்னோடிகள் என்று தமக்குத் தாமே மகுடம் கூட சூடிக் கொள்கின்றனர்.

இன்றைய எமது வினவல் என்பது மேற்கு நாடுகளிலும் சரி இந்தியா போன்ற நாடுகளிலும் சரி ஒரு கூட்டம் ஆண்கள் பெண்களுடன் ரவுடீசம் செய்கின்றனர். பெண்களுடன் மார்தட்டிக் கொள்கின்றனர்.. சவால்கள் விட்டுக்கொள்கின்றனர். ஏன் இன்னும் சிலர் தாமே மனித இனத்தில் சமூகத்தின் காவலர்கள் என்று தமக்குத் தாமே மகுடம் கூட சூடிக் கொள்கின்றனர்.

அண்மைய ஆண்டொன்றில் மேற்கு நாடு ஒன்றில் (இங்கிலாந்து) தமிழ் பெண்கள் உள்ளாடை அணிவது தொடர்பாகக் கூட பெண்ணிலைவாதிகள் விவாதித்தனர் என்றால் பாருங்களேன்.

அட, பெண்கள் தங்களுக்குள்கூடி அதுவும் தங்கள் உள்ளாடைபற்றி சிந்திப்பதுவும்கூட, தங்களுக்குள் விவாதிப்பதுகூட பிழையான ஓர் செயலாகவும், முட்டாள்தனமான ஓர் செயலாகவும், அருவருக்கத்தக்க ஓர் செயலாகவும் ஆண்கள் சிலர் கருதுகின்றார்கள் என்றால் பாருங்களேன்! (ஐயா ஆண்களே... அவர்கள் உங்கள் உள்ளாடைபற்றியா ஆராய்ச்சி செய்தார்கள்? தங்கள் உள்ளாடை பற்றித்தானே ஆராய்ச்சி செய்தார்கள்?)

ஆனால் ஈழத்தில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத அரச படைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெண்களை சிறுமிகளை குழந்தைகளை கணவன்மாரை வகை தொகையின்றிக் கொன்ற போது இந்தப் பெண்ணியவாதம் அந்த பெண்களுக்காக பேச மறுத்துவிட்டது. அவர்களுக்காக நீதி கேட்க.. அவலத்தில் துடித்த பெண்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை. ஏன் வழமையாக அவர்கள் செய்யும் கவிதை புரட்சியைக் கூட செய்ய முன்வரவில்லை.

ஹும்! ஐ.நா கூட முன்வரவில்லை. அதுசரி, பெண்கள் குரல் கொடுக்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? குரல் கொடுத்தார்கள் என்று என்னால் நிரூபிக்க முடியும்.

போர்க்களத்தில் வீழ்ந்த தமிழ் சகோதரிகளின் உடல்களை சிங்கள இன வெறியர்கள் நிர்வாணமாக்கி மேய்ந்த போது மேடைகள் தோறும் கொக்கரிக்கும் பெண்ணியவாதம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டது.

இதை அரங்கேற்றியவர்கள் ஆண்களான (?) ஆனந்தசங்கரி, கருணா, டக்லஸ், பிள்ளையான்.... மற்றும் ஆதரவு கொடுத்த இதர ஆண்கள்... (?), மற்றும் மெளனமாக இருந்த இதர ஆண்கள்... மேலும்... பெண்ணியவாதம் செய்வோர் இரவு, பகலாக தாயக மக்களிற்காக குரல்கொடுத்து தெருவில் நின்றதை நான் அறிவேன்.

இன்று 3 இலட்சத்துக்கும் அதிக மக்கள் (பெண்கள் சிறுமிகள் உள்ளடங்க) ஈழத்தில் சிங்களப் படைகளின் காவலின் கீழ் முட்கம்பி வேலிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அங்கு பெண்கள் படும் துன்பம் என்பது சொல்லில் அடங்காது. ஒரு பெண் குளிக்கக் கூட ஒரு மறைப்பை செய்ய முடியாத நிலை. இயற்கைக் கடனைக் கூட ஒரு மறைவிடம் அமைத்து செய்ய முடியாத நிலை. அதுமட்டுமன்றி இந்த முகாம்களில் சிங்கள ஓநாய்களுக்கும் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களுக்கும் தினமும் இரையாகும் பெண்களும் அவர்களின் மரண ஓலங்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதற்கு காரணமான ஆண்கள் யார் யார் என்று தாங்கள் பட்டியல் இடமுடியுமா?

கடந்த 3 வாரங்களில் மட்டும் 62 பேர் இந்த முகாம்களில் இறந்துள்ளனர். இதில் மூதாளர்களும் சிசுக்களுமே அதிகம். இந்த மூதாளர்களில் பெண்களும் அடங்குவர். இந்த 62 பேர் யுத்த முனையில் யுத்தத்தின் போது இறந்திருந்தால் அது ஒரு செய்தியாக என்றாலும் வெளிவந்திருக்கும். ஆனால் சிங்கள அரசின் நாசிய கொள்கை ரீதியான ரகசிய, திட்டமிட்ட இன அழிப்பு இந்த 62 பேரை சிறுகச் சிறுகச் சாகடித்திருப்பது இந்த உலகுக்குத் தெரியவில்லை. இப்படி சாகடிக்கப்பட்டது இந்த 62 பேர் மட்டுமல்ல இது 5 அல்லது 6 வது தொகுதி என்றே செய்திகள் கூறுகின்றன. இப்படி இன்னும் இன்னும் சாகடிக்கப்பட இருக்கின்றனர் என்பதும் உண்மை.

அதுபோக.. வாழ வேண்டிய பெண்கள், சிறுமிகள் இன்று வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி, கல்வி இன்றி சிங்களப் படைகளின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் வெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கும் நிலையும் காணாமல் போதல்களும் கடத்தப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்படுவதும் தொடர்கிறது. இப்படி அடைக்கப்படுவோரின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி கேட்க எவரும் இல்லை. அவர்களின் நலன்களை நேரில் சென்று கவனிக்க ஆயிரம் மாதர் சங்கங்களும் பெண்ணிலை அமைப்புக்களும் உள்ள இந்த உலகில் ஒரு பெண்ணிலை அமைப்புக் கூட முன்வரவில்லை.

இதில் எத்தனை தமிழ் பெண்ணிலை அமைப்புக்களும், சங்கங்களும் உள்ளன என்று கூறமுடியுமா? இவற்றில் எவை குரல்கொடுக்கவில்லை என்று கூறமுடியுமா? தவிர, ஏதாவது அமைப்பை சிறீ லங்கா அரசாங்கம் உள்ளே அனுமதிக்கின்றதா என்று கூறமுடியுமா?

நாம் கிட்லரின் நாசிய வதை முகாம்களில் அது நடந்தது இது நடந்தது என்று படிக்கிறோம்.. முழங்குகிறோம்.. உணர்ச்சியை வெட்டிக்கு மேடை போட்டு பேசிக் கொட்டி தீர்த்துக் கொள்கின்றோம் (வெட்டி வீராப்புக் காட்டி காலத்தை வீணடித்துக் கொள்கின்றோம்). ஆனால் எம் கண் முன்னால் நடக்கும் அதே கொடுமைகளை கண் மூடி அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம். பெண்ணின் உள்ளாடைக்கு விடுதலை வேண்ட குரல் கொடுத்த பெண்ணிலைவாதிகளும்.. பெண்கள் தற்கொலைப்படையில் இருப்பது பெண்மைக்கு இழுக்கு என்று வரிந்து கட்டிப் பேசிய பெண் மகான்களும் இன்று இந்த கொடுமைகளுக்காக ஏன் ஒரு வரி தன்னும் பேச முன்வரவில்லை. இவர்களின் கண்ணுக்கு நவீன கிட்லர் ராஜபக்சே செய்யும் இன அழிப்பின் கனதி புரியவில்லையா.. அல்லது அவர் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடுமைகள் தான் தெரியவில்லையா ...??!

மகளிர் அமைப்புக்கள் நிச்சயம் குரல்கொடுத்து இருக்கின்றார்கள், குரல்கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். குரல் கொடுக்காதவர்களை இனம் காட்டுங்கள். யாரோ ஒருசிலரை காரணம்காட்டி நம்மவர்களின் முழு பெண்கள் அமைப்புக்களையுமே வசைபாடுவது சரியாகத் தெரியவில்லை.

வன்னி இன அழிப்புப் போரின் போது ஒரு ஐநா அங்கீகாரமுள்ள அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசுகிறார்.. "தமிழ் ஆண்களின் குருதி இந்து சமுத்திரத்தை செந்திறமாக்கட்டும் தமிழ் பெண்கள் எமது படைகளுக்கு இரையாகட்டும்" என்று. இன்றை நாள் வரை இந்த கூற்றை வெளியிட்ட அந்த அதிகாரியை.. அந்த நாட்டை எந்தப் பெண்கள் அமைப்பும் பகிரங்கமாகக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

இந்தக்கூற்றை எந்த அமைப்புக்கள் கண்டித்து உள்ளன என்று கூறுங்கள். அப்படி கண்டித்து உள்ள அமைப்புக்கள் ஆண்கள், பெண்கள் என்று பாகுபடுத்தி இயங்கும் அமைப்பா என்றும் கூறுங்கள்.

ஆக பெண்ணிலைவாதம் என்பது ஒரு சில படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் குந்தி இருக்கும் பெண்களின்.. அல்லது ஓய்வுபெற்றுவிட்டு வேலை வெட்டி இன்றி வீட்டில் இருக்கும் பெண்களின்.. அல்லது சமூகத்தில் ஏதாவது மாறுதலாகப் பேசி கைதட்டலும் புரட்சியவாதி என்ற அடைமொழிகளும் பெற்றுக் கொள்ள பேராசை கொண்டலையும் பெண்களின்.. நான் படித்த படிப்புக்கு ஆண்களுக்கு சரிநிகரானவள் என்ற மமதையை வெளிப்படுத்த நினைக்கும் பெண்களின்.. வாதநிலையாக உலகில் இருக்கிறதே அன்றி.. பெண்களின் நிலை கண்டு அவர்களுக்குத் தேவையான மனிதாபிமானம், அடிப்படை மனித உரிமைகள் நோக்கி அவற்றிற்காக அர்ப்பணிப்போடு பாடுபட அது முன்வரத் தயாராக இல்லை என்பதை அது உறுதி செய்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் யாரோ ஒருசிலர் அல்லது யாதோ ஒரு அமைப்பின் மீது உள்ள எரிச்சலை அனைத்து பெண்கள் அமைப்புகளிற்கும் எதிராக கொட்டித் தீர்க்கின்றீர்கள்.

ஒருவேளை கவிதை கதை கட்டுரைகளால் ராஜபக்சவை கவிழ்க்க முடியாது அவரின் முன் செயற்பாடுகளே தோற்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று தமது பலவீனத்தை தாமே ஒத்துக் கொண்டு பெண்களையும் பெண்ணிலைவாதத்தையும் கைவிட்டு விட்டனரா இந்தப் பெண்கள் என்று கூட கேட்கத் தோன்றுகிறது.

இதை இப்படியும் சொல்லிப் பார்க்கலாம். "ஒருவேளை கவிதை கதை கட்டுரைகளால் ராஜபக்சவை கவிழ்க்க முடியாது அவரின் முன் செயற்பாடுகளே தோற்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று தமது பலவீனத்தை தாமே ஒத்துக் கொண்டு தமிழையும், தமிழ்த்தேசியத்தையும் கைவிட்டு விட்டனரா இந்த தமிழ்த்தேசியவாதிகள் என்று கூட கேட்கத் தோன்றுகிறது."

இந்தக் கட்டுரையை பெண்ணிலைவாதிகளை சாட எழுதவில்லை. அவர்களின் உண்மைத் தன்மையை உலகம் காண எழுத வேண்டி நேர்ந்துவிட்டது. இதற்கு மேலும் உலகில் பெண்களின் நிலை பேச இப்படி ஒரு கூட்டம் அவசியமா எம்மத்தியில் என்ற வினவலும் எழாமல் இருக்க வாய்ப்பில்லை.

இப்படி சொற்களை மாற்றினால்... எப்படி பொருள் திரிவுபடும் என்று பாருங்கள். "இந்தக் கருத்துக்கள் தமிழ்த்தேசியவாதிகளை சாட எழுதவில்லை. அவர்களின் உண்மைத் தன்மையை உலகம் காண எழுத வேண்டி நேர்ந்துவிட்டது. இதற்கு மேலும் உலகில் தமிழ்த்தேசியவாதம் பேச இப்படி ஒரு கட்டுரை அவசியமா எம்மத்தியில் என்ற வினவலும் எழாமல் இருக்க வாய்ப்பில்லை."

சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்ப செயற்படும் துணிச்சல் வேண்டும். இன்றேல் இந்தப் பெண்ணிலைவாதம் என்பது கூட கவிதை கதை மேடைப் பேச்சு பேசும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அம்சமாகவே இந்த உலகில் இருக்கும். அதனிடம் அதிகம் காத்திரமான செயற்பாடுகளை மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள் தனமானதாகவே இருக்கும்.

மீண்டும் பெண்ணிலைவாதம் என்ற சொல்லிற்கு பதிலாக மேலே தமிழ்த்தேசியவாதம் எனும் சொல்லை மாற்றீடு செய்து பாருங்கள்.

ஆனால் இந்த வேளையில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும், பெண்ணிலைவாதம் பேசாத ஆனால் சமூகப்பணிபுரிய தம்மை அர்ப்பணித்த சில சகோதரிகள் தொண்டு அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரிலும் மறைமுகமாகவும் உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இருந்தாலும் அவை போதுமானவையாகவோ பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படவுள்ள பெண்களின் மீட்சிக்கு முழுமையாக உதவும் சக்தி உள்ளனவாகவோ இன்னும் அமையப் பெறவில்லை என்பதும் வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு சிறீலங்கா சிங்கள அரசின் நாசிய வழி இன அழிப்புக் கொள்கையும் அணுகுமுறைகளும் அது விதித்துள்ள தடைகளும் ஒரு முக்கிய காரணமாகும்.

மீண்டும் பெண்ணிலைவாதம் என்ற சொல்லிற்கு பதிலாக மேலே தமிழ்த்தேசியவாதம் எனும் சொல்லையும், சகோதரிகள் என்ற சொல்லிற்கு பதிலாக மேலே தமிழ் உறவுகள் எனும் சொல்லையும் மாற்றீடு செய்து பாருங்கள்.

ஆக.. பெண்களே பெண்களை கையறுநிலையில் வதை முகாம்களில் சிங்கள இன வெறியர்களிடம் கையளித்துவிட்டு வாழாதிருக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. எல்லாவற்றிற்குமாக போராட வேண்டியதாக உலகத் தமிழ் சமூகம் இருக்கிறது. அது தனது கடமையை செய்யுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பொறுத்திருப்பு காலத்துள் எத்தனையோ தமிழ் உயிர்களை சிங்களம் அழித்துவிடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறுக்கக்கூடாது. செயல்களும் செயற்பாடுகளும் துரிதமாக தொடர்சியாக வெல்லும் வரை அமைய வேண்டும். செய்வார்களா உலகத் தமிழ் மக்கள்..??!

ஆக.. தமிழர்களே தமிழர்களை கையறுநிலையில் வதை முகாம்களில் சிங்கள இன வெறியர்களிடம் கையளித்துவிட்டு வாழாதிருக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. எல்லாவற்றிற்குமாக போராட வேண்டியதாக உலகத் தமிழ் சமூகம் இருக்கிறது. அது தனது கடமையை செய்யுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பொறுத்திருப்பு காலத்துள் எத்தனையோ தமிழ் உயிர்களை சிங்களம் அழித்துவிடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறுக்கக்கூடாது. செயல்களும் செயற்பாடுகளும் துரிதமாக தொடர்சியாக வெல்லும் வரை அமைய வேண்டும். செய்வார்களா உலகத் தமிழ் மக்கள்..??!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் தாழ்வு.(நல்லவை என்று எழுதிப்படிப்போம்.. ஆனால் அதன் வழி செயற்பட மறுபோம்.. இந்த நிலையும் மாற்றுவோம்.)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒற்றுமை நீங்கின் தாழ்வு!

இது முற்றிலும் விதண்டாவாதமானது.

ஆண்ணிலைவாதம் என்ற ஒன்றை முன்னுறுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் எவரும் கூட்டம் கூடிக் கொண்டு ஆண்களின் உள்ளாடைகள் தொடர்பில் குஸ்புவின் அறிக்கைகள் தொடர்பில் பதிலிறுத்துக் கொண்டிருப்பதாக நான் அறியவில்லை.

ஐநா சபையில் பெண்கள் விவகார தமிழ் பெண் அதிகாரி தற்கொலைப் படையில் தமிழ் பெண்கள் என்பதற்கு எதிராக மனித உரிமைக் குரல் எழுப்பினார். ஒரு சில நூறு தற்கொலைப் போராளிகளுக்காக கண்ணீர் மல்கியவர்கள் இத்தனை ஆயிரம் பெண்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்..??!

புலம்பெயர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பெண்களுக்காக குரல் கொடுத்து.. பெண்களுக்கான அவர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உங்களால் ஆதாரத்தோடு சமர்பிக்க முடியுமா..??!

பொதுவாக ஆண்கள் மீதான படுகொலைகள் வன்முறைகள் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்படுவதாக இந்த உலகில் நடைமுறையில்லை. பொதுவான மனித உரிமைகளுக்குள் ஆண்கள் அடக்கப்பட்டு அது பாரபட்சமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அது பிறிதொரு விடயம். ஆனால் பெண்களுக்கு அடிப்படை மனித உரிமைகளுக்கு மேலதிகமாக பெண்கள் என்ற நிலையில் விசேட கவனிப்புக்கள் இருக்கின்றன.

புலம்பெயர்ந்த பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் புலம்பெயரும் வரை தலைசீவவில்லை.. ஜெல் பாவிக்கவில்லை என்பதையே இங்கு முன்னிலைப்படுத்த நினைப்பின் அது உங்களுக்கு இத்தலைப்பின் மானசீகமான எண்ணத்தோடு பொருந்திப் போக மனசில்லை என்பதையே காட்டி நிற்கும்.

அதுமட்டுமன்றி ஆண்கள் கூடி உள்ளாடைகள் பற்றி பேசும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல. அது அவரவரின் தனிப்பட்ட பொதுச் சுகாதாரம் நலன் சார்ந்த விடயங்கள். அதிலும் விடுதலை தேடுபவர்களாக.. அதைக் கதைப்பதை பெருமையாக புரட்சியாக எண்ண ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனநிலையை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் அந்தச் சின்னத்தனத்தை நாம் மாற்ற அல்ல இங்கு இச்செய்தியை இணைத்தது.

பெண்ணிலைவாதம் என்பதை முன் வைத்து பெண்களின் நிலைக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் ஈழத்துத் தமிழ் பெண்களின் இன்றைய துயர் நிறை சூழலை உலகின் முன் கொண்டு வர ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள் இல்லை. அது பெண்களுக்கு காத்திரமான பாதுகாப்பு போய் சேரவாவது உதவ வாய்ப்பளிக்கும் அல்லவா. அதையே கட்டுரையாளர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு மேல்.. இந்த இடத்தில் பெண்ணிலைவாதிகளின் செயலை 100% சரி.. ஆண்கள் என்ன வெட்டிக் கிழிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல நினைத்தால்.. உங்களின் நிலைக்கான என்னால் வருத்தப்பட முடியும் மட்டுமே தவிர வேறெதும் செய்ய முடியாது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களில் இருக்கும் மக்களுக்காக பெண்ணியம் பேசும் பெண்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டுமா? ஏன் ஏனைய பெண்களையோ அல்லது ஆண்களையோ நீங்கள் குரல் கொடுக்க சொல்லி கேட்கவில்லை[ ஒரு வேளை நீங்கள் நினைத்து விட்டீங்களா அவர்கள் போதுமான அளவு குரல் கொடுத்து விட்டார்கள் என்று.]

முகாம்களில் இருக்கும் மக்களை வெளியே எடுப்பதற்காகவும் அவர்களை அவர்களது இருப்பிடங்களில் மீள் குடியேற்றம் வைத்தல் என்பன புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களினதும் கடமை இதில் ஆண்,பெண் வித்தியாசம் இல்லை என்பது என் கருத்து.

நெடுக்காலபோவான் மேலுள்ள எனது பல கருத்துக்கள் உங்கள் பார்வையில் விதண்டாவாதமாக படலாம். இதேபோல் உங்கள், மற்றும் கட்டுரையாளரின் மேலுள்ள கருத்துக்களில் பல எனக்கும் விதண்டாவாதமாகவே படுகின்றது.

நீங்கள் கடைசியாக மேலே எழுதியுள்ள கருத்திற்கும் எனக்கு சரியான பதிலைத் தரமுடியும். அத்துடன் ஆதாரமும் காட்டமுடியும். ஆயினும்...

கட்டுரையாளர் சொல்கின்ற கடைசிவிடயம் பற்றிமற்றும் கவனத்தை செலுத்துவது நன்றாகப் படுகின்றது.

ஒற்றுமையே வாழ்வு என்றால்... இந்த ஒற்றுமையை நம்மவரிடையே எப்படி உருவாக்க முடியும் என்று கட்டுரையாளரை கேட்டுச் சொல்லிங்கள், நீங்கள் சொல்லுங்கள். மேலுள்ள கட்டுரை எப்படி ஒற்றுமை ஏற்பட உதவும் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள்.

பெண்ணிலைவாதம் பேசுறவையும் குரல் கொடுக்கனும் என்பதைத்தான் கட்டுரையாளர் வலியுறுத்துவது தெரியவில்லையா..??! பல பெண்ணிலைவாதிகளின் குரல்கள் அந்தப் பெண்களுக்காகப் பேச முனையாமையையே அவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார்..! :icon_mrgreen:

ஒற்றுமையை 100% எம்மால் உருவாக்க முடியாது. அவர்களாக உணர வேண்டும். அப்படியான ஒரு நிலையையே ஈழத்துப் பெண்களின் துன்பத்தைக் கண்டும் கேட்டும் மெளனிகளாக இருக்கும் பெண்ணிலைவாதம் பேசுபவர்கள் மீதே மேற்படி கட்டுரை தனது கருத்தை கூறி இருக்கிறது. பெண்களை அனைவரையும் அல்ல என்பதை கட்டுரைய விளங்கப் படிப்பின் எளிமையாகப் புரியும் என்று நினைக்கிறேன்..!

எமது சகோதரிகளின் துயரத்தை முழு உலகுக்கும் காவிச் செல்லுங்கள்.. அது விலக வழி செய்ய உறுதுணையாக இருங்கள்.. அநாவசிய விவாதங்களை மேடைப் பேச்சுக்களை தவிருங்கள் என்பதே கட்டுரையில் தொனிக்கிறது..! <_<

Edited by nedukkalapoovan

பெண்ணிலைவாதம் பேசுறவையும் குரல் கொடுக்கனும் என்பதைத்தான் கட்டுரையாளர் வலியுறுத்துவது தெரியவில்லையா..??! பல பெண்ணிலைவாதிகளின் குரல்கள் அந்தப் பெண்களுக்காகப் பேச முனையாமையையே அவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார்..! :icon_mrgreen:

குரல் கொடுக்காத ஒருவரை இங்கு இனம் காட்டுங்கள். நான் அவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு யாழில் உள்ள இந்தக் கருத்துக்களையும் இணைத்து அவர் என்ன சொல்கின்றார் என்று கேட்டுப்ப்பார்ப்போம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் குற்றவாளி இல்லை என்பதே சட்ட தார்மீகம் என்று சொல்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரல் கொடுக்காத ஒருவரை இங்கு இனம் காட்டுங்கள். நான் அவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு யாழில் உள்ள இந்தக் கருத்துக்களையும் இணைத்து அவர் என்ன சொல்கின்றார் என்று கேட்டுப்ப்பார்ப்போம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் குற்றவாளி இல்லை என்பதே சட்ட தார்மீகம் என்று சொல்கின்றார்கள்.

தற்கொலைப்படையில்.. புலிகள் அமைப்பில் பெண்கள் போராளிகளாக இருப்பது பெண்ணினத்தை தவறாக பயன்படுத்துவதாக உலகிற்குச் சொல்லிக் கொண்டிருந்த ராதிகா குமாரசாமி அம்மையாரிடம் அவரின் இன்றைய வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த பெண்களின் நிலை குறித்து.. உங்கள் மின்னஞ்சல் வலுவை உச்சமாகப் பாவித்து ஒரு நிலை விளக்க கட்டுரையை இங்கு சமர்ப்பிப்பின்.. மேற்குறிப்பிட்ட கட்டுரையை மேற்படி கட்டுரையாளரிடம் சொல்லி எடுக்கச் சொல்லி விடுகிறேன்..! (அவர் ஒரு உதாரணம் மட்டுமே. லண்டனில் பெண்ணிலைவாதம் என்றும் மனித உரிமைகள் என்றும் கொழும்பில் பஸ்ஸில் குண்டுவெடித்த போது பிளந்து கட்டியவர்கள்.. இன்று அந்தக் கூட்டங்களை மண்டபம் ஒதுக்கி கூட்டாமைக்கும் ஒரு விளக்கம் பெற்றுத் தரின் நல்லா இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ராதிகா குமாரசாமியை இங்குகொண்டு வந்து சொருகுவது அர்த்தம் அற்றது. ஏற்கனவே தமிழ் மக்களிற்கு இவரைப்பற்றி தெரியும். நான் வேண்டுமானால் ஓர் மின்னஞ்சல் அனுப்பி பார்க்கின்றேன். பதில்வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால்.. இதர பெண்கள் அமைப்புக்களில் தொடர்புபட்டவர்களை நிச்சயம் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு அவர்களின் கருத்தை பெறமுடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

குறிப்பிட்ட அமைப்புகளிற்கு வலைத்தளம் இருந்தால் அவற்றின் இணைப்பை தருவது தொடர்புகொள்வதற்கு உபயோகமாக இருக்கும். நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.