Jump to content

பாதை தெரியாத சுவடுகள். ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாதை தெரியாத சுவடுகள். ............

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்..

.பாக்கியம் என்னை ஏன் காப்பற்ற முயற்சி எடுத்தாய்....என்று வலியில்..புலம்புவான். ஐயா ...நீ ...காலில்லாவிடாலும்...இந்த கட்டை வேகும் வரை துணையாய் இருக்க வேணும் ...அல்லது நாம் இருவரும் ஒன்றாய் போய் விட வேண்டும் என்பாள். கணவனின் பணிவிடை முடிந்த நேரங்களில் ..அயலில் உள்ள ....வார்டு இல ஒரு சிறுமி ..பெயர் அரசி ............ஆச்சி ஆச்சி என்று ....இவளுடன் மிகவும் அன்பாக இருப்பாள்.அவளுக்கு இவளும் அந்த ஏழுவயது சிறுமிக்கு அவளுமாக இவர்கள் வாழ்கை கடந்த இரு மாதங்களாக போய் கொண்டு இருக்கிறது. அந்த சிறுமிக்கு யாரும் இல்லை

த ற்போது ...எப்ப அம்மா அப்பா என்னை பார்க்க வருவினம் என்று கேட்பாள் .

சிறுமியின் ஒரு கால் முழங்க்காலுடனும் மற்றியது கணுக்காலுடனும் அகற்ற பட்டு விட்டது ....தாதிகளின் ஏனோ தானோ என்ற புறக்கணிப்பின் மத்தியிலும் ஆச்சி தான் இவளுக்கு துணை. தன் பேரப் பிள்ளியாகவே கவனித்து வருகிறாள். காலயில்முகம் கழுவி சுத்தமாக இருக்க உதவி செய்வாள். கணவனின் உணவில் சிறிது இவளுக்கும் ஊட்டி விடுவாள். அந்த குழந்தை அடிக்கடி தாய் தந்தையை கேட்பாள்... வெளியில் விளையாட முயார்சிக்கும் குழந்தை களை ஏக்கத்துடன் பார்ப்பாள்.எத்தனை மட்டும் ஆசுபத்திரி கட்டிலே தஞ்சம் என்று இருப்ப்து. இவர்களது கல்வி போய் எதிர் காலமே கேள்விக்குறியாக உள்ளபோது ....அதைக்கூட சிந்திக்க தெரியாத இவர்கள்.........

பாக்கியம் இப்போதெலாம் அழுவதில்லை...மனம் மரத்து போய் விட்டு இருந்தது . ஒரு காலாத்தில் எம்மை ...போக சொன்னால் ...என்....ஐயா வையும் (கணவனை இப்படி தான் அழைப்பாள்) இந்த குழந்தையையும் கூடவே கொண்டு போக வேணும்....இப்பவே தாய் தந்தை யை கேட்கும் குழந்தை ...அவர்களுக்கு நடந்த அனார்த்த்தில் இருவரும் ..சதை துண்டங்களாக சிதறிபோனார்கள் ...........எனற உண்மையை எப்படிசொல்வேன் ....?எப்படி த்தாங்குவாள் ? இவளின் மூத்த இரு சகோதரர்களை எங்கே தேடுவேன் .....?. . .

குழந்தை ....பாத்ரூம் (சிறு நீர் ) போவதற்காக .....ஆச்சியை அழைத்தது ...சோகத்தின் எல்லையில் வைத்திய சாலை சுவரில் சாய்ந்து சஞ்சரித்து கொண்டவளின் சிந்தனை கலைந்தது ....இவர்களின் எதிர்காலாம்.....எதிர்பார்பாக......

.நீண்ட

........முடிவு தெரியாத வானம் போல ..........இப்படி இன்னும் எத்தனை மனிதர்கள் ......

கதை உண்மை ........பெயர்கள் கற்பனை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் மிகவும் நன்றி.இவர்களின் எதிர்காலம் எம் நாட்டில் இருக்கும் வரைக்கும் ??? தான்.உங்களின் கதையை வாசித்து விட்டு அழுவதைத் தவிர வேறு ஓண்டுமே தோன்றவில்லை. :(

பிரியமுடன்:யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி .....யாயினி .நீண்ட நாளாக மனதில் உறைந்து கிடந்த சோக கதை ..

என் இனம் படும் பாடு எழுத்தில் வடிக்க முடியாதவை ..

Posted

நன்றி அக்கா .. கண்ணிலை கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... இப்படி எத்தனை குழந்தைகளோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சுஜி .........உங்கள் பாராடுக்கு .

Posted

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெறியாத நிலையில் இப்படியான பல சோக கதைகள் ஒவ்வொறு

ஈழதமிழன் மணதிலும் புதைந்து கிடக்கு.

Posted

பாதை தெரியாத சுவடுகள். ............

பாதைதெரியாத சுவடுகள் எம்மண்ணில் நீளமாகிக் கிடக்கிறது....துயரம் முட்டிய வாழ்வும் அவலம் நிரம்பிய நாட்களுமாக நிலாமதி யார் யாரைத் தேற்றுவதென்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும்

சோகங்கள்......இதற்கு ஒரு முடிவு எப்ப வருமோ?புத்த மதம் ......மதங்களின் பெயரால் மரணித்தவர்கள் பலர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளி டைகர் .......சாந்தி .......புத்தன் ...........என நன்றிகள் உங்கள் கருத்து பகிர்வுக்கு.

Posted

இன்றைய எமது உறவுகளின் கண்ணீர் கதையை கண்முன் காட்டிய விதம்

அழகு .....

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.