Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம்

Featured Replies

பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம்

கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம் என்று கூறியது அனைத்து தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதாக இருந்தது.

nakkeeran,iniya%20giv%20amt%20for%20eezham%20copy.jpg

கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், புதுகோட்டை பாவாணன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,ராம், ஆகியோர் பங்கேற்க அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறப்பாக நடந்தது.

மாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மளமளவென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும்,அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மைக் பிடித்து, "நமது தொப்புள் கொடி உறவுகளை அங்கு கொத்து கொத்தாக கொன்று ஒழித்தனர். நாம் கண்டுகொள்ளவில்லை இனி அப்படி இருந்துவிட கூடாது நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் தான் எதிரி இடைக்காலமாக வெற்றி பெற்று உள்ளான். ஆனாலும் நாம் சோர்ந்துவிடக்கூடாது.

இதுவரை ஈழ தமிழர்களுக்காக நடந்த போராட்டம் இனி உலக தமிழர்களுக்கான போராட்டமாக அமைந்துவிட்டது.நம் உறவுகளை காக்க, நமக்கென நாடு அமைய ஒவ்வொரு தமிழக தமிழர்களும் தங்கள் வருமானத்தில் இருந்து பத்து விழுக்காடு நிதியை ஒதுக்கி விடுதலை போராட்டத்திற்கு உதவ வேண்டும்.என் பங்காகவும்,நான் என் நண்பர்களிடம் பெற்ற வகையிலும் ஆறாயிரத்தூ இருநூற்றி பத்து ரூபாயை வழங்குகிறேன்.

'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்' "

என முழங்கி நிதியை பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணியிடமும், இயக்குநர் சீமானிடமும் கொடுக்க பலத்த கரவொலியுடன். வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வீர விடுதலை முழக்கங்கள் முழங்கப்பட்டு அரங்கையே அதிர வைத்தது.

மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் களைத்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும்,உயிர்ப்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒலி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது உலக தமிழ் அரசு அமைய!

source: http://periyaarpaasarai.blogspot.com/2009/...og-post_24.html

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்' "

என முழங்கி நிதியை பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணியிடமும், இயக்குநர் சீமானிடமும் கொடுக்க பலத்த கரவொலியுடன். வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வீர விடுதலை முழக்கங்கள் முழங்கப்பட்டு அரங்கையே அதிர வைத்தது.

மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் களைத்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும்,உயிர்ப்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒலி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது உலக தமிழ் அரசு அமைய!

இந்த உணர்வுகள் அப்படியே நெருப்பாக இருக்கட்டும். ஆனால் இவற்றின் செயலாக்கம், பெரும்பான்மை மக்களின் தீர்ப்பாக, மிக மிக அவசியமான காலத்தில் தீர்க்கமாக வெளிப்படாமல், சோரம்போய், கயவர்களை தெரிவு செய்த இம்மாக்களை காறியுமிழ வேண்டுமென்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்' "

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருஷத்தில எத்தனையோ நடக்கலாம்:

1. கருநாய் நிதியின் அடுத்த வாரிசு (சில நேரம் அந்த நாயே உயிரோட இருந்து, களைகளுக்கு ஆயுள் காலம் நீளம் தானே?) plasma தொலைக் காட்சிய அல்லது ஐ-பொட்ட இலவசமாகக் குடுத்து வாக்குக் கேட்கலாம்

2. அரிசி போய் பீசா இலவசமாகக் கொடுக்கலாம்

3. அழுகுணி தொடர்கள் போய் மேற்கத்தைய நீலப் படங்கள் கருநாய் சானலில் இலவசமாக உலாவரலாம்.

இதெல்லாம் தாண்டி தொப்பூள் கொடியும் துடைப்பக் கட்டையும் தப்பிப் பிழைத்தால் கண்டு கொள்ளுங்கோ. செய்ய வேண்டியத விட்டுப் போட்டு சினிமா வசனம் பேசிப் புல்லரிக்க வைக்கிற வேலை இப்ப ரத்த அழுத்தத்த மட்டுமே கூட்டுது. பொத்திக் கொண்டிருங்கோ. நாங்களே பாத்துக்கிறம்!

அட போங்கடா போதும்.

ம்ம்ம்... :huh: இப்படியே ஏதாவது சொல்லி உசுப்பேத்துங்கோ...இது தான் சாட்டென்று சர்வதேசம் புலிகளின் தடையையும் நீண்டிக்கடும்...

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே தயவு செய்து வார்தைகளை யாரை நோக்கி வைக்கிவைக்றோம் என்பதை ஒரு தடவை யோசித்துவிட்டு வையுங்கள். அவர்களும் எமது உறவுகளே எமக்காக ஒரு நாளாவது சிறையில் வாடியிருக்கிறார்கள் நாம் போரடினோம் என்றால் அது கடமை..... அவர்கள் போராடுகிறார்கள் என்றால் அது அதற்கு மேலானது....... என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அரசியல் தெரியாத குழந்தைகளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் மிகவும் மதிக்கப்பட வேண்டும், அவர்கள் மனதில் தோன்றிய அந்தத் தீ தான் முக்கியம்... நெடுமாறன் ஐயா, வைகோ, கொளத்தூர் மணி, தற்பொழுது சீமான் இப்படி இன்னும் சிலபேரின் கரங்களைப் பற்றிக்கொண்டு சில ஆயிரம் தமிழின உணர்வாளர்கள் மட்டும் இருந்துகொண்டு தி. மு. க மற்றும் அ. தி. மி. க போன்ற பழம்பெரும் கட்சிகளின் பிடியில் இலங்கையில் தமிழருக்கு என்ன பிரச்சனையென்றே தெரியாமல் எதோ ஓர் மாயையில் வைக்கப்பட்டிருக்கும் சில கோடி மக்களை உடனே மாற்றவா முடியும்?

ஏன்.. எங்கள் பிரச்சனையை அவர்கள் தமிழக மக்களுக்கு சொல்லத் தவறினார்களா? அவர்களின் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மன உணர்வுகளை பேச்சாக வெளிக்கொணர்வது தப்பா? இப்படிப்பட்ட தமிழின உணர்வாளர்களின் தமிழின உணர்வைக் கண்டே முத்துக்குமார் போன்ற தமிழக எங்களுகாக எரித்துக்கொண்டான், ஆனால் அவனின் தியாகம் வீணகிப் போனது நான் குறிப்பிட்ட கட்சியொன்றின் சாக்கடை அரசியலால்.

எங்களுக்காக எல்லாம் சிறைசென்று வருபவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். எங்களில் இருக்கும் இருபது இலட்சம் மக்களிலேயே இத்தனை பிரிவுகள் இருக்கும் போது கடல் கடந்து இருக்கும் அந்த ஆறு கோடி தமிழரிடம் எத்தனை பிரிவுகள் இருக்கும் அதை ஒன்று சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான வேலைகள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே தமிழ் நாட்டில் தமிழின உணர்வை உருவாக்கும் வேலைகளில் இருக்கும் அவர்களின் பேச்சுகளை நாங்கள் அவமதிக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மற்றும் மேடைப்பேச்சில் வசீகரமாக பேசுவது, வீரமாகப் பேசுவது தமிழ் நாட்டு தலைவர்களின் தனித்தன்மை, அவர்களின் பேச்சில் நாங்களும் மயங்கியது தானே, உதாரணம் கடைசி மாவீரர் தினத்துக்கு வைகோ அண்ணனை அழைத்து இறுதிவரை அவரின் பேச்சுக்கு காத்திருந்தது போன்றன.. மனச்சாட்சியை தொட்டுப்பாருங்கள் புரியும், இப்போது அவர்களின் பேச்சில் குறைப்பட்டு குறைகூறுவது தப்புத்தானே, அவர்களின் உணர்ச்சிப் பேச்சுத்தான் தமிழின உணர்வாளர்களைப் பெருக்கமுடியும்.

எங்கள் அரசியல் தலைவர்கள் தலைவர்கள் அதிகம் பேசாமல் இருப்பது இவர்களின் தனித்தன்மை. இரண்டுமே பிரச்சனையான விடயங்கள் தான். தவளையும் தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணம் வைகோ அண்ணன் - பல சந்தர்ப்பங்கள், நாங்களே பல தடவைகள் யோசித்திருக்கிறோம் இவரே எங்களை மாட்டிவிட்டிடுவார் போல இருக்கிறதே என்று.

''ஊமை குசும்பன் வீட்டைகெடுத்தான்'' என்று என்னவோ எனக்கு சரியாக ஞாபகமில்லை, இந்தப் பழமொழி எங்கள் அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும் , காரணம் இவ்வளவு அழிவு நடந்தும் அதை மேற்குலகுக்கு எடுத்துச் சொல்ல அதிகம் முனைப்புக் காட்டாமல் தேர்தல் விடயத்தில் அதிகம் சிரத்தை எடுக்கிறார்கள், எதோ வென்றார்கள் என்றால் என்ன செய்கிறார்கள் பார்ப்போம்....

[மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் களைத்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும்,உயிர்ப்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒலி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது உலக தமிழ் அரசு அமைய!

10 வருடத்துக்குள்ள வன்னி தடுப்புமுகாமில் இருக்கிற மக்களுக்கு விடிவு கிடைக்குமா?. கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு விடிவு கிடைக்குமா?. வடக்கில் எத்தனை சிங்களக் குடியேற்றங்கள் நடை பெற்று இருக்கும்? .

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

அந்தப் பிஞ்சுகளின் உணாவுகளை மதிப்போம். இன்னுமோரு தலைமுறை அவலப்பட வேண்டியுள்ளதை எண்ணும் போது கண்களில் இரத்தம் வடிகிறது. எம் தலைமுறையுடன் இந்த அவலம் தீரும் என எண்ணினோம். துரோகிகளினாலும் காட்டிக்கொடுப்போராலும் கொலைவெறி வல்லரசுக்களாலும் அந்த எண்ணம் நிராசையாகிவிட்டது. எனினும் எமது இலட்சியம் சாகாது. ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் தமிழீழதாகம் கொழுந்துவிடடெரயும் என்பது நிச்சயம். எமக்காய் குரல் கொடுக்கும் அந்த ஓரிரு உணர்வாளர்களை மதிப்போம்.

ஜானா

அந்தப் பிஞ்சுகளின் உணாவுகளை மதிப்போம். . எமக்காய் குரல் கொடுக்கும் அந்த ஓரிரு உணர்வாளர்களை மதிப்போம்.

ஜானா

இப்படிச் சொல்லிப்போட்டு முன்பு கலைஞர் நடாத்திய நாடகமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வை.கோ கலந்து கொள்ளததற்கு நீங்கள் வை.கோவை ஏசியது போல இச்சிறுவர்களை இனிமேல் திட்டமாட்டீர்கள் என்று எப்படிச் சொல்வது?

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

ஒன்றும் செய்யமாட்டோம்,என்ன இவ்வளவு நாளும் செய்தோமோ அதையே செய்வோம்.அதாவது வீர வசனம் பேசுவோம் ,ஊர்வலம் போவோம் (வசதியா இருந்தால் மட்டும்)

மேடையில் பொஸ் கொடுப்பதில இருந்து விளங்குது எதிகாலத்தில் ஒரு நல்ல அரசியல் வாதியாக வருவான் என்று

  • கருத்துக்கள உறவுகள்

ம்..................... மெய் சிலிக்கின்றது..............! வாழ்த்துக்கள் குழந்தைகளே....! என் குழந்தையினால் சிங்களத்தின் தலையிலும் காந்திதேசம் என பெருமை கொள்ளும் தேசமும் சுக்குநுறாக்கப்படும்! என் மக்கள் பட்ட அவலங்கள் அவர்களும் அவலப்படவேண்டும்!!!!

எங்களது தோல்விகளினாலான வெறுப்புக்களை அந்த உணர்வுமிக்க குழந்தைகளின் வார்த்தைகளிற்கெதிராக கொட்டாதீர்கள்.

எங்களின் உண்மையான இனவுணர்வுகளை இன்னமும் முழுமையாக வெளிப்படுத்தத் தவறியுள்ள நாங்கள் அவர்களை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்.

ஆனால் , குழந்தைகளின் வாக்கு பொய்க்காது எனும் விதமாய், தமிழ்நாடு தனிநாடாக உருவாவதற்கான விடுதலைப் போராட்டத்தினை இந்தக் குழந்தைகள் முன்னெடுக்கலாம்.

.

எங்களின் உண்மையான இனவுணர்வுகளை இன்னமும் முழுமையாக வெளிப்படுத்தத் தவறியுள்ள நாங்கள் அவர்களை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்.

எந்த ஒரு இனமும் 100%ஒரெ கருத்தை பின்பற்றமாட்டார்கள்,

எம்மினம் உணர்வில்லாமலா 30ஆயிரம் மாவீரர்களையும் ,10ஆயிரம் போராளிகளை சிறையிலும் ,இழந்து தவிக்கிறது.எம்மினதை நாங்களே குறை கூறிக்கொன்டு இருக்ககூடாது.ஈழத்தமிழனின் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் பொழுது நாம் இழந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்

நாங்கள் விமர்சிக்கதகுதியானவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிப்போட்டு முன்பு கலைஞர் நடாத்திய நாடகமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வை.கோ கலந்து கொள்ளததற்கு நீங்கள் வை.கோவை ஏசியது போல இச்சிறுவர்களை இனிமேல் திட்டமாட்டீர்கள் என்று எப்படிச் சொல்வது?

நீங்கள் ஒழிக்க நினைக்கின்றீர்கள் ஆனால் உங்களது வார்த்தைகள் உங்களது உள்ளத்தை பிரதிபலிக்கின்றன?

தமிழ்நாட்டு தமிழர்களின் எந்த உதவியும் எமக்கு வேண்டாம் (மகிழ்ச்சியா?)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் தவறுசெய்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன் தவறு செய்தாலும் எங்களில் ஒருவன் தவறு செய்திருக்கிறான் என்று நினைக்கும் மனப்பாங்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர ஏதோ வேற்று இனத்தவன் தவறு செய்தமாதிரி பாசாங்கு பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.

அந்த வகையில் எமது மக்கள் சக்தி 8 கோடி என்கிற மன தைரியத்தை வளர்த்துக்கொள்வோம்.

எந்த ஒரு இனமும் 100%ஒரெ கருத்தை பின்பற்றமாட்டார்கள்,

எம்மினம் உணர்வில்லாமலா 30ஆயிரம் மாவீரர்களையும் ,10ஆயிரம் போராளிகளை சிறையிலும் ,இழந்து தவிக்கிறது.எம்மினதை நாங்களே குறை கூறிக்கொன்டு இருக்ககூடாது.ஈழத்தமிழனின் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் பொழுது நாம் இழந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்

நாங்கள் விமர்சிக்கதகுதியானவர்கள்

உண்மைதான் ஜில்... ஆனால் நான் எங்களைப் பற்றிச் சொல்லவந்தது... தற்போதைய சூழ்நிலையில் நாம் பிளவுபட்டு நிற்கின்றோம் என்பதைத்தான். ஒன்றுபட்டு இனத்துக்காக குரல் கொடுக்கவேண்டிய நிலையில் நமக்குள்ளே அடிபட்டுக் கொள்வது நல்லதல்ல.

ஒன்றுபட்டு ஓரணியாய் ஓங்கியொலிப்போம் நமது உரிமைக் குரலை!

ஆனாலும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு நாம் மதிப்புக் கொடுத்தே ஆகவேண்டும்.

நீங்கள் இது வரை என்ன பார்த்தீர்கள்???

எத்தனை நாள் சிறையில் இருந்தீர்கள்???

பத்து வருஷத்தில எத்தனையோ நடக்கலாம்:

1. கருநாய் நிதியின் அடுத்த வாரிசு (சில நேரம் அந்த நாயே உயிரோட இருந்து, களைகளுக்கு ஆயுள் காலம் நீளம் தானே?) plasma தொலைக் காட்சிய அல்லது ஐ-பொட்ட இலவசமாகக் குடுத்து வாக்குக் கேட்கலாம்

2. அரிசி போய் பீசா இலவசமாகக் கொடுக்கலாம்

3. அழுகுணி தொடர்கள் போய் மேற்கத்தைய நீலப் படங்கள் கருநாய் சானலில் இலவசமாக உலாவரலாம்.

இதெல்லாம் தாண்டி தொப்பூள் கொடியும் துடைப்பக் கட்டையும் தப்பிப் பிழைத்தால் கண்டு கொள்ளுங்கோ. செய்ய வேண்டியத விட்டுப் போட்டு சினிமா வசனம் பேசிப் புல்லரிக்க வைக்கிற வேலை இப்ப ரத்த அழுத்தத்த மட்டுமே கூட்டுது. பொத்திக் கொண்டிருங்கோ. நாங்களே பாத்துக்கிறம்!

பத்து வருஷத்தில எத்தனையோ நடக்கலாம்:

இதெல்லாம் தாண்டி தொப்பூள் கொடியும் துடைப்பக் கட்டையும் தப்பிப் பிழைத்தால் கண்டு கொள்ளுங்கோ. செய்ய வேண்டியத விட்டுப் போட்டு சினிமா வசனம் பேசிப் புல்லரிக்க வைக்கிற வேலை இப்ப ரத்த அழுத்தத்த மட்டுமே கூட்டுது. பொத்திக் கொண்டிருங்கோ. நாங்களே பாத்துக்கிறம்!

என்ன பேசுகிறோம் என யோசித்து பேசுங்கள் உறவுகளே ! உங்களின் கோபத்தின் காரணம் நியாயமனதாய் இருக்கலாம் ஆயினும் தவறான ஒரு நிலைக்கு அவ்வார்த்தைகள் துணை போகக்கூடாது. அந்த பிஞ்சுக்கு குழந்தைகளின் மொழியினில் என்ன குற்றம் கண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் "பொத்திக்கொண்டு இருக்கவில்லை". இவ்வளவு நாளும், பாவாணன் தொடங்கி மணியண்ணன் சீமான் வரை அனைவரும் இந்திய அரசின் அடக்குமுறையையும் ஆள்தூக்கி சடங்களையும் சந்திதிது சிறை தண்டனை அனுபவித்தவர்கள். மேலும் நீங்கள் "பொத்திக்கொண்டு போங்கள்" என்றாலும் நாங்கள் போகபோவதில்லை, காரணம் எங்கள் நரம்பினில் ஓடுவதும் தமிழ்ரத்தம் தான்

கையறு நிலை துன்பத்தால் 15 பேர் தீக்குளித்து மாண்டனர் தமிழகத்தில்....

பலர் சிறைவாசம் அனுபவித்தனர் ..... ஆனால் அதோடு ஒப்பிட்டால் அடக்குமுறை குறைந்த மேற்கத்திய நாடுகளில் அமர்ந்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்???

சமாதான காலத்திலும் ... அதன் பிந்தைய போர்க்காலத்திலும் ஒன்றையுமே சாதிக்க இயலாத நீங்கள் இனி மட்டும் என்ன கிழிப்பீர்கள்!

தமிழகத்தில் உணர்வைத்தூண்டும் சிலரை இகழ்ந்து கொண்டு விளங்காமல் போக வழி செய்யுங்கள்!

Edited by வேலவன்

:huh::unsure::D

செருப்படி!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பேசுகிறோம் என யோசித்து பேசுங்கள் உறவுகளே ! உங்களின் கோபத்தின் காரணம் நியாயமனதாய் இருக்கலாம் ஆயினும் தவறான ஒரு நிலைக்கு அவ்வார்த்தைகள் துணை போகக்கூடாது. அந்த பிஞ்சுக்கு குழந்தைகளின் மொழியினில் என்ன குற்றம் கண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் "பொத்திக்கொண்டு இருக்கவில்லை". இவ்வளவு நாளும், பாவாணன் தொடங்கி மணியண்ணன் சீமான் வரை அனைவரும் இந்திய அரசின் அடக்குமுறையையும் ஆள்தூக்கி சடங்களையும் சந்திதிது சிறை தண்டனை அனுபவித்தவர்கள். மேலும் நீங்கள் "பொத்திக்கொண்டு போங்கள்" என்றாலும் நாங்கள் போகபோவதில்லை, காரணம் எங்கள் நரம்பினில் ஓடுவதும் தமிழ்ரத்தம் தான்

உண்மையில் எமக்காக பிறநாட்டில் யாருமே செய்யாத தியாகத்தைத் தமிழக மக்கள் செய்திருக்கின்றார்கள். அதை உண்மையில் நாங்கள் போற்ற வேண்டும்.

எந்த நாட்டின் விடுதலைக்காக, மற்றய நாட்டில் உள்ளவர்கள் தீக்குளித்து தியாகம் செய்துள்ளார்கள். தங்களை இழந்து பல ஆண்டுகள் சிறை சென்றுள்ளார்கள். முதலில் அவதற்காக, அந்தத் தியாகத்தை நாங்கள் மதிக்கத் தெரிய வேண்டும்.

இது இன்று நேற்றல்ல, ஆயிரம் வருடங்களாகத் தமிழ்மக்கள் சிங்களவர்களிடம் மாட்டுப் பட்டுத் தவிர்க்கின்றபோது எல்லாம், சோழப்பேரரசு தான் படை நடத்தி வந்து சிங்களத்தை வென்று ஆண்டதாகவே நம்புகின்றேன்.

அவர்களுக்கு என்ன ஊழா? எங்களுக்காக கஸ்டம் அனுபவிக்க வேண்டும் என்று.

உண்மையில் இதற்காக அனைத்துத் தமிழகமக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஈழத்தமிழன் வேறு தமிழ்நாட்டு தமிழன் வேறு என்கிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டு தமிழன் உலகத் தமிழர்களுக்கு ஒரு நாடு அது முதலில் தமிழீழம் அதற்காக என்ன விலையும் கொடுக்க அவர்கள் எல்லா முயற்சியும் எடுக்கின்றனர் . இதன் அதிகப்படியாந பேச்சு தான் கோவை பேச்சு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.