Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவரின் மனச்சாட்சி......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவரின் மனச்சாட்சி......

இளங்கவி - கவிதை

குண்டு மழையில் நின்று.....

குருதி ஆறு பாயக்கண்டு.....

தம் தூக்கம் தனை கலைத்து

பல உயிர் காத்தவர்கள்......

இன்று அவர் பின்னால்......

தலையை

குறிபார்க்கும் துப்பாக்கி.....

நீயும் புலியா?....

எனும் கேள்விக்கணை.....

இப்படிச்

சொல்லெனும் பயமுறுத்தல்......

இல்லையேல்

கொலையின் அச்சுறுத்தல்......

இப்படி அனைத்தும் நிற்க,.....

அதிகாரமோ மிரட்டி நிற்க.....

அவர் எப்படி உண்மை சொல்வார்...!

தம் உறவுகளின் உயிரைகொல்வார்...!

இறுதிவரை தமிழுக்காய்

சேவைசெய்த அற்புதர்கள்......

இன்று எதிரியின் கைகளிலே

சிக்குண்ட நம் காப்பரண்கள்.....

இன்னும் பல உயிர்காக்கும்

சேவைகொண்ட மருத்துவர்கள்.....

உம் சேவை பல வேண்டி நிற்கும்

நாம் உறக்கமில்லாத் தமிழர்கள்.....

விடுதலை வேண்டும் இனம்

எதற்கும் வீழ்ச்சிகொண்டு உறங்காது....

மண் பிளந்த ஆணிவேர்கள்

மண்வெட்டிக்கெல்லாம் மயங்காது....

மருத்துவ தெய்வங்களே

உம் மனச்சாட்சியை நாமறிவோம்....

உம் மனத்தின் குமுறலையும்

கடலலை போல் நாம் கேட்டோம்....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி கவிதைக்கு. நிலைமை இப்படி இருக்க புலம்பெயர்ந்த கொஞ்ச பேர் பியரை அடித்து போட்டு துரோகிகள் என நாமம் சூட்ட நாக்கை தொங்க போட்டுக்கொண்டு திரிகிறார்கள். தயா மாஸ்டரை பிரபாகரனில் உடலை காட்ட செல்லும் போது அவரை செவ்வி எடுக்கும் போது அருகில் உள்ளவர் சொன்னதை அப்படியே சொல்வதை அவரின் முகபாவனையில் இருந்து அறிய கூடியதாக இருந்தது தெரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்:இரத்த ஆறு பாயக்கண்டவர்கள்

பட்டகாயத்தை ஆற்றமுடியாமல் மண்ணை........

தமக்கு தாமே அள்ளிப்போட்டு.....

வைத்தியம் பார்த்த மக்களின்....அவலத்தை

நேரே கண்ணால் கண்ட வைத்தியர்......கூட

மூளையை எதிரியிடம் அடகு வைத்துவிட்டார்.

நன்றி கவி உங்களின் கவிதைக்கு.

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை தமிழுக்காய்

சேவைசெய்த அற்புதர்கள்......

இன்று எதிரியின் கைகளிலே

சிக்குண்ட நம் காப்பரண்கள்.....

இன்னும் பல உயிர்காக்கும்

சேவைகொண்ட மருத்துவர்கள்.....

உம் சேவை பல வேண்டி நிற்கும்

நாம் உறக்கமில்லாத் தமிழர்கள்......................

...நன்றி இளங்கவி ........தாயக சேதிகள் உங்களை கவி வடிக்க வைக்கிறது . அவர்களின் அவல நிலை உணர்ந்தவர்க்கு ............விளங்கும் நிர்பந்தங்களின் முன் நாம் விமர்சனம் செய்ய அருகதை அற்றவர்கள். கடவுளின் இரக்கம் அவர்கள் மீது இருக்கட்டும். துப்பாக்கிகள் இவர்களை பேச வைத்தால் இவர்கள் என்ன செய்வார்கள். நீதி மரணித்து விட்ட நாடினரிடம் உண்மையை எதிர்பார்க்கும் நாம் தான் மூடர். .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

ஆம்... இதுதான் இன்றைய யதார்த்த, அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து எங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை நாம் என்றும் மறக்க முடியாதது, இன்று முகாமில் இருக்கும் எத்தனையோ உறவுகளின் உயிர்கள் அவர்களின் சக்திக்கு உட்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றன..

..

இன்று துப்பாக்கியின் முனையில் மிரட்டப்பட்டு எதிரி தங்களுக்கு தேவையானதை சொல்லவைத்திருக்கிறான் என்பது எல்லாரும் அறிந்ததே....

நன்றி உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

அவர்கள் தாங்களாகவே எதையும் சொல்லவில்லை என்பதையே என் கவியில் சொல்லியிருந்தேன்... அவர்கள் துப்பாக்கி முனையில் சொல்லவைக்கப்பட்டிருக்கிறார

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்காவுக்கு

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு......

அவர்களில் நாங்கள் எந்தவொரு குறையும் கூற முடியாது... காரணம் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட ஓர் நாட்டில் இன்னமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் சொல்லிக்கொடுத்ததை தவிர வேறென்ன பேச முடியும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவரின் மனச்சாட்சி......

இளங்கவி - கவிதை

மண் பிளந்த ஆணிவேர்கள்

மண்வெட்டிக்கெல்லாம் மயங்காது....

இளங்கவி

நன்றி இளங்கவி அண்ணா. காலத்திற்கேற்ற உண்மைக்கவிதை.

ஆயுதமுனையில் சித்திரவதை செய்யப்பட்டு அச்சுறுத்தி அவன் சொல்லிக்கொடுத்ததையே ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளை நிலையில் அவர்கள் எனவே அவர்களை எந்த விதத்திலும் குறை கூற முடியாது.

யாரை நோக எல்லாம் எங்க விதி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

மிக்க நன்றி, எங்களுக்கு எதிரான சதிகள், சம்பவங்கள் எல்லாமே சிங்களவனின் திட்டங்களுக்கு ஏற்பவே அமைகின்றன, இவை எல்லாவற்றையும் மீறி விடுதலையை வென்றெடுப்பதென்பதற்கு எங்கள் ஒற்றுமைதான் தேவை... ஆனால் அந்த ஒற்றுமையென்பது தான் எங்கள் முதல் பலவீனம் நிலமை இப்படியிருக்க நாங்கள் யாரை நோக முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி

கவிதைக்கு மட்டுமல்ல.. வரப்போகும் உங்கள் கவிதைத் தொகுதி நூலுக்கும் :lol:

சின்ன அறிவிப்பை மட்டும் செய்துவிட்டுப்போகின்றேன். விபரங்கள் பிறகு.....

  • கருத்துக்கள உறவுகள்

சூழ் நிலைக் கைதிகள். காலத்தைப் பதிவு செய்யும் கவிதை! பாராட்டுக்கள்.

யாயினி பரியாரிமார் மூளையை அடகு வைக்கவில்லை,

உயிரை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தனுக்கு

மிக்க நன்றிகள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவருக்கு

மிக்க நன்றிகள்....

ஆம் புலவரே..! துப்பாக்கி முனையில் பத்திரிகைக்கு பேட்டி..! எங்கள் பலரின் உயிர்காத்த அந்த மருத்துவர்கள் என்னதான் செய்ய முடியும்....? இதையெல்லாம் மனித உரிமையென்று வாய் கிழியக்கத்தும் மேற்குலகும் வேடிக்கை பார்க்கிறது..! எங்கள் தலைவிதி...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏராழன்

ஆம்.... நண்பரே... அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கோ கொலைமிரட்டாலாக இருக்கும் அதுதான் இப்படியென்று பெரும்பாலான நம் மக்களுக்கு தெரியும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் இளங்கவி....

நாம்தான் எல்லா தவறுகளையும் புரிந்துள்ளோம்.... அதன் விளைவு பிழைகள் துரோகங்கள் எல்லாம் நியாயப்படுத்தப்படுகின்றன...

மருத்துவர்களை எவரும் குறை சொல்ல முடியாது...

மக்களுக்காய் உண்மை சொன்னவர்கள்... உயிருக்காக அதை மறுத்துரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்... அவ்வளவுதான்....

  • கருத்துக்கள உறவுகள்

மூர்க்கத்தனமான வேட்டைக்காரர்கள் மத்தியில் எங்கள் இனம் அகப்பட்டுச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் என்பது உண்மைகளை தெளிவாக விளங்கி இருந்தும் மெளனித்து இருப்பதை வாடிக்கையாகவும் நாம் சாட்சிகளை முன் வைத்தால் ஆகக் கூடியதாக ஒரு பக்க அறிக்கையை கண்டனமாகவும் வெளியிடும் அதற்கு மேல் எதுவும் நடக்காத ஒரு சூழலை மட்டுமே இன்றைய நாட்களில் காண்கிறோம்.

எத்தனை மக்களை படுகாயங்களில் இருந்து காத்தவர்கள் அம்மருத்துவர்கள். நேற்றைய நாட்களில் தம்மைக்காத்து வெளியேறாமல் வன்னி நிலப்பரப்பிற்குள்ளேயே மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் எவ்வளவோ மனித அவலங்களை அறிந்தவர்கள். இன்னும் மனித அவலங்களை எம்மினத்தில் திணித்தவர்களின் வதை முகாம்களுக்குள் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்கள் உட்பட அடைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பேசும் சக்தியற்றவர்களாக இருக்கும் இக்காலத்தில் வற்புறுத்தலினால் பேச வைக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் சொல்லாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கவிதைக்கு நன்றி இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

asan

ஆம்...உண்மை நிலமை அவர்கள் விடுவிக்கப்படாமல் தடுப்புக்காவலில் இருக்கும் பொழுதே பத்திரிகைகலுக்கு பேட்டிகொடுக்க வேண்டிய கட்டாயம்.... அதுதான் உண்மை. இலங்கையில் ஜனனாயகம் என்ற பெயரில் ராணுவ ஆட்சிதானே நடக்கிறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே..... செல் மழைக்குள் நின்று வைத்தியம் பார்த்தவர்கள் தமிழுக்கு ஒருபோதும் தமிழினத்துக்கு துரோகம் செய்யமாட்டார்கள் என்பதுவே என் கருத்து... சூழ் நிலை அவர்களை அப்படிச் சொல்லவைத்திருக்கிறது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி.

இப்படிக்கு

பென்மன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவரின் மனச்சாட்சி......

இளங்கவி - கவிதை

குண்டு மழையில் நின்று.....

குருதி ஆறு பாயக்கண்டு.....

தம் தூக்கம் தனை கலைத்து

பல உயிர் காத்தவர்கள்......

இன்று அவர் பின்னால்......

தலையை

குறிபார்க்கும் துப்பாக்கி.....

நீயும் புலியா?....

எனும் கேள்விக்கணை.....

இப்படிச்

சொல்லெனும் பயமுறுத்தல்......

இல்லையேல்

கொலையின் அச்சுறுத்தல்......

இப்படி அனைத்தும் நிற்க,.....

அதிகாரமோ மிரட்டி நிற்க.....

அவர் எப்படி உண்மை சொல்வார்...!

தம் உறவுகளின் உயிரைகொல்வார்...!

இறுதிவரை தமிழுக்காய்

சேவைசெய்த அற்புதர்கள்......

இன்று எதிரியின் கைகளிலே

சிக்குண்ட நம் காப்பரண்கள்.....

இன்னும் பல உயிர்காக்கும்

சேவைகொண்ட மருத்துவர்கள்.....

உம் சேவை பல வேண்டி நிற்கும்

நாம் உறக்கமில்லாத் தமிழர்கள்.....

விடுதலை வேண்டும் இனம்

எதற்கும் வீழ்ச்சிகொண்டு உறங்காது....

மண் பிளந்த ஆணிவேர்கள்

மண்வெட்டிக்கெல்லாம் மயங்காது....

மருத்துவ தெய்வங்களே

உம் மனச்சாட்சியை நாமறிவோம்....

உம் மனத்தின் குமுறலையும்

கடலலை போல் நாம் கேட்டோம்....

இளங்கவி

இளங்கவியின்

படைப்புக்கு வாழ்த்துக்கள்

என்னத்தை சொல்ல

எதை சொல்ல

எங்களின் இழப்புகள் நிறையவை

எதிரியின் கையில் இவர்கள்

இதுவும் எங்களின் .............................

அனலைதீவன்

Edited by analai theevaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nypenmann

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

analai theevaan

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு.....

எங்களுக்கு எல்லாமே தப்பாக நடந்துகொண்டிருக்கிறது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.