Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் வசதிப்படி செய்யுங்கோ என்றுதான் சொல்லுவன். ஆனால்...

எனது தனிப்பட்ட நிலைப்பாடு திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ள அனுமதிப்பது பெண்களைப் பொறுத்தவரை அத்துணை பாதுகாப்பில்லை. ஆனால் ஆண்களுக்கு பாதிப்பற்ற.. நிலையே எதிலும்..! அதனால் அவர்கள் எந்தச் சமூகத்தவரா இருப்பினும் இதனை வரவேற்பர். கொள்கை பிடிப்பில்லாதவர்களைத் தவிர..! :lol:

பல ஆண்களோடு உடலுறவு கொள்ளும் பெண்களை எந்தச் சமூகம் பெரிதாக விரும்பாது. அது வெள்ளைகளாகட்டும்.. கறுப்பாகட்டும்.. ஆசியன் ஆகட்டும். அவர்களை விபச்சாரிகள் என்றே எல்லோரும் சொல்கின்றனர்.. சொல்ல விளைகின்றனர். ஆகக் கூடினால்.. வெள்ளைக்காரன்.. yor are a bitch என்றுவிட்டு ரா ரா காட்டிட்டுப் போய்க்கிட்டிருப்பான். பாதிப்படைவது.. பெண்களே..! அவர்கள் தான் இது தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டும்..!

செயற்பட முதல் சிந்திப்பது தான் அழகு..! வாழ்க்கை வெறும் உடலுறவு சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு அழகிய பூங்கா. அதை நரகமாக்காத நிலை சிந்தனை செயற்பாடு அவசியம்..!

நெருக்கம் இருக்கலாம்.. ஆனால் Mind the Gap... நல்லது என்றே சொல்வேன். இரு பாலாருக்கும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால், திருமணத்துக்கு முன்ன சேர்ந்து வாழுறது அவையவையைப் பொறுத்தது. ஆனால் அதை மறைச்சு இன்னொரு ஆளை கல்யாணம் கட்டினால் அது தவறு..!

இதுக்கு ஒரு தீர்வுத்திட்டம் என்னட்டை இருக்கு..! அதாவது வங்கிகளில கடன் குடுக்க முன்னம் கிரெடிட் ரேட்டிங் செக் பண்ணிப் பார்ப்பான். ரேட்டிங் நல்லா இருந்தால், கூட கடன் கிடைக்கும்..! அதே மாதிரி கிரெடிட் சிஸ்டம் ஒண்டு கொண்டு வரவேணும்..! ஒவ்வொரு கிச்சுக்கிச்சுவுக்கும் ஸ்கோர் கழிஞ்சு கொண்டே வரும்.!

பிறகு அம்மா அப்பா பொண்ணோ பையனோ பார்க்கேக்க, ஜாதகத்துக்கு முன்னால முதலில உன்ர கிரெடி ஸ்கோரை கொண்டு வா எண்டு கேப்பினம். ஸ்கோர் பொருந்தி வந்தால் கல்யாணம் பண்ணி வைக்கலாம்..! இது எப்பிடி இருக்கு? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிச்சுகிச்சுக்கெல்லாம் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்.கொஞ்ச நேரம் ஒதுக்குப்புறமா ஒதுங்கினால் கானும் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிச்சுகிச்சுக்கெல்லாம் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்.கொஞ்ச நேரம் ஒதுக்குப்புறமா ஒதுங்கினால் கானும் தானே :D

ஊரில இருந்து வெளிக்கிட்டும் புத்தி போகுதா பாருங்க..! கொஞ்சம் டீசன்டா திங்க் பண்ணுங்கய்யா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பொருந்த வேண்டுமாம். அப்போ தானாம் இனிமையான சோடிகளாக வாழமுடியுமாம். வெள்ளைகாரர்கள் சொல்கிறார்கள். எம்மவரில் சிலரும் இதனை செய்கிறார்கள். எமது கலாச்சாரத்துக்கு (?) பொருந்துமா தெரியவில்லை. கூடுதலாக ஆண்கள் (advantage)எடுப்பதற்கான சாத்தியகூறுகள் தான் அதிகம். பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக கணக்கு பார்க்கவில்லை ....ஆனால் மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த திரியில் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் - அரைவாசி பேருக்கு மேல - கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா என்ற கேள்வியில் - கல்யாணத்திற்கு முன் உடலுறவு கொள்வது சரியா என்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்....

ஏன்?! :unsure::mellow:

ஒன்றாக வாழ்வது என்பதை செய்து வேறு கலாச்சாரத்தில் பிரயோசனபட்டு இருக்கிறார்கள் என்றால் - அது வெறும் உடலுறவு மட்டும் அல்ல!!!!!!

விரும்பி ஒன்றாக வாழும் போது இவர்கள் பல இக்கட்டுகளை முன் நின்று சந்த்தித்து - ஒராளில் இருக்கும் நல்லவற்றை மட்டும் அல்ல, ஒத்து வரா தன்மைகளையும் அறிந்து -

விட்டுகொடுத்து தான் ஒற்றுமையாக இருக்க பழகுகிறார்கள். இது தவிர வேலை முனேற்றம்/ பொருளாதார முடிவுகளை ஒன்றாக சேர்ந்து எடுத்து - அதிலும் சிக்கல்களை தாண்டி தான் நிலைக்கிறார்கள்.

அப்படி நின்று பிடிக்க இயலாதவர்கள் விலத்தி போகிறார்கள்.

கல்யாணம் என்னும் சூழலில் எவ்வாறு வாழ்க்கை போராட்டத்தை கொண்டு நடத்துவதோ அதே போல தான் இதுவும்.... இதில் உடலுறவு என்பது இயல்பாக ஒரு விடயமாக இருக்குமே தவிர - உடலுறவு கொள்வதற்கு மட்டும் என்று கூடி வாழ்வது அல்ல. :D

எனக்கு தெரிந்து பல நண்பர்கள் (தமிழர் அல்ல) நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒரே சோடியுடன் காதலித்து, அதை உலகிற்கு பகிரங்கமாக்கி, இருவரின் குடும்பங்களுடனும் நல்ல உறவை பேணி, ஒன்றாக தங்கள் உத்தியோக/ பொருளாதார முன்னேற்றங்களை மேற்கொண்டு, உலகத்தை கூட ஒன்றாக சுத்தி பார்த்து விட்டு வந்து தான் - தங்கள் சொந்த உழைப்பிலேயே உறவினர்/ நண்பர்கள் அனைவரயும் முன்னிறுத்தி "இவ்வளவு காலம் ஒன்றாக இத்தனையை சாதித்து விட்டோம் - இப்போது கல்யாணம் முடித்து பிள்ளைகளையும் பெத்து சந்ததியை வளர்க்க போகிறோம்" என்பதை தெரிய படுத்த கல்யாணமும் முடிக்கிறார்கள்.

அப்படியானவர்கள் திருமணம் செய்த பின்னரும் மிக நல்ல முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரச்சனைகள், பிரிவு, விவாகரத்து என்பது நான் காணவில்லை.

இப்படியான கல்யாணங்களில் குழப்பங்கள் அதிகம் இல்லை, சீதன பிரச்சனைகள் இல்லை, தாய் தகப்பன் கடன்பட்டு சொத்து பத்தை வித்து தேய தேவை இல்லை.

ஆனால் அதே நேரம் சேர்ந்து இருக்கும் எல்லாருக்கும் அதே போல நல்ல முடிவு கிடைக்கும் என்பது இல்லை. அவரவர் பக்குவத்தை பொறுத்தது.

சிலர் இங்கு பெண்களுக்கு கெட்ட பெயர் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். நாலு பேரோட கல்யாணத்திற்கு முதல் மினக்கட்டால் கெட்ட பெயர் தான். சமுதாயம் அப்படி.

ஆனால் பக்குவம் உள்ளவர்கள், தங்களுக்கு எல்லா வகையும் ஏற்றவனை தேர்ந்து கொண்டு - அதற்கென்று காலம் வரும் போது ஒன்றாக குடித்தனம் நடத்தி கடைசியில் அவனையே கட்டி காலத்தை வென்றால் - அது மெச்ச வேண்டிய செயல்.

பெண்கள் மட்டும் அல்ல - ஆண்களும் நான்கு சோடியுடன் திரிந்து விட்டு கல்யாணம் என்று வேறு ஒன்றுடன் போனால் - மரியாதை இல்லை! அதை ஏன் எங்கட பொடியள் குறிப்பிட மறக்கினம்?! :lol:

அந்த காலத்திலேயே எங்கள் கலாச்சாரத்தை வகுத்து வைத்து விட்டார்கள் என்றும் ஒரு சிலர் குறிப்பிட்டார்கள்.

எங்கள் தமிழ் கலாச்சாரத்தை வகுத்தது வேற யாரும் இல்லை - கந்தவேல்/ வல்லிபுரம் என்று எங்கட உங்கட அப்பப்பா பூட்டப்பா மார்தான்.

நிச்சயமாக அதில் இருந்து நல்லவற்றை பயனுள்ளவற்றை பற்றி கொள்ள வேண்டும்.... ஆனால் கந்தவேளோ வல்லிபுரமோ புலம்பெயர்ந்து வந்து இருந்து பார்த்து கால மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து வழி வகுக்கவில்லை. அதனால் இப்ப இருக்கிற சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ற மாதிரி கலாச்சாரத்தை கொண்டு போக வேண்டும் என்றால் - ஒரு சில நல்ல மாற்றங்களை வரவேற்பது பிழை என்று என்ர அறிவிற்கு படவில்லை.

பெற்றோர்கள் என்று உள்ளவர்கள் - தங்கள் காலத்தை போலவே இன்றும் உள்ளது என்றால், தங்கள் அனுபவம் போன்றதே தங்கள் பிள்ளைகளின் வாழ்கையும் என்று காண்பார்களானால் :) இவர்களுக்கு மணிக்கூடு எப்பயோ நின்று விட்டது என்று அர்த்தம்!

நல்லது எது, கேட்டது எது, என்பது அவர் அவர் மன பக்குவத்திற்கு ஏற்றது. இதுவரை கால வாழ்கை அனுபவம் எந்த மாதியானது என்பது மிக முக்கியம். தங்கள் வாழ்கை முறை/ தங்களுக்கு ஏற்றப்பட்ட போதனைகள் அறிவுரைகள் - "இவ்வாறு" தான் என்று வகுக்க பட்டு - மனதில் செதுக்க பட்டு இருக்கு என்றால்......நிச்சயம் அப்படி உள்ளவர்களால் இன்னொரு கலாச்சாரத்திற்கு ஏற்ற நல்ல கொள்கைகளை பற்றி கொள்ள முடியாது. அதில் வெற்றியும் காண முடியாது. :(

ஆனால் ஒரு வேளை உங்கள் அடுத்த சந்ததியினர் தாங்கள் வளரும் சூழலை சார்ந்து சில நல்ல மாற்றங்களை கலாச்சாரத்திற்குள் புகுத்த வெளிக்கிட்டால் - அவர்களை நல்ல முறையில் வழிநடத்துங்கள். மாற்றமே வேண்டாம் என்று பழமை வாதம் மட்டும் பேசி கொண்டு இருந்தால் - கலாச்சாரம் அடியில் இருந்தே சீர்கேடும் வாய்ப்புக்கள் இருக்கிறது.

உதாரணத்திற்கு - மத்திய கிழக்கில் உள்ள தீவிரமான முஸ்லிம் சனம் - ஆண்கள் பெண்களுடன் திருமணம் செய்வதற்கு முன்பு பேசுவதை கூட அனுமதிக்க மாட்டார்கள். :unsure: கட்டுப்பாடு, கலாச்சாரம் என்று ஏக பட்ட கெடுபிடி.

அங்கு பிறந்து வளர்ந்து பின்பு மேற்படிப்புக்காக மேற்குலகம் வந்து, மீண்டும் தனது ஊருக்கு திரும்பிய சில புத்திஜீவிகள் சொல்லி ஆதங்க பட்டார்கள் -

"தங்கள் சமுதாயத்தில் இயல்பாக தோன்றும் எண்ணங்களை எல்லாம் அடக்கி முறித்து போட மதமும் கலாச்சாரமும் முன் நிக்கிறது. ஆனால் அந்த அடக்குமுறைகளை அடிப்படையாக கொண்டு பரவி கிடக்கும் ஓரின சேர்க்கை/ கள்ள காதல்/ குடும்பதிற்குள்ளே பாலியல் துன்புறுத்தல் போன்ற சீர்கேடுகளை திருத்துவதற்கு மரண தண்டனை என்ற பயம் கூட மனிதனை மறிக்குது இல்லை" என்று.

எனெவே நல்ல மாற்றங்களை வரவேற்பது பிழை என்று எனக்கு படவில்லை. எந்த ஒரு உத்தியோகத்தை எடுத்தாலும் கூட சரியான வழிமுறைகள் என்பது காலத்திற்கு காலம் வித்தியாச படும். எங்கட தாத்தா பாட்டி, பின் அம்மா அப்பா என்று அவர்கள் வாழ்ந்த வளர்ந்த விதங்களில் பிழை ஏதும் சொல்லவில்லை - அந்தந்த சந்ததி காலத்திற்கேற்ப நிச்சயம் மாற்றங்களை செய்து இருக்கும்.

இதை வாசிக்கிற இளந்தாரி பிள்ளையளுக்கு : ஒன்றாக இருப்பது என்றால் - தாய் தகப்பனுக்கு தெரியாமல் திருட்டு வேலை போல் ஊருக்கு ஒழித்து செய்வது அல்ல....

இதை வாசிக்கிற பெற்றோருக்கு: தாய் தகப்பனின் ஆசிர்வாதமும், ஊர் உலகத்தின் ஒற்றாசையும் - இப்படி சேர்ந்து இருப்பவர்களுக்கும் தேவை.

நான் பிழையா ஏதும் சொல்லி இருந்தால் - எனக்கு இரண்டு கொத்து ரொட்டி பார்சல் அனுப்பி வச்சிட்டு விளங்க படுத்துங்கோ... சாப்பாடு தந்ததற்காக உங்கட நியாயங்களை சாப்பிட்டு சாப்பிட்டு கேட்கிறேன்! :wub:

இப்ப பசிக்குது...நான் போறன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் தாலியை கட்டிய பின் ........

முதலிரவு , தேன்நிலவு கொண்டாடுவதில் தான் ஒரு திரில் இருக்கு . :D

ஆஆஆஆஆஆஆஆ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அந்த பக்குவம் இருக்கெண்டுறதால நான் இப்பவும் READY :lol:

:unsure: உங்களுக்கு இருக்கு சரி - உங்களோட இருக்க போறவாக்கு?!!!!!

உதுக்கு ஒரு மாதிரியும் மூளைச்சலவை செய்யேலாதோ?

நாங்கள் தான் மற்றாகளுக்கு மூளை சலவை செய்ய வேணும்.... அடுத்தாள் எங்கள்ள பழகிற மாதிரி இருக்க படாது... மனுஷனுக்கு நாளைக்கு மரியாதை இல்லை! :wub:

என்னைக் கேட்டால், திருமணத்துக்கு முன்ன சேர்ந்து வாழுறது அவையவையைப் பொறுத்தது. ஆனால் அதை மறைச்சு இன்னொரு ஆளை கல்யாணம் கட்டினால் அது தவறு..!

இதுக்கு ஒரு தீர்வுத்திட்டம் என்னட்டை இருக்கு..! அதாவது வங்கிகளில கடன் குடுக்க முன்னம் கிரெடிட் ரேட்டிங் செக் பண்ணிப் பார்ப்பான். ரேட்டிங் நல்லா இருந்தால், கூட கடன் கிடைக்கும்..! அதே மாதிரி கிரெடிட் சிஸ்டம் ஒண்டு கொண்டு வரவேணும்..! ஒவ்வொரு கிச்சுக்கிச்சுவுக்கும் ஸ்கோர் கழிஞ்சு கொண்டே வரும்.!

பிறகு அம்மா அப்பா பொண்ணோ பையனோ பார்க்கேக்க, ஜாதகத்துக்கு முன்னால முதலில உன்ர கிரெடி ஸ்கோரை கொண்டு வா எண்டு கேப்பினம். ஸ்கோர் பொருந்தி வந்தால் கல்யாணம் பண்ணி வைக்கலாம்..! இது எப்பிடி இருக்கு? :D:mellow:

:unsure:

டங்கு இப்ப நீங்க சொல்ற மாதிரி மறைமுக கிரெடிட் ஸ்கோர் ஊரில இருக்காம்:

-பேசின பெட்டைக்கு தாலி ஐம்பது பவுன்ல கேளாமலே ஏதோ குற்ற உணர்வில செய்து போடுற பொடி - நல்லா மேய்ச்சல் கண்ட ஆளாம்..

-ஐம்பது லச்சம் அல்லது அதுக்கும் மேல சீதனம் என்று பொடி வீட்டார் கேட்க - "ஓ... அதுக்கென்ன! எங்கட மகளுக்கு இல்லாததா..." என்று பதில் வந்தால் - பெட்டை பாஸ் பண்ணின கேஸ் என்று அர்த்தமாம்!

(இதை நான் இப்ப சொல்ல போக யார்ட தாலி இறங்க போகுதோ... :) நான் போறன்...!!!)

Edited by Ilayapillai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் வசதிப்படி செய்யுங்கோ என்றுதான் சொல்லுவன். ஆனால்...

எனது தனிப்பட்ட நிலைப்பாடு திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ள அனுமதிப்பது பெண்களைப் பொறுத்தவரை அத்துணை பாதுகாப்பில்லை. ஆனால் ஆண்களுக்கு பாதிப்பற்ற.. நிலையே எதிலும்..! அதனால் அவர்கள் எந்தச் சமூகத்தவரா இருப்பினும் இதனை வரவேற்பர். கொள்கை பிடிப்பில்லாதவர்களைத் தவிர..! :lol:

பல ஆண்களோடு உடலுறவு கொள்ளும் பெண்களை எந்தச் சமூகம் பெரிதாக விரும்பாது. அது வெள்ளைகளாகட்டும்.. கறுப்பாகட்டும்.. ஆசியன் ஆகட்டும். அவர்களை விபச்சாரிகள் என்றே எல்லோரும் சொல்கின்றனர்.. சொல்ல விளைகின்றனர். ஆகக் கூடினால்.. வெள்ளைக்காரன்.. yor are a bitch என்றுவிட்டு ரா ரா காட்டிட்டுப் போய்க்கிட்டிருப்பான். பாதிப்படைவது.. பெண்களே..! அவர்கள் தான் இது தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டும்..!

செயற்பட முதல் சிந்திப்பது தான் அழகு..! வாழ்க்கை வெறும் உடலுறவு சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு அழகிய பூங்கா. அதை நரகமாக்காத நிலை சிந்தனை செயற்பாடு அவசியம்..!

நெருக்கம் இருக்கலாம்.. ஆனால் Mind the Gap... நல்லது என்றே சொல்வேன். இரு பாலாருக்கும்..! :D

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்திலே வைக்கலாமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில இடங்களில் நடக்கிறது உண்மை கறுப்பி... புலத்திற்கு வந்து நீண்ட காலம் (25- 30 வருடங்களாக) இங்கேயே வாழ்ந்தவர்களாக இருக்கும், அல்லது அவர்களின் பிள்ளைகளாக இருக்கும்... அவர்கள் தங்களை வெளிநாட்டுப் பிரஜைகள் என்று தான் அறிமுகப் படுத்துவார்கள்.... கவனித்துப் பாருங்கள்....

உண்மைதான். இங்கேயே வாழ்ந்தவர்கள் பெண் போட்டோ பார்த்து , வரவழைத்து , திருமணம் செய்வதற்கு முன்னே சேர்ந்து வாழ்ந்த பலரை கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் இப்பிடி சொல்லுறிங்கள்,ஒரே ஒருக்கா போட்டோவில பார்த்தவளோட எப்பிடி உந்த நிலவு எல்லாத்தையும் கொண்டாடுறது எல்லாம் இழவாயல்லோ போயிடும்,கொஞ்சம் எழும்படியப்பா என்றாலும் காது கேக்காதவள் போல படுத்திருப்பாள்,ஆனால் காதலிச்சு தாலிகட்டினபின் கொண்டாடுறதில நீங்க சொன்ன ஒரு திரில் இருக்கு தான்,ஆனால் பக்கத்தில பழம் இருந்தால் கடிக்க சொல்லுமே, :mellow:

ஏன் மச்சான் ,

போட்டோ பார்த்ததோடை முதலிரவு , தேன்நிலவு என்று நான் குறிப்பிடவில்லை .

போட்டோ பார்த்து , பொருத்தம் பார்த்து , கலியாண எழுத்துக்கு நாள் பார்த்து . எழுத்து அன்று பொம்பிளை என்ன கலர் சீலை , ரவிக்கை போடுறது ......... அதைப்போலை மாப்பிளையும் கோட் சூட் போடுறதா ....... அல்லது பட்டு வேட்டி சால்வையா என்று ? பெரிசுகள் முடிவெடுக்கவே மூன்று மாதம் ஆகிவிடும் .

அதுக்குள்ளை சின்னஞ் சிறிசுகளான மாப்பிளையும் , பொம்பிளையும் கம்பியில்லா தந்தி மூலம் தொடர்பை ஏற்படுத்தி சூடாக ........ எப்ப கலியாண நாள் வரும் என்று ஒரு பக்குவத்துக்கு வந்து விடுவார்கள் .

மச்சான் நீங்க சொன்னமாதிரி பக்கத்திலை பழம் இருந்தால் கடிக்கத்தான் சொல்லும் .

ஆனால் , எல்லாருக்கும் பக்கத்திலை பழத்தை வைச்சிருக்க பெரிசுகள் தான் சுலபமாக விட்டுவிடுவார்களா ......... :)

ஆஆஆஆஆஆஆஆ...........

என்ன கறுப்பி , :D திரில் என்றவுடன் ஆகப் பயந்து போனியள் . இது ஆகப் பயப்படுகிற சமாச்சாரம் இல்லை . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கிச்சுகிச்சுக்கெல்லாம் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்.கொஞ்ச நேரம் ஒதுக்குப்புறமா ஒதுங்கினால் கானும் தானே :D

நடுச்சாமத்திலை காவோலை வேலியளுக்கை தடக்குப்பட்டது ஞாபகத்துக்கு வருது போலை கிடக்கு :lol:

கிராமத்து பெண்ணை கட்டின மாப்பிள்ளை சொன்னாராம் உன்னை" கனிமூன்''அழைத்து செல்லுகிறன் என்று ஒரு வெளிநாட்டுக்கு அழைத்து சென்றார் மாப்பிள்ளை.ஒருகிழமையால கிராமத்து பெண்கேட்டாலாம் கனிமூண் காட்டுறன் என்று சொன்னியள் ஒன்றயையும் காட்டவில்லையேஎன்று, இதைத்தானா கனிமூண் என்று சொல்லுறது என்றானாம் மாப்பி,உடனே பெண் சொன்னாலாம் இதை கிராமத்தில நான் ஏற்கனவே எண்ட மாமன் கூட செய்து அனுபவம் இருக்கிது எண்டு?

:D:mellow::):lol:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்திலே வைக்கலாமோ

எரிபற்று நிலை வரைக்கும் வைக்கலாம். பஞ்சையும் நெருப்பையும் வைக்கலாம். லொறியில் பஞ்சு மூட்டை போகிறது. ஓடும் லொறியில் தீப்பொறி இருக்கிறது என்பதற்காக பஞ்சு பத்துதா..??!

எல்லாம் எங்கள் மனதைக் கட்டுப்படுத்தும் தன்மையில் தான் இருக்கிறது. பெற்றோலுக்கும் மண்ணெண்னைக்கும் எரிபற்றுநிலை மாறுவது போல ஆளாளுக்கும் மாறும். என்னைப் பொறுத்தவரை.. உடலால் நெருக்கம் இருப்பினும் உள்ளத்தில் Mind the Gap என்ற சிந்தனை அல்லது இயல்பான சிந்தனையோடு பழகினால்.. திருமணத்தின் முன் சேர்ந்து வாழுதல் பெரிய ஒரு விடயமாக இருக்கப் போவதில்லை. உடலுறவைத் தவிர்ப்பதற்கு நல்ல சிந்தனையோடு பழகும் இயல்புத்தன்மை அவசியம்.

இது ஒரு பேச்சுப் பொருளாக வேண்டியது கூட இல்லை. ஆனால் பலர் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி இருந்தால் தப்பாகத்தான் நடந்து கொள்வார்கள் என்றே கற்பனை செய்து கொள்கின்றனர். ஏனெனில்.. அதை இந்த உலகம் பழக்கப்படுத்தி விட்டது. தவறுகள் செய்தவர்கள்.. அதைப் பழக்கப்படுத்தி விட்டனர். தம்மைப் போலவே இந்த உலகம் என்று தப்பானவர்கள் பாடம் கற்பித்துவிட்டனர். அதனை மாற்றுவது அவ்வளவு இலகு அன்றி. அதுமட்டுமன்றி தப்பானவர்களின் பாதையில் தொடர்ந்து தப்புச் செய்து கொண்டிருப்பவர்களும் உலகில் அதிகம். அதுதான் இங்கு பிரச்சனையே. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருந்து வெளிக்கிட்டும் புத்தி போகுதா பாருங்க..! கொஞ்சம் டீசன்டா திங்க் பண்ணுங்கய்யா..! :lol:

சரி கொஞ்சம் டீசன்தா திங் பண்ணுவோம். :) நான் சொல்ல வந்த விடையம் என்ன என்றால்.சேர்ந்து வாழந்தால் தான் உடலுறவு சாத்தியம் என்று இல்லை என்பதை சொல்லதான்.மற்றும் படி கலியானம் கட்டிப்போட்டே சனம் பூந்து விழையாடுதுகள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.