Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை

on 21-07-2009 17:42

Published in : செய்திகள், இந்தியா

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர். மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன. ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.

அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள நீவர்க் நகருக்கு புறப்பட்டு சென்றார். “கான்டினென்டல் ஏர்லைன்ஸ்” என்ற அமெரிக்க தனியார் விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

இந்த விமானத்தில் அவர் ஏற சென்றபோது அந்த விமான நிறுவன ஊழியர்கள் சாதாரண பயணிகளுக்கு நடத்தும் அனைத்து சோதனைகளையும் அவருக்கும் நடத்தி உள்ளனர். விமானம் ஏற வந்தபோது அவரை விமானத்துக்கு செல்லும் நடைபாலம் அருகே வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு ஊழியர்களிடம் அனுப்பி அவரை முழுவதுமாக சோதனை செய்ய சொன்னார்கள். அவர்கள் உடல் முழுவதையும் சோதனை செய்தனர். அவரது ஷூவை கழற்ற சொல்லி அதையும் சோதித்தனர். அதன் பிறகுதான் விமானத்தில் ஏற அனுமதித்தனர். இவ்வளவு சோதனை நடந்த போதும் அப்துல்கலாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது அவர்கள் இது பற்றி புகார் கூறலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு அப்துல்கலாம் இது அந்த விமான நிறுவனத்தின் விதிமுறை என்னிடம் சோதனை நடத்தியதில் தவறு இல்லை என்று கூறிவிட்டாராம்.

இப்போது இந்த விஷயம் எப்படியோ வெளியே வந்துவிட்டது. இதையடுத்து மத்திய அரசு விமான நிலையத்திடம் விளக்கம் கேட்டு உள்ளது.

இது பற்றி அந்த விமான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அபர்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்கள் விமான நிறுவன விதிமுறைப்படி அனைத்து பயணிகளையும் சோதனையிடுவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள் என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் விதிகள் இல்லை. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தில் இப்படித்தான் சோதனை நடத்துகிறோம்.

எனவே தான் அப்துல் கலாமிடமும் சோதனை நடத்தினோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல்பட் டேலிடம் கேட்டபோது, “இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற தவறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்க இருக்கிறோம்” என்றார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது “தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை கொடுத்துள்ளோம். ஆனால் அந்த நிறுவனம் மீறி விட்டது” என்றார்.

இந்திய பிரமுகர்கள் வெளி நாடுகளில் அவமானப்படுத்தப்படுவது ஏற்கனவே பலமுறை நடந்து உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு மாஸ்கோ சென்றபோது அவரிடம் சோதனை நடத்தி அவமதித்தனர்.

ஆனால் இப்போது இந்திய மண்ணிலேயே இந்திய தலைவருக்கு அவமானம் நேர்ந்து இருக்கிறது.

இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்திலும், கிளப்பப்பட்டது. பாரதீய ஜனதா உறுப்பினர்கள் இந்த பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மந்திரி பிரபு பட்டேல் பதில் அளிக்கும்போது, “இப்போதுதான் இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்” என்றார்.

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கன் மற்றும் இந்திய மத்திய அரசின் காவாலித்தனத்தினால் மற்ற எல்லாருக்கும் சோதனை காலம்..! மரியாதை தானாக வரவேணும்..! கேட்டுப் பெறுவதல்ல மரியாதை..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை

on 21-07-2009 17:42

Published in : செய்திகள், இந்தியா

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர்.

இது ரொம்ப ஓவர் ....மரியாதை கேட்டு பெறுவதில்லை ....பக்கத்து தேசத்தில் தமிழன் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் பொது வாய் முடி மௌனியாக இருந்த இருந்து கொண்டிருக்கும் இவனை (இவரை) தமிழன் எண்டு எப்படி சொல்வது ?

இது ரொம்ப ஓவர் ....மரியாதை கேட்டு பெறுவதில்லை ....பக்கத்து தேசத்தில் தமிழன் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் பொது வாய் முடி மௌனியாக இருந்த இருந்து கொண்டிருக்கும் இவனை (இவரை) தமிழன் எண்டு எப்படி சொல்வது ?

அப்பிடிப்போடு அம்பி. உவர் தமிழன் எண்டு நாங்கள்தான் கட்டிப்பிடிச்சு சொந்தம் கொண்டாடுறம். ஆனால்... இவர் நினைச்சு இருந்தால் தாயகத்தில தமிழ்மக்களிண்ட உயிர்களை காப்பாற்ற எவ்வளவோ செய்து இருக்கலாம். அப்பிடி ஏதாவது வாய்திறந்து செய்தாரோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப்போடு அம்பி. உவர் தமிழன் எண்டு நாங்கள்தான் கட்டிப்பிடிச்சு சொந்தம் கொண்டாடுறம். ஆனால்... இவர் நினைச்சு இருந்தால் தாயகத்தில தமிழ்மக்களிண்ட உயிர்களை காப்பாற்ற எவ்வளவோ செய்து இருக்கலாம். அப்பிடி ஏதாவது வாய்திறந்து செய்தாரோ? :D

உந்தாள் கனடா வந்து ஏதே கருத்தரங்கில் நடத்தியோ, பங்குபற்றியோ எனக்கூறி நீங்கள் போனநிங்கள் இல்லோ... நேரா கதைக்க சந்தர்ப்பம் வந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா செல்பவர்கள் எல்லோருக்கும் விமான நிலையங்களில் சோதனை நடாத்தப்படுவது வழக்கம். சில நாடுகளில் அமெரிக்கா அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள்.

பிரித்தானியாவில் ரொனிபிளேயர் பிரதமராக இருந்த காலத்தில், பிளேயரின் மனைவி ஒருமுறை புகையிரத நிலையத்தில் நுளைவுச் சீட்டினைப் பெறச் சென்றார். நுளைவுச்சிட்டினைத்தரும் இயந்திரம் வேலை செய்யாத காரணத்திலும், புதிதாக கிடைத்த வேலையினால் அன்று அவர் நிதிமன்றத்துக்கு அவசரமாக செல்வதினால், இறங்கும் இடத்தில் நுளைவுச்சீட்டினைப் பெறலாம் என்று நினைத்து நுளைவுச்சீட்டின்றிப் பயணித்தார். பயணிக்கும் போது நுளைவுச்சீட்டின்றிப் பயணித்ததினால் , புகையிரதத்தில் வந்த நுளைவுச்சீட்டு அதிகாரிகளினால் தண்டனைப் பணத்தினைக் கட்ட வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதே போல பிரித்தானியா போக்குவரத்து அமைச்சர் ஒருவர் 90 களில் வேகமாக மகிழூந்தில் சென்றதினால் தண்டனை பெற்றார்.

ஜன நாயக நாடுகளில் எல்லோரும் சமமாக மதிக்கப்படுவார்கள். ஜன நாயகமற்ற இந்தியாவில் மந்திரிமார், பணக்காரர்கள் என்றால் அவர்களுக்கு தனியான சட்டம், சலுகை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது காலத்திற்கு முன்பு , ஜோர்ஜ் பெர்னான்டஸ் இந்திய மத்திய அமைச்சராக இருந்த போதும் அமெரிக்க விமான நிலையத்தில் அவரின் வேட்டி , சப்பாத்து எல்லாவற்றையும் அகற்றி துருவி , துருவி ஆராய்ந்ததாக செய்தி வந்ததை நான் படித்தேன் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமுகம் பெற்ற முத்துக்களில் அவரும் ஒருவர்

தமிழ் வித்தாகவிருப்பின், ஒரு வார்தையாவது தமிழனுக்கு நேர்ந்துள்ள அவலம் பற்றி பேசியிருக்கலாம். வாயில் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு ரப்பர் ஸ்டாம்பாக இருந்து கிழித்ததில் என்ன பிறவிப்பயன் கண்டார்? தமிழனுக்கு சல்லிக்காசு பிரயோசனம் உண்டா?

இதே பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 'வெங்கட்டு' என்ற அரைவேக்காடு, கொலைவழக்கில் கைதான சங்கரராமனுக்கும், அவர் சார்ந்த இனத்துக்கும் ஆதரவாக மறியலில் கலந்துகொள்ளவில்லை?

ஆதாரம் : http://www.financialexpress.com/news/rv-ch...r-issue/120172/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரு இந்து தன்னை இந்தியனாகக் முன்னிலைப்படுத்துவதற்கு 100 வீதமான உண்மையானவனாக இருந்தால் போதும் . ஆனால் ஒரு இஸ்லாமிய மதத்தவர் தன்னை ஒரு இந்தியனாக முன்னிலைப்படுத்துவதற்கு 200 வீதமாக உண்மாயாக இருக்க வேண்டும். இது ஒரு நாய்ப்பிழைப்பு. கவிஞர் வீரா இவரைப் பார்த்து ஒரு கவிதை பாடியிருக்கிறார். வன்னியின் இறுதிப்போரில் அந்தப் போராளியம் கவிஞனுமானவர் உயிலோடு மிஞசியிருக்கிறாரோ எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அப்துல் கலாமை நோக்கி எழுதிய கவிதை வரிகள் காலத்தால் அழியாதவை.

இதை எல்லாம் அனேக இந்திய தமிழர்கள் அலட்டி கொள்ள போறதும் இல்லை... நாங்கள் தான் அவனுகளுக்காவனும் சும்மா சவுண்டு கொடுத்து கொண்டு பொழுது போக்குகின்றோம்...

இந்தியாவில் ஒரு இந்து தன்னை இந்தியனாகக் முன்னிலைப்படுத்துவதற்கு 100 வீதமான உண்மையானவனாக இருந்தால் போதும் . ஆனால் ஒரு இஸ்லாமிய மதத்தவர் தன்னை ஒரு இந்தியனாக முன்னிலைப்படுத்துவதற்கு 200 வீதமாக உண்மாயாக இருக்க வேண்டும். இது ஒரு நாய்ப்பிழைப்பு. கவிஞர் வீரா இவரைப் பார்த்து ஒரு கவிதை பாடியிருக்கிறார். வன்னியின் இறுதிப்போரில் அந்தப் போராளியம் கவிஞனுமானவர் உயிலோடு மிஞசியிருக்கிறாரோ எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அப்துல் கலாமை நோக்கி எழுதிய கவிதை வரிகள் காலத்தால் அழியாதவை.

வீராஇன் அந்த கவிதை கேட்ட நினைவிருக்கிறது.

இருந்தால் இனைத்து விடுவீர்களா?

மீண்டும் ஒருதரம் கேட்டு பார்க்க.

உந்தாள் கனடா வந்து ஏதே கருத்தரங்கில் நடத்தியோ, பங்குபற்றியோ எனக்கூறி நீங்கள் போனநிங்கள் இல்லோ... நேரா கதைக்க சந்தர்ப்பம் வந்ததோ?

அவர் கனடாவுக்கு வந்திருந்த சமயம் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றி இருந்தார். இதற்கு டொரண்டோ பல்கலைக் கழகம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

பின்னர், இந்திய சமூகம் இவருக்கு ஓர் விருந்துபசாரத்தை வைத்தார்கள். அதில எங்கடை தமிழ்பிரமுகர்கள் $5,000 பணம் செலுத்தி அப்துல் கலாமை சந்திக்கவேண்டும் என்பதற்காக கலந்துகொண்டார்கள்.

அப்துல் கலாம் தமிழர் என்கின்ற வகையில் தன்னை இனம்காட்டாது இந்தியக் குடிமகன் அதிலும் ஓர் அறிஞர் - விஞ்ஞானி என்கின்ற வகையிலேயே அதிகம் நின்று செயற்பட்டு இருக்கிறார்.

நாங்கள் அப்துல் கலாம் தமிழன் என்று சொல்லி சந்தோசப்படுவது, பெருமைப்படுவது சரி, ஆனால்.. அவர் ஈழத்தமிழர்களால் தமிழன் என்று தலையில் வைத்துக் கொண்டாடப்படுவதற்கு உகந்த அளவில் தன்னை தமிழனாக வெளிக்காட்டி செயற்படவில்லை என்று நினைக்கின்றேன்.

இது கொஞ்சம் சிக்கலான கருத்துத்தான்.

அண்மையில் ஏ ஆர் ரகுமானிற்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை உலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களும் ஆரவாரமாக கொண்டாடினார்கள். ஏ ஆர் ரகுமானும் தமிழன் என்கின்ற வகையில் எம்மவர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படுகின்றார்.

அப்துல் கலாமையும் ஏ ஆர் ரகுமானையும் இரண்டு பக்கத்தில் ஓர் தராசில வைத்துப் பார்க்கும்போது தமிழன் என்றவகையில் எது நிறை கூடியது என்று பார்த்தால் தராசு எந்தப்பக்கம் சரியும் என்று கூறுவதும் இன்னும் கடினமானது.

ஏ ஆர் ரகுமான் தமிழ்திரையுலகில் தமிழிசையில் வளர்ந்து வளர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் அப்துல் கலாம் அறிஞராக விஞ்ஞானியாக இந்தியா எனப்படுகின்ற நாட்டினால் வளர்ந்து வளர்க்கப்பட்டு கடைசியில் தமிழராக இனம்காணப்பட்டார்.

எனவே.. :wub:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் நேசன்,

கவிதை வரிகள் நினைவில் இருக்கின்றது ஆனால் பதிவில் இல்லை. நினைவில் உள்ளதை மட்டும் நான் எழுதி அதில் தவறேதுமிருப்பின் அது அந்தக் கவிஞனுக்குச் செய்யும் அவமரியாதை. ஆகவே தயவுசெய்து யாராவது அக்கவிதையை பதிவில் வைத்திருந்தால் இணைத்துவிடுங்களேன்.

கவிஞர், விடுதலைப் போராளி வீரா அவர்கள் நலமுடன்வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனங்கள் யாவும் அலாதியானவை.

கடந்த இரண்டு வருட யுத்ததில் உலகத் தமிழன் ஒன்றுபட்ட உழைத்தான்.

இவர்கள் தலைவர்கள் இரத்ததில் தமிழ்உணர்வு இருக்கவில்லையே!

இப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் தம் தாய் மொழியாம் தமிழ் பேசுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

ஆனலும் எ.ஆர்.ரகுமான் எதோ தமிழில் இசைஅமைப்பதாலோ சாதாரமாக கண்டித்தார்.

தகவலகளுக்கு நன்றி

பென்மன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.