Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வராசா பத்மநாதன் நேர்காணல் (ஒளிப்பதிவு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராசா பத்மநாதன் நேர்காணல் ஒளிப்பதிவு

http://www.vakthaa.tv/play.php?vid=4737

Edited by வக்தா

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea:

விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று பலவீனமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு கௌரவம் இருக்கின்றது. அதனுடைய புதிய தலைவர் ஒரு குற்றவாளி போன்று இப்படி முகம் தெரியாத முறையில் பேட்டி கொடுப்பது கொஞ்சமும் நன்றாக இல்லை.

அரசியல் தீர்வு இல்லையேனில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடரும்: செல்வராசா பத்மநாதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் பிரித்தானியா தொலைக்காட்சி முதல் முதலில் நேயர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பல போராளிகள் தமிழீழ காடுகளில் உள்ளதாகவும்,விடுதலைப் புலிகளினால் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் மேற்கொள்ள முடியும் எனவும்,ஆனால் அதனை தாங்கள் ஆயுதப் போராட்டத்தினை தற்பொழுது விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்கவில்லையேனில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://puthir.com/index.php?mod=article&am...amp;article=694

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் - கரும்புலிகள் தவிர்ந்து - முகத்தை மறைத்து பேட்டி கொடுத்ததை இதுவரை பார்த்ததில்லை.

பயங்கரவாதி அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரைப் பேட்டி எடுத்துள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதற்கோணல் முற்றும் கோணலாகப்போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க...

நீங்கள் நினைக்கிறது போல விடுதலைப்புலிகள் அமைப்பு முகம் காட்டிபேட்டி கொடுக்க கூடிய நிலைமை இப்ப இல்லை என்பதை புரிந்து கொள்ளனும். முன்னர் எமக்கான ஒரு பிரதேசத்தில் தமக்கான ஒரு பலம் பொருந்திய இடத்தில் நின்ற படி பேட்டிகளை முகம் காட்டிக்கொண்டு வழங்கினார்கள். ஆனால் உலகம் தேடும் ஒருவர் எங்கிருக்கிறார், இப்போது எப்படி இருக்கிறார் என்பதை அறிய கூடிய வகையில் செவ்விகளை வழங்குவது முட்டாள்த்தனமான முடிவாகும். அது மட்டுமன்றி,

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து தமிழ் மக்களுக்காக செயற்ப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் அவர்களின் செயற்பாடுகளை மட்டும் பார்த்தால் நல்லது. தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.

வெற்றிடமான இருந்து, கட்டமைப்புக்கள் சிதைத்துள்ள இந்த வேளையில் குறைந்த பட்ச கட்டமைப்புகளையாவது ஏற்படுத்தி செயற்ப்படுவது வரவேற்க்கத்தக்கதாகும்.

அரசியல் தீர்வு இல்லையேனில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடரும்: செல்வராசா பத்மநாதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் பிரித்தானியா தொலைக்காட்சி முதல் முதலில் நேயர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பல போராளிகள் தமிழீழ காடுகளில் உள்ளதாகவும்,விடுதலைப் புலிகளினால் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் மேற்கொள்ள முடியும் எனவும்,ஆனால் அதனை தாங்கள் ஆயுதப் போராட்டத்தினை தற்பொழுது விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்கவில்லையேனில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://puthir.com/index.php?mod=article&am...amp;article=694

ஐயோ கடவுளே விட மாட்டாங்களே,

இந்நிலை தொடர்ந்தால் ஆயுதப்போராட்டம் ஒன்று நடைபெறுவதை தவிர்க்க முடியாது என்று கூறினார், அது விடுதலைப்புலிகளால் முன்னேடுக்கப்படும் என்று கூறவிலலை. எதுக்கு இந்த லொள்ளு,,...

புதுசு புதுசா இணையத்தை தொடங்கி அதில அரைகுறைத்தமிழில எழதிறது தான் வேலை நம்மாக்களுக்கு....

முகத்தைக் காட்ட முடியாது என்றால் நேரடிப் பேட்டிகளை தவிர்க்க வேண்டியதுதான். தொலைபேசியிலும் அறிக்கை மூலமாகவும் தன்னுடைய செய்திகளை சொல்லலாம்.

கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க...

நீங்கள் நினைக்கிறது போல விடுதலைப்புலிகள் அமைப்பு முகம் காட்டிபேட்டி கொடுக்க கூடிய நிலைமை இப்ப இல்லை என்பதை புரிந்து கொள்ளனும். என்று விரும்புபவர்கள் அனைவரும் அவர்களின் செயற்பாடுகளை மட்டும் பார்த்தால் நல்லது. தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.

,

அப்படியாயின் பேட்டி கொடுக்காமல் இருந்திருக்கலாம் .அறிக்ககைகளை மட்டும் விட்டுக்கொண்டு.ஏற்கனவே பயங்கரவாதிகள் என்றுதான் சர்வதேசம் முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள்,அதை நாங்கள் தொடர்ந்து காப்பற்றுவோம் என்ற மாதிரிதான் இருக்கு இந்த பேட்டியைபார்க்க.

என்று விரும்புபவர்கள் அனைவரும் அவர்களின் செயற்பாடுகளை மட்டும் பார்த்தால் நல்லது

.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை இவ்வளவுகாலமும் பார்த்துகொண்டுதான் இருந்தனாங்கள்,இனிமேலும் பார்த்து கொண்டு இருக்க ஏலாது காரணம் நாங்களும் மக்கள் தான்.புலிகளின் செயற்பாடு எல்லாம் நல்லாய் நடக்குது என்றுதான் இருந்தனாங்கள் கிளிநோச்சி விழும்வரை ,ஏன் முள்ளிவாய்க்கால் விழும்வரை நாங்கள் அப்படிதான் இருந்தோம்.இப்ப முள்ளிவாய்காலும் போயிட்டுது புலத்தில இருந்து சொல்லுறம் புலிகளின் செயற்பாடுகளை மட்டும்பார்த்தால் போது என்று.30 வருடமாய் பார்த்தது போதும் ,இழந்ததும் போதும்,

தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.

புலிகளே விமர்சனம் செய்யும்படி சொல்லிப்போட்டினம் ,பிறகு ஏன் நாங்கள் சுய தனிக்கை செய்வான்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் என்னவோ அறிக்கைகள் விடலாம். ஒலி வடிவில் பேட்டிகள் கொடுக்கலாம். ஆனால் இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு தொலைக் காட்சியில் பேட்டி கொடுப்பதை வெளிநாட்டு மக்கள் எடுத்த எடுப்பிலேயே வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும்.உரியவேளை வரும் வரை தெலைக் காட்சியில் பேட்டி கொடுப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. புலிகளின் தலைமை இது வரை யாரும் ஆலோசனை வளங்க வேண்டிய நிலைக்கு செயற்படவில்லை.ஆனால் முதல் தொலைக்காட்சிப் பேட்டியே மக்களால் விமர்சனத்திற்குஉள்ளாவது நல்லதல்ல. அவர்களுக்கும் இது தெரியாமல் இருந்திருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை இவ்வளவுகாலமும் பார்த்துகொண்டுதான் இருந்தனாங்கள்,இனிமேலும் பார்த்து கொண்டு இருக்க ஏலாது காரணம் நாங்களும் மக்கள் தான்.புலிகளின் செயற்பாடு எல்லாம் நல்லாய் நடக்குது என்றுதான் இருந்தனாங்கள் கிளிநோச்சி விழும்வரை ,ஏன் முள்ளிவாய்க்கால் விழும்வரை நாங்கள் அப்படிதான் இருந்தோம்.இப்ப முள்ளிவாய்காலும் போயிட்டுது புலத்தில இருந்து சொல்லுறம் புலிகளின் செயற்பாடுகளை மட்டும்பார்த்தால் போது என்று.30 வருடமாய் பார்த்தது போதும் ,இழந்ததும் போதும்,

2 மாதமாக என்ன உங்களால் செய்யமுடிந்தது வதை முகாமுக்குள் இருக்கும் மக்களுக்கு. தெரியாத ஒன்றை, மாற்று கருத்து என்று இனத்தை பிரிக்காமல், தெரிந்தவர்கள் முன்பு பிழை விட்டாலும், விட்ட தவறுகளை திருத்தி, பதவி ஆசை இல்லாமல், ஒற்றுமையாக செயல்பட முன் வருபவர்களுக்கு வழி விடுதல் தான், அவசர தேவையாகவுள்ளது. நாங்கள் வாழுகின்ற நாடுகளுக்கே அழுத்தம் கொடுப்பதே குறைவு அதைவிட செயலால் முடிந்தவர்களுக்கு உற்சாகம் கொடுத்து, நல்ல செயல் திட்டங்களையும் அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்.

Edited by Ithayavani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தைக் காட்ட முடியாது என்றால் நேரடிப் பேட்டிகளை தவிர்க்க வேண்டியதுதான். தொலைபேசியிலும் அறிக்கை மூலமாகவும் தன்னுடைய செய்திகளை சொல்லலாம்.

சர்வதேச நாடுகளால் தேடப்படும் நபர் ஒருவர் முகத்தைக்காட்டி பேட்டி கொடுப்பார் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றே அதைவிட தேசியத்தலைவர்,தளபதிகளின் பேட்டிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டு பகுதியில்

அவர்களி பலத்தில் நின்று கொடுத்ததாகும், புலம்பெயர்ந்து தலைமறைவாக இருந்து செயற்படுபவர் எதிர்கால செயற்பாடுகள் கருதி முகத்தை காட்டாமல் விடுவது புத்திசாலித்தனமே. தேசியத்தலைவர் பிரபாகரனையே

சண்டைக்களங்களுக்கு வந்ததில்லை என்று கருணா போன்றவர்கள் கூறியதையும், மாவீரர் நாள் உரை கூட யாரோ எழுதிக்கொடுக்க வாசித்து விட்டு போறவர் என்ற குற்றச்சாட்டை மாற்றுக்கருத்தாளர்களும் சில எடியூக்கேட்டட் மக்களும் சொல்லும் சொல்லை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்றால் பத்மநாதன் அண்ணா அவர்கள் இப்படியாவது தோன்றியது நல்லதே. அதை விட தற்போதுள்ள குழப்பமான நிலையிலும்

பல,பல அமைப்புகளின் பெயரில் வரும் அறிக்கைகளின் குழப்பங்களைப் போக்கவும் அவர் நேரடியாக தோன்றியது தான் நல்லது. அதேசமயம் எதிர்கால செயற்பாடுகள் கருதியே அவர் தனது முகத்தை மறைத்து பேட்டி குடுத்துள்ளார்.

முகத்தைக் காட்ட முடியாது என்றால் நேரடிப் பேட்டிகளை தவிர்க்க வேண்டியதுதான். தொலைபேசியிலும் அறிக்கை மூலமாகவும் தன்னுடைய செய்திகளை சொல்லலாம்.

கிட்டத்தட்ட 19 வருடங்களாக புலிகளின் முதுகெலும்பாக இருந்தவர் மறைந்துதான் வாழ்ந்தும் வருகிறார்... 19 வருடங்களாக தன்னை மறைத்து வாழ தெரிந்தவருக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் எண்று தெரியாது நீங்கள் சொல்லி தான் தெரிய வேண்டும் எண்ற அவசியம் உண்டா...??

அவர் முகத்தை மறைத்தது இராசதந்திரிகளுக்கும் , சட்ட நடவடிக்கையாளர்களுக்கும் அல்ல பொது மக்களுக்காக எனும் உண்மையை நீங்கள் எப்ப புரிந்து கொள்ள போகிறீர்களோ...?

வெளி நாட்டில் பலவாறாக நடமாடும் அவருக்கு இடைஞ்சல்கள் வராமல் இருப்பதுக்காக அவர் முகத்தை மறைக்கும் முடிவை எடுத்து இருக்கலாம்...

மற்றும் படி தான் கைது செய்ய படுவேன் எனும் பயத்தினால் முகத்தை மறைக்கவில்லை...

மீண்டும் "அண்ணைக்கு எல்லாம் தெரியும்தானே" என்பது போன்று ஆரம்பிக்க வேண்டாம்.

முகத்தைக் காட்ட முடியாத நிலையில் கமெராக்களுக்கு முன் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பதே நல்லது. இப்படி முகம் தெரியாத மாதிரி பேட்டி கொடுக்கின்ற பொழுது, அதைப் பார்ப்பவர்களிடம் பேட்டி கொடுப்பவர் குறித்து எப்படியான எண்ணம் ஏற்படும் என்பது பற்றித்தான் இங்கு பிரச்சனை.

பயங்கரவாதிகளும், போதை பொருள் கடத்துபவர்களும், பாலியல் குற்றவாளும் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களும், இது போன்ற இன்ன பிற மனிதர்களும் இப்படி முகம் மறைத்து பேட்டி கொடுப்பதை பார்த:;து பழகிய சமூகத்திற்கு இந்தப் பேட்டி எத்தகைய தாக்கத்தை கொடுக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பத்மநாதன் அவர்கள் தாராளமாக பேட்டி கொடுக்கட்டும:;. இந்த முறையில் வேண்டாம். தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல் என்று நிறைய வழிகள் உண்டு.

இது இன்று களத்தில் உள்ள ஒரே தளபதியின் கோரிக்கை ........

letter.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாம் மொட்டைக் கடிதமாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மடல் சொல்கின்ற செயலை விட்டுவிட்டு, ஆராட்சி செய்கின்ற உங்களை என்னவென்று சொல்வது தமிழ்சிறி..

இன்றைக்கு கேபி அவர்கள் பிழை என்றால், ஏதோ ஒருவகையில் அவர் பின்னார் திரள வேண்டாம் என்று எமக்கான ஒரு அறிவித்தலாவது வெளியிடாமல் இருப்பார்களா? ஏன் வரவில்லை என்றால், எமக்கு இப்போது இருக்கின்ற ஒரே ஒரு வழி அவர் தான். அவரது செயற்பாட்டில் திறமை, நேர்த்தி, இருக்குமா என்று தெரியவில்லை. இதுவரைக்கும் அப்படி எனக்கும் தோன்றவுமில்லை. ஆனால் வேறு வழி ஏதும் எமக்கில்லை..

இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் சிந்திக்க வேண்டியது, தமிழீழம், அல்லது சுயநிர்ணயம் போன்ற இலக்குகளை முன் வைத்து எவர் நகர்கின்றார்களோ, அவர்கள் பின்னால் தான் செல்ல வேண்டும். இதை விட்டால் எவ்வித வழியும் இல்லை... அவர் முகத்தை மறைத்து நிற்கின்றாரா, மொட்டையாகப் போடுகின்றாரோ என்பது எல்லாம் விதண்டாவாதம்... சொல்லுகின்ற கருத்துக்களை மட்டும் எடுங்கள். செயற்படுங்கள். வெட்டித்தனமான ஆராட்சிகள் எதுவும் அவசியமற்றது..

இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லாவற்றையும் ஆரம்பத்திலே இருந்து தொடங்க வேண்டியுள்ளது. அதற்காகப் பாடுபடுங்கள். நேரத்தை ஒதுக்குங்கள்..

இன்றைய நிiயில் நாம் எல்லாவற்றையும் அரம்பத்திலே இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.

ஆம், சொல்லப்படுகின்ற கருத்துத்தான் முக்கியம். ஆகவே புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் தன்னுடைய கருத்துகளை தொலைபேசி, இணையம் போன்ற வழிகளினால் வெளியிட்டால் போதும். இப்படி முகத்தை மறைத்து சாதாரண பார்வையாளர்களுக்கு தவறான விம்பத்தைக் கொடுக்க வேண்டாம்.

தலைவர் சொல்லுக்கு மாற்றுக்கருத்து இல்லை. கே.பி யை இந்த வாட்டு வாட்டுகின்றோம்.. இதுதான் ஜனநாயகமோ? :lol:

மற்றும்.. நிக்கராகுவா அடிக்கடி கனவில் வந்து வாட்டுது..... :(

எ.பி.ஐ யுக்கு இண்டர்வியூ குடுத்தது மாதிரி இருக்கிது. criminal interrogations இலயும் உப்பிடித்தான் காட்டுவாங்கள். :lol: அவன் இண்டர்வியூவில கேபியை எப்பிடி அறிமுகம் செய்து வைக்கிறான் எண்டு பாருங்கோ. 23கடவுச்சீட்டுக்கள் வச்சு இருக்கிறாராம். ஒன்றில் முழுசாக முகத்தை காட்டலாம். இல்லாட்டிக்கு முகத்தை காட்டாமலே இருந்து இருக்கலாம். உதைப்பார்க்க முஸ்லீம் தீவிரவாதிகளிண்ட தரத்தில உலகம் கேபியை கவனத்தில் வச்சமாதிரியல்லோ இருக்கிது. கேபி முஸ்லீம் தீவிரவாதிகள் மாதிரி முகத்திற்கு துணி கட்ட இல்லை, இது ஒண்டுதான் தவறி இருக்கிது.

Edited by கலைஞன்

சபேசன்... உப்புசப்பில்லாத விடயங்களை எழுதிகிழித்துகொண்டு திரிந்தாலும்.. மேற்கூறிய விசியத்தில் ஒத்துபோகிறேன்... கொஞ்சம் புரவஷனாலா பேட்டியை தயாரித்திருக்கலாம். அதுவும் அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா.. பொலிஸ் தேடுது எண்டும்.. கடைசியில் இந்தா திருப்பி ஒழிக்க போறார்.. எண்டும்... சுத்த ஞானசூனியமாய்தான் முடிந்திருக்கிறது....

மற்றும்.. நிக்கராகுவா அடிக்கடி கனவில் வந்து வாட்டுது..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியாயின் பேட்டி கொடுக்காமல் இருந்திருக்கலாம் .அறிக்ககைகளை மட்டும் விட்டுக்கொண்டு.ஏற்கனவே பயங்கரவாதிகள் என்றுதான் சர்வதேசம் முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள்,அதை நாங்கள் தொடர்ந்து காப்பற்றுவோம் என்ற மாதிரிதான் இருக்கு இந்த பேட்டியைபார்க்க.

.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை இவ்வளவுகாலமும் பார்த்துகொண்டுதான் இருந்தனாங்கள்,இனிமேலும் பார்த்து கொண்டு இருக்க ஏலாது காரணம் நாங்களும் மக்கள் தான்.புலிகளின் செயற்பாடு எல்லாம் நல்லாய் நடக்குது என்றுதான் இருந்தனாங்கள் கிளிநோச்சி விழும்வரை ,ஏன் முள்ளிவாய்க்கால் விழும்வரை நாங்கள் அப்படிதான் இருந்தோம்.இப்ப முள்ளிவாய்காலும் போயிட்டுது புலத்தில இருந்து சொல்லுறம் புலிகளின் செயற்பாடுகளை மட்டும்பார்த்தால் போது என்று.30 வருடமாய் பார்த்தது போதும் ,இழந்ததும் போதும்,

புலிகளே விமர்சனம் செய்யும்படி சொல்லிப்போட்டினம் ,பிறகு ஏன் நாங்கள் சுய தனிக்கை செய்வான்

இவ்வளவு காலமும் நீங்கள் யாரும் பார்த்திட்டு இருக்க சொல்லி விடுதலைப்புலிகள் உங்களிட்ட சொல்லவில்லை. உங்களுக்குள் இருந்த மன பிரம்மை அப்பிடி செய்ய சொல்லியிருக்கலாம். அதற்காய் உங்கள் விமர்சனங்களை தேவையற்ற இடத்தில் பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது சார்,

புலிகள் விமர்சனங்களை (ஆக்க பூர்வமான) எப்போதும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான விமர்சனங்களும், கருத்துக்களும் ஒரு வகையில் புலிகளின் பின்னடைவுக்கு காரணமாகவும் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராய் இல்லை.

மண் மீட்பு என்றதில அனைவரும் பங்கு பற்றனும் நீங்கள் புலிகள் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போலவும் உங்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போலவுமு் எழுதுவது உங்கள் எழுத்தின் சிந்தனையின் வன்மத்தை காட்டுகின்றது.

நீங்கள் என்ன செய்தாலும் உந்த உங்கடை சர்வதேசம் ஒன்றையும் கி்ழிக்க போறதில்லை என்று உங்களுக்கு தெரியும் அதுக்குள்ள பிறகெதுக்கய்யா உதுகளைப்பற்றி ஆராயுறீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம், சொல்லப்படுகின்ற கருத்துத்தான் முக்கியம். ஆகவே புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் தன்னுடைய கருத்துகளை தொலைபேசி, இணையம் போன்ற வழிகளினால் வெளியிட்டால் போதும். இப்படி முகத்தை மறைத்து சாதாரண பார்வையாளர்களுக்கு தவறான விம்பத்தைக் கொடுக்க வேண்டாம்.

ஆக மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் புலிகள் + மக்கள் என்ற நிலையில் கருத்து வைக்கையில் புலிகள் பற்றி விமர்சனங்களும் அவர்களது செயற்பாடுகள் பற்றி கருத்துக்களும் மகக்கள் சார்பான உங்களுக்கு அவசியமற்றதாகவே நான் கருதுகின்றேன்.!

கே.பி அண்ணா ஏதை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதில் விமாசனத்தை வையுங்கள், மாறாக அவரை காட்டிக்கொடுத்து, இறுதித் தெரிவாய் எமக்கு (விடுதலையை விரும்பும் மக்களுக்கு) இருக்கும் ஓரே வழியை அடைத்து விடாதீர்கள்!

முகத்தை மறைத்துக்கொண்டு அவர் மக்கள் பிரதிநிதிகளோடு பேசவில்லை. . உலக பிரதிநிதிகளோடு பேசவில்லை. மாறாக ஊடகங்களில் தான் பேசுகின்றார். அவை மாற்றம் காணும்... தலைவரை பாதுகாக்க முடியாத தமிழினம்... இனி இவரை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருக்காது என்ற நம்பபிக்கையின் நிமிர்த்தம் அவரது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களின் ஆலோசனையாக கூட இருக்கலாம் அல்லவா?

சபேசன்... உப்புசப்பில்லாத விடயங்களை எழுதிகிழித்துகொண்டு திரிந்தாலும்.. மேற்கூறிய விசியத்தில் ஒத்துபோகிறேன்... கொஞ்சம் புரவஷனாலா பேட்டியை தயாரித்திருக்கலாம். அதுவும் அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா.. பொலிஸ் தேடுது எண்டும்.. கடைசியில் இந்தா திருப்பி ஒழிக்க போறார்.. எண்டும்... சுத்த ஞானசூனியமாய்தான் முடிந்திருக்கிறது....

மற்றும்.. நிக்கராகுவா அடிக்கடி கனவில் வந்து வாட்டுது..... :lol:

உங்கள் கருத்தை நீங்களே திருப்பி படியுங்கள்.... ஏதாவது விளங்குதா? என்று யோசியுங்கோ....

எ.பி.ஐ யுக்கு இண்டர்வியூ குடுத்தது மாதிரி இருக்கிது. criminal interrogations இலயும் உப்பிடித்தான் காட்டுவாங்கள். :( அவன் இண்டர்வியூவில கேபியை எப்பிடி அறிமுகம் செய்து வைக்கிறான் எண்டு பாருங்கோ. 23கடவுச்சீட்டுக்கள் வச்சு இருக்கிறாராம். ஒன்றில் முழுசாக முகத்தை காட்டலாம். இல்லாட்டிக்கு முகத்தை காட்டாமலே இருந்து இருக்கலாம். உதைப்பார்க்க முஸ்லீம் தீவிரவாதிகளிண்ட தரத்தில உலகம் கேபியை கவனத்தில் வச்சமாதிரியல்லோ இருக்கிது. கேபி முஸ்லீம் தீவிரவாதிகள் மாதிரி முகத்திற்கு துணி கட்ட இல்லை, இது ஒண்டுதான் தவறி இருக்கிது.

நீங்கள் சொன்னால் என்ன சொல்ல விட்டால் என்ன 32 நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாகவே புலிகளை உலகம் பார்க்கிறது....

அப்படியிருக்கையில் இந்த பேட்டி தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.