Jump to content

Photoshop பாவிக்கும் முறை : கருத்துக்கள்


Recommended Posts

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் நீங்கள் இதை எழுதாமல் நிப்பாட்டி விட்டீர்கள் என...நன்றி தொடர்ந்து எழுதுங்கள் எனக்கு பிர‌யோசனமாயிருக்கிறது.

Link to comment
Share on other sites

இணையவன், நீங்கள் எழுத்தில் செய்வதை காணொளியாகவும் போட்டீங்கள் என்றால் இன்னமும் நல்லாய் இருக்கும் என்று நினைக்கிறன். ஒலிவடிவம் இல்லையென்றாலும் காட்சிகளை மட்டுமாவது திரையை பதிவுசெய்து போடலாம்.

இன்றும் இதே விசயத்தையே எழுதவந்தேன்.

Link to comment
Share on other sites

ஊக்கமளித்துக் கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

ரதி, உங்களைப் போன்று யாருக்காவது இப் பதிவுகள் பயனளிப்பதாக இருந்தால் மகிழ்ச்சியே.

கரும்பு, அடுத்த பதிவுகளில் காணொலியையும் இணைக்க முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

காணொளியை பார்த்தேன் இணையவன், சிரமமாக அமைந்தால் முதலில் எழுத்தாக்கத்தை முடித்துவிட்டு பின்னர் காணொளிகளை இன்னோர் பகுதிகளாக செய்யுங்கள். நல்லதொரு ஒலிவாங்கியை பயன்படுத்தினால் ஒலிப்பதிவும் தரமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உண்மைதான் கரும்பு. Webcam ஒலிவாங்கியைப் பாவித்ததல்தான் பிரச்சனை. ஏற்கனவே இட்ட பதிவுகளில் பல எழுத்துப் பிழைகளும் சேர்க்க வேண்டிய வேறு விடயங்களும் உள்ளன.

இத் தலைப்பை நிறைவு செய்வதற்கு இன்னும் மூன்று பகுதிகள் உள்ளன. இம் மூன்று பகுதிகளையும் எழுதிவிட்டு காணொலிகளை இணைக்கலாம். அதன்பின்னர் நான்காவது பகுதியாக செய்முறைகளைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...

adobe photoshop programme இலவச தரவிறக்கம் (பாதுகாப்பானது மட்டும்) எங்கே எடுக்கலாம் என்று அறியத் தருவீர்களா? முதலில் இருந்தது வைரஸ் அழிக்கும் போது எல்லாம் சேர்ந்து அழிபட்டு விட்டது, கூகுளில் தேடும் போது நிறைய வருகிறது ஆனால் அவற்றில் எது பாதுகாப்பானது, எது வைரஸ் உள்ளது என்று தெரியவில்லை. :lol:

-நன்றி

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

adobe photoshop programme இலவச தரவிறக்கம் (பாதுகாப்பானது மட்டும்) எங்கே எடுக்கலாம் என்று அறியத் தருவீர்களா? முதலில் இருந்தது வைரஸ் அழிக்கும் போது எல்லாம் சேர்ந்து அழிபட்டு விட்டது, கூகுளில் தேடும் போது நிறைய வருகிறது ஆனால் அவற்றில் எது பாதுகாப்பானது, எது வைரஸ் உள்ளது என்று தெரியவில்லை. :lol:

-நன்றி

எந்த தளம் பாதுகாப்பானது என் சொல்வது கஷ்டம். ஒரு பழைய கணனியை test computer ஆக வைத்துக்கொள்ளுகள். அதில் டவுண்லோட் பண்ணி நிறுவி பாருங்கள். பிரச்சனை இல்லையெனில் DVD யில் காப்பி எடுத்து வழமையான கணனியில் நிறுவவும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் நேரம் இருந்தால் ஒருக்கா என்னை எட்டி பார்க்கமுடியுமா.....?

இது சம்பந்தமாக உதவி தேவை

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 3 weeks later...

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.

எங்கே இணையவனை இந்தப்பக்கம் கணநாளாய் காணவில்லை.

வேலைத் தளத்தில் இணைப்பில் இருந்தாலும் வாசிப்பதற்கே நேரம் போதவில்லை. நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.

இணையவன் நேரம் இருந்தால் ஒருக்கா என்னை எட்டி பார்க்கமுடியுமா.....?

இது சம்பந்தமாக உதவி தேவை

விகுசு, உங்கள் கருத்தைக் கவனிக்கவில்லை. என்ன உதவி தேவை கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்று - போட்டோசாப் 4 இருந்தது. அத்தோடு XP யும் இருந்தது. வேலை செய்தது.

இன்று - போட்டோசாப் 4 இருக்கிறது. விண்டோ 7 இருக்கிறது. வேலை செய்யவில்லை.

ஏதாவது வழி இருக்கிறதா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகுசு, உங்கள் கருத்தைக் கவனிக்கவில்லை. என்ன உதவி தேவை கேளுங்கள்.

PHOTOSHOP பாவிப்பதற்கு நேரடி விளக்கம் தேவை

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் இணையவன் ..

if4z84.jpg

ஒரு நெட்வொர்க்கிங் வெப்சைட்டு டெவலப் செய்து வருகிறேன்.. எனக்கு மேலுள்ள படம் போல வேண்டும் அதாவது இதில் டார்க் பிரவுனில் ஆரம்பித்து படிப்படியாக கலர் குறைந்து வெள்ளையில் முடிகிறது . எனது புளூ பேசுடு வெப்சைட்டு சோ எனக்கு புளுவில் ஆரம்பித்து வெள்ளையில் முடிக்கவேணும் அதற்கு என்ன செய்யவேணும்

2 லோகோ எப்படி செய்வது

Link to comment
Share on other sites

வணக்கம் தோழர் இணையவன் ..

ஒரு நெட்வொர்க்கிங் வெப்சைட்டு டெவலப் செய்து வருகிறேன்.. எனக்கு மேலுள்ள படம் போல வேண்டும் அதாவது இதில் டார்க் பிரவுனில் ஆரம்பித்து படிப்படியாக கலர் குறைந்து வெள்ளையில் முடிகிறது . எனது புளூ பேசுடு வெப்சைட்டு சோ எனக்கு புளுவில் ஆரம்பித்து வெள்ளையில் முடிக்கவேணும் அதற்கு என்ன செய்யவேணும்

2 லோகோ எப்படி செய்வது

வணக்கம் தோழர் புரட்சி.

இரண்டு முறைகளைக் கூறுகிறேன்.

1 - நிற மாற்றம் செய்தல்.

நீங்கள் இணைத்திருக்கும் படத்தை Photoshop இல் திறந்து கொள்ளுங்கள்.

சதுர தனிமைப் படுத்தும் கருவியால் படத்தில் தேவையான பகுதியைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

ptt1.png

Menu வில் Image > Adjustments > Hue / Saturation... > என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

ptt2.png

இதில் Colorize என்பதை அழுத்துங்கள். இப்போது Hue, Saturation, Lightness ஆகியவற்றை தேவைக்கேற்றவாறு மாற்றுங்கள். Hue என்பது நிறத்தையும் Saturation என்பது அந் நிறத்தின் வீரியத்தையும் மாற்றும்.

2 - வண்ண நிரப்பி மூலம்.

ptt3.png

சதுர தனிமைப் படுத்தும் கருவியால் படத்தில் தேவையான பகுதியைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

Toolbox இன் கீழ்ப் பகுதியில் பாவனைக்கான நிறத்தினைத் தெரிவு செய்யுங்கள். அடிப்பக்க நிறத்தை (Background color) வெள்ளையாகத் தெரிவு செய்யுங்கள்.

Toolbox இன் மேலுள்ள மேலதிக உபயோகங்களுக்கான பகுதியில் நீங்கள் விரும்பும் வண்ண வடிவம் இல்லாவிட்டால் அதனை அழுத்தி சரியானதைத் தெரிவு செய்யுங்கள்.

பின்னர் படத்தில் தெரிவு செய்யப்பட்ட பகுதிக்குள் இடமிருந்து வலமாக வண்ண நிரப்பிக் கருவியால் கோடு கீறுங்கள். வண்ண நிரப்பியைத் தெரிவு செய்யும்போது இரண்டு வகையான நிரப்பிகள் உள்ளன. முதலாவது சாதாரண தட்டையான நிறம், அடுத்தது Gradient. ஒரு கருவியில் சில வினாடிகள் அழுத்திப் பிடிக்க அடுத்த கருவி தோன்றும்.

அடுத்து லொகோ செய்வதை விளங்கப் படுத்துவது சிக்கலானது. சுலபமான வழி, நீங்கள் விரும்பும் வடிவத்தை காகிதத்தில் மேலோட்டமாக வரைந்து அதனை ஒளிப்படம் எடுத்து Photoshop திறந்து அதன்மேல் Vector கருவிகளினால் நேர்த்தியாக வரந்து கொள்வது. நீங்கள் விரும்பினால் தனிமடலில் வடிவத்தை அனுப்பி வையுங்கள், Vector வடிவமாக்கித் தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தோழர் இணையவன் நான் முதலாவது வழி முறையை முயற்சி செய்து பார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.